Create your Own Website.. Try yourself Free for 14 days..........Just Easy!

PROUD HINDU DHARMA: தமிழன்

Followers

Create your Own Website.. Try yourself Free for 14 days..........Just Easy!

Showing posts with label தமிழன். Show all posts
Showing posts with label தமிழன். Show all posts

Monday, 13 July 2020

ஹிந்து மக்களின் பெருமைகள் என்ன? தெரிந்து கொள்வோம்...

ஹிந்துவின் பெருமையை உணருவோம்.. 

விஷ்ணு பகவான் 'கருமை நிறம்'. அவர் பத்னியான மஹாலக்ஷ்மியோ 'பொன்னிறம்'.

விஷ்ணு (கள்ளழகர்) மீனாக்ஷியை தன் தங்கையாக கருதினார்.
மீனாக்ஷி 'கருமை நிறம்'. 
இவள் மணந்து கொண்ட சிவபெருமானோ 'பொன்னிறம்'.

முருகன் தன் மாமனை போன்று பேரழகன், நிறத்தில் தந்தையை போன்று 'பொன்னிறம்'.

விநாயகன், மகா புத்திசாலி..யானை என்ற 'மிருகத்தின் உருவத்தை' ஏற்றவர். பிரம்மச்சாரி.

நீ கருப்பா?..  உனக்கு இருக்கிறார் 'கருமை நிற பெருமாள்'.. 

நீ வெளுப்பா?.. உனக்காக இருக்கிறார் 'சிவபெருமான்'.

நிற வெறி காட்டாத உன் ஹிந்து தெய்வங்களை விட்டு விட்டு, வெளிநாட்டில் பிறந்து இறந்து போன, நிறவெறியை தூண்டும் blonde தெய்வம் உனக்கு தேவையா?...

"கடவுளுக்கு உருவம் கிடையாது" என்ற சித்தாந்தம் உனக்கு இருந்தால், உனக்காக தானே அத்வைத மார்க்கம் உள்ளது..  
ஆதி சங்கரரை விட அத்வைதி உண்டா?..
கோவிலுக்கு கூட செல்லாமல், காடுகளில் இருந்த படியே,  ரூபமற்ற பிரம்மத்தை (கடவுளை) மனதிலேயே தியானித்த ரிஷிகள் உன் கண்ணுக்கு தெரியவில்லையா?..

'கட்டுக்கோப்புடன் வாழ்' என்று சொல்லி பழக்கிய போது சமுதாயங்கள் ஏற்படுவது இயற்கை தானே..

டாக்டர் சமுதாயம், வக்கீல் சமுதாயம் என்று இன்று கூட சமுதாயங்கள் உருவாகி கொண்டே தானே இருக்கிறது..

அதில் சில நல்லவர்கள் உதிக்கும் போது அவர் பெயரால் சமுதாயம் விரிவடைவதும் இயற்கை தானே..

ஷத்ரிய குலத்தில் தோன்றிய யது என்ற அரசன் புகழ் ஓங்கியதால், அவன் வழி வந்த சில லட்சம் ஷத்ரியர்கள் தங்களை "யாதவர்கள்" என்றும் "கோனார்' என்றும் சொல்லிக்கொள்வது இயற்கை தானே...

'எம்ஜிஆர் வழி, காந்தி வழி' என்று இன்று சொல்கிறார்களே.. இது சொல்வது இயற்கை தானே...

இந்த பல தரப்பட்ட சமுதாயங்கள் கட்டுக்கோப்பான அமைப்பை நம் பூமியில் ஏற்படுத்தியதால் தானே, ஆங்காங்கு நடந்த சிறு சிறு பிரச்சனைகளை ஆங்காங்கே பஞ்சாயத்து கூட்டி சரி செய்தனர்.

பல பிரச்சனைகள் கோர்ட்டு வரை செல்லாமலேயே நான்கு பெரியவர்களால் பேசி முடிக்கப்பட்டதே..

இந்த சமுதாய அமைப்பை சிதைத்து, நம்மை ஒழித்து கட்ட, கிறிஸ்தவ வெளிநாட்டினர், நம் சமுதாய அமைப்பை ஜாதி என்ற முத்திரை குத்தி, ஒரு சமுதாயத்துக்கும், இன்னொரு சமுதாயத்துக்கும் பகையை கிளப்பி, ஊர் பஞ்சாயத்துக்களை குலைத்து, கலாச்சாரத்தை கெடுத்தனர்.

இன்றுவரை, 1000 வருடங்களாக எங்களை அடிமை படுத்தி இருந்தனர் ப்ராம்மணர்கள் என்று உளரும் சிலர், 1000 வருடம் நம் நாட்டில் ஆட்சி செய்தது அந்நிய இஸ்லாமியர்களும், அந்நிய கிறிஸ்தவர்களும் தான் என்று ஏன் புரிந்து கொள்ளவில்லை?..

1000 வருடங்கள் முன் நன்றாக இருந்த காலத்தில், ஹிந்துக்களை ஹிந்து தானே ஆட்சி செய்தான்.

கும்பகோணத்தை ஆட்சி செய்த சோழர்கள் ஒரு தெருவில் சிவனுக்கு கோவில் கட்ட, மறு தெருவில் பெருமாளுக்கும் கோவில் கட்டி உள்ளானே.. 
வேலைவாய்ப்பு பலருக்கு கொடுத்து, அதே சமயம் அவரவர் சிற்ப, கட்டிட கலைகளை கூட ஊக்குவித்து இருக்கிறார்களே..

இன்று, ஒரு வீட்டில் நடக்கும் விவகாரம் ஆரம்பித்து, நாட்டில் நடக்கும் விவகாரம் வரை, ஒரே ஒரு நிதிமன்றம் தன் தலையில் எடுத்து கொண்டு, எதற்கும் தீர்வு கொடுக்க முடியாமல் தவிக்கிறதே!!

நிறவெறி இல்லாத நம் தெய்வங்களை விட்டு விட்டு, நிறவெறி தூண்டும் போலி தெய்வம் நமக்கு எதற்கு? வெளிநாட்டவனுக்கும் இந்த நிறவெறி தூண்டும் போலி தெய்வம் எதற்கு?..
அனைவரையும் ஹிந்துவாக ஆக்குவோம். 
உனக்கு கருப்பு கடவுள் விருப்பமா?.. பெருமாளை வணங்கு..
உனக்கு ஸ்படிகம் போல வெண்மையான தெய்வம் விருப்பமா? சிவனை வணங்கு.
தெய்வம் குழந்தை போல இருக்க வேண்டுமா? முருகனை வணங்கு.
உனக்கு இயற்கையே தெய்வமா? சக்தியை வணங்கு.
உனக்கு ஒரே தெய்வம் மட்டுமே வேண்டுமா? ஆதி மூலமான நாராயணனை வணங்கு.

அந்த ஆதிபுருஷனும் உருவம் ஏற்று இருக்க கூடாது என்று நினைக்கிறாயா? பரப்ரம்மம், பரஞ்சோதி என்று வணங்கு.

கடவுளே வேண்டாம், என் தாயே தெய்வம் என்று நினைக்கிறாயா? உன் தாயையே வணங்கு..

தெய்வங்களே தங்களுக்குள் சொந்தம் கொண்டாடும் ஹிந்து தர்மத்தை விட்டு, நிறவெறி தூண்டும் போலி தெய்வம் உனக்கு எதற்கு?

தெய்வங்களுக்கு பொறாமை கூட இங்கு இல்லையே...

மஹாவிஷ்ணுவே கிருஷ்ணராக தோன்றியும், அர்ஜுனன் சிவபெருமானிடம் பாசுபத அஸ்திரம் கேட்டு தவம் செய்ய போகிறேன் என்றான். 
கிருஷ்ணர் எதிர்க்கவில்லையே.. 
தெய்வங்களுக்குள் சண்டை இல்லையே!

நெல்லையப்பர் கோவிலுக்கு செல்.. 
மஹாவிஷ்ணு, தன் மாப்பிள்ளை சிவபெருமானுக்கு தன் கையால் பூஜை செய்கிறார்..
சிவபெருமான், காசியில் "ராம ராம" என்று ராம நாமத்தை ஜபம் செய்கிறார்.
மதுரைக்கு சென்றால், மாமன் வீற்று இருக்கும் கள்ளழகர் மலையில், முருகன் வந்து விட்டார்.
திருப்பதி செல்ல ஆரம்பித்தால், காளஹஸ்தி என்ற இடத்தில் சிவபெருமான் இருக்கிறார்.
108 திவ்ய தேசத்தில் ஒன்றாக இருக்கும் சித்ரகூடம் என்ற சிதம்பரத்தில், பெருமாள் நடராஜருக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டு இருக்கிறார்.

கும்பகோணம் சென்றால், ஒரு தெருவில் கும்பேஸ்வரர் இருந்தால், மறு தெருவில் சாரங்கபாணி இருக்கிறார்.

தெய்வங்கள் சொந்தம் கொண்டாடி கொண்டு இருக்கும் போது, கட்டுக்கோப்பான சமுதாயங்கள் பிற்காலத்தில் ஜாதி என்ற பெயரால் அழைக்கப்பட்டாலும், வெறுப்பை நமக்குள் ஊட்டியதே, நிறவெறி கொண்ட கும்பல் தானே..

வெளிநாட்டில் இருந்து வந்த இந்த அந்நியர்கள் நிறவெறி குணத்தை அடைந்தற்கு காரணமே, அவர்கள் வழிபட்ட நிறவெறி தூண்டும் போலி தெய்வங்கள் தானே..

சிந்திப்போம்... 
நிறவெறி தூண்டும் வெளிநாட்டு தெய்வங்களை பௌத்த மதத்தை வீசியது போல வீசுவோம்..

நம் தெய்வங்கள் நமக்கு உறவு அல்லவா...
எத்தனை தேர் திருவிழா கண்டு இருப்போம். 
தெய்வங்கள் நம்மிடம் உறவு கொள்வது புரியவில்லையா?..
நம் தெரு வழியாக, நம் வீடு தேடி  தெய்வங்கள் வீதி உலா வருவதை பார்த்தும், தெய்வங்கள் நம்மிடம் உறவு கொள்வது புரியவில்லையா?..

ப்ரம்ம தேவன் "உலகை படைத்தார். நம்மையும் படைத்தார்" என்று ஹிந்து தர்மம் சொல்கிறது..
ப்ரம்ம நமக்கு பிதா அல்லவா..

ப்ரம்ம தேவன், தன்னை படைத்த நாராயணனை "தனக்கு பிதா" என்கிறார். 

அப்படியென்றால் நாராயணன் நம் பாட்டனார் இல்லையா.. 

விஷ்ணு சஹஸ்ரநாமம், "பெருமாள் நம் சொந்த பாட்டனார்" என்று உறவு சொல்கிறதே.. கவனிப்பது இல்லையா?

சொந்தம் கொண்டாடும் தெய்வத்தை விட்டு விட்டு, நிறவெறி தூண்டும் போலி தெய்வத்தை ஏற்பானா மனசாட்சி உள்ளவன்?..

சிந்திப்போம்...  
700 கோடி உலக மக்களில், எங்கு வேண்டுமானாலும் நாம் பிறந்து இருக்கலாம்...
ஆனால், 
80 கோடி ஹிந்துக்கள் கூட்டத்தில் நாம் ஹிந்துவாக பிறந்து இருக்கிறோம் என்றால், நாம் எத்தனை புண்ணியம் செய்தவர்கள் என்று புரியும்.

கிடைத்தற்கரிய இந்த ஆயுளையும், போலி தெய்வத்திடம் செலவழித்து விரயம் செய்து வீணாக்கி விட கூடாது..

கையில் வைரம் கிடைத்தும், கண்ணாடி என்று தூக்கி போடுவது எத்தனை முட்டாள்தனமோ, அது போல, ஹிந்துவாக பிறந்தும் தன் பெருமையை அறிந்து கொள்ளாமல் இருப்பது...

வேதத்தில் சொன்ன தெய்வங்கள் நிஜமானவை..

இந்த தெய்வங்கள் தரிசனம் பெற்றவர்கள் அநேகம்... ஆதிசங்கரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், யோகிகள், மகான்கள், சாதுக்கள், பக்தர்கள் இந்த 80 கோடி ஹிந்து கூட்டத்தில் தான் தோன்றினார்கள் என்பதை மறக்க கூடாது...

ஹிந்து தர்மம் சொல்லும் போதனைகளை, போலி மதங்கள் திருடி 'தான் சொல்வது போல சொன்னாலும்', ஹிந்துக்கள் ஏமாற கூடாது..

நாம் சொல்லாத எந்த நல்ல தர்மங்களையும் இவர்கள் சொல்லவில்லை. 

"நல்ல விஷயம் தானே சொல்கிறான்" என்று ஏமாற கூடாது..

'பால் தான் குடிக்க கொடுக்கிறான்' என்றாலும், 'நாய் தோலில் செய்த பாத்திரத்தில் ஊற்றி கொடுத்தால் சாப்பிடுவாயா...?'

தங்க பாத்திரத்தில் பால் ஊற்றி கொடுத்தால் சாப்பிடலாம்.

நம் ஹிந்து தர்மம் தங்க பாத்திரம் போன்றது.. அது சொல்லும் பால் போன்ற தர்மங்களை பருகுவதே நல்லது.

நம்மிடம் தங்க பாத்திரத்தில் பால் இருக்கும் போது, நாய் தோலில் செய்யப்பட்ட பாத்திரம் நமக்கு எதற்கு?

சிந்திப்போம். 
நம் கோவில் தெய்வங்களில் விளக்கு எறிய செய்வோம். திருவிழா நடக்க செய்வோம். 
தேர் இழுப்போம்.

ஹிந்துவாகவே வாழ்வோம்..

Thursday, 2 July 2020

'யாகத்தில் பலி' பற்றி வேதத்தில் சொல்கிறது... அதை பற்றி ஒரு அலசல்..

வேதத்தில் சில இடங்களில் 'யாகத்தில் பலி'  பற்றி சொல்கிறது.
"இது சரியா, தவறா?" என்ற கேள்விக்கு முன்,
'வேதத்தின் நோக்கம் என்ன?'
என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்...
முக்கியமாக ஹிந்துக்கள்.

ஹிந்து தர்மம், மற்ற போலி புத்தகம் போல, 'ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு' என்று உளரும் புத்தகம் அல்ல,
"கடவுள் அரூபமானவர்" என்று மட்டும் சொல்லி
குறுகிய மனப்பானமாய் கொண்ட  புத்தகமும் அல்ல..
நம் ஹிந்து தர்மம், சந்யாசியிடம் "அடித்தாலும் அமைதியாக இரு" என்று சொல்லும்.
அதே சமயம்,
நாட்டை காக்க எல்லையில் நிற்கும் வீரனை பார்த்து அதே போதனையை கூறி உளராது.
"உன் எதிரி அடிப்பான் என்று தெரிந்தால் கூட அவனை அடித்து நொறுக்கி விடு"
என்று அவர்கள் குணம், நிலைக்கு ஏற்ப தர்மங்களை சொல்லும்.
அத்வைத யோகிகளை பார்த்து "கடவுள் அரூபமானவர்" என்று சொல்லும் ஹிந்து தர்மம்.
அதே சமயம், அத்வைதம் புரியாத பல கோடி மக்களுக்காக 'தெய்வம் உருவம் கொண்டு உறவாடும். தைரியமாக பக்தி செய்." என்றும் சொல்லும்.
"எல்லாம் வல்லவர். ஆனால்,தெய்வத்தால் உருவம் எடுத்து வர முடியாது" என்று தெய்வத்தை தரம் தாழ்த்தி பேசாது ஹிந்து தர்மம்.

வேதத்தின் நோக்கம் என்ன?
'அனைத்து தரப்பு ஜீவனையும் மோக்ஷம் அழைத்து செல்வது தான்', வேதத்தின் நோக்கம்.
நம்மில் சிலர்
ஆன்மீக வளர்ச்சி அடைந்து இருப்பார்கள்..
சிலர் ஆன்மீக தேடலில் இருப்பார்கள்..
சிலர் ஆன்மீக எண்ணமே கூட இல்லாமல் இருப்பார்கள்.

பல தரப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு, பல வித உலக ஆசைகளும் உண்டு.

வேதத்தின் நோக்கமோ, இவர்கள் அனைவரையும் மோக்ஷ பாதையில் இழுக்க வேண்டும், பரமாத்மா நாராயணனை சேர வைக்க வேண்டும்.
ஆன்மீக சிந்தனையும் ஊட்ட வேண்டும்.
பிறகு
வேதத்தில் உள்ள தெய்வங்களில் ஏதாவது ஒரு வழியில் பக்தியை வளர்க்க வேண்டும்.
கடைசியில்,
மூல தெய்வம் பரவாசுதேவனே என்ற உண்மையை புரிய வைக்க வேண்டும்.
மோக்ஷத்துக்கு தயார் செய்ய வேண்டும்...
இதுவே "வேதத்துக்கு நோக்கம்".

மனிதர்கள் பலதரப்பட்ட குணத்துடன், பக்குவத்துடன் இருக்கிறார்கள்.

பூஜையில் கூட குணத்தால் மனிதர்கள் வேறுபடுகிறார்கள்.
தெய்வத்துக்கு ஏதாவது "துளசி, பூ, பழம் வைத்து பூஜை செய்"
என்று சொன்னால் சிலர் ஏற்பார்கள்.. சிலர் மறுப்பார்கள்..
நாயன்மார்கள் சிவ பக்தி செய்தார்கள்..
"வில்வ பூஜை செய்தாலே, சிவன் ப்ரீதி அடைவார், நமக்கு அணுகிரஹம் செய்வார்" என்று வாழ்ந்தார்கள்.

அதில் கண்ணப்பநாயனார் வேடுவன்.
சிவபூஜை செய்ய ஆசைப்பட்டார். ஆனால் அவர் பக்தி அவர் குணத்துக்கு ஏற்றவாறு ரஜோ குணத்துடன் இருந்தது..
சிவபெருமானுக்கு தான் வேட்டையாடிய மிருகங்களின் மாமிசத்தை பூஜைக்கு வைப்பார்.
ஒரு சமயம், இவனிடம் லீலை செய்த சிவபெருமான், கல் ரூபத்தில் இருந்தாலும், ரத்தம் வடியுமாறு லீலை செய்தார்.

சிவபெருமான் மேனியில் இருந்து ரத்தம் வடிவதை பார்த்து, தன் கண்ணையே பிடுங்கி அந்த சிவலிங்கத்தில் வைத்து விட்டார்.

பயங்கரமான பூஜை தான்...
ஆனால், மற்றவன் கண்ணை பிடுங்கி இருக்கலாமே வேடுவன்?..
அப்படி செய்யவில்லையே...
சங்கரன் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது...

வேடனான கண்ணப்பன் எப்படி இருந்தாலும் மாமிசம் சாப்பிடத்தான் போகிறான்.

"பகவானுக்கு கொடுத்து விட்டு பிறகு சாப்பிடுவோம்" என்று நினைவே, அனாவசிய மிருக வதையை பெரும்பாலும் குறைத்து விடும்.

இன்றைய உலகில் அளவுக்கு மீறி மிருக வதை நடப்பதற்கு சுயநலமும், தான் சாப்பிடுவதை தெய்வத்துக்கு காட்டி விட்டு சாப்பிடாததே காரணம்.

"தன் வயிரே முக்கியம்" என்ற சுயநலம் மனிதனுக்கு அதிகமானதால், விலங்குகள் நிலை அந்தோ பரிதாபம் என்று உள்ளது..

சாத்வீக தெய்வமான பரவாசுதேவனை, மாமிசம் உண்ணும் ஒருவன் வழிபடும் போது, சிறிது காலத்தில், ஜீவ ஹிம்சை செய்து இந்த வயிறை வளர்க்க வேண்டுமா? என்று மனதை மாற்றி விடுவார்.

பெருமாள் பக்தி செய்வதே நாம் அனைவருக்கும் இன்று தேவை.

தெய்வத்திடம் உண்மையான பக்தி இருந்தால், சில சமயம் இப்படிப்பட்ட பயங்கராமான பூஜைகள் தான் தெரியும் என்ற பக்தனுக்கும் தெய்வங்கள் அருள் செய்து விடுவார்கள்..
சிவபெருமான் கண்ணப்பருக்கும் காட்சி கொடுத்தார்.

ஆனால் பெரும்பாலான சிவ பக்தர்கள், விஷ்ணு பக்தர்கள், முருக பக்தர்கள் நெய், பூ, பழம் போன்ற சாத்வீக பூஜை தான் செய்கின்றனர்.

இப்படி வேதத்தில், அங்குமிங்கும் பலி இடும் யாகங்கள் சொல்லப்ட்டு இருப்பதற்கு காரணம்,
மனிதர்களில் சிலர், ரஜோ குண பூஜையை தான் விரும்புவார்கள் என்பதால் தான் வேதம் ஆங்காங்கு அப்படிப்பட்ட பூஜையை சொல்கிறது.

கண்ணப்பன், ராவணன் போன்றோர் செய்த ரஜோ குண பூஜையையும் தெய்வங்கள் ஏற்கிறது..
இதுவே முக்கிய காரணம்.

ராவணன் கூட சிவபக்தன் தான்.
அவன் குணத்துக்கு, பூ, பழம் வைத்து பூஜை செய்தால், முழு திருப்தி இருக்காதாம்..

ஒரு மிருகத்தை பலி இடலாமா?
என்று நினைத்தால், அதுவும் இவனுக்கு திருப்தியாக இருக்காதாம்.

ஒரு நரபலி கொடுத்தால் தான் இவனுக்கு திருப்தி ஏற்படுமாம்..

அதிலும் 'தானே அந்த நரபலியாக இருக்க வேண்டும்' என்று நினைப்பானாம்.

பொதுவாக ரஜோ குணம் அதிகம் உள்ளவர்கள் விஷ்ணு பக்தி செய்ய தயங்குவவதற்கு  காரணமும் இதுவே.
விஷ்ணு சாத்வீக மூர்த்தி. 
பெரும்பாலும் பலி போன்ற பூஜைகளை விட, துளசி, பூ, பழம் கொடுத்து பூஜை செய்யும் பக்தனுக்கு அணுகிரஹம் செய்து விடுவார் விஷ்ணு.

சம்ஹார மூர்த்தியான ருத்ரனோ, படைப்பு தொழிலை ஏற்ற ப்ரம்ம தேவனோ, இது போன்ற பூஜைக்கும் அணுகிரஹம் செய்து விடுவார்கள்..

நாயன்மார் தங்கள் பக்தியால் தரிசித்த சிவபெருமானை, 
ராவணன் தன் 10  தலைகளை ஒவ்வொன்றாக அறுத்து சிவபூஜை செய்து தரிசனம் செய்வானாம்.
அது மட்டுமா! ஒரு சமயம்,
'கைலாய மலையை சிவபெருமானோடு தூக்கி' தன் பலத்தை சிவனுக்கே காட்ட வேண்டும் நினைத்தான்.
கர்வமே இல்லாமல் இருந்தார்கள் நாயன்மார்கள்.
ராவணன் கர்வமே ரூபம் கொண்டவனாக இருந்தான்..
ஆனால், இருவருமே சிவபக்தர்கள்.
இருவருமே சிவனை தரிசித்தவர்கள். ஆனால் குணம் வேறு.

வேதத்தின் நோக்கம்,
குணம் கெட்டவனாக இருந்தாலும், நாதீகனாக இருந்தாலும், அவரவர்களுக்கும் வாய்ப்பு தந்து, அவர்கள் விருப்பப்படி தெய்வத்துடன் சம்பந்தம் செய்து கொள்ள வேத தெய்வங்கள் அனுமதிக்கிறது.

ரஜோ குணம் அதிகம் உள்ள ராவணன் போன்றவர்களும், அவர்கள் குணத்துக்கு ஏற்ப பூஜை செய்ய, ஆங்காங்கு உயிர் பலி சம்பந்தமான அதர்வண மந்திரங்கள் உள்ளது.

ஆனால்,
"பெரும்பாலான பூஜை சாத்வீகமாகவே உள்ளது" என்பதை ஹிந்துக்கள் கவனிக்க வேண்டும்.

பலி இடும் சம்பந்தமான பூஜைகள் இருப்பதற்கு காரணம் உண்டு.

ராவணனாக இருந்தால் கூட, கடவுளே இல்லை என்று நாதீகனாக இருந்தால் கூட, அவனையும் ஹிந்துவாக வைத்து கொள்ள, நம் தெய்வங்கள் வழி செய்கிறது.

கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இருப்பவனுக்கு, திடீரென்று ஒரு நாள் திருப்பதி கோவிலுக்குப் போன பின், வர இருந்த பெரிய ஆபத்து தானாக விலகி விடுகிறது.. அல்லது திடீரென்று லாபம் கிடைக்கிறது..

அதுவரை நாதீகனாக அலைந்தவன், 'சரி திருப்பதி மட்டும் செல்வோம்" என்று நினைக்கிறான்.

தனக்கு தேவையானதை பிரார்த்தனையாக வைக்கிறான்..
ஒரு சில பிரார்த்தனைகள் பலித்து விடுகிறது.

"நம் நம்பிக்கையில் தான் குறைவோ!" என்று யோசிக்கிறான்..

திருப்பதி பெருமாள் படத்தை வாங்கி தன் வீட்டில் வைத்து கொள்கிறான்.

மெதுவாக, இவனில் மாற்றம் நடக்கிறது...
சுயநலம் அகன்று பக்தி வளர்கிறது...

இப்படி வேதம் அனைவருக்கும் வழி காட்டி, கடைசியில், நம்மை பெருமாள் வரை கூட்டி சென்று விடும் அற்புத சக்தி கொண்டது.

ஆங்காங்கு வேதத்தில் காணப்படும் பலி யாகங்கள், 
ராவணன் போன்ற ரஜோ குண புத்தி உள்ளவர்களும் பகவானை பூஜை செய்யட்டும்
என்ற காரணமே அன்றி, வேதத்தின் பொதுவான அபிப்ராயம் நாயன்மார், ஆழ்வார்கள் செய்த சாத்வீக பூஜையே.

த்ரேதா யுகத்தில் இருந்த ராவணன் போல, தன் தலையையே அறுத்து பூஜை செய்யும் ராக்ஷஸ பூஜை செய்பவர்கள், இந்த கலியில் கிடையாது.

இன்று பொதுவாக தாமஸ, சாத்வீக குணங்கள் உடைய மக்களாகவே இருப்பதால், இது போன்ற யாகங்கள் நமக்கு தேவையுமில்லை.
ஆதலால், ஆங்காங்கு காணப்படும் இது போன்ற பலி யாகங்களை ஹிந்துக்கள் ஏற்பதில்லை.

"இதை காட்டியாவது, ஹிந்துக்களை குழப்பலாமா?.. 
நம் போலி புத்தகத்தை காட்டி ஏமாற்றலாமா?"
என்று மூடர் கூட்டம் அலைகிறது.

"ஒரு கன்னத்தில் அடித்தால், மறுகன்னத்தையும் காட்டு"
என்று பேசும் இந்த மூடர் கூட்டத்தின் வீட்டில் போய் தங்கி விட்டால், வீட்டையே எடுத்துக்கொள் என்று சொல்வார்களா?..

"போதனை ஒன்று, செயல் வேறு" என்று வாழ்ந்து,
ஊரை ஏமாற்றி,
நிலத்தை மட்டுமில்லாது, மலையையும் அபகரித்து திருடும் இந்த கூட்டம், நசுக்கப்பட வேண்டும்.

ஹிந்துக்கள், தங்கள் பெருமையை அறிய வேண்டும்.

ஹிந்து தர்மத்தில்,
ராவணனுக்கும் தெய்வ பக்தி செய்ய இடம் உண்டு.
நாயன்மார் போன்ற பக்தர்களுக்கும் தெய்வ பக்தி செய்ய இடம் உண்டு.
வாழ்க ஹிந்துக்கள்..
வாழ்க ஹிந்து தர்மம்.

Friday, 19 June 2020

பிராணாயாமம் - ஓம் பூ:, ஓம் புவ:, ஓம் ஸுவ: என்று ஏன் சொல்கிறோம்? 7 பாதாள லோகங்களை சொல்வதில்லையே... ஏன்?

பூலோகத்துக்கு (பூ:) கீழே, 7 பாதாள லோகங்கள் உள்ளது.
பலி சக்கரவர்த்தி பூலோகம் முதல் பிரம்ம லோகம் (ஸ்த்ய லோகம்) வரை பிடித்து விட்டார்.
பலி சக்கரவர்த்தியிடம் வாமன அவதாரம் செய்து தானமாக வாங்கி தேவர்களை, மனிதர்களை, ரிஷிகளை வாழ வைத்தார் பரவாசுதேவன்.


7 பாதாள லோகங்களில் ஒன்றான "சுதலம்" என்ற லோகத்தில், பலி சக்கரவர்த்தியை இருக்க சொல்லி, அவனுக்கு காவலனாக தானே "கதாதரனாக" நிற்கிறார்.
"அடுத்த தேவ இந்திரன் பலி சக்கரவர்த்தி" என்றும் ஆசிர்வதித்து விட்டார்.

இனி,
பிராணாயாமம் சொல்லும் போதும், 
காயத்ரி மந்திரம் சொல்லும் போதும், 
இந்த பாதாள லோகங்களை சொல்வதில்லை. இது ஏன்?

மாறாக,
"ஓம் பூ, ஓம் புவ, ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓஹும் சத்யம்"
என்று நமக்கு மேல் இருக்கும் லோகங்களை சொல்கிறோம்.
பூலோகத்தில் (ஓம் பூ:) இருக்கும் நாம், நம்முடைய புண்ணியங்களை உயர்த்தி உயர்த்தி, 

  • பித்ருக்கள் உள்ள லோகமான புவர் லோகத்துக்கும்
  • தேவர்கள் உள்ள சொர்க்க லோகத்துக்கும்
  • துருவனை போன்றோர் நக்ஷத்திரமாக இருக்கும் மகர லோகத்துக்கும்
  • ரிஷிகள், யோகிகள், முனிகள் வாழும் ஜன மற்றும் தப லோகத்துக்கும்
  • பிரம்ம தேவன் வசிக்கும் சத்ய லோகத்துக்கும் 

செல்ல ஆசைப்பட வேண்டுமே தவிர, கீழ்த்தரமான வாழ்க்கை வாழ்ந்து,
'பாதாள லோகங்களுக்கு சென்று விட கூடாது' என்று நம்மை நிதானப்படுத்துகிறது.
சத்ய லோகத்துக்கும் காரணமான வைகுண்ட நாதனை அடைய ஆசைப்படும் புண்ணிய ஆத்மாக்கள், பிரம்ம தேவன் படைத்த இந்த 14 உலகங்களையும் விட்டு விட்டு, வைகுண்டம் என்ற பரமபதம் அடைந்து விடுகிறான்.

புண்ணியங்கள் செய்து, 
ஜீவ ஹிம்சை செய்யாமல், 
ஜீவ ஹிம்சையான உணவு உண்ணாமல், 
மற்றவர்களுக்கு உபயோகமாக வாழ்ந்து, 
தெய்வத்திடம் பக்தி கொண்டு மனிதன் வாழ வேண்டும் 
என்று வழிகாட்டுகிறது இந்த மந்திரங்கள்..
"ஓம் பூ, ஓம் புவ, ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓஹும் சத்யம்"
என்று சொல்லும் போதே, நாம் செல்ல வேண்டிய பாதை என்ன? என்று காட்டுகிறது..

இந்த அனுபவத்துடன் பிராணாயாமம் செய்வோம். ஆத்மாவை உயர்த்துவோம்..

Wednesday, 17 June 2020

சோகத்தில் உள்ளவர்களுக்கு தர்மம் உபதேசிக்க வேண்டுமா? ஞானத்தை உபதேசிக்க வேண்டுமா?.. எது முதலில் தேவை?. ரகசியத்தை தெரிந்து கொள்வோம்..

சோகத்தில் உள்ளவனை எப்படி சமாதானம் செய்ய வேண்டும்? 
என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் காட்டுகிறார்...
சோகத்தில் இருப்பவனிடம் உடனேயே தர்மம் பேச கூடாது. 
சோகத்தில் இருப்பவனிடம் தர்மம் பேசினால் கேட்க மாட்டான்.
மேலும்
சோகத்தில் இருப்பவனிடம் 'தர்மம் பேச பேச, கேட்பவனுக்கு சோகம் அதிகமாகிவிடும்'.
சோகம் இல்லாமல் இருக்கும் போது தான் "தர்மம் பேச வேண்டும்".

"சோகம் இல்லாமல் இருக்கும் போது தான், தர்மம் புரியும்.
ஆதலால், 
சோகத்தை முதலில் நீக்கி விட்டு தான், தர்மம் பேச வேண்டும்"
என்று நமக்கு காட்டுகிறார் கிருஷ்ண பரமாத்மா.
"கர்ம யோகம், ஞான கர்ம சந்யாச யோகம், கர்ம சந்யாச யோகம், தியான யோகம், ஞான விஞ்ஞான யோகம்,ராஜ வித்யா யோகம், பக்தி யோகம்"
என்று பல வித தர்மங்களை சொன்னார் ஸ்ரீகிருஷ்ணர் என்று பார்க்கிறோம்.

அர்ஜுனன் சோகத்தில் ஆழ்ந்த போது, உடனே "கர்ம யோகம் என்ற தர்மத்தை சொல்கிறேன் கேள்" என்று ஆரம்பிக்கவில்லை என்று கவனிக்க வேண்டும்.

"சோகத்தில் மூழ்கியவனிடம் முதலில் ஞான யோகத்தை (ஸாங்க்ய யோகம்) (Jnana Yoga) பேசி விட்டு தான், 
பிறகு பல வித தர்மங்களை பற்றி பேசுகிறார்" 
ஸ்ரீ கிருஷ்ணர் என்று கவனிக்கலாம்.

"பாண்டவர்களுக்கு குண்டூசி சொத்து கூட தர முடியாது" என்று சொன்ன துரியோதனிடம் போரிடலாம் என்று வந்த அர்ஜுனன், இப்படி என் தாத்தாவையும், குருவையும் எதிர்க்கும் படியாக செய்து விட்டானே! 
இப்படி சொத்துக்காக என் தாத்தாவை கொன்று, குருவை கொன்று, என்ன சாதிக்கப்போகிறேன்?  
நான் போர் செய்ய மாட்டேன். 
பிச்சை எடுத்தாவது வாழ்கிறேன்"
என்று காண்டீபத்தை கீழே வைத்து விட்டான் அர்ஜுனன்.

சோக கடலில் மூழ்கி விட்டான் அர்ஜுனன்.

உடனே "கர்ம யோகம் சொல்கிறேன் கேள்" என்று ஸ்ரீ கிருஷ்ணர் ஆரம்பிக்கவில்லை.

கர்ம யோகப்படி,
"கர்மாவை செய். நீ ஷத்ரியன். க்ஷத்ரியனாக போர் செய்.
தாத்தாவாக இருந்தாலும், குருவாக இருந்தாலும், அதர்மம் செய்யும் துரியோதனன் பக்கம் இருக்கும் இவர்களை கொன்று விடு.
பலனை என்னிடம் விடு"
என்று உடனேயே கர்ம யோகம் பேசி இருந்தால்,
அர்ஜுனன் மேலும் சோகத்தில் ஆழ்ந்து போயிருப்பான்.
சோகம் உள்ளவனிடம், தர்மத்தை பேசுவதை காட்டிலும், "ஆத்ம ஞானத்தை சொன்னால் தான் சோகம் அடங்கும்".

பகவத் கீதை, முதல் அத்யாயத்திலேயே அர்ஜுனன் சோகத்தில் ஆழ்ந்து விடுகிறான்.

கிருஷ்ண பரமாத்மாவை சரணடைந்து வழி கேட்கிறான்.
முதலில் அவன் சோகத்தை போக்க "ஆத்மாவின் உண்மையான நிலை என்ன?" என்று சொல்லி,
ஞான யோகத்தை சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

இரண்டாவது அத்யாயம் முழுக்க "ஞான யோகத்தை" (ஸாங்க்ய யோகம்) பேசி, அவன் சோகத்தை முழுவதுமாக போக்கிவிடுகிறார்.

இரண்டாவது அத்யாயம் முடிவிலேயே அர்ஜுனன் சோகத்தை விட்டு விடுகிறான்.

சோகம் இல்லாமல் இருக்கும் அர்ஜுனன் பிறகு பல கேள்விகள் தர்ம விஷயமாக கேட்கிறான்.
அவன் கேட்கும் பல கேள்விகளுக்கு, பல தர்மங்களை சொல்லி உபதேசம் செய்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர் என்று பார்க்கிறோம்.

சோகம் அதிகமாக இருப்பவர்கள், இரண்டாவது அத்தியாயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லும் உபதேசங்களை படித்தாலே சோகம் பறந்து விடும்.
சோகத்தில் சிக்கியவர்களை பார்த்து, கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்...
"கவலை பட தகுதியில்லாத உலக விஷயங்களுக்கு நீ சோகப்படாதே !
போனவனை பற்றியும் கவலை படாதே!  இப்போது சில காலம் இருப்பவனை பற்றியும் கவலைப்படாதே! 

அல்ப காலம் இந்த உடலில் இருக்க போகும் நீ, இதற்கெல்லாம் கவலை படுவதே வீண்!
உடல் அழியக்கூடியது.  
இது சம்பந்தமாக கவலைப்படுவதே வீண் !
ஆத்மா அழியாதது.  
நீயும், நானும் ஆத்மாவே! 
நாம் என்றுமே அழிவதில்லை. 
எந்த ஆத்மாவும் அழிவதில்லை.

இந்த ஆத்மா இந்த உடலுக்குள் சில காலம் இருந்தது. 
இந்த உடல் சிறு குழந்தையாக, சிறுவனாக, வாலிபனாக, கிழவனாக ஆகி விழுந்து விட்டது. 
ஆனால் உள்ளே இருக்கும் ஆத்மா இந்த உடலுக்குள் இருந்த போது எப்படி இருந்ததோ அதே போல எப்பொழுதும் இருந்தது... 
உடல் விழுந்தவுடன், இந்த ஆத்மா வேறு உடலுக்கு போகிறது. 
அவ்வளவு தான்.

இந்த உடலும், மனதும் தான் சோகம், சந்தோஷம், வெற்றி, தோல்வியை கொடுக்கிறது, அனுபவிக்கிறது.  
நீயோ ஆத்மா !  
இந்த உடல் தரும் இந்த வெற்றியையும் லட்சியம் செய்யாதே ! அவமானங்களையும் லட்சியம் செய்யாதே !
சாதாரணமாகவே இரு.
நீ தனியானவன்.  
நீ ஆத்மா.  

சிறிது காலம் இந்த உடலில் இருக்கிறாய். 
இந்த உடலை வைத்து என்ன நல்ல காரியங்கள் செய்ய முடியுமோ செய். 

மற்றபடி இந்த உடலால், மனதால் வரும் அனுபவங்களை சிறிதும் மதிக்காதே !"
என்று "ஞான யோகத்தை" சொல்லி, அர்ஜுனனின் சோகத்தை சரி செய்கிறார் கிருஷ்ணர்.
சோகம் தெளிந்து இருக்கும் அர்ஜுனனுக்கு பிறகு, 'கர்ம யோகம், பக்தி யோகம்' என்று பல வித தர்மங்களை சொல்லி...
"எந்த தர்மமும் உன்னால் கடைபிடிக்க முடியாது என்றால், என் மீது நம்பிக்கை வைத்து என்னையே சரணடைந்து விடு. நான் உன்னை காத்து, மோக்ஷம் வரை கூட்டி செல்கிறேன்"
என்று கீதையை முடிக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

சோகத்தில் இருப்பவர்கள், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன 2வது அத்தியாயம் கட்டாயம் அர்த்தம் புரிந்து படிக்க வேண்டும். 
நம்மைவிட்டு, சோகம் ஓடி விடும்.

தர்மங்கள் தெரிந்து கொள்ள ஆசை இருந்தால், 3வது அத்தியாயம் ஆரம்பித்து பல தர்மங்களை அர்த்தம் புரிந்து படிக்கலாம்.

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர்.
வாழ்க குருநாதர்.

Tuesday, 9 June 2020

"கடவுள் இருக்கிறாரா? என் கண் எதிரே காட்டு" என்று நாத்தீகன் கேட்கிறான்.. ஒரு அலசல்...

1. புலன்:
"பூ அழகாக இருக்கிறதா? யாரிடம் பொய் சொல்கிறாய்?"
என்று குருடன் கேட்கிறான்:

"பூ அழகாக தான் இருக்கிறது. என் கண்ணுக்கு தெரிகிறது. ஆனால், உனக்கு உள்ள குறையால், உனக்கு தெரியவில்லை. 
நீ பார்க்கமுடியவில்லை என்பதால் நான் பார்ப்பது பொய் என்று ஆகிவிடாது" 
என்று கண் இருப்பவன் சொல்கிறான்.

புலன்களால் ஏற்படும் அனுபவத்தை, புலன்கள் முடக்கப்பட்ட ஒருவனால் அறியமுடியாமல் போகிறது.
(புலன்கள் 5 : கண், காது, நாக்கு, மூக்கு, தோல்)
2.  அனுபவம்:
"என்னது பசி மயக்கமா? யாரை ஏமாற்றுகிறாய்?"
என்று பசி என்ற அனுபவமே இல்லாத பணக்காரன் கேட்கிறான்.
"பசி என்ற அனுபவம் எனக்கு உண்மை. அது சத்தியமே ! உனக்கு அது அனுபவத்தில் இல்லாததால், நான் சொல்வது பொய் என்று ஆகிவிடாது"
என்று பசியில் இருப்பவன் சொல்கிறான்.

உடல் சம்பந்தமாக ஏற்படும் அனுபவங்களை, அந்த அனுபவங்கள் ஏற்படாத ஒருவனால் அறியமுடியாமல் போகிறது.
(உடல் சம்பந்தமாக ஏற்படும் அனுபவங்கள் : பசி, உடல் வலி.)

3. மனம்:
"என்னது.. குடும்பத்தை எப்படி நடதத்துவோம் என்று கவலையா? எதற்கு கவலை?"
என்று  கேட்கிறான் 7 தலைமுறைக்கு சொத்து சேர்த்த அரசியல்வாதி.

"எதிர்காலத்தை நினைத்து கவலையும், பயமும் எனக்கு மனதில் தோன்றுவது உண்மையே. அது சத்தியமே ! உனக்கு அது அனுபவத்தில் இல்லாததால், நான் சொல்வது பொய் என்று ஆகிவிடாது"
என்று அன்றாடம் உழைத்து உண்பவன் சொல்கிறான்.

4.
1. கடவுள்:
"கடவுள் இருக்கிறாரா? யாரிடம் பொய் சொல்கிறாய்? என் கண் எதிரே காட்டு"
என்று நாத்தீகன் கேட்கிறான்:
"கடவுள் இருப்பதால் தான் பேசுகிறாய். 
கடவுள் இருப்பதால் தான் பார்க்கிறாய்.
கடவுள் இருப்பதால் தான் நீ அனுபவங்களை உணர்கிறாய்.

'புலனுக்கும்,  உடல் அனுபவத்துக்கும், மன உணர்வுகளுக்கும்' -  அப்பாற்பட்டு இருக்கும் கடவுளை, உன் கண்ணை கொண்டு பார்க்க நினைக்காதே ! 

கண்ணால் கடவுளை பார்க்க வேண்டும்! என்று கேட்கிறாயே?
முதலில், 
'யார் உள்ளே இருப்பதால், உன் கண் பார்கிறது?' 
என்று யோசி.

'உனக்கு அனுபவங்களை உள்ளிருந்து கொடுப்பது யார்?' 
என்று யோசி.

'பிணத்துக்கு கண் உண்டு. அது பார்க்குமா? 
பிணத்துக்கு அனுபவம் உண்டா?'
உன்னையே கேட்டு பார்.

நீயும் ஒரு நாள், நிச்சயமாக பிணமாக ஆகி விடுவாய். 
இன்று 'உனக்கு இந்த அனுபவங்களை தருவது யார்?' 
என்று யோசி.

உன்னையே உள் நோக்கி கடந்து பார். 
கண்ணை பார்க்க வைப்பது கடவுள் என்று புரியும்.
அனுபவங்களை உணரச்செய்வது கடவுள் என்று புரியும்.
உள்ளிருக்கும் கடவுள் "பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்" என்று உனக்கு தெரியும்.

'அவர் உன்னிடத்திலும் உள்ளார். 
மற்றவர்களிடத்திலும் இருக்கிறார்.
அவர் உள்ளும் இருக்கிறார். 
அவர் வெளியிலேயும் இருக்கிறார். 
அவர் எங்கும் இருக்கிறார்' என்ற உண்மை புரியும்.

நீ "ஆத்மா" என்று சொல்கிறாய். 
நீ "மனசாட்சி" என்று சொல்கிறார். 
நீ "உயிர்" என்று சொல்கிறாய். 

நான் "பரமாத்மா" என்று சொல்கிறேன். 
நான் "கடவுள்" என்று சொல்கிறேன். 
நான் "ஈஸ்வரன்" என்று சொல்கிறேன். 
கண்ணுக்கு அப்பாற்பட்ட, புலன்களுக்கு அப்பாற்பட்ட எங்கும் உள்ள பிரமாத்மா, 
தர்மத்தை நிலைநாட்ட, தர்மங்களை தானே நேரிடையாக சில சமயங்களில் சொல்ல  "ஸ்ரீ கிருஷ்ணராக கபில ரிஷியாக, வ்யாசராக" வந்தார் என்று அறிகிறேன்.
'மனிதனுக்கு வாழ்க்கையில் எத்தைகை கஷ்டம் வந்தாலும், தர்மத்தில் இருக்க வேண்டும்' என்று காட்ட, தானே மனித அவதாரம் எடுத்து "ஸ்ரீ ராமராக" வந்தார் என்றும் அறிகிறேன்.

பலி சக்கரவர்த்தி அடுத்தவன் (தேவர்கள்) சொத்தை அநியாயமாக பறித்து, விரட்டி அடித்த செயலுக்கு, அதர்மத்தை அதர்மம் கொண்டே கபடம் செய்து அவதாரம் எடுத்த "வாமனர்" என்று அறிகிறேன். 

அவதாரம் செய்த பரமாத்மாவை புரிந்து கொள்ளமுடியாமல் போனாலும் பரவாயில்லை,  
"உனக்கு ஆத்மாவாக அவரே தான் இருக்கிறார்" என்பதும் உனக்கு  புரியவில்லை என்றால், அது உனக்கு நீயே செய்து கொள்ளும் துரோகம். 

கடவுளை மறுப்பவன், ஆத்மாவை மறுக்கிறான். 
ஆத்மாவை மறுப்பவன், தன்னையே மறுக்கிறான். 
தன்னையே இல்லை என்று மறுப்பவன், பிணத்துக்கு சமம்..

கடவுளை மறுப்பவன், பிணத்துக்கு சமம்..Sunday, 7 June 2020

"ஆணுக்கு பெண் அடங்கி இருக்க வேண்டும்" இது நியாயம் என்று எப்பொழுது புரியும்?

முதலாளிக்கு விசுவாசமாக இரு:
வேலை பார்ப்பவனுக்கு இந்த அறிவுரை தவறாக தான் தோன்றும்.
தான் ஒரு காலத்தில் சொந்த வியாபாரம் தொடங்கும் போது "இது நியாயம்" என்று புரியும்.தந்தை சொல் மீறாதே:
தான் பிள்ளையை இருக்கும் போது இதன் அர்த்தம் புரியாது.
தான் தகப்பனாக ஆகும் போது, இதன் நியாயம் புரியும்.

சத்தியம் பேசு:
பொய் பேசும் வரை நமக்கு இந்த வாக்கு புரியாது.
தனக்கு எதிராக மற்றொருவன் பொய் சாட்சி சொல்லும் போது, இதன் நியாயம் புரியும்.

குடிக்காதே:
தான் குடிக்கும் போது, இதன் அர்த்தம் புரியாது.
தான் பெற்ற பிள்ளை பிற்காலத்தில் குடித்து சீரழியும் போது இதன் நியாயம் புரியும்.
பெண் ஆணுக்கு (முதலில் தகப்பன், பிறகு கணவன்,  கடைசியில் பிள்ளைக்கு) கட்டுப்பட்டு இருக்க வேண்டும் :
இது ஆண் ரிஷிகளாக சேர்ந்து கொண்டு, "பெண்ணை அடக்க செய்த சதி" என்று தான் தோன்றும்.

குழந்தை பருவத்தில் பொறுப்பான தகப்பன் இல்லாமல் வாழும் போது இதன் சத்தியம் புரியும்.

இளமையான அழகான பெண்ணாக இருக்கும் காலத்தில்,  தனக்காக சம்பாதித்து உழைக்கும் கணவன் இல்லாமல் வாழும் போது இதன் சத்தியம் புரியும்.

வயதான காலத்தில் பிள்ளை இல்லாமல் வாழும் போது, இதன் அர்த்தம் புரியும்.

Saturday, 23 May 2020

சோகம் நமக்கு எதிலிருந்து உண்டாகிறது? ஆத்மாவே நான். உடல் நானல்ல. இதை அனுபவத்தில் புரிந்து கொள்ள முடியுமா?

"ஆத்மாவே நீ. உடல் நீயல்ல.."
இந்த சத்யத்தையே ஹிந்து மதம் எப்பொழுதும் பேசுகிறது.
ரிஷிகள், ஞானிகள், சிவபெருமான் உட்பட இந்த தத்துவத்தை தான் பல விதத்தில் நமக்கு உபதேசம் செய்கிறார்கள்.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு அத்தியாயம் 3ல் ஆரம்பித்து இதையே பல தர்மங்கள் வழியாக சொல்கிறார் என்று பார்க்கிறோம்."உடலும், மனதும் இருப்பதால் தான்", ஆத்மாவாகிய நமக்கு "சூடு, குளிர், மானம், அவமானம், நறுமணம், நாற்றம், வெற்றி, தோல்வி, சுகம், துக்கம்" என்று பல அனுபவங்கள் ஏற்படுகிறது.

"உடலும், மனதும் நீ அல்ல. ஆத்மாவே நீ. 
ஆத்மா எந்த துக்கத்தையும் அனுபவிக்கவில்லை. உடலும் மனதும் தான் இந்த அனுபவத்தை கொடுக்கிறது"
என்று ஹிந்து தர்மம் சொல்வதை நாமே அனுபவத்தில் புரிந்து கொள்ள முடியுமா?
முடியும்....
Anaesthetic injection போடும் போது உடல் மரத்து கிடக்கிறது.
"உடலை மரத்து போக செய்து விட்டால், நாம் (ஆத்மா) இந்த உடலில் இருந்தாலும், உடல் அனுபவங்கள் நம்மை தாக்குவதில்லை.
மண்டையை பிளந்து டாக்டர் பார்த்தாலும் 'உடல் வலி' ஆத்மாவுக்கு (நமக்கு) தெரியவில்லை.
தூங்கும் போது மனம் அடங்கி கிடக்கிறது.
நாம் (ஆத்மா) இந்த உடலில் இருந்தாலும், ஆழ்ந்த தூக்கத்தில், அருகில் பிணம் கிடந்தாலும் கூட, தூக்கத்தில் ஒன்றுமே நடக்காதது போல தூங்குகிறான்.
"கை கால் நொறுங்கி வலி பொறுக்க முடியாமல் அழுதவன்", தூக்கத்தில் ஒன்றுமே நடக்காதது போல தூங்குகிறான்.

"உடல் பலத்தை விட மனம் பலம் வாய்ந்தது" என்று தெரிகிறது.

மனம் ஓய்ந்து விட்டால், மனத்துயரம் மட்டுமல்ல, உடல் வலிகள் கூட தெரிவதில்லை என்று அனுபவத்திலேயே நாம் புரிந்து கொண்டு விடலாம்.

தூக்கத்தில் ஏன் மனம் ஓய்கிறது?
இதற்கான பதிலை ரிஷிகள் ஆராய்ச்சி செய்த பலனே யோகாப்யாஸம்.
மனம் எப்பொழுதும் அசைய கூடியது.
இந்த "உடல்" எத்தனைக்கு எத்தனை அசைகிறதோ, அத்தனை வேகமாக "மனம்" வேலை செய்யும்.

கோபம் அதிகமாகும் போது, உடல் அசைவு, உள்ளும் புறமும் தீவிரப்படும்.
இதனாலேயே மனம் அதி தீவிரமாக வேலை செய்யும்.
மனம் எத்தனைக்கு எத்தனை வேலை செய்கிறதோ!!.. அத்தனைக்கு அத்தனை கவலை, சுகம், வெற்றி, தோல்வி, பயம், மானம், அவமானம் என்று அனுபவங்களை இந்த உடலுக்கு கொடுக்கும்.

தூக்கத்தில் மனம் அடங்கும் ரகசியத்தை அறிந்த நம் ரிஷிகள்,
விழிப்புடன் இருக்கும் போதும் இந்த மனதை அடக்கும் வழியை தேடினார்கள்.

பதஞ்சலி "யோக சூத்திரம்" பிரசித்தம்.

'மனது' என்ற பம்பரத்தை யார் சுற்றுகிறார்கள்? என்று கவனித்த போது, அது நம் 'மூச்சு காற்றே' என்று அறிந்தார்கள்.

"இந்த பிராணன் என்ற கயிறு எப்படி வேகமாக சுற்றுகிறதோ, அதை பொறுத்து, இந்த மனம் வேகமாக அலைகிறது" என்று அறிந்தார்கள்.

பிராணனை அடக்க, பிராணாயாமம் வந்தது
தூங்குபவனுக்கு மூச்சு சீராக இருப்பது போல, பிராணாயாமம் செய்பவன் விழிப்பு நிலையிலும் மூச்சை சீராக வைத்து கொள்ள ஆரம்பித்தான். 
அதற்கு பலனாக, மனம் அடங்கி இருக்க முடிந்தது.

தூக்கத்தில், மூச்சு மட்டுமா சீராக உள்ளது?..  உடலும் அசைவின்றி உள்ளது... அல்லவா?

"எத்தனைக்கு எத்தனை உடல் அசையாமல் இருக்கிறதோ!! அத்தனைக்கு அத்தனைக்கு அத்தனை மனம் அடங்கும்"
என்ற உண்மையும் அறிந்தார்கள் நம் ரிஷிகள்.

தூக்கத்தில் ஏன் மனம் ஓய்கிறது? 
உடல் "அசையாமல்" இருப்பதாலேயே மனம் ஒடுங்கி இருக்கிறது.

"ப்ரேக் டான்ஸ் ஆடி, கண்டபடி உடலை அசைக்கும் ஆட்டங்கள் மனதுக்கு கேடு" என்று சொல்வதற்கு காரணம் இதுவே!..
வெளிநாட்டு கலாச்சாரத்தில் உள்ள இது போன்ற ஆட்டங்கள், உடலை அர்த்தமில்லாமால் அசைப்பதாலேயே "இது போன்ற ஆட்டம் ஆடாதே!" என்று சொன்னார்கள்.
நம் கலாச்சாரத்தில், இது போன்ற குத்தாட்டங்கள் கிடையாது.
நடனம் ஆடுவதற்கும் பல வித விதிகள் நம்மிடம் உண்டு.

இப்படி உடல் அசைவும், மனதை அசைய செய்கிறது என்ற உண்மையை அறிந்து நம் ரிஷிகள்,
"பிராணாயாமம் மட்டும் போதாது" என்று "ஆசனங்கள்" சொல்லி கொடுத்தனர்.

யோக ஆசனங்களை உடற்பயிற்சி போல உடலை வேகமாக அசைத்து அசைத்து செய்வதால் உண்மையான பலன் ஏற்படுவதில்லை.

வேக வேகமாக செய்தால், இதுவும் உடற்பயிற்சியே.
உடல் வலுவாகுமே தவிர, மனம் அடங்காது.
ப்ராணாயாமத்துடன், பத்மாசனம் போட்டு கொண்டு அசையாமல் ஒரு மணி நேரம் உட்கார முடிந்தாலேயே, யோகம் செய்த பலன் கிடைத்து விடும்.
உடலும் வலுவாக இருக்கும். மனமும் அடங்கி இருக்கும்.

தூக்கத்தில் தானாகவே மனம் அடங்கி விடுவதால், துக்கம் பாதிக்காமல் தூங்குகிறோம்.
விழிப்பில், ஆசனங்கள் மூலம் உடல் அசைவை குறைத்து கொண்டு பிராணாயாமம் செய்து கொண்டு இருந்தாலேயே, விழிப்பு நிலையிலும், துக்கம் நம்மை பாதிக்காமல்  பார்த்துக்கொள்ள முடியும்.

மனம் அடங்கி இருப்பவனுக்கு, துக்கம் தாக்குவதில்லை.
யோகத்தில் ஸித்தி ஆன ஜடபரதரிடம், "தலையை வெட்டி காளிக்கு பலி கொடுக்க வேண்டும்" என்று கேட்க, ஒன்றுமே சொல்லாமல் சென்றார் என்றால், அதன் ரகசியம் என்ன? என்று இப்பொழுது புரிந்து கொள்ள முடியும்.

தூக்கத்தில் மனம் அழிந்து, 
மரத்து போகும் ஊசி போட்டு உடல் இருப்பதே மறத்து போன நிலையை, யோகிகள் விழிப்பு நிலையிலேயே, கொண்டு வந்தனர்.

எத்தனை அற்புதமான தேசம் இது!!.
இந்த தேசத்தில் பிறந்த நாம், நம் பெருமையை மெச்சி கொள்ள வேண்டாமா?.

மேற்கத்திய மத சிந்தனையை ஏற்று கொள்வதே அவமானவல்லவா நமக்கு? யோசிக்க வேண்டும்...


"ஆத்மாவே நீ. உடல் நீயல்ல.." என்ற தத்துவத்தை சொல்வதே நம் ஹிந்து தர்மம்.

அதை நமக்கு திரும்ப திரும்ப சொல்ல தான், இத்தனை மஹான்கள், சாதுக்கள், அவதரித்தனர்.
இந்த ஆத்மா ... அதாவது நாம் (ஆத்மா) மோக்ஷம் அடைவதே லட்சியம் என்று காட்டினார்கள்.

இதை படிக்கும் சிலர்,
"அப்படியென்னறால், உலகம் மாயை, ஆத்மா தான் உண்மை என்றால், கடமைகளை விட்டு விடலாமா? 
நிரந்தரமில்லாத இந்த உடலில் ஏற்படும் அனுபவங்களுக்காக இத்தனை உழைக்க வேண்டுமா? குடும்பம் தேவையா?" 
என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

ஹிந்து தர்மம், கடமையை தவிர்க்க சொல்கிறதா?
என்று குழப்பமடைகிறார்கள்.
பெரும்பாலான ரிஷிகள், முனிகள், சந்யாசிகள், ஆதி சங்கரராக வந்த சிவபெருமான் உட்பட, அனைவருமே "ஆத்மா தான் நீ.. உடல் நீயல்ல" என்று சொல்வதாலும், பெரும்பாலும் இவர்களே உலகத்தில் பற்று இல்லாமல் இருப்பதாலும், ஹிந்து தர்மம் கடமையை தவிர்க்க சொல்கிறதோ? என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது.

இதற்கு பதிலை பிரம்மாவையும் படைத்த நாராயணன் சொல்கிறார்.

கிருஷ்ண பரமாத்மாவாக அவதரித்த நாராயணன் (பரவாசுதேவன்), அர்ஜுனனிடம் பேசும் போது இதற்கான பதிலை சொல்கிறார்.
"ஆத்மாவே நீ. உடல் நீ அல்ல" என்று சொல்லும் கிருஷ்ணர், அர்ஜுனனை பார்த்து "அதற்காக உன் கடமையை செய்யாமல் இருக்காதே" என்று சொல்கிறார்.

தான் பரமாத்மாவாக இருந்த போதும், தானும் கடமையை செய்கிறேன் என்று காட்டுகிறார்.
எப்பொழுது எல்லாம் தர்மம் உலகில் அபாயத்தை சந்திக்குமோ, அப்பொழுதெல்லாம் தானே அவதாரம் செய்வதாக சொல்கிறார். 

"தான் பரமாத்மாவாக இருந்த போதிலும், இந்த கிருஷ்ண அவதாரத்தில், 
க்ஷத்ரியனாக அரசாளுகிறேன். என் தர்மத்தை காக்கிறேன். பாண்டவர்களான உங்களுக்கு ஏற்படும் அநீதிக்கு, நீதி கிடைக்க, உங்களுக்காக போராடுகிறேன்.

உடல் வேறு, ஆத்மா வேறு என்று தெரிந்தவன் கடமைகளை செய்யாமல் போவானா? 
இந்த அறிவு ஏற்பட்டவன் இன்னும் உற்சாகமாக மேலும் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை தானே செய்வான் !
உடலால் ஏற்படும் சோகம் எதுவும் எனக்கு இல்லை என்று தெரிந்த  ஞானி, தனக்கு விதிக்கப்பட்ட கடமையை செய்ய என்ன தடை இருக்க முடியும்? 
உடல் நீ அல்ல, ஆத்மாவே நீ என்கிற போது, க்ஷத்ரியனான நீ சண்டை போட்டு, தர்மத்தை நிலைநாட்டி, உனக்கு சேர வேண்டிய சொத்தை பெற்று கொள்ள வேண்டாமா? போரில் நீ அடிபட்டு வீழ்ந்தால், உன் உடல் தானே நாசமாகும்..  ஆத்மா இல்லையே !  நீ தோற்றாலும், ஜெயித்தாலும் உனக்கு (ஆத்மா) அதனால் ஆவது ஒன்றும் இல்லை என்கிற போது, க்ஷத்ரியனாக இருக்கும் நீ சண்டை போடுவது தானே உன் கடமை 
என்று சொல்லி அர்ஜுனனை அவன் கடமையை செய்ய உற்சாகப்படுத்துகிறார்.
"ஆத்மாவே நான். உடல் நான் அல்ல. 
இதை மனதில் எப்பொழுதும் சொல்லிக்கொண்டே, உனக்கு விதிக்கப்பட்ட கடமையை எனக்கா செய். என் உருவத்தையே மனதில் வைத்துக்கொண்டு, உன் கடமையை செய். 

உன் கடமையை என் நினைவோடு செய்து கொண்டிருந்தால், இந்த உடலை விட்டு பிரியும் போது,ஜீவ  ஆத்மாவாகிய உன்னை உடல் என்ற சம்பத்ததில் இருந்து நீக்கி, என்னுடன் சேர்த்து கொண்டு விடுவேன். மோக்ஷம் தந்து விடுகிறேன்" 
என்று சொல்கிறார்.

இதுவே நமக்கு பாடம்.

ரிஷிகள், ஞானிகள் இதை சொன்னாலும், தாங்கள் சன்யாசிகளாகவே வாழ்ந்தனர்.
"குடும்பத்தில் இருந்தாலும், அவரவர்கள் கடமையை ஒழுங்காக செய்து கொண்டு இருந்தாலும், ஆத்மா ஞானியாக (நான் ஆத்மா) இருப்பவனுக்கு, மோக்ஷம் கட்டாயம் கிடைக்கும்"
என்று நிரூபிக்க, தானே அவதரித்து, தன் கடமையை செய்து, வாழ்ந்து காட்டினார் பரமாத்மா நாராயணன்.


இதன் காரணத்தாலேயே பகவத் கீதத்தை அனைத்து ஹிந்துக்களின் சம்மதம் கொண்ட புனித நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வாழ்க ஹிந்து தர்மம்.

Monday, 4 May 2020

கர்ம வினை பலம் வாய்ந்ததா? மிட்டாய் வியாபாரி கதை.. படிப்போமே !

ஒரு மிட்டாய் வியாபாரி இருந்தான்.
நாள் முழுக்க அலைந்து, மிட்டாய் விற்பான்.
நல்லவன்.
அன்றன்று நடக்கும் வியாபாரத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தான்..
கஷ்டமான வாழ்க்கை. ஆனாலும் தைரியமாக நடத்தி வந்தான்.
தினமும் ஒரு சிவன் கோவில் வழியாக தான் செல்வான். 
சிவபெருமானை ஒரு நாள் கூட பக்தியுடன் பார்த்ததில்லை.
"இப்படி கஷ்டப்படுகிறேனே!!" என்று சிவபெருமானை திட்டுவானே தவிர, "சக்தியுள்ள சிவபெருமான் தன் துக்கத்தை போக்குவார்"
என்று நம்ப மாட்டான்.
தெய்வத்திடம் வெறுப்பை காட்டுவான்.

ஒரு சமயம், பார்வதிக்கு இவன் மேல் கருணை ஏற்பட்டது..
சிவபெருமானிடம் "இவனுக்கு கருணை செய்யுங்களேன்" என்று கேட்டுக்கொண்டாள்.
"என்னிடம் அவனுக்கு பக்தி இல்லையே! என் மீது வெறுப்பை உமிழ்கிறான்.
அவன் பூர்வ ஜென்மத்தில் செய்த பாப புண்ணிய கர்மாவுக்கு ஏற்ப இப்போது வாழ்க்கை அமைந்து உள்ளது..
இருந்தாலும் நீ ஆசைப்படுகிறாய் என்பதால், இவனுக்கு கருணை செய்கிறேன்"
என்றார் கருணா மூர்த்தியான சிவபெருமான்.

அவன் செல்லும் பாதையில் விலையுயர்ந்த வைர கல் பதித்த மாலை கிடக்கும் படி செய்தார்.

"தெய்வமாவது கொடுப்பதாவது... எதேச்சையாக எனக்கு கிடைத்தது.. என் அதிர்ஷ்டம்"
என்றே நினைத்து எடுத்துக்கொள்ளட்டும் என்றார் சிவபெருமான்.
பார்வதி சந்தோஷப்பட்டாள்.

அன்று வழக்கம் போல வியாபாரத்துக்கு கிளம்பினான் அந்த மிட்டாய் வியாபாரி.
அந்த வைர மாலை இருக்கும் இடத்துக்கு அருகில் வரும் போது, திடீரென்று ஒரு எண்ணம் ஏற்பட்டது...
"இப்படியே அலைகிறோமே!! வயதாகி கண் தெரியாமல் போய் விட்டால், கண் தெரியாமல் நடக்க முடியுமா?... இப்பொழுதே பழக்கி கொண்டு பார்ப்போமே!!"
என்று நினைத்து கொண்டான்.

உடனே கண்ணை மூடிக்கொண்டு நடக்க ஆரம்பிக்க, அந்த வைர மாலை இருக்கும் இடத்தை கடந்து விட்டான்.
கண் விழித்து பார்த்த அந்த வியாபாரி, மிகவும் சந்தோஷப்பட்டான்.
"ஆஹா.. கண் மூடிக்கொண்டே நடந்து விட்டோமே!!" என்ற திருப்தியுடன் சென்று விட்டான்.

இவனுக்கு பின்னால் வந்த மற்றொருவன், அவன் செய்த புண்ணியத்துக்கு பலனாக இந்த வைர மாலையை பார்த்தான். எடுத்து சென்று விட்டான்..

பார்வதி, சிவபெருமானிடம் "இப்படி செய்து விட்டானே" என்று வருத்தப்பட்டாள்.

"கர்ம வினை பலம் வாய்ந்தது. தெய்வ பக்தி இல்லாமல் இருக்கும் இவனுக்கு வலுக்கட்டாயமாக கருணை செய்ய நினைத்தாலும் கர்ம வினை ஜெயித்து விட்டது.
இவன் என்னிடம் ஒரு துளி பக்தி கொண்டிருந்தாலும், அந்த கர்ம வினையை மீறி, என் கருணை ஜெயித்து இருக்கும்"
என்றார் சிவபெருமான்.

"கர்ம வினை நம்மை தாக்க கூடாது"
என்று தான் தெய்வங்கள் ஆசைப்படுகிறது..

தெய்வத்தின் கருணை நமக்கு பலிக்க, தெய்வத்திடம் பக்தி அவசியமாகிறது..

ஆனால், தெய்வத்தை நெருங்காத எவனுக்கும், அவனவன் செய்த கர்மாவுக்கு (புண்ணியமோ, பாவ செயலோ) பலனை கொடுத்து, தெய்வங்கள் நகர்ந்து விடுவார்கள்..
"வெறுப்பு இல்லாத, அன்பையே" தெய்வம் நம்மிடம் எதிர்பார்க்கிறது..

சக்தியுள்ள தெய்வத்திடம், வெறுப்பை உமிழ்பவன், தான் செய்யும் கர்மாவுக்கு பலனை தானே அனுபவிக்கிறான்.

"தெய்வ பக்தி இல்லாதவன் பாவம் செய்யும் போது" தெய்வம் திருத்த முடியாமல் போகிறது...
"தெய்வ பக்தி இல்லாதவன் புண்ணிய காரியங்கள் செய்ய மனதில் ஆசை உண்டாக்கவும் முடியாமல்" போகிறது.

தெய்வ பக்தி இருந்தால், தெய்வ அனுக்கிரஹம் நமக்கு பலித்து விடும்.

கர்ம வினையால் ஏற்படும் துன்பங்கள், தெய்வ பலத்தால் நம்மை விட்டு விலகும்.

வாழ்க ஹிந்து தர்மம்.
ஹிந்து தர்மம் சொல்லாத தர்மங்கள் இல்லை.
ஹிந்துவாக பிறப்பதே, ஹிந்துவாக வாழ்வதே பெருமை.

Monday, 30 March 2020

பாசுரம் (அர்த்தம்) - அடியோமோடும் நின்னோடும்... பெரியாழ்வார் (மதுரை) கூடலழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம், பல்லாண்டு!
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும், பல்லாண்டு!
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு!
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
--  பெரியாழ்வார் (மதுரை) கூடலழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம் (திருமொழி

தெய்வத்திடம் "சாமானியன் பழகும் முறை" வேறுபடுகிறது. தெய்வத்திடம் "பக்தன் பழகும் முறையும்" வேறுபடுகிறது.

"தன்னை பெருமாள் பார்த்து கொள்ள வேண்டுமே!என்று சாமானியன் நினைக்கிறான்.

"தான் பல்லாண்டு பாட, பெருமாள் தனக்கு வேண்டுமே ! அவர் நன்றாக இருக்க வேண்டுமேஎன்று பக்தன் நினைக்கிறான்.
"தான் செய்யும் பஜனையை பார்க்க, பெருமாள் ரூபத்துடன் வேண்டுமே" என்று பக்தன் கேட்க,
ரூபம் கடந்த, குணங்கள் கடந்த, நாமங்கள் கடந்த பரமாத்மா, 
"பக்தன் செய்யும் பஜனைக்காக, நாம, ரூப, குணங்களை எடுத்துக்கொண்டு" பாரத தேசம் முழுவதும் விபவ அவதாரமும், அரச்ச அவதாரமும் செய்து தோன்றி விட்டார்.

பக்தனான பெரியாழ்வாருக்கு "பெருமாள் பல்லாண்டு சுகமாக இருக்க வேண்டும்" என்று தோன்ற, 
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 
பலகோடி நூறாயிரம் ஆண்டு" 
என்று மங்களாசாசனம் செய்கிறார். 

"பெருமாள் மட்டும் பல்லாண்டு இருந்தால் போதுமா? 
பெருமாளுக்கு பல்லாண்டு பாடும் பக்தனும் பல்லாண்டு இருக்க வேண்டுமே" 
என்று நினைவு வர, பெருமாளும் (நின்னோடும்), பக்தனும் (அடியோமோடும்) பிரியாமல் பல்லாண்டு இருக்க வேண்டும் என்று மங்களாசாஸனம் செய்கிறார்.அதையே
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு 
என்கிறார்.


அடுத்ததாக பெருமாளின் ஸ்ரீவத்சம் உடைய திருமார்பில் பிராட்டி இருக்க, மஹாலக்ஷ்மி  தாயாருக்கும் பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.
அதையே
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
என்கிறார்.

பெருமாள் மட்டுமே அழகு, அவர் கையில் வைத்து இருக்கும் சக்கரமும் (சுடராழி), சங்கும் (பாஞ்சசன்யமும்) கூட அழகாய் இருக்க, 
அந்த சங்கு சக்கரத்துக்கு பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.
அதையே
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு!
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
என்கிறார்.
பாஞ்சசன்யம் (சங்கும்) பெருமாள் கையில் தான் உள்ளது.
பெருமாள் பெரியாழ்வாருக்கு  எதிரில் தான் காட்சி கொடுக்கிறார். 

கண் எதிரே தெரியும் பாஞ்சசன்யத்தை பார்த்து, "இந்த பாஞ்சசன்யம்" என்று சொல்லாமல்,
"அந்த பாஞ்சசன்யம்" (அப் பாஞ்சசன்யமும்) 
என்று குறிப்பிட்டு சொல்கிறார் பெரியாழ்வார்.

ஏன் அப் பாஞ்சசன்யமும் என்று குறிப்பிட்டு சொன்னார்?
அவர் மனதை அறிந்த மகான்கள் அதன் ரகசியத்தை நமக்கு சொல்கிறார்கள்.
பெருமாள் வைத்திருக்கும் சங்கு வெண்மையானது
அன்ன பக்ஷியும் வெண்மையானது.
அன்ன பக்ஷிக்கு ஒரு பக்கம் கொண்டையும், கூரான மூக்கும் இருப்பது போல, சங்கிற்கும் உண்டு

அன்ன பக்ஷி ஒரு தாமரை பூவில் இருந்து மற்றொரு தாமரை பூவில் அமரும் போது, "கீச்" என்று கூவுவது போல, 

பெருமாளின் கையில் இருக்கும் இந்த வெண் சங்கு, அவர் கையிலிருந்து அவர் உதரத்துக்கு (உதட்டுக்கு) அருகில் சென்றது, சங்க நாதம் முழங்குமாம்.
 "பாஞ்சசன்யமும் பல்லாண்டே" 
என்று பாட வந்த பெரியாழ்வாருக்கு இந்த நினைவு வர, அந்த நிமிஷத்தில் கண்ணை மூடி பெருமாளை தியானிக்க,
வெண் சங்காக இருந்த அந்த பாஞ்சசன்யம், பெருமாளின் கொவ்வை சிவப்புடன் உள்ள உதரத்திற்கு அருகில் சென்றதும்,
வெண் சங்கு, சிவப்பாக தெரிய, பெருமாளின் அழகில் மயங்கி நின்ற பெரியாழ்வார், 'சிவப்பு ஏறிய அந்த பாஞ்சசன்யத்துக்கு பல்லாண்டே' என்று மங்களாசாசனம் செய்கிறார்.

அதையே
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
என்கிறார்.

அனைவரும் கூடலழகரை தரிசிப்போம். பல்லாண்டு பாடுவோம்.