ஒரு சமயம், திரௌபதி திவ்யமான நறுமணம் கொண்ட 1000 இதழ்கள் கொண்ட தாமரை மலரை கண்டாள்.
சௌகந்திக மலரை பறிக்க சென்றான் பீமன்.
அந்த சமயம் சகோதரர்களோடு அர்ஜுனன் இருந்தானா?
பீமன் வரவில்லையே என்று தர்மபுத்திரர் திரௌபதி, நகுலன், சகாதேவனோடு, அங்கிருந்த ப்ராம்மணரைகளையும் கடோதகஜன் உதவியோடு அழைத்து கொண்டு, கந்தமாதன் என்ற மலையை அடைந்தார்கள்.
குபேரன் "பீமன் சௌகந்திக மலர்களை வேண்டுமளவுக்கு எடுத்து கொள்ளட்டும்" என்று அனுமதி கொடுத்த பிறகு, பீமன் மலர்களை பறித்து கொண்டான்.
ऊषुर्नातिचिरं कालं रममाणाः कुरूद्वहाः |
प्रतीक्षमाणआ बीभत्सुं गन्धमादनसानुषु ||
- ஆரண்ய காண்டம் (மஹாபாரதம்)
கந்தமாதன் என்ற அந்த மலை அடிவாரத்திலேயே சில காலம் பீபத்ஸு என்ற பெயர் கொண்ட அர்ஜுனனை எதிர்பார்த்து வசித்து வந்தார்கள்.
பதில்: சௌகந்திக மலரை பீமன் பறிக்க சென்ற போது, பாண்டவர்களோடு அர்ஜுனன் இல்லை
பெரிய ஆபத்துக்கள் நீங்க… சொல்ல வேண்டிய மந்திரம். எந்த அனுபவத்தில் சொல்ல வேண்டும்?
வேத மந்திரம்:
இமம் மே வருண ஸ்ருதி....
ஶ்ரீ ஶ்ரீ அண்ணா (ஶ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள்) இந்த ஒரு வரிக்கு மட்டும் கொடுக்கும் ஆச்சர்யமான விளக்கம்… (visit srisrianna.com to download discourses)
इमम् मे वरुण श्रुधि
Rigveda: Mandala 1 - Suktam 25 Mantra 19
YajurVeda: Chapter 21 Mantra 1
இமம் மே வருண ஸ்ருதி.... என்ற வேத மந்திரம், பொதுவாக வருணனை குறித்து சொல்லப்படுகிறது.
ஆனால்,
இதே மந்திரம், சந்தியா வந்தனத்தில், சூரியனை பார்த்து சொல்லும்படியாகவும் இருக்கிறது என்று பார்க்கிறோம்
"ஹே வருணா! என்று நான் கூப்பிடுவதை கேளுங்கள்" (இமம் மே வருண ஸ்ருதி) என்பது இந்த மந்திரத்துக்கு அர்த்தம்.
சூரியனை பார்த்து, "ஹே வருணா" என்று சந்தியாவனத்தில் அழைக்கிறோம்.
சூரியனும், வருணனும் வேறு வேறு தேவன் அல்லவா? இந்த சந்தேகம் பொதுவாக உண்டாவது சகஜம்.
பொதுவாக, எந்த வேத மந்திரத்தை எடுத்தாலும், அதில் 3 தெய்வங்கள் அடக்கம்... ராம மந்திரம், திருவஷ்டாக்ஷர மந்திரத்துக்கும் இது பொருந்தும்.
1. "ராம நாமமே (சப்தமே) பகவான் தான்" என்று தியானிப்பது ஒரு முறை
(ஹனுமான் ராம நாமத்தை ஜபம் செய்து கொண்டிருந்தார். ராம நாமத்திலிருந்தே, பகவான், ஶ்ரீ ராமபிரானாக அவதாரம் செய்தார்.
2. ராம ஜபம் செய்யும் போது, ராமபிரானை தியானிப்பது ஒரு முறை
3. ராம ஜபம் செய்யும் போது, பரமாத்மா நாராயணனை தியானிப்பது ஒரு முறை.
இவ்வாறு, ராம நாமம் என்ற தாரக மந்திரத்தை, மூன்று விதத்தில் ஜபிக்கலாம்.
இங்கு "வருணா" என்று சொல்லும் போது,
1. வருணன் என்ற வேத மந்திரமே (ஒலியே) பரமாத்மா தான் என்று ஜபிப்பது ஒரு நிலை.
2. வருணன் என்று சொல்லும் போது, வருண தேவனை தனியாக தியானித்து ஜபிப்பது ஒரு நிலை.
3. வருணன் என்று சொல்லும் போது, அந்த வருண தேவனும் விராட் ஸ்வரூபமாக இருக்கும் நாராயணனுக்குள் அடக்கம் என்று உணர்ந்து, நாராயணனை ஜபிப்பது ஒரு நிலை.
உண்மையான மெய் ஞானிகள் 3ம் நிலையில் இருந்து கொண்டு த்யானம் செய்கிறார்கள்.
பரவாசுதேவன் நாராயணனின் அறிவு "வேதம்" என்று சொல்லப்படுகிறது.
ப்ரம்ம தேவன் படைக்கப்பட்ட போது, வேதத்தை கொடுத்தார்.
வேதம் சொன்னபடி உலகங்கள் படைக்கப்பட்டன. சப்த ரிஷிகள் படைக்கப்பட்டனர். அவர்கள் மூலம் தேவர்கள், அசுரர்கள், பக்ஷிகள், மிருகங்கள், மனிதர்கள் படைக்கப்பட்டனர்.
இந்திரன் படைக்கப்படும் முன்பேயே வேதம் இருந்தது. வேதம் "இந்திராய ஸ்வாஹா" என்று சொல்கிறது
தேவர்களை படைத்த ப்ரம்ம தேவன், "இந்திராய ஸ்வாஹா" என்று சொல்லும் போது, தன்னை படைத்த நாராயணனின் புஜமே இந்திரன் என்று த்யானம் செய்கிறார்.
தான் படைத்த தேவேந்திரனை ப்ரம்மா தியானிப்பது இல்லை.
அந்த தேவேந்திரன் நாராயணனின் புஜமாக இருக்கிறான் என்றே த்யானம் செய்கிறார்.
இங்கு "ஹே வருணா! என்று நான் கூப்பிடுவதை கேளுங்கள்" (இமம் மே வருண ஸ்ருதி), என்று சொல்லும் போது, இந்த வேத மந்திரமே பரமாத்மா தான் என்று நினைப்பது ஒரு முறை.
"ஹே வருணா! என்று நான் கூப்பிடுவதை கேளுங்கள்" (இமம் மே வருண ஸ்ருதி), என்று சொல்லும் போது, வருண தேவனை நினைத்து ஜபம் செய்வது ஒரு முறை. வருண தேவன் மூலம் நமக்கு புஷ்டியும், மழையும் (தண்ணீர்) கிடைக்கும்.
அதே சமயம் "ஹே வருணா! என்று நான் கூப்பிடுவதை கேளுங்கள்" (இமம் மே வருண ஸ்ருதி), என்று சொல்லும் போது,
ஞானிகள், வருணன் என்ற பெயரில் கருணையை வர்ஷிக்கும் நாராயணனின் கண்களை த்யானிக்கிறார்கள்.
பகவான் எங்கேயோ வைகுண்டத்தில் இருக்கிறார். நாம் கூப்பிடுவது அவர் காதில் கேட்குமா?
கஜேந்திரன் என்ற யானை, "ஹே ஆதி மூலமே" என்று அழைத்தது. பகவான் நாராயணனுக்கு கேட்டதே!
உடனே அபயம் கொடுத்து காப்பாற்றினாரே !
அது மட்டுமா!
பகவான், மனித வடிவம் எடுத்து ஶ்ரீ கிருஷ்ணனாக துவாரகையில் இருக்கிறார்.
மனித உருவில் தான் இருக்கிறார்
பல மைல் தூரத்தில் உள்ள ஹஸ்தினாபுர அரச சபையில், யாருமே காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கும் திரௌபதி, தன் மானத்தை இழக்கும் பேராபத்தில் இருந்த போது, மனித உருவத்தில் இருக்கும் ஶ்ரீ கிருஷ்ணன் தன்னை நிச்சயம் காப்பாற்றுவார் என்று திடமாக நம்பினாள்.
மனித உருவில் இருக்கும் ஶ்ரீ கிருஷ்ணர், துவாரகையிலிருந்து எப்படி உடனே வருவார்? என்று சந்தேகப்படவில்லை.
உடனே "ஹே கோவிந்தா" என்று அழைத்தாள்.
பல மைல் தூரம் இருக்கும் ஶ்ரீ கிருஷ்ணருக்கு இவள் அழைப்பது கேட்டது.
மனித உருவில் இருக்கும் ஶ்ரீ கிருஷ்ணர், தேரை கிளப்பி கொண்டு அஸ்தினாபுரம் வரை சென்று திரௌபதியை காப்பாற்றலாம். ஆனால் அதற்கு இப்பொது அவகாசமில்லை.
அப்பொழுது துவாரகையில் ருக்மணியோடு சொக்கட்டான் ஆடி கொண்டிருந்தார்.
திரௌபதி காப்பாற்ற படவேண்டும் என்று சங்கல்பித்து "அக்ஷயம்" என்று சொக்கட்டானை உலுக்கி போட, துச்சாதனன் திரௌபதியின் புடவை பிடித்து இழுக்க, மலை மலையாக பல பல வண்ண வண்ண புடவைகள் திரௌபதி அணிந்திருந்த புடவை வழியே வெளி வர தொடங்கியது.
எதிரியான துச்சாதனன் களைத்து விட்டான்.. இன்னும் புடவைகள் திரௌபதியை காக்க காத்து இருந்தது.
திரௌபதியின் ஆபத்து விலகியது.
உள்ளும் புறமும் உண்மையாக பகவானை நினைத்து, தன்னை நிச்சயம் காப்பாற்றுவார் என்று நினைத்த கஜேந்திரன், திரௌபதி இருவரும், பகவானின் பெயரை, சந்தேகமில்லாமல், திடமான எண்ணத்தோடு சொல்லி பயனை அடைந்தார்கள்.
அது போல,
ஸாயங்கால சந்தியா வந்தனம் செய்யும் போது, கஜேந்திரன், திரௌபதி கொண்டிருந்த விசுவாசத்தை போல, "ஹே வருணா! என்று நான் கூப்பிடுவதை கேளுங்கள்" (இமம் மே வருண ஸ்ருதி) என்று அழைத்தால், நமக்கு நேர இருக்கும் பெரும் ஆபத்திலிருந்து பகவான் நம்மை நிச்சயம் காப்பாற்றுவார்.
இப்படி ஒரு அர்த்தம் கொண்ட சாயங்கால சந்தியா வந்தனத்தை தெரிந்து கொண்ட பிறகும், ஒருவன் செய்யாமல் இருக்க முடியுமா?
வட கிழக்கில் வீசிய காற்றினால், 1000 இதழ்கள் கொண்ட, சூரியனுக்கு ஒப்பான பிரகாசத்தோடு திவ்யமான ஒரு தாமரை பூ தற்செயலாக வந்து விழுந்தது.
பாஞ்சாலியான திரௌபதி, அந்த திவ்யமான மணம் கொண்ட, மனதை மகிழ்விக்க கூடிய காற்றினால் கொண்டு வரப்பட்ட பூமியில் விழுந்து கிடக்கும் சுத்தமான அந்த தாமரையை பார்த்தாள்.
तच्छुभा शुभमासाद्य सौगन्धिकम् अनुत्तमम्।
अतीवम् उदिता राजन् भीमसेनम् अथाब्रवीत् ।।
- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)
அந்த ஸௌகந்திக புஷ்பத்தை கையில் எடுத்த திரௌபதி, பீமசேனனை பார்த்து, "பீமசேனரே! திவ்யமாக இருக்கும், மிகவும் அழகாக இருக்கும், பூக்களில் உத்தமாக இருக்கும், நறுமணம் கொண்ட, அழகிய வடிவம் கொண்ட, என் மனதை மகிழ்விக்க கூடிய இந்த மலரை பாருங்கள்.
இந்த மலரை தர்ம ராஜருக்கு கொடுப்பேன்.
இதே ஜாதியை சேர்ந்த மலரை மேலும் பறித்து கொண்டு தாருங்கள்.
அந்த பூக்களை நான் காம்யக வனத்தில் உள்ள நமது ஆஸ்ரமத்தில் வைத்து கொள்வேன்.
பார்த்தரே ! நான் உங்களுக்கு ப்ரியமானவள் என்று நினைத்தால், இந்த மலர்களை இன்னும் நிறைய பறித்து கொண்டு வாருங்கள். நான் அவைகளை நமது காம்யக வனத்தில் உள்ள நமது ஆஸ்ரமத்திற்கு கொண்டு போக விரும்புகிறேன்" என்றாள்.
பீமன், திரௌபதியின் இந்த சாதாரண ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவது என்ற முடிவோடு, மலரை கொண்டு வந்த திசை நோக்கி நடக்க ஆரம்பித்தான். பெரும் மலைகளில் ஏறி அந்த ஸௌகந்திக புஷ்பத்தை தேடி அலைந்தான்.
அப்போது ஹனுமான் வயதான வானரம் போல அவன் போகும் பாதையில் படுத்து கொண்டிருந்தார்.
"ஒவ்வொரு உடலுக்கு உள்ளும் பரமாத்மா இருக்கிறார்.. உன் உள்ளும் இருக்கிறார். அதனால் தாண்ட மாட்டேன். வழி விடு" என்றான் பீமன்.
"வயதாகி விட்டதால், நகர முடியவில்லை. என் வாலை நகர்த்தி விட்டு செல்" என்றார் ஹனுமான்.
பீமன் என்ன முயற்சி செய்தும் வாலை அசைக்க கூட முடியாமல் போக, வந்திருப்பது யார்? என்று பணிவோடு கேட்டான்.
हनूमानुवाच (ஹனுமான் பீமனை பார்த்து பேசலானார்)
यत्ते मम परिज्ञाने कौतूहलम् अरिंदम।
तत्सर्वम् अखिलेन त्वं शृणु पाण्डव-नन्दन ।।
- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)
பகைவர்களை அடக்குபவனே! பாண்டுவின் பிள்ளையே! நீ என்னை பற்றி அறிந்து கொள்ள ஆவல் கொண்டு இருப்பதால், நான் சொல்லும் அனைத்தையும் கேள்.
अहं केसरिणः क्षेत्रे वायुना जगद् आयुषा।
जातः कमल-पत्राक्ष हनूमान् नाम वानरः ।।
- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)
தாமரை இதழ் போன்ற கண்கள் உடையவனே! நான் கேசரி என்பவரின் பத்னிக்கு உலகத்திற்கு ஆயுளாக இருக்கும் வாயுவின் அனுகிரஹத்தால் பிறந்த எனக்கு ஹனுமான் என்று பெயர்.
सूर्यपुत्रं च सुग्रीवं शक्रपुत्रं च वालिनम्।
सर्व वानर राजानौ सर्व-वानर यूथपाः ।।
- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)
உலகத்தில் இருந்த அனைத்து வானரர்களும், சூர்ய புத்திரனான சுக்ரீவனுக்கும், இந்திர புத்திரனான வாலிக்கும் பணிந்து இருந்தார்கள்.
उपतस्थु: महावीर्या मम चामित्रकर्शन।
सुग्रीवेणा भवत्प्रीति: अनिलस्य अग्निना यथा ।।
- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)
எப்படி காற்றுக்கும் நெருப்புக்கும் நெருக்கம் அதிகமாக உள்ளதோ, அது போல இயற்கையாகவே எனக்கும் சுக்ரீவனுக்கும் நட்பு இருந்தது.
निकृतः स ततो भ्रात्रा कस्मिं चित्कारण अन्तरे।
ऋश्य-मूके मया सार्धं सुग्रीवो न्यवसच्चिरम् ।।
- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)
ஒரு காரணத்தினால், சகோதரனான வாலியினால் துரத்தப்பட்ட சுக்ரீவன், ருஷ்யமுக மலையில் என்னோடு நெடுங்காலம் வசித்தார்.
अथ दाशरथि: वीरो रामो नाम महाबलः।
विष्णु: मानुष-रूपेण चचार वसुधातलम् ।।
- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)
அந்த சமயத்தில், தசரத புத்திரராக, வீரத்துடன், மஹாபலத்துடன் ராமன் என்ற பெயரில் விஷ்ணுவே மனித ரூபத்தில் அவதரித்து பூமியில் சஞ்சரித்து கொண்டிருந்தார்.
स पितुः प्रियम् अन्विच्छन् सहभार्यः सहानुजः।
स-धनु: धन्विनां श्रेष्ठो दण्ड-कारण्यम् आश्रितः ।।
- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)
சிறந்த வில்லாளியான அவர், தந்தை பிரியப்பட்டதை நிறைவேற்ற, தன் மனைவியுடனும், தம்பியுடனும், வில்லை கையில் ஏந்தி கொண்டு, தண்டக ஆரண்யம் புகுந்தார்.
तस्य भार्या जनस्थान् आच्छलेनापहृता बलात्।
राक्षसेन्द्रेण बलिना रावणेन दुरात्मना ।।
सुवर्ण रत्न चित्रेण मृगरूपेण रक्षसा।
वञ्चयित्वा नरव्याघ्रं मारीचेन तदा अनघ ।।
- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)
குற்றமில்லாதவனே! அப்போது, ராக்ஷஸர்களின் அரசனும், பலசாலியும், கெட்டவனுமான ராவணன் பொன் போன்ற உடலும், புள்ளிகளாக ரத்தினங்களாலும், பல நிறமுள்ள மான் வடிவம் கொண்ட மாரீசன் என்ற ஒரு ராக்ஷஸனை கொண்டு, அந்த மனிதருள் புனிதரான ராமரை ஏமாற்றி, அவருடைய மனைவியை திருட்டு தனமாக அபகரித்து விட்டான்.
हृतदारः सह भ्रात्रा पत्नीं मार्गन्स राघवः।
दृष्टवा शैल शिखरे सुग्रीवं वानरर्षभम् ।।
- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)
தன் மனைவி தொலைந்து போன திசை நோக்கி நடந்த ராமர், தன் சகோதரனோடு தேடி, சுக்ரீவன் வசிக்கும் இந்த மலை சிகரத்தை அடைந்தார்.
तेन तस्याभवत् सख्यं राघवस्य महात्मनः।
स हत्वा वालिनं राज्ये सुग्रीवं प्रत्यपादयत् ।।
- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)
மஹாத்மாவான அந்த ராகவரை கண்டதும், சுக்ரீவனுக்கு இவருக்கும் நட்பு ஏற்பட்டது. ராமபிரான் வாலியை கொன்று, ராஜ்யத்தை சுக்ரீவனிடமே கொடுத்தார்.
स राज्यं प्राप्य सुग्रीवः सीतायाः परिमार्गणे।
वानरान् प्रेषयामास शतशोऽथ सहस्रशः ।।
- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)
ராஜ்யத்தை அடைந்த சுக்ரீவன், சீதா தேவியை தேடுவதற்காக நூற்றுக்கணக்கான,ஆயிரக்கணக்கான வானரர்களை அனுப்பினார்.
ततो वानर-कोटीभिः सहितो अहं नरर्षभ।
सीतां मार्गन् महाबाहो प्रस्थितो दक्षिणां दिशम् ।।
- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)
மனிதர்களில் உத்தமனே! அதில் நானும், பல கோடி வானரர்களோடு சேர்ந்து கொண்டு சீதா தேவியை தேடி, தெற்கு நோக்கி செல்ல ஆரம்பித்தோம்.
ततः प्रवृत्तिः सीताया गृध्रेण सुमहात्मना।
संपातिना समाख्याता रावणस्य निवेशने ।।
- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)
இப்படி தேடி கொண்டு வந்த போது, மிக்க வலிமையுடைய ஸம்பாதி என்ற கழுகு, சீதை ராவணனுடைய அரண்மனையில் இருப்பதாக சொல்லிற்று.
ततोऽहं कार्य-सिद्ध्यर्थं रामस्याक्लिष्ट कर्मणः।
शत-योजन विस्तारम् अर्णवं सहसा प्लुतः ।।
- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)
எந்த காரியத்தையும் எளிதில் செய்யக்கூடிய, ராமரின் நோக்கம் நிறைவடைய வேண்டும் என்ற சங்கல்பத்தில் 100 யோஜன தூரமுடைய கடலை விரைவாக தாண்டினேன்.
अहं स्व-वीर्याद् उत्तीर्य सागरं मकर आलयम्।
सुतां जनक राजस्य सीतां सुररसुतोपमाम् ।।
दृष्टवान् भरतश्रेष्ठ रावणस्य निवेशने।
समेत्य ताम् अहं देवीं वैदेहीं राघव-प्रियाम् ।।
- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)
பரத குலத்தில் பிறந்த உத்தமனே! நான் என்னுடைய வீர்யத்தால், முதலைகள் நிரம்பி கிடக்கும் அந்த கடலை தாண்டினேன். தொடர்ந்து அந்த ராவணனின் ராஜ்யத்தில் ஜனகனின் பெண்ணான சீதா தேவியை கண்டேன்.. ராகவனுக்கு பிரியமானவளும், விதேஹ அரசரின் பெண்ணுமான அந்த தேவியை அணுகி பேசினேன்.
दग्ध्वा लङ्काम् अशेषेण सादृ प्राकार तोरणाम्।
प्रत्यागत: च अश्य पुनर्नाम तत्र प्रकाश्य वै ।।
- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)
மாளிகைகளும், பிராகாரங்களும், வாசல்களும் கொண்ட இலங்கையை முழுவதுமாக கொளுத்தி, ராமருடைய பெயரை அங்கு ப்ரகாசப்படுத்தி, மீண்டும் திரும்பினேன்.
मद्वाक्यं चावधार्याशु रामो राजीव लोचनः।
अबद्धपूर्वम् अन्यैश्च बद्ध्वा सेतुं महोदधौ।
वृतो वानर कोटीभिः समुत्तीर्णो महार्णवम् ।।
- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)
தாமரை போன்ற கண்களை கொண்ட ஸ்ரீ ராமர், நான் சொன்னதை கேட்டு, இனி செய்ய வேண்டிய காரியங்களை உறுதி செய்தார். அவர் நிச்சயித்த படி, பிறரால் இதுவரை இதற்கு முன் ஒருவராலும் கட்டப்படாத அணையை அந்த பெரிய கடலில் விரைவாக கட்டி முடித்து, கோடிக்கணக்கான வானர படை சூழ ஸ்ரீராமர் அந்த பெருங்கடலை தாண்டினார்.
ततो ररामेण वीर्येण हत्वा तान्सर्व राक्षसान्।
रणे तु राक्षस-गणं रावणं लोक-रावणम् ।।
निशाचरेनद्रं हत्वा तु सभ्रातृ सुत बान्धवम्।
राज्ये अभिषिच्य लङ्कायां राक्षसेन्द्रं विभीषणम् ।।
धार्मिकं भक्तिमन्तं च भक्तानुगत वत्सलः।
प्रत्याहृत्य ततः सीतां नष्टां वेदश्रुतिं यथा ।।
- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)
பிறகு அந்த வீராதி வீரனான ஸ்ரீராமர், அனைத்து ராக்ஷஸர்களையும் கொன்று, கடைசியாக ராக்ஷஸ கூட்டங்களை உடையவனும், உலகத்தை அலற செய்பவனுமான ராக்ஷஸ அரசனான ராவணனை அவன் தம்பி, பிள்ளைகள் உறவினர்களோடு சேர்த்து கொன்று, தர்மத்தை அனுஷ்டிக்கும், பக்தியுள்ளவரும், அன்பு காட்டுபவனிடம் அன்பு காட்டும் விபீஷணரை ராக்ஷஸ கூட்டத்திற்கு அரசராக ஆக்கி, பட்டாபிஷேகம் செய்து, பிறகு தொலைந்து போன வேதத்தை முன் அவதாரத்தில் மீட்டது போல, சீதா தேவியை மீட்டார்.
பிறகு புகழ் மிக்கவரும், ரகு நந்தனருமான, பிரபுவான ஸ்ரீராமர், பதிவிரதையான தன் பத்னியோடு அங்கிருந்து புறப்பட்டு, எதிரிகள் எதிர்த்து போரிட முடியாத அயோத்தி என்னும் தன்னுடைய நகரத்துக்கு சென்று வசிக்கலானார்.
ततः प्रतिष्ठितो राज्ये रामो नृपतिसत्तमः।
वरं मया याचितो असौ रामो राजीव लोचनः ।।
- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)
அரசர்களில் சிறந்தவரான அவரால் ராம ராஜ்ஜியம் நிறுவப்பட்டது.
அந்த தாமரை கண்கள் கொண்ட ஸ்ரீ ராமரிடம், "பகைவரை ஒழிப்பவரே! ராமா! உங்களுடைய சரித்திரம் இந்த உலகத்தில் எவ்வளவு காலம் இருக்குமோ, அவ்வளவு காலம் வரை நான் இங்கு உயிர் வாழ ஆசைப்படுகிறேன்" என்று வரம் வேண்டினேன்.
यावद् राम कथेयं ते भवेल्लोकेषु शत्रुहन्।
तावज्जीवेयम् इत्येवं तथा अस्त्विति च स: अब्रवीत् ।।
सीता प्रसादाच्च सदा माम् इहस्थम् अरिंतम।
उपतिष्ठन्ति दिव्या हि भोगा भीम यथेप्सिताः ।।
- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)
ஸ்ரீராமரும், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார்.
பகைவர்களை அடக்கும் பீமா! சீதாதேவியின் அருளால், அன்றிலிருந்து நான் விருப்பப்படும் திவ்யமான போகங்கள் நான் இருக்குமிடத்தை தேடி தானே வந்து அடைகின்றது..
दशवर्ष-सहस्राणि दशवर्ष-शतानि च।
राज्यं कारितवान् राम: तत: स्वभवनं गतः ।।
- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)
ஸ்ரீராமர், 11,000 வருடங்கள் அயோத்தி அரசராக இருந்து ராமராஜ்யம் நடத்தினார். பிறகு, தனது இருப்பிடமான வைகுண்டத்தை அடைந்தார்.
तदिह अप्सरसस्तात गन्धर्वाश्च सदा अनघ।
तस्य वीरस्य चरितं गायन्त्यो रमयन्ति माम् ।।
- வியாச மஹாபாரதம் (வன பர்வம்)
சீதா தேவியின் அருளால், அன்றிலிருந்து இந்த இடத்தில எப்பொழுதும் அப்சரஸ்கள், கந்தர்வர்கள் வந்து அந்த வீரருடைய சரித்திரத்தை பாடி என்னை மகிழ்வித்து கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு ராமரின் சரித்திரத்தை சுருக்கமாக ஹனுமானே பீமனுக்கு சொல்லி, பிறகு,
பீமனை பார்த்து,
"குரு வம்சத்தில் வந்தவனே! நீ செல்ல நினைக்கும் வழி மனிதர்களுக்கு உகந்த வழி அல்ல. பாரதா! நீ இந்த வழியில் சென்றால் யக்ஷர்களாலோ, ராக்ஷஸர்களாலோ அவமதிக்க பட நேரிடும். தேவ லோகம் செல்ல இது ஒரு மார்க்கமாக இருப்பதால், நீ அவர்களால் சபிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதால், உன்னை நான் போக விடாமல் தடுத்தேன்.
இந்த பாதையில் மனிதர்கள் செல்ல கூடாது. செல்வதில்லை.
நீ தேடி வந்த குளம் இங்கேயே இருக்கிறது" என்று பீமன் தேடி வந்த குளத்தை காட்டினார் ஹனுமான்.
Hanuman ramayana
अहं केसरिणः क्षेत्रे वायुना जगद् आयुषा।
जातः कमल-पत्राक्ष हनूमान् नाम वानरः ।।
सूर्यपुत्रं च सुग्रीवं शक्रपुत्रं च वालिनम्।
सर्व वानर राजानौ सर्व-वानर यूथपाः ।।
उपतस्थु: महावीर्या मम चामित्रकर्शन।
सुग्रीवेणा भवत्प्रीति: अनिलस्य अग्निना यथा ।।
निकृतः स ततो भ्रात्रा कस्मिं चित्कारण अन्तरे।
ऋश्य-मूके मया सार्धं सुग्रीवो न्यवसच्चिरम् ।।
अथ दाशरथि: वीरो रामो नाम महाबलः।
विष्णु: मानुष-रूपेण चचार वसुधातलम् ।।
स पितुः प्रियम् अन्विच्छन् सहभार्यः सहानुजः।
स-धनु: धन्विनां श्रेष्ठो दण्ड-कारण्यम् आश्रितः ।।
तस्य भार्या जनस्थान् आच्छलेन आपहृता बलात्।
राक्षसेन्द्रेण बलिना रावणेन दुरात्मना ।।
सुवर्ण रत्न चित्रेण मृगरूपेण रक्षसा।
वञ्चयित्वा नरव्याघ्रं मारीचेन तदा अनघ ।।
हृतदारः सह भ्रात्रा पत्नीं मार्गन्स राघवः।
दृष्टवा शैल शिखरे सुग्रीवं वानरर्षभम् ।।
तेन तस्याभवत् सख्यं राघवस्य महात्मनः।
स हत्वा वालिनं राज्ये सुग्रीवं प्रत्यपादयत् ।।
स राज्यं प्राप्य सुग्रीवः सीतायाः परिमार्गणे।
वानरान् प्रेषयामास शतशोऽथ सहस्रशः ।।
ततो वानर-कोटीभिः सहितो अहं नरर्षभ।
सीतां मार्गन् महाबाहो प्रस्थितो दक्षिणां दिशम् ।।
ततः प्रवृत्तिः सीताया गृध्रेण सुमहात्मना।
संपातिना समाख्याता रावणस्य निवेशने ।।
ततोऽहं कार्य-सिद्ध्यर्थं रामस्याक्लिष्ट कर्मणः।
शत-योजन विस्तारम् अर्णवं सहसा प्लुतः ।।
अहं स्व-वीर्याद् उत्तीर्य सागरं मकर आलयम्।
सुतां जनक राजस्य सीतां सुररसुतोपमाम् ।।
दृष्टवान् भरतश्रेष्ठ रावणस्य निवेशने।
समेत्य ताम् अहं देवीं वैदेहीं राघव-प्रियाम् ।।
दग्ध्वा लङ्काम् अशेषेण सादृ प्राकार तोरणाम्।
प्रत्यागत: च अश्य पुनर्नाम तत्र प्रकाश्य वै ।।
मद्वाक्यं चावधार्याशु रामो राजीव लोचनः।
अबद्धपूर्वम् अन्यैश्च बद्ध्वा सेतुं महोदधौ।
वृतो वानर कोटीभिः समुत्तीर्णो महार्णवम् ।।
ततो ररामेण वीर्येण हत्वा तान्सर्व राक्षसान्।
रणे तु राक्षस-गणं रावणं लोक-रावणम् ।।
निशाचरेनद्रं हत्वा तु सभ्रातृ सुत बान्धवम्।
राज्ये अभिषिच्य लङ्कायां राक्षसेन्द्रं विभीषणम् ।।
சந்தியா வந்தனத்தில் மிக மிக முக்கியமானது எது? அர்க்ய ப்ரதானம்,
சந்தியா வந்தனத்தில் 4 முக்கியமாக சொல்லப்படுகிறது.
1. அர்க்ய ப்ரதானம் (சூரியனுக்கு ஏற்படும் விபரீத மாற்றங்கள் சரியாக, காயத்ரீ மந்திரம் ஜபித்து பிரார்த்தனை செய்து தெளிக்கப்படும் ஜலம்)
2. காயத்ரீ ஆவாஹனம் (காயத்ரீ என்ற வேத மாதாவை (அம்மாவை) தன்னோடு ஆவாஹனம் கொண்டு, பிதாவை தியானிக்க தயாராவது)
3 காயத்ரீ ஜபம் (எந்த பரமாத்மா (அப்பா) உள்ளே இருப்பதால் என் புத்தி, புலன்கள் இயங்குகிறதோ, அந்த பரமாத்மாவை தியானிக்கிறேன் என்று காயத்ரீ என்ற மாதா காட்டியபடி தியானம்/ஜபம் செய்வது)
4 உபஸ்தானம். (மீண்டும் காயத்ரீ மாதாவை அவள் இருப்பிடத்திற்கு செல்ல அனுமதிப்பது)
இதில் மிகவும் முக்கியமான விஷயம் "அர்க்ய ப்ரதானம்" என்று ரிஷிகள் சொல்கிறார்கள்.
மந்தேஹா என்ற ராக்ஷஸ கூட்டம் தங்கள் மந்திர பலத்தால் சூரியனின் செயல்பாட்டை தடுக்கும் போது, சூரியனுக்கு ஏற்படும் மந்திர உபாதையை விரட்ட, காயத்ரீ உபதேசம் பெற்ற பூலோகவாசிகள், "காயத்ரீ ஜபித்த ஜலத்தால் சூரியன் இருக்கும் திசை நோக்கி வீசினர்". அந்த மந்திர ஜலம் வஜ்ரமாக இருந்து சூரியனின் கிரணங்களில் பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது.
அர்க்ய ப்ரதானம் செய்பவனுக்கு, "அன்றைய நாள் நல்ல நாளாகவே அமையும்"
காலையில் (நின்று கொண்டு) - 3 முறையும் (கிழக்கு பார்த்து கொஞ்சம் குனிந்து அர்க்யம் விட வேண்டும்)
பகலில் (நின்று கொண்டு) - 2 முறையும் (சூரியனை பொறுத்து கிழக்கு/வடக்கு பார்த்து நிமிர்ந்து அர்க்யம் விட வேண்டும்)
மாலையில் (அமர்ந்து கொண்டு) - 3 முறையும் (மேற்கு பார்த்து அர்க்யம் விட வேண்டும்)
காயத்ரீ சொல்லி, இரண்டு கைகளாலும் அர்க்ய ப்ரதானம் கொடுக்க வேண்டும்.
மாட்டின் கொம்பு உயரத்திற்கு இரு கைகளை உயர்த்தி, காயத்ரீயை சொல்லி 3 முறை ஜலத்தை வீசி விட வேண்டும்.
கட்டைவிரல் ஆள்காட்டி விரலோடு சேரகூடாது.
ஜலத்தை வீசும் பொழுது, கை விரல்களை விரித்து கொள்ள வேண்டும், எந்த வித முத்திரையும் கூடாது.
மாலையில் (அமர்ந்து கொண்டு) அர்க்யம் விடும் போது, பசு மாடு அமர்ந்து இருப்பதாக நினைத்து, அப்பொழுது அதன் கொம்பு எந்த அளவு இருக்குமோ அந்த அளவு கைகளை உயர்த்தி கொண்டு, 3 முறை காயத்ரீ சொல்லி அர்க்யம் கொடுக்க வேண்டும்.
தொடர்ந்து உட்கார்ந்து ப்ராணாயாம் செய்து,
காலாதீத ப்ராயச்சித்தார்த்தம் அர்க்ய ப்ரதானம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து, பிறகு மீண்டும்
காயத்ரீ சொல்லி ஒரு முறை "அர்க்ய ப்ரதானம்" செய்ய வேண்டும்.
கேள்விகள்:
குளத்தில் இருக்கும் போது சந்தியா காலம் வந்தால்?
ஆசமனம்: ஒரு கால் தண்ணீரிலும், மற்றொரு கால் கரையில் வைத்து கொண்டு செய்ய வேண்டும்.
அர்க்ய பிரதானம்: இரண்டு கால்களும் தண்ணீரில் இருக்கும் படி நின்று கொண்டு, அர்க்யம் விட வேண்டும்.
வீட்டில் இருக்கும் போது, சந்தியா காலம் வந்தால்?
அர்க்ய பிரதானம்: இரண்டு பாதங்களும் சேர்த்து வைத்து கொண்டு ஜலத்தை வீசும் பொழுது, குதி காலை உயர்த்தி கொண்டு வீச வேண்டும்.
ஜலம் இல்லாத இடத்தில் இருக்கும் போது, சந்தியா காலம் வந்தால்?
மண் எடுத்து செய்ய வேண்டும்...
கங்கா ஜலம் கையில் இருக்குமாறு நினைத்து கொண்டு, செய்ய வேண்டும்.
"அர்க்யம் கொடுக்காமல் இருக்காதே" என்று ரிஷி சொல்கிறார்கள்.
"காயத்ரீ உபதேசமும், பூணூலும் இருந்தால், அர்க்ய பிரதானம் கட்டாயம் செய்ய வேண்டும்" என்று ரிஷி சொல்கிறார்கள்
அர்க்ய பிரதானம் தரையில் நின்று தான் செய்ய வேண்டும். மாடியில் செய்ய கூடாது. சுத்தமான இடத்தில் செய்ய வேண்டும். மாடு அருகில் செய்ய கூடாது. மாடு இருந்த இடத்தில் செய்யலாம்.
அர்க்யம் விடும் போது, கை விரித்து ஜலத்தை வீச வேண்டும்.
அர்க்யம் விடும் போது, கட்டை விரல் ஆள் காட்டி விரலோடு சேர்த்து செய்தால், ரத்தத்தை தெளித்தது போல ஆகும். ஆதலால், கட்டை விரல் சேர கூடாது.
தர்ப்பை தண்ணீரை அம்ருதமாக்கும்.
அர்க்யம் விடும் போது, கைகளில் உள்ள ரேகைகளையே தர்ப்பை போல தியானித்து கொண்டு, ஜலத்தை விட வேண்டும்.
காயத்ரீ மந்திர உபதேசம் பெற்று பூணூல் அணிந்து இருப்பவர்கள், அர்க்ய பிரதானம் கட்டாயம் செய்ய வேண்டும்.
அர்க்ய பிரதானம் செய்யாமல் இருப்பவர்கள், மனம் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பார்கள்.
உலகில் ஒரு பிராம்மணன் கூட இல்லாமல், அர்க்யம் விடாத நிலை ஏற்பட்டால், சூரியனின் கதிர் வீச்சு பல பாதகங்களை உண்டாக்கும்.