'வேதவியாசர்' வேதத்தையும், தான் இயற்றிய மகாபாரத இதிகாசத்தை அவரது சிஷ்யரான "வைசம்பாயனருக்கும்', சூத குலத்தவரான 'ரோமஹர்சணருக்கும்' சொல்லி வைத்தார். தான் இயற்றிய பாகவதத்தை சுக ப்ரம்மத்துக்கு மட்டும் சொல்லி வைத்தார். பிராம்மண தாய்க்கும் (spiritual), க்ஷத்ரியத் தந்தைக்கும் (protection) பிறந்தவர்களை, 'சூதர்கள்' என்று அடையாளம் கண்டனர். ரோமஹர்சணர், இதிகாச புராணங்களை (மகாபாரதம், இராமாயணம்), ஸ்மிருதிகளை மன்னர்கள் மற்றும் ரிஷிகளுக்கு விரிவாக விளக்குவார். ஆதலால் 'சூத பௌராணிகர்' என்று அழைக்கப்பட்டார். 'பௌராணிகன்' என்றால் உபன்யாசம் செய்பவர் என்று அர்த்தம்.
மஹாபாரத போர் முடிந்து, இறந்து போன அனைத்து சொந்தங்களுக்கும், பாண்டவர்கள் கங்கையில் ஈம காரியங்களை செய்து, கங்கா தீர்த்தத்தால் தர்ப்பணம் செய்தனர்.
கிருஷ்ணனே 'பரமாத்மா நாராயணன்' என்று சொல்லி நமஸ்கரித்தாள்.
ஸூத உவாச (சூத பௌராணிகர் பேசுகிறார்)
இதி பீத: ப்ரஜா த்ரோஹாத்
ஸர்வ தர்ம விவித்சயா |
ததோ வினஷனம் ப்ராகாத்
யத்ர தேவவ்ரத அபதத் ||
सूत उवाच
इति भीत:प्रजाद्रोहात्सर्वधर्म विवित्सया ।
ततो विनशनं प्रागाद् यत्र देवव्रतोऽपतत् ॥
"இப்படி (இதி) பல லட்ச மக்களை கொன்று! பெரும் துரோகம் செய்து! (ப்ரஜா த்ரோஹாத்) தான் அதர்மம் செய்து விட்டோமோ?" என்று தர்மபுத்திரர் (யுதிஷ்டிரர்) பயந்தார் (பீத:).
தானே அனைத்து தர்மம் விஷயங்களையும் அறிந்து இருந்தாலும் (ஸர்வ தர்ம விவித்சயா), இந்த மனோ நிலையில், தன் தாத்தா பீஷ்மர் (தேவவ்ரத) எங்கு (யத்ர) அம்பு படுக்கையில் கிடந்தாரோ (அபதத்), அந்த (ததோ) போர்க்களத்திற்கு வந்தார் (வினஷனம் ப்ராகாத்).
ததா தே ப்ராதர: சர்வே
சத் அஸ்வை: ஸ்வர்ண பூஷிதை: |
அன்வ கச்சன் ரதைர் விப்ரா
வ்யாச தொளம்ய ஆதயஸ் ததா ||
तदा ते भ्रातर: सर्वे सदश्वै: स्वर्णभूषितै: ।
अन्वगच्छन् रथैर्विप्रा व्यासधौम्यादयस्तथा ॥
அப்பொழுது (ததா) அவருடைய (தே) சகோதரர்கள் அனைவரும் (ப்ராதர: சர்வே), தங்க கவசங்கள் அணிந்திருந்த (ஸ்வர்ண பூஷிதை:) உயர்ந்த ரக குதிரைகள் (சத் அஸ்வை:) பூட்டப்பட்ட அவரவர்களுடைய தேரில் (ரதைர்) அமர்ந்து, ஒருவர் பின் ஒருவராக (அன்வ கச்சன்) தொடர்ந்து வந்தனர்.
அவர்களை தொடர்ந்து ப்ராம்மணர்களான (விப்ரா) வேத வியாசரும், வ்யாக்ரபாதரின் பிள்ளையும், பாண்டவர்களின் குருவான தொளம்யரும் (வ்யாச தொளம்ய), மேலும் (ததா) பலரும் (ஆதயஸ்) தொடர்ந்து வந்தனர்.
பகவானபி விப்ரர்ஷே
ரதேன ச-தனஞ்சய: |
ஸ தைர் வ்யரோசத ந்ருப:
குவேர இவ குஹ்யகை: ||
भगवानपि विप्रर्षे रथेन सधनञ्जय: ।
स तैर्व्यरोचत नृप: कुवेर इव गुह्यकै: ॥
இப்படி ப்ராம்மணர்களும் (விப்ரர்ஷே) கிளம்பி செல்ல, தேரில் (ரதேன) அர்ஜுனனோடு (ச-தனஞ்சய:) தானும் கூட அமர்ந்து கொண்டு வந்தார், கிருஷ்ண பரமாத்மா (பகவானபி).
இப்படி பலரும் (ஸ தைர்) பின் தொடர்ந்து வர, பிரபுவாக இருக்கும் (வ்யரோசத) யுதிஷ்டிரரை (ந்ருப:) கண்ட போது, உலக செல்வங்களை தன் கையில் கொண்டிருக்கும் குபேரன் (குவேர) தன் பரிவாரங்களுடன் (இவ குஹ்யகை:) வருவது போல இருந்தது.
த்ருஷ்டா நிபதிதம் பூமௌ
திவஸ் ச்யுதம் இவ அமரம் |
ப்ரணேமு: பாண்டவா பீஷ்மம்
ச அனுகா: சஹ சக்ரினா ||
दृष्ट्वा निपतितं भूमौ दिवश्च्युतमिवामरम् ।
प्रणेमु: पाण्डवा भीष्मं सानुगा: सह चक्रिणा ॥
அமரர்களான தேவர்கள் (அமரம்) ஆகாயத்திலிருந்து (திவஸ்) பூமியில் விழுந்தது (ச்யுதம்) போல (இவ), போர்க்களத்தில் பீஷ்ம தாத்தா பூமியில் (பூமௌ) கிடப்பதை (நிபதிதம்) பார்த்தனர் (த்ருஷ்டா).
பீஷ்ம தாத்தாவை (பீஷ்மம்) பாண்டவ (பாண்டவா) சகோதர்களும் (ச அனுகா:), சக்ர-தாரியுமான வாசுதேவ கிருஷ்ணரும் (சஹ சக்ரினா) நமஸ்கரித்தனர் (ப்ரணேமு:).
தத்ர ப்ரம்மர்ஷய: சர்வே
தேவர்ஷயஸ் ச சத்தம |
ராஜர்ஷயஸ் ச தத்ர ஆஸன்
த்ரஷ்டும் பரத புங்கவம் ||
तत्र ब्रह्मर्षय: सर्वे देवर्षयश्च सत्तम ।
राजर्षयश्च तत्रासन् द्रष्टुं भरतपुङ्गवम् ॥
பரத குலத்திற்கே ரத்தினமான (பரத புங்கவம்) பீஷ்மரை தரிசிக்கும் (த்ரஷ்டும்) ஆசையில், அங்கு (தத்ர) ப்ரம்ம ரிஷிகளும் (ப்ரம்மர்ஷய:), அனைத்து (சர்வே) தேவ ரிஷிகளும் (தேவர்ஷயஸ் ச), கூடிவிட்டனர் (சத்தம). அங்கு (தத்ர) ராஜ ரிஷிகளும் (ராஜர்ஷயஸ் ச) வந்து சேர்ந்தனர் (ஆஸன்)
பர்வதோ நாரதோ தொளம்யோ
பகவான் பாதராயன: |
ப்ருஹதஷ்வோ பரத்வாஜ: ச
சிஷ்யோ ரேணுகாசுத: ||
வசிஷ்ட இந்த்ர ப்ரமத:
த்ரிதோ க்ருத்சமத: அசித: |
கக்ஷீவான் கௌதம: அத்ரி: ச
கௌசிக அத சுதர்ஷன:॥
पर्वतो नारदो धौम्यो भगवान् बादरायण: ।
बृहदश्वो भरद्वाज: सशिष्यो रेणुकासुत: ॥
वसिष्ठ इन्द्रप्रमदस्त्रितो गृत्समदोऽसित: ।
कक्षीवान् गौतमोऽत्रिश्च कौशिकोऽथ सुदर्शन: ॥
பர்வத முனியும், நாரதரும், தொளம்யரும், வ்யாஸ பகவானும் (பகவான் பாதராயன:), ப்ருஹதஷ்வரும், பரத்வாஜ ரிஷியும் அவரது சிஷ்யர்களும், ரேணுகாவின் புத்திரனாக அவதரித்த பரசுராமரும் (ரேணுகாசுத:), வசிஷ்டரும், இந்த்ர ப்ரமதரும், த்ரிதரும், க்ருத்சமதரும், அசிதரும், கக்ஷீவானும், கௌதமரும், அத்ரி ரிஷியும், கௌசீகரும், சுதர்சனரும் அங்கு ப்ரத்யக்ஷம் ஆகி இருந்தனர்.
அன்யே ச முனயோ ப்ரஹ்மன்
ப்ரஹ்மராத ஆதய அமலா: |
சிஷ்யைர் உபேதா ஆஜஃமு:
கஷ்யப ஆங்கிரச ஆதய: ||
अन्ये च मुनयो ब्रह्मन् ब्रह्मरातादयोऽमला: ।
शिष्यैरुपेता आजग्मु: कश्यपाङ्गिरसादय: ॥
அவர்களை தவிர, அப்பழுக்கற்ற (அமலா:) மேலும் (அன்யே ச) பல முனிவர்கள், பிராம்மணர்கள் (முனயோ ப்ரஹ்மன்), ப்ரம்ம அனுபூதியில் உலகையே மறந்த ஞானிகளும் (ப்ரஹ்மராத) குழுமியிருந்தனர் (ஆதய).
கஷ்யபரும், ஆங்கீரசரும் (கஷ்யப ஆங்கிரச) தங்கள் சிஷ்யர்களோடு (சிஷ்யைர் உபேதா) வந்து (ஆஜஃமு:) சேர்ந்து விட்டனர் (ஆதய).
தான் சமேதான் மஹா பாகான்
உபலப்ய வசு உத்தம: |
பூஜயாமாச தர்மஞ்யோ
தேச கால விபாகவித் ||
तान् समेतान् महाभागानुपलभ्य वसूत्तम: ।
पूजयामास धर्मज्ञो देशकालविभागवित् ॥
இப்படி மஹாத்மாக்களான (மஹா பாகான்) இவர்கள் அனைவரும் (தான்) வந்து சேர்ந்து நிற்க (சமேதான்), 8 வசுக்களில் ஒருவரான உத்தமர் பீஷ்மர் (வசு உத்தம:), அனைவரையும் வரவேற்றார் (உபலப்ய).
தேச, காலத்தின் வேறுபாடு தெரிந்தும் (தேச கால விபாகவித்), தர்மாத்மாவான (தர்மஞ்யோ) பீஷ்மர் இந்த நிலையிலும், அனைவரையும் பூஜித்தார் (பூஜயாமாச).
க்ருஷ்ணம் ச தத் ப்ரபாவஞ்ய
ஆஸீனம் ஜகதீஸ்வரம் |
ஹ்ருதிஸ்தம் பூஜயாமாச
மாயயா உபாத்த விக்ரஹம் ||
कृष्णं च तत्प्रभावज्ञ आसीनं जगदीश्वरम् ।
हृदिस्थं पूजयामास माययोपात्तविग्रहम् ॥
உலகத்துக்கே ஈஸ்வரனும் (ஜகதீஸ்வரம்), அனைவரது இதயத்தில் வசிப்பவரும் (ஹ்ருதிஸ்தம்), தன் மாய சக்தியால் (மாயயா), ரூபம் தரித்து (விக்ரஹம்) அவதரித்து (உபாத்த) அமர்ந்து கொண்டு (ஆஸீனம்) இருக்கும் கிருஷ்ணரையும் (க்ருஷ்ணம் ச), அவர் மகத்துவம் தெரிந்திருந்த (ப்ரபாவஞ்ய), பீஷ்மர் பூஜித்தார்.
பாண்டு புத்ரான் உபாசீனான்
ப்ரஸ்ரய ப்ரேம சங்கதான் |
அப்யாசஷ்ட அனுராக அஸ்ரை:
அந்தீ பூதேன சக்ஷுஷா ||
पाण्डुपुत्रानुपासीनान् प्रश्रयप्रेमसङ्गतान् ।
अभ्याचष्टानुरागाश्रैरन्धीभूतेन चक्षुषा ॥
பீஷ்ம தாத்தாவின் பாசத்தை நினைத்து (ப்ரஸ்ரய ப்ரேம சங்கதான்), கண்ணீர் விட்டு கொண்டே, அமைதியாக பாண்டவ சகோதரர்கள் அமர்ந்து (பாண்டு புத்ரான் உபாசீனான்) இருந்தனர்.
இவர்களை கவனித்த (சக்ஷுஷா) பீஷ்மர், பெருமகிழ்ச்சியுடன் (அந்தீ பூதேன) ஆனந்த கண்ணீருடன் (அனுராக அஸ்ரை:), பாரத போரில் வெற்றி கண்ட பாண்டவர்களை பாராட்டினார் (அப்யாசஷ்ட).
(பீஷ்மர் பேசுகிறார்) பீஷ்ம உவாச
அஹோ கஷ்டம் அஹோ அந்யாய்யம்
யத் யூயம் தர்ம நந்தனா: |
ஜீவிதும் ந அர்ஹத க்லிஷ்டம்
விப்ர தர்மாத் அச்யுத ஆஸ்ரயா: ||
भीष्म उवाच
अहो कष्टमहोऽन्याय्यं यद्यूयं धर्मनन्दना: ।
जीवितुं नार्हथ क्लिष्टं विप्रधर्माच्युताश्रया: ॥
சம் ஸ்திதே அதிரதே பாண்டௌ
ப்ருதா பாலப்ரஜா வது: |
யுஸ்மத் க்ருதே பஹுன் கலேசான்
ப்ராப்தா தோகவதி முஹு: ||
संस्थितेऽतिरथे पाण्डौ पृथा बालप्रजा वधू: ।
युष्मत्कृते बहून् क्लेशान् प्राप्ता तोकवती मुहु: ॥
என் அருமை மருமகள் (வது:) குந்தி (ப்ருதா), அதி-ரதனான பாண்டுவின் (அதிரதே பாண்டௌ) இறப்பிற்கு பிறகு (சம் ஸ்திதே), பல குழந்தைகளுடன் (பாலப்ரஜா) கஷ்டத்தை அனுபவித்தாள். நீங்கள் வளர்ந்த பிறகும் (தோகவதி), உங்களின் செயல்களால் (யுஸ்மத் க்ருதே) தொடர்ந்து (முஹு:) பலவித கஷ்டத்தையே (பஹுன் கலேசான்) அனுபவித்தாள் (ப்ராப்தா).
சர்வம் காலக்ருதம் மன்யே
பவதாம் ச யத் அப்ரியம் |
ச-பால: யத்வசே லோக:
வாயோர் இவ கனாவலி: ॥
सर्वं कालकृतं मन्ये भवतां च यदप्रियम् ।
सपालो यद्वशे लोको वायोरिव घनावलि: ॥
யத்ர தர்மசுத: ராஜா
கதாபானிர் வ்ருகோதர: |
க்ருஷ்ண: அஸ்த்ரி காண்டீவம் சாபம்
சுஹ்ருத் க்ருஷ்ணஸ் ததோ விபத் ||
यत्र धर्मसुतो राजा गदापाणिर्वृकोदर: ।
कृष्णोऽस्त्री गाण्डिवं चापं सुहृत्कृष्णस्ततो विपत् ॥
எங்கு (யத்ர) தர்மமே ரூபமான ராஜா யுதிஷ்டிரனும் (தர்மசுத: ராஜா), கதயை ஏந்தி இருக்கும் மஹாபலம் கொண்ட பீமன் இருந்தும் (கதாபானிர் வ்ருகோதர:), காண்டீபமும் வில்லும் (காண்டீவம் சாபம்) கையில் ஏந்தி இருக்கும் (அஸ்த்ரி) பராக்ரமசாலியான க்ருஷ்ணன் என்ற அர்ஜுனன் (க்ருஷ்ண:) இருந்தும், உங்கள் நலனை எப்போதும் விரும்பும் கிருஷ்ணரே (சுஹ்ருத் க்ருஷ்ணஸ்) இருந்தும், இத்தனை கஷ்டங்கள் (ததோ விபத்) நேர்ந்ததே !
ந ஹி அஸ்ய கர்ஹிசித்
ராஜன் பூமான் வேத விதித் சிதம் |
யத் விஜிக்யாசயா யுக்தா
முஹ்யந்தி கவய அபி ஹி ||
न ह्यस्य कर्हिचिद्राजन् पुमान् वेद विधित्सितम् ।
यद्विजिज्ञासया युक्ता मुह्यन्ति कवयोऽपि हि ॥
தஸ்மாத் இதம் தைவ தந்த்ரம்
வ்யவஸ்ய பரதர்ஷப |
தஸ்ய அனுவிஹித: அநாத: நாத
பாஹி ப்ரஜா: ப்ரபோ ||
तस्मादिदं दैवतन्त्रं व्यवस्य भरतर्षभ ।
तस्यानुविहितोऽनाथा नाथ पाहि प्रजा: प्रभो ॥
ஏஷ வை பகவான் சாஷாத்
ஆத்யோ நாராயண: புமான் |
மோஹயன் மாயயா லோகம்
கூடஸ் சரதி வ்ருஷ்ணிசு ||
एष वै भगवान्साक्षादाद्यो नारायण: पुमान् ।
मोहयन्मायया लोकं गूढश्चरति वृष्णिषु ॥
அஸ்ய அனுபாவம் பகவான்
வேத குஹ்யதமம் சிவ: |
தேவர்ஷி நாரத: சாஷாத்
பகவான் கபிலோ ந்ருப ||
अस्यानुभावं भगवान् वेद गुह्यतमं शिव: ।
देवर्षिर्नारद: साक्षाद्भगवान् कपिलो नृप ॥
அரசனாக போகும் (ந்ருப) தர்மபுத்திரா ! பகவானாகிய அவருடைய (அஸ்ய) மகத்துவத்தை (அனுபாவம்), வேத ரகசியத்தை (வேத குஹ்யதமம்), சிவபெருமானும், தேவ ரிஷியான நாரதரும், சாஷாத் பகவான் கபிலரும் அறிவார்கள்.
யம் மன்யசே மாதுலேயம்
ப்ரியம் மித்ரம் சுஹ்ருத்தமம் |
அகரோ: சசிவம் தூதம்
சௌஹ்ருதாத் அத சாரதிம் ||
यं मन्यसे मातुलेयं प्रियं मित्रं सुहृत्तमम् ।
अकरो: सचिवं दूतं सौहृदादथ सारथिम् ॥
அந்த (யம்) ஆதி புருஷனான ஸ்ரீ கிருஷ்ணரை, நம் தாய்வழி உறவினன் (மாதுலேயம்) என்றும், நம் பிரியமுள்ள நண்பன் (ப்ரியம் மித்ரம்) என்றும், என்றுமே இருக்கும் நம் நலம் விரும்பி (சுஹ்ருத்தமம்) என்றும், எதையும் நடத்தி காட்டும் திறன்கொண்டவர் (அகரோ:) என்றும், சரியான ஆலோசனை தருபவர் (சசிவம்) என்றும், நமக்காக தூது சென்றவர் (தூதம்) என்றும், நம் இதயம் தெரிந்து பழகுபவர் (சௌஹ்ருதாத்) என்றும், மேலும் (அத), ரதத்தை ஓட்டும் தேரோட்டி (சாரதிம்) என்றும் நீ நினைத்து இருக்கலாம்.
சர்வ ஆத்மன: சம த்ருஷோ ஹி
அத்வயஸ்ய அனஹங் க்ருதே: |
தத்க்ருதம் மதி வைசம்யம்
நிரவத் யஸ்ய ந க்வசித் ||
सर्वात्मन: समदृशो ह्यद्वयस्यानहङ्कृते: ।
तत्कृतं मतिवैषम्यं निरवद्यस्य न क्वचित् ॥
ததாபி ஏகாந்த பக்தேசு
பஸ்ய பூப அனுகம்பிதம் |
யன்மே அசூன் த்யஜத:
சாஷாத் க்ருஷ்ணோ தர்சனம் ஆகத:॥
तथाप्येकान्तभक्तेषु पश्य भूपानुकम्पितम् ।
यन्मेऽसूंस्त्यजत: साक्षात्कृष्णो दर्शनमागत: ॥
ஏகாந்த பக்தி கொண்டவர்களுக்கே (ஏகாந்த பக்தேசு) பரமாத்மா தரிசனம் (பஸ்ய) கிடைக்கும் என்ற போதும் (தாதாபி), பூமியை வென்றவனே (பூப:)! கருணையின் காரணத்தால் (அனுகம்பிதம்), எந்த சமயத்தில் என் (யன்மே) வாழ்க்கையை (அசூன்) முடித்துக்கொள்ள (த்யஜத:) நினைத்து இருந்தேனோ, அந்த சமயத்தில், சாஷாத் க்ருஷ்ணரே (சாஷாத் க்ருஷ்ணோ) எனக்கு முன் வந்து (ஆகத:) தரிசனம் தந்து கொண்டிருக்கிறார்.
பக்த்யா ஆவேஸ்ய மனோ யஸ்மின்
வாசா யந்நாம கீர்தயன் |
த்யஜந் கலேவரம் யோகி
முச்யதே காம கர்மபி:॥
भक्त्यावेश्य मनो यस्मिन् वाचा यन्नाम कीर्तयन् ।
त्यजन् कलेवरं योगी मुच्यते कामकर्मभि: ॥
எவருக்கு (யஸ்மின்) அலையாத ஒரே எண்ணமும் (பக்த்யா), தீவிர ஈடுபாடு (ஆவேஸ்ய) கொண்ட மனமும் (மனோ), வாக்கினாலும் அந்த கிருஷ்ண நாமத்தை சொல்லிக்கொண்டே (வாசா யந்நாம கீர்தயன்), இருக்கும் நிலையும் ஏற்படுமோ, அப்படிப்பட்ட யோகிகள் உடலை விட்டு (கலேவரம்) தன்னை பிரித்து (த்யஜந்) கொள்ளும் போது, ஆசையினால் (காம) தான் செய்த (கர்மபி:) புண்ணிய-பாப இரட்டையிலிருந்தும் விடுபடுவார்கள் (முச்யதே).
ச தேவதேவோ பகவான் ப்ரதீக்ஷதாம்
கலேவரம் யாவத் இதம் ஹினோமி அஹம் |
ப்ரசன்ன ஹாச அருண லோசன
உல்லஸத் முகாம்புஜோ த்யானபத: சதுர் புஜ: ||
स देवदेवो भगवान् प्रतीक्षतां
कलेवरं यावदिदं हिनोम्यहम् ।
प्रसन्नहासारुणलोचनोल्लस-
न्मुखाम्बुजो ध्यानपथश्चतुर्भुज: ॥
ஸூத உவாச
யுதிஷ்டிரஸ் தத் ஆகர்ண்ய
சயானம் சரபஞ்சரே |
அப்ருச்சத் விவிதான் தர்மாந்
ருஷீனாம் ச அனு ஸ்ருண்வதாம் ||
सूत उवाच
युधिष्ठिरस्तदाकर्ण्य शयानं शरपञ्जरे ।
अपृच्छद्विविधान्धर्मानृषीणां चानुशृण्वताम् ॥
அம்பு படுக்கையில் (சரபஞ்சரே) படுத்து இருக்கும் (சயானம்) பீஷ்மர் இவ்வாறு (தத்) பேசியதை கேட்ட (ஆகர்ண்ய) யுதிஷ்டிரர், ரிஷிகள் பலர் (ருஷீனாம் ச) சூழ்ந்து இதை கேட்டு கொண்டு இருக்க (அனு ஸ்ருண்வதாம்), தனக்கு பல வித தர்மங்களை (விவிதான் தர்மாந்) உபதேசிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார் (அப்ருச்சத்).
புருஷ ஸ்வபாவ விஹிதான்
யதா வர்ணம் யத ஆஸ்ரமம் |
வைராக்ய ராக உபாதிப்யாம்
ஆம்நாத உபய லக்ஷணான் ||
पुरुषस्वभावविहितान् यथावर्णं यथाश्रमम् ।
वैराग्यरागोपाधिभ्यामाम्नातोभयलक्षणान् ॥
தான-தர்மான் ராஜ-தர்மான்
மோஷ தர்மான் விபாக ச: |
ஸ்த்ரீ-தர்மான் பகவத்-தர்மான்
சமாஸ வ்யாஸ யோகத:॥
दानधर्मान् राजधर्मान् मोक्षधर्मान् विभागश: ।
स्त्रीधर्मान् भगवद्धर्मान् समासव्यासयोगत: ॥
தர்ம அர்த காம மோஷாம்ஸ் ச
ஸஹ உபாயான் யதா முனே |
நாநா ஆக்யாந இதிஹாசேசு
வர்ணயாம் ஆஸ தத்வ வித் ||
धर्मार्थकाममोक्षांश्च सहोपायान् यथा मुने ।
नानाख्यानेतिहासेषु वर्णयामास तत्त्ववित् ॥
அறம், பொருள், இன்பம், வீடு (தர்ம அர்த காம மோஷாம்ஸ் ச) என்ற நான்கு புருஷார்த்தங்களை ரிஷிகள் சொன்னபடி (யதா முனே) பல உதாரணங்களுடன் (ஸஹ உபாயான்), பல (நாநா) நடந்த சரித்திரங்கள் (இதிஹாசேசு) சொன்னபடியே (ஆக்யாந) வர்ணித்து (வர்ணயாம் ஆஸ) தத்துவத்தை விளக்கினார் (தத்வ வித்)
கால: ப்ரத்யுபஸ்தித: |
யோ யோகின: சந்த ம்ருத்யோர்
यो योगिनश्छन्दमृत्योर्वाञ्छितस्तूत्तरायण: ।
धर्मं प्रवदतस्तस्य स काल: प्रत्युपस्थित: ||
விசுத்தயா தாரனயா ஹத அசுப:
தத் ஈக்ஷயா இவ ஆசு கதா யுத ஸ்ரம: |
நிவ்ருத்த சர்வேந்த்ரிய வ்ருத்தி விப்ரம:
துஷ்டாவ ஜன்யம் விஸ்ருஜன் ஜனார்தனம் ||
विशुद्धया धारणया हताशुभ-
स्तदीक्षयैवाशु गतायुधश्रम: ।
निवृत्तसर्वेन्द्रियवृत्तिविभ्रम-
स्तुष्टाव जन्यं विसृजञ्जनार्दनम् ॥
ஸ்ரீபீஷ்ம உவாச
இதி மதி: உப கல்பிதா வித்ருஷ்ணா
பகவதி ஸாத்வத புங்கவே விபூம்ணி |
ஸ்வ சுகம் உபகதே க்வசித் விஹர்தும்
ப்ரக்ருதிம் உபேயுஷி யத் பவ ப்ரவாஹ: ||
श्रीभीष्म उवाच
इति मतिरुपकल्पिता वितृष्णा
भगवति सात्वतपुङ्गवे विभूम्नि ।
स्वसुखमुपगते क्वचिद्विहर्तुं
प्रकृतिमुपेयुषि यद्भवप्रवाह: ॥
எல்லா ஆசைகளிலிருந்தும் விடுபட்டு (வித்ருஷ்ணா) பாண்டவர்கள் போன்ற சாதுக்களுக்கு (ஸாத்வத) ரக்ஷகனாக, நாதனாக (புங்கவே) இருக்கும், ப்ரபுவுக்கும் ப்ரபுவாக இருக்கும் (விபூம்ணி) பகவானிடமே (பகவதி) என் மனம் (இதி மதி:) சமர்ப்பணமாகட்டும் (உப கல்பிதா). தானே ஆனந்த ஸ்வரூபியாக (ஸ்வ சுகம்) இருந்தும் (உபகதே), சில சமயம் (க்வசித்), கருணையின் காரணமாக(விஹர்தும்) தன் மாயா சக்தியை கொண்டு, மூன்று குணங்கள் பிரவாகமாக (யத் பவ ப்ரவாஹ:) ஓடும் உலகை (ப்ரக்ருதிம்) தானே ஆசையோடு (உபேயுஷி) பிரகடனம் செய்தார்.
த்ரிபுவன கமனம் தமால வர்ணம்
ரவிகர கௌர வராம்பரம் ததானே |
வபு: அலக குல ஆவ்ருத அநந அப்ஜம்
விஜய சகே ரதிரஸ்து மே அனவத்யா ||
त्रिभुवनकमनं तमालवर्णं
रविकरगौरवराम्बरं दधाने ।
वपुरलककुलावृताननाब्जं
विजयसखे रतिरस्तु मेऽनवद्या ॥
மூன்று உலகும் (எதிரிகள் கூட) சொக்கி போகும் அழகுடன் (த்ரிபுவன கமனம்), தமால மரத்தில் காணப்படும் நீல வர்ணமாக காட்சி கொடுத்து கொண்டு (தமால வர்ணம்), அந்த நீல வர்ணத்துக்கு ஏற்றவாறு, சூரிய கிரணத்தில் (ரவிகர) காணப்படும் தங்கம் (கௌர) போல ஜொலிக்கும் வஸ்திரத்தை (வராம்பரம்) உடுத்திக்கொண்டு கொண்டிருக்கும் (ததானே), அந்த கண்ணனின் திவ்யமான தேகத்தில்,(வபு:) தவழும் (ஆவ்ருத) சுருண்ட கேசமும் (அலக குல) அன்று மலர்ந்த தாமரை போன்ற முகமும் கொண்ட (அநந அப்ஜம்), அர்ஜுனனின் நண்பனாக (விஜய சகே) இருக்கும் அந்த சாரதியிடமே (ரதி), சிறிதும் சந்தேகமில்லாமல் (மே அனவத்யா) என் மனம் லயிக்கிறது (ரதிரஸ்து).
யுதி துரக ரஜோ விதூம்ர விஷ்வக்
கச லுலித ஸ்ரமவாரி அலங்க்ருத ஆஸ்யே |
மம நிசித சரைர் விபித்யமான
த்வசி விலசத் கவசே அஸ்து க்ருஷ்ண ஆத்மா ||
युधि तुरगरजोविधूम्रविष्वक्-
कचलुलितश्रमवार्यलङ्कृतास्ये ।
मम निशितशरैर्विभिद्यमान-
त्वचि विलसत्कवचेऽस्तु कृष्ण आत्मा ॥
அன்று, பிருந்தாவனத்தில் மாடு மேய்க்கும் போது, அந்த பசுமாடுகள் கிளப்பிய பிருந்தாவன மண்ணை தன் தலையில் ஏந்திய கண்ணன், இந்த பாரத யுத்த களத்தில் (யுதி) பாண்டவர்களுக்காக 18 நாளும் தேரோட்டி, அந்த குதிரைகள் (துரக) கிளப்பிய புழுதி (ரஜோ) செம்மண் (விதூம்ர) சந்தன குழம்பாக அந்த அலைகின்ற (விஷ்வக்) சுருண்ட கேசத்தில் (கச) தாமரையில் உள்ள மகரந்த பிஞ்சம் படர்ந்தது போல படர்ந்து இருக்க (லுலித), முத்து வியர்வை (ஸ்ரமவாரி) திவ்யமான திருமுகத்தில் அரும்ப, அந்த வியர்வை துளிகள் அந்த கேசத்தின் நுனியில் பனி முத்துக்களை போல அரும்பி இருக்க, அதுவே ஒரு முத்து பந்தல் போட்டு அலங்கரித்தது (அலங்க்ருத) போல, அன்று இந்த கண்ணனின் திருமுகம் (ஆஸ்யே) இருந்தது .
சபதி சகி வச: நிஷம்ய மத்யே
நிஜ பரயோர் பலயோ ரதம் நிவேஸ்ய |
ஸ்திதவதி பர-சைனிக ஆயு: அக்ஷணா
ஹ்ருதவதி பார்த்த சகே ரதி: மம அஸ்து ||
सपदि सखिवचो निशम्य मध्ये
निजपरयोर्बलयो रथं निवेश्य ।
स्थितवति परसैनिकायुरक्ष्णा
हृतवति पार्थसखे रतिर्ममास्तु ॥
வ்யவஹித ப்ருதனா முகம் நிரீக்ஷ்ய
ஸ்வஜந வதாத் விமுகஸ்ய தோஷபூத்தயா |
குமதிம் அஹரத் ஆத்ம வித்யயா
ய: சரண ரதி: பரமஸ்ய தஸ்ய மே அஸ்து ||
व्यवहितपृतनामुखं निरीक्ष्य
स्वजनवधाद्विमुखस्य दोषबुद्ध्या ।
कुमतिमहरदात्मविद्यया य-
श्चरणरति: परमस्य तस्य मेऽस्तु ॥
ஸ்வ நிகமம் அபஹாய மத் ப்ரதிஞாம்
ருதம் அதி கர்தும் அவப்லுதோ ரதஸ்த: |
த்ருத ரத சரண: அப்யயாத் சலத்கு:
ஹரிர் ஏவ ஹந்தும் இபம் கத உத்தரீய: ||
स्वनिगममपहाय मत्प्रतिज्ञा-
मृतमधिकर्तुमवप्लुतो रथस्थ: ।
धृतरथचरणोऽभ्ययाच्चलद्गु-
र्हरिरिव हन्तुमिभं गतोत्तरीय: ॥
'ஸ்ரீகிருஷ்ணை நாளைய போரில் ஆய்தம் எடுக்க வைப்பேன்' என்று நான் (மத்) உரக்க சொல்லி செய்த (ருதம்) சபதத்தை (ப்ரதிஞாம்) காக்க, சத்தியமே ஸ்வரூபமான ஸ்ரீகிருஷ்ணன், 'ஆயுதம் எந்த மாட்டேன்' என்று தான் செய்த சபதத்தை (ஸ்வ நிகமம்) எனக்காக விட்டு கொடுத்து (அபஹாய), அன்று போரில் என்னால் பாண்டவர்கள் சேனைக்கு பெரிய நாசம் உண்டாவதை பார்த்து, ஆத்திரத்தோடு, திடீரென்று 'பார்த்தா! இதோ… பீஷ்மரை நானே கொல்கிறேன் பார்..!' என்று கூறிக்கொண்டே (அதி கர்தும்), தன் மேல்-அங்கவஸ்திரத்தை (உத்தரீய:) தான் அமர்ந்த இடத்தில் போட்டு விட்டு (கத), நீல ஜோதி போல, ரதத்திலிருந்து (ரதஸ்த:) குதித்து (அவப்லுதோ), ஒரு ரத சக்கரத்தையே ஆயுதமாக எடுத்துக்கொண்டு (த்ருத ரத), என்னை நோக்கி துள்ளி கொண்டு (அப்யயாத்) பூமி அதிர ஒரு சிங்கம் (ஹரிர்) எப்படி (ஏவ) யானையை (இபம்) தாக்க வருமோ (ஹந்தும்) அப்படி வந்தாயே! பக்தனான என் சபதத்தை காக்க, தன் சத்தியத்தை கூட விட்டு, சக்கரத்தை ஏந்தி வந்தாயே, கிருஷ்ணா!.
ஷித விஷிக ஹதோ விஷீர்ண தம்ச:
க்ஷதஜ பரிப்லுத ஆததாயினோ மே |
ப்ரசபம் அபிசசார மத்-வத-அர்தம்
ச பவது மே பகவான் கதிர் முகுந்த: ||
शितविशिखहतो विशीर्णदंश:
क्षतजपरिप्लुत आततायिनो मे ।
प्रसभमभिससार मद्वधार्थं
स भवतु मे भगवान् गतिर्मुकुन्द: ॥
விஜய ரத குடும்ப ஆத்த-தோத்ரே
த்ருத-ஹய ரஷ்மினி தச் ஸ்ரியா ஈக்ஷணீயே |
பகவதி ரதிரஸ்து மே முமூர்ஷோ:
யம் இஹ நிரீக்ஷ்ய ஹதா கதா: ஸ்வரூபம் ||
विजयरथकुटुम्ब आत्ततोत्रे
धृतहयरश्मिनि तच्छ्रियेक्षणीये ।
भगवति रतिरस्तु मे मुमूर्षो-
र्यमिह निरीक्ष्य हता गता: स्वरूपम् ॥
லலித கதி விலாச வல்கு ஹாஸ
ப்ரணய நிரீக்ஷண கல்பித உருமானா: |
க்ருதம் அனுக்ருதவத்ய உன்மத அந்தா:
ப்ரக்ருதிம் அகன் கில யஸ்ய கோப வத்வ :॥
ललितगतिविलासवल्गुहास-
प्रणयनिरीक्षणकल्पितोरुमाना: ।
कृतमनुकृतवत्य उन्मदान्धा:
प्रकृतिमगन् किल यस्य गोपवध्व: ॥
முனிகன ந்ருப வர்ய சங்குலே அந்த:
சதசி யுதிஷ்டிர ராஜசூய ஏஷாம் |
அர்ஹனம் உபபேத ஈக்ஷணீயோ
மம த்ருஷி கோசர ஏஷ ஆவி: ஆத்மா ||
मुनिगणनृपवर्यसङ्कुलेऽन्त:
सदसि युधिष्ठिरराजसूय एषाम् ।
अर्हणमुपपेद ईक्षणीयो
मम दृशिगोचर एष आविरात्मा ॥
அன்று என் பேரன் "யுதிஷ்டிரன்" ராஜசூய யாகம் செய்த போது, அந்த சபையில் (அந்த: சதசி) கூடியிருந்த (சங்குலே) ரிஷிகளும் (முனிகன), பல நாட்டு அரசர்களும் (ந்ருப வர்ய) தங்களில் உயர்ந்தவராக (ஏஷாம்) ஸ்ரீ கிருஷ்ணனையே ஏற்று, தகுந்த முதல் மரியாதை (அர்ஹனம்) செய்ய, அதை ஏற்று கொண்ட (உபபேத ) அந்த கண்கவரும் காட்சியை (ஈக்ஷணீயோ) அங்கு இருந்து (ஏஷ ஆவி:) அன்று நான் ஏன் கண்களால் அருகிலேயே பார்த்தேன் (மம த்ருஷி கோசர). அந்த ஸ்ரீ கிருஷ்ணனை என் மனதில் (ஆத்மா) நினைத்து வழிபடுகிறேன்.
தம் இமிம் அஹம் அஜம் சரீர பாஜாம்
ஹ்ருதி ஹ்ருதி திஷ்டிதம் ஆத்ம கல்பிதானாம் |
ப்ரதி த்ருஷம் இவ ந ஏகதா அர்கம் ஏகம்
சமதிகத அஸ்மி விதூத பேத மோஹ: ||
तमिममहमजं शरीरभाजां
हृदि हृदि धिष्ठितमात्मकल्पितानाम् ।
प्रतिदृशमिव नैकधार्कमेकं
समधिगतोऽस्मि विधूतभेदमोह: ॥
ஸூத உவாச (சூத பௌராணிகர் பேசுகிறார்)
க்ருஷ்ண ஏவம் பகவதி மனோ
வாக் த்ருஷ்டி வ்ருத்திபி: |
ஆத்மனி ஆத்மானம் ஆவேஸ்ய
சோ அந்த: ஸ்வாச உபாரமத் ||
सूत उवाच
कृष्ण एवं भगवति मनोवाग्दृष्टिवृत्तिभि: ।
आत्मन्यात्मानमावेश्य सोऽन्त:श्वास उपारमत् ॥
ஸ்ரீ கிருஷ்ணனே (க்ருஷ்ண ஏவம்) பரமாத்மா (பகவதி) என்று மனதாலும் (மனோ), வாக்காலும் (வாக்), கண்களாலும் (த்ருஷ்டி), செயலாலும் (வ்ருத்திபி:) ஸ்மரித்து கொண்டே, பீஷ்மரின் ஆத்மா (ஆத்மானம்), பரமாத்மாவோடு (ஆத்மனி) கலந்தது (ஆவேஸ்ய). அவரின் (சோ) சுவாசம் (அந்த: ஸ்வாச) அமைதியானது (உபாரமத்).
சம்பத்யமானம் ஆஞாய பீஷ்மம்
ப்ரஹ்மணி நிஷ்கலே |
சர்வே பபூவுஸ்தே தூஷ்னீம்
வயாம்சி இவ தினாத்யயே ||
सम्पद्यमानमाज्ञाय भीष्मं ब्रह्मणि निष्कले ।
सर्वे बभूवुस्ते तूष्णीं वयांसीव दिनात्यये ॥
பீஷ்மர் (பீஷ்மம்) காலத்துக்கும் அப்பாற்பட்ட (நிஷ்கலே) பரப்ரம்மத்துடன் (ப்ரஹ்மணி), கலந்து விட்டார் (சம்பத்யமானம்) என்று அறிந்ததும் (ஆஞாய), மாலை ஆனதும் (தினாத்யயே) அமைதியாக பறவைகள் (வயாம்சி) தன் வீட்டுக்கு திரும்புவது போல (இவ), பீஷ்மரை சுற்றி இருந்த அனைவரும் (சர்வே பபூவுஸ்தே) அமைதியாக (தூஷ்னீம்) இருந்தனர்.
தத்ர துந்துபயோ நேதுர்
தேவ மானவ வாதிதா: |
சசம்சு: சாதவோ ராக்யாம்
காத்பேது: புஷ்ப வ்ருஷ்டய:॥
तत्र दुन्दुभयो नेदुर्देवमानववादिता: ।
शशंसु: साधवो राज्ञां खात्पेतु: पुष्पवृष्टय: ॥
தஸ்ய நிர்ஹரந ஆதீனி
சம்பரே தஸ்ய பார்கவ |
யுதிஷ்டிர: காரயித்வா
முஹூர்தம் துக்கிதோ பவத் ||
तस्य निर्हरणादीनि सम्परेतस्य भार्गव ।
युधिष्ठिर: कारयित्वा मुहूर्तं दु:खितोऽभवत् ॥
துஷ்டுவுர் முனயோ ஹ்ருஷ்டா:
க்ருஷ்ணம் தத் குஹ்ய நாமபி: |
ததஸ்தே க்ருஷ்ண ஹ்ருதயா:
ஸ்வ ஆஸ்ரமான் ப்ரயயு: புன: ||
तुष्टुवुर्मुनयो हृष्टा: कृष्णं तद्गुह्यनामभि: ।
ततस्ते कृष्णहृदया: स्वाश्रमान् प्रययु: पुन: ॥
ததோ யுதிஷ்டிரோ கத்வா
சஹ க்ருஷ்ணோ கஜாஹ்வயம் |
பிதரம் சாந்த்வயாம் ஆஸ
காந்தாரீம் ச தபஸ்வினீம் ||
ततो युधिष्ठिरो गत्वा सहकृष्णो गजाह्वयम् ।
पितरं सान्त्वयामास गान्धारीं च तपस्विनीम् ॥
பித்ரா ச அனுமதோ ராஜா
வாசுதேவ அனுமோதித: |
சகார ராஜ்யம் தர்மேன
பித்ரு பைதாமாஹம் விபு :॥
पित्रा चानुमतो राजा वासुदेवानुमोदित: ।
चकार राज्यं धर्मेण पितृपैतामहं विभु: ॥
பெரியப்பா த்ருதராஷ்ட்ரனின் (பித்ரா) அனுமதியோடு (அனுமதோ), மேலும் (ச) வாசுதேவ கிருஷ்ணனின் அனுமதியையும் பெற்று (அனுமோதித:), யுதிஷ்டிர மகாராஜன் (ராஜா), தன் தந்தை வழி பேரரசர்கள் புகழ் (விபு:) பெரும் வண்ணம், உலக ராஜ்யத்தை (ராஜ்யம்) தர்மம் (தர்மேன) மீறாமல் நடத்தி (சகார) வந்தார்.
குருநாதர் துணை