Followers

Search Here...

Showing posts with label வால்மீகி. Show all posts
Showing posts with label வால்மீகி. Show all posts

Saturday 23 April 2022

குணவான் என்றால் என்ன? வீர்யவான் என்றால் என்ன? ராமரே 'குணவான்', ராமரே 'வீர்யவான்' என்று தமிழரான வால்மீகி 'ராமாயணம்' காட்டுகிறார். தெரிந்து கொள்வோம்.

'குணவான்' என்றால் என்ன? வீர்யவான் என்றால் என்ன? '

நம்மிடம் பல நல்ல குணங்கள் இருக்கலாம். அதற்காக நம்மை குணவான் என்று சொல்லிவிட முடியாது.

'சரணாகதி செய்த பிறகு, பிறருடைய குற்றத்தை அறிந்தும், மன்னிப்பது' என்பது உயர்ந்த குணம்.


'தன்னை நம்பியவர்கள் செய்யும்/செய்த குற்றங்களை மன்னிக்கும் குணம் யாரிடம் இருக்குமோ!' அவர்களை 'குணவான்' என்று சொல்கிறோம்.

எப்படிப்பட்ட எதிரியானாலும், எதிர்த்து வெற்றி கொள்ளும் மஹாவீரனை, "வீர்யவான்" என்று சொல்கிறோம்.

'எதிரியை தண்டிக்கும் மஹாவீரனாக இருந்தும், இப்படி ஒரு குணவான், என் சமகாலத்தில் வாழ்கிறாரா? எதிரி என்று தெரிந்தும், குற்றவாளி என்று தெரிந்தும், தண்டிக்கப்படவேண்டியவன் என்று தெரிந்தும், தன்னை சரணமடைந்தால் மன்னிக்கும் குணம் கொண்டவன் உலகில் இப்பொழுது இருக்கிறாரா?' என்று அன்பில் என்ற தேசத்தில் அவதரித்த வால்மீகி, நாரதரை கேட்கிறார்.

कोन्वस्मिन् सांप्रतम् लोके 

गुणवान् कः च वीर्यवान् |

- வால்மீகி ராமாயணம்

40000 ராக்ஷஸ படையோடு, கர-தூஷணன் ராமபிரானை கொல்ல வந்தான். தனி ஒருவனாக ராமபிரான் மட்டுமே நின்று, 40000 பேரையும் ஒழித்து காட்டினார்.

ராவணன் 'பேடித்தனமாக' ராமபிரான், லக்ஷ்மணன் இல்லாத சமயத்தை ஏற்படுத்தி, சீதாதேவியை கடத்தி சென்றான்.


ராமபிரான் பஞ்சவடியில் இருந்து சீதையை காப்பாற்ற இலங்கை வந்து போர் செய்து சீதையை மீட்க நின்றார்.


'சீதாதேவியை ராமபிரான் இல்லாத சமயத்தில் கடத்தி, இங்கே கொண்டு வந்தது மிகப்பெரிய தவறு' என்று சொன்ன விபீஷணனை, ராவணன் எட்டி உதைத்து வெளியேற்றிய பிறகு, ராமபிரானை சரணாகதி செய்ய வருகிறான். 

சுக்ரீவன், 'ராக்ஷஸனான விபீஷணன், போர் நடக்க போகும் சமயத்தில், எதிரி பக்கத்தில் இருந்து வந்து இருக்கிறான். மஹா ஆபத்து' என்றான்.

ராவணனை நேருக்கு நேர் போர் செய்து வீழ்த்தும் மஹாவீரனாக இருந்தும், 'என்னிடம் சரணம் என்று ஒருவன் வந்தால், அவனுக்கு அபயம் கொடுப்பது எனக்கு விரதம். விபீஷணனை மட்டுமல்ல, அவனோடு அந்த ராவணனே வந்து இருந்தால் (रावणः स्वयम्) அவனையும் மன்னித்து விடுவேன்" என்றார்.

आनयैनं हरिश्रेष्ठ

दत्तमस्याभयं मया ।

विभीषणो वा सुग्रीव

यदि वा रावणः स्वयम्

- வால்மீகி ராமாயணம்

தன்னை அண்டியவன் செய்த குற்றத்தை மன்னிக்கும் குணம் கொண்ட ஒரு மனிதனை பார்ப்பதே அரிது. ராமபிரானுக்கோ, கடல் போன்ற குணங்களில் இதுவும் ஒரு குணமாக இருந்தது.


இந்த இடத்தில் சாதாரண மனிதன் எவன் இருந்திருந்தாலும், "ராவணன் செய்த ஒரு குற்றத்துக்கு, தண்டனை ஒன்றே வழி. மன்னிப்புக்கு இடமே இல்லை" என்று சொல்லி இருப்பான்.


சீதாதேவியை தொலைத்து, பஞ்சவடியில் (மஹாராஷ்டிரா) இருந்து நடந்து, ராமேஸ்வரம் வரை வந்து, 5 நாளில் வானரர்கள் பாலம் அமைக்க, கடும்கோபத்துடன் போருக்கு தயாராக இருந்த சமயத்தில், விபீஷணன் என்று ஒருவன் சரணாகதி செய்ய வருகிறான் என்றதும், "அவனோடு, ராவணன் வந்திருந்தாலும் அபயம் கொடுக்கிறேன்" என்று சொல்வதை பார்க்கும் போது, ராமபிரான் "குணவான்" என்று தெரிகிறது.  


சீதாதேவியை கடத்தினான் என்ற குற்றத்துக்கு தண்டனை கொடுக்க வந்த ராமபிரான், ராவணனை மன்னிக்க அப்பொழுதும் தயாராக இருந்தார் என்று பார்க்கும் போது தான், "பதித பாவன சீதாராம்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிகிறது.


குணவானாக இருக்கும் ராமபிரான் சரித்திரத்தை, அன்பில் என்ற இடத்தில் அவதரித்த தமிழன் வால்மீகி, கவி நடையாக எழுதுகிறார்.


நல்ல மனிதனாக வாழ நினைக்கும் எந்த மனிதனும், இந்த உயர் பண்பை கொண்ட ராமபிரானை வணங்குவார்கள்.

What are the Qualities of Ram? ராமபிரானின் குணங்களை அறிந்த பிறகு, யார் தான் இவரை வழிபட மாட்டேன் என்பார்கள்? ராமபிரானின் குணங்களை அறிவோம்.. வால்மீகி ராமாயணம்.


Sunday 17 April 2022

அஸூயை இல்லாதவர் ராமர். மாத்ஸர்யம் என்றால் பொறாமை. அஸூயை என்றால் என்ன? தெரிந்து கொள்வோம்.

 அஸூயை இல்லாத ராமபிரான்...

நமக்கு, சிலர் செய்யும் குற்றத்தை பார்த்து கோபம் வரும். 

அவர்கள் குற்றத்தை பார்த்த பிறகு, அவர்களிடம் உள்ள குணங்கள் கூட தோஷமாக தோன்றும்.

இதற்கு 'அஸூயை' என்று பெயர்.


ஒருவர் குற்றத்தை பார்த்த பிறகும், அவர்களிடம் உள்ள மற்ற குணங்கள் தோஷமாக பார்க்காமல் இருப்பதற்கு, 'அனஸூயை' என்று பெயர்.


'அஸூயை இல்லாதவர் ராமபிரான்' என்று தமிழ் முனிவரான வால்மீகி, 24 வயது ராமபிரானை பார்த்து  சொல்கிறார். 

स हि रूपोपपन्नश्च वीर्यवान् अनसूयकः |

भूमौ अनुपमः सूनुर्गुणै: दशरथोपमः || 

- வால்மீகி ராமாயணம்


ராவணன் 'பேடித்தனமாக' ராமபிரான், லக்ஷ்மணன் இல்லாத சமயத்தை ஏற்படுத்தி, சீதாதேவியை கடத்தி சென்றான்.


ராமபிரான் பஞ்சவடியில் இருந்து கிளம்பி, சீதையை காப்பாற்ற இலங்கை வந்து போர் செய்கிறார்.


ராவணன் முதல் முறையாக ராமபிரானுடன் போர் செய்ய நேருக்கு நேர் வருகிறான்.

அன்று வரை, ராவணன் எந்த போரிலும் தோல்வியை பார்க்காதவன். மஹா வீரன்.

சீதாதேவியை கடத்தியது ராவணன் செய்த குற்றம். 

மற்றபடி, அவனும் மஹாவீரன் தான்.


இவன் செய்த ஒரு குற்றத்துக்காக, வீணாக இவன் வீரத்தை குற்றம் சொல்ல ஆசைப்படவில்லை ராமபிரான்.


முதல் முறை போர் புரிய வந்த ராவணனின் தேரை உடைத்து, கிரீடத்தை தட்டி, அவன் தேர் கொடியை உடைத்து தள்ள, யாரிடமும் இது வரை தோற்று அறியாத ராவணன், 38 வயது ராமபிரானிடம் தோற்றான். 


தன்னிடம் போர் புரிவதற்கு முன், ராவணன் சுக்ரீவனை, கவாக்ஷன், கவயன், ருஷபன், ஜ்யோதிமுகன், நபன், நீலன், ஹனுமான், லக்ஷ்மணன் அனைவரையும் கீழே விழ செய்து, கடைசியாக ராமபிரானிடம் போர் புரிய வந்தான்.


இவர்கள் அனைவரையும் தோற்கடித்த வீரன் என்பதால், ராமபிரான் தோற்று நிற்கும் ராவணனை பார்த்து,

"ராவணா! நீ பெரிய காரியத்தை செய்துள்ளாய். மஹாபலம் கொண்ட என் சேனையை எதிர்த்து வென்றுள்ளாய்.

பலருடன் போர் செய்ததால் நீ தோற்று இருக்கலாம். அதனால் உன்னை இன்று யமலோகம் அனுப்ப நான் நினைக்கவில்லை" என்று அஸூயையே இல்லாமல் சொல்கிறார்.

कृतं त्वया कर्म महत् सुभीमं

हतप्रवीरश्च कृतस्त्वयाऽहम् ।

तस्मात्परिश्रान्त इव व्यवस्य

न त्वां शरैर्मृत्युवशं नयामि ॥ 

- வால்மீகி ராமாயணம்

பெரும் அவமானத்தோடு திரும்பி நடந்து செல்கிறான் ராவணன்.

இந்த இடத்தில் சாதாரண மனிதன் எவன் இருந்திருந்தாலும், ராவணன் செய்த ஒரு குற்றத்துக்கு, அஸூயை கொண்டு, அவன் வீரத்தையும் கேலி செய்து, "பேடி ராவணா! நான் இல்லாத போது சீதாதேவியை கடத்தினாயே? நீயெல்லாம் ஒரு வீரனா?" என்று அவன் வீரத்தை குறையாக சொல்லி இருப்பான்.


சீதாதேவியை கடத்தினான் என்ற குற்றத்துக்கு தண்டனை கொடுக்க வந்த ராமபிரான், ராவணனிடம் உள்ள மற்ற நல்ல குணங்களையோ, திறமையையோ கேலியாகவோ, தோஷமாகவோ பேசவே இல்லை.


'ஒருவரிடம் உள்ள குற்றத்துக்காக, அவரிடம் உள்ள நல்ல குணத்தையும் தோஷமாக சொல்வது' - அஸூயை.


இந்த அஸூயையே இல்லாதவர் ராமபிரான் என்று வால்மீகி சொல்கிறார். 

மனிதனாக வாழ நினைக்கும் எந்த மனிதனும், இந்த உயர் பண்புகள் கொண்ட ராமபிரானை வணங்காமல் இருக்கமுடியாது.


What are the Qualities of Ram? ராமபிரானின் குணங்களை அறிந்த பிறகு, யார் தான் இவரை வழிபட மாட்டேன் என்பார்கள்? ராமபிரானின் குணங்களை அறிவோம்.. வால்மீகி ராமாயணம்.

Tuesday 12 October 2021

ராமபிரான் சொன்ன சொல் பொய் போனதா? தெரிந்து கொள்வோம் --- வால்மீகி ராமாயணம்

சீதையை ராவணன் கடத்தி சென்று விட்டான். 

ராமபிரான், 

மரமே சீதையை கண்டாயா?

நதியே சீதையை கண்டாயா?

என்று கதறினார்..


உண்மையில் மரத்துக்கு அதிபதியான , நதிக்கு அதிபதியான தேவதைகளை தான் ராமபிரான் கூப்பிட்டார்.

தேவதைகள், ராமபிரானுக்கு பதில் சொல்லவில்லை.


"தர்மத்தில் இருப்பவனை தர்மம் காக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது. தர்மத்தில் இருக்கும் எனக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்து இருக்கும் போது, தர்மத்தை காக்க வேண்டிய தேவதைகள் காப்பற்றாமல்,  அமைதியாக இருக்கிறார்களே!" என்று புலம்பினார்.


"தான் மனிதன் என்று நினைத்துத்தானே, தேவர்கள் பதில் சொல்லாமல் அலட்சியம் செய்கிறார்கள்" என்று கோபப்பட்டார்.

உடனே தன்னுடைய வில்லில் அம்பை பூட்டி, 

"இந்த உலகம் முழுவதையும் நான் தலைகீழாக மாற்றி விடுகிறேன்." என்று  ராமபிரான் சொல்ல, லக்ஷ்மணன் காலில் விழுந்து நமஸ்கரித்து சமாதானம் செய்து, மேலும் தேடி பார்க்கலாம் என்று அழைத்து கொண்டு சென்றார்.





स देव गन्धर्व मनुष्य पन्नगं 

जगत् सशैलम् परिवर्तयामि अहम्।।

ஸ தேவ கந்தர்வ மனுஷ்ய பன்னகம்

ஜகத் ஸ சைலம் பரிவர்தயாமி அஹம் ||

வால்மீகி ராமாயணம்


ராமபிரானுக்கு "ஒரு சொல். ஒரு வில்" என்று ஒரு பெருமை உண்டு.


"இந்த உலகை மாற்றி காட்டுகிறேன்" என்று சொல்லிவிட்டார்.

லக்ஷ்மணன் சமாதானம் செய்து விட்டார்.

இருந்தாலும், அவர் சொல் பொய் போனதாக ஆகி விட்டதா?


ராமபிரான் சொல் ஒரு போதும் பொய் போனதில்லை.


சீதாதேவியை தேடி வந்த ராமபிரான், ஜடாயு சீதாதேவிக்காக உயிரை தியாகம் செய்து விட்டார், என்றதும், 

"ஞானம் அடைந்தால் மட்டுமே மோக்ஷம். பறவை விலங்குகளை புதைப்பது தான் வழக்கம். தகனம் போன்றவை கிடையாது. போரிட்டு மரணம் அடைந்தால் வீர சுவர்க்கமே கிடைக்கும் மோக்ஷம் கிடைக்காது" என்ற கால சட்டத்தையே மாற்றி, 

தன் கையாலேயே ஜடாயுவுக்கு தகனம் செய்து, 

"என்னுடைய பூரண அனுமதியோடு நீ உத்தமமான லோகங்களுக்கு செல்" (मया त्वं समनुज्ञातो गच्छ लोकानन् उत्तमान्

என்று க்ரம முக்தி என்ற முறைப்படி மோக்ஷத்திற்கு செல்ல ஒரு சாதாரண பறவைக்கு, கால சட்டத்தையே மாற்றி, தன் விருப்பத்தால் கொடுத்து விட்டார். 


தான் சொன்ன சொல்லை, ஜடாயு மூலமாக நிரூபித்து காட்டினார் ராமபிரான். 

தர்மத்தில் இருப்பவனை தர்மம் காக்குமா? தெரிந்து கொள்வோம். ராமபிரானே இந்த கேள்வியை நமக்காக கேட்டு, தன் சரித்திரத்தில் பதிலும் காட்டுகிறார்.

தர்மத்தில் இருப்பவனை தர்மம் காக்குமா? 

ராமபிரானே இந்த கேள்வியை நமக்காக கேட்டு, தன் சரித்திரத்தில் பதிலும் காட்டுகிறார். 

சீதையை ராவணன் கடத்தி சென்று விட்டான். 


ராமபிரான், 

மரமே சீதையை கண்டாயா?

நதியே சீதையை கண்டாயா?

என்று கதறினார்..


உண்மையில் மரத்துக்கு அதிபதியான , நதிக்கு அதிபதியான தேவதைகளை தான் ராமபிரான் கூப்பிட்டார்.


தேவதைகள், ராமபிரானுக்கு பதில் சொல்லவில்லை.


"தர்மத்தில் இருப்பவனை தர்மம் காக்கும்" என்று சாஸ்திரம் சொல்கிறது.


"தர்மத்தில் இருக்கும் எனக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்து இருக்கும் போது, தர்மத்தை காக்க வேண்டிய தேவதைகள் காப்பாற்றாமல்,  அமைதியாக இருக்கிறார்களே!" என்று நம்மை போலவே புலம்புவது போல காட்டிக்கொண்டார்.

"தான் மனிதன் என்று நினைத்துத்தானே, தேவர்கள் பதில் சொல்லாமல் அலட்சியம் செய்கிறார்கள்" என்று கோபப்பட்டார்.





உடனே தன்னுடைய வில்லில் அம்பை பூட்டி, 

"இந்த உலகம் முழுவதையும் நான் தலைகீழாக மாற்றி காட்டுகிறேன் பார்!" என்று  ராமபிரான் சொல்ல, லக்ஷ்மணன் காலில் விழுந்து நமஸ்கரித்து சமாதானம் செய்து, மேலும் தேடி பார்க்கலாம் என்று அழைத்து கொண்டு சென்றார்.


स देव गन्धर्व मनुष्य पन्नगं 

जगत् सशैलम् परिवर्तयामि अहम्।।

ஸ தேவ கந்தர்வ மனுஷ்ய பன்னகம்

ஜகத் ஸ சைலம் பரிவர்தயாமி அஹம் ||

- வால்மீகி ராமாயணம் 


தர்மத்துக்கு கட்டுப்பட்டு தந்தை சொல் கேட்டார், 

தர்மத்துக்கு கட்டுப்பட்டு கிடைத்த ராஜ்யத்தை விட்டார்,

தர்மத்துக்கு கட்டுப்பட்டு மரவுரி அணிந்தார்,

தர்மத்துக்கு கட்டுப்பட்டு வனவாசம் 14 வருடம் சென்றார்,

தர்மத்துக்கு கட்டுப்பட்டு கிழங்கு, பழங்களை மட்டுமே உண்டார், 

இந்த கஷ்டங்களுக்கு மேல், ராமபிரானுக்கு, பெரும் சோகமாக தன் மனைவி சீதாதேவியையும் இழக்க நேரிட்டது.


"தர்மத்தில் இருப்பவனை தர்மமே காக்கும்" என்று சாஸ்திரம் சொல்கிறது.


ராமபிரான் கேட்டும் கூட தர்ம தேவதைகள் பதில் சொல்லவில்லையே? 

தர்மம் உண்மையில் காக்குமா? என்ற சந்தேகம் நமக்கு எழலாம்.


தர்மத்தில் இருப்பவர்களை நிச்சயமாக தர்மம் காக்கும்.  


ராமபிரான் "பகவான்" என்ற போதிலும், அவரால் நியமிக்கப்பட்ட தேவர்கள் (பிரம்மா உட்பட), உதவி கேட்டால், உதவி செய்வார்களே தவிர, 'நான் தான் செய்தேன்' என்று சொல்லிக்கொண்டு நேரே வர ஆசைப்பட மாட்டார்கள். 


இங்கு ராமபிரான் "தர்மத்தில் இருக்கிறேன். எனக்கு ஒரு இப்படி கஷ்டமா?" என்பது போல கேட்டார்.

தேவர்கள் நேரிடையாக பதில் சொல்லவில்லை.

ஆனால், அவருக்கு சேவை செய்ய தன் அம்சமாக ஏற்கனவே சுக்ரீவன் (சூரிய தேவன்), ஹனுமான் (வாயு தேவன்), மற்றும் கோடிக்கணக்கான வானர ரூபத்தில் முப்பது முக்கோடி தேவர்களும்  சீதையை மீட்க வந்து விட்டனர்.


சீதாதேவியை மீட்டு விட்டார் ராமபிரான்.

தர்மத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டம் வந்தாலும், சிறிது பொறுமையோடு இருந்தால், தர்மமே நம்மை காப்பதை உணர முடியும்.


இதை ராமபிரான், மனிதனாக இருந்து நமக்கு காட்டினார்.

Saturday 9 October 2021

ராமபிரான் ஏன் மறைந்திருந்து வாலியைக் கொன்றார்? வாலியின் கேள்வியும், ராமபிரான் பதிலும் - வால்மீகி ராமாயணம் ஸ்லோகமும், அர்த்தமும் தெரிந்து கொள்வோம்..

பலம் பொருந்திய ராமரும் லட்சுமணனும் நெருங்கி வருவதைக் கண்ட வாலீ, தன்னிடத்தில் நியாயம் இருப்பதாக நினைத்து பெருமிதத்துடனும் நேர்மையுடனும் பேச ஆரம்பித்தான்

வாலீ பேச்சை நீங்கள் கவனித்தால், தனக்கு சாதகமாக ஒரு பக்கம் மனிதனாகவும், மறுபுறம் திடீரென்று தன்னை விலங்காகவும் சொல்லிக்கொண்டு பேசுவது புரியும்


த்வம் நர: அதிபதே: புத்ர: 

ப்ரதித: பிரிய தர்ஸன: |

குலீன: ஸத்வ சம்பன்ன: 

தேஜஸ்வீ சரித வ்ரத: ||

त्वं नर: अधिपतेः पुत्रः प्रथितः प्रियदर्शनः | 

कुलीन: सत्त्व सम्पन्न: तेजस्वी चरित व्रतः ||

நீங்கள் ஒரு இளவரசன், நன்கு அறியப்பட்டவர், பிரியத்தோடு  தரிசனம் தருகிறீர்கள். பார்ப்பவர்களுக்கு ப்ரியம் ஏற்படும் படி இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். நீங்கள் வலிமையானவர், பொலிவுடன் இருக்கிறீர்கள், சபதங்களைக் கடைப்பிடிப்பவராகவும் இருக்கிறீர்கள்.


பரான் முக வதம் க்ருத்வா 

க: அத்ர ப்ராப்த: த்வயா குண: |

யத் அஹம் யுத்த ம்ரப்த: 

ஸரேணோ: அஸி தாடித: ||

परान् मुख वधं कृत्वा क: अत्र प्राप्त: त्वया गुणः | 

यद् अहं युद्ध संरब्ध: शरेणो: असि ताडित: ||

மற்றவர்களுடன் போரில் ஈடுபட்ட என்னை நீங்கள் கொன்றுவிட்டீர்களே! அதைச் செய்த பின், நீங்கள் பெற்ற பெருமை என்ன? நான் மார்பில் இப்படி தாக்கப்பட்டு கிடக்கிறேனே! 


ராம: கருண வேதீ ச 

ப்ரஜாநாம் ச ஹிதே ரத: |

சானுக்ரோச: மஹா உத்ஸாஹ: 

சமயக்ஞோ த்ருட வ்ரத: |

இதி தே ஸர்வ பூதானி 

கதயந்தி யஷோ புவி ||

रामः करुण वेदी च प्रजानाम् च हिते रतः | 

सानुक्रोश: महा उत्साहः समयज्ञो दृढव्रतः | 

इति ते सर्व भूतानि कथयन्ति यशो भुवि || 

ராமபிரான் தன் மக்களின் நலம் விரும்புபவர். அவர் இரக்கமுள்ளவர். அவர் உற்சாகமானவர். அவர் சரியான நேர உணர்வைக் கொண்டவர் மற்றும் எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? ஒரு பணியை எப்படி செய்ய வேண்டும்? என்பதை அறிந்தவர். உங்கள் மகிமை பற்றி பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் பேசும் விதம் இதுதான்.





தம: சம: க்ஷமா தர்மோ

த்ருதி சத்யம் பராக்ரம |

பார்திவானாம் குணா ராஜன்

தண்ட: ச அபராதிஷு ||

दमः शमः क्षमा धर्मो धृति सत्यम् पराक्रमः | 

पार्थिवानाम् गुणा राजन् दण्डः च अपराधिषु || 

புலனடக்கம், மன அடக்கம், பொறுமை, நீதி, உறுதியான தன்மை, உண்மை, வீரம் மற்றும் குற்றவாளிகளை தண்டிக்கும் திறன் ஆகியவை ஒரு அரசனின் நற்பண்புகளாக சொல்லப்படுகிறது.


தான் குணான் சம்ப்ரதாய

அஹம் அஃரியம் ச அபிஜனம் தவ |

தாரயா ப்ரதிஷித்த: 

அபி சுக்ரீவேன சமாகத: |

तान् गुणान् संप्रधार्य अहम् अग्र्यम् च अभिजनम् तव |

तारया प्रति-षिद्ध: अपि सुग्रीवेण समागतः || 

ராமா! இந்த அனைத்து நல்லொழுக்கங்களின் களஞ்சியம் என்று உங்களை நம்பினேன் ! உங்களுடைய உன்னதமான பரம்பரையை மதித்து, தாரா எச்சரித்தும் நான் சுக்ரீவனுடன் சண்டையில் ஈடுபட்டேன் 


ந மாம் அந்யேந ஸம்ரப்தம்

ப்ரமத்தம் யோத்தும் அர்ஹசி |

இதி மே புத்தி: உத்தபன்னா

பபூவ ஆதர்சனே தவ ||

न माम् अन्येन संरब्धम् प्रमत्तम् योद्धुम् अर्हसि |

इति मे बुद्धिर् उत्पन्ना बभूव आदर्शने तव ||

என் சண்டை சுக்ரீவனுடன் மட்டுமே இருப்பதால் ராமபிரான்  என்னுடன் சண்டையிட மாட்டார் என்று நினைத்தேன். நான் இன்னொருவனோடு சண்டையிடும் போது என்னை தாக்குவது என்பது இராமபிரானுக்கு பொருத்தமற்ற செயல் என்று நம்பினேன்.


ந த்வாம் விநிஹத ஆத்மானம்

தர்ம த்வஜம் அதார்மிகம் |

ஜானே பாப சமாசாரம்

த்ருனை: கூபம் இவ ஆவ்ருதம் ||

न त्वाम् विनिहत आत्मानम् धर्म ध्वजम् अधार्मिकम् |

जाने पाप समाचारम् तृणैः कूपम् इव आवृतम् || 

நீங்கள் உங்கள் மனசாட்சியை கொன்றவர் என்று எனக்குத் தெரியாமல் போனது. நீங்கள் உண்மையில் கலாச்சாரமில்லாதவர் என்று எனக்குத் தெரியாமல் போனது, வெளியில் பசும்புற்களால் மூடப்பட்ட சேர் போல, வெளியில் நல்லொழுக்கமுள்ளவராகக் காட்டிக்கொண்டு, நடத்தையில் பாவம் மற்றும் அநியாயம் செய்கிறீர்களே!


சதாம் வேஷதரம் பாபம்

ப்ரச்சன்னம் இவ பாவகம் |

ந அஹம் த்வாம் அபிஜானாமி

தர்ம சத்மாபி சம்வ்ருதம் ||

सताम् वेष धरम् पापम् प्रच्छन्नम् इव पावकम् |

न अहम् त्वाम् अभिजानामि धर्म छद्-माभि संवृतम् ||

நீங்கள் மரவுரி அணிந்து பார்க்க துறவி போன்ற முகமூடியை மூடிக்கொண்டு, பாவங்களை செய்பவர். சாம்பலால் மறைக்கப்பட்ட நெருப்பைப் போன்றவர் நீங்கள். தர்மம் எல்லாம் உங்களை பொறுத்தவரை வெறும் பேச்சளவு தான் என்று அறிகிறேன்.

விஷயே வா புரே வா தே

யதா பாபம் கரோமி அஹம் |

ந ச த்வாம் அவஜானே அஹம் 

கஸ்மாத் த்வம் ஹம்சி அகில்பிஷம் ||

विषये वा पुरे वा ते यदा पापम् करोमि अहम् |

न च त्वाम् अवजाने अहं कस्मात् त्वम् हंसि अकिल्बिषम् ||

உங்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்திலோ, உங்கள் நகரத்துக்கோ நான் எந்தத் தீங்கும் செய்யவில்லை. நான் உங்களை  அவமதிக்கவும் இல்லை. நான் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை என்றபோது, என்னை ஏன் கொல்ல முடிவு செய்தீர்கள்?


பல மூல அஸனம் நித்யம்

வானரம் கன கோசரம் |

மாம் இஹ அப்ரதி யுத்யந்தம்

அன்யேன ச சமாகதம் ||

फल मूल अशनम् नित्यम् वानरम् वन गोचरम् |

माम् इह अप्रति-युध्यन्तम् अन्येन च समागतम् ||

நான் காட்டில் சுற்றித் திரியும், பழங்கள் மற்றும் கிழங்குகளை சாப்பிட்டு வாழும் ஒரு குரங்கு. நான் இன்னொருவனுடன் சண்டையிட்டேன். ஆனால் உன்னுடன் சண்டையிடவில்லை. (இவ்வளவு நேரம் மனிதனை போல தர்மங்கள் பேசிக்கொண்டிருந்த வாலீ, திடீரென்று, இங்கே தன்னை ஒரு விலங்கு என்று குறிப்பிட ஆரம்பித்தான்)


த்வம் நராதிபதே: புத்ர:

ப்ரதீத: ப்ரிய தர்சன: |

லிங்கம் அபி அஸ்தி தே ராஜன்

த்ருஷ்யதே தர்ம சம்ஹிதம் ||

त्वम् नराधिपतेः पुत्रः प्रतीतः प्रियदर्शनः |

लिन्गम् अपि अस्ति ते राजन् दृश्यते धर्म सम्हितम् ||

இளவரசே! நீங்கள் ஒரு பேரரசரின் மகன். நீங்கள் அழகாகவும் பிரபலமாகவும் இருக்கிறீர்கள். உங்கள் வெளிப்புற அறிகுறிகள் (தோற்றம்) கூட நீங்கள் நல்லொழுக்கமுள்ளவர் என்பதை வெளிப்படுத்துகிறது. (ராமரின் அங்க லக்ஷணம் அனைவரையும் மயக்க செய்யும். பார்த்து கொண்டே இருந்த வாலீ கட்டுப்படுத்த முடியாமல், ராமரை இடையிடையே வர்ணிக்கிறான்)


க: க்ஷத்ரிய குலே ஜாத: 

ஸ்ருதவான் நஷ்ட சம்சய: |

தர்ம லிங்க ப்ரதிச்சன்ன:

க்ரூரம் கர்ம சமாசரேத் ||

कः क्षत्रिय कुलेजातः श्रुतवान् नष्टसंशयः |

धर्म लिंग प्रतिच्छन्नः क्रूरम् कर्म समाचरेत् ||

க்ஷத்ரிய குடும்பத்தில் பிறந்து, வேதத்தில் தேர்ச்சி பெற்று, எது நீதி என்ற சந்தேகமில்லாத ஞானமுடைய உங்களால், நீதி என்ற போர்வையில் எப்படி இத்தகைய கொடூரமான செயலைச் செய்தீர்கள்?


ராம ராஜகுலே ஜாதோ

தர்மவான் இதி விஸ்ருத: |

அபவ்யோ பவ்ய ரூபேன

கிம் அர்தம் பரிதாவஸி ||

राम राजकुले जातो धर्मवान् इति विश्रुतः |

अभव्यो भव्य रूपेण किम् अर्थम् परिधावसि || 

நீங்கள் ஒரு உயர்ந்த அரச குடும்பத்தில் பிறந்தீர்கள். நீங்கள் நன்கு அறியப்பட்டவர். நீங்கள் தர்மத்தை அறிந்தவர், இப்படித்தான் நீங்கள் பிரபலமாக அறியப்படுகிறீர்கள். உண்மையில் நீங்கள் ஒழுக்கமற்றவர். ஒழுக்கமானவர் போல அலைந்து கொண்டு இருக்கிறீர்கள்.


சாம தானம் க்ஷமா தர்ம:

சத்யம் த்ருதி பராக்ரமௌ |

பார்திவானாம் குணா ராஜன்

தண்ட: ச அபி அபராதிஷு ||

साम दानम् क्षमा धर्मः सत्यम् धृति पराक्रमौ |

पार्थिवानाम् गुणा राजन् दण्डः च अपि अपराधिषु ||

சமாதானம், தாராள மனப்பான்மை, சகிப்புத்தன்மை, நேர்மை, உண்மைத்தன்மை, வீரம் மற்றும் குற்றவாளிகளை தண்டிப்பது ஆகியவை ஆட்சியாளர்களின் தனிச்சிறப்புகள்.


வயம் வனசரா ராம

ம்ருகா மூல பல அஸனா: |

ஏஷா ப்ரக்ருதி: அஸ்மாகம்

புருஷ: த்வம் நரேஸ்வர: ||

वयम् वनचरा राम मृगा मूल फल अशनाः |

एषा प्रकृति: अस्माकम् पुरुषः त्वम् नरेश्वरः ||

நாங்கள் காட்டில் அலைந்து திரிந்து கிழங்கு மற்றும் பழங்களை நம்பி வாழும் விலங்குகள். இது எங்கள் இயல்பு. ஆனால், நீங்கள் ஒரு மனிதர். நீங்கள் மனிதர்களுக்கு அரசர். (இங்கே மீண்டும் வாலீ தன்னை ஒரு விலங்கு என்று குறிப்பிடத் தொடங்குகிறான்)

பூமி: ஹிரண்யம் ரூபம் ச

நிக்ரஹே காரணானி ச |

அத்ர க: தே வனே லோபோ

மதீயேஷு பலேஷு வா ||

भूमि: हिरण्यम् रूपम् च निग्रहे कारणानि च |

अत्र कः ते वने लोभो मदीयेषु फलेषु वा ||

நிலத்திற்காகவும், தங்கம்,வெள்ளிக்காவும் அரசர்கள் தங்களுக்குள் போரிட்டு கொள்வார்கள். என்னுடைய இந்த காட்டில் உள்ள பழங்களை பறிப்பதற்காக நீங்கள் சண்டையிட என்ன காரணம்?


நய: ச விநய: ச உபௌ

நிக்ரஹ அனுக்ரஹௌ அபி |

ராஜ வ்ருத்தி: அசம்கீர்ணா

ந ந்ருபா: காம வ்ருத்தய: ||

नयः च विनयः च उभौ निग्रह अनुग्रहौ अपि |

राज वृत्ति: असंकीर्णा न नृपाः काम वृत्तयः || 

உண்மையான அரசர்கள் தனக்கு தோன்றியதெல்லாம் செய்வதில்லை. ஒரு உண்மையான அரசனின் வெகுமதியும்,  தண்டனையும் கூட பொதுவாக உங்களுடைய செயல் போல் இல்லாமல் தெளிவாக இருக்கும்.


த்வம் து காம ப்ரதான: ச

கோபன: ச அனவஸ்தித: |

ராஜ வ்ருத்தேஷு ஸம்கீர்ண:

சராசன பராயண: ||

त्वम् तु काम प्रधानः च कोपनः च अनवस्थितः |

राज वृत्तेषु संकीर्णः शरासन परायणः ||

உங்கள் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற்றி கொள்வது உங்களுக்கு முக்கியம். அரச குடும்பதத்தில் பிறந்தும் உங்களுக்கு ஏற்பட்ட இந்த நிலையால், நிலைதடுமாறி, கோபத்தோடு அலைகிறீர்கள். யாரை கொல்லலாம் என்று அலையும் உங்களுக்கு, உங்கள் வில் மற்றும் அம்புகளில் மேல் பேராவல் இருக்கிறது.


ந தே அஸ்தி அபசிதி:

தர்மே ந அர்த புத்தி: அவஸ்திதா |

இந்த்ரியை: காம வ்ருத்த:

சன் க்ருஷ்யசே மனுஜேஸ்வர: ||

न ते अस्ति अपचितिः धर्मे न अर्थे बुद्धि: अवस्थिता |

इन्द्रियैः काम वृत्तः सन् कृष्यसे मनुजेश्वर || 

மனிதர்களுக்கு ஈஸ்வரனாக இருப்பவரே! நீதியின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை, தர்மத்துக்கு சம்மதமாக செல்வம் பெறுவதிலும் உங்களுக்கு உறுதி இல்லை. புலன்களின் மீதும் உங்களுக்கு கட்டுப்பாடு இல்லை. நீங்கள் பெரிய மயக்கத்தில் இருக்கிறீர்கள்.


ஹத்வா பானேன காகுத்ஸ்த

மாம் இஹ அந் அபராதினம் |

கிம் வக்ஷ்யஸி சதாம் மத்யே

கர்ம க்ருத்வா ஜூகுப்ஸிதம் ||

हत्वा बाणेन काकुत्स्थ माम् इह अन् अपराधिनम् |

किम् वक्ष्यसि सताम् मध्ये कर्म कृत्वा जुगुप्सितम् ||

காகுத்ஸ்த வம்சத்தில் வந்தவரே! நான் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாத போது, தேவையில்லாமல் அம்பு எய்து என்னை இங்கே கொன்றதால், நீங்கள் ஒரு அருவருப்பான செயலைச் செய்து விட்டீர்கள். இத்தகைய பாவச் செயலைச் செய்தபின் சாதுக்கள் மத்தியில் எப்படி இனி செல்வீர்கள்?


ராஜஹா ப்ரஹ்மஹா கோக்ந:

சோர: ப்ராணிவதே ரத: |

நாஸ்திக: பரிவேத்தா ச

சர்வே நிரய காமின: ||

राजहा ब्रह्महा गोघ्नः चोरः प्राणिवधे रतः |

नास्तिकः परिवेत्ता च सर्वे निरय गामिनः || 

அரசன், பிராம்மணன், பசுவைக் கொன்றவன், திருடனாக இருப்பவன், பொழுது போக்க, ஆசைக்காக உயிரினங்களை அழிப்பதில் மகிழ்ச்சி அடைபவன், தெய்வத்தை நம்பாத நாத்திகன், மூத்தவனுக்கு முன்பு திருமணம் செய்துகொள்பவன், இவர்கள் யாவரும் நரகத்திற்குச் செல்கிறார்கள்.

சூசக: ச கதர்ய: ச

மித்ரக்நோ குரு தல்ப க: |

லோகம் பாப ஆத்மானம்

ஏதே கச்சந்தே ந அத்ர சம்சய: ||

सूचकः च कदर्यः च मित्र्घ्नो गुरु तल्प गः |

लोकं पाप आत्मानम् एते गच्छन्ते न अत्र संशयः ||

அடுத்தவர் பற்றி அவதூறு பரப்புபவன், கீழ்த்தரமான செயல்கள் செய்பவன், நண்பனை கொன்றவன், குருவின் மனைவியோடு படுக்கையைப் பகிர்ந்து கொள்பவன், இப்படிப்பட்டவர்கள் நரக லோகத்திற்கு செல்வார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை.





அதார்யம் சர்ம மே சத்பீ:

ரோமாணி அஸ்தி ச வர்ஜிதம் |

அபக்ஷ்யானி ச மாம்ஸாநி

த்வத் விதை: தர்மசாரிபி: ||

अधार्यम् चर्म मे सद्भी रोमाणि अस्थि च वर्जितम् |

अभक्ष्याणि च मांसानि त्वत् विधैः धर्मचारिभिः || 

வானரனான என்னுடைய தோலை வைத்து, யாரும் ஆடையாக அணிந்து கொள்வது கிடையாது. என் தலைமுடி மற்றும் எலும்புகள் கூட எந்த உபயோகத்திற்கும் பயன்படாது, உங்களைப் போன்ற தர்மம் தெரிந்தவர்கள், என்னுடைய மாமிசத்தை உணவாக சாப்பிடுவதும் இல்லை.


பஞ்ச பஞ்ச நகா பக்ஷ்யா

ப்ரஹ்ம க்ஷத்ரேந ராகவ |

ஸல்யக: ஸ்வாவிதோ கோதா

ஸஸ: கூர்ம: ச பஞ்சம: ||

पंच पंच नखा भक्ष्या ब्रह्म क्षत्रेण राघव |

शल्यकः श्वाविधो गोधा शशः कूर्मः च पंचमः || 

ராமா! ஐந்து நகமுள்ள முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, முதலை, முயல் மற்றும் ஆமை' போன்றவற்றை தான் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் உணவாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்,


சர்ம ச அஸ்தி ச மே ராஜன்

ந ஸ்ப்ருசந்தி மனீஷிண: |

அபக்ஷ்யாணி ச மாம்ஸாநி

அஹம் பஞ்ச நகோ ஹத: ||

चर्म च अस्थि च मे राजन् न स्पृशन्ति मनीषिणः |

अभक्ष्याणि च मांसानि सो अहम् पंच नखो हतः || 

அரசனே! மனிதர்கள் என் தோலையும் எலும்பையும் தொடுவதில்லை. அவர்கள் என் சதையை சாப்பிடுவதில்லை. அப்படி இருக்கும்போது, நீங்கள் ஐந்து நகம் கொண்ட விலங்கான என்னை அனாவசியமாக கொன்றீர்கள்.

தாரயா வாக்யம் உக்தோ

அஹம் சத்யம் சர்வஞயா ஹிதம் |

தத் அதிக்ரம்ய மோஹேன

காலஸ்ய வசம் ஆகத: ||

तारया वाक्यम् उक्तो अहम् सत्यम् सर्वज्ञया हितम् |

तद् अतिक्रम्य मोहेन कालस्य वशम् आगतः ||

தாராவுக்கு அனைத்தும் தெரிந்து இருக்கிறது. அவளுடைய வார்த்தைகள் சரியாக இருந்தன. அவை எனது நல்வாழ்வுக்காக தான் என்று இப்போது உணர்கிறேன். எனினும், என் அறியாமை (அல்லது அகந்தை) காரணமாக, நான் அவளுடைய வார்த்தைகளுக்கு செவி சாய்க்கவில்லை, மரண தேவனின் கட்டுப்பாட்டில் விழுந்து கிடக்கிறேன்.


த்வயா நாதேன காகுத்ஸ்த

ந சனாதா வஸுந்தரா |

ப்ரமதா ஸீல சம்பன்னா

தூர்தேந பதினா யதா ||

त्वया नाथेन काकुत्स्थ न सनाथा वसुंधरा |

प्रमदा शील सम्पन्ना धूर्तेन पतिना यथा ||

ஓ காகுத்ஸ்தா! நல்ல குணமுள்ள ஒரு மனைவியை ஒரு தீய கணவனால் பாதுகாக்க முடியாது.. அது போல, நீங்கள் இந்த பூமியின் பாதுகாவலராக இருக்க முடியாது


ஸடோ நைக்ருதிக: க்ஷுத்ரோ

மித்யா ப்ரஸ்ரித மானஸ: |

கதம் தசரதேன த்வம் ஜாத:

பாபோ மஹாத்மனா ||

शठो नैकृतिकः क्षुद्रो मिथ्या प्रश्रित मानसः |

कथम् दशरथेन त्वम् जातः पापो महात्मना || 

நீங்கள் ஒரு துரோகி, நேர்மையற்றவர், தவறானவர், பணிவு உள்ளவர் போல பொய்யான தோற்றமளிப்பவர். மேலும், பாவங்களை செய்பவர். அந்த உயர்ந்த ஆத்மாவான தசரதனுக்கு போய் எப்படி பிறந்தீர்கள்?


சின்ன சாரித்ரய கக்ஷ்யேந

சதாம் தர்ம அதிவர்தினா |

த்யக்த தர்ம அங்குசேன 

அஹம் நிஹதோ ராம ஹஸ்தினா ||

छिन्न चारित्र्य कक्ष्येण सताम् धर्म अतिवर्तिना |

त्यक्त धर्म अंकुशेन अहम् निहतो राम हस्तिना ||

குண கடல் என்ற பெருமையை உடைத்து, ஞானிகள் வகுத்த  ஒழுக்க நெறிமுறைகளை மீறி, கூர்மையான அம்பை செலுத்தி, மதம் கொண்ட யானை (ஆணவம்) போல, ராமா என்னை கொல்ல வந்தீர்களே!


அசுபம் ச அபி அயுக்தம் ச

சதாம் ச ஏவ விகர்ஹிதம் |

வக்ஷ்யஸே ச ஈத்ருஸம் க்ருத்வா

சத்பி: சஹ சமாகத: ||

अशुभम् च अपि अयुक्तम् च सताम् च एव विगर्हितम् |

वक्ष्यसे च ईदृशम् कृत्वा सद्भिः सह समागतः ||

நீங்கள் ஒரு அருவெறுக்க தக்க, முறையற்ற செயலைச் செய்துள்ளீர்கள், இதை நல்லொழுக்கம் உள்ளவர்கள்  கண்டிக்கப்பார்கள். ஏன் இப்படி தகாத  செயலைச் செய்தீர்கள் என்று சான்றோர்கள் கேள்வி கேட்டால் என்ன சொல்வீர்கள்?

உதாஸீநேஷு யோ அஸ்மாஸு

விக்ரமோ அயம் ப்ரகாஸித: |

அபகாரிஷு தே ராம

ந ஏவம் பஸ்யாமி விக்ரமம் ||

उदासीनेषु यो अस्मासु विक्रमो अयम् प्रकाशितः |

अपकारिषु ते राम न एवम् पश्यामि विक्रमम् ||

அரசே! உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாத ஒருவருக்கு எதிராக உங்கள் வீரத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். உங்களை நிஜத்தில் புண்படுத்தியவர்கள் மீது நீங்கள் ஏன் இத்தகைய வீரம் காட்டவில்லை?


த்ருஷ்யமான: து யுத்யேதா

மயா யுதி ந்ருப ஆத்மஜ |

அத்ய வைவஸ்வதம் தேவம்

பஸ்யே த்வம் நிஹதோ மயா ||

दृश्यमानः तु युध्येथा मया युधि नृप आत्मज |

अद्य वैवस्वतम् देवम् पश्येः त्वम् निहतो मया ||

ஓ அரச குமாரனே ! ஒருவேளை  நீங்கள் என்னிடம் நேருக்கு நேர் சண்டையிட்டிருந்தால், இன்று மரணத்தின் அதிபதியான வைவஸ்வதனை (யமதர்மனை)  நீங்கள் பார்த்திருப்பீர்கள்.


த்வயா அத்ருஷ்யேன து ரணே

நிஹதோ அஹம் துராசத: |

ப்ரஸுப்த: பன்னகேன இவ

நர: பான வசம் கத: ||

त्वया अदृश्येन तु रणे निहतो अहम् दुरासदः |

प्रसुप्तः पन्नगेन इव नरः पान वशम् गतः ||

நான் வெற்றிகொள்ள முடியாத போர்வீரன். போர் களத்தில் நீங்கள் கண்ணுக்குத் தெரியாமல் இருந்து கொண்டு, என்னை கொன்று விட்டீர்கள். உங்களால் நான் கொல்லப்பட்டேன், மறைந்திருந்த பாம்பு தூங்கிக் கொண்டிருந்த குடிகாரனைக் கடித்தது போல, என்னை மறைந்து இருந்து பார்த்து, அடித்து விட்டீர்கள்.


மாம் ஏவ யதி பூர்வம்

த்வம் ஏதத் அர்தம் அசோதய: |

மைதிலீம் அஹம் ஏக ஆஹ்நா

தவ ச ஆநீதிவான் பவேத் ||

माम् एव यदि पूर्वम् त्वम् एतद् अर्थम् अचोदयः |

मैथिलिम् अहम् एक आह्ना तव च आनीतवान् भवेत् || 

நீங்கள் என்னைத் தேடி முதலிலேயே வந்திருந்தால், நான் மைதிலியை  ஒரு நாளில் கொண்டு வந்திருப்பேன்.


ராக்ஷஸம் ச துராத்மானாம்

தவ பார்ய அபஹாரினம் |

சுக்ரீவ ப்ரிய காமேன

யத் அஹம் நிஹத: த்வயா |

கண்டே பத்த்வா ப்ரத்யாம் தே

நிஹதம் ராவணம் ரணே ||

राक्षसम् च दुरात्मानाम् तव भार्य अपहारिणम् |

सुग्रीव प्रिय कामेन यद् अहम् निहतः त्वया |

कण्ठे बद्ध्वा प्रदद्याम् ते निहतम् रावणम् रणे ||

அந்த ராக்ஷஸன், தீய எண்ணம் கொண்டவன், உங்கள் மனைவியை கடத்திவிட்டான். சுக்ரீவனுக்கு கட்டுப்பட்ட உங்களால் நான் கொல்லப்பட்டேன். என்னிடம் வந்திருந்தால், ராவணனின் கழுத்தைக் கட்டி நானே உங்களுக்கு உதவி செய்திருப்பேன், தேவைப்பட்டால், போரிட்டு அவனைக் கொன்றிருப்பேன்.


ந்யஸ்தாம் சாகர தோயே வா

பாதாளே வா அபி மைதிலீம் |

ஆநயேயம் தவ ஆதேஸாத்

ஸ்வேதாம் அஸ்வதரீம் இவ ||

न्यस्ताम् सागर तोये वा पाताले वा अपि मैथिलीम् |

आनयेयम् तव आदेशात् श्वेताम् अश्वतरीम् इव || 

உங்கள் மைதிலீயை அந்த ராக்ஷஸன், கடல் நீரிலோ அல்லது பாதாள உலகத்திலோ மறைத்திருந்தாலும், வெள்ளை குதிரை ரூபத்தில் ஹயக்ரீவரைப் போல நானே சென்று,  மைதிலீயை, உங்களை ஆணைப்படி அழைத்து வந்திருப்பேன். 


யுக்தம் யத் ப்ரநுயாத் ராஜ்யம்

சுக்ரீவ: ஸ்வர் கதே மயி |

அயுக்தம் யத் அதர்மேன த்வயா

அஹம் நிஹதோ ரணே ||

युक्तम् यत् प्रप्नुयात् राज्यम् सुग्रीवः स्वर् गते मयि |

अयुक्तम् यद् अधर्मेण त्वया अहम् निहतो रणे ||

நான் சொர்க்கத்திற்குச் சென்ற பிறகு சுக்ரீவன் ராஜ்யத்தை எதுத்துக்கொள்வதே சரியானது. ஆனால் போரில் நீங்கள் என்னைக் கொன்ற விதம் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது.


காமம் ஏவம் விதம் லோக:

காலேன விநி யுஜ்யதே |

க்ஷமம் சேத் பவதா ப்ராப்தம்

உத்தரம் ஸாது சிந்த்யதாம் ||

कामम् एवम् विधम् लोकः कालेन विनियुज्यते |

क्षमम् चेत् भवता प्राप्तम् उत्तरम् साधु चिंत्यताम् ||

உண்மையில், உலகில், அவரவர்கள் நேரம் வரும்போது மக்கள் மரணத்தை சந்திக்கிறார்கள். நீங்கள் மறைந்து கொண்டு இன்று என் மரணத்தை சந்திக்க வைத்தீர்கள். இது உங்களுக்கு சரியானதாக படுகிறதா? நீங்கள் யோசித்து உங்கள் பதிலை அளிக்கலாம்


இதி ஏவம் உக்த்வா பரிசூஷ்க வக்த்ர: 

சர அபிகாதாத் வ்யதிதோ மஹாத்மா |

சமீக்ஷ்ய ராமம் ரவி சன்னிகாஷம்

தூஷ்ணீம் பபூவ அமர ராஜ ஸூனு: ||

इति एवम् उक्त्वा परिशुष्क वक्त्रः

शर अभिघातात् व्यथितो महात्मा |

समीक्ष्य रामम् रवि संनिकाशम्

तूष्णीम् बभूव अमर राज सूनुः  ||

இந்திரனின் மகனான வாலி, தன் மீது எய்யப்பட்ட ராம பானத்தினால் ஏற்பட்ட கடுமையான வலியை உணர்ந்தான். அவனது வாய் உலர்ந்தது இருந்தது(நீண்ட நேரம் பேசியதால்). மேலும் பேசாமல்  அமைதியாகி, சூரியனைப் போல ஒளிரும் ராமபிரானை உற்று நோக்கினான்..





இதி உக்த: ப்ரஸ்ரிதம் வாக்யம்

தர்ம அர்த சஹிதம் ஹிதம் |

பருஷம் வாலினா ராமோ

நிஹதேன விசேதசா ||

इति उक्तः प्रश्रितम् वाक्यम् धर्म अर्थ सहितम् हितम् |

परुषम् वालिना रामो निहतेन विचेतसा ||

ராமபானத்தால் காயமடைந்து, குழப்பத்தில் இருக்கும் வாலி, அர்த்தமுள்ள  நேர்மையான கேள்விகளை கேட்பதாக நினைத்து கொண்டு, கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசி விட, ராமபிரான் பதிலளித்தார்.


தம் நிஷ்ப்ரபம் இவ ஆதித்யம்

முக்த தோயம் இவ அம்புதம் |

உக்த வாக்யம் ஹரி ஸ்ரேஷ்டம்

உப சாந்தம் இவ அனலம் ||

तम् निष्प्रभम् इव आदित्यम् मुक्त तोयम् इव अंबुदम् |

उक्त वाक्यम् हरि श्रेष्ठम् उपशांतम् इव अनलम् ||

கடுமையாக இதுவரை பேசிய வாலி, இப்போது வெளிச்சமில்லாத சூரியன் போல, நீரில்லாத மேகம் போல,  அடங்கி இருக்கும் நெருப்பு போல பூமியில் படுத்திருந்தான்.


தர்ம அர்த குண சம்பன்னம்

ஹரி ஈஸ்வரம் அனுத்தமம் |

அதிக்ஷிப்த: ததா ராம: 

பஸ்சாத் வாலினம் அப்ரவீத் ||

धर्म अर्थ गुण संपन्नम् हरि ईश्वरम् अनुत्तमम् |

अधिक्षिप्तः तदा रामः पश्चात् वालिनम् अब्रवीत् ||

தர்மம் எது? தர்மத்துக்கு சம்மதமான செல்வம் எது? என்று அறிந்த, அனைத்து  நற்குணங்களும் நிரம்பிய இராமபிரான், வானர அரசனுக்கு பதிலளிக்கலானார்.


தர்மம் அர்தம் ச காமம் ச

சமயம் ச அபி லௌகிகம் |

அவிஞாய கதம் பால்யாத்

மாம் இஹ அத்ய விகர்ஹஸே ||

धर्मम् अर्थम् च कामम् च समयम् च अपि लौकिकम् |

अविज्ञाय कथम् बाल्यात् माम् इह अद्य विगर्हसे ||

சூழ்நிலையை பொறுத்து, காலத்தை பொறுத்து, தர்மம் எது? தர்மத்தை மீறாமல் பெறப்படும் செல்வம் எது? தர்மத்தை மீறாத காமம் எது? என்ற அறிய வேண்டும். இதை அறிந்து கொள்ளாமல், சிறுபிள்ளை போல, நீங்கள் எப்படி என்னை திட்டலாம்?


அப்ருஷ்ட்வா புத்தி சம்பன்னான்

வ்ருத்தான் ஆசார்ய சம்மதான் |

சௌம்ய வானர சாபல்யாத் த்வம்

மாம் வக்தும் இஹ இச்சஸி ||

अपृष्ट्वा बुद्धि संपन्नान् वृद्धान् आचार्य संमतान् |

सौम्य वानर चापल्यात् त्वम् माम् वक्तुम् इह इच्छसि ||

உங்கள் செயல்களை பற்றியும், உரிமைகள் மற்றும் தவறுகள் பற்றியும் உங்களை விட அறிவுடைய மூத்தவர்களோடு கலந்தாலோசிக்காமல் இதுவரை இருந்து விட்டு, நிலையற்ற புத்தி கொண்ட உங்கள் வானர குணத்தோடு, இப்போது, இந்த விஷயத்தில் என்னுடன் எப்படி விவாதிக்க விரும்புகிறீர்கள்?


இக்ஷ்வாகூணாம் இயம் பூமி:

ஸ ஸைல வன கானனா |

ம்ருக பக்ஷி மனுஷ்யாணாம்

நிக்ரஹ அனுக்ரஹேஷு அபி ||

इक्ष्वाकूणाम् इयम् भूमिः स शैल वन कानना |

मृग पक्षि मनुष्याणाम् निग्रह अनुग्रहेषु अपि ||

மலைகள், தோப்புகள் மற்றும் காடுகள், விலங்குகள், பறவைகள் மற்றும் மனிதர்கள் உட்பட இந்த பூமி இக்ஷ்வாகு மன்னர்களுக்கு சொந்தமானது. தண்டனை அளிக்கும் உரிமையும், வெகுமதி அளிக்கும் உரிமையும் இக்ஷ்வாகு மன்னர்களுக்கு உள்ளது.


தாம் பாலயதி தர்மாத்மா

பரத: சத்யவான் ருஜூ: |

தர்ம காம அர்த தத்வஞோ

நிக்ரஹ அனுக்ரஹே ரத: ||

ताम् पालयति धर्मात्मा भरतः सत्यवान् ऋजुः |

धर्म काम अर्थ तत्त्वज्ञो निग्रह अनुग्रहे रतः ||

பரதன், நீதியை பற்றியும், உண்மையும், நேர்மையும், தர்மம், அர்த்தம், காமம் எது என்பது பற்றியும், தண்டனை மற்றும் வெகுமதிகளை பற்றி அறிந்தவர், இந்த பூமியை ஒரு அரசனாக ஆட்சி செய்கிறார்.


நய: ச விநய: ச உபௌ

யஸ்மின் சத்யம் ச ஸுஸ்திதம் |

விக்ரம: ச யதா த்ருஷ்ட: 

ஸ ராஜா தேச காலவித் ||

नयः च विनयः च उभौ यस्मिन् सत्यम् च सुस्थितम् |

विक्रमः च यथा दृष्टः स राजा देश कालवित् ||

பரதன் நீதி, ஒழுக்கம், உண்மை, தைரியம் போன்றவற்றில் உறுதியாக இருப்பவர். காலத்தையும் இடத்தையும் அறிந்து ராஜ்யம் நடத்துபவர்.


தஸ்ய தர்ம க்ருத ஆதேஸா

வயம் அன்யே ச பார்திவ: |

ச-ராமோ வசுதாம் க்ருத்ஸ்னாம்

தர்ம சந்தானம் இச்சவ : ||

तस्य धर्म कृत आदेशा वयम् अन्ये च पार्थिवः |

चरामो वसुधाम् कृत्स्नाम् धर्म संतानम् इच्छवः ||

பரதனின் கட்டளையைப் பின்பற்றி, தர்மத்திற்கு இணங்க, நாமும் மற்ற அரசர்களும் தர்மத்தை ஊக்குவிக்க விரும்பி உலகம் முழுவதும் சுற்றி வருகிறோம்.


தஸ்மின் ந்ருபதி ஸார்தூல

பரதே தர்ம வத்சலே |

பாலயதி அகிலாம் ப்ருத்வீம்

க: சரேத் தர்ம விப்ரியம் ||

तस्मिन् नृपति शार्दूल भरते धर्म वत्सले |

पालयति अखिलाम् पृथ्वीम् कः चरेत् धर्म विप्रियम् || 

அரசர்களில் சிறந்த, தர்மத்தை விரும்பும் பரதன் இந்த உலகத்தை ஆளும் போது, யார் தர்மத்திலிருந்து விலகி நடக்க முடியும்?


தே வயம் மார்க விப்ரஷ்டம்

ஸ்வதர்மே பரமே ஸ்திதா: |

பரத ஆஞாம் புரஸ்க்ருத்ய

நிக்ருஹ்ணீமோ யதா விதி ||

ते वयम् मार्ग विभ्रष्टम् स्वधर्मे परमे स्थिताः |

भरत आज्ञाम् पुरस्कृत्य निगृह्णीमो यथा विधि ||

பரதனின் கட்டளைப்படி, நாங்கள் அனைவரும் தர்மத்தையும் நல்லொழுக்கத்தையும் நிலைநாட்டுவதை எங்கள் கடமையாக அர்ப்பணித்துள்ளோம் மேலும் தர்மத்தின் பாதையிலிருந்து விலகியவர்களை, தர்மப்படி தண்டிக்கிறோம்.

த்வம் து சங்க்லிஷ்ட தர்ம: ச

கர்மணா ச விகர்ஹித: |

காம தந்த்ர ப்ரதான ச

ந ஸ்திதோ ராஜ வர்த்மனி ||

त्वम् तु संक्लिष्ट धर्मः च कर्मणा च विगर्हितः |

काम तंत्र प्रधानः च न स्थितो राज वर्त्मनि ||

நீங்கள் தர்மத்தை மீறியுள்ளீர்கள். உங்கள் செயல்களுக்காக நீங்கள் தண்டிக்கப்பட்டு இருக்கிறீர்கள். உங்களுடைய தனிப்பட்ட ஆசைக்கு தான் முன்னுரிமை தந்து வாழ்ந்து இருக்கிறீர்கள். நீங்கள் அரசனின் தர்ம பாதையிலிருந்து விலகிவிட்டீர்கள்.


ஜ்யேஷ்டோ ப்ராதா பிதா ச

ஏவ ய: ச வித்யாம் ப்ரயச்சதி |

த்ரய: தே பிதரோ ஞேயா

தர்மே ச பதி வர்தின: ||

ज्येष्ठो भ्राता पिता चैव यः च विद्याम् प्रयच्छति |

त्रयः ते पितरो ज्ञेया धर्मे च पथि वर्तिनः || 

தர்மத்தில் இருப்பவன், தன்னுடைய மூத்த சகோதரனை, தந்தையை, குருவை, தன்னுடைய தந்தையாக பாவிப்பான்.


யவீயான் ஆத்மன: புத்ர:

சிஷ்ய: ச அபி குணோதித: |

புத்ரவத் தே த்ரய: சிந்த்யா

தர்ம: ச ஏவ அத்ர காரணம் ||

यवीयान् आत्मनः पुत्रः शिष्यः च अपि गुणोदितः |

पुत्रवत् ते त्रयः चिंत्या धर्मः चैव अत्र कारणम् ||

தர்மத்தில் இருப்பவன், தன்னுடைய இளைய சகோதரனை, தன் பிள்ளையை, தனது சிஷ்யனை, தன்னுடைய பிள்ளையாக பாவிப்பான்.


சூக்ஷ்ம: பரம துர்ஞேய: 

சதாம் தர்ம: ப்லவங்கம |

ஹ்ருதிஸ்த: சர்வ பூதானாம் 

ஆத்ம வேத சுபா சுபம் ||

सूक्ष्मः परम दुर्ज्ञेयः सताम् धर्मः प्लवंगम |

हृदिस्थः सर्व भूतानाम् आत्मा वेद शुभाशुभम् ||

வானர அரசே! தர்மம் மிகவும் சூக்ஷ்மமானது. எளிதில் புரிந்து கொள்ள முடியாதது. அந்த தர்மம் ஒவ்வொருவர் இதயத்திலும் அமர்ந்து இருக்கிறது. உண்மையாக தன் மனசாட்சியை கேட்பவனுக்கு, எது நியாயம், எது அநியாயம் என்று தெளிவாக தெரியும்.





சபல: சபலை: ஸார்தம்

வானரை: அக்ருத ஆத்மபி: |

ஜாத்யந்த இவ ஜாத்யந்தை: 

மந்த்ரயன் த்ரக்ஷ்யஸே நு கிம் ||

चपलः चपलैः सार्धम् वानरैः अकृत आत्मभिः |

जात्यंध इव जात्यन्धैः मंत्रयन् द्रक्ष्यसे नु किम् || 

நிலையில்லாத புத்தி உள்ளவர் நீங்கள். ஒரு குருடன், மற்றொரு பிறவி குருடனை வழிகாட்டியாக வைத்து இருப்பது போல, கீழ்த்தரமான ஆலோசனையை அற்ப மனப்பான்மை கொண்ட வானரர்கள் உங்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது. உங்களுக்கு தர்மம் பற்றி என்ன தெரியும்?


அஹம் து வயக்ததாம் அஸ்ய

வசனஸ்ய ப்ரவீமி தே |

ந ஹி மாம் கேவலம் ரோஷாத்

த்வம் விகர்ஹிதம் அர்ஹசி ||

अहम् तु व्यक्तताम् अस्य वचनस्य ब्रवीमि ते |

न हि माम् केवलम् रोषात् त्वम् विगर्हितुम् अर्हसि || 

நான் உங்களுக்கு தெளிவாக இப்போது விளக்குகிறேன் (உங்களை அடித்ததற்கான காரணம்). வெறும் கோபத்துடனும், துவேஷத்துடனும் நீங்கள் என்னை கேவலப்படுத்த நினைப்பது முறையல்ல.


தத் ஏதத் காரணம் பஸ்ய

யத் அர்தம் த்வம் மயா ஹத: |

ப்ராது: வர்தஸி பார்யாயாம்

த்யக்த்வா தர்மம் சனாதனம் ||

तत् एतत् कारणम् पश्य यत् अर्थम् त्वम् मया हतः |

भ्रातु: वर्तसि भार्यायाम् त्यक्त्वा धर्मम् सनातनम् ||

நான் உன்னை வீழ்த்தியதற்கான காரணம் இப்போது சொல்கிறேன். உங்கள் சகோதரரின் மனைவியுடன் வாழ்வதன் மூலம் நீங்கள் காலத்தை கடந்து நிற்கும் தர்மத்தை கைவிட்டீர்கள்.


அஸ்ய த்வம் தரமானஸ்ய

சுக்ரீவஸ்ய மஹாத்மன: |

ருமாயாம் வர்தஸே காமாத்

ஸ்னுஷாயாம் பாப கர்மக்ருத் ||

अस्य त्वम् धरमाणस्य सुग्रीवस्य महात्मनः |

रुमायाम् वर्तसे कामात् स्नुषायाम् पाप कर्मकृत् ||

மஹாத்மாவான சுக்ரீவன் உயிருடன் இருக்கும்போது, ​​காமத்தால், பாவ செயல்கள் செய்து, உங்கள் மருமகளாக கருதப்பட வேண்டிய சுக்ரீவாவின் மனைவி ரூமாவுடன் வாழ்கிறீர்கள்.


தத் வ்யதீதஸ்ய தே தர்மாத்

காம வ்ருத்தஸ்ய வானர |

ப்ராத்ரு பார்யா அபிமர்ஸ

அஸ்மின் தண்டோ அயம் ப்ரதிபாதித: ||

तद् व्यतीतस्य ते धर्मात् काम वृत्तस्य वानर |

भ्रातृ भार्या अभिमर्शे अस्मिन् दण्डो अयम् प्रतिपादितः ||

வானர அரசே! உங்கள் சகோதரரின் மனைவிக்கு எதிராக பாவம் செய்ததன் மூலம், நீங்கள் ஒழுக்கத்தை மீறி இருக்கிறீர்கள். இந்த செயலுக்கு இந்த தண்டனை நியாயமானது


ந ஹி தர்ம விருத்தஸ்ய

லோகே வ்ருத்தாத் அபேயுஷ: |

தண்டாத் அந்யத்ர பஸ்யாமி

நிக்ரஹம் ஹரி யூதப ||

न हि धर्म विरुद्धस्य लोक वृत्तात् अपेयुषः |

दण्डात् अन्यत्र पश्यामि निग्रहम् हरि यूथप || 

வானர அரசே ! தர்மத்திற்கு எதிராக செயல்பட்டதோடு, நடத்தை நெறிமுறையிலிருந்தும் விலகியவரை கட்டுப்படுத்த,  தண்டிப்பதைத் தவிர வேறு வழியை நான் காணவில்லை.


ந ஹி தே மர்ஷயே பாபம்

க்ஷத்ரிய: அஹம் குலோத்பவ: ||

न हि ते मर्षये पापं क्षत्रिय: अहम्  कुलोद्भवः||

நற்பண்புகள் கொண்ட பரம்பரையில் பிறந்து, ஒரு க்ஷத்திரியனாகவும் இருக்கும் நான் உங்கள் குற்றத்தை மன்னிக்கவே மாட்டேன்.


ஔரஸீம் பகினீம் வா அபி

பார்யாம் வா அபி அனுஜஸ்ய ய: |

ப்ரசரேத் நர: காமாத்

தஸ்ய தண்டோ வத: ஸ்ம்ருத: ||

औरसीम् भगिनीम् वा अपि भार्याम् वा अपि अनुजस्य यः |

प्रचरेत नरः कामात् तस्य दण्डो वधः स्मृतः ||

தன் சொந்த மகளிடமோ, சகோதரியிடமோ, சகோதரனின் மனைவியிடமோ தர்மத்தை மீறி விரோதமாக நடப்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஸ்மிருதி (law) கட்டளையிடுகிறது


பரத: து மஹீபாலோ 

வயம் து ஆதேஸ வர்தின: |

த்வம் ச தர்மாத் அதிக்ராந்த:

கதம் சக்யம் உபேக்ஷிதும் ||

भरतः तु महीपालो वयम् तु आदेश वर्तिनः |

त्वम् च धर्मात् अतिक्रान्तः कथम् शक्यम् उपेक्षितुम् ||

பரதன் இப்பொழுது அரசன். பரதனின் கட்டளையை நாங்கள் பின்பற்றுகிறோம். தர்மத்திலிருந்து விலகிய நீங்கள் எப்படி தண்டிக்கப்படாமல் போகலாம்?


குரு தர்ம வ்யதி க்ராந்தம்

ப்ராஞோ தர்மேன பாலயன் |

பரத: காம யுகத்தானாம்

நிக்ரஹே பர்ய வஸ்தித: ||

गुरु धर्म व्यतिक्रान्तम् प्राज्ञो धर्मेण पालयन् |

भरतः काम युक्तानाम् निग्रहे पर्यवस्थितः ||

மரியாதைக்குரிய அரசனான பரதன், தர்மத்தின் மூலம் ஆட்சி செய்கிறார். பரதனின் கட்டளைப்படி, சிற்றின்ப இன்பங்களுக்கு அடிமையாகி தர்மத்தை விட்டு விலகியவர்களை, தண்டிப்பதில் நாங்கள் குறியாக இருக்கிறோம்.


வயம் து பரத ஆதேஸம்

விதிம் க்ருத்வா ஹரீஸ்வர |

த்வத் விதான் பின்ன மர்யாதான்

நியந்தும் வயவஸ்திதா: ||

वयम् तु भरत आदेशम् विधिम् कृत्वा हरीश्वर |

त्वत् विधान् भिन्न मर्यादान् नियन्तुम् व्यवस्थिताः ||

வாலீ ! நாங்கள் பரதனின் கட்டளையை பின்பற்ற வேண்டும் மற்றும் தர்மத்தின் எல்லைகளிலிருந்து விலகிச் செல்லும் தீயவர்களைத் தண்டிக்க வேண்டும்.


சுக்ரீவேன வ மே சக்யம்

லக்ஷ்மணேன யதா ததா |

தார ராஜ்ய நிமித்தம் ச

நிஸ்ரேயசகர: ஸ மே ||

सुग्रीवेण च मे सख्यम् लक्ष्मणेन यथा तथा |

दार राज्य निमित्तम् च निःश्रेयसकरः स मे ||

சுக்ரீவனுடனான எனது நட்பு லக்ஷ்மணனுக்கு நிகரானது. சுக்ரீவனின் மனைவி மற்றும் ராஜ்யத்தை மீட்டெடுப்பதே என் நோக்கம்.

ப்ரதிஞா ச மயா தத்தா

ததா வானர சந்நிதௌ |

ப்ரதிஞா ச கதம் சக்யா

மத் விதேன அனவேக்ஷிதும் ||

प्रतिज्ञा च मया दत्ता तदा वानर संनिधौ |

प्रतिज्ञा च कथम् शक्या मत् विधेन अनवेक्षितुम् || 

நான் இதை (அவரது மனைவியையும் ராஜ்யத்தையும் மீட்பதாக) சுக்ரீவருக்கு மற்ற வானரர்கள் முன்னிலையில் உறுதியளித்தேன். என்னைப் போன்ற ஒரு நபரால் எப்படி கொடுத்த உறுதிமொழியை காப்பாற்றாமல் இருக்க முடியும்? அது எப்படி சாத்தியம்?





தத் ஏபி: காரணை: சர்வை:

மஹத்பி: தர்ம ஸம்ஹிதை: |

சாஸனம் தவ யத் யுக்தம்

தத் பவான் அனுமந்யதாம் ||

तत् एभिः कारणैः सर्वैर् महद्भिः धर्म संहितैः |

शासनम् तव यत् युक्तम् तत् भवान् अनुमन्यताम् ||

இந்த எல்லா காரணங்களையும் (தர்மத்தின் பல மீறல்கள்) தெரிந்தும், தர்மத்திற்கு ஏற்ப உங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ஒரு அரசனாக நீங்கள் அங்கீகரிப்பதே சரியானது.


ஸர்வதா தர்ம இத்யேவ

த்ரஷ்டவ்ய: தவ நிக்ரஹ: ||

सर्वथा धर्म इत्येव द्रष्टव्य: तव निग्रहः ||

உங்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை அனைத்து வகையிலும் சரியான நடவடிக்கையாக பார்க்கப்பட வேண்டும்.


வயஸ்யஸ்ய உபகர்தவ்யம்

தர்மம் ஏவ அனு-பஸ்யதா |

ஸக்யம் த்வயா அபி தத்

கார்யம் தர்மம் ஏவ அனுவர்ததா ||

वयस्यस्य उपकर्तव्यम् धर्मम् एव अनुपश्यता | 

शक्यम् त्वया अपि तत् कार्यम् धर्मम् एव अनुवर्तता ||

தர்மத்தைப் பின்பற்றும் நம்பகமான நண்பனின் கடமை இது. தர்மத்தைக் கருத்தில் கொண்டு, நீங்களும் தர்மத்தை மீறாமல் செயல்பட்டிருக்க வேண்டும்


ஸ்ரூயதே மனுனா கீதௌ

ஸ்லோகௌ சாரித்ர வத்ஸலௌ |

க்ருஹீதொள தர்ம குஸலை:

தத் ததா சரிதம் ஹரே ||

श्रूयते मनुना गीतौ श्लोकौ चारित्र वत्सलौ ||

गृहीतौ धर्म कुशलैः तत् तथा चरितम् हरे ||

மனு சொன்ன ஸ்ம்ருதியை இப்போது சொல்கிறேன். கேளுங்கள். நன்னடத்தை பற்றி இரண்டு வாக்கியங்கள் உள்ளது. இந்த இரண்டு வாக்கியங்கள் பெரும்பாலும் தர்மத்தில் நிலையாக இருப்பவர்களால் மேற்கோளாக காட்டப்படுகின்றன. வானர அரசே ! இந்த இரண்டு வாக்கியங்களை நானும் பெரிதும் மதிக்கிறேன்.


ராஜபி: த்ருத தண்டா: ச

க்ருதவா பாபாணி மானவா: |

நிர்மலா: ஸ்வர்கம் ஆயாந்தி

சந்த: ஸுக்ருதினோ யதா ||

राजभिः धृत दण्डाः च कृत्वा पापानि मानवाः |

निर्मलाः स्वर्गम् आयान्ति सन्तः सुकृतिनो यथा ||

பாவச் செயல்கள் செய்தவர்கள் அரசர்களால் தண்டிக்கப்பட வேண்டும், தண்டிக்கப்பட்ட பிறகு, அவர்கள் குற்றமற்றவர்களாக ஆகிறார்கள். அந்த நிலையில், அவர்களும் நல்ல செயல்களைச் செய்த நல்ல மனிதர்களைப் போல சொர்க்கத்தை அடைகிறார்கள். மனுவின் வாக்கியம் இது


சாஸநாத் வா அபி மோக்ஷாத்

வா ஸ்தேன: பாபாத் ப்ரமுச்யதே |

ராஜா து அசாஸந் பாபஸ்ய

தத் ஆப்நோதி கில்பிஷம் ||

शासनाद् वा अपि मोक्षात् वा स्तेनः पापात् प्रमुच्यते |

राजा तु अशासन् पापस्य तद् आप्नोति किल्बिषम् ||

ஒரு அரசனின் தனிப்பட்ட விருப்பத்தினாலோ, கவனக்குறைவாலோ ஒரு குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பித்தால், குற்றவாளியைத் தண்டிக்காமல் விட்ட அந்த அரசனும் அந்த குற்றவாளியின் பாவத்தைப் பெறுகிறான். இது மனுவின் மற்றொரு வாக்கியம்.


ஆர்யேன மம மாந்தாத்ரா

வ்யஸனம் கோரம் ஈப்ஸிதம் |

ஸ்ரமயேன க்ருதே பாபே

யதா பாபம் க்ருதம் த்வயா ||

आर्येण मम मान्धात्रा व्यसनम् घोरम् ईप्सितम् |

श्रमणेन कृते पापे यथा पापम् कृतम् त्वया ||

முன்பு ஒரு காலத்தில், இதே போன்ற பாவத்தை யதியாக இருக்கும் ஒருவர் செய்தார். எங்கள் வம்சத்தில் வந்த மாந்தாதா, ஒரு உன்னத மன்னன். அந்த யதி செய்த குற்றத்திற்காக மாந்தாதா கடுமையான தண்டனையை வழங்க உத்தரவிட்டார்.

அன்யை: அபி க்ருதம் பாபம்

ப்ரமத்தை: வஸுதா அதிபை: |

ப்ராயஸ்சிதம் ச குர்வந்தி

தேன தத் ஸாம்யதே ரஜ: ||

अन्यैः अपि कृतम् पापम् प्रमत्तैः वसुधा अधिपैः |

प्रायश्चित्तम् च कुर्वन्ति तेन तत् शाम्यते रजः ||

மன்னன் விழிப்புடன் இல்லாத போது, தீய செயல்களை சிலர் ஆரம்பித்து விடுகிறார்கள். மன்னர்கள் அத்தகைய பாவிகளை விழிப்புடன் இருக்கும்போது தண்டிக்கிறார்கள். தண்டிக்காத பட்சத்தில், அவர்களின் அலட்சியத்திற்கு மன்னன் ஈடு செய்ய வேண்டும்.


தத் அலம் பரிதாபேன

தர்மத: பரிகல்பதே |

வதோ வானர சார்தூல

ந வயம் ஸ்வ வஸே ஸ்தித: ||

तत् अलम् परितापेन धर्मतः परिकल्पितः |

वधो वानरशार्दूल न वयम् स्व वशे स्थिताः || 

வானரர்களில் சிங்கம் போன்றவரே ! துக்கத்தை விடுங்கள். தர்மத்தின் அடிப்படையில் தான் உங்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் சாஸ்திரங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். சுதந்திரமாக செயல்பட எங்களுக்கு அதிகாரம் இல்லை.


ஸ்ருணு ச அபி அபரம்

பூய: காரணம் ஹரிபுங்கவ |

யத் ஸ்ருத்வா ஹேதும் அத்வீர

ந மந்யும் கர்தும் அர்ஹஸி ||

श्रुणु च अपि अपरम् भूयः कारणम् हरिपुंगव |

यत् श्रुत्वा हेतुम अद्वीर न मन्युम् कर्तुम् अर्हसि || 

வானர நாயகனே ! நான் உங்களுக்கு இன்னும் ஒரு காரணம் தருகிறேன். அதைக் கேட்டதும், நீங்கள் என் மீது கோபப்பட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.


ந மே தத்ர மனஸ்தாபோ

ந மந்யு: ஹரிபுங்கவ |

வாகுராபி: ச பாஸை:

ச கூடை: ச விவிதை: நரா: |

ப்ரதிச்சன்னா: ச த்ருஸ்யா ச 

க்ருஹ்யந்தி சுபஹூன் ம்ருகான் ||

न मे तत्र मनस्तापो न मन्युः हरिपुंगव |

वागुराभिः च पाशैः च कूटैः च विविधैः नराः |

प्रतिच्छन्नाः च दृश्याः च गृह्णन्ति सुबहून् मृगान् ||

வானரர்களில் சிறந்தவரே! இந்த விஷயத்தில் எனக்கு மன வேதனையும் இல்லை அல்லது வருத்தமும் இல்லை. ஆனால் நான் தெளிவுபடுத்த விரும்பும் மற்ற விஷயத்தைக் கேளுங்கள். மக்கள் விலங்குகளைப் பிடிக்கும் போது, மறைந்து கொண்டோ, விலங்குகள் நடமாடும் திறந்த வெளியில் கண்ணிகள், கயிறுகள் கட்டி, மேலும் பல தந்திரங்களுடன் பிடிக்கிறார்கள்.





ப்ரதாவிதான் வா வித்ரஸ்தான்

விஸ்ரப்தான் அதி விஷ்டிதான் |

ப்ரமத்தான் அப்ரமத்தான் வா

நரா மாம்ச அஸினோ ப்ருஸம் |

வித்யந்தி விமுகாம் ச அபி ந ச 

தோஷோ அத்ர வித்யதே ||

प्रधावितान् वा वित्रस्तान् विस्रब्धान् अति-विष्ठितान् |

प्रमत्तान् अप्रमत्तान् वा नरा मांस अशिनो भृशम् |

विध्यन्ति विमुखाम् च अपि न च दोषो अत्र विद्यते ||

எச்சரிக்கப்பட்ட அல்லது எச்சரிக்கப்படாத, ஓடும் அல்லது நின்று கொண்டிருக்கும் விலங்கை மாமிசத்திற்காக அடிக்கலாம். தோஷமில்லை.


யந்தி ராஜர்ஷய: ச அத்ர

ம்ருகயாம் தர்ம கோவிதா: |

தஸ்மாத் த்வம் நிஹதோ யுத்தே

மயா பாணேன வானர |

அ-யுத்யன் ப்ரதி-யுத்யன் வா

யஸ்மாத் ஸாகா ம்ருகோ ஹி அஸி ||

यान्ति राजर्षयः च अत्र मृगयाम् धर्म कोविदाः |

तस्मात् त्वम् निहतो युद्धे मया बाणेन वानर |

अयुध्यन् प्रतियुध्यन् वा यस्मात् शाखा मृगो हि असि ||

வானரா! ராஜ ரிஷிகளாக இருக்கும் அரசர்கள் கூட வேட்டைக்கு செல்கின்றனர். நீங்கள் ஒரு மிருகம் என்று சொல்லி கொள்வதால், நீங்கள் சுக்ரீவனுடன் சண்டையிட்டாலும், சண்டையிடாவிட்டாலும் நான் உங்களை விலங்காக வில் அம்புடன் வேட்டையாடுகிறேன். நீங்கள் நேருக்கு நேர் சண்டையிட்டாலும், சண்டையிடாவிட்டாலும் வேட்டையாடப்படலாம்.


துர்லபஸ்ய ச தர்மஸ்ய

ஜீவிதஸ்ய சுபஸ்ய ச |

ராஜானோ வானர ஸ்ரேஷ்ட

ப்ரதா தாரோ ந ஸம்சய: ||

दुर्लभस्य च धर्मस्य जीवितस्य शुभस्य च |

राजानो वानरश्रेष्ठ प्रदातारो न संशयः ||

வானரர்களில் சிறந்தவரே! தர்மத்தின் சூக்ஷ்மத்தை, பவித்ரமான சுகபோக வாழ்க்கையை அரசர்கள் பெறுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.


தான் ந ஹிம்ஸ்யாத் ந ச ஆக்ரோஸேன்

ந ஆக்ஷிபேன் ந அப்ரியம் வதேத் |

தேவா மானுஷ ரூபேன

சரந்தி ஏதே மஹீ தலே ||

तान् न हिंस्यात् न च आक्रोशेन् न आक्षिपेन् न अप्रियम् वदेत् |

देवा मानुष रूपेण चरन्ति एते मही तले ||

அரசர்களை அவமதிக்கவோ, கத்தவோ, அலட்சியப்படுத்தவோ, விரும்பத்தகாத வார்த்தைகளோ பேச கூடாது. தர்மத்தை நிலைநாட்ட இருக்கும் இவர்கள் இந்த பூமியில் மனித உருவில் நகரும் தெய்வங்கள்.


த்வம் து தர்மம் அவிஞாய

கேவலம் ரோஷம் ஆஸ்தித: |

ப்ரதூஷயஸி மாம் தர்மே

பித்ரு பைதாமஹே ஸ்திதம் ||

त्वम् तु धर्मम् अविज्ञाय केवलम् रोषम् आस्थितः |

प्रदूषयसि माम् धर्मे पितृ पैतामहे स्थितम् ||

தர்மம் எது? என்று புரிந்து கொள்ள அறிவின்றி, முறையற்ற கோபத்தால், தர்மத்திற்கு அர்ப்பணித்த என்னை, என் தந்தை மற்றும் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்ட தர்மத்தை பின்பற்றும் என்னை நீங்கள் திட்டுகிறீர்கள்.


ஏவம் உக்த: து ராமேண

வாலீ ப்ரவ்யதிதோ ப்ருஸம் |

ந தோஷம் ராகவே தத்மௌ

தர்மே அதிகத நிஸ்சய: ||

एवम् उक्तः तु रामेण वाली प्रव्यथितो भृशम् |

न दोषम् राघवे दध्यौ धर्मे अधिगत निश्चयः || 

வலியால் துடித்து கொண்டிருந்த வாலீ, ராமபிரானின் வார்த்தைகளை கேட்ட பிறகு, தர்மம் எது என்ற தெளிவு பெற்றான். ராமபிரான் மீது ஒரு குற்றமும் இல்லை என்று உணர்ந்து கொண்டான்.

ப்ரத்யுவாச ததோ ராமம்

ப்ராஞ்சலி: வானரேஸ்வர: |

யத் த்வம் ஆத்த நரஸ்ரேஷ்ட

தத் ஏவ ந அத்ர ஸம்சய: ||

प्रत्युवाच ततो रामम् प्रांजलि: वानरेश्वरः |

यत् त्वम् आत्थ नरश्रेष्ठ तत् एव न अत्र संशयः ||

தர்மாத்வான ராமபிரானை கைகூப்பி வணங்கி, வாலீ பேச தொடங்கினான்.."மனிதர்களில் சிறந்தவரே! நீங்கள் பேசிய அனைத்தும் சந்தேகமில்லாமல் சத்யமே"


ப்ரதிவக்தும் ப்ரக்ருஷ்டே ஹி

ந அபக்ருஷ்ட: து ஷக்னுயாத் |

யத் அயுக்தம் மயா பூர்வம்

ப்ரமாதாத் உக்தம் அப்ரியம் |

தத்ர அபி கலு மே தோஷம்

கர்தும் ந அர்ஹஸி ராகவ ||

प्रतिवक्तुम् प्रकृष्टे हि न अपकृष्टः तु शक्नुयात् |

यद् अयुक्तम् मया पूर्वम् प्रमादात् उक्तम् अप्रियम् |

तत्र अपि खलु मे दोषं कर्तुं न अर्हसि राघव ||

தர்மத்தில் இருப்பவனை என்றுமே அதர்மம் செய்பவன் மறுக்க முடியாது. உங்களை போன்ற ஒரு உன்னத மனிதனை என்னால் மறுக்க முடியாது. ராகவா! எனது அறியாமை காரணமாக நான் முன்பு பொருத்தமற்ற, விரும்பத்தகாத வார்த்தைகளை பேசிவிட்டேன். ராகவா! நீங்கள் குற்றமே இல்லாதவர். என் செயலுக்கு, உண்மையில் நான் தான் குற்றம் சாட்டப்பட வேண்டும்.


த்வம் ஹி த்ருஷ்டார்த்த தத்வஞ:

ப்ரஜானாம் ச ஹிதே ரத: |

கார்ய காரண ஸித்தொள ச

ப்ரஸன்னா புத்தி: அவ்யயா ||

त्वम् हि दृष्टार्थ तत्त्वज्ञः प्रजानाम् च हिते रतः |

कार्य कारण सिद्धौ च प्रसन्ना बुद्धिः अव्यया ||

நீங்கள் சத்தியத்தையும் நீதியையும் மெய்யாக உணர்ந்தவர். நீங்கள் உங்களை அண்டியவர்களின் நல்வாழ்வில் உறுதியாக இருக்கிறீர்கள். காரணம் மற்றும் விளைவு பற்றி உங்களுக்கு உறுதியாகத் தெரிகிறது. உங்கள் புத்தி, உங்கள் குரல் மற்றும் பேச்சு மிகவும் இனிமையானவை.


மாம் அபி அவகதம் தர்மானம்

வ்யதிக்ராந்த புரஸ்க்ருதம் |

தர்ம சம்ஹிதயா வாசா

தர்மஞ பரிபாலய ||

माम् अपि अवगतम् धर्माणं व्यतिक्रान्त पुरस्कृतम् |

धर्म संहितया वाचा धर्मज्ञ परिपालय || 

தர்மமே உருவாக கொண்டவரே! தர்மத்தை, ஒழுக்கத்தை மீறியவன் நான் என்று உணர்கிறேன். உங்களுடைய தர்மம் நிறைந்த வாக்கினால் என்னை இந்த பாவத்திலிருந்து காப்பாற்றுங்கள். இவ்வாறு வாலி தர்மமே உருவான ராமபிரானை சரண் அடைந்து விட்டான்.


பாஷ்ப ஸம்ருத்த கண்ட: து

வாலீ ச ஆர்த ரவ: ஸனை: ||

உவாச ராமம் சம்ப்ரேக்ஷ்ய

பங்களக்ன இவ த்விப: ||

बाष्प संरुद्ध कण्ठः तु वाली स आर्त रवः शनैः |

उवाच रामम् संप्रेक्ष्य पंकलग्न इव द्विपः ||

சேற்றில் விழுந்த ஒரு யானை போல, வாலி தன் பாவ காரியங்களை நினைத்து, கண்ணீருடன் தொண்டை அடைத்து, வேதனையுடனான புலம்பலுடன், இராமபிரானைக் கூர்ந்து கவனித்தான்.


ந த்வ ஆத்மாநம் அஹம் ஸோசே

ந தாராம் ந அபி பாந்தவான் |

யதா புத்ரம் குணஸ்ரேஷ்டம்

அங்கதம் கனகாங்கதம் ||

न त्व आत्मानम् अहम् शोचे न ताराम् न अपि बान्धवान् |

यथा पुत्रम् गुणश्रेष्ठम् अंगदम् कनकांगदम् ||

நான் என்னை பற்றியோ, தாராவை பற்றியோ, என் உறவினர்களை பற்றியோ கூட வருத்தப்படவில்லை. ஆனால் தங்கக் கவசங்களால் அலங்கரிக்கப்பட்ட என் மகன் அங்கதனுக்காக நான் கவலைப்படுகிறேன். அவன் அனைத்து நற்பண்புகளும் கொண்டவன்.


ஸ மம அதர்ஸனாத் தீனோ

பால்யாத் ப்ரப்ருதி லாலித: |

தடாக இவ பீதாம்பு:

உபஸோஷம் கமிஷ்யதி ||

स मम अदर्शनात् दीनो बाल्यात् प्रभृति लालितः |

तटाक इव पीतांबुः उपशोषम् गमिष्यति || 

அவனை பாசத்தோடு சிறுவயதில் இருந்தே வளர்த்து வந்தேன். நான் இல்லாத நேரத்தில் அங்கதன் மனச்சோர்வு அடைந்து விடுவான். அவன் தண்ணீர் வற்றிப்போன குளம் போல் ஆகிவிடுவான்


பால: ச அக்ருத புத்தி: ச

ஏக புத்ர: ச மே ப்ரிய: |

தாரேயோ ராம பவதா

ரக்ஷணீயோ மஹாபல: ||

बालः च अकृतबुद्धिः च एक पुत्रः च मे प्रियः |

तारेयो राम भवता रक्षणीयो महाबलः ||

மகாபலம் கொண்ட ராமா! தாரா மூலமாக கிடைத்த குழந்தை இவன். எனக்கு மிகவும் பிரியமானவன். அவன் இன்னும் சிறு பிள்ளை தான், அறியாத பிள்ளை தான். ஆனால் மஹாபலசாலி. அவன் உங்களால் ரக்ஷிக்கப்பட வேண்டும்.


சுக்ரீவ ச அங்கதே ச ஏவ

விதத்ஸ்வ மதிம் உத்தமாம் |

த்வம் ஹி சாஸ்தா ச கோப்தா ச

கார்யாகார்ய விதொள ஸ்தித: ||

सुग्रीवे च अंगदे चैव विधत्स्व मतिम् उत्तमाम् |

त्वम् हि शास्ता च गोप्ता च कार्याकार्य विधौ स्थितः || 

சுக்ரீவனிடத்தில் உங்கள் இதயத்தில் எத்தனை அன்பு உண்டோ அதை அங்கதனுக்கும் வழங்குங்கள். நீங்களே ரக்ஷிப்பவர், நீங்களே தண்டிப்பவர். நீங்களே எதை செய்ய வேண்டும், எதை செய்ய கூடாது என்று அறிந்தவர்.


யா தே நரபதே வ்ருத்தி:

பரதே லக்ஷ்மணே ச யா |

சுக்ரீவே ச அங்கதே ராஜன் தாம்

த்வம் ஆதாதும் அர்ஹஸி ||

या ते नरपते वृत्तिः भरते लक्ष्मणे च या |

सुग्रीवे च अंगदे राजन् ताम् त्वम् आधातुम् अर्हसि ||

நரர்களுக்கு அரசே ! நீங்கள் பரத, லக்ஷ்மணர்களை எப்படி நேசிக்கிறீர்களோ, அது போலவே சுக்ரீவனையும், அங்கதனையும் நேசியுங்கள்.


மத் தோஷ க்ருத தோஷாம்

தாம் யதா தாராம் தபஸ்விநீம் |

சுக்ரீவோ ந அவமன்யேத

ததா அவஸ்தாதும் அர்ஹஸி ||

मत् दोष कृत दोषाम् ताम् यथा ताराम् तपस्विनीम् |

सुग्रीवो न अवमन्येत तथा अवस्थातुम् अर्हसि ||

என்னுடைய குற்றங்களுக்காக, தாரா துன்புறுத்த படமாட்டாள் என்று நம்புகிறேன்.சுக்ரீவன் தன் பகைவனின் மனைவி இவள் என்று ஒதுக்க மாட்டான் என்றே நம்புகிறேன்.


த்வயா ஹி அனுக்ருஹீதேன

ராஜ்யம் ஸக்யம் உபாஸிதும் |

த்வத் வஸே வர்தமானேன

தவ சித்த அனுவர்தினா |

ஸக்யம் திவம் ச ஆர்ஜயிதும்

வஸுதாம் ச அபி சாஸிதும் ||

त्वया हि अनुगृहीतेन राज्यम् शक्यम् उपासितुम् |

त्वत् वशे वर्तमानेन तव चित्त अनुवर्तिना |

शक्यम् दिवम् च आर्जयितुम् वसुधाम् च अपि शासितुम् ||

நீங்கள் மனது வைத்து விட்டால், ஒருவனை அரசனாக ஆக்க முடியும். உங்களை சரண் அடைந்தவர்கள் உங்கள் சொல் பேச்சு படி நடந்தால், அவர்களுக்கு இந்த உலகம் மட்டுமல்ல, மேல் லோகங்களும் எளிதில் கிடைத்து விடும்.


த்வத: அஹம் வதம் ஆகாங்க்ஷயன்

வார்யமாணோ அபி தாரயா |

சுக்ரீவேன சஹ ப்ராதா 

த்வந்த யுத்தம் உபாகதம் |

இதி உக்த்வா வானரோ ராமம்

விரராம ஹரீஸ்வர: ||

त्वतः अहम् वधम् आकांक्षयन् वार्यमाणो अपि तारया |

सुग्रीवेण सह भ्राता द्वन्द्व युद्धम् उपागतम् |

इति उक्त्वा वानरो रामम् विरराम हरीश्वरः ||

'நான் உங்கள் கையால் உயிர் விட வேண்டும்' என்ற ஆசையின் காரணத்தால் தான், தாரா என்னை போருக்கு செல்ல வேண்டாம் என்று தடுத்தும், சுக்ரீவனோடு போர் புரிய வந்தேன். இப்படி பேசிய வாலி உடனே அமைதியாக ஆனான்.

ஸ தம் ஆஷ்வாஸயத் ராமோ

வாலினம் வ்யக்த தர்ஸனம் |

ஸாம சம்பன்னயா வாசா

தர்ம தத்வார்த்த யுக்தயா ||

स तम् आश्वासयत् रामो वालिनम् व्यक्त दर्शनम् |

साम सम्पन्नया वाचा धर्म तत्त्वार्त्ध युक्तया ||

'நான் உங்கள் கையால் உயிர் விட வேண்டும் என்று தான் வந்தேன்' என்ற சொன்ன வாலீ, ராமபிரானை யார் என்று தெளிவாக கண்டான். (நாராயணனாக காட்சி கொடுத்தார்). தரிசனம் பெற்ற வாலியை, அமைதி மற்றும் அமைதி, உண்மை மற்றும் தர்மத்தின் வார்த்தைகளால் ராமபிரான் சமாதானப்படுத்தி பேசலானார்.


ந சந்தாப: த்வயா கார்ய

ஏதத் அர்தம் ப்லவங்கம |

ந வயம் பவதா சிந்த்யா

ந அபி ஆத்மா ஹரி ஸத்தம |

வயம் பவத் விஷேஸேன

தர்மத; க்ருத நிஷ்சயா: ||

न संतापः त्वया कार्य एतत् अर्थम् प्लवङ्गम |

न वयं भवता चिन्त्या न अपि आत्मा हरिसत्तम |

वयम् भवत् विशेषेण धर्मतः कृत निश्चयाः ||

வானர தலைவனே! உங்கள் கவலையைக் கைவிடுங்கள். எங்களைப் பற்றியோ உங்களைப் பற்றியோ இனி கவலைப்படாதீர்கள். எது நடந்தாலும், அது தர்மத்திற்கு ஏற்ப நடந்திருக்கிறது.


தண்டயே ய: பாதயேத் தண்டம்

தண்டயோ ய: ச அபி தண்டயதே |

கார்ய காரண ஸித்தார்தொள

உபௌ தொள ந அவஸீதத: ||

दण्ड्ये यः पातयेत् दण्डम् दण्ड्यो यः च अपि दण्ड्यते |

कार्य कारण सिद्धार्थौ उभौ तौ न अवसीदतः ||

தர்மத்துக்கு உட்பட்டு தண்டிப்பவனும், தர்மத்துக்கு உட்பட்டு தண்டிக்கப்பட்டவனும், இருவருமே கவலை பட அவசியமில்லை.


தத் பவான் தண்ட ஸம்யோகாத்

அஸ்மாத் விகித கல்மஷ: |

கத; ஸ்வாம் ப்ரக்ருதிம் தர்ம்யாம்

தர்ம திஷ்டேன வர்த்மனா ||

तत् भवान् दण्ड सम्योगात् अस्मात् विगत कल्मषः |

गतः स्वाम् प्रकृतिम् धर्म्याम् धर्म दिष्टेन वर्त्मना || 

தண்டிக்கப்பட்டதாலேயே, உங்கள் கறைகளில் இருந்து நீங்கள் விடுபடுகிறீர்கள். இப்போது நீங்கள் உங்கள் இயல்பான நல்லொழுக்கத்துடன் இருக்கிறீர்கள். நீங்கள் இப்போது தர்மத்தின் பாதையில் இருக்கிறீர்கள்.


த்யஜ சோகம் ச மோஹம் ச

பயம் ச ஹ்ருதயே ஸ்திதம் |

த்வயா விதாநம் ஹர்யக்க்ரய

ந ஸக்யம் அதிவர்திதும் ||

त्यज शोकम् च मोहम् च भयम् च हृदये स्थितम् |

त्वया विधानम् हर्यग्र्य (हर्यग्र्-य) न शक्यम् अतिवर्तितुम् ||

வானரர்களில் சிறந்தவரே! உங்கள் இதயத்திலுருந்து கவலையையும், பயத்தையும் விடுங்கள். விதியை  உங்களால் மாற்ற முடியாது.


யதா த்வயி அங்கதோ

நித்யம் வர்ததே வானரேஸ்வர: |

ததா வர்ததே சுக்ரீவோ

மயி ச அபி ந ஸம்சய: ||

यथा त्वयि अंगदो नित्यम् वर्तते वानरेश्वरः |

तथा वर्तते सुग्रीवो मयि च अपि न संशयः ||

வானரர்களில் சிறந்தவரே! உங்களிடம் அங்கதன் எத்தனை பாதுகாப்புடன் இருந்தானோ, அதை போலவே என்னிடமும் சுக்ரீவனிடமும் பாதுகாப்பாக இருப்பான். இதில் உங்களுக்கு துளியும் சந்தேகம் வேண்டாம்


ஸ தஸ்ய வாக்யம் மதுரம் மஹாத்மன:

ஸமாஹிதம் தர்ம பத அனுவர்தின: |

நிஸம்ய ராமஸ்ய ரணா அவ மர்தின:

வச: ஸுயுக்தம் நிஜகாத வானர: ||

स तस्य वाक्यम् मधुरम् महात्मनः

समाहितम् धर्म पथ अनुवर्तिनः |

निशम्य रामस्य रणा अव मर्दिन:

वचः सुयुक्तम् निजगाद वानरः ||

தர்ம வழியில் செல்லும், போரில் எதிரிகளை வீழ்த்தும், ராமபிரானின் இனிமையான  வார்த்தைகளைக் கேட்ட வாலி, பொருத்தமான முறையில் பதிலளித்தான்


ஸர: அபி தப்தேன விசேதஸா மயா

ப்ரதூஷித: த்வம் யத் அஜானதா ப்ரபோ |

இதம் மஹேந்த்ரோபம் பீம விக்ரம

ப்ரஸாதித: த்வம் க்ஷம மே நரேஸ்வர ||

शर: अभि तप्तेन विचेतसा मया

प्रदूषितः त्वम् यद् अजानता प्रभो |

इदम् महेन्द्रोपम भीम विक्रम

प्रसादितः त्वम् क्षम मे नरेश्वर || 

ப்ரபோ !  அம்பு பட்ட வலியால், எது சரி? எது தவறு? என்று அறிய முடியாத குழப்பத்தில், என்னை அறியாமல் பழி சொற்களால் உங்களை திட்டி விட்டேன். நரேந்திரனே !என்னை மன்னியுங்கள். 


வாலீ ஒரு சமயத்தில் தன்னை மனிதனாகவும், மறுபுறம் விலங்காகவும் மாற்றி மாற்றி பேசி நியாயம் கேட்க, ராமபிரான் மனிதன் என்ற காரணத்தால், விலங்கு என்ற காரணத்தால் ஏன் கொன்றேன் என்று வாலிக்கு நியாயப்படுத்தினார்.


வாலீ தன்னை மனிதன் என்ற ரீதியில், ஏன் நேருக்கு நேர் வந்து போரிடாமல் கொன்றீர்கள்? என்று கேட்டதற்கு, 

ராமபிரான், சகோதரன் மனைவியோடு வாழும் தவறுக்கு மரண தண்டனை கொடுத்தேன் என்று சொல்லி விட்டார்.


நேருக்கு நேர் சென்று தர்ம போர் புரிய, வாலீ தர்மத்தின் வழியில் இருக்கவில்லை. 

வாலிக்கு மரண தண்டனை கொடுப்பதே லட்சியம். அது சுக்ரீவனை கொண்டு செய்ய பார்த்தார். முடியாத பட்சத்தில் தானே குற்றவாளியான வாலிக்கு கொடுத்து விட்டார். 

குற்றம் செய்து, தூக்கிலிடப்படுபவன் முகத்தை மூடி தூக்கிடுவார்கள். யார் தண்டித்தார்? என்றே தெரியாமல் இறந்து விடுவான். 

அது போல, தண்டிக்கப்பட வேண்டிய வாலியை இருந்த இடத்திலிருந்தே அடித்து கொன்றார் ராமபிரான்.


வாலீ தன்னை வானரன் என்ற ரீதியில், ஏன் நேருக்கு நேர் வந்து போரிடாமல் கொன்றீர்கள்? என்று கேட்டதற்கு, 

ராமபிரான், வேட்டையாடுவது அரச குல க்ஷத்ரியர்களுக்கு கடமை. நீ விலங்கு என்ற ரீதியாக வேட்டையாடப்பட்டாய், என்று சொல்லிவிட்டார்.


இரண்டு ரீதியிலும் ராமபிரான் செய்தது சரியே என்று உணர்ந்த வாலிக்கு, தான் யார் என்று காட்டி தரிசனமும் கொடுத்து விட்டார் ராமபிரான்.


குருநாதர் துணை