Followers

Search Here...

Showing posts with label கிருஷ்ணர். Show all posts
Showing posts with label கிருஷ்ணர். Show all posts

Thursday 18 February 2021

வேதம் "இந்திரன், ருத்ரன், நாராயணன்" என்று பலரையும் தெய்வமாக துதிக்கிறது. அப்படி இருக்க, "வேதம் முழுவதுமே நாராயணனாகிய என்னை தான் துதி செய்கிறது.." என்று தெளிவாக, தீர்மானமாக கிருஷ்ண பரமாத்மா ஏன் சொன்னார்? தெரிந்து கொள்வோமே!

ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் பற்றி சொல்லி, அர்ஜுனன் கேட்டான் என்றதும் விஸ்வரூபமும் காட்டிய கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனை பார்த்து சொல்கிறார்.. 

"அர்ஜுனா! வேதங்கள் அனைத்தும் என் ஒருவனை பற்றி மட்டுமே சொல்கிறது. வேதத்தால் அறிய பட வேண்டியவனும் நானே

என்று அர்ஜுனனை பார்த்து  ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஆச்சர்யமாக சொல்கிறார்.

வேதை: ச ஸர்வை: 

அஹம் ஏவ வேத்ய: |

வேதாந்தக்ருத் 

வேத விதேவ சாஹம் ||

- பகவத்கீதை: 

அத்யாயம் 15: ஸ்லோகம் 15


வேதம், "நாராயணனை" பற்றி மட்டுமா சொல்கிறது?

வேதம், 'இந்திரனை' பற்றியும் சொல்கிறதே?! 

வேதம் 'ருத்ரனை' பற்றியும் சொல்கிறதே?!  

வேதம், 'சகல தேவதைகளை' பற்றியும் சொல்கிறதே?

இப்படி இருக்க, 

'வேதம் முழுவதும் என்னை பற்றி தான் சொல்கிறது' என்று கிருஷ்ண பரமாத்மா எப்படி சொன்னார்?


வேதத்தின் அர்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கு, பொதுவாக இப்படி ஒரு கேள்வி மனதில் எழுவது சகஜம். 





"வேதத்தை அறிந்து இருந்த அர்ஜுனனுக்கு

சிவபெருமானையே தரிசித்து இருந்த அர்ஜுனனுக்கு

சொர்க்கலோகம் சென்று தேவேந்திரனை பார்த்து இருந்த அர்ஜுனனுக்கு, 

இது போன்ற கேள்வி மனதில் எழவில்லை

என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.


இப்படி ஒரு கேள்வியை, அர்ஜுனன் 'கேட்கவே இல்லை' என்று நாம் பார்க்கிறோம்.


வேதத்தின் வாக்கியங்களை கவனிக்கும் போது, கிருஷ்ண பரமாத்மா சொன்ன ரகசியம் நமக்கு புரியும்.


நாராயணனே 'பரமாத்மா' (பரம்பொருள்) 

என்று பல இடங்களில் வேதம் தெளிவாக சொல்கிறது... 

பரமாத்மாவாகிய ப்ரம்மத்தை, "புருஷன்" என்ற பெயரை கொண்டு " ஏக புருஷ: (அந்த ஆதிபுருஷன் ஒருவரே முதலில் இருந்தார்)" என்கிறது வேதம்.

வேதத்தில் வரும் புருஷ சூக்தத்தில், 'நாராயணனே அந்த புருஷன்' என்று விளக்கி, அந்த 'புருஷனின் பத்னியாக மஹாலட்சுமி (ஹ்ரீஸ்ச தே லட்சுமீஸ்ச பத்னி) இருக்கிறாள்' என்று பரமாத்மாவின் அடையாளத்தை இங்கு தீர்மானிக்கிறது, வேதம்..


நாராயணனே 'பரமாத்மா' (பர), என்று நிரூபிக்கும் வேத வாக்கியங்களாக "நாராயண பரோ ஜ்யோதி: | ஆத்மா நாராயண பர: || நாராயணம் பரம் ப்ரஹ்ம | தத்வம் நாராயண பர: || நாராயண பரோ த்யாதா | த்யானம் நாராயண பர: ||

என்று பல முறை சொல்கிறது வேதம்.


இப்படி 'பர' என்ற சொல்லாலும், 'பரப்ரஹ்ம' என்ற சொல்லாலும், 'புருஷ' என்ற சொல்லாலும் நாராயணனை அழைக்கும் வேதம்,

அந்த ஆதி புருஷனே! ஆயிரக்கணக்கான தலைகளுடன் (அதாவது ரூபங்களுடன்) காட்சி தருகிறார் (ஸஹஸ்ர சீர்ஷா புருஷ:) என்கிறது வேதம். 


அதாவது, 'அவரே பல ரூபங்களாக (இந்திர, ருத்ர, யம..) இருக்கிறார்' என்ற ரகசியத்தை சொல்கிறது.





ஒரு இடத்தில் வேதம், "பிரம்மாவும் நாராயணனே! சிவனும் நாராயணனே! காலமும் நாராயணனே!" (பிரம்மா நாராயண: | சிவ: ச நாராயண: | கால: ச நாராயண: |) என்று தெளிவாக சொல்கிறது..

இன்னொரு இடத்தில் “ஏகோ நாராயணோ ஆஸீத் ந ப்ரம்மா ந ஈசான:” என்று சொல்லும் போது, "பிரளய காலத்தில் பிரம்மாவும் இல்லை சிவனும் இல்லை நாராயணன் ஒருவரே இருந்தார்" என்று வெளிப்படையாக நாராயணனின் பெயரை கூறுகிறது வேதம்.


"அந்த ஆதி புருஷனையே, பல வித பெயர்களில் சொல்கிறேன் (ஏகம் ஸத் விப்ரா: பஹூதா வதந்தி)

என்று வேதமே தெளிவாக சொல்கிறது.

மேற்சொன்ன, இந்த வேத வாக்கியத்தை (ஏகம் ஸத் விப்ரா: பஹூதா வதந்தி! ) நாம் கவனிக்கும் போது, 

கிருஷ்ண பரமாத்மா "அர்ஜுனா! வேதங்கள் அனைத்தும் என் ஒருவனை பற்றியே சொல்கிறது. வேதத்தால் அறிய பட வேண்டியவனும் நானே" என்று சொன்னதன் ரகசியம் புரியும்.


ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!

குருநாதர் துணை...

Wednesday 17 June 2020

சோகத்தில் உள்ளவர்களுக்கு தர்மம் உபதேசிக்க வேண்டுமா? ஞானத்தை உபதேசிக்க வேண்டுமா?.. எது முதலில் தேவை?. ரகசியத்தை தெரிந்து கொள்வோம்..

சோகத்தில் உள்ளவனை எப்படி சமாதானம் செய்ய வேண்டும்? 
என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் காட்டுகிறார்...
சோகத்தில் இருப்பவனிடம் உடனேயே தர்மம் பேச கூடாது. 
சோகத்தில் இருப்பவனிடம் தர்மம் பேசினால் கேட்க மாட்டான்.
மேலும்
சோகத்தில் இருப்பவனிடம் 'தர்மம் பேச பேச, கேட்பவனுக்கு சோகம் அதிகமாகிவிடும்'.




சோகம் இல்லாமல் இருக்கும் போது தான் "தர்மம் பேச வேண்டும்".

"சோகம் இல்லாமல் இருக்கும் போது தான், தர்மம் புரியும்.
ஆதலால், 
சோகத்தை முதலில் நீக்கி விட்டு தான், தர்மம் பேச வேண்டும்"
என்று நமக்கு காட்டுகிறார் கிருஷ்ண பரமாத்மா.
"கர்ம யோகம், ஞான கர்ம சந்யாச யோகம், கர்ம சந்யாச யோகம், தியான யோகம், ஞான விஞ்ஞான யோகம்,ராஜ வித்யா யோகம், பக்தி யோகம்"
என்று பல வித தர்மங்களை சொன்னார் ஸ்ரீகிருஷ்ணர் என்று பார்க்கிறோம்.

அர்ஜுனன் சோகத்தில் ஆழ்ந்த போது, உடனே "கர்ம யோகம் என்ற தர்மத்தை சொல்கிறேன் கேள்" என்று ஆரம்பிக்கவில்லை என்று கவனிக்க வேண்டும்.

"சோகத்தில் மூழ்கியவனிடம் முதலில் ஞான யோகத்தை (ஸாங்க்ய யோகம்) (Jnana Yoga) பேசி விட்டு தான், 
பிறகு பல வித தர்மங்களை பற்றி பேசுகிறார்" 
ஸ்ரீ கிருஷ்ணர் என்று கவனிக்கலாம்.

"பாண்டவர்களுக்கு குண்டூசி சொத்து கூட தர முடியாது" என்று சொன்ன துரியோதனிடம் போரிடலாம் என்று வந்த அர்ஜுனன், இப்படி என் தாத்தாவையும், குருவையும் எதிர்க்கும் படியாக செய்து விட்டானே! 
இப்படி சொத்துக்காக என் தாத்தாவை கொன்று, குருவை கொன்று, என்ன சாதிக்கப்போகிறேன்?  
நான் போர் செய்ய மாட்டேன். 
பிச்சை எடுத்தாவது வாழ்கிறேன்"
என்று காண்டீபத்தை கீழே வைத்து விட்டான் அர்ஜுனன்.

சோக கடலில் மூழ்கி விட்டான் அர்ஜுனன்.

உடனே "கர்ம யோகம் சொல்கிறேன் கேள்" என்று ஸ்ரீ கிருஷ்ணர் ஆரம்பிக்கவில்லை.

கர்ம யோகப்படி,
"கர்மாவை செய். நீ ஷத்ரியன். க்ஷத்ரியனாக போர் செய்.
தாத்தாவாக இருந்தாலும், குருவாக இருந்தாலும், அதர்மம் செய்யும் துரியோதனன் பக்கம் இருக்கும் இவர்களை கொன்று விடு.
பலனை என்னிடம் விடு"
என்று உடனேயே கர்ம யோகம் பேசி இருந்தால்,
அர்ஜுனன் மேலும் சோகத்தில் ஆழ்ந்து போயிருப்பான்.




சோகம் உள்ளவனிடம், தர்மத்தை பேசுவதை காட்டிலும், "ஆத்ம ஞானத்தை சொன்னால் தான் சோகம் அடங்கும்".

பகவத் கீதை, முதல் அத்யாயத்திலேயே அர்ஜுனன் சோகத்தில் ஆழ்ந்து விடுகிறான்.

கிருஷ்ண பரமாத்மாவை சரணடைந்து வழி கேட்கிறான்.
முதலில் அவன் சோகத்தை போக்க "ஆத்மாவின் உண்மையான நிலை என்ன?" என்று சொல்லி,
ஞான யோகத்தை சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

இரண்டாவது அத்யாயம் முழுக்க "ஞான யோகத்தை" (ஸாங்க்ய யோகம்) பேசி, அவன் சோகத்தை முழுவதுமாக போக்கிவிடுகிறார்.

இரண்டாவது அத்யாயம் முடிவிலேயே அர்ஜுனன் சோகத்தை விட்டு விடுகிறான்.

சோகம் இல்லாமல் இருக்கும் அர்ஜுனன் பிறகு பல கேள்விகள் தர்ம விஷயமாக கேட்கிறான்.
அவன் கேட்கும் பல கேள்விகளுக்கு, பல தர்மங்களை சொல்லி உபதேசம் செய்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர் என்று பார்க்கிறோம்.

சோகம் அதிகமாக இருப்பவர்கள், இரண்டாவது அத்தியாயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லும் உபதேசங்களை படித்தாலே சோகம் பறந்து விடும்.
சோகத்தில் சிக்கியவர்களை பார்த்து, கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்...
"கவலை பட தகுதியில்லாத உலக விஷயங்களுக்கு நீ சோகப்படாதே !
போனவனை பற்றியும் கவலை படாதே!  இப்போது சில காலம் இருப்பவனை பற்றியும் கவலைப்படாதே! 

அல்ப காலம் இந்த உடலில் இருக்க போகும் நீ, இதற்கெல்லாம் கவலை படுவதே வீண்!
உடல் அழியக்கூடியது.  
இது சம்பந்தமாக கவலைப்படுவதே வீண் !




ஆத்மா அழியாதது.  
நீயும், நானும் ஆத்மாவே! 
நாம் என்றுமே அழிவதில்லை. 
எந்த ஆத்மாவும் அழிவதில்லை.

இந்த ஆத்மா இந்த உடலுக்குள் சில காலம் இருந்தது. 
இந்த உடல் சிறு குழந்தையாக, சிறுவனாக, வாலிபனாக, கிழவனாக ஆகி விழுந்து விட்டது. 
ஆனால் உள்ளே இருக்கும் ஆத்மா இந்த உடலுக்குள் இருந்த போது எப்படி இருந்ததோ அதே போல எப்பொழுதும் இருந்தது... 
உடல் விழுந்தவுடன், இந்த ஆத்மா வேறு உடலுக்கு போகிறது. 
அவ்வளவு தான்.

இந்த உடலும், மனதும் தான் சோகம், சந்தோஷம், வெற்றி, தோல்வியை கொடுக்கிறது, அனுபவிக்கிறது.  
நீயோ ஆத்மா !  
இந்த உடல் தரும் இந்த வெற்றியையும் லட்சியம் செய்யாதே ! அவமானங்களையும் லட்சியம் செய்யாதே !
சாதாரணமாகவே இரு.
நீ தனியானவன்.  
நீ ஆத்மா.  

சிறிது காலம் இந்த உடலில் இருக்கிறாய். 
இந்த உடலை வைத்து என்ன நல்ல காரியங்கள் செய்ய முடியுமோ செய். 

மற்றபடி இந்த உடலால், மனதால் வரும் அனுபவங்களை சிறிதும் மதிக்காதே !"
என்று "ஞான யோகத்தை" சொல்லி, அர்ஜுனனின் சோகத்தை சரி செய்கிறார் கிருஷ்ணர்.
சோகம் தெளிந்து இருக்கும் அர்ஜுனனுக்கு பிறகு, 'கர்ம யோகம், பக்தி யோகம்' என்று பல வித தர்மங்களை சொல்லி...
"எந்த தர்மமும் உன்னால் கடைபிடிக்க முடியாது என்றால், என் மீது நம்பிக்கை வைத்து என்னையே சரணடைந்து விடு. நான் உன்னை காத்து, மோக்ஷம் வரை கூட்டி செல்கிறேன்"
என்று கீதையை முடிக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

சோகத்தில் இருப்பவர்கள், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன 2வது அத்தியாயம் கட்டாயம் அர்த்தம் புரிந்து படிக்க வேண்டும். 
நம்மைவிட்டு, சோகம் ஓடி விடும்.

தர்மங்கள் தெரிந்து கொள்ள ஆசை இருந்தால், 3வது அத்தியாயம் ஆரம்பித்து பல தர்மங்களை அர்த்தம் புரிந்து படிக்கலாம்.

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர்.
வாழ்க குருநாதர்.

Sunday 23 February 2020

64 கலைகள் என்னென்ன? 64 கலைகளும் அறிந்தவர் ஸ்ரீ கிருஷ்ணர்... தெரிந்து கொள்ள வேண்டாமா? இந்து சமவெளி நாகரீகம் பற்றி காலத்தை ஒட்டி பார்க்கலாமே! துவாரகை அழியப்போகிறது என்றதும், யாதவர்கள் (yadava) உலகமெங்கும் பிரிந்து சென்றார்கள். yadava என்ற சொல்லும், yehuda என்ற சொல்லும் ஒரே போன்று ஒலிப்பதை மூடனும் புரிந்து கொள்ளலாமே! 3000 வருடத்திற்கு பிறகு அடையாளப்படுத்தப்படும் எஹூதியர்களை (yehuda) பற்றி ஹிந்துக்கள் அறிய வேண்டாமா?

ஸ்ரீ கிருஷ்ணர், ஸர்வஜ்ஞன் (அனைத்தும் தெரிந்தவர்) என்று போற்றப்படுகிறார். 64 கலைகளும் அறிந்தவர்.
ஸ்ரீ கிருஷ்ணர் போன்று சுறுசுறுப்பான, பார்க்கவும் அழகான, எப்பொழுதும் சிரித்த முகத்துடன் பழகும், அறிவு உள்ள தெய்வம் உலகில் இல்லை.




பரவாசுதேவன் நாராயணன், ஸ்ரீ கிருஷ்ணராக மனித அவதாரம் செய்தும், தெய்வ சக்தியுடனேயே இருந்ததால், இவர் சரித்திரம் அனைவருக்கும் ஈர்ப்பை தருகிறது.

குழந்தை முதல் ஞானி வரை இவரை நேசிப்பவர்கள் உண்டு.
ஸ்ரீ கிருஷ்ணர் செய்த பகவத் கீதை, உத்தவ கீதை போன்ற உபதேசங்கள் படித்தால், இவருக்கு என்னவெல்லாம் தெரியுமோ என்ற கேள்வி எழும். மகா புத்திசாலி என்று புரியும்.
இஸ்கான் போன்ற ஸ்ரீகிருஷ்ணனின் நாமத்தை பரப்பும் அமைப்புகளில் ஸ்ரீ கிருஷ்ணரின் மகத்துவம் புரிந்து வெளிநாட்டவர்கள் லட்சக்கணக்கில் தங்களை சேர்த்துக்கொள்கின்றனர்.

எங்கேயோ பிறந்த இவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணர், சாக்ஷாத் "நாராயணன்" என்று புரிகிறது.

இந்திய தேசத்தில் இருக்கும் நாம், பரவாசுதேவன் நாராயணன் மீது பக்தி (அன்பு) செலுத்த சிரமப்பட கூட வாய்ப்பு இருக்கலாம்.
பிரகலாதன் போன்ற ஞானிகள் மட்டுமே, பரவாசுதேவன் நாராயணன் மீது பக்தி (அன்பு) செலுத்த முடிந்தது.

ஆனால், அந்த பரவாசுதேவன் நாராயணன், செய்த ஸ்ரீ கிருஷ்ணஅவதாரத்தில் பக்தி (அன்பு) செலுத்துவது மிக எளிது.

ஸ்ரீ கிருஷ்ணர், ஸர்வஜ்ஞன் (அனைத்தும் தெரிந்தவர்) என்று போற்றப்படுகிறார்.
உங்கள் தெய்வத்திற்கு  என்னென்ன தெரியும்? என்று தெரிந்து கொள்ள வேண்டாமா!
இதோ உங்கள் தெய்வம் ஸ்ரீகிருஷ்ணர்!! 
நீங்கள் கர்வப்பட்டுக்கொள்ள...

ஸ்ரீ கிருஷ்ணருக்கு
  • 4 வேதங்களும்,

  1.      *ரிக்
  2.      *யஜுர்
  3.      *ஸாம
  4.      *அதர்வண

  • உபநிஷத்துக்களும்
  • 4 உபவேதங்களும்,

  1.      *ஆயுர்வேதம் (medicine)
  2.      *ஸ்தாபத்யம் (engineering)
  3.      *காந்தர்வ வேதம் (music)
  4.      *தனுர் வேதம்(Army/weaponry)

  • 6 சாஸ்திரங்களும்,

  1.      *சிக்ஷை (expert in phonetics, phonology, pronunciation)
  2.      *கல்பம் (expert in knowing  procedures for Vedic rituals and rituals associated with major life  events such as birth, wedding and death in family, as well as discussing the personal conduct and proper duties of an individual in different stages of his life)
  3.      *வியாகரணம் (expert in grammers and linguistic analysis)
  4.      *நிருக்தம் (expert interpretation of words and to help establish the proper meaning of the words)
  5.      *சந்தஸ் (expert in poetic metres)
  6.      *ஜோதிஸம் (expert in knowing Auspicious time for rituals and expert in astrology and astronomy.)

  • ஸ்ம்ருதி,
  • இதிகாசம் (knowledge about history),
  • புராணம் (knowledge about very old history) இவைகளும்,
  • காவியம் (Ability to play, speak and write poetical literature)
  • நாடகம் ((Ability to play, speak and write Drama)
  • அலங்காரம் (Knowledge about decoration),
  • 8 வேதாந்த ஸித்தாந்தங்களும்

  1.      *யோகம் (expert in meditation, contemplation and liberation)
  2.      *ஸாங்க்யம் (Expert in consciousness and matter)
  3.      *நியாயம் (Expert in exploring sources of knowledge)
  4.      *சௌகதம்
  5.      *ஆர்ஹதம்
  6.      *மீமாம்ஸா (expert in correct conduct, both ethical and liturgical)
  7.      *பாசுபதம்
  8.      *பாஞ்சராத்ரம் (expert in Agama rules and guiding five observances every day to lord narayana)




  • 64 கலைகளும்,
உங்கள் தெய்வம் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தெரியும்.

கலைகள் பல.
ஓவியம் ஒரு கலை.
எந்த கலையிலும் அழகும், இனிமையும் இருக்க வேண்டும்.
சிற்ப கலையில் செதுக்கப்படும் சிலைகள் திறமை கொண்டவன் செதுக்கி இருந்தால், அந்த சிலையில் ஒரு அழகு இருக்கும்.

ஸ்ரீ கிருஷ்ணருக்கு 64 கலைகள் தெரியும்.  அவை என்னென்ன ?

1. இசை - singing 72 different raga and 100s of janya raga. 72 வித ராகங்கள் மேலும் 1நூற்றுக்கும் அதிகமான ஜன்ய ராகங்கள் பாடும், இசைக்கும் திறன்.
2. வாத்யம் - playing on 18 different musical instruments. 18 விதமான வாத்தியங்கள் இசைக்கும் திறன்.
3. ந்ருத்தம் - dancing using legs. கால்களை கொண்டு நடனம் செய்யும் திறன். காளிங்கன் என்ற பாம்பின் தலை மேல், யமுனையில் சாமர்த்தியமாக குதித்து ஆடும் திறன்.

4. நாட்டியம் - theatricals acting using hands, face, body. நாட்டிய கலையில் திறன்.
5. ஆலேக்யம் - 5 different painting skills. ஓவியம் வரைவதில் திறன்.

6. விசேஷ கச்சேத்யம் - expert in cutting woods and dresses based on measurement and need. அளவு பார்த்து மரத்தையோ, துணிகளையோ வேலைக்கேற்ற படி துண்டிப்பது.
7. தண்டுல குஸுமபலி விகாரா - drawing from rice and flowers. அரிசியை கொண்டும், பூவை கொண்டும் கோலங்கள் போடுவது

8. புஷ்பா ஸ்தரணம் - making different structures using different forms of flowers. பல வண்ண மலர்களை கொண்டு , பல மண்டபங்களை அமைப்பது.
9. தசன வஸனாங்கராகா - applying preparations for cleansing the face, nail, teeth. Also expert in dyeing for cloths. முகம், பல், நகம் போன்றவற்றுக்கு அலங்காரம், சாயம் பூசி விடுவதும். துணிகளுக்கு சாயம் தோய்ப்பதும்.

10. மணி பூமிகாகர்ம - expert in making marble buildings. பளிங்கு மேடை அமைப்பது.

11. சயன ரசனம் - preparing different types of  bed, cushions. வித விதமான படுக்கைகளும், தலையணை, திண்டுகள், பாத பீடங்கள் தயார் செய்வது.
12. உதக வாத்யம் உதககாத - playing on music in water. ஜலதரங்கம் வாத்யம் வாசிப்பது.

13. சித்ர யோகா - practically applying an admixture of colors. பலவிதமான வண்ணங்களில் பலவிதமான சித்திரங்கள் எழுதுவது.

14. மால்யக் ரதன விகல்பா - designing a preparation of wreaths. பல விதமான முறையில், பல வித பூக்களை கொண்டு மாலை கட்டுவது.
15. சேகரா பீட யோஜனம் - practically setting the coronet on the head. பல விதமான கிரீடம், மகுடம், தொப்பி, தலைப்பாகை தயாரிப்பது.

16. நேபத்ய யோகா - practically dressing in the tiring room. நாடகத்திற்கு தேவையான திரை, விரிப்புகள் பல விதமான சித்திரங்களுடன் தயார் செய்வது, நடிகர்களுக்கு மேக்கப்/அலங்காரம் செய்து விடுவது.
17. கர்ணபத்ர பங்க - decorating the tragus of the ear. காது ஓரமாக அலங்காரம் செய்து விடுவது.
18. ஸுகந்த யுக்தி - practical application of aromatics. ஸென்ட், வாசனை தைலம், ஊதுபத்தி தயாரிப்பது.
19. பூஷண யோஜனம் - applying or setting ornament based on costume. அலங்காரத்திற்கு ஏற்ப பூஷணங்கள் பூட்டிவிடுவது.






20. இந்த்ர ஜாலம் - juggling/magic.  தண்ணீரில் நடப்பது, நெருப்பில் பிரவேசிப்பது, கண்ணை பிடுங்கி கையில் கொடுப்பது, நூலை ஆகாயத்தில் பறக்க விட்டு அதன் மேல் ஏறுவது உள்பட 96 விதமான மாயிகம் செய்வது.

21. கௌதுமார யோகா - art of disguise. பல விதமான வேஷம் போட்டு கொள்ளுதல்.
22. ஹஸ்தலா கவம் - art of sleight of hand. ஒரு மணி நேரத்தில் முடிப்பதை ஒரு நிமிடத்தில் முடிக்கும் திறன்.

23. விசித்ர சாகா பூப பக்ஷ்ய க்ரியா - preparing varieties of delicious food. போஜ்யம், பேயம், லேஹ்யம், பக்ஷ்யம் என்ற நான்கு வித உணவு தயார் செய்வதில் திறன்.

24. பானக ரஸ ராகா ஸவ யோஜனம் - practically preparing palatable drinks and tinging draughts with colors. தாகத்திற்கு ஏற்ப பல வித பானகங்கள் தயார் செய்வது.

25. ஸூசீவாயக கர்ம - art of needleworks and weaving. தையல் வேலையில் திறன்.

26. ஸூத்ர க்ரீடா - art of playing with thread. கயிறை வைத்து பல வித விளையாட்டு காட்டுவது.
27. வாத்ய க்ரியா - preparing musical instruments.  வீணை, மிருதங்கம் என்று பல வித இசை கருவிகள் தயார் செய்வது.

28. ப்ரஹேலிகா - art of making and solving riddles. புதிர் கேள்விகள் கேட்கவும், அதற்கு விடை அளிக்கும் திறன்.
29. ப்ரதிமாலா - art of winning any opponent in sports and art. விளையாட்டிலும், கலைகளிலும் எதிராளிகளை ஜெயிக்க கூடிய திறமை.

30. துர்வசன யோகா - art of practicing language difficult to be answered by others. பிறர் பேச முடியாதபடி, தோல்வி அடையும் படி வழக்கு பேசுவது.

31. புஸ்தக வாசனம் - art of reciting books even to an idiot. மட்டிப்பயல், மட சாம்பிராணி போல இருப்பவர்களுக்கு கூட பாடம் சொல்லிக் கொடுக்கும் திறமை.

32. நாடகாக் யாயிகா தர்சனம் - art of enacting short plays and anecdotes. நாடகம் தயாரிப்பது, அதை போட்டுக் காட்டுவது.
33. காவ்ய ஸமஸ்யா பூரணம் - art of solving enigmatic verses.  சந்தஸ், அலங்காரத்துடன் காவியங்கள் இயற்றி அதை கவிபாடும் திறமை கொண்டிருப்பது.

34. பட்டிகா, வேத்ர, பாணி விகல்பா - art of designing preparation of shield, cane and arrows. துணியாலேயே செய்யும் மாளிகை, பிரம்பு வேலைகள், அம்பினால் செய்யும் வேலைகள், அம்பினாலேயே கட்டப்பட்ட சிபிரம் போன்ற வீடுகள் கட்டும் திறமை.

35. தர்க்க கர்மாணி - art of debate. படித்ததை மறக்காமல், சமயத்தில் பயன்படுத்தி வாக்கு வாதம் செய்யும் திறன்.

36. தக்ஷணம் - art of carpentry. தேர், மர வேலைகள், தேவ ரூபங்களை மரத்தில் செய்து போன்ற திறன்.
37. வாஸ்து வித்யா - art of civil engineering. பூங்கா, கிணறு, வீடு, கோவில், அரண்மனை, சாலைகள் என்று அனைத்து விதமான வாஸ்து அடிப்படையில் கட்டும் திறமை.

38. ரத்ன பரீஷா - art of testing silver and jewels. நவ ரத்தினங்கள் தரத்தை அறிந்து அதன் விலையை என்ன என்று அறியும் திறமை.

39. தாது வாத - art of metallurgy. இரும்பு, தங்கம், வெள்ளி, ஈயம், தாமிரம் என்று பல தாதுக்களை உருக்கி பல வித பொருட்கள் செய்வது.

40. மணி ராக ஞானம் - art of tinging jewels. நகைகளுக்கு பளபளப்பு உண்டாக்கும் திறமை.




41. ஆகார ஞானம் - art of body language. சாமுத்திரிகா லக்ஷணம், கை ரேகை போன்றவற்றை பார்த்தே ஒருவனின் நடத்தையை கண்டுபிடிக்கும் திறன்.

42. வ்ருஷ ஆயுர்வேத யோகா - art of practicing medicine or medical treatment, by herbs. பயிர்கள், மரங்கள் வளர்ப்பது, அதற்கு ரோகங்கள் வந்தால், அதற்கு சிகிச்சை செய்வது, செடிகள் மூலம் சிகிச்சை செய்யும் திறன்.
43. மேஷ குக்குடலாவ யுத்த விதி - art of knowing the mode of fighting of cow and birds. கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு, குதிரை பந்தயம், ஆடு சண்டை, கோழி சண்டை போன்ற விளையாட்டில் ஆடும் திறமை.

44. சுக ஸாரிகா பிரலாபனம் - art of maintaining or knowing conversation between male and female cockatoos. கிளி போன்ற பறவைகளுடன் பேசும் திறன்.

45. உத் ஸாதனம் - art of disposing a person. தன் இடத்தை ஆக்ரமித்து கொண்டு இருப்பவனை தந்திரமாக விரட்டும் திறன்.


46. கேச மார்ஜன கோசலம் - art of combing hair. பல வித தலை அலங்காரம் செய்யும் திறன்.

47. அக்ஷர முஷ்டி காகதனம் - art of talking with fingers. கை விரல்களை வைத்து ஜாலம் செய்வது.

48. தாரண-மாத்ருகா — art of the use of amulets. நகைகள் தயாரிக்கும் திறமை.

49. தேச பாஷா ஞானம் - art of knowing provincial dialects. அனைத்து மொழிகளிலும் பேசும் திறன்.

50. நிர்மிதி ஞானா : art of knowing prediction by heavenly voice. தேவர்கள் பேசுவதை கேட்கும் சக்தியும், அதனால் நடக்கப்போவதை அறியும் திறன்.

51. யந்த்ர மாத்ருகா - art of mechanics - பெரிய இயந்திரங்களை தயாரித்து இயக்கும் திறன். பெரிய கற்களை தூக்கும் இயந்திரம், மரங்களை உயிரோடு பிடுங்கி சாலைகளில் நடுதல் போன்ற இயந்திரங்களை தயாரிக்கும் திறன்.

52. மிலேச்ச பாஷை, மிலேச்ச குதர்க்கம் - art of fabricating barbarous or foreign sophistry. மிலேச்சர்களுக்கு சரியாக குதர்க்கம் செய்து, அவர்களுக்கு பதில் சொல்லும் திறன். சமயத்துக்கு கீழ் தரமான மிலேச்சர்கள் போன்று பேசி சில விஷயங்களை சாதிப்பது. திருதராஷ்டிரன் இருக்கும் போதே, துரியோதனன் செய்து வைத்திருக்கும் சூழ்ச்சியை தர்மபுத்திரரிடம் மிலேச்ச பாஷையில் எலி, பொந்து போன்ற மறைமுகமான முறையில் தர்மபுத்திரரிடம் சூழ்ச்சியில் இருந்து தப்பிக்க வழி சொன்னார்.

53. ஸம் வாச்யம் - art of conversation. மேடைகளில் அழகாக பேசும் திறன்.

54. மானஸ காவ்ய க்ரியா - art of composing verse mentally. மனம் செல்லும் வேகத்தில் அலங்காரத்துடன், விருத்தங்களுடன் சிறிது நேரத்தில் ஒரு காவியம் செய்து விடும் திறன். பகவத் கீதை போன்ற காவியம் படைக்கும் திறன்.

55. க்ரியா விகல்பர் - art of management. எந்த காரியத்தையும், அதை முடிக்க வேண்டிய முறை தெரிந்து, அழகாகவும் மேலும் சீக்கிரமாகவும் முடிக்கும் நிர்வாக திறன். ஒரே நாளில் மதுராவில் இருந்த 5 லட்சம் யாதவர்களை துவாரகை என்ற நகரத்தை கடலில் மயனை அழைத்து அமைத்து, அனைவரையும் குடியேற்றி விட்டார்.
56. ச்சலித யோகா - art of practicing revenge. வஞ்சனை செய்பவனை வஞ்சனை செய்து அழித்தல். போர் செய்து நாட்டை ஜெயிக்காமல், தாயம் (சூதாடி) நாட்டை அபகரித்து வஞ்சகம் செய்த அனைவரையும் அதே வஞ்சகம் மூலம் பதில் கொடுத்து, பாண்டவர்கள் வாழ வழி செய்த திறன்.

57. அபிதான கோச சந்தோ ஞானம் - art of the use of lexicography. art of knowing 100s of Chandas. ஒரு சொல்லுக்கு பல வித அர்த்தங்கள் அறிந்து கொண்டு, பேசும் போதே பல வித அர்த்தங்களில் பேசும் திறன். கண்ணன் பேசும் போது, பாண்டவர்களுக்கு இனிமையாகவும், துரியோதனனுக்கு எதோ தன்னை பற்றி தான் கிண்டல் செய்கிறரோ என்று தோன்றும் அளவுக்கு வார்த்தை ஜாலம் செய்யும் திறன் கொண்டிருந்தார். நூற்றுக்கு மேற்பட்ட சந்தங்கள் பற்றிய திறன்.

58. வஸ்த்ர கோபனம் - art of concealment of cloths. ஒருவர் கொடுக்கும் பொருளை, மற்றவர்களுக்கு தெரியாமல் துணியால் மூடிக்கொண்டு எடுத்து செல்லும் திறன்.

59. த்யூத விசேஷா - art of knowing specific gambling. தாயம், சதுரங்கம்(chess) போன்ற விளையாட்டில் ஜெயிக்கும் திறன்.

60. ஆகர்ஷ க்ரீடா - art of playing and pulling others to his side. ஒரு கயிற்றின் இரு புறமும் இருவர் இழுக்க, எதிராளியை தன் பக்கம் இழுக்கும் திறன். எதிர்ப்பவனையும் தன் பக்கம் இழுக்கும் திறன்.
61. பால க்ரீடா - art of using children's toys. பல வித குழந்தைகள் விளையாடுவது. ஒட்டப் பந்தயம், நீச்சல், ஏமாற்றுதல், பிடிபடாமல் ஓடுதல், குத்து சண்டை, கூத்தாடுதல், நடித்தல், பந்து விளையாடுதல், தூக்கி இருந்து பிறகு பிடிப்பது, காளை மாடு போல நடிப்பது, குரங்கு போல தாவுவது, மறைத்து வைப்பது, தாண்டி குதிப்பது, காட்டில் அலைவது, புதிர் போட்டு விளையாடுவது என்று பல வித குழந்தை/சிறுவர்கள் விளையாட்டு ஆடும் திறன்.

62. நௌகா நிர்மாண கலா - art of making ships.  பல விதமான கப்பல் தயாரிக்கும் திறன்.

63. புஷ்பச கடிகா நிர்மாணம் - புஷ்பங்களை கொண்டு மேடை, அலங்காரம் செய்யும் திறன்.

64. விமான நிர்மாண கலா - art of making aircraft.
ஆகாயத்தில் செல்லும் விமானம் செய்யும் திறன்.

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!!

ஹிந்துவாக பிறந்ததே புண்ணியம்.



மஹாபாரத போரில் யவனர்கள் (கிரேக்க, ஐரோப்பா) தேசத்தில் உள்ளவர்கள் வரை அனைத்து க்ஷத்ரியர்களும் கலந்து கொண்டு உயிரை விட்டனர். 

பஞ்ச பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்ற பின், உலகமே தர்மபுத்திரர் ஆட்சிக்கு கீழ் வந்தது.
ஸ்ரீ கிருஷ்ணர் 3100BCE (சுமார் 5000 வருடங்கள் முன்) தன் அவதாரத்தை முடித்துக்கொண்டு, வைகுண்டம் செல்ல முடிவு செய்த போது,
"துவாரகை மீண்டும் கடலில் மூழ்கி விடும்" என்று யாதவர்கள் அனைவரையும் தர்மபுத்திரர் ஆளும் எந்த தேசங்களுக்கும் இடம் பெயர்ந்து விடுமாறு சொல்லி விட்டார்.

இந்த யாதவர்கள் பாரத தேசம் மட்டுமல்ல, உலகமெங்கும் பரவி இடம் பெயர்ந்தனர். 
உத்திர பிரதேசத்திலும் யாதவர்கள் உண்டு. 
தமிழ்நாட்டிலும், யாதவர்கள் உண்டு.

இப்படி 3100BCE சமயத்தில் துவாரகையை விட்டு இடம் பெயர்ந்த யாதவர்கள்,
நாராயணனே கிருஷ்ண அவதாரம் செய்து இருக்க, தன் யாதவ கிருஷ்ணனை பற்றி பேசாமல் இருப்பார்களா? 

பிரகலாதன் போன்ற ஞானிகளுக்கு மட்டுமே நாராயணனை பக்தி செய்த முடிந்த போது,
அஞானியாக இருக்கும் நம்மை போன்ற சாதாரண மக்களுக்கும், பக்தி கிருஷ்ண அவதாரத்தால் சுலபமானது.

சிறிது வருடங்களுக்கு பிறகு, தர்மபுத்திரர் தன் பேரன் பரீக்ஷித்துக்கு பட்டம் சூட்டினார். 
அவருக்கு பின் அவர் மகன் ஜனமேஜெயன் என்று பாரத நாடு ஒரு கொடியின் கீழ் ஆளப்பட்டது.
ஆச்சர்யம்..... 
Indus Valley Civilization (lasting from 3300 BCE to 1300 BCE) என்று சொல்லப்படும் இந்த காலம், தர்மபுத்திரர், பரீக்ஷித் போன்றவர்கள் ஆண்ட காலம் என்று தெரிகிறது.

இந்த காலத்தில் (INDUS VALLEY CIVILIZATION),
பாரத மக்களின் நகர அமைப்புகள், கலாச்சாரம் பிரமிக்க தக்கதாக உள்ளது என்று ஆராய்ச்சிகள் நமக்கு சொல்கிறது.

இந்து சமவெளி நாகரீகம் (Indus Valley Civilization) என்றும் சரஸ்வதி நாகரீகம் (Sarasvati Civilization) என்றும் சொல்லப்படும் இந்த காலம் (3000BCE-1300BCE),
1300BCE சமயத்தில் இயற்கையின் சீற்றத்தால்  அழிந்து இருக்கிறது என்று ஆராய்ச்சிகள் நமக்கு சொல்கிறது.

மஹாபாரத சமயத்தில், ஹரப்பா, மொஹஞ்ச தாரோ போன்ற நகரங்கள் இருக்கும் இடங்களில் சரஸ்வதி நதி ஓடி கொண்டு இருந்தது என்று சொல்லப்படுகிறது. அங்கு தீர்த்த யாத்திரை செய்து அர்ஜுனன் சென்றார். பீஷமர் சென்றார் என்றெல்லாம் குறிப்பு காட்டப்படுகிறது.

மஹாபாரதத்தில், சிந்து தேசத்தில் (Today Pakistan) உள்ள சரஸ்வதி நதி இருந்தது என்று பல இடங்களில் சொல்லப்படுகிறது.

1300BCE சமயத்தில், இந்த சரஸ்வதி நதி வற்றி போனதால், இந்த நகரங்களில் உள்ள பாரத மக்கள், மற்ற பாரத தேசங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கிறார்கள் என்பதே உண்மை.
இந்த இந்து சமவெளி நாகரீகம் படைகளாலோ, பெரும் பூகம்பம் போன்றவற்றாலோ அழியவில்லை என்றும் ஆராய்ச்சிகள் நமக்கு சொல்கிறது.
இன்றும் பாகிஸ்தானில் உள்ள இந்த அழிந்த நகரங்களில் கட்டிடங்கள் சேதமில்லாமல் இருப்பதே இதற்கு சாட்சி.

துவாரகை கடலில் மூழிகி விட்ட பின், யாதவர்கள் உலகமெங்கும் இடம் பெயர்ந்தனர் என்று சொல்லப்படுகிறது.

பாரத மக்களின் பெயர்களை அன்று மட்டுமல்ல, இன்று வரை உச்சரிக்க முடியாமல் உளறுபவர்கள் வெளிநாட்டினர்.
உலகம் முழுவதும் கிருஷ்ண பரமாத்மாவின் புகழை உயர்த்தி பிடிக்கும் iskcon போன்ற அமைப்பில் உள்ள வெளிநாட்டவர்கள், இன்று கூட "கிருஷ்ணா" என்று உச்சரிக்க முடியாமல் "கிஸினா" என்று தான் சொல்கின்றனர் என்பதை மனதில் பதிய வைத்துக்கொண்டு மேலும் படியுங்கள்.

சிந்து தேசம் என்று கூட சொல்ல முடியாமல்,
சிந்து என்ற சொல்லை கூட, "ஹிந்து, ஹிண்டு, இண்டஸ், இந்துஸ்" என்று உளறி,
1000 வருட ஆக்கிரமிப்பின் அடையாளமாக இந்த அர்த்தமில்லாத பெயரையே, 1947ல் நம் தேசத்தின் பெயராக கொடுத்து விட்டு சென்றனர்.

பாரத தேசம் (Bharat) என்று இந்திய சட்ட புத்தகத்தில் இருந்தாலும், இண்டியா (INDIA) என்ற உளறி கொட்டி கொடுத்த பெயரை,
இன்று வரை பாரத மக்கள் பயன்படுத்துகிறோம் என்பது வேதனையே!

கிரேக்க நாட்டின் அலெக்சாண்டர், பாரத எல்லையில் இருந்த சிற்றரசன் "புருஷோத்தமனை" தோற்கடிக்க படாத பாடு பட்டான்.




சிற்றரசனே இப்படி பலம் கொண்டு இருந்தால், பாரத தேசத்தில் கால் வைத்தால் என்ன ஆகுமோ என்று யோசித்து, நாடு திரும்ப முடிவு செய்தான்.

உச்சரிக்க தெரியாத கிரேக்கர்கள்  "புருஷோத்தமனை" கூட போரஸ் (porus) என்றனர்.
இப்படி ஊர் பெயரை, மக்களின் பெயரை, நதிகளின் பெயரை எதையுமே உச்சரிக்க முடியாத வெளிநாட்டிலும், 'யாதவர்கள்' குடிபுகுந்தனர்.

3100ல் குடிபுகுந்த யாதவர்களே (Yadava), பிற்காலத்தில் எஹுதி (Yehudi) என்றும் யூதன் (jews) என்று பெயர் தவறாக உச்சரிக்கப்பட்டு உருமாறி இருக்கிறார்கள்.

இவர்கள் தன் குல தெய்வமாக வழிபட்ட கிருஷ்ண பரமாத்மாவே, கிறிஸ்து என்று உளறப்பட்டு இருக்கிறார்.
இந்த யாதவ (யூதர்களே) தங்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு கிறிஸ்து என்று பெயர் வைத்து கொண்டிருந்தனர்.
கிருஷ்ண பரமாத்மாவின் கதையம் உருமாறி பேசப்பட்டு இருக்கிறது.  
மாடுகள், அங்கு காணப்படும் ஆடுகளாக மாற்றப்பட்டது.

கிருஷ்ணன் பிறக்க போகிறார் என்ற அசரீரி வாக்கு இங்கும் பயன்படுத்தப்படுகிறது.

இப்படி ஒரு குடும்பத்தில் யாதவ குடும்பத்தில் பிறந்த ஒருவரின் பெயரே "கிறிஸ்து". 
இவர் இறக்கும் வரை "பரமபிதாவே" என்று அவர் பரவாசுதேவனை வழிபாட்டு இருக்கிறார்.
அவர் இருக்கும் வரை, இவரை வைத்து மதம் உண்டாகவில்லை. 
ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்ததற்கு பிறகு, 3000 வருடத்திற்கு பிறகு, கிறிஸ்து பிறக்கிறார். 
இயேசுவின் தந்தை இவர் பிறக்கும் போது என்ன கலாச்சாரம் கொண்டு இருந்தார்?
இயேசு உண்மையில் யார்? தெரிந்து கொள்ள வேண்டாமா? 
பைபிள் என்ன சொல்லுகிறது? 
காலத்தை ஒட்டிய அறிவுடன், இயேசு என்ற கற்பனையை/கிருஷ்ண பக்தனை பற்றி இங்கு படிக்கவும்

பாரத மண்ணில் பிறந்த அறிவுள்ள மக்கள்,
உலகமே போற்றும் நம் கிருஷ்ணரை விட்டு விட்டு,
வேறு நாட்டில் பிறந்து இறந்து போன, ஒரு மனிதனை போய், தெய்வமாக நினைத்து, வணங்கவே மாட்டார்கள்.
போலி மதங்களில் விழுந்து கிடக்கும் நம்மில் சிலரும், கொஞ்சம் அறிவு பெற்றாலும், இந்த போலி அந்நிய நாட்டு தெய்வங்களை விட்டு விடுவார்கள். 

"பௌத்த மதமே சிறந்தது" என்று கொடி பிடித்த இதே பாரத மக்கள் தான், உண்மை உணர்ந்ததும், அதே பௌத்த மதத்தை வேரோடு தூக்கி எறிந்தனர் என்பது பாரத தேசத்தின் வரலாறு.     

வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர் புகழ்.  


Monday 25 June 2018

ஜம்மு (JAMMU) என்ற பெயர் யாரை கொண்டு ஏற்பட்டது?

ஜம்மு (JAMMU) என்ற பெயர் யாரை கொண்டு ஏற்பட்டது?

பரம பாகவதரான அக்ரூரர் (Akrura), கிருஷ்ண அவதார காலத்தில் இருந்தவர்.

கம்சன் அரண்மனையில் வேலை பார்த்து வந்தார் அக்ரூரர்.





ஸ்ரீ கிருஷ்ணரை கொலை செய்யும் நோக்கில், கம்சன், அக்ரூரரிடம், ஸ்ரீ கிருஷ்ணரை மதுராவுக்கு அழைத்து கொண்டு வர சொன்னான்.

பிருந்தாவனத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் பாத தூளி கண்டு, அந்த மண்ணில் புரண்டு எழுந்த பரம பக்தர், ப்ரேமிகர் இந்த அக்ரூரர்.

இவர்தான் ஸ்ரீ கிருஷ்ணரை மதுராவுக்கு பிருந்தாவனத்தில் இருந்து அழைத்து வந்தார்.

பின்னர் கம்ச வதம் ஆகி, தன் தாத்தா, பெற்றோர் என்று அனைவரையும் சிறையில் இருந்து விடுவித்து, ஸ்ரீ கிருஷ்ணர் தன் தாத்தாவை முடி சூட்டி, பின்னர் மதுராவில் இருந்து அனைவரையும் துவாரகைக்கு மாற்றி, ஆட்சி புரிந்து வந்தார்.

துவாரகையில் ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சி செய்ய, ஸ்ரீ கிருஷ்ணரின் பாதுகாப்பில் அக்ரூரரும் இருந்து வந்தார்.

ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அக்ரூரர் மேல் பிரியம் உண்டு. அக்ரூரருக்கும் ஸ்ரீ கிருஷ்ணன் மேல் பக்தி உண்டு.
துவாரகையில் அக்ரூரர் சௌக்கியமாக இருந்து வந்தார்.

பொதுவாக யாதவர்களுக்கு, ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து, "இவன் ஏதோ நம்மை விட புத்திசாலியாக இருக்கிறான். சாதாரணமாக இருந்தவன் தான், அதிர்ஷ்டத்தினால் முன்னுக்கு வந்துவிட்டான்" என்ற எண்ணம் இருந்தது.

மனிதர்களுக்கு மனிதனாக தெய்வம் பழகினால் இப்படி எல்லாம் பேசுவார்கள் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தெரியாதா?

வராஹ அவதாரம் எடுத்த போது, உலகையே மகா பிரளய ஜலத்தில் இருந்து எடுத்த பகவானை பார்த்து, சாதாரண பன்றியாக உள்ள ஜீவன்களுக்கு நம் ஜாதி தானே என்று தோன்றியதாம்.

மேலும் சில யாதவர்கள் நினைத்தார்கள்,
"ஸ்ரீ கிருஷ்ணனும் நம்மை போன்று சாதாரண ஆள் தான். அவன் பிறக்கும் போதே அவன் அம்மாவும், அப்பாவும் ஜெயிலில் கிடந்தார்கள்.
இவன் எங்கேயோ மாடு மேய்த்து கொண்டிருந்தான்.
திடீரென்று ஏதோ அதிர்ஷ்டம் அடித்து விட்டது இவனுக்கு, இப்பொழுது நம்மை எல்லாம் விட பெரிய ஆளாகி விட்டான்.
நாமெல்லாம் இவனை விட நல்ல குடும்பத்தில் பிறந்தும், சாமர்த்தியம் போதாததால் இப்படி கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம்."
என்று பேசினர்.

ஸ்ரீ கிருஷ்ணர், இதையெல்லாம் தெரிந்து தானே உலகத்தில் அவதாரம் செய்து இருக்கிறார்.
மனிதர்கள் பல. இப்படியும் பேசும் கூட்டம் இருக்கதானே செய்யும்.

பகவானை உலக மக்களுக்கு புரியாது. உலகத்தை பற்றி பகவானுக்கு தெரியுமே !

இப்படி தான் உலகம் இருக்கும் என்று தெரிந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இப்படி பொறாமை படும் சில யாதவர்களை பற்றி துளியும் கவலைப்படவில்லை.
மந்தஹாசத்துடன் ஆட்சி செய்து வந்தார்.

இப்படி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து, சிலர் பக்தி உள்ளவர்கள் போலவும் இருக்கிறார்கள், பக்தி இல்லாதவர்கள் போலவும் இருக்கிறார்கள், குறை சொல்பவர்கள் போலவும் இருக்கிறார்கள், நிறை சொல்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
இப்படி வித விதமாக இருந்தார்கள் இந்த யாதவர்கள் யாவரும்.

இப்படி பலவித அபிப்ராயம் கொண்ட யாதவர்கள், திடீரென்று ஒரு நாள் அனைவரும் சேர்ந்து அரண்மனை வாசல் வந்து ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து,
'ஹே நாராயணா ! சங்கு சக்கர கதாதரா ! கோவிந்தா ! யது நந்தனா !!"
என்று பரவசத்துடன் கூப்பிட்டனர்.

திரௌபதி போல உண்மையான  பக்தி இருந்தால், துவாரகையில் இருந்து கொண்டே, ஹஸ்தினாபுரத்தில் "கோவிந்தா" என்று இவள் அழைத்தாலும் ஸ்ரீ கிருஷ்ணன் கேட்பான்.

இன்று பக்தி பரவசத்தில் அழைக்கும் இவர்கள், நாளை இடையன் என்றும் பேசுவார்கள் என்று அறிந்த பகவான், இவர்கள் பேசுவதை காதில் போட்டு கொள்ளவே இல்லை.

இன்று திடீரென்று பக்தி பரவசமாகி ஏதோ காரணத்தால்  அழைக்கின்றனர் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மந்தஹாசத்துடன், அவர்களை பார்த்து,
"என்ன இங்கு வந்துள்ளீர்கள்? என்ன நடந்தது?
என்றார்.

யாதவர்கள், ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து,
"நீங்களே நாராயணன் அல்லவா? ஆபத்பாந்தவன் இல்லையா?
எங்களை ரக்ஷிக்க வைகுண்டத்தில் இருந்து வந்துள்ளீர்கள் அல்லவா?" என்று சொல்ல,
ஸ்ரீ கிருஷ்ணர்,
"என்ன விஷயமாக வந்துள்ளீர்கள். அதை சொல்லுங்கள்" என்றார்.

யாதவர்கள்,
"உங்களை பார்க்க சூரியனே வந்து கொண்டிருக்கிறார்"
என்று பரவசத்துடன் சொன்னார்கள்.

"பார்த்தாயா என்னை பார்க்க சூரியனே வருகிறார். நான் பகவான் என்று இப்போது புரிந்ததா?"
என்று ஸ்ரீ கிருஷ்ணரும் சொல்லவில்லை.

வந்தது சூரியன் இல்லை என்று தெரிந்தால், அடுத்த கணமே இந்த யாதவர்கள் 'இடையன்' என்றும்  சொல்வார்கள்.
இவர்களின் திடபக்தி எத்தனை என்று தெரியாதா ஸ்ரீ கிருஷ்ணருக்கு.

சூரியன் வருகிறார் என்று யாதவர்கள் சொன்னதை கேட்ட ஸ்ரீ கிருஷ்ணர் மந்தஹாசத்துடன் அமைதியாகவே இருந்தார்.

அந்த சமயம், யாதவர்களில் ஒருவன் சத்ரார்ஜித் என்பவன் தான் கிருஷ்ணரை பார்க்க வந்து கொண்டிருந்தான்.
வருவது சூரியனும் அல்ல, தேவனும் அல்ல என்று அனைவரும் தெரிந்து கொண்டனர்.

சத்ரார்ஜித் சூரிய உபாசனை செய்து ஸித்தி பெற்று, சூரிய தேவனிடம் "ஸ்யமந்தகம்" என்ற மணியை வாங்கி தன் கழுத்தில் போட்டிருந்தான். அந்த மணியின் ஒளி தான், இந்த யாதவர்களுக்கு, வருவது சூரியன் என்ற பிரமையை உருவாக்கிவிட்டது.

இத்தனை நேரம் நாராயணா, கோவிந்தா என்று சொன்ன இந்த யாதவர்கள், ஸ்ரீ கிருஷ்ணனை பார்க்காமல், வந்திருந்த சத்ரார்ஜித்தையும் அவன் கழுத்தில் இருந்த மணியையுமே பார்த்து கொண்டிருந்தனர்.

ஸ்ரீ கிருஷ்ணன், சத்ரார்ஜித்தை பார்த்து,
"என்ன சத்ரார்ஜித், என்ன கழுத்தில் அணிந்து இருக்கிறாய்?"
என்று கேட்டார்.

சத்ரார்ஜித், ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து,
"நான் சூரிய உபாசனை செய்து, சூரிய தேவன் சன்மானமாக எனக்கு இதை கொடுத்தார். இதற்கு ஸ்யமந்தகம் என்று பெயர்.

இந்த மணி எந்த தேசத்தில் இருக்குமோ, அந்த தேசத்தில் தானியங்கள் குறைவில்லாமல்  கிடைக்கும்.
மழை காலத்தில் பெய்து, பஞ்சம் ஏற்படாது.
இது யாரிடத்தில் இருக்கிறதோ, அவன் அல்ப ஆயுசூடன் இறந்து விட மாட்டான். நோய் வராது. அவனது குழந்தைகள் சௌக்கியமாக இருப்பார்கள்.
அவனுடைய ஊரில் உள்ள ஆடு மாடுகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்..."
என்று சொல்லிக்கொண்டே போனான்.

இதை கேட்டுக்கொண்டிருந்த அனைத்து யாதவர்களும், இவன் ஏதோ ஒரு புராணத்தை படித்தால் பலஸ்ருதி சொல்வதை போல சொல்லிக்கொண்டு இருக்கிறானே என்று சாதாரணமாக தான்  கேட்டுக்கொண்டிருந்தனர்.

இப்படி சொல்லிக்கொண்டிருந்த சத்ரார்ஜித்,
"இந்த மணியை வைத்து இருப்பவனுக்கு, இந்த மணி, தினமும் 8 சேர் தங்கம் தரும்" என்று சொல்ல, அடுத்த நொடி, எல்லா யாதவனும் சேர்ந்து ஒரே சமயத்தில், "ஆஆ..." என்று வாய் பிளந்தனர்.

அதுவரை சாதாரணமாக கேட்டுக்கொண்டிருந்த யாதவர்கள் மத்தியில் பெரும் கூச்சல், ஆரவாரமானது.

பகவான் யாதவர்களின் மனநிலையை கவனித்தான். இனி இவன் க்ஷேமமாக இருக்க முடியாது.
இவனை யாதவர்கள் எப்படியாவது கொன்று அந்த மணியை அபகரிப்ப நினைப்பார்கள் என்று உணர்ந்தார்.

நிலைமையை உணர்ந்து, ஸ்ரீ கிருஷ்ணர், சத்ரார்ஜித்தை பார்த்து,
"சத்ரார்ஜித், உன்னிடம் இந்த ஸ்யமந்தக மணி இருப்பது பாதுகாப்பில்லை. உன்னிடம் இதை பாதுகாக்க இடம் இல்லாமல், உன் கழுத்திலேயே போட்டுக்கொண்டு இருப்பது உனக்கும் பாதுகாப்பில்லை.

நான் இந்த ஸ்யமந்தக மணியை பாதுகாப்பாக இரும்பு பெட்டியில் வைத்து இருக்கிறேன். தினமும் இந்த ஸ்யமந்தக மணி தரும் 8 சேர் தங்கத்தை உனக்கு நிருத்து அப்படியே தந்து விடுகிறேன்."
என்றார்.




சத்ரார்ஜித்,
"நான் சூரியனை உபாசனை செய்து வரமாக வாங்கிய இந்த மணியை எப்படி உங்களுக்கு தர முடியும்?"
என்று கேட்க,
"சரி, நீயே வைத்துக்கொள்" என்று சொல்லிவிட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.

விலையுயர்ந்த பொருட்களை பூட்டி வைத்து இருந்தால் கூட பாதுகாப்பு இல்லை என்று இருக்க, சத்ரார்ஜித் இந்த மணியை தன் கழுத்தில் போட்டு கொண்டே இருந்தான்.

சாதாரணமாக இருந்தவன் தான் இந்த சத்ரார்ஜித்.
ஆனால், தினமும் 8 சேர் தங்கம் கிடைத்தால் என்ன ஆகும்?
இதை வைத்துக்கொண்டே பெரிய மாளிகை கட்டிக்கொண்டான். நிலங்கள் வாங்கினான். பெரும் பணக்காரன் ஆகிவிட்டான்.

கொஞ்சம் பணம் சேர்ந்தாலே மனிதனுக்கு கர்வம் வந்து விடுவது இயற்கை. இவனுக்கோ தினமும் தங்கம் வந்து கொண்டே இருக்க, இப்பொழுதெல்லாம் யாரிடமும் சரியாக பேசுவது கூட கிடையாது இவன். இவன் அருகில் தெரிந்தவர்கள் போனாலும் தெரியாதது போல தான் நடந்து கொள்வான்.




இவனின் திடீர் செல்வாக்கு, மற்ற யாதவர்களுக்கு பொறாமையை உண்டாக்கியது.

சத்ரார்ஜித்தின் தம்பி "ப்ரசேனன்" என்பவனுக்கு கூட, தன் அண்ணனின் இந்த திடீர் சுகபோக வாழ்க்கை பொறாமையை விதைத்தது.

ஒரு சமயம், ப்ரசேனனின் பிறந்த நாளில், "அண்ணா, நீங்களே இந்த ஸ்யமந்தக மணியை போட்டுக்கொண்டு இருக்கிறீர்களே! எனக்கு இன்று ஒரு நாள் மட்டும் போட்டு விடலாமே?" என்றான்.

தன் தம்பி தானே என்று, நல்ல மனநிலையில் இருந்த சத்ரார்ஜித் அவனுக்கு போட்டு விட்டான்.

இவனாவது ஸ்யமந்தக மணியை கழுத்தில் கட்டிக்கொண்டு வீட்டோடு இருந்து இருக்கலாம்.

வேட்டை ஆடலாம் என்று புறப்பட்டான்.  நான்கு வீதியையும் தாண்டி போகும்போது, அங்கு பார்த்த யாதவர்கள், இன்னும் பொறாமைப்பட்டனர்.
"அடடா..  சத்ரார்ஜித் மட்டும் தான் ஸ்யமந்தக மணியை வைத்து கொண்டிருக்கிறான் என்று நினைத்தால், அவன் தம்பி "ப்ரசேனனும்" "வைத்து இருக்கிறானே?"
என்று மனம் புழுங்கினர்.

இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு, பெருமை பட்டான் மனதுக்குள்.
இப்படியே வேட்டைக்கு காட்டுக்குள் போனவன் தான், திரும்பவே இல்லை.

ஒரு நாள் ஆனது, இரண்டு நாள் ஆனது, மூன்று நாள் ஆனது..  ப்ரசேனன் திரும்பி வரவில்லை என்றதும் சத்ரார்ஜித்துக்கு இடி தலையில் விழுந்தது போல ஆனது.

தம்பி வராததை விட, ஸ்யமந்தக மணியை தொலைத்து விட்டோம் என்று பதறினான். அழுதான்.

ஸ்யமந்தக மணியோடு சென்ற ப்ரசேனன் திரும்ப வில்லை என்ற விஷயம் பரவ, யாதவர்கள் ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாதிரி பேச ஆரம்பித்தனர்.

யாதவர்களில் சிலர், "கிருஷ்ணன் தான் ப்ரசேனனை கொன்று, ஸ்யமந்தக மணியை எடுத்து கொண்டிருப்பான்.
ஏற்கனவே கிருஷ்ணன், இந்த மணியை எனக்கு கொடு என்று கேட்டான். இதை எப்படியாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து, அவன் தான் செய்திருப்பான்" என்று புரளி பேச ஆரம்பித்தனர்.

ஸ்யமந்தக மணியை தொலைத்த சத்ரார்ஜித் இதை நம்பினான்.

இப்படியே இந்த புரளி கிளம்ப, ஸ்ரீ கிருஷ்ணர் எங்கு போனாலும், இந்த யாதவர்கள் தங்களுக்குள் காது ஓரமாக புரளி பேச தொடங்கினர்.

இப்படி நடப்பதை கவனித்த ஸ்ரீ கிருஷ்ணர், நம்மை பற்றி தான் ஏதோ பேசுகிறார்கள் என்று அறிந்து, ஒரு நாள், ஒரு யாதவனை கூப்பிட்டு,
"என்ன நடக்கிறது இங்கே? என்னை பார்த்தால் முறைக்கிறார்கள். ஏதோ காதுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
என்னை பற்றி என்ன பேச்சு நடக்கிறது?" என்று கேட்க,
"உங்களை பற்றி நாங்கள் ஒன்றும் பேசவில்லையே!!"
என்று அந்த யாதவன் சமாளிக்க,
"என்னை பற்றி தான் பேசுகிறீர்கள். என்ன விஷயமாக பேசுகிறீர்கள்?
தவறான விஷயமாக இருந்தால் திருத்தி கொள்வேன். சரியான விஷயமாக இருந்தால், அதை நானே விளக்க வேண்டிய கடமையும் உள்ளது. ஆகவே உண்மையை சொல்" என்று பகவான் கேட்க,
"நாங்கள் ஒன்றும் உங்களை பற்றி குறை சொல்லவில்லை.
சத்ரார்ஜித் தான், உங்களை பற்றி ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கிறான்.
அன்று ஒருநாள், சத்ரார்ஜித் ஸ்யமந்தக மணியை உங்களுக்கு காட்ட வந்த போது, நீங்கள் அதை வைத்துக்கொள்வதாக கேட்டுக்கொண்டீர்களே !
இன்று அந்த ஸ்யமந்தக மணியை காணவில்லை. மேலும் அவன் தம்பி "ப்ரசேனனையும்" காணவில்லை.
அவன் தம்பியை கொன்று விட்டு, ஸ்யமந்தக மணியை நீங்கள் தான்  திருடி விட்டீர்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறான்" என்று அந்த யாதவன் சொன்னான்.

உண்மையில் இவனை போன்ற யாதவன் தான் இப்படியெல்லாம், புரளி கிளப்பி, சத்ரார்ஜித் வரை நம்ப வைத்தது.

ஸ்ரீகிருஷ்ணருக்கு பயந்து, முழு பழியை சத்ரார்ஜித் மீது போட்டான்.

ஸ்ரீ கிருஷ்ணரின் கீதை மட்டும் நமக்கு உபதேசம் அல்ல.
அவர் சரித்திரம் முழுவதுமே நமக்கு பாடம்.
எப்படி இந்த உலக மக்களோடு பழக வேண்டும், எப்படி பழக கூடாது என்று அனைத்தையும் காட்டுகிறார்.

ஒருவர் வீட்டுக்கு நாம் சென்றால் அவர் வீட்டில் ஏதாவது பொருளையோ, நகையையோ பார்த்து, "அடடே..  இது ரொம்ப அழகா இருக்கே. எங்கே வாங்கினீர்கள் என்று உடனே கேட்டு விட கூடாது".
ஒரு வேளை நாம் பேசி முடித்து பின், அந்த பொருள் தொலைந்து விட்டாலோ, உடைந்து விட்டாலோ, அதை பற்றி பேசிய காரணத்திற்காகவே நம் மீது குற்றம் பேசிவிடுவார்கள்.

"இவன் தான் இந்த நகையை பற்றியே விஜாரித்தான்.  இப்போது நகையை காணவில்லை. இவன் தான் எடுத்து இருப்பான் என்று திருட்டு பட்டம் கூட சாட்டிவிடுவார்கள்".

இப்படி இன்னொருவர் வீட்டில் போய், "இது நன்றாக இருக்கே? எங்கு வாங்கினீர்கள்?" என்று கேட்பது கூட நமக்கு கௌரவ குறைச்சல் தானே ?

உலக விஷயங்களில் ஜாக்கிரதையாக பழக வேண்டும் என்பதை காட்ட, எப்படி பழக கூடாது என்று பகவான் செய்த லீலை இது.

தான் அந்த ஸ்யமந்தக மணியை பாதுகாப்பாக வைத்து இருக்கிறேன் என்று என்றோ ஒரு நாள் சொன்னதற்கு, தொலைந்து போனதும் ஸ்ரீ கிருஷ்ணர் தான் திருடி விட்டார் என்று சொல்லும் அளவுக்கு யாதவர்கள் பேச ஆரம்பித்து விட்டனர்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மக்கள் பலவிதமாக தான் இருப்பார்கள் என்று தெரிந்து தான் அவதாரம் செய்கிறார்.
இப்படி தன் மீது சிலர் பாராட்டுவதும், சிலர் திருட்டு பழி போடுவது, என்று எதையும் சமமாக தான் பார்க்கிறார்.
இதை லட்சியம் செய்ய கூட தேவையில்லை.

இருந்தாலும், உத்தவன் போன்ற பக்தர்கள், பகவானுக்கு இப்படி ஒரு பழி வந்து விட்டதே என்று கண் கலங்கினர்.

பக்தன் மனம் வருந்த கூடாது என்பதால், ஸ்ரீ கிருஷ்ணர் தான் அதை எடுக்க வில்லை என்று நிரூபணம் செய்ய, ப்ரசேனன் என்ன ஆனான்? அவன் வைத்து இருந்த ஸ்யமந்தக மணி என்ன ஆனது என்று பார்க்க தானே காட்டுக்குள் நுழைந்தார்.

துவாரகை குஜாராத்தில் உள்ளது.
அடர்ந்த காட்டில் பல நாட்கள் அலைந்து எங்கு போனான் ப்ரசேனன் என்று தேடினார்.

ஒரு இடத்தில் இவன் சடலம் கிடந்தது.
உண்மையில், இவனை காட்டில் ஒரு சிங்கம் அடித்து கொன்று போட்டு இருந்தது.
இவன் கழுத்தில் ஸ்யமந்தக மணி இல்லாமல் இருக்க, அந்த சிங்கம் கவ்விக்கொண்டு எங்காவது போட்டு விட்டதா என்று மேலும் பல இடங்களில் தேட ஆரம்பித்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.

ஒரு இடத்தில் ஒரு சிங்கம் அடிபட்டு இறந்து கிடந்தது. அங்கு ஒரு கரடியின் கால் தடம் தெரிந்தது.

கரடியுடன் இந்த சிங்கம் சண்டை போட்டு இறந்துள்ளது என்று ஊகித்த கிருஷ்ணர், அந்த கரடி இந்த சிங்கத்தை அடித்து கொன்று இருக்க வேண்டும், மேலும் ஸ்யமந்தக மணியை எடுத்து சென்று இருக்க வேண்டும் என்று, மேலும் தேடலானார்.

இப்படியே அலைந்து தேடி கொண்டிருக்க, ஒரு பெரிய குகை தென்பட்டது.
குகைக்குள் தான் கரடி இருக்க வேண்டும் என்று உணர்ந்து, ஸ்ரீ கிருஷ்ணர் தன் படைகளை ஊருக்கு திரும்ப சொல்லி, தான் உள்ளே சென்று பார்த்து வருவதாக சொன்னார்.

அனைவரையும் அனுப்பியதற்கு காரணம் இருந்தது.
த்ரேதா யுகத்தில், ஸ்ரீ ராமராக தான் அவதாரம் செய்ய போவதாக தேவர்களுக்கு அபயம் கொடுத்த பின், தேவர்கள் அனைவரும் வானரர்களாக, ஜாம்பவானாக அவதாரம் செய்தனர்.

சிரஞ்சீவியாக பூலோகத்தில் இருக்க ஹனுமானுக்கு ஸ்ரீ ராமர் அணுகிரஹம் செய்து விட்டார்.
இவருடன், தேவ அவதாரமான ஜாம்பவானும் ஸ்ரீ ராமரின் அடுத்த அவதாரத்தை பார்க்க பூலோகத்திலேயே இருந்தார்.

இவர் தான் கரடியாக அவதாரம் செய்தவர். தேவைப்பட்டால் கரடி ரூபம் எடுத்து வெளி உலகிற்கு தெரிவார்கள். தேவைப்பட்டால் மனித ரூபம் எடுத்துக்கொள்வார்கள்.
இவர் குகைக்குள் தான் ஸ்ரீ கிருஷ்ணர் நுழைந்தார்.

தன் தரிசனம் கிடைக்க ஆசைப்பட்டு காத்து இருக்கும் ஜாம்பவானுக்காக தானே வந்தார்.

ஜாம்பவான் தங்கி இருந்த அந்த இடம் தான், இப்போது ராணாவாவ் (Ranavav, Gujarat).

ராமாயண காலத்தில், ஜாம்பவான் தங்கி தியானம் செய்த இடம் தான் இப்போது அவர் பெயரிலேயே  ஜம்மு என்று இப்போது அழைக்கிறோம். ஜம்மு (Jammu)
ஜம்முவில் "PEER Kho Cave Temple" (Jamwant Cave) என்ற இடத்தில் இவருக்கு ஒரு கோவில் உள்ளது.




அந்த குகைக்குள் (ராணாவாவ் (Ranavav, Gujarat)) நுழைந்த ஸ்ரீ கிருஷ்ணர், உள்ளே ஒரு அரண்மனை இருப்பதை கண்டார்.
அரண்மனை உள்ளே ஒரு சிறுவன் கையில் அந்த ஸ்யமந்தக மணி இருந்தது. அதை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தான்.
அவன் அருகில் ஒரு பெண் இருந்தாள். வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை.

"சரி, இங்கு ஒன்றும் போருக்கு அவசியமில்லை. அந்த பெண் அந்த சிறுவனை விட்டு சிறிது அங்கு இங்கு விலகி சென்றாலும், அமைதியாக அந்த மணியை எடுத்துக்கொண்டு சென்று விடுவோம்" என்று தீர்மானித்து, ஸ்ரீ கிருஷ்ணர் ஓரமாக மறைந்து நின்று கொண்டார்.

எத்தனை நேரம் தான் ஒளிந்து நின்று கொண்டே இருப்பது?
ஒரு காலை இன்னொரு காலில் போட்டு ஸ்டைலாக நின்றே பழக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணர், தன் ஒரு காலை தூக்கி மாற்றி வைக்க, அவர் சரணத்தில் (காலில்)  அணிந்திருந்த நூபுரம் கலீர் என்று ஓசை எழுப்ப, அந்த பெண் என்ன சத்தம் என்று திரும்பி பார்த்து விட்டாள்.

யாரோ ஒருவர் நீல ஜ்வாலையாக ஒளிந்து நிற்பதை பார்த்து, பதறி
உடனே,
"அப்பா.. அப்பா..  இங்கே யாரோ நிற்கிறார்கள்" என்று கூற, அங்கு கரடி ரூபத்துடன் வந்து விட்டார் ஜாம்பவான்.
அதிகம் வயதான கரடி, மகா குண்டனாக இருந்தார்.
ஒளிந்து இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து,
"யாரடா நீ?" என்று கேட்க
"இந்த மணி என்னுடையது. அதை எடுத்து போகவே வந்தேன்"
என்றார் பகவான்.

"நீ யார் என்று முதலில் சொல்" என்று குரலை உயர்த்த,
"நான் துவாரகாதீசன். கிருஷ்ணன்" என்றார்.

உடனே கோபத்தில்,
"நான் கரடி. ஒரு பெரிய சிங்கத்திடம் சண்டையிட்டு அதன் வாயை பிளந்து இந்த மணியை கொண்டு வந்து இருக்கிறேன்.
க்ஷத்ரியனான நீ, வீரமாக சண்டையிட்டு வாங்கி செல்லாமல், ஒளிந்து நின்று எடுத்து போக பார்த்தாயா?
என்று கேட்க,
பவ்யத்துடன்,
"அப்படியானால், தேவரீரை அடித்து மணியை எடுத்து கொண்டு செல்லலாமா?"
என்றார் ஸ்ரீ கிருஷ்ணன்.

முடிந்தால் ஜெயித்துப்பார் என்று ஜாம்பவான் சண்டைக்கு கிளம்ப, ஸ்ரீ கிருஷ்ணருக்கும், ஜாம்பவானுக்கும் பெரிய யுத்தம் உண்டானது.

யுத்தம் நடக்க ஆரம்பிக்க, இது ஒரு கிழ கரடி என்று நினைத்தால், கிழ கரடியாகவே யுத்தம் செய்யவில்லை.

ராமாயண காலத்தில் என்ன பலத்துடன் சண்டை போட்டாரோ அது போல, மரத்தையும், மலையையும் தூக்கி அடித்து சண்டை போட தொடங்கினார் ஜாம்பவான்.
7வயதில் கோவர்த்தன மலையையே தூக்கிய கிருஷ்ணரும் சளைக்காமல் யுத்தம் செய்தார்.

அங்கு இருந்த மரம், மலைகள் எல்லாம் உடைந்து போக, ஒன்றும் கிடைக்காத நிலையில் இருவரும் மல்யுத்தம் செய்ய ஆரம்பித்தனர்.

இரவு பகல் பாராமல், ஓய்வே இல்லாமல் 28 நாட்கள் தொடர்ந்து சண்டை நடந்து கொண்டே இருந்தது. இருவருமே சளைக்காமல் யுத்தம் செய்தனர்.
28வது நாளில், ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு குத்து விட, அவர் உடம்பு களைத்து, சலைத்து விட்டது.

"எவர் தன் புருவத்தையே வில் போல வளைத்து, கண்ணையே அம்பு போல குறிவைத்து, சமுத்திரத்தை ஒரு பார்வை பார்த்ததும், அந்த சமுத்திர அரசனே ஸ்ரீ ராமரிடம் வந்து சரணாகதி செய்தானோ,

எவர் ஆச்சர்யமான சேது (பாலம்) நிர்மானித்தாரோ.

எவர் கோதண்டபாணியாக இருந்து, பன மரத்தில் உள்ள பனம் பழங்களை உதிர்ப்பது போல ராவணனின் பத்து தலைகளையும் கீழே உதிர்த்தாரோ,

அத்தகைய கோதண்டபாணியான என் பிரபு "ஸ்ரீ ராமர்" காட்டிய பல பராக்ரமத்தை போல, இப்படி சளைக்காமல் என்னுடன் யுத்தம் செய்யும் நீ யார்?"
என்று கேட்க,
நீல மேகமாக இருந்த ஸ்ரீ கிருஷ்ணர், கோதண்டபாணியாக தரிசனம் கொடுத்தார்.

ஸ்ரீ ராமராக தரிசனம் கிடைத்ததும், ஜாம்பவான் உடனே ஸ்ரீ கிருஷ்ணர் சரணத்தில் விழுந்தார்.

கண்ணீருடன்,
"ஸ்வாமி ! இது ஒரு திருவிளையாடலா?
என்னோடு சண்டை போடுவதற்கு என்று வந்தீரா?
ஏன் இப்படி யுத்தம் செய்ய சங்கல்பித்தீர்?"
என்று கேட்க,
"ஜாம்பவான் ! ராமாயண யுத்தத்தில் உங்களுக்கு பெரும்பாலும் யுத்தம் செய்ய வாய்ப்பு இல்லாமல் இருந்தது.
அது ஒரு குறையாக இருந்தது உங்களுக்கு.
அந்த சமயத்தில், நான் உமக்கு சொன்னேன், உமக்கு சமமான வீரன் நான் ஒருவன் மட்டுமே, ஆதலால், வேண்டுமானால், நீரும் நானும் கொஞ்சம் யுத்தம் செய்வோம் வாரும்! என்று அழைத்தேன்.

ஆனால் நீங்களோ, "தேவரீரோடு யுத்தம் செய்வதாவது?" என்று மறுத்து விட்டீர்.

நீர் போனாலும்,உங்களோடு ஒரு முறையாவது யுத்தம் செய்யவேண்டும் என்று ஆசை இருந்தது.

ராம அவதாரத்தில் இதை நிறைவேற்ற சந்தர்ப்பம் கிடைக்காமல் போக, இந்த அவதாரத்தில் விளையாட்டாக யுத்தம் செய்யலாமே என்று யுத்தம் செய்தேன். இப்பொழுது உங்களை ஜெயித்து விட்டேன். இந்த மணி இனி என்னுடையது தானே?" என்று மந்தஹாசத்துடன் கேட்டார்.

ஜாம்பவான், தன்னிடம் இருந்த ஸ்யமந்தக மணியை ஸ்ரீ கிருஷ்ணருக்கு சமர்ப்பித்தார்.
அங்கு இருந்த தன் பெண் "ஜாம்பவதியை" ஸ்ரீ கிருஷ்ணருக்கு மணம் முடித்து கொடுத்தார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஜாம்பவதியுடன், ஸ்யமந்தக மணியோடு துவாரகை திரும்பினார்.

ஸ்யமந்தக மணியை சபை கூட்டி, ஸ்ரீ கிருஷ்ணர், எல்லோர் முன்னிலையில் சத்ரார்ஜித்தை அழைத்து,
"சத்ரார்ஜித் ! க்ஷத்ரிய தர்மப்படி, யார் ஒரு பொருளை கைப்பற்றுகிறானோ, அவனுக்கு அது சொந்தமாகிவிடும்.
நீ ஸ்யமந்தக மணியை தொலைத்து விட்டாய்.
நடந்ததை கேள். உன் தம்பியை காட்டில் ஒரு சிங்கம் அடித்து விட்டது. அந்த சிங்கத்தை ஜாம்பவான் அடித்து விட்டார். அவரிடம் இருந்து நான் யுத்தம் செய்து வாங்கி வந்தேன்.
க்ஷத்ரிய தர்மப்படி, இரண்டு காரணங்களால் எனக்கு இது சொந்தம்.
ஜாம்பவதியை மணந்து கொண்டதால், அவளுடைய சீதனமாகவும் எனக்கு வந்து இருக்கிறது.
நான் சம்பாதித்த தனமாகவும் இது வந்து இருக்கிறது.

இப்படி க்ஷத்ரிய தர்மப்படி எனக்கு சொந்தம் என்று ஆனாலும், நீ இதை சூரிய உபாசனை செய்து பெற்றதால், உன் உபாசனைக்காக இந்த ஸ்யமந்தக மணியை உனக்கே தருகிறேன். வாங்கிக்கொள்!"
என்று தந்து விட்டார்.




சத்ரார்ஜித் ஸ்யமந்தக மணியை வாங்கி கொண்டு, அரண்மனை விட்டு வெளியே நடக்க, அதுவரை ஸ்ரீ கிருஷ்ணன் தான் திருடி விட்டான் என்று  பேசிக்கொண்டிருந்த அதே யாதவர்கள், சத்ரார்ஜித்தை பார்த்து,
"ஸ்ரீ கிருஷ்ணர், பகவான் என்று தெரியாதா?
அவரை போய் திருடன் என்று குறை சொன்னாயே !!
உறுப்புடுவாயா நீ? "
என்று அப்படியே மாற்றி பேச ஆரம்பித்தனர்.

சத்ரார்ஜித் இந்த யாதவர்களை பார்த்து திகைத்தான்.
இப்படி ஸ்ரீ கிருஷ்ணன் பக்கம் பேச ஆரம்பித்து விட்டார்களே !!
துவாரகாதீசன் ஸ்ரீ கிருஷ்ணன் கூட இந்த விஷயத்தை மறந்தாலும், இந்த யாதவர்கள் விட மாட்டார்களே !!
தன் மனைவியிடம் போய் என்ன செய்யலாம் என்று ஆலோசித்தான்.

அவன் மனைவி,
"ஸ்ரீ கிருஷ்ணனுக்கு, நம் பெண் 'சத்யபாமா'வை கல்யாணம் செய்து கொடுத்து விடுவோம்.
பின்னர், அவருக்கு மாமனார் என்ற அந்தஸ்து உங்களுக்கு வந்து விடும். பின்னர் இந்த யாதவர்கள் ஒன்றும் செய்து விட முடியாது." என்றாள்.

இவள் யோசனை சரியாகபடவே, உடனே ஸ்ரீ கிருஷ்ணரை பார்க்க சென்றான்.

"என் குழந்தை "சத்யபாமா"வை உங்களுக்கு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். ஏற்று கொள்ள வேண்டும்" என்றான்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சம்மதம் என்றார்.
உயர்ந்த குணமும், அழகும் உடையவளாக இருந்தாள் சத்யபாமா.

சத்யபாமாவை மணம் செய்து கொண்டார் ஸ்ரீ கிருஷ்ணன்.
சீதனமாக சத்ரார்ஜித் ஸ்யமந்தக மணியை கொடுக்க வர, "வேண்டாம். அது உன்னிடமே இருக்கட்டும். நீர் எனக்கு மாமனார் ஆகி போனதால், என்னிடம் இருந்தால் என்ன, உங்களிடம் இருந்தால் என்ன. நீரே வைத்துக்கொள்ளும்" என்று சொன்னார்.