उदीर्णः सर्वत: चक्षु: अनीशः शाश्वत स्थिरः ।
भूशयो भूषणो भूतिर् विशोकः शोक नाशनः ॥
உதீர்ண: ஸர்வத: சக்ஷு:
அனீஸ: சாஸ்வத ஸ்திர: |
பூசயோ பூஷணோ பூதிர்
விஸோக: சோக நாஸன: ||
- விஷ்ணு சஹஸ்ரநாமம்
அர்த்தம்:
மிகவும் உயர்ந்தவர். இவருக்கு மேல் உயர்ந்ததோ, உயர்ந்தவரோ கிடையாது என்று இருப்பவர் (உதீர்ண),
இவருக்கு தெரியாமல் யாரும் ஒரு காரியம் செய்து விட முடியாது. அனைத்தையும் பார்த்து கொண்டே இருப்பவர் (ஸர்வத: சக்ஷு:).
இவருக்கு ஆணை இட, யாரும் இல்லை என்று இருப்பவர். இவருக்கு மேல் ஒரு ஈசன் கிடையாது என்று இருப்பவர் (அனீஸ),
அன்று இருந்தார், இன்று இல்லை என்று இல்லாமல், த்ரேதா யுகத்தில் தோன்றிய அதே ராமபிரான், சமீபத்தில் தோன்றிய தியாகராஜ ஸ்வாமிக்கும் தரிசனம் கொடுத்தார். சாஸ்வதமாக என்றுமே இருப்பவர் (சாஸ்வத ஸ்திர:),
பூமியையே படுக்கையாக போட்டு சயனித்து இருப்பவர். 14 வருடங்கள் ராமபிரானாக அவதரித்து பூமியிலேயே படுத்தவர், ஸ்தல சயன பெருமாளாக மஹாபாலிபுரத்தில் இருப்பவர் (பூசய:),
அலங்காரம் (பூஷணம்) செய்து கொள்ள விரும்புபவர், இந்த பூமியில் பல அவதாரம் தானே செய்து செய்து, இந்த பூலோகத்துக்கே பூஷணமாக இருப்பவர் (பூஷண:),
சோகமே இல்லாதவர் (விசோக:),
இவர் சரித்திரத்தை கேட்பவனுக்கு கூட சோகம் மறைந்து போகும் படி செய்பவர். சோகத்தை நாசம் செய்பவர் (சோக நாசன:)
"சோக நாசன:" என்ற சொல்லை நிரூபணம் செய்தவர் வேத பிராம்மணன் மஹாகவி பாரதி.
"காக்கை சிறகினிலே நந்தலாலா நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா..."
என்று கண்ணனே எங்கும் தனக்கு தெரிவதாக பாடும் பாரதிக்கு,
'கண்ணன் தன் நெஞ்சில் இருக்கிறார்' என்றதும், பாரதியின் ஏழ்மை, சோகம் மறைந்து விட்டது.
அது மட்டுமில்லாமல்,
இவர் அந்த அனுபவத்தில் பாடிய பாடலை நாம் இன்று கேட்டால் கூட நமக்கு உள்ள சோகமும் அகன்று விடும் போல இருக்கிறது.
'சோக நாசன:' என்ற சொல்லுக்கு நிரூபணம் காட்டுகிறார் மஹாகவி.
துக்கத்தை நாசம் செய்யும் (சோக நாசன:) கண்ணனை நினைத்து பல பாடல்கள் பாடிய பாரதியாருக்கு, கண்ணனை நினைத்த மாத்திரம், தன் வறுமை, சோகம் கூட மறந்தது மட்டுமில்லாமல், கண்ணன் தன்னிடம் இருக்கிறான் என்ற கர்வத்தில் பாடிய பாடல் இதோ.
அச்சமில்லை! அச்சமில்லை!!
அச்சமென்பதில்லையே!
I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!
இச்சகத்து உள்ளோரெல்லாம்
எதிர்த்து நின்ற போதினும்!
அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!
Even if every human in this world stands up against me,
I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!
துச்சமாக எண்ணி நம்மை
தூறு செய்த போதினும்!
அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!
Even if I was denigrated and slandered,
I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை
பெற்று விட்ட போதிலும் !
அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!
Even if I obtained a life where I have to beg to even eat,
I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!
இச்சைகொண்டே பொருளெலாம்
இழந்துவிட்ட போதிலும் !
அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!
Even if I loose all the objects that I had desired,
I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!
கச்சணிந்த கொங்கை மாதர்
கண்கள் வீசு போதினும்!
அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!
Even when sensual and attractive women cast their eye over me to distract,
I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!
நச்சை வாயிலே கொணர்ந்து
நண்ப ரூட்டு போதினும்!
அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!
Even if I am fed with poison by my own friends,
I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!
பச்சை ஊன் இயைந்த
வேற் படைகள் வந்த போதினும்!
அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!
Even if the flesh desiring armies come with their spears to fight me,
I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!
உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதினும்!
அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!
Even if the sky above crumbles and falls down on me,
I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!
சோகத்தை நாசம் செய்யும் (சோக நாசன:) கண்ணனை நினைத்த மாத்திரத்தில், வேத பிராம்மணனான, ஏழையான, ஞானியான, மஹா கவிஞனான பாரதியின், சோகம் நாசமானது.
கண்ணனை நினைத்து கொண்டு அவர் பாடிய இந்த பாடலை கேட்டால் கூட, நமக்கும் சோகம் அகன்று விடும்.
'கிருஷ்ண பக்தன் நாசமாக மாட்டான்' (ந மே பக்த ப்ரணஸ்யதி) என்று ஸ்ரீ கிருஷ்ணரே சொல்கிறார்.
பாரதியின் வாழ்க்கை எத்தனை துன்பங்கள் தந்தாலும், சோகமே இல்லாமல் கடைசி வரை வாழ்ந்தார். இன்றும் அழியாமல் இருக்கிறார்.
இன்று வரை, 'சோகத்தை அழிக்கும்' பாரதியின் இந்த பாடல் கூட நாசமாகவில்லை. ப்ராம்மணரான பாரதியும் மறக்கப்படவில்லை.
சோக நாசனனாக இருக்கும் கிருஷ்ணரை, நாம் பக்தி செய்தால், நம்மை சோகம் தாக்காது என்று அறிவோம்.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!
வாழ்க ஹிந்து தர்மம்..