Followers

Search Here...

Monday 28 March 2022

அன்று சூத்திரனை (emoloyee) படிக்க விட்டீர்களா?.. ப்ராம்மணர்கள் தானே வேலைக்கு சென்றீர்கள்?....

அன்று சூத்திரனை (emoloyee) படிக்க விட்டீர்களா?.. ப்ராம்மணர்கள் தானே வேலைக்கு சென்றீர்கள்?..

வேதத்தில் தனுர் வேதம் க்ஷத்ரியன் கற்றான்..

வேதத்தில் ஆயுர் வேதம் வைசியன் கற்றான்.

வேதத்தில் ஆயுர்வேதம் (medicine), ஸ்தாபத்யம் (engineering), காந்தர்வ வேதம் (music), தனுர் வேதம்(Army/weaponry), இசை, வாத்தியம், நாட்டியம், ந்ருத்தம், ஆலேக்யம்,  விசேஷ கச்சேத்யம், சயன ரசனம் என்று பல தொழில் கல்வியை அனைவரும் கற்றார்கள்.


அனைவரும் பூணூவ் அணிந்து இருந்தார்கள்.


பிராம்மணன் சம்பாதிக்க இயலாத 'தெய்வத்தை பற்றி சொல்லும் வேதம் மந்திரத்தை மட்டும்' தனக்கு வைத்து கொண்டு, அனைத்தையும் பிறருக்கு சொல்லி கொடுத்து சம்பாதிக்க சொல்லி கொடுத்தான். 

தான் தெய்வத்தை பற்றி சொல்லும் வேத மந்திரத்தை மட்டும் காப்பாற்றி வந்தான். 

இதனால், 

மற்ற அனைவரும் ப்ராம்மணனை காப்பாற்றினர், உதவினர்.   

தொழில் தெரிந்தும் செய்யாமல் இருந்தான் பிராம்மணன். 


'ஒரு வகுப்பினர் செய்யும் தொழிலை மற்ற வகுப்பினர் தெரிந்தாலும் செய்ய கூடாது' என்று க்ஷத்ரியன் கட்டுப்பாடு விதித்தான். இதன்மூலம் அவரவர்களுக்கு வேலை நிச்சயமாக கிடைத்தது. 

நொண்டியும் வாழ முடிந்தது.



1000 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்ரம்பிப்பில் கோவில்கள் கொள்ளையடிக்க பட, அதை காத்த அரசர்கள் கொல்லப்பட்டு, கோவிலில் வேதம் ஓதி கொண்டிருந்த பிராம்மணனும் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர்.

மற்ற சிற்ப சாஸ்திரம், ஆயுர்வேதம் தெரிந்த பாரத மக்கள், அரசன் இல்லாமல் ஏழையாகினர். இவர்களால் பிராமணனை காக்க முடியவில்லை. 

யாராலும் காப்பாற்ற முடியாதவனாக ஆகி ஏழையானான் பிராம்மணன். இருந்தும் தெய்வத்தை பற்றிய வேத மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருந்தான்.

மற்றவர்கள் 1947 வரை அவர்கள் கற்ற தொழிலை செய்து வந்தனர். 


1800ல் கிறிஸ்தவன் 'பிராம்மணன் பொய் சொல்ல பயப்படுவான்' என்று தெரிந்து, அவன் நிர்வாகத்துக்கு வேலை செய்ய இழுத்தான்.. 

மற்றவர்களை வேலைக்கு சேர்க்கவில்லையா?


போலீஸாகவும், அவர்கள் வீட்டில் பணியாட்களாகவும் அனைவரும் வேலை பார்த்தனர்.

வஉசியை ஜெயிலில் தள்ளியது கிறிஸ்தவன் தான் என்றாலும், அவனுக்கு கீழ் வேலை பார்த்த ஹிந்து போலீஸ் தானே அவரை ஜெயிலில் தள்ளினார்கள்.

பிராம்மணன் மட்டுமா வேலை செய்தான் அப்போது? சுதந்திர போராட்ட தியாகிகளை சிறைப்படுத்திய மற்ற இந்தியர்களும் வேலை தானே செய்தார்கள் !  

வீர பாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிட கிறித்தவன் சொன்ன போது, தலை அசைத்து செய்தவன் பாரத மண்ணில் பிறந்தவன் தானே.

உதவி செய்ய ஆள் இன்றி இருந்த பிராம்மணன் மெதுவாக வேலை செய்து தன்னை காத்து கொள்ள ஆரம்பித்தான்.

பாரதியார், வாஞ்சி நாதன் போன்றவர்கள் இறந்தாலும் பரவாயில்லை என்று இருந்தனர். 


1947ல் விடுதலை கிடைத்த போது, அனைவருக்கும் வேலை கிடைக்க சட்டம் இயற்றப்பட்டது. 

ராஜாஜி, நேரு போன்ற ப்ராம்மணர்கள் எதிர்க்கவில்லை. 


'குல தொழிலை விடாதீர்கள்' என்று சொன்னார் ராஜாஜி. எதிர்த்தார்கள் தமிழகத்தில் இருந்த பெரியார் ராமசாமி. 

'சரி' என்று விட்டு விட்டார்.





'பிராம்மணன் மட்டும் வேலைக்கு செல்கிறான்' என்று சொல்லி, 'நமக்கு வேலை கொடுக்கவில்லை' என்று நாட்டை விட்டு போன கிறிஸ்தவனை எதிர்க்காமல், வேலை செய்த பிராம்மணன் மேல் பழியை போட்டனர் இந்த முட்டாளாகள். 


குல தொழிலை விட்டு விட்டு, 'அனைவருக்கும் கல்வி' என்றதும், அனைவரும் தன் தொழிலை விட்டனர். 

பிராம்மணன் தான் காத்து வந்த வேதத்தையும் விட்டான். 


சிற்ப சாஸ்திரம், ஆயுர் வேதம், வான சாஸ்திரம் என்று கற்று இருந்த மற்ற ஜாதியினர் தங்கள் தொழிலை விட்டனர். 

64 கலைகளும் அழியும் படி குல தொழிலை விட்டனர்.

அனைவரும் 1லிருந்து 12 வரை ஒரே கல்வியை படித்தனர். 

வேலை இல்லா திண்டாட்டம் அதிகமானது. 


சுயதொழில் செய்து கஞ்சியானாலும் குடும்பத்தோடு குடித்து நிம்மதியாக வாழ்ந்த மக்கள், கிராமங்களை விட்டனர். குடும்பத்தை விட்டனர். சொந்தங்களை விட்டனர். விவசாயத்தை விட்டனர். கோவிலை விட்டனர். 

வேலை தேடினர். 



தானாக வாழ தெரிந்த, சுய காலில் நிற்க தெரிந்த பாரத மக்கள், 'வேலை யார் கொடுப்பார்கள்?' என்று பார்க்கும் நிலையை அடைந்தனர். 

சொந்த ஊரை காலி செய்தனர். நாடோடி வாழ்க்கையை ஏற்றனர். அடையாளம் இழந்தனர். 


நாடோடி வாழ்க்கையையும் வெறுத்தனர். குடும்பம் இல்லாமல் அலைந்தனர். 

பலருக்கு திருமணம் ஆகாமல் தனித்து நின்றனர்.

திருமணம் ஆனாலும் தன் காலில் நிற்க தொழில் திறன் இல்லாததால், எதிர்கால பயம் கொண்டனர்.

'எப்பொழுது வேலை போகுமோ?' என்று பயந்தனர்.


கிடைத்த வேலையில் 'எப்படியாவது கோடி சம்பாதிக்க வழி என்ன?' என்று தேடினர். 

தவறான வேலை என்றாலும் துணிந்து பணத்துக்காக செய்தனர்.

வேலை கொடுப்பவன் வருமானத்தை கண்டு பொறாமை கொண்டனர். விசுவாசம் இன்றி உழைத்தனர். 


10 கோடி மக்களில் 4 கோடி மக்கள் சுயதொழில் செய்த காலம் போய், 

10 கோடி பேரில் 5 பேர் தொழில் செய்கின்றனர் இப்போது.


தொழிலார்கள் இவர்களிடம் விசுவாசம் இன்றி பணத்துக்காக உழைக்க, தொழில் செய்பவனும் கசக்கி பிழிய ஆரம்பித்தனர்.

மனைவி ஒரு ஊரில் வேலை. கணவன் ஒரு ஊரில் வேலை. மனைவி பகலில் வேலை. கணவன் இரவில் வேலை. 

தாய் தகப்பன் அனாதை ஆஸ்ரமத்தில். 

பிள்ளை தருதலை. பாசம் தொலைத்த குடும்பங்கள். கொஞ்சம் அசந்தால் விவாகரத்து. 

நோய், முதுமை.. மரணம்.


தமிழன் டெல்லியில் வேலை செய்ய ஆரம்பித்தான். அவன் பிள்ளை அங்கேயே வளர்ந்தான். அவன் பிள்ளை தமிழனா? டெல்லி காரனா? யார் சொல்வார்கள்.

அடையாளம் இழந்தனர்.


இன்று இன்னும் போய், வெளிநாட்டில் வசிக்கிறான். அவன் பிள்ளை 'இந்தியாவே வர மாட்டேன்' என்கிறான். இப்போது யார் தமிழன்?.


'குல தொழில் செய்தால் அவமானம். நான் என்ன செருப்பு தொழில் செய்ய வேண்டுமா? 12ம் கிளாஸ் படிப்பேன். இன்ஜினியர் ஆகுவேன்" 

என்று கிளம்பி, ஒரு முட்டாள் மூத்திரசட்டி சொல்லை நம்பி, அனைவரும் 12ம் வகுப்பு வரை வேறு தொழில் செய்யாமல் படிக்க ஆரம்பித்தனர். 

"செருப்பு தெய்ப்பது என் குல தொழிலா?" என்று மறுத்தான்.. 


அவன் தொழிலை மற்றவன் கற்று கொண்டு பெரிய செருப்பு தொழிற்சாலை அமைத்து, அவனையே தன் கடையில் வேலைகாரனாக அமர்த்தி விட்டான்.


"கோவிலில் பூஜை செய்து மற்றவன் போடும் காசை தட்டில் நான் ஏன் வாங்க வேண்டும்? நானும் இந்த பிரிட்டிஷ் கல்விமுறையை படிக்கிறேன். கூகுல் தலைவன் ஆகிறேன். விமான நிறுவனத்துக்கு தலைவன் ஆகிறேன்" என்று ப்ராம்மணனும் கோவிலை விட்டான். அக்ரஹாரத்தை விட்டான்.


அன்னார்ந்து பார்க்கும் கோவிலை கட்டிய சிற்பி குடும்பத்தில் பிறந்தவன் இன்று 120 கோடி மக்களோடு சண்டை போட்டு வேலை தேடுகிறான்.

சீனாகாரன் சிற்பங்கள் செய்து, அவனுக்கே விற்கிறான். 

இந்த முட்டாள்தனத்துக்கு வித்து பெரியார் ராமசாமி.. 


ராஜாஜி என்ற பிராம்மணன் செய்த ஒரே தவறு, முட்டாளுக்கு மரியாதை கொடுத்து, அவரவர் குல தொழிலை சுதந்திர இந்தியாவில் செய்ய  வழி வகுக்காததே..  


சுதந்திர இந்தியாவில் அன்று இருந்த மக்கள் தங்கள் குல தொழிலை செய்து கொண்டே பிரிட்டிஷ் கல்விமுறையை படித்து இருந்தால், இன்று ஒவ்வொரு பாரத மக்களும் அவரவர் வீட்டில் இருந்து கொண்டே கோடிக்கணக்கான சுயவியாபாரம் செய்து, தன்னிறைவு பெற்ற தேசமாக ஆக்கி இருப்பார்கள்.

இன்றோ, 

மோட்டார் ரிப்பேர் செய்ய ஆள் இல்லை, விவசாயம் செய்ய ஆள் இல்லை. மாடு வளர்த்து பால் கறக்க ஆள் இல்லை. 120 கோடி மக்கள் இருந்தும், வேலை தெரிந்தவர்கள், வேலை செய்பவர்கள் இல்லை.


தமிழ் படிக்க ஆளில்லை. 

'தமில்' என்று பேசுபவன் தமிழனுக்கு தலைவன் ஆகிறான்.


திருக்குறள், திருவாசகம், கம்பராமாயணம் கொடுத்து 'அர்த்தம் சொல்' என்றால், 'கோனார் உரை கொடு' என்கிறான் இன்றைய தமிழன்.


தமிழ் உணர்வு மட்டும் கொண்டு இருக்கிறான். தமிழ் மொழி தெரியாதவனாக இருக்கிறான். 


தனக்கே திருக்குறளுக்கு கோனார் உரை வேண்டும் என்கிற நிலையில் இருந்து கொண்டு, பார்லிமென்டில் "தமிழ் படியுங்கள்" என்கிறான்.


பிராமணன் 'கிறித்தவ காலத்தில் வேலை செய்தான்' என்று பொறாமைப்பட்டு, அன்று அடிமை பாரதத்தில் சுய காலில் நின்ற சகோதரன், மூத்திர சட்டியினால் இழுக்கப்பட்டு, அருமையாக செய்து கொண்டிருந்த சுய தொழிலை விட்டு, வேலைக்கு நாயாக அலைகிறான். 


பெற்றவர்களை விட்டு விட்டு பணத்திற்காக எதுவும் செய்ய துணிந்து, வழிபட்ட தெய்வதையே விட்டு விட்டு மதம் மாறி கிடக்கிறான். 


தொழில் செய்ய தெரியாமல், லட்சக்கணக்கில் செலவு செய்து படித்தும், ஒன்றுமே புரியாமல், 'அரசாங்கமே வேலை கொடு' என்று நிற்கும் அளவிற்கு கொண்டு வந்து விட்டார்கள்.


'படிப்பு வரவில்லையா? சினிமாவில் சேர்வோம். ஆடி பாடி பணம் சம்பாதிப்போம்' என்று ஆணும் பெண்ணும் கோமாளி ஆகி விட்டனர். பெண்கள் கலைத்துறையில் மானத்தை இழக்கின்றனர்.


படிப்பே வராமல் சினிமாவுக்குள் நுழைந்து பணம் சம்பாதித்தவன், "நீ இந்த 120 கோடி மக்களோடு படி. படித்து விட்டு வேலைக்கு நில்" என்று அறிவுரை கூறுகிறான்.

அதுவும் வரவில்லையா...  நெறியாளர், சமூக நீதியாளர் என்று சோறு கிடைக்க என்ன செய்தாலும் சரி என்று ஆகி விட்டனர்.


"சுய தொழில் செய்யுங்கள்" என்று சொல்லி இருந்தால், பிராம்மணன் கோவிலோடு இருந்து இருப்பான். 

இன்று பிராம்மணன் உலகம் முழுவதும் வேலை செய்கிறான். அரசியலுக்கும் வருகிறான்.  

அவன் இழந்த வேத மந்திரங்களை அவனே மீட்டு கொண்டு விட்டான். 

ஆனால், 

மூத்திர சட்டியின் பேச்சை கேட்டு உலகம் வியக்கும் சிற்ப சாஸ்திரம் கற்ற சகோதரன், வான சாஸ்திரம், தனுர் வேதம் கற்ற சகோதரன், இந்த 64 கலைகள் கொண்ட கல்வியை தொலைத்து விட்டு, 'வேதம் சொல்லிக்கொடுத்தாயா?' என்று உளறுகிறான்.


'புருஷ சூக்தம்' என்ற வேதம் படித்தால் 'பரமாத்மா யார்?' என்று தான் தெரியும். 

சிற்ப சாஸ்திரம் கற்றால் பணமும் கிடைக்கும்.


பணம் கொடுக்கும், சுயதொழில் சொல்லிக்கொடுத்த வேதத்தை  விட்டு விட்டு, புருஷ சூக்தம் என்ற வேதம் படிக்கும் சில பிராம்மணன் மீது இன்று பொறாமைப்படுகிறான். இவன் என்ன பைத்தியமா?


தெய்வத்தை பற்றி சொல்லும் வேத மந்திரங்களை சொல்லி வரும் பிராம்மணன் சம்பாதிக்க இன்றும் இயலாது. 

அவனை இன்றும் மற்றவர்கள் தான் பணம் கொடுத்து காக்கின்றனர்.


தொழில் சொல்லித்தரும் வேதத்தை விட்டு, தான் படித்தது என்ன? பிராம்மணன் வைத்து இருப்பது என்ன? என்றே தெரியாமல், 'வேதம் எங்களுக்கு கிடையாதா?' என்று உளறுகிறான்.


அற்புதமான கோவில் சிற்பங்களை வடிக்க சொன்ன வேத மந்திரங்களை தொலைத்ததற்கு வருத்தப்படாமல், சம்பந்தமே இல்லாமல் பிராம்மணன் மீது பொறாமைப்படுகிறான்.


சுய தொழில் செய்து வந்த பாரத மக்களை, வேலைக்கு அலைய விட்ட மூத்திர சட்டியை ஓரமாக வைத்து விட்டால், சுய தொழில் பெருகும். 


தானாக மக்கள் குடும்பத்தோடு நிம்மதியாக வாழ ஆரம்பிப்பார்கள்.

Saturday 19 March 2022

நாதீகனுக்கும் இடம் கொடுக்கும் ஒரே மதம், நம்முடைய ஹிந்து மதம். ஏன் சனாதன தர்மம் நாதீகனுக்கு இடம் கொடுக்கிறது? எந்த வேத வாக்கியம் நாதீகனுக்கும் இடம் கொடுக்கிறது? நாதீகனை என்னவென்று அழைக்கிறது? தெரிந்து கொள்வோம்...

நாதீகனுக்கும் இடம் கொடுக்கும் ஒரே மதம், நம்முடைய 'ஹிந்து மதம்' ஒன்றே.

நாதீகனுக்கும் இடம் கொடுக்கும் ஒரே தர்மம், நம்முடைய 'சனாதன தர்மம்' ஒன்றே

கீழே உள்ள வேத வாக்கியம் நாதீகனுக்கும் இடம் தருகிறது என்று பார்க்கிறோம்.

அஸ்தி ப்ரம்மேதி சேத் வேதா

சந்தமேநம் ததோ விதூரிதி |

அஸத் ப்ரம்மேதி வேதசேத்

அஸன்நேவ ஸ: பவதி ||

- தைத்தரீய உபநிஷத்

"'கடவுள் இருக்கிறார்' என்று சொல்பவனுக்கு, தான் இருப்பதை அந்த பரமாத்மாவே உணர செய்கிறார்

'கடவுள் இருக்கிறார்' என்று எவன் சொல்கிறானோ, அவனே சத்தியமாக வாழ்கிறான் (ஸத்துக்கள்)

'கடவுள் இல்லை' என்று சொல்பவனுக்கு, அந்த பரமாத்மா (ஸ:) தான் இருந்தும், இல்லாதது போலவே (அஸன்நேவ) உணர செய்கிறார்.

'கடவுள் இல்லை' என்று எவன் சொல்கிறானோ, அவன் வாழ்ந்தும் நடைபிணம் போல, பொய்யாக வாழ்கிறான் (அஸத்துக்கள்)"

இது வேத வாக்கியம்.


'ஸத்துக்கள்' என்று ஆஸ்தீகனை வேதம் சொல்கிறது.

'அஸத்துக்கள்' என்று நாஸ்தீகனை வேதம் சொல்கிறது.


மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிற மதங்களில், நாஸ்தீகனுக்கு இடமில்லை.

'கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை! கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி'

என்று சொல்பவனை மட்டுமல்ல, அப்படிப்பட்டவரகளை ஆதரிப்பவரகளை கூட பிற மதங்கள் ஏற்று கொள்வதில்லை. 

'கடவுள் உண்டு' என்று  உண்மையாக நம்பும் பிற மதங்களை சேர்ந்தவர்கள், இப்படி பொதுவாக "கடவுள் இல்லை. கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி" என்று கடவுளை சொல்லி எழுதி பேசுபவர்களை துளியும் ஏற்பதில்லை. கடவுள் நம்பிக்கை நிஜமாக உள்ளவர்களால் ஏற்கமுடியாது.





நம்முடைய சனாதன தர்மமாகிய வேதம் மட்டுமே, நாஸ்தீகனுக்கும் வேத வாக்கியத்தாலேயே இப்படியெல்லாம் 'பேசவும்வாழவும்' இடம் தருகிறது.


ஆனால் "ஐயோ! அஸத்துக்களாக வாழ்கிறார்களே!" என்று குறைபட்டு கொண்டே, பல குழந்தை பெற்ற தாய், ஒரு முட்டாள் பிள்ளையையும் பெற்று வருத்தப்படுவது போல, நாதீகனுக்கும் இடம் கொடுக்கிறது.


ஸத்துக்கள், அஸத்துக்கள் (ஆஸ்தீகன்-நாஸ்தீகன்) இருவருமே தான் செய்யும் நல்ல காரியங்கள், கெட்ட காரியங்களுக்கு ஏற்ப பலனை அடைகிறார்கள்.

ஆனால், 

வேதத்தால் 'ஸத்துக்கள்' என்று அழைக்கப்படும் ஆஸ்தீகர்கள், தெய்வ பிரார்த்தனைகள் மூலம், தன் பாப கர்மாக்களின் பலனை அழித்து கொள்கிறார்கள்

தெய்வ பிரார்த்தனைகள் மூலம், தன் புண்ணிய கர்மாக்களின் பலனையும் அழித்து கொண்டு 'மோக்ஷம்' அடைந்து விடுகிறார்கள். 


வேதத்தால் 'அஸத்துக்கள்' என்று அழைக்கப்படும் நாஸ்தீகர்கள், தான் சமைத்த உணவை தான் மட்டுமே உண்டு, மறுநாள் மிச்சமாகி போன உணவையும் தான் மட்டுமே உண்டு வாழ்பவன் போல, 

தான் செய்த செயலுக்கான பலனை, சில நாட்கள் நல்ல காலமாகவும், சில நாட்கள் கெட்ட காலமாகவும் அனுபவித்து கொண்டே வாழ்ந்து, கடைசியில் இறந்து, பிறகு மீண்டும் பிறந்து, இறந்து கொண்டே இருக்கிறார்கள். 

ஒரு ஜென்மத்தில், உலக கஷ்டங்களை உணர்ந்து, தனக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்று உணர்ந்து, ஒரு நாள் "கடவுள் இருக்கிறார்" (அஸ்தி) என்று இந்த ஆத்மாக்களும் உணரும் போது, அவர்களும் படிப்படியாக முன்னேறி, ஒருநாள் விஷ்ணு பாதத்தை அடைந்து விடுகிறார்கள்.


ஊரெல்லாம் அலைந்து திரிந்து சம்பாதித்து வளர்த்த தகப்பனை, 

சில பிள்ளைகள் கடைசி வரை கூடவே வைத்து கொண்டு காக்கிறார்கள்.

சில பிள்ளைகள் தகப்பனை அலட்சியம் செய்து விடுகிறார்கள்.





"பிள்ளை அலட்சியம் செய்கிறான்" என்பதால் தகப்பனும், தன் பிள்ளையிடம் நெருங்காமல் இருக்கிறார்.

இருந்தும் இல்லாதவர் போலவே இருக்கிறார். (அஸன்நேவ ஸ: பவதி)

தாயோ, 'தன் பர்தா (கணவன்) இப்படி அமைதியாக இருக்கிறாரே! இப்படி என் பிள்ளையும் தகப்பனை அலட்சியம் செய்கிறானே!' என்று தவிக்கிறாள்.

'எப்பொழுதாவது, தன் அசட்டு பிள்ளையும் தகப்பனின் அருமையை உணர்ந்து கொள்வான்' என்ற நம்பிக்கையிலேயே வாழ்கிறாள்.


அது போல,

வேதம் என்ற தாய், "விஷ்ணு" என்ற தகப்பனை நிராகரிக்கும் தன் நாஸ்தீக பிள்ளையை நிராகரிக்க முடியாமல், 'ஒருநாள் தன் தகப்பனின் பெருமையை உணர்ந்து கொண்டு இவனும் வருவான். விஷ்ணுவை ஒருநாள் அடைந்து விடுவான்' என்ற நம்பிக்கையில், ஒரு தாயை போல இருந்து கொண்டு, நாதீகனுக்கும் இடம் தருகிறாள்.