Followers

Search Here...

Tuesday 27 December 2022

மனு ஸ்மிருதி அறிவோம் - பாகம் 12

மனு ஸ்மிருதி அறிவோம் - பாகம் 12

चातुर्वर्ण्यस्य कृत्स्नो अयमुक्तो धर्मस्त्वया अनघः ।

कर्मणां फलनिर्वृत्तिं शंस नस्तत्त्वतः पराम् ॥

மனு ஸ்மிருதி

நான்கு வர்ணத்தில் இருப்பவர்களின் விதிமுறையை சொன்னீர்கள். இனி எங்களுக்கு செயல்களால் (கர்மா/action) விளையும் பலனை (கர்மவினை/reaction) பற்றி விவரிக்க வேண்டும்.

स तानुवाच धर्मात्मा महर्षीन् मानवो भृगुः ।

अस्य सर्वस्य शृणुत कर्मयोगस्य निर्णयम् ॥

மனு ஸ்மிருதி

மனுவின் புத்ரனான ப்ருகு ரிஷிகளை பார்த்து "அனைத்து கர்மாவுக்கும் ஏற்படும் பலனை விவரிக்கிறேன்" என்றார்.


शुभ: अशुभ फलं कर्म मनो-वाग्-देह सम्भवम् ।

कर्मजा गतयो नॄणाम् उत्तम अधम मध्यमः ॥

நாம் மனதினாலும், சொல்லினாலும், உடலாலும் செய்யும் செயலை பொறுத்து, நல்லதும் கெட்டதும் நடக்கிறது. இந்த செயல்களை பொறுத்தே, ஒருவனுக்கு உத்தம வாழ்க்கையும், கீழ்த்தரமான வாழ்க்கையும், நடுத்தரமான வாழ்க்கையும் அமைகிறது.


तस्यैह त्रिविधस्यापि त्र्यधिष्ठानस्य देहिनः ।

दश-लक्षण युक्तस्य मनो विद्यात् प्रवर्तकम् ॥

மனம், வாக்கு, தேகம் இந்த மூன்றினாலும் 10 வகையான வினைகள் உண்டாகின்றன. மனமே எந்த செயலுக்கும் மூல காரணமாக இருக்கிறது.


परद्रव्येष्वभिध्यानं मनसा अनिष्ट चिन्तनम् ।

वितथा अभिनिवेशश्च त्रिविधं कर्म मानसम् ॥

பிறர் பொருளை பார்த்து ஆசைப்படும் போது, மனம் 3 விதமான பாவ காரியங்களை செய்ய தூண்டும்.

पारुष्यम् अनृतं चैव 

पैशुन्यं चापि सर्वशः ।

असम् बद्ध-प्रलापश्च 

वाङ्मयं स्याच् चतुर्विधम् ॥

- மனு ஸ்மிருதி

கடுமையாக பேசுதல், பொய் பேசுதல், பழி சுமத்துதல், ஊர்வம்பு பேசுதல். இந்த 4ம் வாக்கினால் செய்யப்படும் பாவ செயல்கள்.


अदत्तानामुपा आदानं हिंसा चैव अविधानतः ।

परदारोपसेवा च शारीरं त्रिविधं स्मृतम् ॥

பிறர் சொத்தை பறித்து அனுபவித்தல், ஹிம்சை செய்தல், பிறர் மனைவியை அடைதல், இந்த 3ம் உடலால் செய்யப்படும் பாவ செயல்கள்.


मानसं मनसेवा अयमुपभुङ्क्ते शुभाशुभम् ।

वाचा वाचा कृतं कर्म कायेनेव च कायिकम् ॥

மனத்தால் செய்த நல்ல செயல்களின் பலனையும், கெட்ட செயல்களின் பலனையும், மனத்தினால் அனுபவித்தாக வேண்டும்.

பேசியதால் செய்த நல்ல செயல்களின் பலனையும், கெட்ட செயல்களின் பலனையும், வாக்கிலேயே அனுபவித்தாக வேண்டும்.

शरीरजैः कर्मदोषैः

याति स्थावरतां नरः ।

वाचिकैः पक्षिमृगतां 

मानसैः अन्त्य जातिताम् ॥

- மனு ஸ்மிருதி

மனிதன் உடலால் செய்யும் பாவ செயல்களுக்கு, மரம், செடியாக அடுத்த பிறவி எடுப்பான்.

பேசியதால் செய்த பாவ செயல்களுக்கு, மனிதன் அடுத்த பிறவியில் மிருகமாகவும், பறவையாகவும் பிறவி எடுப்பான்.

மனதால் செய்த பாவ செயல்களுக்கு, மனிதன் அடுத்த பிறவியில் மிகவும் இகழ தக்க ஜாதிகளில் பிறப்பான்.

वाग्दण्डोऽथ मनोदण्डः कायदण्डस्तथैव च ।

यस्यैते निहिता बुद्धौ त्रिदण्डीति स उच्यते ॥

வாக்கையும், மனதையும், தேகத்தையும் கட்டுப்படுத்தி வைத்து இருப்பவனே த்ரிதண்டி (சந்நியாசி) என்று பெருமையை அடைகிறான்.


त्रिदण्डमेतन्निक्षिप्य सर्वभूतेषु मानवः ।

कामक्रोधौ तु संयम्य ततः सिद्धिं नियच्छति ॥

இப்படி த்ரிதண்டியாக சொல், மனம், தேகம் மூன்றையும் கட்டுப்படுத்தி, எந்த உயிரிடத்திலும் வெறுப்பு காட்டாமல், ஆசையும், கோபமும் தன்னை நெருங்க விடாமல் பார்த்து கொள்பவன், "ஸித்தி" அடைகிறான்.


य: अस्य आत्मनः कारयिता तं क्षेत्रज्ञं प्रचक्षते ।

यः करोति तु कर्माणि स भूतात्म: उच्यते बुधैः ॥

உள்ளிருக்கும் ஆத்மா, உடலை (க்ஷேத்ரம்) காரியங்கள் செய்ய வைப்பதால், அதற்கு "க்ஷேத்ரஞன்" என்று பெயர். இந்த உடல் 5 பூதங்களால் ஆனது. காரியங்கள் செய்வதால், உடலுக்கு "பூதாத்மா" என்றும் பெயர்.


जीवसञ्ज्ञो अन्तरात्मा अन्यः सहजः सर्वदेहिनाम् ।

येन वेदयते सर्वं सुखं दुःखं च जन्मसु ॥

இந்த உடலுக்குள் வசித்து கொண்டிருக்கும் ஆத்மா அலாதியானது. பிறவியில் சுக துக்க அனுபவம் இந்த ஆத்மா இருப்பதாலேயே ஏற்படுகிறது.


तावुभौ भूतसम्पृक्तौ महान् क्षेत्रज्ञ एव च ।

उच्चावचेषु भूतेषु स्थितं तं व्याप्य तिष्ठतः ॥

பூதாத்மாவில் இருக்கும் க்ஷேத்ரஞனும் (soul),  பூதாத்மாவும் (nature/body), எங்கும் வியாபித்து, அனைத்துக்கும் அப்பாற்ப்பட்டு இருக்கும் பரமாத்மாவிடம் அடங்கி இருக்கிறது.



असङ्ख्या मूर्तयः तस्य 

निष्पतन्ति शरीरतः ।

उच्चावचानि भूतानि 

सततं चेष्टयन्ति याः ॥

- மனு ஸ்மிருதி

பரமாத்மாவிடமிருந்து கணக்கற்ற ஆத்மாக்கள் (க்ஷேத்ரஞர்கள்), அக்னியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி போல நூற்றுக்கணக்காக வெளிப்பட்டு, பல சரீரங்களில் புகுந்து கொண்டு, இயங்குகிறது.


पञ्चभ्य एव मात्राभ्यः प्रेत्य दुष्कृतिनां नृणाम् ।

शरीरं यातनार्थीय मन्यदुत्पद्यते ध्रुवम् ॥

- மனு ஸ்மிருதி

பஞ்ச பூதங்களால் ஆன மனிதன் பாவ காரியங்கள் செய்தால், மனித உடலை விட்ட (மரணித்த) பிறகு, நரகங்களில் கொடுக்கப்படும் தண்டனையை தாங்கும் படியான  சரீரமான "யாதனா" என்ற சரீரத்தை பெறுகிறான்.


तेनानुभूय ता यामीः शरीरेणैह यातनाः ।

तास्वेव भूतमात्रासु प्रलीयन्ते विभागशः ॥

- மனு ஸ்மிருதி

தான் செய்த பாவ காரியங்களுக்கு தண்டனையை அனுபவித்த ஜீவன், தண்டிக்கப்பட்ட பிறகு, யாதனா சரீரத்தை பஞ்ச பூதங்களில் இழந்து விடுவான்.


सो अनुभूय असुखोदर्कान् दोषान् विषयसङ्गजान् ।

व्यपेत कल्मषो अभ्येति तावेवोभौ महौ जसौ ॥

- மனு ஸ்மிருதி

விஷய சுகங்களில் ஈடுபட்டதற்காக தண்டனை பெற்று, பாபம் நீங்கிய பிறகு, மீண்டும் மஹத் (பஞ்ச பூதங்கள்) மற்றும் பரமாத்மாவுடன் சேர்ந்து பயணிக்கிறான்.


तौ धर्मं पश्यतस्तस्य पापं चातन्द्रितौ सह ।

याभ्यां प्राप्नोति सम्पृक्तः प्रेत्येह च सुखासुखम् ॥

- மனு ஸ்மிருதி

எங்கும் இருக்கும் மஹத்தும், பரமாத்மாவும், இந்த ஜீவன் இந்த உடலை கொண்டு செய்யும் தர்மம், அதர்மம், அதனால் இந்த ஜீவன் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை சாட்சியாக பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.


यद्याचरति धर्मं स प्रायशोऽधर्ममल्पशः ।

तैरेव चावृतो भूतैः स्वर्गे सुखमुपाश्नुते ॥

- மனு ஸ்மிருதி

பஞ்ச பூதங்களால் ஆன மனித உடலை கொண்டு ஜீவன் தர்மத்தை அதிகமாகவும், அதர்மத்தை கொஞ்சமாகவும் செய்து இருந்தால், ஸ்வர்க லோகத்தை அடைந்து சுகத்தை அனுபவிப்பான்.

यदि तु प्रायशोऽधर्मं सेवते धर्ममल्पशः ।

तैर्भूतैः स परित्यक्तो यामीः प्राप्नोति यातनाः ॥

- மனு ஸ்மிருதி

பஞ்ச பூதங்களால் ஆன மனித உடலை கொண்டு ஜீவன் அதர்மத்தை அதிகமாகவும், தர்மத்தை கொஞ்சமாகவும் செய்து இருந்தால், யாதனா சரீரத்தை பெற்று நரக லோகத்தை அடைந்து தண்டனைகளை அனுபவிப்பான்.


यामीस्ता यातनाः प्राप्य स जीवो वीतकल्मषः ।

तान्येव पञ्च भूतानि पुनरप्येति भागशः ॥

- மனு ஸ்மிருதி

இப்படி ஜீவன் நரகத்தில் தண்டனை அனுபவித்து, பாபங்கள் கழிந்த பிறகு, மீண்டும் பஞ்ச பூதங்களோடு சேருகிறான்.


एता दृष्ट्वाऽस्य जीवस्य गतीः स्वेनैव चेतसा ।

धर्मतोऽधर्मतश्चैव धर्मे दध्यात् सदा मनः ॥

- மனு ஸ்மிருதி

'தர்ம காரியங்கள் மூலம் சுகங்களையும், அதர்ம காரியங்களால் துக்கத்தையும் ஜீவன் பெறுகிறான்' என்ற கதியை உணர்ந்து, மனதை எப்பொழுதும் தர்ம காரியங்கள் செய்வதிலேயே ஈடுபடுத்த வேண்டும்.


सत्त्वं रजस्तमश्चैव त्रीन् विद्यादात्मनो गुणान् ।

यैर्व्याप्यैमान् स्थितो भावान् महान् सर्वानशेषतः ॥

- மனு ஸ்மிருதி

இனி, ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற 3 குணங்களின் தன்மைகளை சொல்கிறேன். இந்த மூன்றும் அனைத்து உயிரிடத்திலும் வியாபித்து இருக்கிறது.


यो यदेषां गुणो देहे साकल्येनातिरिच्यते ।

स तदा तद्गुणप्रायं तं करोति शरीरिणम् ॥

- மனு ஸ்மிருதி

ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற 3 குணங்களும் அனைவரிடத்திலும் இருந்தாலும், யாருக்கு எந்த குணம் அதிகம் நிரம்பி உள்ளதோ, அவனை அந்த குணம் கொண்டவனாக பார்க்க வேண்டும்.


सत्त्वं ज्ञानं तमो अज्ञानं 

रागद्वेषौ रजः स्मृतम् ।

एतद् व्याप्तिमदेतेषां 

सर्वभूताश्रितं वपुः ॥

- மனு ஸ்மிருதி

ஸத்வ குணம் அதிகமாக இருக்கும் போது, ஞானம் (மெய் அறிவு) உண்டாகும். தமஸ் என்ற குணம் அதிகமாக இருக்கும் போது, அஞ்ஞானம் உண்டாகும். ரஜோ குணம் அதிகமாகும் போது, விருப்பு வெறுப்பு உண்டாகும். இந்த மூன்றுமே அனைத்து உயிரிடத்திலும் பரவி இருக்கிறது.

तत्र यत् प्रीतिसंयुक्तं किं चिदात्मनि लक्षयेत् ।

प्रशान्तमिव शुद्धाभं सत्त्वं तदुपधारयेत् ॥

- மனு ஸ்மிருதி

பரமாத்மாவை நினைத்து  கொண்டும்,  ப்ரஸன்னமாகவும், தூய்மையாகவும் இருக்கும் ஜீவன், ஸத்வ குணத்தில் இருக்கிறான் என்று அறியலாம்.


यत् तु दुःख समायुक्तम् 

अप्रीतिकरमात्मनः ।

तद् रजो प्रतीपं विद्यात् 

सततं हारि देहिनाम् ॥

- மனு ஸ்மிருதி

எப்பொழுதும் துக்கப்பட்டு கொண்டும், ப்ரியமில்லாமலும், விஷய சுகங்களிலேயே ஈடுபடும்  ஜீவன், ரஜோ குணத்தில் இருக்கிறான் என்று அறியலாம்.


यत् तु स्यान् मोहसं युक्तम् 

अव्यक्तं विषय आत्मकम् ।

अप्रतर्क्यम् अविज्ञेयं 

तमस्तदुपधारयेत् ॥

- மனு ஸ்மிருதி

மோகம் கொண்டும், நல்லது கெட்டது அறியும் விவேகமில்லாமலும், புலன்களை பற்றிய அறியாமையோடும் இருக்கும்  ஜீவன், தமோ குணத்தில் இருக்கிறான் என்று அறியலாம்.


त्रयाणामपि चैतेषां गुणानां यः फलोदयः ।

अग्र्यो मध्यो जघन्यश्च तं प्रवक्ष्याम्यशेषतः ॥

- மனு ஸ்மிருதி

இந்த மூன்று குணங்களும் (ஸத்வ, ரஜோ, தமஸ்) உயர்ந்த பலனையும், மத்யமான பலனையும், கீழான பலனையும் தருகிறது. அதை பற்றி சொல்கிறேன்.


वेदाभ्यासस्तपो ज्ञानं शौचमिन्द्रियनिग्रहः ।

धर्मक्रियाऽत्मचिन्ता च सात्त्विकं गुणलक्षणम् ॥

- மனு ஸ்மிருதி

வேத மந்திரங்கள் ஜபம் செய்வதில் ஈடுபாடும், புலன்களை அடக்கி தவம் செய்வதில் (விரதங்களில்) ஈடுபாடும், ஆத்மா நான் என்ற அறிவோடும், உள்ளும் புறமும் தூய்மையோடும், புலனடக்கத்தோடும், தர்மமான செயல்கள் செய்து கொண்டும், ஆத்மாவை பற்றி சிந்தித்து கொண்டும் இருக்கும் ஜீவன் ஸத்வ குணத்தில் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ளலாம்.

आरम्भरुचिता अधैर्यम् 

असत्कार्य परिग्रहः ।

विषयोपसेवा चाजस्रं 

राजसं गुण-लक्षणम् ॥

- மனு ஸ்மிருதி

பலனை எதிர்பார்த்தே காரியங்கள் செய்து கொண்டும், நினைத்தது நடக்காத பட்சத்தில் அதைரியம் அடைந்தும், செய்ய கூடாத செயல்கள் செய்தும், விஷய சுகங்களில் நாட்டம் கொண்டும், இருக்கும் ஜீவன், ரஜோ குணத்தில் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ளலாம்.

लोभः स्वप्नोऽधृतिः क्रौर्यं 

नास्तिक्यं भिन्नवृत्तिता ।

याचिष्णुता प्रमादश्च 

तामसं गुणलक्षणम् ॥

- மனு ஸ்மிருதி

பேராசை கொண்டும், அதிகம் தூங்கி கொண்டும், கோழையாகவும், குறை சொல்லி கொண்டும், தெய்வத்தை பழித்து கொண்டும், ஒழுக்கமான வாழ்க்கையில் நாட்டமில்லாமலும், பிறர் பொருளை வாங்கி கொள்வதிலும், போதையோடு இருப்பதிலும் நாட்டம் கொண்டும் இருக்கும் ஜீவன், தமோ குணத்தில் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ளலாம்.


यत् कर्म कृत्वा कुर्वंश्च करिष्यंश्चैव लज्जति ।

तज् ज्ञेयं विदुषा सर्वं तामसं गुणलक्षणम्

- மனு ஸ்மிருதி

ஒரு காரியத்தை செய்த பிறகும், செய்யும் போதும், செய்ய போகும் போதும், மனம் வெட்கப்படுமானால், அந்த காரியங்கள் தமோ குணத்தின் லக்ஷணம் என்று அறிய வேண்டும்.

येनास्मिन् कर्मणा लोके ख्यातिमिच्छति पुष्कलाम् ।

न च शोचत्यसम्पत्तौ तद् विज्ञेयं तु राजसम् ॥

- மனு ஸ்மிருதி

பரலோகத்தில் சௌக்கியம் கொடுக்காத காரியமாக இருந்தாலும், இந்த உலகில் பெரும் புகழை பெறுவதற்காக செய்யப்படும் காரியங்கள், ரஜோ குணத்தின் லக்ஷணம் என்று அறிய வேண்டும்.


यत् सर्वेणेच्छति ज्ञातुं यन्न लज्जति चाचरन् ।

येन तुष्यति चात्माऽस्य तत् सत्त्वगुणलक्षणम् ॥

- மனு ஸ்மிருதி

ஒரு காரியத்தை செய்த பிறகும், செய்யும் போதும், செய்ய போகும் போதும், மனம் சுகப்படுமானால், அந்த காரியங்கள் ஸத்வ குணத்தின் லக்ஷணம் என்று அறிய வேண்டும்.


तमसो लक्षणं कामो रजसस्त्वर्थ उच्यते ।

सत्त्वस्य लक्षणं धर्मः श्रैष्ठ्यमेषां यथोत्तरम् ॥

- மனு ஸ்மிருதி

தமோ குணத்தில், காமமே முக்கியமான லக்ஷணமாக இருக்கும். ரஜோ குணத்தில், பொருளே முக்கியமான லக்ஷணமாக இருக்கும். ஸத்வ குணத்தில், அறமே (தர்மமே) முக்கியமான லக்ஷணமாக இருக்கும். தமோ குணத்தை விட ரஜோ குணம் சிறந்தது. ரஜோ குணத்தை விட ஸத்வ குணம் சிறந்தது.


येन यस्तु गुणेनैषां संसरान् प्रतिपद्यते ।

तान् समासेन वक्ष्यामि सर्वस्यास्य यथाक्रमम् ॥

- மனு ஸ்மிருதி

இந்த குணங்களால் ஜீவன் எத்தகைய நிலைகளை அடைகிறான் என்பதை பற்றி முழுமையாக வரிசைப்படி கூறுகிறேன். கேளுங்கள்.


देवत्वं सात्त्विका यान्ति मनुष्यत्वं च राजसाः ।

तिर्यक्त्वं तामसा नित्यमित्येषा त्रिविधा गतिः ॥

- மனு ஸ்மிருதி

ஸத்வ குணத்திலேயே (அறத்தில் விருப்பம்) இருப்பவன், தேவனாகிறான். ரஜோ குணத்திலேயே (பொருளில் விருப்பம்) இருப்பவன் மனித பிறவியே மீண்டும் எடுக்கிறான். தமோ குணத்திலேயே (காமத்தில் விருப்பம்) இருப்பவன் பறவை மிருகம் போன்ற கீழ் பிறவிகளை எடுக்கிறான்.


त्रिविधा त्रिविधैषा तु विज्ञेया गौणिकी गतिः ।

अधमा मध्यमाग्र्या च कर्मविद्याविशेषतः

- மனு ஸ்மிருதி

3 குணங்களால் (ஸத்வ, ரஜோ, தமோ)  கிடைக்கும் இந்த 3 பிறவிகளும் (தேவ, மனித, மிருக), அந்தந்த ஜீவன் செய்த காரியத்தை பொறுத்து, மேல் நிலை, நடுநிலை, கீழ் நிலை என்ற விதிப்படி பிறவிகளை பெறுகிறார்கள். 


स्थावराः कृमिकीटाश्च 

मत्स्याः सर्पाः सकच्छपाः ।

पशवश्च मृगाश्चैव 

जघन्या तामसी गतिः ॥

- மனு ஸ்மிருதி

தமோ குணத்தின் அளவை பொறுத்து, கீழ் நிலையான அசையாத செடிகளாகவும், மரங்களாகவும், புழு, பூச்சி, மீன், பாம்பு, ஆமை, வளர்ப்பு மிருகங்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்


हस्तिनश्च तुरङ्गाश्च शूद्रा म्लेच्छाश्च गर्हिताः ।

सिंहा व्याघ्रा वराहाश्च मध्यमा तामसी गतिः ॥

- மனு ஸ்மிருதி

தமோ குணத்தின் அளவை பொறுத்து, நடு நிலையான யானை, குதிரை, சிங்கம், புலி  போன்ற பிறவிகள் ஏற்படும். ஒருவன் சூத்திரனாக (employee), மிலேச்சனாக (வேத சாஸ்திரம் அறியாதவனாக) பிறப்பதும் முன் ஜென்மத்தில் அந்த ஜீவனுக்கு இருந்த தமோ குணமே காரணம்.  சூத்திரனாக (employee), மிலேச்சனாக பிறப்பதும் நடு நிலையான பிறவிகளே.

चारणाश्च सुपर्णाश्च पुरुषाश्चैव दाम्भिकाः ।

रक्षांसि च पिशाचाश्च तामसीषूत्तमा गतिः

- மனு ஸ்மிருதி

தமோ குணத்தின் அளவை பொறுத்து, மேல் நிலையான சாரணர்கள், கருடன் போன்ற பறவைகள், கர்வம் பிடித்த மனிதர்கள், ராக்ஷஸர்கள்  போன்ற பிறவிகள் ஏற்படும்


झल्ला मल्ला नटाश्चैव पुरुषाः शस्त्रवृत्तयः ।

द्यूतपानप्रसक्ताश्च जघन्या राजसी गतिः ॥ 

- மனு ஸ்மிருதி

ரஜோ குணத்தின் அளவை பொறுத்து, கீழ் நிலையான இரும்பை வைத்து கொண்டு சண்டை செய்பவர்கள், மல் யுத்தம் செய்பவர்கள்,   நடிகர்கள், ஆயுதம் செய்பவர்கள், சூதாடிகள், குடிகாரர்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்


राजानः क्षत्रियाश्चैव राज्ञां चैव पुरोहिताः ।

वादयुद्धप्रधानाश्च मध्यमा राजसी गतिः ॥

- மனு ஸ்மிருதி

ரஜோ குணத்தின் அளவை பொறுத்து, நடு நிலையான அரசர்கள், க்ஷத்ரியனாக பிறந்தவர்கள், அரச புரோகிதர்கள், வாதம்-விவாதம் நடத்துபவர்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்


गन्धर्वा गुह्यका यक्षा विबुधानुचराश्च ये ।

तथैवाप्सरसः सर्वा राजसीषूत्तमा गतिः ॥

- மனு ஸ்மிருதி

ரஜோ குணத்தின் அளவை பொறுத்து, மேல் நிலையான கந்தர்வர்கள், குஹ்யர்கள், யக்ஷர்கள், விபுதர்கள், அப்சரஸ்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்


तापसा यतयो विप्रा ये च वैमानिका गणाः ।

नक्षत्राणि च दैत्याश्च प्रथमा सात्त्विकी गतिः ॥

- மனு ஸ்மிருதி

ஸத்வ குணத்தின் அளவை பொறுத்து, கீழ் நிலையான தபஸ்விகள், சந்யாசிகள், வேத விற்பன்னர்கள், விமானத்தில் பறக்கும் கல்விமான்கள், தைத்யர்கள், நக்ஷத்திரங்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்


यज्वान ऋषयो देवा वेदा ज्योतींषि वत्सराः ।

पितरश्चैव साध्याश्च द्वितीया सात्त्विकी गतिः ॥

- மனு ஸ்மிருதி

ஸத்வ குணத்தின் அளவை பொறுத்து, நடு நிலையான யக்ஞம் செய்பவர்கள், ரிஷிகள், தேவர்கள், வேதரூபமான தெய்வங்கள், கிரக தெய்வங்கள், பித்ரு தெய்வங்கள், சாத்யர்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்


ब्रह्मा विश्वसृजो धर्मो महानव्यक्तमेव च ।

उत्तमां सात्त्विकीमेतां गतिमाहुर्मनीषिणः ॥

- மனு ஸ்மிருதி

ஸத்வ குணத்தின் அளவை பொறுத்து, மேல் நிலையான ப்ரம்ம தேவன், பிரஜாபதி, தர்ம தேவன், மஹத் (ப்ரக்ருதி), அவ்யக்தம் போன்ற பிறவிகள் ஏற்படும்

एष सर्वः समुद्दिष्टस्त्रिप्रकारस्य कर्मणः ।

त्रिविधस्त्रिविधः कृत्स्नः संसारः सार्वभौतिकः ॥

- மனு ஸ்மிருதி

இவ்வாறு மூன்றினால் (வாக்கு, செயல், மனம்) செய்யப்படும் காரியங்களால் மூன்று விதமான குணங்களால், பல விதமான பிறவிகள் எவ்வாறு ஏற்படுகிறது என்று கூறினேன். இதில் சில பிறவிகளை கூறினேன். மற்ற பிறவிகளை இதை அனுசரித்து ஊகித்து கொள்ள வேண்டும்.


इन्द्रियाणां प्रसङ्गेन धर्मस्यासेवनेन च ।

पापान् संयान्ति संसारानविद्वांसो नराधमाः ॥

- மனு ஸ்மிருதி

எந்த மனிதன் புலன்களை அடக்காமலும், அந்த புலன்கள் வழியே சென்று விஷய சுகங்களிலேயே வாழ்ந்து, தர்ம வழியிலும் நடக்காமலும், செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளாமலும் வாழ்கிறானோ, அவன் அடுத்த பிறவியில் கீழ்த்தரமான நிலையை பெறுவான்.


यां यां योनिं तु जीवोऽयं येन येनैह कर्मणा ।

क्रमशो याति लोकेऽस्मिंस्तत् तत् सर्वं निबोधत ॥

- மனு ஸ்மிருதி

ஜீவன் எந்த எந்த கர்ம வினைகளை செய்து எந்தெந்த உலகத்தை அடைகிறான். எந்தெந்த பிறவியை அடைகிறான் என்பதை முழுவதும் கூறுகிறேன். கேளுங்கள்.


बहून् वर्षगणान् घोरान्नरकान् प्राप्य तत्क्षयात् ।

संसारान् प्रतिपद्यन्ते महापातकिनस्त्विमान् ॥

- மனு ஸ்மிருதி

மிக கொடிய பாபம் செய்தவர்கள், பல்லாயிரம் வருடங்கள் பயங்கரமான நரகங்களில் வேதனையை அனுபவிப்பார்கள். அதற்கு பிறகு மிஞ்சிய பாபங்களை எந்த பிறவிகள் எடுத்து அனுபவிப்பார்கள் என்று கூறுகிறேன்.


श्वसूकरखरोष्ट्राणां गोऽजाविमृगपक्षिणाम् ।

चण्डालपुक्कसानां च ब्रह्महा योनिमृच्छति ॥

- மனு ஸ்மிருதி

ப்ராம்மணனை கொன்றவன் கொடிய நரகத்தை அனுபவித்த பிறகு, நாய், பன்றி, கழுதை ஒட்டகம், ஆடு நாடாகவும், பறவையாகவும்  பிறப்பார்கள். மனிதனாக நாயை தின்று வாழும் சண்டாளனாகவும், புக்கஸர்களாகவும் தாழ்ந்த பிறவிகளை எடுப்பார்கள்.

कृमिकीट पतङ्गानां 

विड्भुजां चैव पक्षिणाम् ।

हिंस्राणां चैव सत्त्वानां 

सुरापो ब्राह्मणो व्रजेत् ॥

- மனு ஸ்மிருதி

மதுபானம் (சுராபானம்) செய்த பிராம்மணன், கொடிய நரகத்தை அனுபவித்த பிறகு, புழு பூச்சியாகவும், அணில், மலம் உண்ணும் ஜந்துவாகவும், புலி முதலிய கொடிய மிருகமாகவும் பிறவிகளை எடுப்பார்கள்.


लूताऽहिसरटानां च तिरश्चां चाम्बुचारिणाम् ।

हिंस्राणां च पिशाचानां स्तेनो विप्रः सहस्रशः ॥

- மனு ஸ்மிருதி

தங்கத்தை திருடிய விப்ரன் , சிலந்தியாகவும், பாம்பு, ஓணான், நீரில் வாழும் உயிரினமாகவும், கொடிய மிருகமாகவும், பிசாசாகவும் பிறவிகளை எடுப்பார்கள்.


तृणगुल्मलतानां च क्रव्यादां दंष्ट्रिणामपि ।

क्रूरकर्मकृतां चैव शतशो गुरुतल्पगः ॥

- மனு ஸ்மிருதி

தன் குருவின் பத்னியை அடைய நினைத்தவன், புல்லாகவும், புதராகவும், கொடியாகவும், மாமிசம் உண்ணும் மிருகங்களாகவும் பிறவிகளை பலமுறை அடைவான்.


हिंस्रा भवन्ति क्रव्यादाः कृमयोऽमेध्यभक्षिणः ।

परस्परादिनः स्तेनाः प्रेत्यान्त्यस्त्रीनिषेविणः ॥

- மனு ஸ்மிருதி

விலங்குகளை கொல்வதையே தங்கள் வேலையாக கொண்டிருப்பவர்கள், மிருகங்களை உண்ணும் விலங்காகவும், மலத்தை உண்ணும் புழுக்களாகவும், திருடர்களாகவும், தம் இனத்தையே உண்ணும் பிராணிகளாகவும் பிறப்பார்கள். சண்டாள பெண்ணுடன் உறவு கொண்டவர்கள் ப்ரேத சரீரத்தோடு அலைவார்கள்.


संयोगं पतितैर्गत्वा परस्यैव च योषितम् ।

अपहृत्य च विप्रस्वं भवति ब्रह्मराक्षसः ॥

- மனு ஸ்மிருதி

நாடு கடத்தப்பட்டவனோடு உறவு கொண்டவனும், பிறர் மனைவியை அடைந்தவனும், ப்ராம்மணனின் பொருளை திருடியவனும், அடுத்த பிறவியில் ப்ரம்ம-ராக்ஷஸனாகவும் அலைவார்கள்.


मणिमुक्ताप्रवालानि हृत्वा लोभेन मानवः ।

विविधाणि च रत्नानि जायते हेमकर्तृषु ॥

- மனு ஸ்மிருதி

ரத்தினங்கள், முத்துக்கள், பவழங்கள் பல வகையான உயர்ந்த ரத்தின கற்கள் முதலியவனற்றை திருடியவன், அடுத்த பிறவியில் பொற்கொல்லனாக பிறப்பான்.


धान्यं हृत्वा भवत्याखुः कांस्यं हंसो जलं प्लवः ।

मधु दंशः पयः काको रसं श्वा नकुलो घृतम् ॥

- மனு ஸ்மிருதி

தானியங்களை திருடியவன் எலியாக பிறப்பான். வெண்கலத்தை திருடியவன் அன்னமாக பிறப்பான். தண்ணீர் திருடியவன் தவளையாக பிறப்பான். பால் திருடியவன் காக்கையாக பிறப்பான். தேன் திருடியவன் ஈயாக பிறப்பான். ரசமான (சுவையான) பொருட்களை திருடியவன் நாயாக பிறப்பான்.


मांसं गृध्रो वपां मद्गुस्तैलं तैलपकः खगः ।

चीरीवाकस्तु लवणं बलाका शकुनिर्दधि ॥

- மனு ஸ்மிருதி

மாமிசத்தை திருடியவன் கழுகாக பிறப்பான். மாமிச கொழுப்பை (வபை) திருடியவன் நீர்காக்கையாக பிறப்பான். எண்ணெய் திருடியவன் வௌவாலாக பிறப்பான். உப்பை திருடியவன் சுவர்க்கோழியாக பிறப்பான். தயிரை திருடியவன் ராஜாளியாக பிறப்பான்.


कौशेयं तित्तिरिर्हृत्वा क्षौमं हृत्वा तु दर्दुरः ।

कार्पासतान्तवं क्रौञ्चो गोधा गां वाग्गुदो गुडम् ॥

- மனு ஸ்மிருதி

பட்டு வஸ்திரங்களை திருடியவன் தித்திரி பறவையாக பிறப்பான். கைத்தறியை திருடியவனும் தவளையாக பிறப்பான். பசுவை திருடியவன் உடும்பாக பிறப்பான். வெல்லப்பாகை திருடியவன் வாக்குத பறவையாக பிறப்பான்.


छुच्छुन्दरिः शुभान् गन्धान् पत्रशाकं तु बर्हिणः ।

श्वावित् कृतान्नं विविधमकृतान्नं तु शल्यकः ॥

- மனு ஸ்மிருதி

வாசனை திரவியங்களை திருடியவன் மூஞ்சூராக பிறப்பான். கீரை காய் கறிகளை திருடியவன் மயிலாக பிறப்பான். சமைத்த அன்னத்தை திருடி தின்றவன் முள்ளம் பன்றியாக பிறப்பான். சமைக்காத அரிசி பருப்பை திருடியவன் சல்ய மிருகமாக (முள்ளம்பன்றி) பிறப்பான்.


बको भवति हृत्वाऽग्निं गृहकारी ह्युपस्करम् ।

रक्तानि हृत्वा वासांसि जायते जीवजीवकः ॥

- மனு ஸ்மிருதி

நெருப்பை திருடியவன் நாரையாக பிறப்பான். முறம், உரல் போன்ற  வீட்டுக்கு தேவையான பொருளை திருடியவன் குளவியாக பிறப்பான். சிவப்பு நிறமுள்ள துணிகளை திருடியவன் சகோர பறவையாக பிறப்பான்.


वृको मृगैभं व्याघ्रोऽश्वं फलमूलं तु मर्कटः ।

स्त्रीं ऋक्षः स्तोकको वारि यानान्युष्ट्रः पशूनजः ॥

- மனு ஸ்மிருதி

மானை திருடியவன் ஓநாயாக பிறப்பான். குதிரையை திருடியவன் புலியாக பிறப்பான். பழங்களையும் மூலிகைகளையும் திருடியவன் குரங்காக பிறப்பான். பெண்ணை திருடியவன் கரடியாக பிறப்பான். தண்ணீரை திருடியவன் சாதக பறவையாக பிறப்பான். வாகனங்களை திருடியவன் ஒட்டகமாக பிறப்பான். ஆடு மாடுகளை திருடியவன் வெள்ளாடாக பிறப்பான்.


यद् वा तद् वा परद्रव्यमपहृत्य बलान्नरः ।

अवश्यं याति तिर्यक्त्वं जग्ध्वा चैवाहुतं हविः ॥

- மனு ஸ்மிருதி

பிறருடைய பொருளை திருடியவனும், ஹோமம் செய்யப்பட்ட ஹவிஸை திருடியவன், அடுத்த பிறவியில் மிருகமாக பிறப்பான்.


स्त्रियोऽप्येतेन कल्पेन हृत्वा दोषमवाप्नुयुः ।

एतेषामेव जन्तूनां भार्यात्वमुपयान्ति ताः ॥

- மனு ஸ்மிருதி

இந்த பாவங்களை புரிந்த பெண்களும், அடுத்த பிறவியில் மிருகமாக பிறந்த இவர்களுக்கு மனைவியாக பிறப்பார்கள்.


स्वेभ्यः स्वेभ्यस्तु कर्मभ्यश्च्युता वर्णा ह्यनापदि ।

पापान् संसृत्य संसारान् 

प्रेष्यतां यान्ति शत्रुषु ॥

- மனு ஸ்மிருதி

நான்கு வர்ணத்தில் இருப்பவர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை செய்யாமல் வாழ்ந்தால், அடுத்த பிறவியில் தன்னை ஒழிக்க நினைக்கும் எதிரியை எதிர்க்க முடியாமல், அவன் சொல்படி நடக்கும் படியான பிறவியை அடைவார்கள்.


वान्ताश्युल्कामुखः प्रेतो 

विप्रो धर्मात् स्वकाच्च्युतः ।

अमेध्यकुणपाशी च क्षत्रियः कटपूतनः ॥

- மனு ஸ்மிருதி

பிராம்மண வர்ணத்தில் (MLA, MP, Advocate, Judiciary) இருந்தும்,  தன் தர்மத்தை விட்டால், அடுத்த பிறவியில் கொள்ளிவாய் பிசாசாக பிரேத சரீரத்தோடு இருந்து, மனிதர்களின் வாந்தியை சாப்பிடும் ஜென்மத்தை அடைவான். க்ஷத்ரிய வர்ணத்தில் (army, police, defence) இருந்தும், தன் தர்மத்தை விட்டவன், மலத்தையும், பிணத்தையும் தின்னும் கடபூதமாக அலைவான்.


मैत्राक्षज्योतिकः प्रेतो वैश्यो भवति पूयभुक् ।

चैलाशकश्च भवति शूद्रो धर्मात् स्वकाच्च्युतः ॥

- மனு ஸ்மிருதி

வைஸ்ய வர்ணத்தில் (employer, business, self-employed) இருந்தும், தன் தர்மத்தை விட்டவன், புண்ணில் வழிகின்ற சீழை உண்ணும் மைத்ராஷ ஜோதி என்னும் பிரேத ஜென்மாவை எடுப்பான்.

சூத்திர வர்ணத்தில் (employee) இருந்தும், தன் தர்மத்தை விட்டவன், பேன்களை தின்னும் சைலாஷகம் என்னும் பிரேத ஜென்மாவை எடுப்பான்.


यथा यथा निषेवन्ते विषयान् विषयात्मकाः ।

तथा तथा कुशलता तेषां तेषूपजायते ॥

- மனு ஸ்மிருதி

உலக விஷயங்களில் மூழ்கி எத்தனைக்கு எத்தனை சுகங்களை அனுபவிக்கிறானோ, அத்தனைக்கு அத்தனை அதிலேயே மூழ்கி கிடப்பான்.


तेऽभ्यासात् कर्मणां तेषां पापानामल्पबुद्धयः ।

सम्प्राप्नुवन्ति दुःखानि तासु तास्विह योनिषु ॥

- மனு ஸ்மிருதி

தனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை மீறி,  பாவச் செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்யும் மனிதர்கள், அடுத்த பிறவியில், அதன் தன்மையை பொறுத்து, கீழான, மிகவும் கீழான பிறவிகளை பெற்று பலவிதமான துன்பங்களை அனுபவிப்பார்கள்


तामिस्रादिषु चोग्रेषु नरकेषु विवर्तनम् ।

असिपत्रवनादीनि बन्धनछेदनानि च ॥

- மனு ஸ்மிருதி

தனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை மீறி,  பாவச் செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்யும் மனிதர்கள், அடுத்த பிறவியில், தாமிஸ்ரம் போன்ற கொடிய நரகங்களுக்கு சென்று நரக வேதனை அனுபவிப்பார்கள். அசிபத்ர வனம் (இலைகளே முள் போல இருக்கும் ஈச்ச மரம் போன்றவை இருக்கும் காடு) கொண்ட நரகங்களை அடைந்து, கட்டப்பட்டும், வெட்டப்பட்டும், பல வேதனைகளை அனுபவிப்பார்கள்.


विविधाश्चैव सम्पीडाः काकोलूकैश्च भक्षणम् ।

करम्भवालुकातापान् कुम्भीपाकांश्च दारुणान् ॥

- மனு ஸ்மிருதி

தனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை மீறி,  பாவச் செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்யும் மனிதர்கள், அடுத்த பிறவியில், காக்கை கோட்டான் போன்றவற்றால் கொத்தி தின்னப்பட்டு, எரியும் மணலில் புரட்டப்பட்டு, பெரிய பாத்திரத்தில் வேக வைத்து கொடிய நரகத்தில் சித்ரவதை செய்யப்படுவார்கள்.


सम्भवांश्च वियोनीषु दुःखप्रायासु नित्यशः ।

शीतातपाभिघातांश्च विविधानि भयानि च ॥

- மனு ஸ்மிருதி

தனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை மீறி,  பாவச் செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்யும் மனிதர்கள், அடுத்த பிறவியில், கீழ்தரமான வாழ்க்கையில் பிறந்தும், பெரும் துன்பங்களை அனுபவித்து கொண்டும், வெப்பம் குளிரினால் துன்பப்பட்டும், பல்வேறு வகையான பயங்களோடு வாழும்படியாக பிறப்பான்.


असकृद् गर्भवासेषु वासं जन्म च दारुणम् ।

बन्धनानि च काष्ठानि परप्रेष्यत्वमेव च ॥

- மனு ஸ்மிருதி

தன் தர்மத்தை மீறி பாபம் செய்பவர்கள்,  மீண்டும் மீண்டும் கர்ப வாசம் செய்து பிறந்து, உலக விஷயங்களில் பந்தப்பட்டு, துன்பங்களை அனுபவித்து, பிறருக்கு அடிமையாகவே வாழ்வார்கள்.


बन्धु-प्रिय वियोगांश्च 

संवासं चैव दुर्जनैः ।

द्रव्यार्जनं च नाशं च 

मित्र अमित्रस्य चार्जनम् ॥

- மனு ஸ்மிருதி

தன் தர்மத்தை மீறி பாபம் செய்பவர்கள், அடுத்த பிறவியில் உறவினர்கள், பிரியப்பட்டவர்கள் பிரிவதை கண்டும், தீயவர்களோடு சேர்ந்து வாழும் நிலையையும், பணத்தை சேர்ப்பதில்- பெரும் துன்பத்தை அனுபவித்தும், சேர்த்த செல்வம் செலவழிந்து போவதையும், நண்பர்கள் பகைவர்களாக ஆவது போன்ற துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.


जरां चैवाप्रतीकारां व्याधिभिश्चोपपीडनम् ।

क्लेशांश्च विविधांस्तांस्तान् मृत्युमेव च दुर्जयम् ॥

- மனு ஸ்மிருதி

தன் தர்மத்தை மீறி பாபம் செய்பவர்கள், முதுமையால் தளர்ந்தும், தீராத வியாதிகளால் பீடிக்கப்பட்டும், பலவகையான மன கலக்கத்துடன் வாழும்படியாகவும், தவிர்க்க முடியாத மரணத்தையும் அடைவார்கள்.


यादृशेन तु भावेन यद् यत् कर्म निषेवते ।

तादृशेन शरीरेण तत् तत् फलमुपाश्नुते ॥

- மனு ஸ்மிருதி

எந்த எண்ணத்தோடு எந்த காரியத்தை ஒருவன் செய்கிறானோ, அதற்கு ஏற்ற தேகத்தோடு பிறவிகள் எடுத்து அதற்கான பலனை அடைகிறான்.


एष सर्वः समुद्दिष्टः कर्मणां वः फलोदयः ।

नैःश्रेयसकरं कर्म विप्रस्येदं निबोधत ॥

- மனு ஸ்மிருதி

இது வரை, சாஸ்திரம் சொல்லும் முறையையும், அதற்கு விரோதமான காரியங்கள் செய்வதால் ஏற்படும் துன்பங்களை பற்றியும் சொன்னேன். இனி, விப்ரன் என்று சொல்லப்படும் வேதமோதுபவன் செய்ய வேண்டிய காரியங்களை பற்றி சொல்கிறேன்.


वेद अभ्यास: तपो ज्ञानम् इन्द्रियाणां च संयमः ।

अहिंसा गुरु-सेवा च निःश्रेयसकरं परम् ॥

- மனு ஸ்மிருதி

வேதத்தை கற்று கொள்ளுதல், அதை பற்றிய நினைவுடனேயே தபஸில் இருத்தல், ப்ரம்ம ஞானத்தை அடைதல், புலன் அடக்கதோடு இருத்தல், அஹிம்சையாகவே இருத்தல், குரு சேவை செய்தல். இந்த  6 காரியங்களை, வேதமோதும் விப்ரன் செய்தால் மோக்ஷத்தை அடைவான்.


सर्वेषाम् अपि चैतेषां शुभानाम् इह कर्मणाम् ।

किंचित् श्रेयस्करतरं कर्मोक्तं पुरुषं प्रति ॥

- மனு ஸ்மிருதி

இப்போது கூறிய இவற்றில் மிக மிக உயர்ந்தது என்று பார்ப்போம்.


सर्वेषाम् अपि चैतेषाम् आत्मज्ञानं परं स्मृतम् ।

तद् ह्यग्र्यं सर्वविद्यानां प्राप्यते ह्यमृतं ततः ॥

- மனு ஸ்மிருதி

இந்த அனைத்திலும் ப்ரம்ம ஞானத்தை அடைவதே மிக மிக உயர்ந்தது. பகவானை அறியும் ஞானமே ப்ரம்மஞானம். இந்த ப்ரம்ம ஞானமே மோக்ஷத்திற்கு முக்கிய காரணம்.


षण्णामेषां तु सर्वेषां कर्मणां प्रेत्य चैह च ।

श्रेयस्करतरं ज्ञेयं सर्वदा कर्म वैदिकम् ॥

- மனு ஸ்மிருதி

வேதத்தை கற்று கொள்ளுதல், அதை பற்றிய நினைவுடனேயே தபஸில் இருத்தல், ப்ரம்ம ஞானத்தை அடைதல், அஹிம்சையாகவே இருத்தல், குரு சேவை செய்தல். இந்த 6 காரியங்களை கடைபிடிக்கும் வைதீகன் (விப்ரன்) செய்யும் வைதீக காரியங்கள் இக லோகத்திலும் பலன் தரும், பரலோகத்திலும் பலன் தரும்.


वैदिके कर्मयोगे तु सर्वाण्येतान्यशेषतः ।

अन्तर्भवन्ति क्रमश तस्मिं तस्मिन् क्रियाविधौ ॥

- மனு ஸ்மிருதி

வைதீக கர்மாக்கள் விடாமல் செய்வதால், விப்ரனின் (வைதீக பிராம்மணன்) 6 கடமைகளும் பெரும்  பலன்களை அளித்திடும்.


सुखाभ्युदयिकं चैव नैःश्रेयसिकमेव च ।

प्रवृत्तं च निवृत्तं च द्विविधं कर्म वैदिकम् ॥

- மனு ஸ்மிருதி

வைதீக கர்மாக்கள் ப்ரவ்ருத்தி (இக உலக, சொர்க்கம் முதலிய) பயன்களை தரும். நிவ்ருத்தி (மோக்ஷம்) பயன்களையும் தரும்.


इह चामुत्र वा काम्यं प्रवृत्तं कर्म कीर्त्यते ।

निष्कामं ज्ञातपूर्वं तु निवृत्तमुपदिश्यते ॥

- மனு ஸ்மிருதி

இந்த உலகத்தில் சுகமாக இருப்பதற்காகவும், மேல் உலக சுகங்களை அனுபவிப்பதற்காகவும் செய்யப்படும் காரியங்கள் "ப்ரவ்ருத்தி" வைதீக கர்மா என்று சொல்கிறோம்.  எந்த பலனையும் எதிர்பார்க்காமல், இறந்த பிறகும் வேறு பலனை எதிர்பார்க்காமல் செய்யப்படும்  காரியங்கள் "நிவ்ருத்தி" வைதீக கர்மா என்று சொல்கிறோம்.


प्रवृत्तं कर्म संसेव्यं देवानामेति साम्यताम् ।

निवृत्तं सेवमानस्तु भूतान्यत्येति पञ्च वै ॥

- மனு ஸ்மிருதி

ப்ரவ்ருத்தி மார்க்க வைதீக கர்மாக்கள் செய்வதன் மூலம், தேவனாகவும், தேவனை போல சில காலங்கள் சொர்க்க லோகங்களில் வாசம் செய்யும் பலன்களை கூட அடையலாம்.

நிவ்ருத்தி மார்க்க வைதீக கர்மாக்கள் செய்வதன் மூலம், பஞ்சபூதங்களும் விலகி, மோக்ஷத்தை அடையலாம்.


सर्वभूतेषु चात्मानं सर्वभूतानि चात्मनि ।

समं पश्यन्नात्मयाजी स्वाराज्यमधिगच्छति ॥

- மனு ஸ்மிருதி

சர்வ சரீரங்களிலும் ஆத்மா உள்ளது. ஒவ்வொரு சரீரங்களில் இருக்கும் இந்த ஆத்மாக்கள் பரமாத்மாவிடம் உரைகிறது. அந்த பரமாத்மா அனைத்து ஆத்மாவுக்கும் உறைவிடமாக இருக்கிறார் என்ற சம புத்தியோடு பார்க்க தெரிந்தவன், மோக்ஷம் (வீடு) செல்கிறான்.


यथोक्तान्यपि कर्माणि परिहाय द्विजोत्तमः ।

आत्मज्ञाने शमे च स्याद् वेदाभ्यासे च यत्नवान् ॥

- மனு ஸ்மிருதி

த்விஜோத்மர்கள் (பிராம்மண, வைசிய, க்ஷத்ரிய) தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை விட்டாவது, ஆத்ம ஞானத்தை அடைய முயற்சிக்க வேண்டும். வேதத்தை ஓதுவதில் முயற்சியோடு இருக்க ஆத்ம ஞானம் ஏற்படும்.


एतद् हि जन्मसाफल्यं ब्राह्मणस्य विशेषतः ।

प्राप्यैतत् कृतकृत्यो हि द्विजो भवति नान्यथा ॥

- மனு ஸ்மிருதி

பிறவி எடுத்த பலனை அடைய, ப்ராம்மண வர்ணத்தில் இருப்பவனுக்கு வேதம் ஓதுவதே வழி. இதுவே மற்ற த்விஜர்களான க்ஷத்ரியர்களுக்கும், வைஸ்யர்களுக்கும்.


पितृदेव मनुष्याणां वेदश्चक्षुः सनातनम् ।

अशक्यं च अप्रमेयं च वेदशास्त्रमिति स्थितिः ॥

- மனு ஸ்ம்ருதி

பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் வேதம் கண் போன்று இருக்கிறது. அதாவது, மனிதன் வேதம் என்ற கண் கொண்டு தர்மம் எது? என்று அறிகிறான்.காலத்திற்கு அப்பாற்பட்ட வேதத்தின் சக்தி எல்லையற்றது. வேதத்தின் தன்மை 'இது தான்' என்று எவராலும் அளவிட முடியாது.


या वेदबाह्याः स्मृतयो याश्च काश्च कुदृष्टयः ।

सर्वास्ता निष्फलाः प्रेत्य तमोनिष्ठा हि ताः स्मृताः ॥

- மனு ஸ்ம்ருதி

வேதம் சொல்வதற்கு விரோதமாக இயற்றப்பட்ட நூல்களும், தவறான கோட்பாடுகளும், திறம்பட ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தாலும், அவை அனைத்தையும், அஞானம் என்ற இருளில் இயற்றப்பட்டது என்றே தள்ள வேண்டும்.


उत्पद्यन्ते च्यवन्ते च यान्यतोऽन्यानि कानि चित् ।

तान्यर्वाक्कालिकतया निष्फलान्यनृतानि च ॥

- மனு ஸ்ம்ருதி

வேதத்தை ஆதாரமாக கொள்ளாத எந்த நூலாக இருந்தாலும், வேகமாக தானே அழிந்து போகும். பொய்யை கற்பிக்கும் இதை கற்பதால் நற்பலன் எதுவும் ஏற்பட போவதில்லை.


चातुर्वर्ण्यं त्रयो लोकाश्चत्वारश्चाश्रमाः पृथक् ।

भूतं भव्यं भविष्यं च सर्वं वेदात् प्रसिध्यति ॥

நான்கு வர்ணத்தை பற்றியும், மூவுலகங்கள் பற்றியும், நான்கு ஆசிரமங்களை பற்றியும் வேதம் சொல்கிறது. நடந்ததும், நடப்பதும், நடக்க போவதை பற்றியும் வேதம் சொல்கிறது.


शब्दः स्पर्शश्च रूपं च रसो गन्धश्च पञ्चमः ।

वेदादेव प्रसूयन्ते प्रसूतिर्गुणकर्मतः ॥

- மனு ஸ்ம்ருதி

சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் (சுவை), கந்தம் (சுகந்தம்) என்னும் 5ம் வேதத்திலிருந்தே தோன்றின. இவைகளின் குணமும் செயல்களும் வேதத்திலேயே விளக்கப்பட்டுள்ளன.


बिभर्ति सर्वभूतानि वेदशास्त्रं सनातनम् ।

तस्मादेतत् परं मन्ये यत्जन्तोरस्य साधनम् ॥

- மனு ஸ்ம்ருதி

காலத்தை கடந்த வேத சாஸ்திரமே சகல பூதங்களையும் (நம்மை) தாங்குகிறது. மேலான நிலையை மனிதன் அடைய வேதமே சாதனமாகும்.


सेनापत्यं च राज्यं च दण्डनेतृत्वमेव च ।

सर्वलोकाधिपत्यं च वेदशास्त्रविदर्हति ॥

- மனு ஸ்ம்ருதி

வேத சாஸ்திரம் முழுவதும் எவன் அறிந்து கொள்கிறானோ, அவனால் பெரும் படையை சேனாபதியாக வழிநடத்த முடியும். ராஜ்யத்தை ஆளும் திறன் இருக்கும். இவ்வளவு ஏன், சகல உலகங்களையும் ஆட்சி செய்யும் தகுதியும் இருக்கும்.

यथा जातबलो वह्निः

दहत्यार्द्रानपि द्रुमान् ।

तथा दहति वेदज्ञः 

कर्मजं दोषम् आत्मनः ॥

- மனு ஸ்ம்ருதி

கொழுந்து விட்டு எரியும் அக்னியானது, எப்படி பசுமையான மரங்களையும் எரித்து விடுமோ, அப்படியே வேதம் முழுவதும் கற்று 'அறிந்தவன்' கர்மாவினால் ஏற்படும் தோஷங்களை கூட எரித்து அழித்து விடும் சக்தி கொண்டிருப்பான்.



वेदशास्त्र अर्थ तत्त्वज्ञो यत्र तत्रा आश्रमे वसन् ।

इहैव लोके तिष्ठन् स ब्रह्म भूयाय कल्पते ॥

- மனு ஸ்ம்ருதி

வேத சாஸ்திரத்தின் அர்த்தத்தை உணர்ந்த தத்வ ஞானி, பிரம்மச்சாரியாக இருந்தாலும், க்ருஹஸ்தனாகவே இருந்தாலும், வானப்ரஸ்தனாக இருந்தாலும், உலகில் வாழ்ந்தபடியே ப்ரம்ம ஞானத்தை பெற்று இருப்பான்.

अज्ञेभ्यो ग्रन्थिनः श्रेष्ठा 

ग्रन्थिभ्यो धारिणो वराः ।

धारिभ्यो ज्ञानिनः श्रेष्ठा 

ज्ञानिभ्यो व्यवसायिनः ॥

- மனு ஸ்ம்ருதி

ஏதோ சிறிது வேத மந்திரங்களை கற்றவர்களை விட, முழுமையாக வேதத்தை கற்றவர்கள் மேலானவர்கள். அதை நன்கு மனதில் பதிய வைத்து கொண்டவர்கள், முழுமையாக கற்றவர்களை விட மேலானவர்கள். அர்த்தம் புரிந்தவர்கள், நன்கு மனதில் பதிய வைத்தவர்களை விட மேலானவர்கள். வேதம் சொன்னபடி வாழ்க்கையில் நடந்து காட்டுபவர்கள், அர்த்தம் புரிந்தவர்களை விட மேலானவர்கள்.


तपो विद्या च विप्रस्य निःश्रेयसकरं परम् ।

तपसा किल्बिषं हन्ति विद्यया अमृतमश्नुते ॥

- மனு ஸ்ம்ருதி

தவமும், வேதமும் வேத ப்ராம்மணனுக்கு (விப்ரனுக்கு) மேன்மை கொடுக்கும். தவத்தால் விப்ரனின் பாபங்கள் தீரும். வேதத்தால் ப்ரம்மானந்ததை அனுபவிப்பான்.


प्रत्यक्षं चानुमानं च शास्त्रं च विविधाऽऽगमम् ।

त्रयं सुविदितं कार्यं धर्मशुद्धिमभीप्सता ॥

- மனு ஸ்ம்ருதி

3 சாதனங்கள் உள்ளது. கண்ணால் பார்த்தும், அனுமானத்தாலும், சாஸ்திரம் என்ன சொல்கிறது என்றும் ஆராய்வதால் ஒருவன் தன்னை தர்ம வழியில் மேம்படுத்தி கொள்ள முடியும்.


आर्षं धर्मोपदेशं च वेदशास्त्रा अविरोधिना ।

यस् तर्केणा अनु सन्धत्ते स धर्मं वेद नैतरः ॥

- மனு ஸ்ம்ருதி

வேதத்தையும், தர்ம உபதேச ஸ்ம்ருதிகளையும், வேதத்துக்கு விரோதமில்லாத சாஸ்திரத்தையும் (உபநிஷத்), தர்க்க சாஸ்திரத்தையும் நன்கு படிப்பதால், தர்மங்கள் என்னென்ன என்று ஒருவன் புரிந்து கொள்ள முடியும்.


नैःश्रेयसमिदं कर्म यथोदितमशेषतः ।

मानवस्यास्य शास्त्रस्य रहस्यमुपदिश्यते ॥

- மனு ஸ்ம்ருதி

இதுவரை மோக்ஷத்திற்கு சாதனமான விஷயங்கள் சொல்லப்பட்டது.  இனி, மனிதர்களுக்கு இக வாழ்வில் தேவையான தர்மத்தை சொல்கிறேன்.


अनाम्नातेषु धर्मेषु कथं स्यादिति चेद् भवेत् ।

यं शिष्टा ब्राह्मणा ब्रूयुः स धर्मः स्यादशङ्कितः ॥

- மனு ஸ்ம்ருதி

படித்த தர்ம சாஸ்திரத்தில் சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன். நான் கூறப்போகும் லக்ஷணங்கள் பொருந்திய ப்ராம்மணர்களிடம் சந்தேகத்தை கேட்க வேண்டும். அதுவே தர்மம் என்று ஏற்று கொள்ள வேண்டும்.


धर्मेणाधिगतो यैस्तु वेदः सपरिबृंहणः ।

ते शिष्टा ब्राह्मणा ज्ञेयाः श्रुतिप्रत्यक्षहेतवः ॥

- மனு ஸ்ம்ருதி

வேதங்கள், வேத-அங்கங்கள் (உபநிஷத்), தர்ம சாஸ்திரங்கள் (ஸ்ம்ருதிகள்), புராணங்கள், மீமாம்ஸை, தர்க்கம் அனைத்தும் படித்தவரும், அவற்றின் பொருளை முழுமையாக அறிந்தவருமாக இருக்கின்ற ப்ராம்மணரிடம், கேட்டு, அவர் சொல்படி நடக்க வேண்டும்.


दशावरा वा परिषद्यं धर्मं परिकल्पयेत् ।

त्र्य्ऽवरा वाऽपि वृत्तस्था तं धर्मं न विचालयेत् ॥

- மனு ஸ்ம்ருதி

ஆசாரத்தில் இருக்கும் 10 பேர் சேர்ந்திருக்கும் சபையில், அவர்கள் எதை தர்மம் என்று நிர்ணயித்து சொல்கிறார்களோ, அதையே தர்மமாக ஏற்கலாம்.

10 பேர் கிடைக்காத பட்சத்தில் 3 பேர் சேர்ந்து சொன்னாலும், அதையே தர்மமாக ஏற்கலாம்.


त्रैविद्यो हेतुकस्तर्की नैरुक्तो धर्मपाठकः ।

त्रयश्चाश्रमिणः पूर्वे परिषत् स्याद् दशावरा ॥

- மனு ஸ்ம்ருதி

வேதங்களில் 3 சாகை ஓதியவன், தர்க்கம் மீமாம்சை போன்ற சாஸ்திரங்களை  படித்தவன், தர்மசாஸ்திரங்கள் (ஸ்ம்ருதி) அறிந்தவன், பிரம்மச்சாரி, க்ருஹஸ்தன், சந்நியாசி போன்றவர்கள் சேர்ந்த 10 பேருக்கு குறையாமல் இருக்கும் சபைக்கு  "பரிஷத்" என்று பெயர்.


ऋग्वेदविद् यजुर्विद्च सामवेदविदेव च ।

त्र्य्ऽवरा परिषद्ज्ञेया धर्मसंशयनिर्णये ॥

- மனு ஸ்ம்ருதி

ரிக் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், யஜுர் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், ஸாம வேதத்தை நன்கு அறிந்தவர்கள் சேர்ந்து இருக்கும் சபைக்கும் "பரிஷத்" என்று பெயர். படித்த தர்ம சாஸ்திரத்தில் சந்தேகம் ஏற்பட்டால், இவர்களின் பரிக்ஷித்தில் கேட்டு தெளிவு பெறலாம்.


एकोऽपि वेदविद् धर्मं यं व्यवस्येद् द्विजोत्तमः ।

स विज्ञेयः परो धर्मो न अज्ञानामुदितोऽयुतैः ॥

- மனு ஸ்ம்ருதி

வேதத்தை நன்கு அறிந்த ஒருவன் மட்டுமே இருந்தாலும், அந்த த்விஜனிடமே தர்மம் எது என்று கேட்டு சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாம். வேதமோ, சாஸ்திரமோ அறியாத பல பேர் சேர்ந்து கொண்டு "இது தான் தர்மம்" என்று சொன்னாலும் ஏற்கக்கூடாது.


अव्रतानाममन्त्राणां जातिमात्रोपजीविनाम् ।

सहस्रशः समेतानां परिषत्त्वं न विद्यते ॥

- மனு ஸ்ம்ருதி

பிரம்மச்சர்யம், ஏகாதசி போன்ற விரதங்கள் இல்லாமல், ஜாதியை மட்டுமே வைத்து கொண்டு ஆயிரம் பேர் கூடி தர்ம எது என்று பேசினாலும், அதை "பரிஷத்" என்று ஏற்க முடியாது.


यं वदन्ति तमोभूता मूर्खा धर्ममतद्विदः ।

तत्पापं शतधा भूत्वा तद्वक्तॄननुगच्छति ॥

- மனு ஸ்ம்ருதி

தர்மம் தெரியாமல், வேத அர்த்தம் தெரியாமல், தமோ குணம் கொண்டவர்கள் "இது தான் தர்மம்" என்று சொன்னால், இதை கேட்டவன் கொண்டுள்ள பாபங்கள், 100 மடங்காக சொன்னவனை அடையும்.


एतद् वोऽभिहितं सर्वं निःश्रेयसकरं परम् ।

अस्मादप्रच्युतो विप्रः प्राप्नोति परमां गतिम् ॥

- மனு ஸ்ம்ருதி

இதுவரை சர்வ நிச்சயமாக நன்மையை தரும் விஷயங்களை சொன்னேன். நான் சொன்னபடி வாழ்க்கையை நடத்துபவர்கள் பரமபதத்தை நிச்சயம் அடைவார்கள்.


एवं स भगवान् देवो लोकानां हितकाम्यया ।

धर्मस्य परमं गुह्यं ममेदं सर्वमुक्तवान् ॥ 

- மனு ஸ்ம்ருதி

உலகத்தாருக்கு நன்மை கிடைக்கவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட இந்த பரம ரகசியமான தர்மத்தை. பகவான் மனு ரிஷிகளாகிய எங்களுக்கு சொன்னார்.


सर्वमात्मनि सम्पश्येत् सत् च असत् च समाहितः ।

सर्वं ह्यात्मनि सम्पश्यन्नाधर्मे कुरुते मनः ॥

- மனு ஸ்ம்ருதி

ஸத் (இருக்கிறார்), அஸத் (இல்லாதது போல இருக்கிறார்) இரண்டுமாகவும் பரமாத்மா இருக்கிறார். ஒவ்வொருவர் உடம்பிற்குள்ளும் இருக்கிறார் என்ற சத்யத்தை உணர்ந்து, தன் ஆத்ம ஸ்வரூபத்திலேயே இருப்பவன் மனது எப்பொழுதுமே அதர்மத்தில் செல்லாது.


आत्मैव देवताः सर्वाः सर्वमात्मन्यवस्थितम् ।

आत्मा हि जनयत्येषां कर्मयोगं शरीरिणाम् ॥ 

- மனு ஸ்ம்ருதி

சகல தேவர்களுக்குள்ளும் பரமாத்மாவே இருக்கிறார். உடலெடுத்த அனைவருக்கும் கர்ம பலனை தருவதும் அந்த பரமாத்மாவே 


खं संनिवेशयेत् खेषु चेष्टनस्पर्शनेऽनिलम् ।

पक्तिदृष्ट्योः परं तेजः स्नेहेऽपो गां च मूर्तिषु ॥ 

- மனு ஸ்ம்ருதி

வெளியிலுள்ள ஆகாசத்தை, தன் உடம்பில் இருக்கும் ஆகாசமாக  (இடைவெளி) தியானிக்க வேண்டும். வெளியிலுள்ள காற்றை (வாயு), தன் உடம்பில் இருக்கும் காற்றாக தியானிக்க வேண்டும். இவ்வாறே, வெளியில் உள்ள அக்னியை, தன் உடம்பில் இருக்கும் அக்னியாக தியானிக்க வேண்டும். இவ்வாறே, வெளியில் உள்ள நீரை, தன் உடம்பில் இருக்கும் நீரோடு தியானிக்க வேண்டும். இவ்வாறே, வெளியில் உள்ள மண்ணை (பூமி), தன் மாமிச உடம்பாகவே தியானிக்க வேண்டும்.


मनसीन्दुं दिशः श्रोत्रे क्रान्ते विष्णुं बले हरम् ।

वाच्यग्निं मित्रमुत्सर्गे प्रजने च प्रजापतिम् ॥

வெளியிலுள்ள சந்திரனை, தன் மனதாக தியானிக்க வேண்டும். வெளியிலுள்ள திசைகளை காதுகளாக தியானிக்க வேண்டும். மஹாவிஷ்ணுவை தன் கால்களாக தியானிக்க வேண்டும். சிவபெருமானை தன்னிடம் உள்ள பலமாக தியானிக்க வேண்டும். அக்னி பகவானே தன்னுடைய நாக்காக தியானிக்க வேண்டும். மித்ரன் என்ற தேவதையே ஆசன பாகமாக தியானிக்க வேண்டும். பிறப்புறுப்பை ப்ரஜாபதியாக தியானிக்க வேண்டும். 


प्रशासितारं सर्वेषामणीयांस मणोरपि ।

रुक्माभं स्वप्नधीगम्यं विद्यात् तं पुरुषं परम् ॥

- மனு ஸ்மிருதி

இப்படி தியானம் செய்து, அனைத்தையும் ஆள்பவரும், அணுவுக்கும் அணுவாக இருப்பவரும், தங்கம் போன்று ப்ரகாசமானவரும், ஞானகண்ணால் மட்டுமே காணக்கூடியவருமான பரமாத்மாவை மெய் அறிவை (ஞானம்) கொண்டு காண வேண்டும்.


एतमेके वदन्त्यग्निं मनुमन्ये प्रजापतिम् ।

इन्द्रमेके परे प्राणमपरे ब्रह्म शाश्वतम् ॥

- மனு ஸ்மிருதி

சிலர், பரமாத்மாவை அக்னி ஸ்வரூபமாக உபாசனை செய்கிறார்கள். சிலர் பரமாத்மாவை பிராஜாபதிகளாக உபாசனை செய்கிறார்கள். சிலர் தேவேந்திரனாக உபாசனை செய்கிறார்கள். சிலர் தன்னுள் இருக்கும் ப்ராணனாக உபாசனை செய்கிறார்கள். சிலர் ப்ரம்ம ஸ்வரூபமாக உபாசனை செய்கிறார்கள்.



एष सर्वाणि भूतानि पञ्चभिर्व्याप्य मूर्तिभिः ।

जन्मवृद्धिक्षयैर्नित्यं संसारयति चक्रवत् ॥

- மனு ஸ்மிருதி

பரமாத்மா, உயிர்களை பஞ்ச பூதங்களோடு சேர்த்து பிறப்பு, வளர்ச்சி, மறைவு என்று சக்கரம் போல சுழற்றி இயங்க வைக்கிறார். 


एवं यः सर्वभूतेषु पश्यत्यात्मानमात्मना ।

स सर्वसमतामेत्य ब्रह्माभ्येति परं पदम् ॥

- மனு ஸ்மிருதி

எவன் எல்லா பூதங்களுக்கும் உள்ளே இருக்கும் ஆத்மாவையே பார்க்கிறானோ, அவனே ப்ரம்ம ஞானத்தை அடைகிறான். அவன் மேலான பரப்ரம்மத்தின் பதமான பரமபதத்தை அடைகிறான்.


இவ்வாறு ஸ்வாயம்னு மனு தர்ம சாஸ்திரமான "மனு ஸ்ம்ருதி"யை ரிஷிகளுக்கு உபதேசம் செய்தார்.



Tuesday 13 December 2022

"ஆசாரம்" (ஒழுக்கம்) என்றால் என்ன? இந்த கேள்விக்கு, பீஷ்மர் பதில் சொல்கிறார். அறிவோம் மஹாபாரதம்.

யுதிஷ்டிரர் "ஆசாரம் பற்றி அறிய விரும்புகிறேன்" என்று கேட்க, பீஷ்மர் ஆசாரத்தை பற்றி விளக்குகிறார்.

दुराचारा दुर्विचेष्टा दुष्प्रज्ञाः प्रिय-साहसाः।

असन्तस्त्वभिविख्याताः सन्तश्च आचार-लक्षणाः।।

- வியாசர் (மஹாபாரதம்)

அயோக்கியர்கள் 'கெட்ட ஆசாரத்தோடும், கெட்ட நடத்தையோடும், கெட்ட புத்தியோடும், சாகசம் புரிய விருப்பத்தோடும் இருப்பார்கள்' என்பது போல,

சாதுக்கள் 'ஆசாரத்தில் விருப்பத்தோடு இருப்பார்கள்' என்பது ப்ரஸித்தம்.


पुरीषं यदि वा मूत्रं ये न कुवन्ति मानवाः।

राजमार्गे गवां-मध्ये धान्य-मध्ये शिवालये।

अग्न्यगारे तथा तीरे ये न कुर्वन्ति ते शुभाः।। 

- வியாசர் (மஹாபாரதம்)

பெரிய சாலையிலும் (ராஜ மார்க்கம்), பசுக்களின் நடுவிலும், தானியத்தின் நடுவிலும், சிவாலயத்திலும், அக்னி சாலையிலும், நதி கரையிலும், மலம்-மூத்திரம் செய்யாத மனிதன் 'நல்லவன்' என்று அறியலாம்.

शौचम् आवश्यकं कृत्वा देवतानां च तर्पणम्।

धर्ममाहु: मनुष्याणामुपस्पृश्य नदीं तरेत्।

- வியாசர் (மஹாபாரதம்)

அவசியமாக செய்ய வேண்டிய சுத்தியை செய்து கொண்டு, ஆசமனம் செய்த பிறகு, நதியில் இறங்கி ஸ்நானம் செய்ய வேண்டும். பிறகு, தேவர்களை குறித்து தர்ப்பணம் செய்வது மனிதர்களுக்கு தர்மமென்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.

सूर्यं सदोपतिष्ठेन न स्वपेद् भास्कर-उदये।

सायंप्रात: जपेत्-सन्ध्यां तिष्ठन्पूर्वां तथेतराम्।।

- வியாசர் (மஹாபாரதம்)

எப்பொழுதும் சூரியனை உபாஸிக்க வேண்டும். உதயகாலத்தில் உறங்க கூடாது. காலையிலும், மாலையிலும் காயத்ரீ மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். முதல் சந்தியில் நின்று கொண்டும், மாலை சந்தியில் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும்.


पञ्चार्द्रो भोजनं भुञ्ज्यात्प्राद्भुखो मौनम् आस्थितः।

न निन्द्याद् अन्नभक्ष्यांश्च स्वादुस्वादु च भक्षयेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

5 அங்கமும் அலம்பிக்கொண்டு, கிழக்கு முகமாக அமைதியாக போஜனம் செய்ய வேண்டும். அன்னத்தை, சாப்பிடும் போது நிந்திக்க கூடாது. மிகவும் ருசியாக உள்ளது என்று பூஜிக்க வேண்டும்.


न आर्द्र-पाणिः समुत्तिष्ठेन्न आर्द्र-पादः स्वपेन्निशि।

देवर्षि-र्नारदः प्राह एतदाचारलक्षणम्।।

- வியாசர் (மஹாபாரதம்)

கை ஈரமாக இருக்கும் போதே எழுந்திருக்க வேண்டும் (கை காய உட்கார்ந்து இருக்க கூடாது). இரவில் கால் அலம்பாமல் படுக்க கூடாது.  தேவ-ரிஷியான நாரதர் இவ்விதம் ஆசாரத்தின் லக்ஷணத்தை சொல்கிறார்.

शोचिष्केशमनड्वाहं देव गोष्ठं चतुष्-पथम्।

ब्राह्मणं धार्मिकं च एव नित्यं कुर्यात् प्रदक्षिणम्।।

- வியாசர் (மஹாபாரதம்)

அக்னியையும், காளையையும், தேவதையையும், பசுமடத்தையும், நாற்-சந்தியையும், தர்மத்தில் இருக்கும் ப்ராம்மணனையும் பார்த்தால், ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். அதாவது, அவர்களை சுற்றி வலம் வர வேண்டும்


अतिथीनां च सर्वेषां प्रेष्याणां स्वजनस्य च।

सामात्यं भोजनं भृत्यैः पुरुषस्य प्रशस्यते।।

- வியாசர் (மஹாபாரதம்)

நேரம் சொல்லாமல் நம் வீட்டுக்கு வந்த அதிதியை, தான் சொல்லும் காரியத்தை செய்யும் ஏவலாளியை, உறவினர்களை வேற்றுமை பாராமல் உணவு கொடுப்பது மனிதனுக்கு சிறந்த தர்மமாகும்.

सायंप्रातर्मनुष्याणामशनं वेदनिर्मितम्।

नान्तरा भोजनं दृष्टम् उपवासी तथा भवेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

மனிதர்களுக்கு காலையிலும், மாலையிலும் போஜனம் வேதத்தால் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் மத்தியில் உணவு உண்ண வேண்டும் என்று விதி இல்லை. அந்த விதிப்படி உபவாசம் இருப்பவன், பயனடைவான்.


होमकाले तथ्ना जुह्वन् ऋतुकाले तथा व्रजन्।

अनन्यस्त्रीजनः प्राज्ञो ब्रह्मचारी तथा भवेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

ஹோமம் செய்ய வேண்டிய காலங்களில் ஹோமம் செய்து கொண்டும், ருது காலத்தில் மட்டும் தன் மனைவியோடு சேருபவனும், வேறு  பெண்களை நெருங்காதவனும், நல்ல அறிவுள்ளவனும், “பிரம்மச்சாரி”என்று கருத வேண்டும். மணமானாலும் ‘ப்ரம்மச்சர்யத்தில் இருக்கிறான்’ என்று பொருள்


अमृतं ब्राह्मण: उच्छिष्टं जनन्या हृदयं कृतम्।

तज्जनाः पर्युपासन्ते सत्यं सन्तः समासते।।

- வியாசர் (மஹாபாரதம்)

தர்மம்-அதர்மம் தெரிந்து வாழ்க்கையை நடத்தும் பிராம்மணன் சாப்பிட்ட பிறகு, சாப்பிடுவதால், அந்த உணவு அம்ருதமாகவும் (ஆயுள் கூட்டுவதாகவும்), இதயத்தில் நல்ல எண்ணத்தையும் உண்டு பண்ணுவதாகவும் அமையும். அந்த உணவை எந்த ஜனங்கள் அன்புடன் ஏற்கிறார்களோ, அந்த ஸாதுக்கள், ஸத்தியமான பிரம்மத்தை அடைகிறார்கள்.


लोष्टमदीं तृणच्छेदी नखखादी तु यो नरः।

नित्य:-उच्छिष्टः संकसुको नेह-आयु: विन्दते महत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

எவன் மண்ணை உதைக்கிறானோ (வீட்டை உடைப்பவன்), புற்களை கிள்ளுகிறானோ, நகத்தை கடிக்கிறானோ, எப்பொழுதும் பிறர் சாப்பிட்டதையே உண்கிறானோ, பேராசை கொண்டவனோ, அவன் நீண்ட ஆயுளை அடைய மாட்டான்.


यजुषा संस्कृतं मांसं निवृत्तो मांस-भक्षणात्।

भक्षयेन्न वृथामांसं पृष्ठमांसं च वर्जयेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

மாமிசம் உண்ணாமல் இருக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால், சாஸ்திர விதிப்படி பூஜித்து மாமிசம் உண்ணலாம். அனாவசியமாக விருப்பத்துக்காக சாப்பிட கூடாது. மிச்சப்பட்ட மாமிசத்தை, மாமிசத்தின் பின்-பாகத்தை சாப்பிட கூடாது.


स्वदेशे परदेशे वा अतिर्थि नोपवासयेत्।

काम्यकर्मफलं लब्ध्वा गुरूणाम् उपपादयेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

தன் தேசத்தில் இருந்தாலும், வெளி தேசத்தில் இருந்தாலும் நாம் இருக்கும் இடத்திற்கு அதிதியாக வந்தவனை சாப்பிடாமல் வைக்க கூடாது. ஆசையினால் சேர்க்கப்பட்ட பொருளை குருவிடம் கொடுத்து விட வேண்டும்.

गुरूणाम् आसनं देयं कर्तव्यं च अभिवादनम्।

गुरूनभ्यर्च्य युज्येत आयुषा यशसा श्रिया।।

- வியாசர் (மஹாபாரதம்)

குருவுக்கு ஆஸனம் கொடுத்து, அவருக்கு தன் ரிஷி பரம்பரையை பற்றி சொல்லி நமஸ்கரிக்க வேண்டும். குருவின் ஆசிர்வாதத்தை பெற வேண்டும். பெரியோர்களை பூஜித்ததால், ஆயுளும், புகழும், செல்வமும் கூடும்.

नेक्षेतादित्यमुद्यन्तं न च नग्नां परस्त्रियम्।

मैथुनं सततं धर्म्यं गुह्ये चैव समाचरेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

உதிக்கும் காலத்தில் சூரியனை கண்ணால் பார்க்க கூடாது. வேறு பெண்களையோ, ஆடையில்லாத பெண்ணையோ நோக்க கூடாது. தர்மத்தை மீறாத உடலுறவை ரகசியமாக வைத்து கொள்ள வேண்டும்.

तीर्थानां हृदयं तीर्थं शुचीनां हृदयं शुचिः।

सर्वम् आर्यकृतं धर्म्यं वालसंस्पर्शनानि च।।

- வியாசர் (மஹாபாரதம்)

மனமே தீர்த்தங்களில் சிறந்த தீர்த்தம்! சுத்தம் என்றால், மனசுத்தமே சிறந்த சுத்தம். பண்புள்ளவர்கள் செய்யும் அனைத்து காரியமும் தர்மமே. பசுவின் வாலை தொடுவதும் புண்யமே.

दर्शने-दर्शने नित्यं सुख-प्रश्नम् उदाहरेत्।

सायं प्रातश्च विप्राणां प्रदिष्टम् अभिवादनम्।।

- வியாசர் (மஹாபாரதம்)

வேத ப்ராம்மணனை காணும் போதெல்லாம், எப்பொழுதும் நலம் விசாரிக்க வேண்டும். காலையும் மாலையும் வேத ப்ராம்மணனை கண்டு நமஸ்கரிக்க வேண்டும்.


देवगोष्ठे गवां-मध्ये ब्राह्मणानां क्रियापथे।

स्वाध्याये भोजने चैव दक्षिणं पाणिम् उद्धरेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

தேவாலயத்திலும், பசுக்களின் நடுவிலும், ப்ராம்மணர்களின் நடுவிலும், கர்மானுஷ்டம் செய்யும் போதும்,  படிக்கும் போதும், சாப்பிடும் போதும் வலது கை வெளியே இருக்கும் படி (அதாவது பூணூலை இடது தோளில் இருப்பதாக வைத்து கொள்ள வேண்டும்) வைத்து கொள்ள வேண்டும்.

सायं प्रातश्च विप्राणां पूजनं च यथाविधि।

पण्यानां शोभते पण्यं कृषीणामृद्ध्यतां कृषिः।

बहुकारं च सस्यानां वाह्ये वाहो गवां तथा।।

- வியாசர் (மஹாபாரதம்)

காலையிலும், மாலையிலும் வேதத்தை ரக்ஷிக்கும் ப்ராம்மணர்களை முடிந்த வரை பூஜிப்பது, மதிப்புமிக்கதில் மதிப்புள்ளதை போற்றியதற்கு சமமாகும். விவசாயத்தில் சிறந்த கிருஷியை போற்றியதற்கு சமமாகும். அதிகமான தானியங்கள் சேர்ப்பதற்கு சமமாகும். 


संपन्नं भोजने नित्यं पानीये तर्पणं तथा।

सुशृतं पायसे ब्रूयाद्यवाग्वां कृसरे तथा।।

- வியாசர் (மஹாபாரதம்)

எப்பொழுதும், உணவு கொடுப்பவன், கொடுக்கும் போது "ஸம்பன்னம்" என்று சொல்ல வேண்டும். உணவை பெற்று கொள்பவன் "ஸுஸம்பன்னம்" என்று சொல்ல வேண்டும். குடிக்க ஜலம் கொடுப்பவன், கொடுக்கும் போது "தர்ப்பணம்" என்று சொல்லி கொடுக்க வேண்டும். தண்ணீரை பெற்று கொண்டவன் "ஸுதர்ப்பணம்" என்று சொல்ல வேண்டும். பாயசம் (கஞ்சி/அன்னம்) கொடுக்கும் போது, கொடுப்பவன் "ஸ்ருதம்" என்று சொல்ல வேண்டும். அதை பெறுபவன் "ஸுஸ்ருதம்" என்று சொல்லி பெற்று கொள்ள வேண்டும். சாப்பிடுபவனையோ / குளிப்பவனையோ தும்முகிறவனையோ சவரம் செய்பவனையோ பார்த்தால் "ஆயுஷ்யம்" என்று சொல்ல வேண்டும்.


प्रति आदित्यं न मेहेत न पश्येदात्मनः शकृत्।

सुतैः स्त्रिया च शयनं सह भोज्यं च वर्जयेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

சூரியனை பார்த்து மல-மூத்திரம் செய்ய கூடாது. மேலும் அப்போது மல (இட) கையை பார்க்க கூடாது. புத்ரியோடும், பெண்களோடும் சேர்ந்து படுக்கவோ, சாப்பிடவோ கூடாது.


त्वंकारं नामधेयं च ज्येष्ठानां परिवर्जयेत्।

अवराणां समानानाम् उभयं नैव दुष्यति।।

- வியாசர் (மஹாபாரதம்)

நீ என்ற ஒருமையிலோ, பெயரை சொல்லியோ வயதில் பெரியவர்களை கூப்பிட கூடாது.  தன்னை விட வயதில் குறைந்தவர்களை, வயதில் சமமானவர்களே கூப்பிடுவது தவறில்லை.


हृदयं पापवृत्तानां पापम् आख्याति वैकृतम्।

ज्ञानपूर्वं विनश्यन्ति गूहमाना महाजने।।

- வியாசர் (மஹாபாரதம்)

பாபங்களை செய்யும் இதயம் கொண்டவனின் முகமே அவனுடைய பாப எண்ணத்தை வெளி காட்டி விடும். செயல்படுத்த முடியாது என்று தெரிந்தும் வாக்குறுதிகளை ஜனங்களுக்கு கொடுத்து, பாபங்களை மறைத்து செய்பவன் நாசமடைவான்


ज्ञानपूर्वकृतं पापं छादयन्त्यबहुश्रुताः।

नैनं मनुष्याः पश्यन्ति पश्यन्त्येव दिवौकसः।।

- வியாசர் (மஹாபாரதம்)

விஷய அறிவு இல்லாமல், தெரிந்தே பாபங்களை (தவறுகளையும்) செய்து விட்டு,  அதை மறைத்தும் விடுவார்கள். இப்படி இவர்கள் சக மனிதர்களை ஏமாற்றினாலும், செய்த பாபத்தை தேவர்கள் அறிகிறார்கள்.


पापेनापिहितं पापं पापम् एव अनुवर्तते।

धर्मेणापिहितो धर्मो धर्मम् एव अनुवर्तते।

धार्मिकेण कृतो धर्मो धर्मम् एव अनुवर्तते।।

- வியாசர் (மஹாபாரதம்)

பாபத்தை செய்த  இந்த பாபிகளை அவர்கள் பாபமே  துரத்தி கொண்டு வரும். தர்மத்தை செய்த தர்மாத்மாவை, அவர்கள் செய்த தர்மமே துரத்தி கொண்டு வரும்.

पापं कृतं न स्मरतीह मूढो

विवर्तमानस्य तदेति कर्तुः।

राहुर्यथा चन्द्रमुपैति चापि

तथाऽबुधं पापमुपैति कर्म।।

- வியாசர் (மஹாபாரதம்)

பாபம் செய்வதிலேயே நாட்டம் கொண்ட மூடன் (அசடுகள்), நான் சொன்ன இந்த ஆசாரத்தை, நினைத்து கூட பார்க்காமல் இருக்கிறான். பாபமே செய்பவர்கள், சாஸ்திரத்துக்கு விரோதமாகவே இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள், எப்படி பொலிவு மிகுந்த சந்திரனை ராகு விழுங்குகிறதோ, அது போல புகழ் மங்கி, பொலிவை இழப்பார்கள்.


आशया संचितं द्रव्यं दुःखेनैवोपभुज्यते।

तद्बुधा न प्रशंसन्ति मरणं न प्रतीक्षते।।

- வியாசர் (மஹாபாரதம்)

பேராசையால் பெறப்பட்ட எந்த பொருளும், துக்கத்தையே தரும். அறிவாளி அப்படிப்பட்ட பொருளை கொண்டாடுவதில்லை, அதனால் ஏற்படும் மரணத்தை அவர்கள் ஏற்பதும் இல்லை.

मानसं सर्वभूतानां धर्ममाहु: मनीषिणः।

तस्मात्सर्वेषु भूतेषु मनसा शिवम् आचरेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

பாராபட்சம் இல்லாமல் அனைவருக்கும் மனப்பூர்வமாக செய்வதே மனிதனுக்குரிய தர்மம். ஆகையால், எல்லா உயிர்களுக்கும் மனப்பூர்வமாக நல்லதை (மங்களத்தை) செய்ய வேண்டும்.


एक एव चरेद्धर्मं नास्ति धर्मे सहायता।

केवलं विधिमासाद्य सहायः किं करिष्यति।।

- வியாசர் (மஹாபாரதம்)

தர்மத்தை ஒருவனாகவே செய்யலாம். தர்மம் செய்ய துணை அவசியமில்லை. மனதில் தர்ம சிந்தனை இல்லாமல், துணைக்கு ஆள் கிடைத்தும் என்ன பயன் கிடைக்கப்போகிறது?


धर्मो योनि: मनुष्याणां देवानाम् अमृतं दिवि।

प्रेत्यभावे सुखं धर्माच्न्छश्वत्तैरुपभुज्यते।।

- வியாசர் (மஹாபாரதம்)

தர்மத்தில் இருப்பதற்காக தான் மனித-யோனியில் மனிதபிறவி கிடைத்துள்ளது.. அதன் மூலம் தேவர்களை போல அம்ருத நிலையை (அழியா புகழ்) அடையலாம். தர்மத்திலேயே இருப்பதால், மறு பிறவி எடுத்தாலும் அந்த தர்மத்தின் பலன் தொடர்ந்து வந்து க்ஷேமத்தை கொடுத்து கொண்டே இருக்கிறது. 


இவ்வாறு பீஷ்மர், யுதிஷ்டிரரிடம் "ஆசாரம்" என்றால் என்ன? என்பது பற்றி விளக்கினார்.