Followers

Search Here...

Wednesday 14 August 2019

இந்திய சுதந்திரத்துக்கு முன்.. பாரத இஸ்லாமிய, பாரத ஹிந்துக்கள் சந்தித்த பிரிவினை சக்திகள்... தெரிந்து கொள்வோமே

"அரேபிய இஸ்லாமியர்கள்" 947ADல் ஆரம்பித்து "கோரி, மாம்லுக், கில்ஜி, துக்ளக், சயித், லோடி, முகலாய" என்று 1800AD வரை பாரத தேசத்தை பெரும் சேதத்துக்கு உள்ளாகினர்.
அரேபிய முஸ்லீம்கள் பாரத தேசத்தில் நுழைந்து, சில ஆயிரம் பேர் இன்று வரை இந்தியனாக கூட சிலர் வாழ்கின்றனர். இதை மறுக்க முடியாது.
அவர்கள் நிறம் அவர்களை அடையாளப்படுத்துகிறது.



1720ல் முகலாய அரேபிய முஸ்லிம் ஆட்சி, அழிவை நோக்கி நகர்ந்தது.
"பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள்", முகலாய அரேபிய முஸ்லிம்களை அடியோடு டெல்லி, பெங்கால், தமிழகம் போன்றவற்றில் இருந்து அகற்றினார்கள்.
இஸ்லாமிய ஆட்சியில், (947AD - 1720AD) 800 வருடங்களாக அரேபிய முஸ்லீம்களால், முஸ்லீமாக மாற்றப்பட்டு இருந்த சில லட்சம் பாரத மக்கள், கிறிஸ்தவர்கள் ஆட்சியில் கஞ்சிக்கு அலையும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

800 வருடங்களாகவே நசுக்கப்பட்டு இருந்த ஹிந்துக்கள், ஏழைகளாக வாழ்ந்தார்கள்.



மஹாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திர தேசங்கள் பெரும்பாலும் மராட்டிய ஹிந்து அரசர்களால் வலுவாக இருந்தது.
மேற்கு பாரதம் ஹிந்து ராஜ்யத்தில் இருந்தது.
ஆங்காங்கு இஸ்லாமிய ஆட்சியும் நடந்தது.

ஹிந்து ராஜ்யத்தை அழித்தால் தான், "இந்தியா முழுவதும் கிறிஸ்தவர்கள் கையில் வரும்" என்று, போர்ச்சுகல், பிரெஞ்ச், பிரிட்டிஷ் அனைவரும் சேர்ந்து கொண்டனர்.

மராட்டியர்களுடன் போர் தொடுத்து முதல் போரில் தோல்வி அடைந்தார்கள் பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள்.
மீண்டும் 1803ADல் இரண்டாவது முறை, மராட்டிய ஹிந்து ராஜ்யத்தை அழிக்க போர் தொடுத்தனர் பிரிட்டிஷ்காரர்கள்.


ஆப்கான் நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் கில்ஜி காலத்தில் இருந்தே தங்கி இருந்த ஒரு ஆப்கான் முஸ்லீம் கூட்டம், "Faiz Talab Khan" என்பவன் தலைமையில், சமயத்தில் தன் சிறு படையை பிரிட்டிஷ்கார படை பக்கம் நிறுத்தியது.
2வது Anglo-maratha போரில், மராட்டிய ராஜ்யத்தில் இருந்த பல  ஹிந்து ராஜ்யங்கள், பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் கைப்பற்றினார்கள்.

ஹிந்துக்களை அழிக்க உதவிய ஆப்கான்காரன் "Faiz Talab Khan"க்கு நவாப் (Viceroy) என்ற பட்டத்தை கொடுத்து, தாங்கள் கைப்பற்றி இருந்த ஹாயானாவில் உள்ள "பட்டோடி" என்ற ஊரையும் அதை சுற்றி உள்ள 40 கிராமங்களையும் 1804ADல் நிர்வாகம் செய்து கொள்ள பிச்சை போட்டனர்.

ஹிந்துக்களை அழிக்க உதவிய ஆப்கான்காரன் Faiz Talab Khan "Nawab of Pataudi" என்று அழைக்கப்பட்டான். 
மராட்டிய ஹிந்து சாம்ராஜ்யம் அழிய, உதவி செய்த இந்த ஆப்கான் முஸ்லீம் (nawab of pataudi) குடும்பம் இன்று இந்திய ப்ரஜைகள்.

இவர்கள் நாங்கள் தான் "உண்மையான முஸ்லீம்கள்" என்று சொன்னால் கூட ஏற்க தான் வேண்டி இருக்கிறது.


முகலாய அரேபிய 'முஸ்லீம்' ஆட்சியை வேரோடு அறுக்க, பிரிட்டிஷ் 'கிறிஸ்தவர்கள்', பிரெஞ்ச், போர்ச்சுகல் போன்றவர்கள் துணையுடன், விஜயநகர 'ஹிந்து' சாம்ராஜ்யத்தின் துணையையும் பெற்று அழித்தனர்.

(947AD - 1720AD) 800 வருடங்கள் பயத்தால், பதவியால், இஸ்லாமுக்கு மாறி இருந்த அனைவரும் பிச்சைக்காரர்கள் ஆனார்கள்.

மராட்டிய ஹிந்து சாம்ராஜ்யத்தை, ஆப்கான் முஸ்லீம்கள் துணை செய்ய, பிரெஞ்ச் கிறிஸ்தவர்களின் துணை கொண்டு மூன்றாவது முறை செய்த போரில் வெற்றி கண்டனர்.

947ADல் அரேபிய இஸ்லாமியர்கள் உள்ளே நுழைந்து, ஹிந்துக்களை தாக்க, ஹிந்துக்களாக இருந்த பொது மக்கள் ஏழைகள் ஆனார்கள்.

1720ADகளில் அரேபிய இஸ்லாமியர்களை, பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் ஹிந்துக்களின் துணை கொண்டு அழித்து, கோரி, கில்ஜி, துக்ளக், சயித், லோடி, முகலாய என்று தொடர்ந்து கொண்டிருந்த அரேபிய இஸ்லாமிய ஆட்சியை வேரோடு அறுத்து, அரேபிய முஸ்லீம்கள் அழிக்கப்பட்டனர்.

1800ADகளின் ஆரம்பத்தில், மராட்டிய போன்ற ஹிந்து ராஜ்யங்களை அழிக்க, மீதம் இருக்கும் சில குட்டி முஸ்லீம் அரசர்கள் துணை கொண்டு, பெரும் ஹிந்து ராஜ்யங்களையும் முடிவுக்கு கொண்டு வந்தனர் கிறிஸ்தவர்கள்.

1857ADல், அரேபிய முஸ்லீம்கள் ஒருவர் கூட இல்லை.
அவரவர்கள் அவர்கள் ஊருக்கு போய் விட்ட நிலையில்,
900 வருடங்களாக ஏழையாக போய் இருந்த ஹிந்து பொது மக்களுடன், அரேபியர்களால் முஸ்லீமாக மதம் மாறியும் 100 வருடங்களாக கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில் சிக்கிய பாரத மக்கள், கிறிஸ்தவ பிரிட்டிஷ்காரர்களுக்கு அடிமை வேலை செய்ய ஆரம்பித்தனர்.

கிறிஸ்தவர்கள், 
"ஹிந்துவை அழிக்க இஸ்லாமியனை",
"இஸ்லாமியனை அழிக்க ஹிந்துவையும்"
பயன்படுத்தி பெரும் வெற்றி கண்டனர்.

அரேபிய ஆட்சி காலத்தில், இஸ்லாமியனாக மதம் மாறி இருந்தவர்கள், 1720ADக்கு பின், 100 வருடங்களாக, கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் தலையெடுக்க, பிழைப்புக்கு கிடைத்த வேளைகளில் நுழைந்தனர்.






கிறிஸ்தவ பிரிட்டிஷ் ராணுவத்தில், மதம் மாறி இருந்த இஸ்லாமியர்களும், ஹிந்துக்களும் வேலைக்காக  சேர்த்தனர்.
"கிறிஸ்தவர்களை எதிர்க்கும்  ஹிந்துக்களை, இஸ்லாமியர்களை" ஹிந்துக்களை, இஸ்லாமியர்களை வைத்தே சண்டையிட செய்தனர்.

அப்போது பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட "என்பீல்டு வகை துப்பாக்கிகளுக்கு" வழங்கப்பட்ட தோட்டாக்கள் ஒரு வகை உறையால் மூடப்பட்டிருந்தன.
இவற்றை வாயால் கடித்து உறைகளை அகற்ற வேண்டியிருந்தது.

இந்த உறைகள் "மாட்டுக் கொழுப்பு" மற்றும் "பன்றிக் கொழுப்பினால்" ஆனவை என்று தகவல் பரவியது.

இது "இந்து" மற்றும் "முஸ்லிம்" சமயத்தைச் சார்ந்த ராணுவ வீரர்களின் சமய உணர்வை புண்படுத்துவதாக ராணுவ வீரர்கள் எண்ணினர்.

இதன் காரணமாக ராணுவ வீரர்கள் அவ்வகை உறைகளை வாயால் கடித்து நீக்க மறுத்து உயர் அதிகாரிகளை எதிர்த்தனர்.
இதன் தொடர்ச்சியாக 1857 மார்ச் 29 ஆம் நாளில் மங்கல் பாண்டே (Mangal Pandey) என்ற ராணுவ வீரர் ஒருவர் பாரக்பூரில், தனது உயரதிகாரியை தாக்கி தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

இது ஆங்கிலேய ராணுவத்தில் பணிபுரிந்த இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட ஒரு ஆரம்பமாக அமைந்தது.
அடுத்த 100 வருடங்கள் ஹிந்துக்கள், இஸ்லாமியனாக மதம் மாறி இருந்த ஹிந்துக்கள் "கிறிஸ்தவ ஆட்சியை" எதிர்த்தனர்.


இதற்கிடையில் பிரிட்டிஷ்காரர்கள் ஜெர்மனியுடன் மோத, இரண்டு முறை உலக போர் மூண்டது..
பெரும் சவாலை தங்கள் நாட்டில் எதிர்கொண்டு இருந்த பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள், இந்தியாவில் நடக்கும் கலவரங்களை கட்டுப்படுத்த வழி தெரியாமல், ஊரை விட்டு கிளம்ப முடிவு செய்தனர்.

"விடுதலை கிடைக்க போகிறது" என்ற நிலை வந்ததும்,
"முஸ்லீமாக 800 வருடங்களாக வாழும் தங்களுக்கு தனி இடம் தேவை" என்று ஜின்னா சொல்ல, அதனால் பல உயிர் சேதங்கள் ஏற்பட,
காந்தி, பாரத தேசத்தின் பெங்கால் தேசத்தின் ஒரு பகுதியை, சிந்து தேசத்தை 
"இஸ்லாமிய தேசமாக மாற்றி கொள்ள" அனுமதித்தார்.
நேருவை "இந்திய நாட்டுக்கு பிரதமராக" இருக்க செய்தார்.

'சிந்து தேசத்தில் இருந்த ஹிந்துக்கள்' கலவரத்தில் இறந்தும், பலர் இந்தியா என்று பிரிக்கப்பட்ட பாரத தேசத்தில் குடி பெயர்ந்தனர்.

அதே போல,
பல லட்சம் முஸ்லீம்கள் சிந்து தேசத்துக்கும், இன்றைய பங்களாதேஷ்க்கும் குடி பெயர்ந்தனர்.

ஜின்னா "பாகிஸ்தான், பங்களாதேஷ் இஸ்லாமிய நாடு" என்று சட்டம் ஏற்படுத்தினார்.
ஸ்ரீ ராமரின் மகன் லவன் உருவாக்கிய லவபுரம் (லாகூர்) முழுவதும் இஸ்லாமிய நகரம் ஆனது.

ஸ்ரீ ராமரின் தம்பி பரதன் உருவாக்கிய புருஷபுரா (பெஷாவர்), தக்ஷசீலம் (Taxila) முழுவதும் இஸ்லாமிய நகரம் ஆனது.

அருமையான ஹிந்து தேசங்கள் "சாம, தான, பேத, தண்ட" நீதி படி, இஸ்லாமியர்களாக வாழும் நம் சகோதரர்களுக்கு "தானமாக" தரப்பட்டது.
ராமரின் மகன், தம்பிகள் ஆண்ட ஹிந்து தேசத்தை இழந்தாலும், நிலைமையை உணர்ந்து முடிவை மதித்தனர், ஹிந்துக்கள்.

ஆனால், நேரு "இந்திய தேசம் ஹிந்து ராஜ்யம்" என்று சொல்ல மறந்தார். மறுத்தார்.


1947AD Aug 14, பாகிஸ்தான் கிறிஸ்தவ ஆட்சியில் இருந்து முதலில் விடுதலை பெற்றது.
1947ADல் Aug 15, இந்தியா என்ற பெயரில் பிரிக்கப்பட்ட பாரத தேசம், கிறிஸ்தவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது.

1526ADல் இந்தியாவில் நுழைந்து, அயோத்தியில் ஸ்ரீ ராமர் அவதரித்த கோவிலை அரேபியன் பாபர் இடித்து மசூதி கட்டினான்.

1947ADல் பாகிஸ்தான் 'இஸ்லாமிய ராஜ்யம்' என்று ஜின்னா சொன்ன போது, இந்தியா 'ஹிந்து ராஜ்யம்' என்று நேரு அறிவிக்காததால்,
"பாபர் அரேபியனாக இருந்தாலும், மசூதியை இடிக்ககூடாது, இது எங்கள் நிலம்"
என்று பாகிஸ்தான் செல்ல மறுத்த இந்தியாவில் இருக்கும் ஒரு சில ஆயிரம் இஸ்லாமியர்கள் எதிர்த்தனர்... எதிர்க்கின்றனர்... சிலர் சரித்திரத்தை புரிந்து கொண்டு ஆதரிக்கின்ற்னர்.

1947ADல் பாகிஸ்தான் 'இஸ்லாமிய ராஜ்யம்' என்று ஜின்னா சொன்ன பிறகு, பாகிஸ்தான் முழுவதும் இருந்த கோவில்கள், பௌத்த ஆலயங்கள் இடிக்கப்பட்டு விட்டன.

800 வருடங்களுக்கு முன் அரேபிய அடக்குமுறையாலும், பயத்தாலும், பதவிக்காகவும் இஸ்லாமியர்களாக மதம் மாறிய பாரத மக்கள்,
எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல், பதவிக்கு மயங்காமல்  ஹிந்துக்களாகவே 1000 வருடமும் இருந்து, இன்று வரை இருப்பதை பார்த்து பொறாமை அடைகிறார்கள்...

1000 வருடங்களில் எத்தனை செல்வங்கள் இழந்து இருக்கிறோம்!! என்று புரியாமல், ஹிந்துக்களாகவே இவர்கள்  இருப்பதை பார்த்து பொறாமை அடைகிறார்கள்...

48000 பெரும் கோவில்களை இடித்தார்கள் அரேபியர்கள் என்ற உண்மை தெரிந்தும், ஒரு அயோத்தி கோவில் கட்ட எதிர்க்கிறார்கள். 


எத்தனை இடிக்கப்பட்ட கோவில்கள் இன்றும் காட்சி பொருளாக உள்ளது!!
இதை பார்த்தும் இன்று முஸ்லீமாக உள்ள பாரத மக்களுக்கு, ஹிந்துவாக உள்ள பாரத மக்களின் உணர்வு புரியவில்லை.

"தாங்களே மதம் மாற்றப்பட்டவர்கள் தான்" என்பது கூட புரிந்து கொள்ளும் பக்குவத்தை இழந்து உள்ளனர்.
பிரிக்கப்பட்ட பாரத தேசத்தை, மீண்டும் பிரிவினை செய்ய முயற்சிக்கின்றனர்.

கிறிஸ்தவர்கள் தான் வாழ ஹிந்துவை சேர்த்து கொள்வான்.
தேவைப்பட்டால் முஸ்லீமையும் சேர்த்து கொள்வான் என்று சரித்திரமே சான்று கூறுகிறது.

இஸ்லாமியர்களை அழிக்க, ஹிந்துக்களை துணை கொண்டனர்.
ஹிந்துக்களை அழிக்க இஸ்லாமியர்களை துணை கொண்டனர்.
கடைசியில் இருவரையும் அடிமை ஆக்கி (1847AD - 1947AD)100 வருடங்கள் முழுமையாக ஆண்டனர் என்று சரித்திரம் காட்டுகிறது.

ஹிந்துவை எதிர்ப்பதாக நினைத்து, சுதந்திரம் அடைய தானும் பாடுபட்ட பாரத நாட்டு இஸ்லாமியன், கிறிஸ்தவனோடு சேர்கிறான்.

பாரத தேச இஸ்லாமியர்கள், ஹிந்துக்களின் உணர்வை மதிக்க வேண்டும்.

ஹிந்துக்கள் என்றுமே இஸ்லாமியனுக்கோ, கிறிஸ்தவனுக்கோ கூட பகைவனாக இருந்ததில்லை.

அமெரிக்க கிறிஸ்தவனும் இந்தியாவை மதிக்கிறான்.
இன்று சௌதி அரேபிய இஸ்லாமியனும் இந்தியாவை மதிக்கிறான்.
அரேபிய முஸ்லிம்களே இந்தியா ஹிந்து நாடு தான், நாங்கள் உள்ளே நுழைந்த பின் இஸ்லாமிய மதம் பூகுத்தப்பட்டது என்று சரத்திர உண்மையை ஆமோதிக்கிறார்கள்.

இஸ்லாமிய தேசமாகி போன பாகிஸ்தானை ஒருவனும் மதிப்பதில்லை.



"தாங்கள் ஹிந்துக்களாக வாழ்ந்து,  கில்ஜி அரசாட்சி சமயத்தில் இஸ்லாமியர்களாக ஆனவர்கள் தான்' என்று உண்மையை சொல்லும் முஸ்லிம்கள் இன்றும் இந்தியாவில் உள்ளனர்.

"மேயோ (Mev or Mewat) முஸ்லீம் மக்கள்" உண்மையை ஒப்புக்கொள்ளும் பக்குவம் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்கள் தங்கள் அடையாளங்களை இன்று வரை  மறைக்கவில்லை.

இஸ்லாமியனாக மாறி குர்ஆன் தன் மத நூலாக ஏற்றாலும், இந்த சமூகம், "சங்கர் கான்", "ராம் கான்" என்று பெயர்களை வைத்து கொள்ள தயங்கவில்லை.
இவர்களிடம் ஹிந்துக்களும் தங்கள் வெறுப்பை காட்டுவதில்லை.
இவர்கள் முஸ்லீமாகவே தான் வாழ்கின்றனர்.

இவர்கள் ஈத் கொண்டாடுவது போல, ஹோலி, தீபாவளியும் கொண்டாடுகிறார்கள்.

குர்ரானில் பெயர் சொல்லப்படாத இறைவன் ராமர் தான் என்று, ராமரையும் அவர்கள் மதிக்கிறார்கள்.

ஹிந்துக்களின் உணர்வை, தாங்கள் எப்படி இஸ்லாமியனாக ஆனோம் என்ற சரித்திரத்தை பின்னோக்கி பார்த்தல், நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்று தெரிந்து விடும்.

ஹிந்துக்களின் உணர்வுகள், இழப்புகள்  947ADல் இருந்தே உள்ளது...
மதம் மாறி போன இசுலாமியர்களுக்கு, மதம் மாற்றப்பட்டதே ஒரு பேரிழப்பு தான்.  

சரித்திர உண்மைகளை புரிந்து கொள்வோம்.
ஊரில் புகுந்து அட்டகாசம் செய்த அரபியர்களே, இன்று இந்தியர்களுடன் நட்பு கொள்ளும் போது, 
ஹிந்துக்களின் உணர்வை, நம்பிக்கையை காயப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது நியாயம் ஆகாது.  



Tuesday 13 August 2019

ஆவணி அவிட்டம் என்ற உபாகர்மா மூலம் என்ன செய்கிறோம்?...காரணம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

"ஆவணி அவிட்டம்" என்று, சொல்லப்படும் நாளில் பிராம்மணர்கள் கூடி பூணல் அணிந்து கொள்கிறார்கள். "ஸ்ராவணம்" என்றும், "உபாகர்மா" என்றும் கூட சொல்கிறார்கள்.



சிலர் ஆணி அவிட்டம், ஆடி அவிட்டம் போன்ற நாட்களிலும் செய்து கொள்கிறார்கள்.

"ஆவணி அவிட்டம்" என்றதும்
"ஒரு வருடமாக போட்டு கொண்டிருக்கும் அழுக்கு பூணலை கழட்டி, புது பூநூல் போட்டு கொள்ளும் நாள்"
என்று லௌகீக பிராமணர்கள் நினைக்கலாம்.

இப்படி நினைப்பதாலோ என்னவோ!!
சில லௌகீக ப்ராம்மணர்கள், வேறு ஒரு புது நூலை தாங்களே வாங்கி மாட்டிக்கொண்டு விடுகின்றனர்.

நம்முடைய ஹிந்து தர்மத்தில், நாம் செய்யும் எந்த செயலிலும் ஒரு அர்த்தம் உண்டு. காரணமும் உண்டு.

இன்று நமக்கு, 'அர்த்தம் தெரியாமல் போனாலும், காரணம் புரியாமல் போனாலும்',
ஹிந்து தர்மம் சொல்லும் எந்த செயலிலும், காரணம் இருக்கும் என்ற அளவிலாவது நமக்கு 'நம்பிக்கை' வேண்டும்.

இன்றைய நவீன காலத்தில், உலக விஷயங்கள் நம் கையில் கிடைக்கும் நிலையில், காரணங்கள், அர்த்தங்கள் புரிந்து கொள்வது எளிது.

இன்று புரியாமல் போனாலும்,  ஹிந்து தர்மம் சொல்லும் காரியங்களை நம்பிக்கையுடன் கடைபிடிக்க வேண்டும்.
விட்டு விட கூடாது.
அலட்சியம் செய்ய கூடாது.
செய்பவர்களை கேலி செய்ய கூடாது.

"சந்தியா வந்தனம்" என்பது ப்ராம்மணன்" கட்டாயம் செய்ய வேண்டிய கடமை என்று விதிக்கப்பட்டு உள்ளது.
எப்பொழுது 'விதிக்கப்பட்டதோ', அதை ப்ராம்மணன் மீறுவது சரியாக இருக்க முடியாது...

இன்று நமக்கு, சந்தியா வந்தனத்திற்கு அர்த்தம் புரியாமல் போனாலும், காரணம் புரியாமல் போனாலும்,
"காரணம் இல்லாமல், அர்த்தம் இல்லாமல் 'வேத வியாசர்' நமக்கு சொல்லி இருக்க மாட்டார்"
என்ற அளவிலாவது நமக்கு 'நம்பிக்கை, நம் ஹிந்து தர்மத்தில்' இருக்க வேண்டும்.

எந்த காரியத்தை செய்தாலும், அதில் உள்ள காரணம், அர்த்தங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

"சந்தியா வந்தனம் ஏன் செய்ய வேண்டும்? அதன் அர்த்தங்கள் என்ன?"
என்று வேத ப்ராம்மணர்கள், உண்மையான மகான்கள் மூலம் தெரிந்து கொள்ளும் போது,
சந்தியா வந்தனம் செய்வதில் உண்மையான 'ஸ்ரத்தை' (ஈடுபாடு) நமக்கு தானாக ஏற்படும்.

தவறான அர்த்தங்களும் பிறரால் சொல்லப்படலாம்.
அதனால் பல வேத ப்ராம்மணர்கள், மகான்களை அணுகி, சந்தேகம் தீரும் வரை விசாரங்கள் செய்து, அர்த்தங்களை, காரணங்களை தெரிந்து கொள்ள ஆர்வத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.

பொதுவாகவே, நாம் ஒன்றை தெளிவாக மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதாவது, "ஹிந்து தர்மத்தில் அர்த்தமில்லாத காரியங்கள் எதுவுமே கிடையாது. காரணம் இல்லாமல் எந்த செயலும் நமக்கு சொல்லப்படுவதில்லை"
என்று புரிந்து கொள்ள வேண்டும்.


குறைந்தபட்சம் இந்த அளவிலாவது நம் நம்பிக்கையை ஹிந்து தர்மத்தில் வைத்து இருக்க வேண்டும்.

'தெரிந்து கொள்ள வேண்டும்' என்கிற ஆர்வம் மட்டும் நமக்கு எப்பொழுதும் இருந்தால்,
தகுந்த நேரம் நமக்கு வரும்போது, பெரியோர்கள், மகான்கள் அதன் அர்த்தங்கள், காரணங்களை நமக்கு விளக்குவதை நம் வாழ்க்கையில் அனுபவிக்கலாம்.

வேதத்தை மனப்பாடம் செய்வதற்கே 12 வருடங்கள் ஆகிறது என்கிறார்கள்.

"வேதத்தின் அர்த்தம் முழுமையாக புரிந்தால் தான் வேதத்தை மனப்பாடம் செய்வேன்" என்று ஒருவன் சொன்னால், அவன் ஆயுள் முழுக்க செலவு செய்தாலும் வேதத்தை முழுக்க புரிந்து கொள்ள முடியாது.

ஹிந்து தர்மத்தில் சொல்லப்படும் 'எந்த காரியமும் அர்த்தம் உடையது தான் ' என்ற நம்பிக்கை இருப்பதால் தானே,
உலக ஆசைகளை விட்டு,
"12 வருடங்கள் கடுமையாக வேதத்தை மனப்பாடம் செய்கின்றனர்" வேதம் படிக்கும் பிராம்மண சிறுவர்கள்.
வேதம் உறுதியாக அவர்கள் மனதில் பதிந்த பின்,
வாழ்நாள் முழுவதும் அதன் அர்த்தங்களை, காரணங்களை அறிந்து, மேலும் மேலும் ஸ்ரத்தையை வளர்த்து வேதத்திற்காகவே வாழ்கின்றனர் 'வேதியர்கள்' என்று பார்க்கிறோம்.

புரிந்து கொண்டு சந்தியா வந்தனம் செய்தால், ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படுகிறது.
'கேசவ, நாராயண, மாதவா' என்று சொல்லும் போதே பஜனை செய்யும் ஆனந்தம் மகான்களுக்கு ஏற்படுகிறது.

அதே போல,
"ஆவணி அவிட்டம்" என்ற இந்த நாளில் என்ன செய்கிறோம்? என்று தெரிந்து கொள்வதால், ஆவணி அவிட்டத்தில் செய்யும் காரியங்களிலும் நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும்.

ஹிந்து தர்மத்தில் நமக்கு விதிக்கப்பட்ட எந்த கடமையையும், புரியாமல் போனாலும் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.
காலம் கனியும் போது, அர்த்தங்கள் புரியும் போது நமக்கு மேலும் ஸ்ரத்தை (ஈடுபாடு) கூடலாம்.
காய்ச்சல் வந்தவனுக்கு, டாக்டர் ஒரு மாத்திரை தருகிறார்.

'அது என்ன மாத்திரை?
உடம்பு முழுக்க சூடாக கொதிக்கிறது. இந்த சின்ன மாத்திரை வாயில் போட்டால், உடல் முழுவதும் செல்லுமா?
இந்த மாத்திரை எப்படி உருவானது?
அது எப்படி என் காய்ச்சலை குணம்படுத்தும்?
என்று கேள்வி கேட்டு கொண்டே இருக்கலாம்.


டாக்டர் பதில் சொல்லி,
அந்த மருந்தை தயாரித்தவன் வந்து விளக்கி சொல்லி,
நம்பிக்கை ஏற்பட்ட பின்னர் கூட, உயிரோடு இருந்தால், அந்த மருந்தை எடுத்து கொள்ளலாம்.

மாறாக,
டாக்டர் மீது நம்பிக்கை கொண்டு,
அவர் கொடுக்கும் இந்த "மாத்திரைக்கு காய்ச்சலை சரி செய்யும் திறன் இருக்கும்" என்று நம்பிக்கையிலும் எடுத்து கொள்ளலாம்.
மருந்தை பற்றிய அறிவு 'நமக்கு இல்லாது' போனாலும்,
டாக்டர் மீது இருந்த நம்பிக்கையினால், அதை நாம் வாயில் போட்டு கொள்கிறோம்.

மருந்தின் மீது நம்பிக்கை நமக்கு இல்லாமல் போனாலும், மருந்து நம்மை காப்பாற்றி விடுகிறது.

"மாத்திரை" போன்றது "வேத மந்திரங்கள்".

இங்கு நமக்கு இருக்கும் டாக்டரோ "வேத வியாசர்".

4 வேதங்கள், சந்தியா வந்தனம் போன்ற மாத்திரைகளை,
வேத வியாசர் என்ற மருத்துவர், நமக்கு தந்து விட்டார்.

மாத்திரைகளின் (வேத மந்திரங்கள்) அர்த்தங்களையோ, காரணங்களையோ புரிந்து கொள்ள முடியாமல் போனாலும்,
வேத வ்யாஸரை என்ற மருத்துவரை நம்பி,
மாத்திரைகளை நாம் விழுங்கினாலேயே, அது அதன் பெருமைகளை காட்டும் என்கிறார்கள் மகான்கள்.

வயிறு குளிர்ந்து, வேதம் கற்ற ப்ராம்மணன் ஆசிர்வாதம் செய்தால், இன்று கூட பலிக்கும்.

வயிறு எரிந்து, வேதம் கற்ற ப்ராம்மணன் சபித்தால், இன்று கூட பலிக்கும்.
(வேதம் கற்ற பிராம்மணர்கள் என்று சொல்லும் போது, வேதம் கற்காத லௌகீக பிராம்மணன் என்று எடுத்துக்கொள்ள கூடாது.)
ஜூன் மாதம் வரை, தாங்க முடியாத வெயிலில் தவித்தது தமிழகம்.
ஆதி வரதர் ஜூலை மாதம் 2019ல் வெளி வர, வருண ஜபங்கள் வேத ப்ராம்மணர்கள் ஜபிக்க, வானம் மழை மேகத்துடன் திரண்டது..

வருண ஜபம் செய்து மழையா? என்று கேலி செய்தவர்கள் தலை குனிய, ஜூலை மாதத்தில் மழை கொட்டியதே..

ஜூன் மாதம் வரை தாங்க முடியாத வெயில், ஜூலை மாதத்தில் மழை. சென்னை மாகாணம் இது போன்ற மழையை கண்டதுண்டா?






வருண ஜபம் செய்தால் மழை பெய்யும் என்று ஹிந்து தர்மம் சொல்கிறது.
உண்மையான வேதம் கற்ற ப்ராம்மணர்கள் சொன்னால், மழை வருகிறதே.. 
ப்ராம்மணர்கள் பிராம்மண குலத்தில் பிறந்ததால் மதிக்கப்படுவதில்லை.
ப்ராம்மணர்கள் வேதத்தை கற்றால், மதிக்கப்படுகிறார்கள்.

வேத மந்திரங்கள் மருந்து போன்றது.

அறிவியலால் இன்று வரை கொண்டு வர முடியாத மழையை, வருண ஜபம் செய்து வரவழைக்கும் வேதியர்களை நாம் மதிக்க வேண்டும்.

ஹிந்து தர்மத்தில் நமக்கு சொல்லப்பட்ட எந்த விஷயமும், கடுமையான ஆராய்ச்சி செய்து "ரிஷிகள் என்ற அந்தஸ்தை" பெற்ற மகான்கள் சொன்னது என்பதை நாம் மறக்க கூடாது..
"ரிஷி" என்ற பெயரை பெறுவதற்கு, விஸ்வாமித்திரர் எத்தனை பாடுபட்டார், எத்தனை வருடங்கள் தியானம் செய்தார் என்று பார்க்கும் போது புரிந்து கொள்ள முடியும்.

ஹிந்து தர்மத்தில் சொன்ன விஷயங்களை, மகத்தான பெருமைகள் கொண்ட ரிஷிகள் நமக்கு சொன்னார்கள்.

நமக்கு கிடைத்த அற்புதமான டாக்டர்கள் ரிஷிகள், என்பது ஒரு புறம் இருந்தாலும்,
இன்றைய காலத்தில், போலி மதங்கள் நுழைந்து விட்டதால்,
"போலி டாக்டர்களும் உண்டு" என்பதை மறந்து விட கூடாது.

போலி மதங்களில் உள்ள இவர்கள் கொடுக்கும் எந்த உபதேசமும், நமக்கு நன்மை தராது. மோக்ஷமும் கிடைக்க செய்யாது.
நாம் போலி டாக்டரிடம் சிக்கி விட கூடாது. 

உண்மையான அர்த்தம் தெரிந்தவர்கள் எங்கிருந்தாலும், அவர்களை தேடி சென்று, தெரிந்து கொள்ள ஆர்வம் நமக்கு வேண்டும்.
அப்படி இல்லாத பட்சத்தில், அர்த்தம் தெரிந்தவர்கள் எதேச்சையாக நமக்கு சொல்லும் வரை காத்து இருக்க வேண்டும்.

இன்றைய தேதியில் புரியாத காரணத்தால், எக்காரணம் கொண்டும், ஹிந்து தர்மங்களை நாம் விட்டு விட கூடாது..
கேலி செய்ய கூடாது.
"சந்தியா வந்தனம் செய்வது" ப்ராம்மணனுக்கு உள்ள கடமை.
எந்த காரியத்தை செய்தாலும், நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) இருக்க வேண்டும்.

ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும் போது தான், நாம் செய்யும் செயலை ஆர்வத்தோடு செய்ய முடியும்.


சந்தியா வந்தன அர்த்தமும், காரணமும் புரிந்து கொள்ளும் போது,
சந்தியா வந்தனம் செய்வதில் கூட நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும்.
ஸ்ரத்தை (ஈடுபாடு) ஆர்வத்தை தூண்டும்.

நாம் செய்யும் காரியத்தில் உள்ள காரணமும் அதன் விளக்கமும் புரிந்து கொண்டாலேயே, நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்பட்டு விடும்.

ஆவணி அவிட்டம் ஏன்?
என்ன காரணத்துக்காக செய்கிறோம்? என்று தெரிந்து கொள்ளும் போது, நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும்.
"ஆவணி அவிட்டம்" என்ற இந்த நாளில்,
பூணல் மாற்றி கொள்ளும் பழக்கம் அந்த காலங்களில் பொற்கொல்லனுக்கும் (goldsmith), சிற்பங்கள் செய்யும் ஸ்தபதிக்கும்(engineer) கூட இருந்தது.
இன்று கூட இவர்களில் பலர் பூணல் அணிந்து கொள்கின்றனர்.

"பிராமணன் மட்டும் பூணல் அணிகிறான்" என்று நினைக்க கூடாது.

பூணலை அறுத்தால், "ஹிந்துக்களின் தர்மத்தை ஒட்டு மொத்தமாக தாக்குகிறார்கள்" என்று தான் அர்த்தம்.

சுயமாக தொழில் செய்யும் அனைவரும் (வைசியன் business),
நாட்டை காக்கும் அனைவரும் (க்ஷத்ரிய)
பூணல் அணிந்து இருந்தனர்.
க்ஷத்ரியனாக அவதரித்த ராமர், கிருஷ்ணர் கூட பூணல் அணிந்து இருந்தார்.

பூணூல் என்றால் என்ன? மூன்று நூல்கள், ப்ரம்ம முடிச்சு எதற்கு? தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்.

பிராம்மண ஜாதியை தவிர பிறர் ஜாதியில் பெரும்பாலானவர்கள் பூணல் அணிவதை இன்று விட்டு விட்டதால், 
ஆவணி அவிட்டம் என்றாலே "பழைய பூணலை கழட்டி, புது பூணல் அணிவது" என்று பிராம்மணர்களே நினைக்கும் அளவிற்கு ஆகி விட்டது.

இன்று கூட,
ஆவணி அவிட்டத்தில், ஸ்தபதி, பொற்கொல்லர் போன்ற ஒரு சிலர் புது பூணல் அணிந்து கொள்கின்றனர். ஆனால் எண்ணிக்கையில் மிகவும் குறைந்து விட்டனர்.
தங்கள் பழக்கத்தை விட்டு விட்டனர்.

வேத மந்திரங்கள் இல்லாமல் இருந்தாலும், பூணல் அணிந்து இருந்த இவர்கள், இன்று அணிவதில்லை.

இதனால், "பிராம்மணன் மட்டும் தான் பூணல் அணிகிறான்" என்று நினைப்பு பரவி விட்டது.

வேத மந்திரங்கள் இல்லாவிட்டாலும், ஆவணி அவிட்டம் நாளில், பொதுவாக இவர்கள் அனைவரும் புது பூணலை வேதம் அறிந்த ப்ராம்மணர்களிடம் வாங்கி கொண்டு மாற்றி கொள்வார்கள்.
இது ஒரு வழக்கமாக இருந்தது.

அன்றைய காலத்தில் "குரு  சிஷ்யன்" என்று சொல்லும் வழக்கம் இருந்தது..
குருவிலும் "போலி குரு" ஏற்பட்டதால், இன்று நல்ல குரு என்று பிரித்து காட்ட "ஸத் குரு" என்று சொல்லி உத்தம குருவை அடையாளம் காட்ட வேண்டி இருக்கிறது..

போலி மதங்களில் "மைக் எடுத்தவன் எல்லாம் ஸாது" என்று "போலி சாதுக்கள்" அதிகம் உருவான காரணத்தால்,
ஹிந்து மதத்தில் மெய் (உண்மையான) ஞானத்தை உபதேசிக்கும் குருவை "ஸத் குரு" என்று அடையாளப்படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது.

அதே போல,
அன்றைய காலங்களில், ப்ரம்மத்தை (பரமாத்மா வாசுதேவன்) வேதங்களால் உபாசனை செய்பவர்களை "ப்ராம்மணர்கள்" என்று மட்டும் தான் அறியப்பட்டார்கள்.

இன்று பல ப்ராம்மணர்கள் வேதத்தை கொண்டு பிரம்மத்தை உபாசிப்பதை விட்டு விட்டனர்.

இன்று, பல ப்ராம்மணரகள்

  • சூத்திர தொழில் செய்வதால் (employee),
  • ராணுவம், அரசியல், காவல் துறையிலும் வேலை செய்வதால்,
  • சுய தொழில், மருத்துவம் செய்வதால்,

அன்றைய காலத்தில் பயன்படுத்திய ப்ராம்மணன் என்ற சொல்லுக்கு மரியாதை தேய்கிறது.
இதை சமாளிக்க,
வேதத்தை விட்ட இவர்களை "லௌகீக ப்ராம்மணன்" என்றும்,
வேதத்தை இன்றும் உபாசிக்கும் ப்ராம்மணர்களை "வேத பிராமணன்" என்றும் அடையாள படுத்த வேண்டி இருக்கிறது.
வேத ப்ராம்மணர்கள் இன்று வரை மடிசார் (பெண்கள்), பஞ்சகஜம், குடுமி (ஆண்கள்) என்று வெளி வேஷத்தில் ஆரம்பித்து, தான் செய்யும் தொழிலும் வேதம் சம்பந்தப்பட்டதாகவே அமைத்து கொண்டு, அரசாங்க உதவிகள் இல்லாத நிலையிலும், வேதம் ஓதுவதால் கிடைக்கும் பணத்தை கொண்டு தங்கள் குடும்பத்தை முடிந்தவரை தர்மத்தில் வைத்து கொண்டு இன்று வரை வாழ்கின்றனர்.

வேதத்தை விட்டு விட்டு வைசியன், சூத்திரன், க்ஷத்ரியன் என்று ஆன லௌகீக ப்ராம்மணர்கள் வேதத்தை விட்டாலும், சந்தியா வந்தனம் செய்ய உரிமை உள்ளவர்கள். கடமையும் கூட.

அன்றைய காலத்தில் வைசியன், க்ஷத்ரியர்கள் கூட சந்தியா வந்தனம் (prayer) என்ற கடமையை செய்தனர்.

சந்தியா வந்தனத்திலும் வேத மந்திரங்கள் உண்டு.

"உபாகர்மா" என்று அழைக்கப்படும் இந்த ஆவணி அவிட்ட நாளில்,
வேத ப்ராம்மணர்கள், "தாங்கள் ஒரு வருடங்களாக தினமும் ஓதி வந்த வேத மந்திரத்துக்கு மீண்டும் ஒரு சக்தியை ஊட்டுகிறார்கள்".

வேத ப்ராம்மணர்கள், மற்ற ஜாதியினருக்கும், லௌகீக ப்ராம்மணர்களுக்கும் தங்கள் கையால் பூணல் கொடுத்து ஆசிர்வதிக்கின்றனர்.
இதனால், நாம் செய்யும் சந்தியா வந்தனம் போன்ற கடமைகளில் உள்ள மந்திரங்கள் மீண்டும் சக்தி பெற்று விடுகிறது"

"உப" என்றால் அருகில், கூடுதலாக என்ற அர்த்தம் கொள்ளலாம்.
"கர்மா" என்றால் செயல்.

ஒரு வருட காலத்தில் மந்திரங்கள் அதன் சக்தியை இழந்து இருப்பதால், அந்த மந்திரங்களின் வீரியத்தை மீண்டும் தூண்டி விட, இந்த "உபாகர்மா" மூலம் மீண்டும் மந்திரங்கள் பிரகாசம் அடைகின்றன என்று சொல்லப்படுகிறது.

வேத மந்திரங்கள் உண்மையில் சக்தியை இழப்பதில்லை.
வேத மந்திரங்கள் சுயமே ப்ரகாசமானது. சக்தி கொண்டது.
அந்த மந்திரங்களை வேத ப்ராம்மணனும் உச்சரிக்கிறான்.
அந்த வேத மந்திரங்களை லௌகீக ப்ராம்மணனும், சந்தியா வந்தனம் போன்ற நித்ய கர்மாவை செய்வதன் மூலம் உச்சரிக்கிறான்.

சுயம் பிரகாசமான வேத மந்திரங்கள், தெய்வங்களை ஆகர்ஷிக்கும் வேத மந்திரங்களை, நம் 'எச்சில் வாயால்' சொல்ல வேண்டி இருப்பதால்,
அந்த அசுத்தத்தை நீக்கி மீண்டும் வேத மந்திரத்தின் வீரியம் நமக்கு ஏற்படுவதற்காக செய்யப்படுவதே "உபாகர்மா".
வீட்டுக்கு நல்ல பெயிண்ட் அடித்தும், ஒரு வருடம் ஆனதால், தூசி படிந்து விட்டது.
அந்த தூசியை தட்டி கொஞ்சம், அலங்காரம் செய்து விட்டால், மீண்டும் ப்ளீச் என்று ஆகி விடுவது போல, இந்த "உபாகர்மாவை" ப்ராம்மணர்கள் வேதத்துக்கு ஒரு அலங்காரமாக செய்து கொள்கிறோம்.
"ஆவணி அவிட்டம்" அன்று வேத ப்ராம்மணர்கள் கையால் பூணல் வாங்கி கொண்டு, சங்கல்பம் செய்து கொண்டு,
வேத மந்திரத்துடன் பழைய பூணலை கழட்டி, புது பூணலை மாட்டி கொண்டு, வேத ஆரம்ப மந்திரங்களை சொல்லி உபாகர்மாவை செய்கிறோம்.
அடுத்த நாள் ஏனோதானோவென்று, விளையாட்டாக சந்தியா வந்தனம் செய்தாலும் மந்திரங்கள் உடனே அதன் பலன்களை தரும்.

புதிதாக பூணல் போட்டு கொண்டு வேதங்கள் கற்க ஆரம்பிக்கும் நாளாகவும் ஆவணி அவிட்டம் உள்ளது.

வெயிலில் காய வைத்த தீப்பெட்டியை, 'லேசாக' உரசினால் கூட தீ பற்றி கொள்ளும்.
உபாகர்மா வருடா வருடம் செய்து கொள்வதால், மந்திரங்கள் அதன் சக்தியை பிரகாசமாக காட்டுகின்றன.
சந்தியா வந்தனத்தில் உள்ள ஒவ்வொரு மந்திரமும் பொலிவை பெறுவதால், அரைகுறையாக சொன்னாலும், அதன் பலன்களை காட்டும்.


உபாகர்மா செய்யாமல், தானாக நூல் தானே என்று மாட்டி கொண்டால், மழையில் நனைந்த தீப்பெட்டியை, எத்தனை முறை உரசினாலும் ப்ரயோஜனப்படாதது போல, நாம் ஜபிக்கும் மந்திரங்கள் சக்தி அற்று நிற்கும்.
"ஓம் நமோ நாராயணா", "ஓம் நம சிவாய" போன்ற மந்திரங்கள் யாவருக்கும் பொதுவானது. மகா சக்தி வாய்ந்தது.

நம் எச்சில் வாயால் இறைவன் திருநாமங்களை நாம் உச்சரிக்கிறோம்.
அனைவருக்கும் 'மந்திரங்கள் தீப்பொறி போல பலன் கொடுக்கும்' என்பதாலேயே, ஹிந்துக்கள் அனைவரும் பூணல் அணியும் பழக்கம் கொண்டிருந்தனர். ஆவணி அவிட்டம் அன்று அவர்களும் பூணல் மாற்றிக்கொண்டனர்.

தெய்வங்களை மறந்தோம்.
நம் பழக்கங்களை விட்டோம்.
நம சிவாய என்று மந்திரங்கள் சொல்வதை விட்டோம்.
மந்திரங்கள் வீரியம் நம் எச்சில் வாயால் மந்தமாக கூடாதே என்று வேத ப்ராம்மணர்கள் கையால் ஒரு சிறு பூணல் வாங்கி போட்டு கொள்ள மறந்தோம்.
இன்று வேத ப்ராம்மணர்களை மதிக்க மறந்து, தெய்வங்கள் நாம் கூப்பிட்டால் உதவி செய்ய காத்து இருந்தும், அனாதைகளாக திரிகிறோம்.

மீண்டும் மந்திரங்கள் சக்தி பெற, நாம் சொன்னாலும் பலிக்க, ஆவணி அவிட்டம் என்ற நாளில் உபாகர்மாவை செய்து, புது பூணல் அணிந்து கொள்வோம்.

ஹிந்துக்கள் அனைவரும் பூணல் ஏன் அணிந்து இருந்தார்கள்? என்ற ரகசியத்தை உணர்ந்து, வேத மந்திரங்கள் மூலம் அற்புதங்கள் நிகழ்வதை நம்வாழ்வில் காண்போம்.

"ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரம் அனைவரும் ஒரு குருவின் மூலம் உபதேசம் பெற்று சொல்லலாம்.
இதன் அற்புத விளக்கம் இதோ...

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க் நம் குரு.
வாழ்க நம் ரிஷிகள்.
வாழ்க வேதியர்கள்.
வாழ்க ஹிந்து தர்மம்.



Saturday 10 August 2019

Why should we eat Veg Foods? Why can't we eat meat? An Analysis

The Vedasastra says, "Human should try to avoid any kind of 'torture' on other lives as much as possible."



False religions believes in satisfying human senses alone. It encourages meat by saying  just "don't harm other humans" but never even think the animal and plant are also living beings and alive.
They see river as water.
Hindus see them as Goddess and respect even water.
They see animals and birds as creatures created by god for food. How cheap??
Hindus see God is every where.. its inside me, other human, animals, plaats too...

Today, the science came forward and countered these fake religions that "animals and plants are also living beings".

"Ahimsa paramo dharma:" - which means
To move near the paramathma (supreme god), the base qualification required is Ahimsa (Nonviolence).
This is the key advice by our Veda Sastra for those who want to move in spiritual side.


Only human beings have the capacity to think about God and his presence.

Other living beings in plants and animals don't have the capacity to think about God and his presence.

"Attaining Lord Krishna's feet (supreme god)" should be the ultimate goal of human which puts a full stop to this birth and death cycle.
It is a great sin to kill and eat animals which also has the same fear, pain to get killed like a human.

Human must fear to do "sin."
Human must fear to be a part of someone's "sin"

The "sins" we commit are the ones which gets repaid in many forms of "sufferings" we experience in this world.

The sin committed in this birth is not just alone with us.

The bundles of sin that we have committed in "multi-billion of previous birth" continue to hold us.

Fake religions believe its only one birth.
We see a child born as blind.
We see a child born in millionaire family.
We see a child born to a begger.
If just believed in one birth, we end up saying the God they believe is a cheater and partial to put one child to born as healthy and other as blind.
If no previous birth, these child are new creations then. Why those gods in fake religion doing such sin?
So, religions which dont believe in rebirth must be fake, a man made thoughts.

Sin we commit in this birth is true. Sin we committed in previous births resulted in our birth to a begger, a millionaire etc.

Being born as human, everyone must fear of sufferings. The root cause of the sufferings are the sin we committed in this birth and previous births.
We should have the fear to commit new sins by all means.

Eating non veg by killing animals is a known committed sin for a human being. We should fear of doing this sin.



We should not commit these sins which are in our control.
Knowing that "suffer will occur in many forms", we should not include these sins in our baggage.

We should try to minimize the “sinful things” as much as possible.

For human, There is no need for meat to live in this world.
Humans can live with Vegetables, Cereals, Fruits to survive.
Vedic Sastra allows Non Vegetarian foods for people in military Armed services as an exception because it requires an animal instinct and strength to counter and kill enemies  without mercy to protect their nation.

But in general,
Human dont need meat to live this life.
Instead of killing an animal for food, Human can survive with fruits and vegetables as well.

Why Brahmins were worshipped those days? Why Vedic Brahmins still gets respected even today irrespective of jealous?
In india alone we have 130 crore human beings. World population of human being is 770 crore (7.7 billion people) as on 2019.
Out of this 770 crore people, just around 7 crore people are from Brahmin community mostly reside in India.
In other communities around the world of 763 crore people, we may see some people could understand the principle of non violence and committing sin, and they become vegetarians (vegans).
But this brahmin community of 7 crore people not just practiced vegetarian food habit in this generation but the entire community is doing the same practice for 1000 past generations as a principle.
Father is also vegetarian.
Mother is also vegetarian.
Uncle is also vegetarian.
In Law, Spouse, relations everyone is vegetarians.
This non violence is the core principle adapted by this brahmin community.
This brahmin community in general is highly intellect and soft in nature, and always hesitate to provoke any kind of sin (violence, killing).
This is a unique community in this 770 crore human society, which never touched meat to fill their stomach.
Due to lack of awareness of the pride, some brahmins in today's generation taking non vegetarian foods. This is a shame for this community.






One can live with vegetable and fruits. We don't need to kill an animal for food.
Let carnivorous animals handle that non veg food.

Some psuedo intellects to justify the killing of animals for food, says "Science proved that plants are also living beings. To eat rice, wheat even vegetarians kill the entire plant. Is it not a sin committed by them?"

Yes. Agreed.
To get some pieces and grains, we end up cutting entire plant for our food.
Human can "see" with his own eyes that the animals being slaughtered, express the fear, and suffer the pain of death.
But,
when the plants being cut, human cant "see" with his own eyes whether the plant had suffered pain of death.

When plants are uprooted to obtain rice and vegetables like potato, it is impossible to understand the pain of the plant just thru eyes. But it's evident that, human understands the pain of animals with his own eyes.

Plants have no pain and fear like animals. But they do have sense of understanding.

Science tells us that plants do understand that "it is getting killed when someone is uprooting".
Plants don't feel pain or fear but without nose, eyes, ears it can feel whats happening.

We can't understand this because it's not visible to human eyes.

Unlike animals, Plants have no fear of getting killed. But just have knowledge.

Plants are less likely to get tortured than animals getting killed.

Due to the clear understanding of degree of violence we commit on killing plant vs animals for our food, Vedic Sastra highly recommends humans to take food on plants alone.
Ahimsa paramo dharma:
The basic expectation of all human beings is to follow "non violence" and avoid meat and be a vegetarian at least.



Those who want to grow in spiritual side and feel the divinity of lord Krishna (Narayana), do restrict taking foods items which kills the entire plant. They even go for fasting (vratha) by not taking food for an entire day.
Some people (those days rishi, yogi) even stopped taking food which kills the entire plant. They took only fruits, even sometimes just the leaves and water alone.

Killing an animal is bigger sin committed than killing a plant.
As a human, least expected to stay away from this bigger sin of taking meat.

If someone believe that taking rice and wheat is also a sin and truly thinks about absolute non violence, he takes himself to divinity.

These people stop taking food made of rice, wheat but agree to take only fruits and vegetables like banana, brinjal which does not require to kill the plant.

More your sense of non violence grows, more you become cautious while taking food.

People with such mind set of non violence, moves to the path of spiritual world much faster.

We all know Dhruva story.

Dhruva at age 5, went to vrindavan to perform tapas (meditation) to see lord Narayana (Supreme God).

Though he is a kshatriya (Army men) and son of king "uththaana paadhaa", he understood the importance of non violence, to get a glimpse of supreme god.
In the 1st month, Dhruva at his tender age 5, took only vegetables and fruits for his hunger and continued his tapas (meditation).

In the 2nd month, Dhruva felt taking fruits and vegetables directly from plants might also hurt them. He took only those vegetables and fruits which had fallen from the tree for his hunger and continued his tapas (meditation).

In the 3rd month, Dhruva felt birds can takes these fruits and vegetables and why do I need to take their food? He took only the deserted leaves which had fallen from the tree for his hunger and continued his tapas (meditation).

In the 4th month, Dhruva stopped taking any kind of food and took only yamuna river water and continued his tapas (meditation).

His chanting of "narayana" mantra superceded his hunger...
In the 5th month, Dhruva stopped even taking yamuna river water and took just the air as his food and continued his tapas (meditation).



While great rishis and yogi doing meditation for years to see a glimpse of Lord Narayana in their dreams atleast, Dhruva with his Guru Naradha blessings and adopting non violence saw Lord Narayana in front of his eyes in just 5 months.
Lord Narayana created a star in his name to celebrate his true devotion and blessed him to live long in this earth with great fame, and stay in that Dhruva Star afterlife in this earth.

Also blessed him moksha (salvation and free from rebirth) and said "by the time current brahma tenure ends, both brahma and dhruva will reach his eternal world called Vaikund".

Such is the importance of non violence.

"Ahimsa paramo dharma:" - which means
To move near the paramathma (supreme god), the base qualification required is Ahimsa (Nonviolence).
This is the key advice by our Veda Sastra for those who want to move in spiritual side.

As human we don't need to live with just fruits, leaves.. and live like Dhruva, and rishis who born in this world.
Atleast we can live like a human by avoiding meat.
Having mercy and adopting non violence is the greatest quality which a human can follow.

When a small mosquito bites, we can't withstand that pain...
On the other side, for food, we are ready to kill animals which feel the same pain and fear. How insincere we are?

Nurturing Dogs and Cats at home like a friend and crying for them if they get hurt, but ready to kill other animal and birds for food?
How insincere we are?
This human society never allow a chicken and goat to have natural death. How cruel we are?
Doing all cruel sins at one side but asking God "Why am I suffering?"

Throw away false religions which believe in non violence only on Human and encourages meat.
These are fake gods with no mercy with fake advice.


Be a human atleast.
Be a vegetarian like a 7 corre brahmin community.
Let the animals live without fear of our human presence.
Be a hindu.
Proud to follow Hindu Dharma.
Follow non violence at max.
Have fear of committing sin thru violence.
Think of attaining salvation (moksha).
Think of Shri krishna as human Goal to liberate yourself from rebirth.

Interested to Read More? Click Here -> Do you think Christ is Real? or Twisted Story?


Monday 5 August 2019

ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? Non Veg சாப்பிட கூடாது என்று சொல்வதற்கு காரணம் என்ன?

"பிற உயிர்களை முடிந்தவரை 'ஹிம்சிக்காமல்' இருக்க மனிதன் முயற்சி செய்ய வேண்டும்" என்று வேத சாஸ்திரம் சொல்கிறது.


தன் வயிரே பெரிதென நினைக்கும் பொய் மதங்கள்,
"பிற மனிதர்களை ஹிம்சை செய்யாதே" என்ற அளவுக்கு மட்டும் சொல்லி, விலங்கு, செடிகளை உயிர்களாகவே சேர்த்து கொள்வதில்லை.

இன்று அறிவியல் (Science) "விலங்கும், செடிகளும் கூட உயிர்கள் (Living Being) தான்" என்று உலகம் தட்டை சொல்லி திரிந்த இந்த பொய் மதங்கள் கொள்கைகளை வீதிக்கு கொண்டு வந்து காட்டுகிறது.

"அஹிம்சா பரமோ தர்ம:" -
"பரமாத்மாவை நெருங்க அஹிம்சை மிக முக்கிய தர்மம் (அறம்/rule)" என்று சாஸ்திரம் சொல்கிறது.

மனித பிறவியில் தான் "பரமாத்மா என்று ஒருவர் இருக்கிறார்" என்று சிந்திக்க முடியும்.
மற்ற உயிர்களான விலங்குகள், மரங்களால் "நம்மை படைத்தவன் யார்?" என்று சிந்திக்க முடியாது..
மனித வாழ்வின் லட்சியம் "பரமாத்மா வாசுதேவனை அடைவதே".

நம்மை போலவே, பய உணர்ச்சி, வலி உணர்வுகள் கொண்ட விலங்குகளை தின்பது மகா பாவம்.
மனிதன் "பாவத்திற்கு" அஞ்ச வேண்டும்.
நாம் செய்யும் "பாவங்கள்" தான் உலகத்தில் நாம் அனுபவிக்கும் பலவகை "துன்பங்களாக" நமக்கு திருப்பி தரப்படுகிறது.
இந்த ஜென்மத்தில் செய்த பாவம் மட்டும் நம்மிடத்தில் இல்லை.
"பல கோடி ஜென்மங்களாக" நாம் செய்த பாவ மூட்டைகள், நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், மேலும் பாவ மூட்டையை அதிகரித்து கொள்ள மனிதன் அஞ்ச வேண்டும். 

"துன்பங்கள் ஏற்படும்" என்று தெரிந்தே, நாமாக பாவங்களை சேர்த்துக்கொள்ள கூடாது.
முடிந்தவரை "பாவ காரியங்கள்" செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

வாழ்வதற்கு உணவு தேவையே தவிர, மாமிசம் தேவை இல்லை.
ராணுவம் போன்ற க்ஷத்ரிய தொழில் செய்தால்,
கூடுதல் உடல் பலத்திற்கும், தன் உயிரே போக கூடிய வாய்ப்பு உள்ள வீரர்கள் வேண்டுமானால் மாமிசம் எடுத்துக்கொள்ளலாம் என்று இவர்களுக்கு மட்டும் அனுமதி தருகிறது சாஸ்திரம்.

பொதுவாக,
மனிதன் வாழ்வதற்கு, "மாமிசம் தான் தேவை" என்று இல்லை.

மனிதனால் காய் கனிகள் சாப்பிட்டும் வாழ முடியும்.
வலியை, மரண பயத்தை அனுபவிக்க செய்து, ஒரு விலங்கை தின்பதை காட்டிலும், காய் கனிகளை சாப்பிட்டு மனிதன் உயிர் வாழ முடியும்.





விலங்குகளை கொன்று ஜீவ ஹிம்சை செய்யாமல், காய், கனிகளை உண்டு மனிதன் வாழ வேண்டும்.

சில காய்கள், தானியங்கள் பெறுவதற்கு, அந்த செடியையே கொலை செய்ய வேண்டி இருக்கிறது.

கொலை செய்யபடும் விலங்குகள் மரண வேதனையை அனுபவிக்கிறது என்று மனிதன் தன் கண்களாலேயே புரிந்து கொள்ள முடியும்.
ஆனால்,
"அரிசி, கிழங்கு வகைகள்" பெறுவதற்கு செடிகள் வேரோடு பிடுங்கப்படும் போது, மனிதன் தன் கண்ணால் விலங்குகளின் வேதனையை புரிந்து கொள்வது போல, செடியின் வேதனை புரிந்து கொள்ள முடியாது.

விலங்குகளை போன்று செடிகளுக்கு வலியும், பயமும் இல்லை. ஆனால் உணர்வு உண்டு.
"தன்னை வெட்ட வருகிறான் என்பதை செடிகள் புரிந்து கொள்கின்றன" என்று அறிவியல் சொல்கிறது.

விலங்குகள் வேதனையை மனிதன் நேரில் பார்த்து புரிந்து கொள்வது போல, செடிகள் உணர்வை புரிந்து கொள்ள முடியாததாலும்,
விலங்குகளை போன்று செடிகளுக்கு வலியும், பயமும் இல்லை, ஆனால் உணர்வு மட்டும்  உண்டு என்பதாலும். ஜீவ ஹிம்சையில் விலங்குகளை விட செடிகள் படும் அவஸ்தை குறைவே..
இதன் காரணத்தால், மனிதர்களுக்கு காய், கனிகள், தானியங்கள் சாப்பிட அனுமதித்தனர்.
மனிதனாக பிறந்த அனைவரிடத்திலும் எதிர்பார்க்கும் அடிப்படை எதிர்பார்ப்பு "புலால் உண்ணாமை".

ஆன்மீக வளர்ச்சியில் மேலும் பக்குவப்பட ஆசைபடுபவர்கள், செடிகளை வேரோடு வெட்டி எடுக்கப்படும் காய் கனிகளை கூட முடிந்தவரை தவிர்க்கின்றனர்.
செடியை பிடுங்காமல், கிடைக்கும் வாழைக்காய், முருங்கைகாய், கத்திரிக்காய், பழங்கள் மட்டுமே சாப்பிட்டு,
முடிந்தவரை செடிகளிடத்திலும் ஜீவ ஹிம்சை செய்யாமல், விரதங்கள் அனுஷ்டித்து, தன் ஆன்மீக வளர்ச்சிக்கு முயல்கின்றனர்.

துருவன் பரவாசுதேவன் நாராயணனை காண தபசுக்கு சென்றான்.
முதல் மாதம் நாராயண நாமத்தை ஜபித்து, வெறும் காய் கனிகளை மட்டும் பறித்து தன் பசிக்கு உணவாக எடுத்து கொண்டான்.

அடுத்த மாதம், பறித்தாலும் ஜீவ ஹிம்சை தானே என்று, மரத்தில் இருந்து தானாக விழுந்த பழங்களை மட்டும் உணவாக எடுத்து கொண்டான்.
3வது மாதம், விழுந்த பழங்களை பறவைகள் சாப்பிடட்டுமே என்று, அதையும் விட்டு விட்டு, காய்ந்த இலைகளை கசக்கி அதையே உணவாக உட்கொண்டான்.


4வது மாதம், அதுவும் வேண்டாம் என்று, யமுனை நதியில் ஓடும் தண்ணீரை மட்டுமே பருகி கொண்டு, நாராயண தியானத்தில் இருந்தான்.

5வது மாதம், ஜலத்தையும் விட்டு, காற்றையே உணவாக உண்டு, நாராயண தியானத்தில் இருந்தான்.

கோடி கோடி ஜென்மங்கள் முயற்சி செய்தாலும் காட்சி தராத பெருமாள், ஜீவ ஹிம்சையை குறைத்து கொண்டு, நாராயணனை தரிசிக்கும் ஆசை கொண்டிருந்த 5 வயது துருவனுக்கு 5 மாதத்தில் காட்சி கொடுத்து விட்டார்.
துருவன் புகழ் உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்க, துருவனின் பூலோக காலம் முடிந்த பிறகு, தனியாக துருவ நக்ஷத்திரம் ஒன்றை படைத்து அங்கு நிரந்தரமாக இருக்க அணுகிரஹித்தார் பெருமாள்.

மேலும்,
இப்பொழுது உள்ள ப்ரம்ம தேவன் ஆயுசு வரை துருவ மண்டலத்தில் இருந்து, ப்ரம்ம தேவன் மோக்ஷம் என்ற வைகுண்டம் அடையும் போது, துருவனையும் வைகுண்டத்தில் சேர்த்து கொள்வதாக அணுகிரஹம் செய்தார் பெருமாள்.

அஹிம்சா பரமோ தர்ம: 
"பரமாத்மாவை நெருங்க அஹிம்சை மிக முக்கிய தர்மம் (அறம்/rule)" என்று சொல்கிறது.

வெறும் காற்றையே உணவாக, காய்ந்த இலைகளே உணவாக, பழங்களே உணவாக உண்டு, துருவனை போல அஹிம்சை என்ற ஜீவ காருண்யத்தை நம்மால் கடைபிடிக்க முடியாது.
ஆனால்,
மாமிசம் உண்ணாமல், காய் கனிகள் உண்ணும் அளவிளாவது நாம் இருக்க வேண்டும். 

நம்மை ஒரு கொசு கடித்தாலே எத்தனை வேதனையை அனுபவிக்கிறோம்?!..
ஒரு விலங்கு கொலை செய்யப்படும் போது, அது அனுபவிக்கும் வேதனையை நினைத்து பார்த்தாலேயே, ஜீவ காருண்யம் நம் இதயத்திலும் உருவாகும்.
ஜீவ காருண்யம் என்ற எண்ணம் நமக்கு உண்டாகும் போது, புலால் உண்ண வேண்டும் என்ற ஆசை அழியும்..
"பாவத்திற்கு" மனிதன் அஞ்ச வேண்டும்.

"விலங்குகளுக்குள்ளும், செடிகளுக்குள்ளும், மனிதர்களுக்குள்ளும், இருப்பது ஜீவனே (உயிரே)" என்று அறிந்து இருந்த ஹிந்துக்கள் வாழ்க.

ஜீவ காருண்யமே "புலால் உண்ணாமைக்கு முக்கிய காரணம்".

ஜீவ காருண்யம் அதிகப்பட, மனிதன் மிருக புத்தியில் இருந்து, மனிதனாகிறான்.
மேலும் ஜீவ காருண்யம் அதிகப்பட, மனிதன் யோகி, ரிஷி, முனி, ப்ரம்ம நிஷ்டன் என்று முன்னேறுகிறான்.
நாம் ரிஷியாக வேண்டாம்...
நாம் யோகியாக வேண்டாம்..


குறைந்த பட்சம், மனித குணங்களை கொண்ட மனிதனாக இருப்போம்.


Thursday 1 August 2019

நம் நன்றியை காட்டும் அற்புதமான மந்திரம்...சந்தியா வந்தனத்தில் இருக்கிறதே....

நம் நன்றியை காட்டும் அற்புதமான மந்திரம்...சந்தியா வந்தனத்தில் இருக்கிறதே..
அர்த்தம் புரிந்தால், ஆசை வருமே!! கசக்குமா?

மனிதர்களில் சிலர் ரிஷி ஆகிறார்கள், ரிஷியாகும் சிலர் மேலும் முன்னேறி முனிவர்கள் ஆகிறார்கள்..


ரிஷி, முனி வித்தியாசம் அறிய RishiMuni
நாம் அனைவருக்கும் "காயத்ரி என்ற வேத மந்திரம்" சப்த ப்ரம்மத்தில் (வேதம்) இருப்பதை கண்டுபிடித்து நமக்கு கொடுத்தவர் "விஸ்வாமித்திரர்" என்று தெரியும்.
வேதமே "ஓம் என்ற ஓங்காரத்தில்" அடக்கம்.
அந்த ஓங்காரத்தை நமக்கு கொடுத்த ரிஷி யார்?
யாரை தியானித்து அவர் ஓங்காரத்தை கண்டுபிடித்தார்?

சந்தியா வந்தனத்தில் இதற்கு பதில் சொல்கிறதே!!  நமக்கு தெரியுமா??
பிரம்மாவை படைத்தவர் "சாஷாத் பரவாசுதேவன்".

பரமாத்மாவை தியானித்து கொண்டிருந்த ப்ரம்மாவுக்கு, "ஓம் என்ற ஓங்கார மந்திரம்" கேட்க, அதிலிருந்து வேத மந்திரங்கள் உருவானது.
உலகுக்கு ஓங்காரத்தை கொடுத்த முதல் ரிஷி "ப்ரம்ம தேவன்". அவருக்கு நாம் நன்றி காட்ட வேண்டாமா?







சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு?  அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை தானாக வரும்...

ப்ரணவஸ்ய (ஓங்காரத்திற்கு) ரிஷி: ப்ரஹ்மா (பிரம்மாவே ரிஷி) ,
தேவீ காயத்ரீச் சந்த: (தேவீ காயத்ரீயே சந்தம்)
பரமாத்மா தேவதா ! (பரமாத்மா தேவதை)
என்று சந்தியாவந்தனத்தில் சொல்கிறோம்...

ப்ரம்மா தேவன் "ஓங்காரத்தை" கண்டுபிடித்து கொடுத்தார் என்ற நன்றியை பிரம்மாவுக்கு காட்டவே, நாம் தலை மேல் கை குவித்து அவரை நமஸ்கரிக்கும் விதமாக "தலையை" தொடுகிறோம்.

ஓங்காரம் ப்ரம்மா காதில் எப்படி கேட்டது? காயத்ரி சந்தஸில் (measurement) கேட்டது. அதே போல நாமும் காயத்ரி சந்தஸில் ஓங்காரத்தை சொல்ல வேண்டும் என்று நம்மை ஜாக்கிரதை படுத்தி கொள்ளவே மூக்கை தொட்டு கொள்கிறோம்.

ப்ரம்மா யாரை நினைத்து  ஓங்காரமந்திரத்தை கண்டுபிடித்து பிரார்த்தித்தார்? பரவாசுதேவன் நாராயணன்.
நாமும் ஓங்காரம் சொல்லும் போது அந்த பரமாத்மாவை மனதில் தியானிக்க வேண்டும் என்று சொல்லி கொண்டே நம் இதயத்தை தொட்டு கொள்கிறோம்.

தலையை தொட்டு பிரம்மாவுக்கு நன்றியையும்,
மூக்கை தொட்டு, அப்படியே சொல்ல வேண்டும் என்ற நிதானத்தையும்,
மார்பை தொட்டு, பரமாத்மாவை நாமும் தியானிக்கும் போது, பிரம்மாவும் நம்மை கண்டு ஆனந்தம் அடைகிறார்.
பரவாசுதேவனும் நம்மை கண்டு ஆனந்தம் அடைகிறார்.
இத்தனை சிறிய மந்திரம்.. பெரும் பலனை நமக்கு தருகிறதே....


சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா?
Share and comment...
மேலும் படிக்க.... படிக்கவும்