Followers

Search Here...

Thursday 11 January 2018

தாரக மந்திரம், மாயை, சம்சார என்றால் என்ன?

தாரக மந்திரம் என்று ராம நாமத்தையும், ஓம் என்ற ஓங்காரத்தையும் சொல்கிறார்கள். தாரகம் என்றால் என்ன? இதன் பயன் என்ன?

சம்சார என்றால் என்ன?

மாயை என்றால் என்ன?

மன அலையை, சம்சார அலையை ஓய வைப்பது எப்படி?

மறு பிறவி உண்டு என்று அனுமானிப்பது?

நம் சனாதன தர்மத்தின் நோக்கம் என்ன? பிற மேற்கு மத தர்மத்தின் நோக்கமும், அவர்கள் விழாவும், வாழ்க்கையின் நோக்கம் என்ன?

மேலும் படியுங்கள்...

மீண்டும் மீண்டும் வரக்கூடிய அலையை தான் பொதுவாக, சம்சாரம் என்கிறோம்.

கடலின் அலையை பார்த்தால் என்ன அர்த்தத்தை இது சொல்கிறது என்று நாமும் புரிந்து கொள்ளலாம்.
கடலில் ஒரு அலை எழும்பும், அது அழிந்து, பின் மீண்டும் ஒரு அலை உருவெடுத்து வந்து, ஒரு முடிவே இல்லாமல், "பிறந்து, அழிந்து', "பிறந்து, அழிந்து" என்று சுற்றிக்கொண்டே இருக்கும். இந்த சுழற்சிக்கு தான் சம்சாரம் என்று பெயர்.

இந்த கடலில் உள்ள அலை போல, நமக்கும் மனதிலும், உடலிலும் கூட இந்த முடிவில்லாத சுழற்சி  ஏற்படுகிறது.

1. மனதிலும் இந்த சம்சார சக்கரம் என்ற அலை ஓடுகிறது. இதையும் நன்றாக கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.
2. உடலிலும் இந்த சம்சார சக்கரம் என்ற அலை ஓடுகிறது. இதை நன்றாக கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.

விளக்கம்:
1. மனம் என்றாலே அலைபாயும் குணம் கொண்டது என்று அனைவருக்கும் புரியும். அனைவரும் அனுபவிப்பதால், ஒப்புக்கொள்வர்.
அலையை போன்று, நம் மனதில் ஒரு எண்ணம் உருவாகி, அது அழிந்து, உடனே மற்றொன்று உருவாகி, அதுவும் அழிந்து, மற்றொறு எண்ணம் உருவாகி இப்படியே நம் நினைவு தெரிந்த நாள் முதல், சாகும் வரை, எண்ணங்கள் நம் மனதில் வந்து கொண்டே இருக்கிறது.
இதற்கு முடிவே தெரிவதில்லை.

அலையாத மனம் கிடைப்பதே பலருக்கு அரிதான விஷயம்.

அலையும் மனது இருப்பதால் தான் மனிதன் துன்பத்தை அனுபவிக்கிறான். இன்றைய சமுதாயம் மனக்கட்டுப்பாடு இல்லாமல் தறிகெட்டு அழிவதால் தான், இன்றைய சமுதாயம், நம் முன்னோர்கள் அனுபவித்த stress, pressureஐ விட பல மடங்கு அனுபவிக்கிறது.

மனம் அலைவதே பல நோய்களுக்கு காரணம். அதாவது, ஒரே எண்ணத்தில் நிற்காமல், ஒரு எண்ணம் ஏற்படும் போதே, இன்னொரு எண்ணம் உருவாகி, அது அழிந்து இன்னொரு எண்ணம் என்று பல எண்ணங்கள் தோன்றி, மறைந்து கொண்டே இருப்பதால், மனம் அலைகிறது, நோய் வந்து சேருகிறது.

இந்த மனதின் அலையும் தன்மையை தடுத்து, ஒரு எண்ணத்தில் நிலை நிறுத்த ஒருவன் படாதபாடு பட வேண்டி உள்ளது.

யோகா, தவம் என்று பல வழிகள் மூலம் மனதை அடக்கி, மன அலையை ஓய செய்ய முடியும் என்று பார்க்கிறோம்.
மன அலைகள் ஏற்படாமல் இருக்க  மிகச் சிறந்த வழி "ராம ராம ராம" என்று தாரக மந்திரத்தை சொல்வதே.
சொல்லி பார்த்தவர்களுக்கு தான் எப்படி மனம் அடங்குகிறது என்று புரியும்.
மேர்கத்திய மதங்கள் கொண்டாடும் பண்டிகைகள், உணவுகள், கொள்கைகள், அவர்களின் ஆலயங்கள் உட்பட அமைதியாக இருக்கும் மனதை தூண்டி விட்டு எண்ணங்களை கிளர்ச்சி செய்வதிலேயே உள்ளது. இதனாலேயே இந்தியாவை தேடி அமைதி எங்கே என்று வருகின்றனர்.

இவர்களின் ஆலய வழிபாடு கூட, அமைதியாக இருக்கும் மனதை கிளர்ச்சி செய்வதாக உள்ளது. இவர்களின் ஒரு பண்டிகையில், அழகாக இருக்கும் தன் குழந்தையை கூட பேய், பூதம் என்று வேஷம் செய்து கொண்டாடுவது. மனதை கிளர்ச்சி செய்து மன அலைகளை எழுப்புவதே இவர்கள் கொள்கையாக உள்ளது.

நேரெதிராக, சஷ்டி விரதம், ஏகாதேசி, ராம நவமி, நவராத்திரி, பொங்கல் என்ற அனைத்து ஹிந்து பண்டிகைகளும் தெய்வங்களுக்கு நன்றி சொல்லும் விதமாக, சைவ உணவு மட்டும் உட்கொள்ளும் விதமாக, விரத நாட்களில் உணவு கூட உட்கொள்ளாமல் வழிபட செய்து, மனதின் அலையை ஒடுங்க செய்வதிலேயே அமைந்தது இருக்கிறது. கோவிலுக்கு சென்றாலும் மனஅமைதி கிடைக்க வழி செய்கிறது. "ஓம் சாந்தி" என்று எப்போதும் வேதமே நாம் மனம் அலையாமல், சாந்தியாக இரு என்று சொல்கிறது. நம் மதத்தின் நோக்கமே நம் மனதை சாந்தப்படுத்தும் நோக்கத்தில் இருக்கிறது.
மேற்குநாட்டு மதங்களோ, மனதின் அலையை கிளப்பி, மன குழப்பம், கோபம், ஆத்திரம், காமம் என்று பல வித உணர்ச்சிகளை தூண்டி, stress, pressure என்று நோய்களை உருவாக்குகிறது.
இவர்கள் கலாச்சாரம் நம் மீதும் இன்றைய காலத்தில் தோ
நம் சாஸ்திரம், மனதின் அலையை அடக்க வழியை காட்டிய பின்னும், முயற்சி கூட செய்யாமல் இருப்பவன், மனம் அலைந்து கொண்டே வாழ வேண்டியது தான்.
ஆஞ்சநேயரும், சிவபெருமானும் "ராம" என்ற தாரக மந்திரத்தை தாங்களே சொல்லி கொண்டு இருப்பதற்கு காரணம், நாமும் சொல்லவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே.

2. மன அலைகள் போல, நம் உடம்பும் இந்த சம்சார அலையில் சிக்கியது தான் என்று "உணர்ந்து கொள்" என்கிறது நம் சனாதன வேத தர்மம்.
நாம் இப்போது கொண்டுள்ள முழு உடம்பும் அழிந்து, ஆத்மாவாகிய நாம் மீண்டும் ஒரு உடலில் புகுவோம் என்கிறது நம் சனாதன தர்மம். மோக்ஷம் அடையாத வரை உடம்பு அழிந்து பின் இன்னொரு உடலில் புகுந்து விடுகிறது ஆத்மா என்கிறது நம் சாஸ்திரம்.

உடம்பே அழிந்த பின், எப்படி நாம் இன்னொரு உடம்பை பெறுகிறோம் என்று அனுமானிப்பது? எப்படி நம்புவது?
இதற்கான பதிலை கொஞ்சம் கவனித்தாலே நாமும் புரிந்து கொண்டு விடலாம்.
மறு ஜென்மம் இல்லை என்று உளரும் கூட்டத்தை மடையர்கள் என்று உணரலாம்.

இன்றைய அறிவியல் முன்னேற்றத்தில், ஆராய்ச்சியாளர்கள் நாம் இப்போது கொண்டுள்ள உடம்பிலேயே ஒவ்வொரு செல்களும் நகர்ந்து கொண்டே இருக்கிறது, அழிந்து கொண்டே இருக்கிறது, புதிதாக தன்னை உருவாக்கி கொண்டே இருக்கிறது என்று நம் சனாதன தர்மத்தில் சொன்ன விஷயத்துக்கு சார்பாக சொல்கிறார்கள்.

நம் உடம்பிலேயே எப்பொழுதும் அழிவும், உருவாக்கமும் நடந்து கொண்டே இருக்கிறது என்று அறியும் போது தான், மொத்த உடம்பும் ஒரு நாள், பயன்படாத போது, உள்ளிருக்கும் ஆத்மா, இந்த உடம்பை விட்டு, வேறொரு உடம்பில் அதன் பாவ-புண்ணியத்துக்கு ஏற்ப யமதர்மனால் கொடுக்கப்பட்டு ஏற்கிறது என்று நிர்ணயிக்க முடியும்.

அந்த ஆத்மா மட்டும் உண்மை, அது வேறொரு உடம்பை பெறும் என்று எப்படி உணர்வது?
இதற்கும் இந்த ஸம்ஸார சாகரத்தில் சுழலும் நம் உடம்பை கவனித்தாலே புரியும்.

40 வயதில் இருக்கும் ஒரு ஆணோ/பெண்ணோ, தான் பிறந்த குழந்தையாக இருந்த போது எடுத்த புகைப்படத்தையோ, அல்லது வீடியோவையோ பார்த்தால் கூட, அன்று இருந்த உடம்பும், இன்று இருக்கும் உடம்புக்கும் சம்பந்தமே இல்லை என்று புரியும்.
இன்னும் வயது ஆகி 90 வயதில் நாம் பெரும் உடம்பும், இன்று நமக்கு உள்ள உடம்பும் கூட சம்பந்தம் இருக்காது.
இது கண்ணுக்கு தெரிந்த உண்மை.

அன்றைய உடல் வேறு என்று தெளிவாக தெரிந்தாலும், உள்ளிருக்கும் "ஆத்மா" ஞானத்தோடு இருப்பதால், குழந்தையாக இருந்த உடம்பில் இருந்தவனும் 'நான் தான்',
இன்று இந்த உடம்பில் இருப்பவனும் நான் தான் என்று நம் மூளைக்கு புரிய வைக்கிறது.

ஆனால், யோகம், தவம் குன்றிய நம்மால், இந்த உடம்பே அழிந்த பின், என்ன நடக்கிறது என்று புரியவில்லை. புரிந்து கொள்ள முடியவில்லை.
இதை தான் நம் ஹிந்துக்கள் மாயை என்கின்றனர்.

தன் உடலே மாறிக்கொண்டு இருக்கிறது என்ற உண்மை தெரிந்தும், அழிவு, ஆக்கமும் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என்று தெரிந்தும், ஒன்றுமே மாறாதது போல நம்மை நினைக்க செய்கிறது மாயை என்ற இயற்கை.

இந்த மன அலையையும், உடலில் ஏற்படும் அலையையும் (wave theory) உணர்ந்தவன், உள்ளிருக்கும் ஆத்மா மட்டுமே எப்பொழுதும் மாறாமல் இருக்கிறான், அது தான் தான் என்று புரிந்து கொண்டு விடுகிறான்.

அது எப்படி உடல் எப்பொழுதும் அழிந்தும் உருவாகி கொண்டு இருக்கிறதோ, அது போல, இந்த உடம்பே அழிந்தாலும், இந்த உடலை விட்டு பிரிந்த ஆத்மா, மீண்டும் வேறு உடல் பெறுகிறான் அவன் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப.

பாவ புண்ணியம் அற்ற, இரண்டுமே செய்யாத ஆத்மா, சம்சார கடல் அலையில் இருந்து பகவான் நாராயணனால் மீட்க்கப்பட்டு, வைகுண்டம் அடைகிறான். பக்தி இல்லாமல் வெறும் இந்த ஞானத்தோடு இருந்த சித்தர்களுக்கு கைவல்யம் கொடுக்கிறார்.

மன அலைகள் ஏற்படாமல் இருக்க , மீண்டும் பிறவி ஏற்படாமல், பிறவி கடல் என்ற அலையை கடக்கவும், மிகச் சிறந்த வழி "ராம ராம ராம" என்று தாரக மந்திரத்தை சொல்வதே ஆகும்.
ராம நாமத்திற்கு தாரகமந்திரம் என்று பெயர்.
ஓம் என்ற ஓங்காரத்துக்கும் தாரகமந்திரம் என்று பெயர்.
தாரகம் என்றால், கடக்க செய்வது என்று பொருள்.
சம்சார அலையை, மனதின் அலையை கடக்க செய்வதால், இந்த இரண்டுக்கும் தாரக மந்திரம் என்று பெயர்.
ஓம் என்ற ஓங்காரம் யார் வேண்டுமானாலும் சொல்ல கூடாது. இதற்கு தகுதி பக்குவம் தேவை. கண்ட இடத்தில் எல்லாம் சொல்ல கூடாது. ஒழுக்கம் முக்கியம். இப்படி பல கட்டுப்பாடுகள் கொண்டது ஓம் என்ற பிரணவம்.
இந்த ஓங்காரமே, தன்  சௌலப்யத்தால் "ராம" என்று ஆனது.
ராம நாமத்தை பிற மதத்தவன் கூட சொல்லலாம். நம்பிக்கை இல்லாமல் கூட சொல்லலாம். எங்கும் சொல்லலாம். எப்போதும் சொல்லலாம். யார் வேண்டுமானாலும் சொல்லலாம். இப்படி சுலபமான தாரக மந்திரத்தை தான் ஆஞ்சநேயர் எடுத்து கொண்டார்.

காசியில் சிவபெருமான் ராம நாமத்தையே சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

ராம நாமம் சொல்ல சொல்ல, மன அலைகள் ஓயும், பிறவி கடலையும் கடக்க முடியும்.

குருநாதர் துணை

Wednesday 27 December 2017

நரகத்திற்கு அழைத்து போகும் நான்கு குணங்கள் எது? தெரிந்து கொள்வோமே...

நமது உபநிஷதம், "ஹே புத்தி உள்ளவனே" என்று நம்மை ஆசையாக,  கூப்பிட்டு, பின் வருமாறு சொல்கிறது. 



  1. அஸ்ரத்தை (ஈடுபாடு இன்மை),
  2. லோபம் (பேராசை),
  3. கோபம்,
  4. பொய்

- இந்த 4ம் உன்னிடம் இருந்தால், அது உன்னை "நரகத்திற்கு அழைத்து போகும்".
"ஹே புத்தி உள்ளவனே ! 
ஈஸ்வரனை அடைய, மேலும் உலகத்திலும் சௌக்கியமாக வாழ, 
மேல் சொன்ன இந்த நான்கையும், உன் குணத்திலிருந்து துரத்தி விடு.

  1. ஸ்ரத்தை (ஈடுபாடு)
  2. தானம்
  3. பொறுமை
  4. உண்மை 

- என்ற இந்த நான்கை உன் வாழ்வில் பிடித்துக்கொள்"
என்கிறது.

"இந்த உண்மையை நீ புரிந்து கொள்வாய்" என்பதால் தான், வேதம் நம்மை "ஹே புத்தி உள்ளவனே !" என்று அழைக்கிறது.

"இனி நரக வழியை தேர்ந்தெடுக்காதே, ஈஸ்வரனை நோக்கி வா" என்று  வைதீகமான வேதம், நம்மை ஆசையுடன் அழைக்கிறது.

நீ ஸ்ரத்தை (முழு மனதுடன் ஈடுபாடு) இல்லாமல் எந்த காரியம் செய்தாலும் அது பலன் அளிக்காது. 

உலக விஷய காரியமானாலும் சரி,
தெய்வ விஷய காரியமானாலும் சரி,
ஸ்ரத்தை இல்லாமல் நீ செய்தால், ஒரு பலனும் இல்லை. 

லோபம் என்றால் எது ?
"உலகில் உள்ள அனைத்தும் எனக்கு மட்டும் வேண்டும்" என்று சொல்வது லோபம்.
"தன்னிடம் உள்ள எதுவும் (அறிவு, செல்வம்) மற்றவர்க்கு கிடைக்க கூடாது என்று வைத்துக் கொள்வதும்" லோபம்.

இந்த "இரண்டுமே லோபம் தான்". 
இந்த லோபம் ஒருவனை நரகத்திற்கு தான் இட்டு செல்லும். 



அதனால் "லோபத்தை (பேராசை) விடு" என்கிறது உபநிஷத்.

அதே போல,
"பொய் பேசுதல், கோபப்படுதல் இதையும் விட்டு விடு" என்கிறது உபநிஷத்.

பொதுவாக, ஒரு விஷயத்தை விடு என்றால், அது தீயது என்று தெரிந்தாலும், மனிதனால் விட முடிவதில்லை.

நம் நிலையை அறிந்த ஸனாதன வைதீக வேதம், "இன்னொரு நான்கை காட்டி, அதை பிடி" என்கிறது.

"எப்பொழுதும் தானம் செய்யும் ஸ்வபாவம் வேண்டும்" என்று நாம் ஆசைபட ஆரம்பிக்கும் போது, தானாகவே, "தனக்கு என்று சேர்த்துக் கொள்ள வேண்டும், அது வேண்டும், இது வேண்டும்" என்கிற லோபம் (பேராசை) தானாக நம்மை விட்டு அழியும்.

ஆக, புத்திசாலியான நீ, "லோபத்தை (பேராசை), தானத்தால் நீக்க வேண்டும்".
வெறும் தானம் செய்தால், "தான் செய்தோம் என்ற கர்வம் உண்டாகும்". அதனால்,
"தானம் செய்யும் போது, அந்த ப்ரம்மத்துக்கு (பரமாத்மா, பர வாசுதேவன்) தானம் செய்தோம்" என்ற புத்தியுடனேயே தானம் செய்ய வேண்டும்.

ஆக, புத்திசாலியான நீ, "தானம் செய்து செய்து லோபத்தை அழிக்க வேண்டும்".

அதேபோல, புத்திசாலியான நீ,
"நீ பொறுமையால், கோபத்தை நீக்க வேண்டும்".

அதேபோல, புத்திசாலியான நீ, "உண்மையால், பொய்யை நீக்க வேண்டும்".

அதேபோல, புத்திசாலியான நீ, "அஸ்ரத்தையை, ஸ்ரத்தையால் நீக்க வேண்டும்".

எந்த காரியத்தை எடுத்தாலும் "ஸ்ரத்தை என்ற ஈடுபாடுடன்" நீ செய்தால், எத்தனை முறை தோற்றாலும், ஸ்ரத்தை இருந்தால், முயற்சி செய்து கொண்டே இருப்பாய்.


ஈஸ்வரனை நேரில் காண வேண்டும் என்றால் கூட, உன் ஸ்ரத்தையே வழி கொடுக்கும். உன் ஈடுபாடு ஒன்றே வழி கொடுக்கும்.

ஆக,
நாம் வாழப்போகும் இன்னும் சில கால ஜீவ வாழ்க்கையில்,
இந்த உபதேசத்தால், நாம் க்ரஹிக்க (மனதில் பதியவைக்க) வேண்டியது என்ன?
1. நாம் எப்போதும் "தானம் செய்யும்" ஸ்வபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.  
லோபம் (பேராசை) தானாக நம்மை விட்டு அழிந்து விடும்
வெறும் தானம் "கர்வத்தை தரும்" என்பதால்,
அந்த "பரமாத்மாவுக்கு தானம் செய்தேன்" என்று நினைப்புடன் எப்போதும் தானம் செய்யும் ஸ்வபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.



2. எப்பொழுதும் நம் சாஸ்திரத்திலும், குரு வாக்கியத்திலும் நமக்கு ஸ்ரத்தையை(ஈடுபாடு) வளர்த்துக்கொள்ள வேண்டும். 
'அஸ்ரத்தை' (ஈடுபாடு இன்மை) தானாக நம்மை விட்டு அழிந்து விடும்.

3. நாம் எப்போதும் பொறுமை ஸ்வபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

'கோபம்' தானாக நம்மை விட்டு அழிந்து விடும்.   

4. சத்யம் பேசும் ஸ்வபாவத்தை எப்பொழுதும் வளர்த்துக்கொள்ள வேண்டும். 
சத்தியத்தையே சொல்ல வேண்டும்.
அஸத்யத்தை (பொய்) எப்பொழுதும் சொல்லக்கூடாது.
அஸத்யம் (பொய்) என்றுமே இறுதியில் ஜெயிக்காது.


உபநிஷத் "சத்யம் ஏவ ஜயதே" (சத்தியமே ஜெயிக்கும்) என்று உறுதியாக சொல்கிறது.

ஆக,
"அஸ்ரத்தை, லோபம், கோபம், பொய்"
- இந்த நான்கை நம்மிடமிருந்து விரட்ட,
"ஸ்ரத்தை, தானம், பொறுமை, உண்மை"
என்ற இந்த நான்கை கொண்டு நீ ஜெயித்து விட்டால்,
"புத்திசாலியே !! நீ ஈஸ்வரனை எளிதில் கண்டு கொள்வாய்." என்று உபநிஷதத்தில் உள்ளது.

இது போன்ற பல உபதேசங்கள், வேதத்தில் உள்ளது, உபநிஷதத்தில் உள்ளது.

இப்படிப்பட்ட பொக்கிஷங்கள் உள்ள வேதத்தை நாம் காக்க வேண்டும். 
வேதம் அறிந்த வேதியர்கள் நடமாடும் தெய்வங்கள் என்பதை நாம் உணர்ந்து, அவர்களை மதிக்க வேண்டும். 
வேதம் அறிந்த வேதியர்களிடம் உபதேசங்கள் கேட்டு, "ஈஸ்வரன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்?" என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

உபன்யாசம் extract from சிருங்கேரி பெரியவர்.


வாழ்க ஹிந்துக்கள்.   
ஹிந்துக்கள் சொல்லாத நல்ல விஷயங்கள், பிற போலி மதங்களில் இல்லை.

பிற போலி மதங்கள் சொல்லும் அனைத்து நல்ல விஷயங்களும், நம்மிடம் இருந்து எடுக்கப்பட்டவை தான்.