Followers

Search Here...

Showing posts with label வால்மீகி. Show all posts
Showing posts with label வால்மீகி. Show all posts

Saturday 22 August 2020

சீதையை ராவணன் ஏன் நெருங்கவில்லை.. அத்தனை நல்லவனா ராவணன்? ராவணனே இதற்கு காரணம் சொல்கிறான்.. தெரிந்து கொள்வோமே....வால்மீகி ராமாயணம்

ராமர் இல்லாத சமயத்தில், சீதையை கடத்தி சென்றான் ராவணன்

தன்னை ஏற்பதற்காக, சீதைக்கு 1 வருடகால அவகாசம் கொடுத்தான்.

சீதையை ராவணன் ஏன் நெருங்கவில்லை.. அத்தனை நல்லவனா ராவணன்?

ராவணனே இதற்கு காரணம் சொல்கிறான்... தெரிந்து கொள்வோமே....

வால்மீகி ராமாயணம் - யுத்த காண்டம்:




ராமபிரான் வானர படைகளுடன், மகேந்திர மலை, சஹ்ய மலை, மலய மலையை தாண்டி, வேலாவனம் என்ற காட்டை தாண்டி, கடற்கரை அருகில் வந்து விட்டார் (இன்று ராமேஸ்வரம் என்று சொல்கிறோம்).


"கடலை கடந்து இலங்கை வந்து விட்டால் என்ன செய்வது? 

ஒரு வானரன் ஹனுமான் வந்தே இலங்கையை கலங்கடித்து விட்டான். கோடிக்கணக்கான வானரர்கள் உள்ளே நுழைந்தால்? இனி என்ன செய்ய வேண்டும்?"

என்று ராவணன் சபை கூட்டி, மந்திரிகளிடம் ஆலோசனை நடத்தினான்.


ராக்ஷஸர்கள் பலர், படைத்தளபதி ப்ரஹஸ்தா, வஜ்ரதம்ஸ்ட்ரா, நிகும்பன் (கும்பகர்ணன் பிள்ளை) ஆகியோர் ராவணனுக்கு ஆதரவாக பேசினார்கள். 

பிறகு விபீஷணன் பேசினார்.

விபீஷணன் மட்டும் "சீதையை தகுந்த மரியாதையுடன் திருப்பி அனுப்பி விடு" என்றார்.. 

உடனேயே சபையை கலைத்து விட்டு, வெளியே சென்று விட்டான் ராவணன்.


பிறகு ராவணன் அரண்மனைக்கு சென்று மீண்டும் விபீஷணன் சொல்லி பார்த்தார். 

"சீதையை அனுப்ப முடியாது" என்று மீண்டும் நகர்ந்தான்.


அடுத்த நாள், மீண்டும் சபை கூட்டினான் ராவணன்.


ஆறு மாத தூக்கத்துக்கு பின், சபைக்கு வந்து இருந்தான் கும்பகர்ணன்.

கும்பகர்ணன் ராவணன் செய்த இந்த பேடிதனமான காரியத்தை கடுமையாக கண்டித்தான்.. இருந்தாலும் 'ராமரை கொன்று யமலோகம் அனுப்புவேன். கவலைப்படாதே!' என்று சொல்லி அமர்ந்தான்.


ராவணன் ஆத்திரத்தில் இருந்தான்.

பிறகு மஹா பலசாலியான 'மஹாபார்ஷ்வன்' என்ற ஒருவன், ராவணனை பார்த்து கை குவித்து பேசினான்..

"ராமன் ஒரு சிறு பொடியன். அவனுக்கு மரத்தில் இருக்கும் தேன் கூட்டில் உள்ள தேனை கூட எடுக்க முடியாது.

நீங்கள் ஈஸ்வரன். 

ஈஸ்வரனுக்கே யார் ஈஸ்வரனாக முடியும்?

எதிரிகளை ஒடுக்க, சீதையை பலாத்காரம் செய்யுங்கள். 

அவளை அனுபவித்து விடுங்கள். பிறகு ஏற்படும் விளைவுகளை நாம் பார்த்து கொள்ளலாம்.

கும்பகர்ணன், உங்கள் மகன் இந்திரஜித் உங்களுடன் இருக்கும் போது, அந்த இந்திரன் தன் ஆயுதங்களை வீசினாலும் தடுத்து விடுவார்கள்.

சீதை திருப்பி கொடுப்பதோ (தானம்), சமாதானமோ, பேதமோ இங்கு தேவையே இல்லை. தேவைப்பட்டால் போர் செய்வோம்.

நம்மை எதிர்த்து எவன் வந்தாலும், அவன் மீது நம் ஆயுதங்கள் பாயும்"

என்று ராவணனுக்கு சாதகமாக பேசினான்.




மஹாபார்ஷ்வன் பேசிய வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து, ராவணன் அவனுக்கு பதில் அளித்தான்.

"மஹாபார்ஷ்வா! நான் சொல்வதை கவனி. இது எனக்கு மட்டுமே இருந்த ரகசியம்.

மஹாபார்ஷ்வ நிபோதம் த்வம் 

ரஹஸ்யம் கிஞ்சித் ஆத்மன: 

- வால்மீகி ராமாயணம்

இது பல காலங்கள் முன் நடந்த ஒரு சம்பவம். நானே அதை உனக்கு சொல்கிறேன்.

சிர வ்ருத்தம் ததாக்யாஸ்தே 

யத் அவாப்தம் மயா புரா

புஞ்சிகஸ்தலா என்று ஒரு தேவ கன்னிகை, சத்ய லோகத்தில் உள்ள ப்ரம்ம தேவனை பார்க்க ஆகாய மார்க்கமாக அக்னியை போன்று சென்று கொண்டிருந்தாள்.

பிதாமஹஸ்ய பவனம் 

கச்சந்திம் புஞ்சிகஸ்தலாம் | 

சஞ்சூர்யமானாம் அத்ராக்ஷம் 

ஆகாசோ அக்னி சிகாமிவ ||

அவளை பலாத்காரம் செய்து அனுபவித்தேன்.

கலங்கிய குட்டை போல ஆன அவள், ப்ரம்ம தேவன் இருக்கும் சத்ய லோகத்துக்கு ஓடினாள்.

சா பிரசஹ்ய மயா புக்தோ

க்ருதா விவசனா தத: | 

ஸ்வயம்பு பவனம் ப்ராப்தா

லோலிதா நளினி யதா ||

மஹாத்மாவான ப்ரம்ம தேவன் நடந்ததை அறிந்து கொண்டார்.

என் மீது கோபப்பட்டு என்னை சபித்தார்.

தஸ்ய தச்ச ததா மன்யே

ஞாதம் ஆஸீன் மஹாத்மனா |

அத சங்குபிதோ தேவோ மாம்

இதம் வாக்யம் அப்ரவீத் ||

'இனி எந்த ஒரு பெண்ணையாவது பலாத்காரம் செய்து கெடுக்க நீ முயன்றால், உன் தலை சுக்கு நூறாகி போகட்டும்' என்று சொல்லி விட்டார்.

அத்ய ப்ரப்ருதி யாம் அந்யாம்

பலான் நாரீம் கமிஸ்யாமி |

ததா தே சதகா மூர்கா

பலிஸ்யதி ந சம்சய: ||

இந்த சாபத்தின் பயத்தால் தான், சீதையை பலாத்காரம் செய்யாமல் இன்று வரை இருக்கிறேன்."

இத்யஹம் தஸ்ய சாபஸ்ய

பீத: ப்ரசபம் ஏவ தாம் |

நாரோபயே பலாத் சீதாம்

வைதேகீம் சயனே சுபே ||

என்று பதில் சொன்னான்.


எப்படிப்பட்ட கீழ்த்தரமான புத்தி கொண்ட ராவணன்!! என்று அறிந்து கொள்ளலாம்.

இப்படி, 

கீழ்த்தரமான புத்தி கொண்ட ராவணன், சாபத்துக்கு பயந்து, பிறர் மனைவியான சீதையை விடவும் மனம் இல்லாமல், 'ஒரு வருட காலம் தந்தாவது, சீதையின் மனதை மாற்றி விட வேண்டும்' என்று முயற்சி செய்து கொண்டிருந்தான்.




"பிறர் மனைவியை தொட நினைத்த ராவணனை ஆதரிப்பவன், எத்தனை கீழ்த்தரமானவனாக இருக்க வேண்டும்?" 

என்று நாம் தீர்மானிக்கலாம்.


தன் சொந்த சகோதரனனாலும், பலம் பொருந்தியவனனாலும், செல்வாக்கு மிகுந்தவனனாலும், அரசனே என்றாலும்

பிறர் மனைவியை அபகரித்து வைத்து இருந்த ராவணனை, மீண்டும் 3வது முறையாக சொல்லி பார்த்தார் விபீஷணன்


சபையில் அனைவருக்கு எதிராக எட்டி உதைத்து, 'நீ அந்த ராமனிடமே போ!' என்றான் ராவணன்.

'கீழ்தரமான இவனிடம் இனியும் இருக்க கூடாது' என்று 

விபீஷணன் ராமபிரானை சரண் அடைவோம் என்று முடிவு செய்து கிளம்பினார்.

சாபத்துக்கு பயந்த இந்த பேடி ராவணனை, உயர்த்தி புகழும் சிலரை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?...

Sunday 16 August 2020

Who is the best employee to a business owner? Sri Rama says who is best, mediocre, worst employee. படியுங்கள்.

Who is the best employee to a business owner? 

Sri Rama says who is best, mediocre, worst employee.  படியுங்கள்.  

வால்மீகி ராமாயணா ஸ்லோகம்: (யுத்த காண்டம்)


ராமபிரானே பேசிய வாக்கு




இதை படித்தாலேயே நமக்கும் ராம பக்தி வந்து சேரும்.


யோ ஹி ப்ருத்யோ நியுக்தஸ்சன் பர்த்ரா கர்மனி துஷ்கரே !

குர்யாத் தத் அனுராகேன தமாஹு புருஷோத்தமம் !!

Able Servant who does even a difficult job with love and interest, instructed by his master is the best.


நியுக்தோ ய: பரம் கார்யம் ந குர்யான் ந்ருபதே ப்ரியம் !

ப்ருத்யோ யுக்த: சமர்தஸ்ச்ச தமாஹுர் மத்யமம் !!

Able Servant who does not do difficult jobs with love and interest, instructed by his master is the mediocre.


தன்னியோகே நியுக்தேன க்ருதம் க்ருத்யம் ஹனூமதா !

ந சாத்மா லகுதாம் நீத: சுக்ரீவஸ்சாபி தோஷித: !!

Able Servant who does not do any work instructed by his master, being indisciplined is the worst.

Friday 14 August 2020

பொறுமையின் லாபம் என்ன?.. வால்மீகி ராமாயணம் பதில் சொல்கிறது.. தெரிந்து கொள்வோம்.

கஷ்டம் வரும்போது, நாம் எதை கடைபிடிக்க வேண்டும்?..


ராமாயணத்தில், "14 வருட வனவாசம் முடித்துக்கொண்டு, ராமபிரான் பரத்வாஜ ரிஷியின் ஆசிரமத்துக்கு வந்து விட்டார்.. நீங்கள் ராமபிரானை வெகுசீக்கிரத்தில் பார்க்க போகிறீர்கள்" 

என்று ஹனுமான் பரதனை பார்த்து சொன்னார்.

தசரதர், ராமபிரான் பிரிவை தாளமுடியாமல் தேகத்தை விட்டு, சொர்க்க லோகம் சென்று விட்டார்.


பரதன், கௌசல்யா, அயோத்தி மக்கள் என்று அனைவரும் மீள முடியாத சோகத்தில் மூழ்கினார்கள்


"பொறுமையால்" 14 வருடங்கள் உயிர் தரித்து இருந்தனர்.


14 வருடம் தானும் மரவுரி அணிந்து, ராமபிரானுக்காக காத்து இருந்த பரதன், ஹனுமானை பார்த்து சொல்கிறார்...


கல்யாணி பத காதேயம் 

லௌகிகீ ப்ரதிபாதி மே!

ஏதி ஜீவந்தம் ஆனந்தோ 

நரம் வர்ஷ சதாதபி!!

- தமிழர் "வால்மீகி ராமாயணம்"


कल्याणी बत गाथेयं लौकिकी प्रतिभाति में !

एति जीवंतम आनंदो नरं वर्ष शतादपि !!

- valmiki ramayan





அர்த்தம்:

"பல வருடங்கள் ஒருவனுக்கு கஷ்ட காலமாக அமைந்தாலும், பொறுமையை கடைபிடித்து வாழ்ந்து வந்தால், நிச்சயமாக பேரானந்தம் இவனை வந்து சேரும்.

இந்த வாக்கியம் இன்று சத்தியமாக ஆயிற்று !!"

என்று பரதன் சொல்கிறார். 


Meaning:

"If one survives difficult times patiently, Joy comes to one even after many years.

This saying is auspicious."

Says bharat (brother of rama)


பொறுமையை இழக்கும் போது, மனதுயர் அதிகமாகும், ஆயுள் குறையும்.

கஷ்டங்கள் வரும்போது, நாம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.


அன்பில் என்ற ஊரில் அவதரித்து, திருநீர்மலையில் முக்தி பெற்ற "தமிழர் வால்மீகி" உலகுக்கே ராமாயணம் கொடுத்தார். 


தமிழர் வால்மீகி த்ரேதா யுகத்தில் பொது மொழியான சமஸ்கரிதத்தில் எழுதினார்.


"தமிழில் வால்மீகியின் ராமாயணத்தை எழுதுவோம்" என்று கலி யுகத்தில் இன்னொரு தமிழ் புலவன் நினைத்தார்.

கம்ப ராமாயணமும் கிடைத்தது.


ராமாயணத்தை கொடுத்த தமிழர் வால்மீகியால், உலக மக்களுக்கும், உண்மை தமிழர்களுக்கும் பெருமை. 

ராமபிரானே "பரவாசுதேவன்" என்று நிரூபிக்கும் ஸ்லோகம்.. வால்மீகி ராமாயணம்

ராமபிரானே பரவாசுதேவன் என்று நிரூபிக்கும் ஸ்லோகம்.. வால்மீகி ராமாயணம்.
இந்த சிறிய ஸ்லோகத்தை நாம் தினமும் சொன்னால், தமிழர் வால்மீகியை ஆனந்தப்படுத்தும், ராமாயணம் படித்த திருப்தியும் உண்டாகும்..

ப்ரியதே சததம் ராம: ச ஹி விஷ்ணு சனாதன: !
ஆதி தேவோ மஹாபாகு ஹரி நாராயண ப்ரபு: !
சாக்ஷாத் ராமோ ரகு ச்ரேஷ்ட:
சேஷோ லக்ஷ்மண உச்யதே !
- வால்மீகி ராமாயணம் (யுத்த காண்டம் - பட்டாபிஷேகம்)




அர்த்தம்:
அன்பே வடிவான ராமபிரானே காலத்துக்கும் அப்பாற்பட்ட விஷ்ணு.
நீண்ட கைகள் கொண்ட, ரகு குலத்தில் உதித்த ராமரே, ஆதி தேவனான ஹரி நாராயணன்.
நாராயணன் சயனித்து இருக்கும் ஆதிஷேஷனே லக்ஷ்மணன்.

அன்பிலில் அவதரித்து, திருநீர்மலையில் முக்தி பெற்ற "தமிழர் வால்மீகி" உலகுக்கே ராமாயணம் கொடுத்தார்

தமிழர் வால்மீகி த்ரேதா யுகத்தில் பொது மொழியான சமஸ்கரிதத்தில் எழுதினார்.

"தமிழில் வால்மீகியின் ராமாயணத்தை எழுதுவோம்" என்று கலி யுகத்தில் இன்னொரு தமிழ் புலவன் நினைத்தார்.
கம்ப ராமாயணமும் கிடைத்தது.

ராமாயணத்தை கொடுத்த தமிழர் வால்மீகியால், 
உலக மக்களுக்கும், உண்மை தமிழர்களுக்கும் பெருமை.

Thursday 13 April 2017

ஸனாதன தர்மம், யாரையும் அயோக்கியன் என்று சொல்வதில்லை. ஆச்சர்யமான பரந்த எண்ணம் கொண்டது நம் தர்மம்.

நம் ஸனாதன தர்மம், யாரையும் "அயோக்கியன்" என்று சொல்வதில்லை.
உண்மையில் யாருமே இந்த உலகத்தில் அயோக்கியன் இல்லை என்று கூட சொல்கிறது.


இந்த ஸ்லோகம் படிக்கும் போதே, எப்படி மனிதனை உயர்த்தி சொல்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

अयोग्यः पुरुषो नास्ति योजकस्तत्र दुर्लभः॥

அயோக்கிய: புருஷோ நாஸ்தி |
யோஜக தத்ர துர்லப: ||
யாருமே இந்த உலகத்தில் அயோக்கியன் இல்லை. 
அந்த அயோக்கியனிடமும் ஒளிந்து உள்ள  ஈஸ்வரனை, நல்ல குணத்தை, வெளியே கொண்டு வர அவனுக்கு ஒரு குரு இல்லாததே இவன் அயோக்கியன் போல தென்படுவதற்கு காரணம் என்று சொல்கிறது.

தன்னிடம் ஒளிந்து உள்ள நல்ல எண்ணங்களை வெளிப்படுத்த உதவி செய்யும், ஞானிகள் (குரு) கிடைப்பதே அரிது என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது.

அப்படிப்பட்ட ஞானத்தில் உயர்ந்த ஒரு குரு, ஒரு அயோக்கியனை பார்க்கும் போது, அவனும் தான் புண்ணிய ஆத்மாவே என்று உணர்வான், திருந்துவான்.

அயோக்கியனுக்கு, அவனிடம் உள்ள நல்லதை எடுத்து காட்டும், உண்மையான குரு கிடைப்பதே அரிது.
வேடுவனாக கொலை கொள்ளை என்று வாழ்ந்த ருக்ஷன், நாரதரை தரிசித்த பின், வால்மீகி ரிஷி ஆனார் என்று பார்க்கிறோம்.

ஸனாதன தர்மம், யாரையும் அயோக்கியன் என்று சொல்வதில்லை. ஆச்சர்யமான பரந்த எண்ணம் கொண்டது நம் தர்மம்.


There no person who is worthless, but,
Rare indeed is the nourisher of talents.

Explained by சாரதா பீட புது ஆச்சர்யாள்.
sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka