Followers

Search Here...

Friday 16 October 2020

கோஹினூர் வைரம்....யாருடையது..? ஹிந்துக்கள் நம் சொத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் - தெலுங்கானா

கோஹினூர் வைரம்… யாருடையது..?  

தெலுங்கானா : (மஹாகாளி சொத்து - ககாத்திய ஹிந்து ஆட்சி)

கோஹினூர் வைரம் - வாரங்கல், தெலங்கானாவில் இருந்த மஹாகாளி கோவிலை இடித்து, மாலிக் காபூர் கொள்ளை அடித்து, 1310ADல் கில்ஜியிடம் கொடுத்தான்.

அதற்கு பிறகு, கோஹினூர் வைரம் டில்லியில் இருந்தது.




டில்லி : (1310AD - 1749AD) 439yrs

கோஹினூர் வைரம் - அலாவுதீன் கில்ஜிக்கு பிறகு பலரிடம் கை மாறியது.

ஷிஹாபுதின் கில்ஜி (அலாவுதீன் கில்ஜி பிள்ளை)

குதுப்தின் முபாரக் (அலாவுதீன் கில்ஜி பிள்ளை)

குஷ்ரோ கான் (அலாவுதீன் படைத்தளபதி)

கியாசுதீன் துக்ளக் (அலாவுதீன் ஆட்சியில் பஞ்சாப் கவர்னராக வேலை பார்த்தவன்)

முகம்மது பின் துக்ளக் (கியாசுதீன் துக்ளக் மகன்)

பெரோஸ் ஷா துக்ளக் (முகம்மது பின் துக்ளக்கும், அவன் சகோதரிக்கும் பிறந்தவன்)

துக்ளக் கான் (பெரோஸ் ஷா துக்ளக் பேரன்)

அபு பக்கர் ஷா (பெரோஸ் ஷா துக்ளக் பேரன்)

நசுருத்தின் ஷா (பெரோஸ் ஷா துக்ளக் மகன்)

அலாவுதீன் சிக்கந்தர் ஷா (நசுருத்தின் ஷா மகன்)

நசுருத்தின் மகமூத் ஷா || (நசுருத்தின் ஷா மகன்)

கைசர் கான் (பெரோஸ் ஷா துக்ளக் ஆட்சியில் ஆரம்பித்து முல்தான் கவர்னராக இருந்தான். ஈரான், ஆப்கான், மங்கோலிய தேசம் அவரை கைப்பற்றி இருந்த தைமூர் என்ற இஸ்லாமியன் துணை கொண்டு, நசுருத்தின் மகமூத் ஷாவை கொன்று, தைமூரின் பெயரில் அடிமை (சயீத்) ஆட்சி ஆரம்பித்தது)

முபாரக் ஷா (கைசர் கான் மகன்)

முகம்மது ஷா (முபாரக் ஷாவின் தங்கை மகன்)

ஆலம் ஷா (முகம்மது ஷாவின் மகன்)

பஹ்லுல் லோடி (ஆப்கானில் லோடி என்ற இனத்தை சேர்ந்தவன்.. இவன் பஞ்சாபில் உள்ள சிர்ஹிந்த் என்ற ஊருக்கு கவர்னராக இருந்தான்)

சிக்கந்தர் லோடி (பஹ்லுல் லோடி மகன்)

இப்ராகிம் லோடி (சிக்கந்தர் லோடியின் மகன்)

பாபர் (கெங்கிஸ் கான், தைமூர் பரம்பரையில் வந்தவன். பாணிபட் போரில் இப்ராகிம் லோடியை கொன்று டெல்லியை கைப்பற்றினான்)

ஹுமாயுன் (பாபர் மகன்)

அக்பர் (ஹுமாயுன் மகன்)

ஜஹாங்கீர் (அக்பர் மகன்)

ஷாஹ்யர் மிர்சா (ஜஹாங்கீர் மகன்)

ஷாஜஹான் (ஜஹாங்கீர் மகன். ஷாஹ்யர் மிர்சா கொன்று சுல்தான் ஆனான்)

இவன் காலத்தில் தங்கத்தால் தனக்கு உருவாக்கப்பட்ட மயில் ஆசனத்தில் (peacock throne) இந்த கோஹினூர் வைரத்தை பதித்து வைத்து இருந்தான் ஷாஜஹான்.


ஔரங்கசீப் (ஷாஜஹான் மகன்)

பகதூர் ஷா (ஔரங்கசீப் மகன்)

ஜஹந்தர் ஷா (ஔரங்கசீப் மகன்)

பரூக்சியர் (பகதூர் ஷா பேரன், ஜஹந்தர் ஷாவை கொன்று சுல்தான் ஆனான்)

ரபிஉத் தரஜித் (பகதூர் ஷா பேரன், பரூக்சியரை கொன்று சுல்தான் ஆனான்)

ரபிஉத் தௌலத் (ரபிஉத் தரஜித் சகோதரன்)

நேகு சியர் (ஔரங்கசீப் பேரன்)

முகம்மது ஷா (பகதூர் ஷா பேரன்)

முகம்மது இப்ராஹிம் (ரபிஉத் தரஜித் சகோதரன்)

முகம்மது ஷா (பகதூர் ஷா பேரன். இவன் ஆட்சியில் 1772ல் அயோத்தியை 'பைசாபாத்' மாற்றினான்)

ஈரான் : (1739 AD - 1747 AD) 8yrs




ஈரான் தேசத்தை ஆக்கரமித்து அரசாங்கம் செய்து இருந்த நாதீர் ஷா,  1739ல் டெல்லியை தாக்கினான்

டெல்லியில் 6 மணி நேரத்தில் 30000 பொது மக்களை கொன்று விட்டான். கோட்டையை உடைத்து 'முகம்மது ஷா'வை பிடிக்க, பயந்து போய் டெல்லி கஜானாவை திறந்து விட்டான். 

அப்போது கோஹினூர் வைரத்தை தன் கைக்கு ஆபரணமாக போட்டு கொண்டு விட்டான். 

ஒரு நாள் டில்லியில் கொள்ளை அடித்த பணத்தை வைத்து, அடுத்த 3 வருடங்கள் நாதீர் ஷா, ஈரான் மக்களிடம் வரியே கேட்கவில்லை. 

ஒரு டில்லியின் சொத்தே எத்தனை இருந்துள்ளது என்று நினைத்து பார்க்கும் போது, பாரத தேசம் முழுவதும் எத்தனை இருந்து இருக்கும் என்று யோசியுங்கள்.

முகலாய அரசன் ஒரு ஈரான் அரசனிடம் தோற்றுவிட்டான், என்றதும், கிழக்கு இந்திய கம்பனி என்ற பெயரில் வந்து இருந்த பிரிட்டிஷ் கிறுஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆட்சியை ஒடுக்க இதுவே சரியான நேரம் என்று கணித்தனர்.

முகலாய இஸ்லாமியர்கள் பலம் குறைய, அவர்களுக்கு கீழ் அடிபணிந்து ஆட்சி செய்த அனைத்து இஸ்லாமிய சிற்றரசனும் அந்த அந்த ஊருக்கு நாங்களே சுல்தான் என்று சொல்லி கொள்ள ஆரம்பித்தனர்.


ஆப்கான் : (1747 AD - 1809 AD) 62 yrs

1747ல் நாதீர் ஷாவை அவனது மெய்காப்பாளன் தலை சீவினான்.

மற்றொரு மெய்காப்பாளன் "அஹமத் ஷா அப்தலி" இவன் கையிலிருந்த வைரத்தை எடுத்து கொண்டான்.



இவனை காந்தகாரில் உள்ள அப்தலி இன மக்கள், காந்தகார் அரசனாக ஏற்றனர். இவன் பெஷாவர் (புருஷோத்தமபுறம்) வரை கைப்பற்றினான். 

7 முறை முகலாயர்களை தாக்கி டில்லியை கைப்பற்ற முயற்சித்தான்.

கடைசியாக முகம்மது ஷா டில்லியை இழந்து விடுவோமோ? என்ற பயத்தில், சிந்து தேசம், பஞ்சாப் (பாஞ்சாலம்) வரை கொடுத்து விட்டான்.

சண்டையே போடாமல், காந்தகார் அரசன் அஹமத் ஷா அப்தலிக்கு சிந்து, பஞ்சாப் கிடைத்தது.

பிறகு, நாதீர் ஷா வைத்து இருந்த ஈரான் தேசத்தை போரிட்டு கைப்பற்றி விட்டான்.

இவனை தொடர்ந்து வந்த இவன் பரம்பரை 1809 வரை கோஹினூர் வைரத்தை ஆப்கானில் வைத்து இருந்தனர்.

1809ல் ஆப்கான் அரசனாக இருந்த ஷா சஹுஜ் துர்ரானியை அவன் சகோதரன் மஹ்மூத் ஷா தூக்கி எறிந்து பதவியில் அமர்ந்தான். 

உயிருக்கு பயந்து கோஹினூர் வைரத்துடன் இந்தியாவுக்கு ஓடி வந்து, அப்போது லாகூரில் (லவ புரம்) இருந்த சீக்கிய அரசன் 'ரஞ்சித் சிங்'கிடம் அடைக்கலம் கேட்டான்.




மீண்டும் இந்தியாவுக்கு : (1809 AD - 1849 AD) 40 yrs

1813ல் காப்பற்றியதற்கு பதிலாக கோஹினூர் வைரத்தை வாங்கி கொண்டார்.

கோஹினூர் வைரத்தை "புரி ஜகன்நாத்" கோவிலுக்கு உயில் எழுதி கொடுக்க ஆசைப்பட்டார் ரஞ்சித் சிங். 


ஆனால் ரஞ்சித் சிங் உயில் எழுதாமலேயே, 1839ல் இறந்து விட்டார்.

1849ல் கிழக்கு இந்திய கம்பனி கிறிஸ்தவர்கள், சீக்கியர்களிடம் போர் செய்து, பஞ்சாப், லாகூரை கைப்பற்றினர்.

ரஞ்சித் சிங் மகன் துலீப் சிங் , "லாகூர் ஒப்பந்தம்" என்று பிரிட்டிஷ் அரசுக்கு அனைத்தையும் ஒப்படைத்து விட்டான்.

சீக்கிய அரசாங்க சொத்து, கோஹினூர் வைரம் அனைத்தையும் பிரிட்டனில் இருக்கும் விக்டோரியாவுக்கு அனுப்பி விட்டனர்.

துலீப் சிங் பிரிட்டனில் சென்று வசித்து, 2 கிறிஸ்தவ பெண்களை மணந்து, தானும் கிறிஸ்தவன் ஆகி, நாட்டை விற்று விட்டு, அங்கேயே குடியேறினார்.


Saturday 10 October 2020

சனி பகவான் தண்டிக்காமல் இருக்க, ராகு கேது தரும் துன்பத்தில் இருந்து காத்துக்கொள்ள... எளிய வழி இதோ...

'சனி பகவான்' தண்டனையில் இருந்து தப்பிக்க...

'ராகு கேது' தண்டனையில் இருந்து தப்பிக்க...

வழி என்ன?

கோவிலுக்கு போய் விளக்கு ஏற்றுவது இருக்கட்டும்..

ஜாதகம் பார்ப்பது ஒரு புறம் இருக்கட்டும்....  

3 வேளை இவர்களுக்கு 'உங்கள் கைகளால் கொஞ்சம் சொட்டு தீர்த்தமாவது' கொடுங்க்ள். 

அவர்கள் உங்கள் கையால் வாங்கியதாலேயே திருப்தி (தர்ப்பணம்) அடைந்து விடுவார்கள். 


உணர்ந்து கொடுங்கள்.. அப்புறம் செவ்வாய் தோஷமாவது..  சனியாவது... நவ கிரகமும் உங்களை கண்டு திருப்தி கொண்டு இருக்கும்..

(இதை யார் வேண்டும் கொடுக்கலாமே... )



சரி.. எப்படி தீர்த்தம் கொடுப்பது?... 

என்ன சொல்லி கொடுக்க வேண்டும்? 

எப்படி நவ கிரகமும் நமக்கு பாதகம் செய்யாமல் திருப்தி கொள்ளும்?.. 


இதோ.. 

கீழே உள்ள மந்திரத்தை சொல்லி, 9 கிரஹத்துக்கும் உங்கள் கையால் காலை, மதியம், மாலை கொஞ்சம் தீர்த்தம் கொடுங்கள்..அது போதும்..


எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே? 

அட.. சந்தியா வந்தனத்தில் இது இருக்கா. ?

இது தெரியாமலா..   ஜோஷியனை பார்த்து செவ்வாய் தோஷம் பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டேன். 

அவமானம்...

நவ க்ரஹங்களுக்கு, மூன்று வேளையும் கொஞ்சம் தீர்த்தமாவது கொடுத்து திருப்தி செய்:


1. ஆதித்யம் தர்ப்பயாமி !   (சூரிய தேவனை திருப்தி  செய்விக்கிறேன்)

2. ஸோமம்  தர்ப்பயாமி ! (சந்திர தேவனை திருப்தி செய்விக்கிறேன்)

3. அங்காரகம்  தர்ப்பயாமி ! (செவ்வாய் தேவனை திருப்தி செய்விக்கிறேன்)

4. புதம்  தர்ப்பயாமி ! (புதன் தேவனை திருப்தி செய்விக்கிறேன்)

5. ப்ருஹஸ்பதிம்  தர்ப்பயாமி ! (குரு தேவனை திருப்தி செய்விக்கிறேன்)

6. சுக்ரம்  தர்ப்பயாமி ! (சுக்கிர தேவனை  திருப்தி செய்விக்கிறேன்)

7. சனைச்சரம்  தர்ப்பயாமி !  (சனி தேவனை திருப்தி செய்விக்கிறேன்)

8. ராஹூம்  தர்ப்பயாமி ! (ராகு தேவனை திருப்தி செய்விக்கிறேன்)

9. கேதும்  தர்ப்பயாமி ! (கேது தேவனை திருப்தி செய்விக்கிறேன்)


பிறகு, உன்னை படைத்த ஈஸ்வரனுக்கு மூன்று வேளையும் கொஞ்சம் தீர்த்தமாவது கொடுத்து திருப்தி செய்:


1. கேசவம்  தர்ப்பயாமி !

2. நாராயணம்  தர்ப்பயாமி ! 

3. மாதவம்  தர்ப்பயாமி !  

4. கோவிந்தம்  தர்ப்பயாமி !

5. விஷ்ணும்  தர்ப்பயாமி ! 

6. மதுஸூதனம்  தர்ப்பயாமி !

7. த்ரிவிக்ரமம்  தர்ப்பயாமி ! 

8. வாமனம்  தர்ப்பயாமி !

9. ஸ்ரீதரம்   தர்ப்பயாமி ! 

10. ஹ்ருஷீகேஷம்  தர்ப்பயாமி !

11. பத்மநாபம்  தர்ப்பயாமி ! 

12. தாமோதரம்  தர்ப்பயாமி !


தர்ப்பயாமி என்றால் "திருப்தி செய்கிறேன்" என்று அர்த்தம்..

உணர்ந்து கொடுங்கள்.. 

அப்புறம் செவ்வாய் தோஷமாவது..  சனியாவது... 


நவ கிரகமும் உங்களை கண்டு திருப்தி கொண்டு இருக்கும்..


English Meaning: Sandhya Vandanam

Afternoon (to live 100yrs)

https://youtu.be/0SYdzobuSYE

Evening (to avoid accidental death)

https://youtu.be/iWyHeXyI8s0

Morning

https://youtu.be/F9b31khruk4


தமிழ் அர்த்தம் : சந்தியா வந்தனம்:

மதியம் (100 வயது வாழ)

https://youtu.be/q3gr3oWadqs

மாலை (அகால மரணம் தவிர்க்க)

https://youtu.be/dZbJ8KWZl0w

காலை

https://youtu.be/aHW0UEmZwKo