Tuesday, 16 January 2018

பயங்கரமான ஆயுதங்கள் - துரோணர் ஏகலைவன் நிகழ்ச்சி

ராணுவத்தில் பயங்கரமான ஆயுதங்கள் தயாரிக்கப் படுகின்றன.

சாதாரண துப்பாக்கியில் இருந்து nuclear bomb வரை தயாரிக்கப்பட்டு, அதை பயன்படுத்தும் முறை குறிப்பிட்ட தகுதி உள்ள வீரர்களுக்கு மட்டும் சொல்லி தந்து, எதிரிகள் உள்ளே வந்து நாட்டை பாதிக்காமல் இருக்க இந்த வீரர்கள் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்கின்றனர்.

இது அனைத்து நாட்டு ராணுவமும் செய்கிறது என்பது நாம் அறிந்ததே..

ராணுவம் மட்டுமே அறிந்த இந்த அறிவியல், சாதாரண மக்களுக்கு தெரியாத வண்ணம் பாதுகாக்கப் படுகிறது.

மேலும், ஒரு சாதாரண மனிதன் தன் திறமையாலோ, அல்லது ராணுவ ரகசியத்தை திருடியோ, ஒரு அணு குண்டு தயாரித்தால் கூட, கடும் தண்டனைக்கு உள்ளாக நேரும். மரண தண்டனை வரை கூட சட்டம் செல்லும்.

இது போன்ற ஒரு நியாயமான நிகழ்வை நம் இதிஹாசத்தில் இருந்து எடுத்து, வேறு விதமாக அதை காட்டி, நம் ஹிந்து கலாச்சாரத்தை பற்றிய தவறான பிரச்சாரம் செய்ய முடியுமா ?

இப்படிப்பட்ட திருட்டுத்தனமான ப்ரசாரங்கள், நம் குழந்தைகள் படிக்கும் பாட புத்தகத்தில் உள்ளது.

நம் ஹிந்து குழந்தைகள் அப்படி என்ன தான் படிக்கின்றனர் ?

நம் பாரத இதிஹாசத்தில் இருந்து, இந்த கல்வி அதிகாரிகளுக்கு கிடைத்தது ஒரே ஒரு கதை மட்டும் தான்.
ஏகலைவனும், துரோணரும்.

இது நமக்கு தெரிந்த நிகழ்வே.

துரோணர் தன் சிஷ்யர்களான பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் ஆயுதங்கள் பயன்படுத்தும் அஸ்திர, சஸ்திர முறைகளை சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தார்.

ஏகலைவன் என்ற வேடுவன், துரோணரிடம் சென்று தனக்கும் சொல்லித் தர வேண்டினான்.

துரோணர் க்ஷத்ரியன் (army person) மட்டுமே இதை கற்றுக்கொள்ள தகுதி ஆனவர்கள் என்று கூறி, மறுத்து விட்டார்.

ஏகலைவன் துரோணரை மனதுக்குள் குருவாக ஏற்று, அவர் சொல்லிக் கொடுக்கும் முறைகளை மறைந்து நின்று கவனித்து, தினமும் தனியாக சென்று பயிற்சி செய்வான்.

இப்படியே பல மாதங்கள் கடந்தன.

ஒரு நாள், துரோணர் பாண்டவர்களுடன் காட்டில் நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு நாய் குறைக்க முடியாத படி, அதன் வாயை சுற்றியும், அதனை சுற்றியும் அம்புகள் தெய்க்கப்பட்டு இருந்தன. ஆச்சர்யம் என்னவென்றால், அந்த நாய் ஒரு காயமும் அடையாதவாறு அமைக்கப்பட்டு இருந்தது.

இதை கண்டு அர்ஜுனனே ஆச்சர்யப்பபட்டான்.
தேடிப்பார்த்த போது, ஏகலைவன் எதிர் வந்தான். தன் குரு தன் முன் இருப்பதை கண்டு ஆனந்தத்தில் மகிழ்ந்தான். அவரை வணங்கி உங்கள் மூலமே இதனை கற்றேன் என்றான்.

துரோணர் இது உடனே கண்டிக்கப் பட வேண்டியது என்று நினைத்து, இது பேராபத்து என்றும் உணர்ந்து, "எனக்கு குரு தக்ஷிணையாக உன் கட்டை விரலை கொடு" என்றார்.

இப்படி ஏகலைவனும், துரோணரும் சந்தித்த நிகழ்வை குழந்தைகள் பாட புத்தகத்தில் மனப்பாடம் செய்யும் முறையில் வைத்து விட்டு, கேள்வி பதில் பகுதியாக, இவர்கள் கேட்கும் கேள்வியே விஷமத்தனமாக உள்ளது.
இவர்கள் குழந்தைகளிடம் கேட்கும் கேள்வி என்ன ?

கேள்வி :
இப்படி நடந்த இந்த ஸம்பவத்தை படித்ததன் மூலம், நீங்கள் ஹிந்துக்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

என்ன ஒரு விஷமமான கேள்வி !!

இப்படி சாதுர்யமாக கேள்வி கேட்டு, படிக்கும் குழந்தைகளையும், சொல்லித் தரும் ஆசிரியர், பெற்றோர்களுக்கு மறைமுகமாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர். "பாருங்கள், ஹிந்துக்கள் எப்படி ஒரு தாழ்ந்த வகுப்பில் உள்ள ஒருவனை தண்டித்து உள்ளனர்". எப்படி இப்படி ஏகலைவனின் கட்டை விரலை குரு தக்ஷிணையாக கேட்கலாம் !!

இப்படியெல்லாம் ஒருவன் இந்த காலத்தில் அணுகுண்டு தயாரித்து விட்டு உயிரோடு இருக்க முடியுமா ?
ஏகலைவன் ஒரு வேடுவன்.
அம்பு விடுவதில் ஏற்கனவே வல்லவன்.
இவன் மறைமுகமாக கற்றுக் கொண்டது அஸ்திர, சஸ்திர ப்ரயோகம். அதாவது அணுகுண்டு போன்றவை உபயோகப்படுத்தும் முறை. இவன் க்ஷத்ரியன் (army person) அல்ல. இவன் ஒரு சாதாரண பிரஜை (citizen).

துரோணர் நினைத்தது போலவே, இவன் துரியோதனனின் பக்கம் போய், அதர்மத்தின் வழியில் சண்டை போட்டான்.

குழந்தைகள் history என்ற பெயரில் எந்த விஷத்தை (விஷயத்தை) படிக்கின்றனர் என்று பெற்றோரும் உணர்ந்து, நம் இதிகாசத்தை இவர்களும் சரியாக உணர்ந்து, என்ன உண்மையாக நடந்தது என்று சொல்லித்தரவேண்டும்.

1947ல் இருந்து இப்படிப்பட்ட விஷமக் கல்வியையே, கற்ற கூட்டம் தான், ஹிந்துவாக பிறந்தும் நாத்தீகனாகவும், ஹிந்துவின் பெருமையை சரியாக அறியாமல் தானும் சீரழிந்து, பல உயர் பதவியில் இன்று அமர்ந்து கொண்டு சீரழித்து வருகின்றனர்.

இனி வரும் தலைமுறை குழந்தைகளுக்காவது பாடம் எப்படி இருந்தாலும் உண்மையை சரியாக சொல்லிக் கொடுக்கும் கடமை பெற்றோருக்கு இருக்கிறது.

No comments: