Followers

Search Here...

Thursday 18 February 2021

வேதம் "இந்திரன், ருத்ரன், நாராயணன்" என்று பலரையும் தெய்வமாக துதிக்கிறது. அப்படி இருக்க, "வேதம் முழுவதுமே நாராயணனாகிய என்னை தான் துதி செய்கிறது.." என்று தெளிவாக, தீர்மானமாக கிருஷ்ண பரமாத்மா ஏன் சொன்னார்? தெரிந்து கொள்வோமே!

ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் பற்றி சொல்லி, அர்ஜுனன் கேட்டான் என்றதும் விஸ்வரூபமும் காட்டிய கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனை பார்த்து சொல்கிறார்.. 

"அர்ஜுனா! வேதங்கள் அனைத்தும் என் ஒருவனை பற்றி மட்டுமே சொல்கிறது. வேதத்தால் அறிய பட வேண்டியவனும் நானே

என்று அர்ஜுனனை பார்த்து  ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஆச்சர்யமாக சொல்கிறார்.

வேதை: ச ஸர்வை: 

அஹம் ஏவ வேத்ய: |

வேதாந்தக்ருத் 

வேத விதேவ சாஹம் ||

- பகவத்கீதை: 

அத்யாயம் 15: ஸ்லோகம் 15


வேதம், "நாராயணனை" பற்றி மட்டுமா சொல்கிறது?

வேதம், 'இந்திரனை' பற்றியும் சொல்கிறதே?! 

வேதம் 'ருத்ரனை' பற்றியும் சொல்கிறதே?!  

வேதம், 'சகல தேவதைகளை' பற்றியும் சொல்கிறதே?

இப்படி இருக்க, 

'வேதம் முழுவதும் என்னை பற்றி தான் சொல்கிறது' என்று கிருஷ்ண பரமாத்மா எப்படி சொன்னார்?


வேதத்தின் அர்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கு, பொதுவாக இப்படி ஒரு கேள்வி மனதில் எழுவது சகஜம். 





"வேதத்தை அறிந்து இருந்த அர்ஜுனனுக்கு

சிவபெருமானையே தரிசித்து இருந்த அர்ஜுனனுக்கு

சொர்க்கலோகம் சென்று தேவேந்திரனை பார்த்து இருந்த அர்ஜுனனுக்கு, 

இது போன்ற கேள்வி மனதில் எழவில்லை

என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.


இப்படி ஒரு கேள்வியை, அர்ஜுனன் 'கேட்கவே இல்லை' என்று நாம் பார்க்கிறோம்.


வேதத்தின் வாக்கியங்களை கவனிக்கும் போது, கிருஷ்ண பரமாத்மா சொன்ன ரகசியம் நமக்கு புரியும்.


நாராயணனே 'பரமாத்மா' (பரம்பொருள்) 

என்று பல இடங்களில் வேதம் தெளிவாக சொல்கிறது... 

பரமாத்மாவாகிய ப்ரம்மத்தை, "புருஷன்" என்ற பெயரை கொண்டு " ஏக புருஷ: (அந்த ஆதிபுருஷன் ஒருவரே முதலில் இருந்தார்)" என்கிறது வேதம்.

வேதத்தில் வரும் புருஷ சூக்தத்தில், 'நாராயணனே அந்த புருஷன்' என்று விளக்கி, அந்த 'புருஷனின் பத்னியாக மஹாலட்சுமி (ஹ்ரீஸ்ச தே லட்சுமீஸ்ச பத்னி) இருக்கிறாள்' என்று பரமாத்மாவின் அடையாளத்தை இங்கு தீர்மானிக்கிறது, வேதம்..


நாராயணனே 'பரமாத்மா' (பர), என்று நிரூபிக்கும் வேத வாக்கியங்களாக "நாராயண பரோ ஜ்யோதி: | ஆத்மா நாராயண பர: || நாராயணம் பரம் ப்ரஹ்ம | தத்வம் நாராயண பர: || நாராயண பரோ த்யாதா | த்யானம் நாராயண பர: ||

என்று பல முறை சொல்கிறது வேதம்.


இப்படி 'பர' என்ற சொல்லாலும், 'பரப்ரஹ்ம' என்ற சொல்லாலும், 'புருஷ' என்ற சொல்லாலும் நாராயணனை அழைக்கும் வேதம்,

அந்த ஆதி புருஷனே! ஆயிரக்கணக்கான தலைகளுடன் (அதாவது ரூபங்களுடன்) காட்சி தருகிறார் (ஸஹஸ்ர சீர்ஷா புருஷ:) என்கிறது வேதம். 


அதாவது, 'அவரே பல ரூபங்களாக (இந்திர, ருத்ர, யம..) இருக்கிறார்' என்ற ரகசியத்தை சொல்கிறது.





ஒரு இடத்தில் வேதம், "பிரம்மாவும் நாராயணனே! சிவனும் நாராயணனே! காலமும் நாராயணனே!" (பிரம்மா நாராயண: | சிவ: ச நாராயண: | கால: ச நாராயண: |) என்று தெளிவாக சொல்கிறது..

இன்னொரு இடத்தில் “ஏகோ நாராயணோ ஆஸீத் ந ப்ரம்மா ந ஈசான:” என்று சொல்லும் போது, "பிரளய காலத்தில் பிரம்மாவும் இல்லை சிவனும் இல்லை நாராயணன் ஒருவரே இருந்தார்" என்று வெளிப்படையாக நாராயணனின் பெயரை கூறுகிறது வேதம்.


"அந்த ஆதி புருஷனையே, பல வித பெயர்களில் சொல்கிறேன் (ஏகம் ஸத் விப்ரா: பஹூதா வதந்தி)

என்று வேதமே தெளிவாக சொல்கிறது.

மேற்சொன்ன, இந்த வேத வாக்கியத்தை (ஏகம் ஸத் விப்ரா: பஹூதா வதந்தி! ) நாம் கவனிக்கும் போது, 

கிருஷ்ண பரமாத்மா "அர்ஜுனா! வேதங்கள் அனைத்தும் என் ஒருவனை பற்றியே சொல்கிறது. வேதத்தால் அறிய பட வேண்டியவனும் நானே" என்று சொன்னதன் ரகசியம் புரியும்.


ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!

குருநாதர் துணை...

Friday 12 February 2021

"ஸ்ரீகிருஷ்ணர் எனக்கு போதும்" என்று சொல்பவனை, கிருஷ்ண பரமாத்மா எப்படி பார்க்கிறார், நினைக்கிறார்? தெரிந்து கொள்வோம். பகவத் கீதை

 "ஸ்ரீகிருஷ்ணர் எனக்கு போதும்" என்று சொல்பவனை, கிருஷ்ண பரமாத்மா எப்படி பார்க்கிறார்? என்ன நினைக்கிறார்? 

என்று தெரிந்து கொள்வோம்...  

பகவத் கீதை 11 அத்தியாயத்தில் இதற்கு பதில் சொல்கிறார்...


नाहं वेदै: न  तपसा न दानेन न चेज्यया |

शक्य एवंविधो द्रष्टुं दृष्टवानसि मां यथा ||

भक्त्या त्व अनन्यया शक्य अहम् एवं विधोऽर्जुन |


ந: அஹம் வேதை: ந தபஸா

ந தானேன ந ச இஜ்யயா |

சக்ய ஏவம் விதோ த்ரஷ்டும்

த்ருஷ்டவானசி மாம் யதா ||

பக்த்யா த்வ அனன்யயா

சக்ய அஹம் ஏவம் விதோர்ஜுன |

naaham vedair na tapasaa

na dhaanena na cha ijyayaa

sakya evam-vidho drashtum

Dhrushtavaanasi maam yathaa

bhaktyā tv ananyayaa śhakya 

aham evaṁ-vidho ’rjuna

- Bhagavad Gita (11:52)





Arjuna! Just by the study of the Vedas, or just by penance, or just by charity, or just by fire sacrifices, i can't be seen.

Arjuna! I am available, Only for unconditional love (devotion). 


அர்ஜுனா! என் மீது பக்தி இல்லாமல், வேதமே ஓதினாலும்,  தவமே (விரதம்) செய்தாலும், தானமே செய்தாலும், யாகமே செய்தாலும் நான் அவர்களுக்கு கிடைப்பதில்லை. 

அர்ஜுனா! என் மீது பக்தி மட்டும் ஒருவனுக்கு இருந்து விட்டால், நான் அவனை கண்டு, வெண்ணெய் உருகுவது போல உருகி அவன் கேட்டதையெல்லாம் செய்து கொடுப்பேன்...

இப்படி சொன்ன ஸ்ரீ கிருஷ்ணர், உண்மையில் அர்ஜுனனின் பக்தியை தான் குறிப்பிடுகிறார்..

"ஒரு பக்கம் துவாரகா சேனை, மறு பக்கம் போர் செய்யாத, ஆயுதம் கூட ஏந்தாத ஸ்ரீ கிருஷ்ணர்.. யார் வேண்டும்?" என்று ஸ்ரீ கிருஷ்ணர் கேட்ட போது, 

"ஸ்ரீ கிருஷ்ணர் தன் பக்கம் இருந்தால் போதும்

என்று அர்ஜுனன் கேட்டு கொண்டான்.


"தான் ஒருவன் போதும் என்று சொல்லி விட்டானே!" 

என்று உருகி போன ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனன் காலில் இருந்து தெறிக்கும் மண் தன் தலையில் விழுந்தாலும் பரவாயில்லை என்று அர்ஜுனன் தேரின் மேல் அமர்ந்து இருக்க, அர்ஜுனனுக்கு கீழே அமர்ந்து கொண்டு, துவாரகைக்கு அதிபதியான ஸ்ரீ கிருஷ்ணர், குதிரையோட்டியாக கூட வர தயாராகி விட்டார்..





"தான் ஒருவன் போதும் என்று சொல்லி விட்டானே!" 

என்று மேலும் உருகி, அதுவும் போதாதென்று தோன்ற, ஞானத்தை (பகவத் கீதை) உபதேசம் செய்தார். 


"தான் ஒருவன் போதும் என்று சொல்லி விட்டானே!" 

என்று மேலும் உருகி, அதுவும் போதாதென்று தோன்ற, யாரும் பார்க்காத, பார்க்க முடியாத விஸ்வ ரூபத்தையும், அர்ஜுனன் கேட்டான் என்றதும் காட்டி விட்டார்.


"பக்திக்கு எதுவும் செய்வேன்" என்று அர்ஜுனன் சொல்படி எல்லாம் கேட்டு தேரோட்டினார்.


அர்ஜுனன் பக்தியை உயர்த்தி காட்டும் இடம் இது.


'கிருஷ்ண பக்தி செய்பவர்களை, பரமாத்மா எப்படி ஆசையோடு பார்க்கிறார்' 

என்று காட்டும் ஸ்லோகம் இது.