Followers

Search Here...

Saturday 16 December 2023

தண்ணீரை பார்த்து இப்படி ஒரு அழகான பிரார்த்தனை... மந்திர ஸ்நானம்... சந்தியா வந்தனம்...

தண்ணீரை பார்த்து இப்படி ஒரு அழகான பிரார்த்தனை... மந்திர ஸ்நானம்.

அர்த்தம் தெரிந்து கொண்ட பிறகும், ஒருவன் செய்யாமல் இருக்க முடியுமா?

சந்தியா வந்தனம்...


சந்தியா வந்தனம், தமிழ் அர்த்தம்:

மதியம் (100 வயது வாழ) :
https://www.youtube.com/watch?v=xszkkP3vB-0

சந்தியா வந்தனம், தமிழ் அர்த்தம்:

மாலை (அகால மரணம் தவிர்க்க, நீண்ட காலம் வாழ :
https://www.youtube.com/watch?v=B2bhRr7EB4k

சந்தியா வந்தனம், தமிழ் அர்த்தம்:

காலை :
https://www.youtube.com/watch?v=-SDhzQlvfRU

Sandhya Vandanam:
English meaning:

Morning (to start day well):
https://www.youtube.com/watch?v=F9b31khruk4

Sandhya Vandanam:
English meaning:

Evening (to avoid accidental death at night) :
https://www.youtube.com/watch?v=iWyHeXyI8s0

Sandhya Vandanam:
English meaning:

Afternoon(to live 100yrs) :
https://www.youtube.com/watch?v=0SYdzobuSYE


Sunday 10 December 2023

சந்தியா வந்தனத்தில் மிக முக்கியமானது எது? காயத்ரீ மந்திர உபதேசம் பெற்று பூணூல் அணிந்து இருப்பவர்கள், கட்டாயம் செய்ய வேண்டியது எது?

சந்தியா வந்தனத்தில் மிக மிக முக்கியமானது எது? அர்க்ய ப்ரதானம், 

சந்தியா வந்தனத்தில் 4 முக்கியமாக சொல்லப்படுகிறது.

1. அர்க்ய ப்ரதானம் (சூரியனுக்கு ஏற்படும் விபரீத மாற்றங்கள் சரியாக, காயத்ரீ மந்திரம் ஜபித்து பிரார்த்தனை செய்து தெளிக்கப்படும் ஜலம்) 

2. காயத்ரீ ஆவாஹனம் (காயத்ரீ என்ற வேத மாதாவை (அம்மாவை) தன்னோடு ஆவாஹனம் கொண்டு, பிதாவை தியானிக்க தயாராவது)

3 காயத்ரீ ஜபம் (எந்த பரமாத்மா (அப்பா) உள்ளே இருப்பதால் என் புத்தி, புலன்கள் இயங்குகிறதோ, அந்த பரமாத்மாவை தியானிக்கிறேன் என்று காயத்ரீ என்ற மாதா காட்டியபடி தியானம்/ஜபம் செய்வது)

4 உபஸ்தானம். (மீண்டும் காயத்ரீ மாதாவை அவள் இருப்பிடத்திற்கு செல்ல அனுமதிப்பது)

இதில் மிகவும் முக்கியமான விஷயம் "அர்க்ய ப்ரதானம்" என்று ரிஷிகள் சொல்கிறார்கள்.

மந்தேஹா என்ற ராக்ஷஸ கூட்டம் தங்கள் மந்திர பலத்தால் சூரியனின் செயல்பாட்டை தடுக்கும் போது, சூரியனுக்கு ஏற்படும் மந்திர உபாதையை விரட்ட, காயத்ரீ உபதேசம் பெற்ற பூலோகவாசிகள், "காயத்ரீ ஜபித்த ஜலத்தால் சூரியன் இருக்கும் திசை நோக்கி வீசினர்". அந்த மந்திர ஜலம் வஜ்ரமாக இருந்து சூரியனின் கிரணங்களில் பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது. 


அர்க்ய ப்ரதானம் செய்பவனுக்கு, "அன்றைய நாள் நல்ல நாளாகவே அமையும்

அர்க்ய ப்ரதானம் செய்யாமல் இருப்பவனுக்கு, "மனக்குழப்பம் ஏற்படும்

என்பது ரிஷி வாக்கு.


காலையில் (நின்று கொண்டு) - 3 முறையும் (கிழக்கு பார்த்து கொஞ்சம் குனிந்து அர்க்யம் விட வேண்டும்)

பகலில் (நின்று கொண்டு) - 2 முறையும் (சூரியனை பொறுத்து கிழக்கு/வடக்கு பார்த்து நிமிர்ந்து அர்க்யம் விட வேண்டும்)

மாலையில் (அமர்ந்து கொண்டு) - 3 முறையும் (மேற்கு பார்த்து அர்க்யம் விட வேண்டும்)

காயத்ரீ சொல்லி, இரண்டு கைகளாலும் அர்க்ய ப்ரதானம் கொடுக்க வேண்டும்.

மாட்டின் கொம்பு உயரத்திற்கு இரு கைகளை உயர்த்தி, காயத்ரீயை சொல்லி 3 முறை ஜலத்தை வீசி விட வேண்டும். 

கட்டைவிரல் ஆள்காட்டி விரலோடு சேரகூடாது.

ஜலத்தை வீசும் பொழுது, கை விரல்களை விரித்து கொள்ள வேண்டும், எந்த வித முத்திரையும் கூடாது.

மாலையில் (அமர்ந்து கொண்டு) அர்க்யம் விடும் போது, பசு மாடு அமர்ந்து இருப்பதாக நினைத்து, அப்பொழுது அதன் கொம்பு எந்த அளவு இருக்குமோ அந்த அளவு கைகளை உயர்த்தி கொண்டு, 3 முறை காயத்ரீ சொல்லி அர்க்யம் கொடுக்க வேண்டும்.


தொடர்ந்து உட்கார்ந்து ப்ராணாயாம் செய்து, 

காலாதீத ப்ராயச்சித்தார்த்தம் அர்க்ய ப்ரதானம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து, பிறகு மீண்டும் 

காயத்ரீ சொல்லி ஒரு முறை "அர்க்ய ப்ரதானம்" செய்ய வேண்டும்.


கேள்விகள்:

குளத்தில் இருக்கும் போது சந்தியா காலம் வந்தால்?

ஆசமனம்:  ஒரு கால் தண்ணீரிலும், மற்றொரு கால் கரையில் வைத்து கொண்டு செய்ய வேண்டும்.

அர்க்ய பிரதானம்: இரண்டு கால்களும் தண்ணீரில் இருக்கும் படி நின்று கொண்டு, அர்க்யம் விட வேண்டும்.

வீட்டில் இருக்கும் போது, சந்தியா காலம் வந்தால்?

அர்க்ய பிரதானம்:  இரண்டு பாதங்களும் சேர்த்து வைத்து கொண்டு ஜலத்தை வீசும் பொழுது, குதி காலை உயர்த்தி கொண்டு வீச வேண்டும். 


ஜலம் இல்லாத இடத்தில் இருக்கும் போது, சந்தியா காலம் வந்தால்?

மண் எடுத்து செய்ய வேண்டும்...

கங்கா ஜலம் கையில் இருக்குமாறு நினைத்து கொண்டு, செய்ய வேண்டும்.


"அர்க்யம் கொடுக்காமல் இருக்காதே" என்று ரிஷி சொல்கிறார்கள்.

"காயத்ரீ உபதேசமும், பூணூலும் இருந்தால், அர்க்ய பிரதானம் கட்டாயம் செய்ய வேண்டும்" என்று ரிஷி சொல்கிறார்கள்


அர்க்ய பிரதானம் தரையில் நின்று தான் செய்ய வேண்டும். மாடியில் செய்ய கூடாது. சுத்தமான இடத்தில் செய்ய வேண்டும். மாடு அருகில் செய்ய கூடாது. மாடு இருந்த இடத்தில் செய்யலாம்.


அர்க்யம் விடும் போது, கை விரித்து ஜலத்தை வீச வேண்டும்.

அர்க்யம் விடும் போது, கட்டை விரல் ஆள் காட்டி விரலோடு சேர்த்து செய்தால், ரத்தத்தை தெளித்தது போல ஆகும். ஆதலால், கட்டை விரல் சேர கூடாது.


தர்ப்பை தண்ணீரை அம்ருதமாக்கும்.

அர்க்யம் விடும் போது, கைகளில் உள்ள ரேகைகளையே தர்ப்பை போல தியானித்து கொண்டு, ஜலத்தை விட வேண்டும்.

காயத்ரீ மந்திர உபதேசம் பெற்று பூணூல் அணிந்து இருப்பவர்கள், அர்க்ய பிரதானம் கட்டாயம் செய்ய வேண்டும்.

அர்க்ய பிரதானம் செய்யாமல் இருப்பவர்கள், மனம் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பார்கள்.

உலகில் ஒரு பிராம்மணன் கூட இல்லாமல், அர்க்யம் விடாத நிலை ஏற்பட்டால், சூரியனின் கதிர் வீச்சு பல பாதகங்களை உண்டாக்கும். 

Tuesday 28 November 2023

About women, Manu says…

Mahabharat war ended. bhishma was lying on arrow bed. Yudhistra arrives at the battle field and request his guidance on all Dharma (rule). 

While narrating all in detail, Bhishma said, when Swayambu manu, son of Brahma left to his abode, finally adviced all men as below..

स्त्रियः पुंसां परिददौ मनुर्जिगमिषुर्दिवम्।

अबलाः स्वल्पकौपीनाः सुहृद सत्यजिष्णवः।।

ईर्षवो मानकामाश्च चण्डाश्च सुहृदोऽबुधाः।

स्त्रियस्तु मानमर्हन्ति ता मानयत मानवाः।।

स्त्रीप्रत्ययो हि वै धर्मो रतिभोगाश्च केवलाः।

परिचर्या नमस्कारास्तदायत्ता भवन्तु वः।।

- Vyasa Mahabharat

(Anushasana parva)

Hey Men! Women are physically weaker than men. get emotional easily.have  good character. Conquerors of truth, envious, loves to be honoured.

Hey Men! Treat women with respect. Dharma itself depends on women. Lust also depends on women. All pujas and worship (namaskara) depend on women. Respect the woman who is the cause of all this.

उत्पादनमपत्यस्य जातस्य परिपालनम्।

प्रीत्यर्थं लोकयात्रायाः पश्यत स्त्रीनिबन्धनम्।।

सम्मान्यमानाश्चैता हि सर्वकार्याष्यवाप्स्यथ।

विदेहराजदुहिता चात्र श्लोकमगायत।।

नास्ति यज्ञः स्त्रियाः कश्चिन्न श्राद्धं नोप्रवासकम्।

धर्मः स्वभर्तृशुश्रूषा तया स्वर्गं जयन्त्युत।। 

- Vyasa Mahabharat

(Anushasana parva)

it is the woman who creates offspring in your family. It is the woman who nurtures and protects the offspring. Woman is the reason why worldly life seems blissful to you. If you treat them with dignity, you will reap all the benefits


Thursday 16 November 2023

பெண்ணை பற்றி மனு சொன்ன விஷயம் என்ன? தெரிந்து கொள்வோம்

அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மர், ஸ்வாயம்பு மனு ப்ரம்ம லோகம் செல்லும் முன்னர் கடைசியாக சொன்ன வார்த்தையை யுதிஷ்டிரனிடம் சொல்கிறார்.

स्त्रियः पुंसां परिददौ मनुर्जिगमिषुर्दिवम्।

अबलाः स्वल्पकौपीनाः सुहृद सत्यजिष्णवः।।

ईर्षवो मानकामाश्च चण्डाश्च सुहृदोऽबुधाः।

स्त्रियस्तु मानमर्हन्ति ता मानयत मानवाः।।

स्त्रीप्रत्ययो हि वै धर्मो रतिभोगाश्च केवलाः।

परिचर्या नमस्कारास्तदायत्ता भवन्तु वः।।

- வியாச மஹாபாரதம்

(அனுஸாஷன பர்வம்)

மனு தன்னுடைய உலகத்துக்கு செல்லும் முன் இவ்வாறு சொன்னார்.

"மனிதர்களே! பெண்கள் ஆண்களை விட உடல் பலம் குறைந்தவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்கள். நல்ல குணம் கொண்டவர்கள். சத்யத்தை ஜெயிப்பவர்கள், பொறாமையும் கொண்டவர்கள், கௌரவத்தை விரும்புபவர்கள், 

மனிதர்களே! பெண்களை கௌரவமாக நடத்துங்கள். தர்மமே பெண்ணை நம்பி தான் இருக்கிறது. காமமும் பெண்ணை நம்பியே இருக்கிறது. அனைத்து பூஜைகளும், வழிபாடும் (நமஸ்காரமும்)  பெண்ணை நம்பியே இருக்கிறது. இவை அனைத்துக்கும் காரணமாக இருக்கும் பெண்ணை மதியுங்கள்.

उत्पादनमपत्यस्य जातस्य परिपालनम्।

प्रीत्यर्थं लोकयात्रायाः पश्यत स्त्रीनिबन्धनम्।।

सम्मान्यमानाश्चैता हि सर्वकार्याष्यवाप्स्यथ।

विदेहराजदुहिता चात्र श्लोकमगायत।।

नास्ति यज्ञः स्त्रियाः कश्चिन्न श्राद्धं नोप्रवासकम्।

धर्मः स्वभर्तृशुश्रूषा तया स्वर्गं जयन्त्युत।। 

- வியாச மஹாபாரதம்

(அனுஸாஷன பர்வம்)

உன் குடும்பத்தில் சந்ததி உருவாக்கி கொடுப்பதும் பெண்ணே. அந்த சந்ததியை வளர்த்து காப்பதும் பெண்ணே. உலக வாழ்க்கை உங்களுக்கு ஆனந்தமாக தெரிவதற்கு காரணமே பெண் தான் என்று பாருங்கள். அவர்களை நீங்கள் கௌரவத்தோடு நடத்தினால், எல்லா பலனையும் பெறுவீர்கள்" என்று சொல்லி, புருஷர்களிடம் பெண்களை தகப்பன் போல கொடுத்து விட்டு, சொர்க்க லோகம் சென்றார் மனு. 

Sunday 29 October 2023

மனு ஸ்மிருதி அறிவோம் - பாகம் 10

மனு ஸ்மிருதி அறிவோம் - பாகம் 10

अधीयीरंस्त्रयो वर्णाः स्वकर्मस्था द्विजातयः ।
प्रब्रूयाद् ब्राह्मणस्त्वेषां नेतराविति निश्चयः ॥ 
- மனு ஸ்மிருதி
இரு பிறப்பாளன் (பிராம்மணன், க்ஷத்ரியன், வைசியன்), வேதம் கற்ற பிறகு, தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய்ய வேண்டும். பிராம்மணன் மட்டும், வேதம் கற்று கொண்ட பிறகு, இரு பிறப்பாளனுக்கு வேதம் சொல்லி தர வேண்டும். மற்றவர்கள் அவரவர்கள் கடமைகளை செய்ய வேண்டும்.

सर्वेषां ब्राह्मणो विद्याद् वृत्त्युपायान् यथाविधि ।
प्रब्रूयादितरेभ्यश्च स्वयं चैव तथा भवेत् ॥
- மனு ஸ்மிருதி
பிராம்மணன் அனைவருக்கும் அவரவர் திறனுக்கு ஏற்ற தொழில் வாழ்வாதாரத்தை அறிந்து சொல்லி தர வேண்டும்; அதே போல, தனக்கு என்று விதிக்கப்பட்ட கடமைகளை செய்து கொண்டிருக்க வேண்டும்.

वैशेष्यात् प्रकृतिश्रैष्ठ्यान् नियमस्य च धारणात् ।
संस्कारस्य विशेषाच्च वर्णानां ब्राह्मणः प्रभुः ॥
- மனு ஸ்மிருதி
கடுமையான கட்டுப்பாடு கொண்ட தவ வாழ்க்கை மற்றும் இயற்கையான குணத்தாலும், 4 வர்ணத்தில் (குணத்தில்), பிராம்மணனே பெரிதும் உயர்ந்து காணப்படுகிறான். 

ब्राह्मणः क्षत्रियो वैश्यस्त्रयो वर्णा द्विजातयः ।
चतुर्थ एक जातिस्तु शूद्रो नास्ति तु पञ्चमः ॥
- மனு ஸ்மிருதி
க்ஷத்ரியனும் (police, army/Judge), வைஸ்யனும் (businessmen), ப்ராம்மணனும் (விப்ரன் என்ற அந்தணன், today also MP/MLA)  இரு பிறப்பாளன் (த்விஜர்கள்) என்று அறியப்படுகின்ற்னர். நான்காவது வர்ணம் "சூத்ர" என்று அறியப்படுகின்றனர். இந்த நான்கை தவிர ஐந்தாவது (பஞ்சமன்) என்று ஒன்று கிடையாது.

सर्ववर्णेषु तुल्यासु पत्नीष्वक्षतयोनिषु ।
आनुलोम्येन सम्भूता जात्या ज्ञेयास्त एव ते ॥
- மனு ஸ்மிருதி
இந்த நான்கு வர்ணத்தில் (குணத்தில்) இருப்பவர்கள், அவரவர்களுக்குள் (ஒரே குணம்) திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதனால், குண கலப்படம் ஏற்படாமல் மனிதர்களின் குணம் தெளிவாக இருக்கும். வர்ண (குணம்) கலப்பு நேர்ந்தால், பிறக்கும் பிள்ளைகளின் குணம் கலந்து இருக்கும். கலப்புக்கு ஏற்ப அவர்களுக்கு பெயர்கள் உண்டு.

स्त्रीष्वनन्तरजातासु द्विजैरुत्पादितान् सुतान् ।
सदृशानेव तानाहुर्मातृदोषविगर्हितान् ॥
- மனு ஸ்மிருதி
இரு பிறப்பாளன் (பிராம்மணன், க்ஷத்ரியன், வைசியன்), தனக்கு அடுத்து உள்ள வர்ணத்தில் (குணத்தில்) உள்ள பெண்ணை மணந்தால், பிறக்கும் பிள்ளைகள் தன் வர்ணத்தில்  (குணத்தில்) இருந்தாலும், தாய் வேறு வர்ணத்தில் (குணத்தில்) இருப்பதால், அந்த வர்ண (குண) கலப்பு தோஷத்தை பெற்று இருப்பார்கள்.

अनन्तरासु जातानां विधिरेष सनातनः ।
द्व्येकान्तरासु जातानां धर्म्यं विद्यादिमं विधिम् ॥
- மனு ஸ்மிருதி
இரு பிறப்பாளர்கள் (பிராம்மணன், க்ஷத்ரியன், வைசியன்), தனக்கு உடனே அடுத்து உள்ள வர்ணத்தில் (குணத்தில்) உள்ள பெண்ணை மணந்தால் தான், பிள்ளை தாயின் வர்ண (குணம்) கலப்பு இருந்தாலும், தன் வர்ணத்திலேயே இருப்பான். இரு பிறப்பாளன், ஒரு வர்ணம் தாண்டி இருக்கும் பெண்ணை மணந்தால் அதே வர்ணத்தில் அவன் பிள்ளைகள் இருக்காது. அப்படிப்பட்ட பிள்ளைகளின் அடையாள பெயரை சொல்கிறேன், கேளுங்கள்.

ब्राह्मणाद् वैश्यकन्यायामम्बष्ठो नाम जायते ।
निषादः शूद्रकन्यायां यः पारशव उच्यते ॥
- மனு ஸ்மிருதி
தானே தொழில் செய்து பணம் சம்பாதிக்க ஆர்வமுள்ள பெண்ணை (business mindset / vaisya), ஒரு வர்ணம் தாண்டி, உலக ஆசைகள் இல்லாத ஒரு பிராம்மணன் (vedic scholar who meditates supreme creator) மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் "அம்பஷ்டன்" என்று அறியப்படுகிறார்கள்.
தான் கற்றதை கொண்டு பிறருக்கு வேலை செய்து, அதில் பணம் சம்பாதிக்க ஆர்வமுள்ள பெண்ணை (employee mindset / sudra), உலக ஆசைகள் இல்லாத ஒரு பிராம்மணன் (vedic scholar who meditates supreme creator) மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் "நிஷாதன்" என்று அறியப்படுகிறார்கள். "பாரஷவன்" என்றும் அறியப்படுகிறார்கள். 
(இந்த வகை வர்ண கலப்பு தவிர்க்க வேண்டியது என்றாலும், ஏற்கப்படுகிறது, அனுலோமோ திருமணம். வர்ண கலப்பினால் ஜாதி/சமுதாயம் (அம்பஷ்டன், நிஷாதன்) உண்டாகிறது).

क्षत्रियात् शूद्रकन्यायां क्रूर आचार विहारवान् ।
क्षत्रशूद्रवपुर्जन्तु: उग्रो नाम प्रजायते ॥
- மனு ஸ்மிருதி
பிறருக்கு வேலை செய்து பணம் சம்பாதிக்க ஆர்வமுள்ள பெண்ணை (employee mindset / sudra), கோபமும் போரிடும் குணமும் கொண்ட ஒரு க்ஷத்ரியன் (army, police) மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் "உக்ரன்" என்று அறியப்படுகிறார்கள்.
இந்த பிள்ளைகளுக்கு இரண்டிலும் ஆசை இருக்கும், இரண்டிலும் (க்ஷத்ரிய குணமான கோபமும், வேலை செய்வதில் ஆர்வமும்) அரைகுறையாக இருப்பார்கள்.
(இந்த வகை வர்ண கலப்பு தவிர்க்க வேண்டியது என்றாலும், ஏற்கப்படுகிறது, அனுலோமோ திருமணம். வர்ண கலப்பினால் ஜாதி/சமுதாயம் (உக்ர) உண்டாகிறது). 

विप्रस्य त्रिषु वर्णेषु नृपतेर्वर्णयोर्द्वयोः ।
वैश्यस्य वर्णे चैकस्मिन् षडेतेऽपसदाः स्मृताः ॥
- மனு ஸ்மிருதி
உலக ஆசைகள் விட்ட விப்ரன் (அந்தணன்/வேதியன்), மற்ற மூன்று வர்ணத்தில் (குணத்தில்) இருக்கும் பெண்ணை மணந்து, பெற்று கொள்ளும் பிள்ளையின் குணம்,
க்ஷத்ரியன், அவனுக்கு கீழ் உள்ள 2 வர்ணத்தில் (குணத்தில்) இருக்கும் பெண்ணை மணந்து, பெற்று கொள்ளும் பிள்ளையின் குணம்,
வைசியன் அவனுக்கு கீழ் உள்ள 1 வர்ணத்தில் (குணத்தில்) இருக்கும் பெண்ணை மணந்து, பெற்று கொள்ளும் பிள்ளையின் குணம், தன் வர்ணத்திலேயே (குணத்திலேயே) உள்ள பெண்ணை மணந்து பெறும் பிள்ளையின் குணத்தை போல தெளிவாக இல்லாமல் இருக்கும். ஆதலால், வர்ண கலப்பில் பிறக்கும் பிள்ளை, குண (வர்ண) அடிப்படையில் குறைவே.

क्षत्रियाद् विप्रकन्यायां सूतो भवति जातितः ।
वैश्यान् मागधवैदेहौ राजविप्राङ्गनासुतौ ॥ 
- மனு ஸ்மிருதி
பரமாத்மாவிடமே கொண்ட, தெய்வ பக்தியே லட்சணமாக இருக்கும் பெண்ணை (brahmana mindset), கோபமும் போரிடும் குணமும் கொண்ட ஒரு க்ஷத்ரியன் (army, police) மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் "சூதர்கள்" என்று அறியப்படுகிறார்கள்.
கோபமும் போரிடும் குணமும் கொண்ட  பெண்ணை (kshatriya mindset), ஒரு வியாபாரி (businessmen, வைசியன்) மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் "மாகதர்கள்" என்று அறியப்படுகிறார்கள்.
உலக ஆசைகள் விட்ட, தெய்வ பக்தியே லட்சணமாக இருக்கும் பெண்ணை (brahmana mindset), ஒரு வியாபாரி (businessmen, வைசியன்) மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் "வைதேஹர்கள்" என்று அறியப்படுகிறார்கள். 
(இந்த வகை வர்ண கலப்பு ஆபத்தானது, பிரதிலோமோ திருமணம். வர்ண கலப்பினால் ஜாதி/சமுதாயம் (சூத, மகத, வைதேஹ) உண்டாகிறது). 

शूद्राद् अयोगवः क्षत्ता चण्डालश्चाधमो नृणाम् ।
वैश्यराजन्यविप्रासु जायन्ते वर्णसङ्कराः ॥ 
- மனு ஸ்மிருதி
தானே தொழில் செய்து பணம் சம்பாதிக்க ஆர்வமுள்ள பெண்ணை (business mindset / vaisya), பிறருக்கு வேலை செய்து பணம் சேர்க்க ஆர்வமுள்ள ஒருவன் (employee mindset / sudra) மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் "அயோகவான்" என்று அறியப்படுகிறார்கள்.
கோபமும் போரிடும் குணமும் கொண்ட பெண்ணை (kshatriya mindset), பிறருக்கு வேலை செய்து பணம் சேர்க்க ஆர்வமுள்ள ஒருவன் (employee mindset / sudra) மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் "க்ஷத்தர்கள்" என்று அறியப்படுகிறார்கள்.
தெய்வ பக்தியே லட்சணமாக இருக்கும் பெண்ணை (brahmana mindset), பிறருக்கு வேலை செய்து பணம் சேர்க்க ஆர்வமுள்ள ஒருவன் (employee mindset / sudra) மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் "சண்டாளன்" என்று அறியப்படுகிறார்கள்.
(இந்த வகை வர்ண கலப்பு ஆபத்தானது, பிரதிலோமோ திருமணம். வர்ண கலப்பினால் ஜாதி/சமுதாயம் (அயோக, க்ஷத்த, சண்டாள) உண்டாகிறது). 

एकान्तरे त्व अनुलोम्याद् अम्बष्ठ: उग्रौ यथा स्मृतौ ।
क्षत्तृ वैदेहकौ तद्वत् प्रातिलोम्ये अपि जन्मनि ॥
- மனு ஸ்மிருதி
வர்ண கலப்பினால் பிறந்த அம்பஷ்டன், உக்ரன் போன்றோர் வேதம் ஏற்கும் அனுலோமா மணத்தால் பிறந்தவர்கள். அதற்கு நேர்மாறாக பிறந்த க்ஷத்தன், வைதேஹ்யன் போன்றோர் ஏற்கபடாத பிரதிலோமா மணத்தால் பிறந்தவர்கள்.

पुत्रा ये अनन्तरस्त्रीजाः क्रमेणोक्ता द्विजन्मनाम् ।
ताननन्तरनाम्नस्तु मातृदोषात् प्रचक्षते ॥ 
- மனு ஸ்மிருதி
இரு பிறப்பாளன் (பிராம்மணன், க்ஷத்ரியன், வைசியன்), தன்  குணத்துக்கு (வர்ணம்) கீழ் உள்ள குணத்தை (வர்ணம்) பெற்றுள்ள பெண்ணை மணந்து, பெற்று கொள்ளும் பிள்ளைக்கு, தாயின் குணமும் (வர்ணம்) சேர்வதால், அந்த பிள்ளையின் பெயர் மற்றும் சம்ஸ்காரங்கள் தாய் வர்ணபடியே செய்ய வேண்டும்.

ब्राह्मणाद् उग्र-कन्यायाम् आवृतो नाम जायते ।
आभीरो अम्बष्ठ-कन्यायाम् आयोगव्यां तु धिग्वणः ॥
- மனு ஸ்மிருதி
உக்ர வம்சத்தில் பிறந்த பெண்ணை (kshatriya+sudra mindset), வேதம் ஓதிக்கொண்டு, உலக ஆசைகள் இல்லாமல், தெய்வ பக்தியே லட்சணமாக இருக்கும் ஒருவன் (பிராம்மணன்) மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் "ஆவ்ருதன்" (kshatriya+sudra+Brahmana mindset), என்று அறியப்படுகிறார்கள்.
அம்பஷ்ட வம்சத்தில் பிறந்த பெண்ணை (business+brahmana mindset), உலக ஆசைகள் இல்லாமல், வேதம் ஓதிக்கொண்டு, தெய்வ பக்தியே லட்சணமாக இருக்கும் ஒருவன் (பிராம்மணன்) மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் "ஆபீரன்" (business+Brahmana+Brahmana mindset), என்று அறியப்படுகிறார்கள்.
ஆயோகவன் வம்சத்தில் பிறந்த பெண்ணை (business+employee mindset), உலக ஆசைகள் இல்லாமல், வேதம் ஓதிக்கொண்டு, தெய்வ பக்தியே லட்சணமாக இருக்கும் ஒருவன் (பிராம்மணன்) மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் "திக்வனன்" (business+employee+Brahmana mindset), என்று அறியப்படுகிறார்கள்.
(வர்ண கலப்பினால் ஜாதி/சமுதாயம் (ஆவ்ருத, ஆபீர, திக்வன) உண்டாகிறது)

आयोगवश्च क्षत्ता च चण्डालश्चाधमो नृणाम् ।
प्रातिलोम्येन जायन्ते शूद्रादपसदास्त्रयः ॥
- மனு ஸ்மிருதி
பிராம்மண/க்ஷத்ரிய/வைஸ்ய பெண்கள், பிறருக்கு வேலை செய்து பணம் சேர்க்கும் ஒருவனை (sudra/employee) மணந்து, பெற்று கொண்ட பிள்ளைகள் சண்டாளன், க்ஷத்தன், ஆயோகவான் என்று முறையாக அழைக்கப்படுகின்றனர். இது ப்ரதிலோமாவாகும் (கூடாத வர்ண கலப்பாகும்). இதில், பிராம்மண பெண் பெற்ற சண்டாளனே மிகவும் குணத்தில் தாழ்ந்தவனாக கருதப்பட வேண்டியவர்கள். இப்படி வர்ண (குணம்) கலப்பால் பிறந்தவர்களில் ஆயோகவான், க்ஷத்தனை விட குணத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். க்ஷத்தன் சண்டாளனை விட குணத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். 

वैश्यान् मागधवैदेहौ क्षत्रियात् सूत एव तु ।
प्रतीपमेते जायन्ते परेऽप्यपसदास्त्रयः ॥ 
- மனு ஸ்மிருதி
பிராம்மண/க்ஷத்ரிய பெண்கள், சுயமாக வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்கும் ஒருவனை (businessmen/employer) மணந்து, பெற்று கொண்ட பிள்ளைகள் வைதேஹர்கள், மாகதர்கள் என்று முறையாக அழைக்கப்படுகின்றனர். 
பிராம்மண பெண்கள், கோபமும் போரிடும் குணமும் கொண்ட ஒருவனை (kshatriya mindset) மணந்து, பெற்று கொண்ட பிள்ளைகள் சூதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். 
இது ப்ரதிலோமாவாகும் (கூடாத வர்ண கலப்பாகும்). இதில் பிராம்மண பெண் பெற்ற வைதேஹர்கள், சூதர்கள் மிகவும் குணத்தில் தாழ்ந்தவனாக கருதப்பட வேண்டியவர்கள். இப்படி வர்ண (குணம்) கலப்பால் பிறந்தவர்கள் குணத்தில் தாழ்ந்தவனாக இருப்பார்கள். 

जातो निषादात्शूद्रायां जात्या भवति पुक्कसः ।
शूद्राज् जातो निषाद्यां तु स वै कुक्कुटकः स्मृतः ॥
- மனு ஸ்மிருதி
பிறருக்கு வேலை செய்து பணம் சம்பாதிக்க விரும்பும் பெண்ணை (employee/ sudra mindset)  நிஷாத வம்சத்தில் பிறந்த ஒருவன் (employee+brahmin mindset) மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் "புக்கசர்கள்" (business+employee+Brahmin mindset), என்று அறியப்படுகிறார்கள்.
நிஷாத வம்சத்தில் பிறந்த பெண்ணை (brahmin+employee mindset), பிறருக்கு வேலை செய்து பணம் சம்பாதிக்க விரும்பும் ஒருவன் (employee/ sudra mindset) மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் "குக்குடகர்கள்" (brahmin+employee+Brahmin mindset), என்று அறியப்படுகிறார்கள்.
(வர்ண கலப்பினால் ஜாதி/சமுதாயம் (புக்கச, குக்குடக) உண்டாகிறது)

क्षत्तुर्जात: तथ उग्रायां श्वपाक इति कीर्त्यते ।
वैदेहकेन त्व अम्बष्ठ्यामुत्पन्नो वेण उच्यते ॥ 
- மனு ஸ்மிருதி
உக்ர வம்சத்தில் பிறந்த பெண்ணை, க்ஷத்த வம்சத்தில் வந்த ஒருவன் மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் "ஸ்வபாகர்கள்", என்று அறியப்படுகிறார்கள்.
அம்பஷ்ட  வம்சத்தில் பிறந்த பெண்ணை, வைதேஹ வம்சத்தில் வந்த ஒருவன் மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் "வேனர்கள்", என்று அறியப்படுகிறார்கள். (இவர்களுக்கு காயத்ரீ உபதேசம் கூடாது)
(வர்ண கலப்பினால் ஜாதி/சமுதாயம் (ஸ்வபாக, வேன) உண்டாகிறது)

वक्ष्ये सङ्करजाति  आदि गृहस्थाथि विधिं परं
विप्रान् मूर्धावषिक्तो हि क्षत्रियायां विश: स्त्रियां
- கருட புராணம்
விப்ரன் என்ற அந்தணன் என்ற வேதியன், க்ஷத்ரிய பெண்ணை மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் "மூர்தாவஷிக்தர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.

शूद्रायां करणो  वैश्याद्विन्नास्वेष विधि: स्मृतः 
ब्राह्मण्यं क्षत्रियात्  सूतो वैश्याद् वैदेहकस्तथा 
- கருட புராணம்
வைசியன் (employer), சூத்திர (employee) பெண்ணை மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் "கரணன் " என்று அழைக்கப்படுகிறார்கள். 
க்ஷத்ரியன் (army, police,judge), ப்ராஹ்மண (Vedic scholar, MLA, MP,Advocate) பெண்ணை மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் "சூதன்" என்று அழைக்கப்படுகிறார்கள். 
வைசியன் (employer), ப்ராஹ்மண (Vedic scholar, MLA, MP,Advocate) பெண்ணை மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் "வைதேஹன்" என்று அழைக்கப்படுகிறார்கள். 

द्विजातयः सवर्णासु जनयन्त्यव्रतांस्तु यान् ।
तान् सावित्रीपरिभ्रष्टान् व्रात्यान् इति विनिर्दिशेत् ॥
- மனு ஸ்மிருதி
இரு பிறப்பாளன் (வைசியன், க்ஷத்ரியன், பிராம்மணன்) தன் வர்ணத்திலேயே உள்ள பெண்ணை மணந்தும், தனக்கு விதிக்கப்பட்ட கடமையை செய்யாமல் இருந்தால்,  'வ்ராத்யன்' என்று அறியப்படுகிறான். கடமையை செய்யாத இவர்களுக்கு "காயத்ரீ" மந்திரம் கிடையாது. (இதனால் வர்ண குறைபாடுள்ள ஜாதி/சமுதாயம் (வ்ராத்ய) உண்டாகிறது)

व्रात्यात् तु जायते विप्रात् पापात्मा भूर्जकण्टकः ।
आवन्त्य वाटधानौ च पुष्पधः शैख एव च ॥
- மனு ஸ்மிருதி
அந்தணன் என்ற வேதியன் (விப்ரன்) குடும்பத்தில் பிறந்து வேதியனாக இல்லாமல் இருக்கும் வ்ராத்யனின் பிள்ளைகளுக்கு "பூர்ஜ-கண்டகர்கள்" என்று பெயர். இவர்கள் பாபாத்மாக்கள். இவர்கள் "ஆவந்த்யர்கள்" என்றும், "வாடதானர்கள்" என்றும், "புஷ்பதர்கள்" என்றும், "ஸைகர்கள்" என்றும் பலவாறு அழைக்கப்படுவார்கள்
(வர்ண குறைபாட்டினாலும் ஜாதி/சமுதாயம் (பூர்ஜ-கண்டக, ஆவந்த்ய, வாடதான, புஷ்பதர, சைகர) உண்டாகிறது)

झल्लो मल्लश्च राजन्याद् व्रात्यात्निच्छिविरेव च ।
नटश्च करणश्चैव खसो द्रविड एव च ॥ 
- மனு ஸ்மிருதி
கோபமும், போரிடும் குணமும் கொண்ட க்ஷத்ரிய குடும்பத்தில் பிறந்தும் க்ஷத்ரிய தர்மத்தில் இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு  "வ்ராத்யன்" என்று பெயர். 
அப்படிப்பட்ட வ்ராத்யனுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு "ஜல்லர்கள்" என்று பெயர். இவர்கள் "மல்லர்கள்" என்றும், இவர்கள் "நிச்சிவிர்கள்" என்றும், "நடர்கள்" என்றும், "கரணர்கள்" என்றும், "கஸர்கள்" என்றும், "திராவிடர்கள்" என்றும் பலவாறு அழைக்கப்படுவார்கள்.
(வர்ண குறைபாட்டினாலும் ஜாதி/சமுதாயம் (ஜல்ல, மல்ல, நிச்சிவிர, கரண, கஸர, திராவிட) உண்டாகிறது)

वैश्यात् तु जायते व्रात्यात् सुधन्वाऽचार्य एव च ।
कारुषश्च विजन्मा च मैत्रः सात्वत एव च ॥
- மனு ஸ்மிருதி
வைசிய குடும்பத்தில் பிறந்தும் வியாபார குணம் இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு  "வ்ராத்யன்" என்று பெயர். 
அப்படிப்பட்ட வ்ராத்யனுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு "சூதன்வா" என்று பெயர். இவர்கள் "அசார்யர்கள்" என்றும், இவர்கள் "காருஷர்கள்" என்றும், "விஜன்மார்கள்" என்றும், "மைத்ரர்கள்" என்றும், "ஸாத்வதர்கள்" என்றும், பலவாறு அழைக்கப்படுவார்கள்.
(வர்ண குறைபாட்டினாலும் ஜாதி/சமுதாயம் (வ்ராத்ய) உண்டாகிறது)

व्यभिचारेण वर्णानामवेद्यावेदनेन च ।
स्वकर्मणां च त्यागेन जायन्ते वर्णसङ्कराः ॥
- மனு ஸ்மிருதி
வேதத்தை அறியாமல் இருப்பதாலும், தன் கடமைகளை அறியாமல் இருப்பதாலும், வர்ண கலப்பு ஏற்பட்டு விடும். இவர்களால், பிறக்கும் சந்ததிகள் ஒரு சமயத்தில் 'தான் எந்த ஆசாரத்தை பின்பற்ற வேண்டும்?' என்று அறிய முடியாமல், தனக்கு விதிக்கப்பட்ட ஆசாரத்தை விட்டு விலகி நிற்பார்கள். 

सङ्कीर्णयोनयो ये तु प्रतिलोमानुलोमजाः ।
अन्योन्य व्यतिषक्ताश्च तान् प्रवक्ष्याम्यशेषतः ॥
- மனு ஸ்மிருதி
இவ்வாறு அனுலோமா முறைப்படி மணம் செய்து கொண்டவர்களும், பிரதிலோமா முறைப்படி மணம் செய்து கொண்டவர்களும், மேலும் கலக்கும் போது ஏற்படும் புது புது வம்சங்களை பற்றி சொல்கிறேன், கேளுங்கள்

सूतो वैदेहकश्चैव चण्डालश्च नराधमः ।
मागधः क्षत्रजातिश्च च तथाऽयोगव एव ॥
एते षट् सदृशान् वर्णाञ्जनयन्ति स्वयोनिषु ।
मातृजात्यां प्रसूयन्ते प्रवारासु च योनिषु ॥ 
- மனு ஸ்மிருதி
சூதர்கள், வைதேஹர்கள், சண்டாளன் போன்ற அதம பிள்ளைகளும், மாகதர்கள், க்ஷத்தன், ஆயோகவான் போன்ற பிள்ளைகளும் சேர்த்து மொத்தம் 6 ஜாதிகள்/சமுதாயம், வர்ண (குண) கலப்பினால் உருவாகின்றன. 
இந்த ஏற்கப்படாத வர்ண கலப்பில் பிறந்த இந்த ஆறு ஜாதியில்/சமுதாயத்தில் உள்ளவர்கள், தங்களுக்குள் கலப்புமணம் செய்து கொண்டால், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளை தாயின் ஜாதியையே/சமுதாயத்தையே அடைவார்கள்.

यथा त्रयाणां वर्णानां द्वयोरात्माऽस्य जायते ।
आनन्तर्यात् स्वयोन्यां तु तथा बाह्येष्वपि क्रमात् ॥
- மனு ஸ்மிருதி
மூன்று வர்ணத்தில் (பிராம்மண, க்ஷத்ரிய, வைஸ்ய) இருக்கும் ஒவ்வொரு ஆண், தன்னுடைய வர்ணத்திலோ, தனக்கு அடுத்து உள்ள கீழ் உள்ள வர்ணத்து பெண்ணையோ மணந்து பிள்ளை பெற்றாலும், அவர்களுக்கு தன் வர்ணப்படி சம்ஸ்காரங்கள் செய்ய அனுமதி உண்டு. அதற்கு கீழும் சென்று பெண்ணை மணந்து கொள்பவன், தன் பிள்ளைக்கு தன் வர்ணப்படி செய்ய கூடாது.
உதாரணத்திற்கு, உலக ஆசைகள் இல்லாத பிராம்மணன் அதிகபட்சம் க்ஷத்ரிய பெண்ணை மணக்கலாம். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு ப்ராம்மணனுக்கு உரிய சம்ஸ்காரங்களை சொல்லி தரலாம். அதற்கும் கீழ் சென்று வைஸ்ய பெண்ணை மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு படிப்படிப்பாக பிராம்மண சம்ஸ்காரங்கள் குறைந்து விடும்.

ते चापि बाह्यान् सुबहूंस्ततो अपि अधिक-दूषितान् ।
परस्परस्य दारेषु जनयन्ति विगर्हितान् ॥
- மனு ஸ்மிருதி
வர்ண (குணம்) கலப்பினால் ஏற்பட்ட புது ஜாதிகள், மேலும் மேலும் கலக்கும் போது, அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் மிகவும் தூஷிக்கத்தக்க குணத்தோடு (பொறாமை, அசூயை, பேராசை) பிறப்பார்கள்.

सजातिजा अनन्तरजा: षट् सुता द्विज धर्मिन: |
शूद्राणां तु स्वर्माण: सर्वे अपध्-वंसजा स्मृता: ||
தன் வர்ணத்திலேயே இருக்கும் பெண்ணை மணந்து பிறந்த பிள்ளைகள், அனுமதிக்கப்பட்ட வர்ண கலப்பினால் பிறந்த 6 வகை பிள்ளைகள், த்விஜர்களாக (பூணூல் மற்றும் வேதம்) இருக்கலாம். அனுமதிக்கப்படாத வர்ண கலப்பினால் பிறந்த மற்றவர்களுக்கு சூத்திர தர்மத்தில் இருக்க வேண்டும். 

यथैव शूद्रो ब्राह्मण्यां बाह्यं जन्तुं प्रसूयते ।
तथा बाह्यतरं बाह्यश्चातुर्वर्ण्ये प्रसूयते ॥ 
- மனு ஸ்மிருதி
வேலைக்கு சென்று சம்பாதிக்க விரும்பும் ஒருவன் (sudra/employee) உலக ஆசைகள் இல்லாத பிராம்மண பெண்ணை மணந்து சண்டாள ஜாதியை உருவாக்குகிறான். இந்த சண்டாளன், நான்கு வர்ணத்தில் (பிராம்மண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்திர) உள்ள பெண்ணை மணக்கும் போது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மேலும் குண கலப்படம் ஏற்பட்ட பல கீழ் ஜாதிகளை உருவாக்குகிறான்.

प्रतिकूलं वर्तमाना बाह्या बाह्यतरान् पुनः ।
हीना हीनान् प्रसूयन्ते वर्णान् पञ्चदशैव तु ॥
- மனு ஸ்மிருதி
பிரதிகூலமாக உருவான 6 ஜாதிகள் (சூத, மாகத, வைதேஹ, ஆயோகவா, க்ஷத்த, சண்டாள போன்றவை முறையே கீழ் ஜாதிகள்). வர்ண கலப்பினால் உருவான 6 ஜாதிகள், மேலும் தங்களுக்குள் கலக்கும் போது, மேலும் 15 புது வர்ண (குண) கலப்புடைய கீழ் ஜாதிகளை உருவாக்கிவிடுகிறது. 

प्रसाधन: उपचारज्ञम् अदासं दासजीवनम् ।
सैरिन्ध्रं वागु: आवृत्तिं सूते दस्यु: अयोगवे ॥
- மனு ஸ்மிருதி
4 வர்ண கலப்பினால் உருவான ஜாதிகளில் (6+6), பிறந்தவர்கள்  மிலேச்ச பாஷையோ  (வெளி மொழி), ஆர்ய (உயர்ந்த) பாஷையோ பேசலாம். இவர்கள் அனைவரும் "தஸ்யு" என்று பொதுவாக அழைக்கப்படுவார்கள். ஒரு ஆவ்ருதன், அயோகவ ஜாதியில் உள்ள பெண்ணை மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை "ஸைரிந்த்ரன்" என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த  ஸைரிந்த்ரர்கள் வேலை செய்து தான் பணம் சம்பாதிக்க வேண்டிய (employee) விதி இல்லாவிட்டாலும், பிறருக்கு உதவிகள் தானே முன்வந்து வேலை செய்து பிழைப்பு நடத்தலாம்.

मैत्रेयकं तु वैदेहो माधूकं सम्प्रसूयते ।
नॄन् प्रशंसत्यजस्रं यो घण्टाताडोऽरुणोदये ॥ 
- மனு ஸ்மிருதி
வைதேஹ ஜாதியில் பிறந்த ஒருவன், அயோகவ ஜாதியில் உள்ள பெண்ணை மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை "மைத்ரேயகன்" என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த மைத்ரேயர்கள் மதுரமாக பேசுபவர்களாக இருப்பார்கள், செய்தி சம்பந்தமான வேலைகள் செய்ய ஏற்றவர்களாக இருப்பார்கள்.

निषादो मार्गवं सूते दासं नौकर्मजीविनम् ।
कैवर्तमिति यं प्राहुरार्यावर्तनिवासिनः ॥ 
- மனு ஸ்மிருதி
நிஷாத ஜாதியில் உள்ள ஒருவன், அயோகவான் ஜாதி பெண்ணை மணந்தால், அவர்களின் பிள்ளை "மார்கவன்" என்றும் "தாஸன்" என்று அறியப்படுவார்கள். இவர்கள் படகுகள் சம்பந்தமான வேலைகள் செய்து ஜீவிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆர்யவர்தத்தில் இவர்கள் "கைவர்தர்கள்| என்றும் அழைக்கப்படுகிறார்கள்

मृतवस्त्रभृत्स्वनारीषु गर्हितान्नाशनासु च ।
भवन्त्यायोगवीष्वेते जातिहीनाः पृथक् त्रयः ॥ 
- மனு ஸ்மிருதி
ஸைரிந்த்ரன், மைத்ரேயகன், மார்கவன் என்ற மூவருமே, ஆயோகவான் ஜாதி பெண் மூலம் பிள்ளைகளாக வந்தவர்கள்.  இவர்கள் இறந்தவன், இறக்க போகிறவன் ஆடைகளையே அணிய வேண்டும். விலக்க தக்கவர்கள், சாப்பிட கூடாத உணவை உண்பவர்கள்.

कारावरो निषादात् तु चर्मकारः प्रसूयते ।
वैदेहिकाद् अन्ध्र मेदौ बहिर्ग्रामप्रतिश्रयौ ॥ 
- மனு ஸ்மிருதி
நிஷாத ஜாதியில் ஒருவன், வைதேஹ ஜாதியில் உள்ள பெண்ணை மணந்தால், அவர்கள் பெற்று கொள்ளும் பிள்ளைகள் "காராவரர்கள்" என்று அறியப்படுகிறார்கள். இவர்களுக்கு தோல் சம்பந்தமான தொழில்கள் ஏற்றது. 
வைதேஹ ஜாதியில் ஒருவன், காராவர ஜாதியில் உள்ள பெண்ணை மணந்தால், அவர்கள் பெற்று கொள்ளும் பிள்ளைகள் "அந்திர" என்று அறியப்படுகிறார்கள். இவர்கள் ஊருக்கு வெளியே வசிப்பது ஏற்றது.
வைதேஹ ஜாதியில் ஒருவன், நிஷாத ஜாதியில் உள்ள பெண்ணை மணந்தால், அவர்கள் பெற்று கொள்ளும் பிள்ளைகள் "மேதா" என்று அறியப்படுகிறார்கள். இவர்கள் ஊருக்கு வெளியே வசிப்பது ஏற்றது..

चण्डालात् पाण्डुसोपाक: त्वक्सार व्यवहारवान् ।
आहिण्डिको निषादेन वैदेह्यामेव जायते ॥
- மனு ஸ்மிருதி
சண்டாள ஜாதியில் ஒருவன், வைதேஹ ஜாதியில் உள்ள பெண்ணை மணந்தால், அவர்கள் பெற்று கொள்ளும் பிள்ளைகள் "பாண்டுஸோபாகன்" என்று அறியப்படுகிறார்கள். இவர்களுக்கு மூங்கில் சம்பந்தமான தொழில்கள் ஏற்றது. 
நிஷாத ஜாதியில் ஒருவன், வைதேஹ ஜாதியில் உள்ள பெண்ணை மணந்தால், அவர்கள் பெற்று கொள்ளும் பிள்ளைகள் "ஆஹிந்டிகன்" என்று அறியப்படுகிறார்கள்.

चण्डालेन तु सोपाको मूलव्यसनवृत्तिमान् ।
पुक्कस्यां जायते पापः सदा सज्जनगर्हितः ॥
- மனு ஸ்மிருதி
சண்டாள ஜாதியில் ஒருவன், புக்கச ஜாதியில் உள்ள பெண்ணை மணந்தால், அவர்கள் பெற்று கொள்ளும் பிள்ளைகள் "ஸோபாகன்" என்று அறியப்படுகிறார்கள். இவர்கள் இறந்தவர்கள் சம்பந்தமான தொழில்கள் ஏற்றது. இவர்களோடு பழகுவது நல்லதல்ல.

निषादस्त्री तु चण्डालात् पुत्रम् अन्त्यावसायिनम् ।
श्मशानगोचरं सूते बाह्यानामपि गर्हितम् ॥ 
- மனு ஸ்மிருதி
சண்டாள ஜாதியில் ஒருவன், நிஷாத ஜாதியில் உள்ள பெண்ணை மணந்தால், அவர்கள் பெற்று கொள்ளும் பிள்ளைகள் "அந்த்யாவசாயினன்" என்று அறியப்படுகிறார்கள். இவர்கள் சுடுகாட்டில் வேலை செய்ய வேண்டும். இவர்களோடு பழகுவது நல்லதல்ல.

सङ्करे जातयस्त्वेताः पितृमातृप्रदर्शिताः ।
प्रच्छन्ना वा प्रकाशा वा वेदितव्याः स्वकर्मभिः ॥
- மனு ஸ்மிருதி
இவ்வாறு வர்ண (குண) கலப்பு ஏற்படுவதால், தந்தையும் தாயும் வர்ண கலப்பில் இருப்பதாலும், சிலரின் குணங்கள் புரியாததாகவும், சிலருக்கு குணங்கள் தெளிவாகவும் காணப்படலாம். இந்த குழப்ப சமயத்தில், அவரவர் செய்யும் காரியத்தை கண்டு, அதற்கு ஏற்றவாறு அவர் வர்ணத்தை நிர்ணயிக்க வேண்டும்.

तपोबीजप्रभावैस्तु ते गच्छन्ति युगे युगे ।
उत्कर्षं चापकर्षं च मनुष्येष्विह जन्मतः ॥
தபத்தினாலும், பிறப்பிலேயே உண்டான ப்ரபாவத்தாலும் ஜீவன் யுக யுகமாக பிறந்து, நல்ல உயர்ந்த குணமுள்ள ஜென்மங்களை பெறுகிறான்


शनकैस्तु क्रियालोपादिमाः क्षत्रियजातयः ।
वृषलत्वं गता लोके ब्राह्मणादर्शनेन च ॥ 
புண்ணிய கர்மாக்கள் செய்யாமல், பிராம்மணர்களிடம் தர்மா- அதர்மம்  தெரிந்து கொள்ளாமல் இருக்கும் க்ஷத்ரியன் தன் வர்ணத்தை இழப்பான்.


पौण्ड्रकाश्च ओड्र द्रविडाः काम्बोजा यवनाः शकाः ।
पारदा पह्लवाश्चीनाः किराता दरदाः खशाः ॥
- மனு ஸ்மிருதி
பௌண்ட்ரகர்கள், ஓட்ரர்கள், திராவிடர்கள், காம்போஜர்கள், யவனர்கள், சகர்கள், பார சீகர்கள், பல்ஹவானர்கள், சீனர்கள், கிராதர்கள், தரதர்கள், கசர்கள் போன்றவர்கள் சூத்திரர்கள் ஆனார்கள். இவர்கள் வைஸ்ய, க்ஷத்ரிய, பிராம்மண வர்ணத்தில் இருப்பவர்களுக்கு உதவும் படியாக தொழில்களை செய்ய வேண்டும்.

मुखबाहु ऊरु पद्जानां या लोके जातयो बहिः ।
म्लेच्छवाचश्च आर्यवाचः सर्वे ते दस्यवः स्मृताः ॥
முகம் (பக்தி), பாஹு (வீரம்), தொடை (உழைப்பு), பாதம் (சேவை) என்று சொல்லப்படும் 4 குணம் (வர்ண) தனித்து இல்லாமல், குண கலப்பில் பிறந்தவர்கள், மலேச்ச மொழியோ, பண்பட்ட மொழியான சமஸ்கிருதமே பேசினாலும் "தஸ்யு" என்று அறியப்படுகிறார்கள்.

ये द्विजानामपसदा ये चापध्वंसजाः स्मृताः ।
ते निन्दितैर्वर्तयेयु: द्विजानाम् एव कर्मभिः ॥ 
- மனு ஸ்மிருதி
இப்படி பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய, சூத்திர வர்ணத்தில் இருக்கும் இரு பிறப்பாளர்கள் கலக்கும் போது, அவர்களுக்கு நிந்திக்கும் படியாக குணம் கலந்து பிறக்கிறார்கள். இந்த இரு பிறப்பாளர்களுக்கு ஏற்ற காரியங்களை செய்து கொண்டு இருக்க வேண்டும்.

सूतानामश्वसारथ्यमम्बष्ठानां चिकित्सनम् ।
वैदेहकानां स्त्रीकार्यं मागधानां वणिक्पथः ॥
- மனு ஸ்மிருதி
ஸூதனாக பிறந்தவர்கள், தேரோட்டி இரு பிறப்பாளர்களுக்கு காரியங்கள் செய்ய வேண்டும். அம்பஷ்டனாக பிறந்தவர்கள், வைத்தியம் கற்று கொண்டு, இரு பிறப்பாளர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். வைதேஹர்கள் பெண்களுக்கு காவல் புரிந்து கொண்டு உதவியாக இருக்க வேண்டும். மாகதர்கள் வணிகம் செய்து இரு பிறப்பாளர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.

मत्स्यघातो निषादानां त्वष्टिस्त्व आयोगवस्य च ।
मेद आन्ध्र चुञ्चु मद्गूनाम् आरण्य पशुहिंसनम् ॥ 
நிஷாதனாக பிறந்தவர்கள், மீன் பிடிக்கும் தொழில் செய்து கொண்டு, இரு பிறப்பாளர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். அயோகவனாக பிறந்தவர்கள், மர வேலைகள் செய்து இரு பிறப்பாளர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். மேதர்கள், ஆந்திரர்கள், சுஞ்சுக்கள், மத்கூனர்களாக பிறந்தவர்கள், காட்டில் வேட்டை செய்து கொண்டு, இரு பிறப்பாளர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.

क्षत्त्र्युग्रपुक्कसानां तु बिलौको वध बन्धनम् ।
धिग्वणानां चर्मकार्यं वेणानां भाण्डवादनम् ॥
- மனு ஸ்மிருதி
க்ஷத்தர்கள், உக்ரர்கள், புக்கஸர்கள் பூமிக்கு அடியில் ஒளிந்து இருக்கும் கொடிய மிருகங்களை வேட்டையாடி இரு பிறப்பாளர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். திக்வனர்கள் தோல் சம்பந்த வேலைகள் செய்து, உதவியாக இருக்க வேண்டும். வேனர்கள் தாரை தப்பட்டை போன்ற வாத்தியங்கள் அடித்து, உதவியாக இருக்க வேண்டும்.

चैत्यद्रुम श्मशानेषु शैलेषूपवनेषु च ।
वसेयुरेते विज्ञाता वर्तयन्तः स्वकर्मभिः ॥ 
- மனு ஸ்மிருதி
இவர்கள் மரங்கள் சூழ்ந்த இடத்தில், மயானங்களில், மலை அடிவாரத்தில் இவர்கள் காரியங்களை செய்து கொண்டு இருக்க வேண்டும். தன்னை பற்றி இரு பிறப்பாளர்கள் நன்றாக தெரிந்து இருக்கும் படி, தன் காரியங்களை செய்து கொண்டு இருக்க வேண்டும்.

चण्डाल श्वपचानां तु बहिर्ग्रामात् प्रतिश्रयः ।
अपपात्राश्च कर्तव्या धनमेषां श्व गर्दभम् ॥ 
- மனு ஸ்மிருதி
சண்டாளர்களும், ஸ்வபசானர்களும் ஊருக்கு வெளியே வசிக்க வேண்டும். தரம்த்திற்க்காக செய்யப்படும் தானத்தை கொடுக்கவோ, வாங்கவோ தகுதி இல்லாத இவர்கள் நாய் கழுதையை வளர்த்து கொண்டு, வாழ வேண்டும்.

वासांसि मृतचैलानि भिन्नभाण्डेषु भोजनम् ।
कार्ष्णायसमलङ्कारः परिव्रज्या च नित्यशः ॥
- மனு ஸ்மிருதி
சண்டாளர்களும், ஸ்வபசானர்களும் இறந்த சடலத்தின் ஆடை, ஆபரணங்களை எடுத்து வாழ வேண்டும். உடைந்த பாத்திரங்களில் உணவை உண்ண வேண்டும். இரும்பால் செய்யப்பட்ட நகைகளை அணிந்து கொள்ளலாம். ஒரு ஊரில் தங்காமல் அலைந்து கொண்டு இருக்க வேண்டும்.

न तैः समयमन्विच्छेत् पुरुषो धर्ममाचरन् ।
व्यवहारो मिथस्तेषां विवाहः सदृशैः सह ॥
- மனு ஸ்மிருதி
நல்ல தர்ம (அறம்) காரியங்கள் செய்யும் ஒருவன், அந்த சமயத்தில் சண்டாளர்களோடும், ஸ்வபசானர்களோடும் உறவு கொள்ள கூடாது. தங்களுக்குள் தங்கள் விவகாரங்களை பேசி முடித்து கொள்ள வேண்டும். விவாகம் தங்களுக்குள் செய்து கொண்டு வாழ வேண்டும்.

अन्नमेषां पराधीनं देयं स्याद् भिन्नभाजने ।
रात्रौ न विचरेयुस्ते ग्रामेषु नगरेषु च ॥
- மனு ஸ்மிருதி
இவர்களுக்கு உணவு கொடுக்க ஆசைப்பட்டாலும், வேறொருவர் மூலமாகவே கொடுக்க வேண்டும். இரவு நேரத்தில் இவர்கள் கிராமத்திலும், நகரத்திலும் அலைய கூடாது.

दिवा चरेयुः कार्यार्थं चिह्निता राजशासनैः ।
अबान्धवं शवं चैव निर्हरेयुरिति स्थितिः ॥
- மனு ஸ்மிருதி
அரச முத்திரையை பெற்று கொண்டு, அரசாணையை ஊர் மக்களுக்கு தெரிவிப்பது இவர்கள் கடமை. உறவு இல்லாமல் அனாதையாக உயிர் விட்டவர்கள் சடலத்தை அடக்கம் செய்வதும் சண்டாளர்களுக்கும், ஸ்வபசானர்களுக்கும் உள்ள கடமை.

वध्यांश्च हन्युः सततं यथाशास्त्रं नृपाज्ञया ।
वध्यवासांसि गृह्णीयुः शय्याश्चाभरणानि च ॥ 
- மனு ஸ்மிருதி
அரசன் எப்படி ஒருவனுக்கு தண்டனை கொடுக்க ஆணையிட்டாரோ அதை நிறைவேற்றும் வேலையை சண்டாளர்களும், ஸ்வபசானர்களும் செய்ய வேண்டும். அப்படி தண்டித்த பிறகு, அந்த சடலத்தின் ஆடை, படுக்கை, நகைகளை எடுத்து கொள்ளலாம்.

वर्णापेतमविज्ञातं नरं कलुषयोनिजम् ।
आर्यरूपमिवानार्यं कर्मभिः स्वैर्विभावयेत् ॥
- மனு ஸ்மிருதி
ஒரு வர்ணத்தை தாண்டி உறவு கொள்வதால், (வர்ண)குண கலப்படம் உடையவர்களாக பிறக்கிறார்கள். இவர்கள் பார்க்க பன்புள்ளவன் (ஆர்யன்) போல இருந்தாலும், இவர்கள் ஈடுபடும் காரியத்தை வைத்தே இவர்கள் குணத்தை நிர்ணயிக்க வேண்டும்.

अनार्यता निष्ठुरता क्रूरता निष्क्रियात्मता ।
पुरुषं व्यञ्जयन्तीह लोके कलुषयोनिजम् ॥
- மனு ஸ்மிருதி
பண்பு இல்லாத, திமிர், வெறுக்கத்தக்க கோபம், அவசர புத்தி, சாஸ்திர சொன்ன கடமைகளை செய்யாமல் இருப்பது, இவைகள் இழி குணங்கள். இந்த குணங்கள் வர்ண கலப்பு ஏற்படுவதால் உண்டாகிறது.

पित्र्यं वा भजते शीलं मातुर्वोभयमेव वा ।
न कथं चन दुर्योनिः प्रकृतिं स्वां नियच्छति ॥
- மனு ஸ்ம்ருதி
வர்ண (குண) கலப்பினால் பிறந்தவன், தாயின் குணத்தை, தந்தையின் குணத்தை சுமக்கிறான். இதனால், வர்ண கலப்பினால் பிறந்தவர்கள் தங்கள் கலப்படமான குணத்தை வெளிக்காட்டாமல் இருக்கவே முடியாது.

कुले मुख्येऽपि जातस्य यस्य स्याद् योनिसङ्करः ।
संश्रयत्येव तत्शीलं नरोऽल्पमपि वा बहु ॥
- மனு ஸ்ம்ருதி
நல்ல குலத்தில் பிறந்து இருந்தாலும், வர்ண (குண) கலப்பால் பிறந்து இருந்தால், அந்த பிள்ளைக்கு கொஞ்சமோ, அதிகமோ நிச்சயம் இருவரின் குணமும் இருக்கும்.

यत्र त्वेते परिध्वंसाज् जायन्ते वर्णदूषकाः ।
राष्ट्रिकैः सह तद् राष्ट्रं क्षिप्रमेव विनश्यति ॥
- மனு ஸ்ம்ருதி
எந்த தேசத்தில் வர்ண (குண) கலப்பால் மக்கள் தொகை அதிகமாகுமோ, அந்த தேசங்கள் அப்படிப்பட்ட மக்களால் பெரும் அபாயத்தையே சந்தித்து கொண்டே இருக்கும்.

ब्राह्मणार्थे गवार्थे वा देहत्यागोऽनुपस्कृतः ।
स्त्रीबालाभ्युपपत्तौ च बाह्यानां सिद्धिकारणम् ॥
- மனு ஸ்ம்ருதி
பிராம்மணர்கள், பசுக்கள், பெண்கள், சிறுவர்கள் போன்றவர்களை உயிர் கொடுத்தாவது காப்பாற்றும் வர்ண கலப்பில் பிறந்தவர்கள் நல்ல லோகங்களையே அடைவார்கள்.

अहिंसा सत्यमस्तेयं शौचम् इन्द्रिय निग्रहः ।
एतं सामासिकं धर्मं चातुर्वर्ण्ये अब्रवीन् मनुः ॥
- மனு ஸ்ம்ருதி
பிற உயிருக்கு துன்பம் செய்யாமல் இருத்தல், உண்மையே பேசுதல், பிறர் பொருளை எடுக்காமல் இருத்தல், உள்ளும் புறமும் தூய்மையாக இருத்தல், 5 புலன்களையும் அடக்கி இருத்தல் போன்ற தர்மங்கள் நான்கு வர்ணத்தில் இருப்பவர்களும் கடைபிடிக்க வேண்டும்.

शूद्रायां ब्राह्मणाज् जातः श्रेयसा चेत् प्रजायते ।
अश्रेयान् श्रेयसीं जातिं गच्छत्या सप्तमाद् युगात् ॥
- மனு ஸ்ம்ருதி
சூத்திர பெண் ப்ராம்மணனிடம் பெற்ற பெண்குழந்தை, தனக்கு பிறக்கும் பெண் குழந்தையை ப்ராம்மணனுக்கு மணம் செய்து கொடுத்து, இதே போல தொடர்ந்து 7 தலைமுறை செய்தால், அந்த 7வது தலைமுறைக்கு பிறந்த பெண், பிராம்மண பெண் ஆகிறாள்.

शूद्रो ब्राह्मणतामेति ब्राह्मणश्चैति शूद्रताम् ।
क्षत्रियाज् जातमेवं तु विद्याद् वैश्यात् तथैव च ॥
- மனு ஸ்ம்ருதி
இவ்வாறு சூத்திரன் ப்ராம்மணாக முடியும். அதே போல, ப்ராம்மணனும் சூத்திரனாக ஆக முடியும். இது க்ஷத்ரியனுக்கும், வைஸ்யர்களுக்கும் பொருந்தும்.

अनार्यायां समुत्पन्नो ब्राह्मणात् तु यदृच्छया ।
ब्राह्मण्यामप्यनार्यात् तु श्रेयस्त्वं क्वेति चेद् भवेत् ॥
 - மனு ஸ்ம்ருதி
பிராம்மணன், பண்பு குறைவுள்ள பெண்ணிடம் எதிர்ச்சையாக பெற்ற குழந்தை உயர்வா? பண்பு குறைவுள்ளவன், பிராம்மண பெண்ணிடம் பெற்ற குழந்தை உயர்வா?  அறிவோம்.

जातो नार्यामनार्यायामार्यादार्यो भवेद् गुणैः ।
जातोऽप्यनार्यादार्यायामनार्य इति निश्चयः ॥
- மனு ஸ்ம்ருதி
பண்பு நிறைந்த ஒருவன், பண்பு குறைவுள்ள பெண்ணிடம் எதிர்ச்சையாக பெற்ற குழந்தை, பண்பு உடையவனாக இருப்பான். பண்பு குறைவுள்ள  ஒருவன், பண்பு நிறைந்த பெண்ணிடம் பெற்ற குழந்தை, பண்பு குறைந்தவனாக இருப்பான்.

तावुभावप्यसंस्कार्याविति धर्मो व्यवस्थितः ।
वैगुण्याज् जन्मनः पूर्व उत्तरः प्रतिलोमतः ॥
- மனு ஸ்ம்ருதி
ஆனால் இப்படி பிறந்த இருவருக்குமே, சம்ஸ்காரம் செய்ய தகுதி கிடையாது.  தவறான வர்ண கலப்பினால் ப்ராம்மணனுக்கும் பண்பு குறைவுள்ள பெண்ணுக்கும் பிறந்த பிள்ளை, வைதீக காரியம் செய்யும் தகுதி இழக்கிறான். அதே போல, பண்பு குறைவுள்ளவனுக்கும் பிராம்மண பெண்ணுக்கும் தவறாக பிறந்தவனுக்கும் கிடையாது.

सुबीजं चैव सुक्षेत्रे जातं सम्पद्यते यथा ।
तथाऽर्याज् जात आर्यायां सर्वं संस्कारमर्हति ॥ 
- மனு ஸ்மிருதி
நல்ல மண்ணில் விதைக்கப்பட்ட நல்ல விதை நன்றாக முளைக்கும். அது போல நல்ல குணம் கொண்ட ஜாதியில் உள்ள ஆணும் பெண்ணும் மணம் செய்து கொண்டால், நல்ல குணமுள்ள பிள்ளைகள் பிறப்பார்கள்.

बीजमेके प्रशंसन्ति क्षेत्रमन्ये मनीषिणः ।
बीजक्षेत्रे तथैवान्ये तत्रैयं तु व्यवस्थितिः ॥
- மனு ஸ்மிருதி
நல்ல விதையே காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். நல்ல நிலமே காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். இரண்டுமே காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். இதை நிர்ணயம் செய்வோம்

अक्षेत्रे बीजमुत्सृष्टमन्तरैव विनश्यति ।
अबीजकमपि क्षेत्रं केवलं स्थण्डिलं भवेत् ॥
- மனு ஸ்மிருதி
வளமற்ற நிலத்தில், நல்ல விதையை விதைத்தாலும் பலன் தராது. மட்டமான விதையை நல்ல மண்ணில் விதைத்தாலும் பயன் தராது.

यस्माद् बीजप्रभावेण तिर्यग्जा ऋषयोऽभवन् ।
पूजिताश्च प्रशस्ताश्च तस्माद् बीजं प्रशस्यते ॥ 
- மனு ஸ்மிருதி
ஆனாலும், விதை சக்தி வாய்ந்ததாக இருந்தால், விலங்கிலிருந்தும் ரிஷிகள் வெளி வர முடியும். ஆதலால் பூஜிக்க பட வேண்டியதும், புகழ வேண்டியதும் விதையே ஆகும்.

अनार्यम् आर्य कर्माणम् आर्यं च अनार्य कर्मिणम् ।
सम्प्रधार्य अब्रवीद् धाता न समौ नासमाविति ॥ 
- மனு ஸ்மிருதி
பண்பில்லாத காரியத்தை, பண்புள்ளவன் செய்யும் படியாக சில சமயம் நேரலாம். பண்புள்ள காரியத்தை பண்பில்லாதவன் கூட சில நேரம் செய்யலாம்.  ஆதலால், இதை வைத்து இருவரும் சமம் என்றோ, சமம் இல்லை என்றோ நிர்ணயம் செய்து விட கூடாது.

ब्राह्मणा ब्रह्मयोनिस्था ये स्वकर्मण्यवस्थिताः ।
ते सम्यगुपजीवेयुः षट् कर्माणि यथाक्रमम् ॥ 
- மனு ஸ்மிருதி
பிராம்மணனுக்கும் பிராம்மண பெண்ணுக்கும் பிறந்த பிராம்மணன், தனக்கு என்று விதிக்கப்பட்ட கர்மாவை செய்தே ஆக வேண்டும். அவன் தனக்கு விதிக்கப்பட்ட 6 கடமைகளை நிச்சயம் செய்தே ஆக வேண்டும்.

अध्यापनम् अध्ययनं यजनं याजनं तथा ।
दानं प्रतिग्रहश्चैव षट् कर्माणि अग्र जन्मनः ॥
- மனு ஸ்மிருதி
வேதம் கற்று கொடுப்பது, வேதம் ஓதுவது, யாகம் செய்வது, யாகம் செய்து கொடுப்பது, தானம் வாங்குவது, தானம் கொடுப்பது. இந்த 6 கடமைகளை முதல் வர்ணத்தில் (குணத்தில்) இருக்கும் பிராம்மணன் செய்ய ஆக வேண்டும்


षण्णां तु कर्मणामस्य त्रीणि कर्माणि जीविका ।
याजनाध्यापने चैव विशुद्धाच्च प्रतिग्रहः ॥ 
- மனு ஸ்மிருதி
6 கடமைகளில், வேதம் சொல்லி கொடுத்தும், யாகங்கள் செய்து கொடுத்தும், தானம் வாங்கியும், முதல் வர்ணத்தில் (குணத்தில்) இருக்கும் பிராம்மணன் ஜீவனம் செய்ய வேண்டும்

त्रयो धर्मा निवर्तन्ते ब्राह्मणात् क्षत्रियं प्रति ।
अध्यापनं याजनं च तृतीयश्च प्रतिग्रहः ॥ 
முதல் வர்ணத்தில் (குணத்தில்) இருக்கும் பிராம்மணனின் 6 கடமைகளில், வேதம் சொல்லி தருவது, யாகம் செய்து வைப்பது, தானம் வாங்குவது என்ற 3 கடமைகள் க்ஷத்ரியனுக்கு கிடையாது. மற்ற 3ம் க்ஷத்ரியனுக்கும் உண்டு


वैश्यं प्रति तथैवैते निवर्तेरन्निति स्थितिः ।
न तौ प्रति हि तान् धर्मान् मनुराह प्रजापतिः ॥ 
பிராம்மணனின் 6 கடமைகளில், வேதம் சொல்லி தருவது, யாகம் செய்து வைப்பது, தானம் வாங்குவது என்ற 3 கடமைகள் க்ஷத்ரியன்  போல வைசியனுக்கும் கிடையாது. இவ்வாறு மனு பிரஜாபதி சொல்லி இருக்கிறார்


शस्त्रास्त्रभृत्त्वं क्षत्रस्य वणिक्पशुकृषिर्विषः ।
आजीवनार्थं धर्मस्तु दानमध्ययनं यजिः ॥ 
சஸ்திரங்களும், அஸ்திரங்களும் க்ஷத்ரியனுக்கு உரியவை. 
வணிகம் செய்வதும், பசுவை காப்பதும், விவசாயம் செய்வதும் வைசியனுக்கு உரியவை.
இவர்கள் இருவருமே தன் ஆயுள் வரை, யாகம் செய்வதையும், வேதம் படிப்பதையும், தானம் கொடுப்பதையும் தன் அறமாக கொண்டு வாழ வேண்டும்.

वेदाभ्यासो ब्राह्मणस्य क्षत्रियस्य च रक्षणम् ।
वार्ताकर्मैव वैश्यस्य विशिष्टानि स्वकर्मसु ॥
- மனு ஸ்மிருதி
வேதத்தை கற்று கொடுப்பது பிராம்மணனுக்கு முக்கியமான அறம்.
தர்மத்தை காப்பது க்ஷத்ரியனுக்கு முக்கியமான அறம்.
வியாபாரம் செய்வது வைசியனுக்கு முக்கியமான அறம்.

अजीवंस्तु यथोक्तेन ब्राह्मणः स्वेन कर्मणा ।
जीवेत् क्षत्रियधर्मेण स ह्यस्य प्रत्यनन्तरः ॥ 
- மனு ஸ்மிருதி
பிராம்மணன் வாழ ஆதாரமாக இருக்கும் 3 கடமைகள் (தானம் வாங்குதல், யாகம் செய்தல், வேதம் கற்று கொடுத்தல் {(நீதி என்ன என்று சொல்வது}) செய்தும், வாழ வழி இல்லையென்றால், க்ஷத்ரியனுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய்து வாழலாம் (நீதிபதி போன்றவை).

उभाभ्यामप्यजीवंस्तु कथं स्यादिति चेद् भवेत् ।
कृषिगोरक्षमास्थाय जीवेद् वैश्यस्य जीविकाम् ॥
- மனு ஸ்மிருதி
பிராம்மணன் வாழ்வதற்கு ஆதாரமான 3 கடமைகள் (தானம் வாங்குதல், யாகம் செய்தல், வேதம் கற்று கொடுத்தல் {(நீதி என்ன சொல்வது}) செய்யவும் வழி இல்லையில்லாமல், க்ஷத்ரியனுக்கு வாழ்வாதாரமான கடமைகளும் செய்யவும் முடியாத நிலையில், வைசியனின் தர்மமான விவசாயம், பசுவை காத்தல் செய்து வாழலாம்.

वैश्यवृत्त्याऽपि जीवंस्तु ब्राह्मणः क्षत्रियोऽपि वा ।
हिंसाप्रायां पराधीनां कृषिं यत्नेन वर्जयेत् ॥
தன் தர்மத்தில் வாழ்வாதார கடமைகளை செய்தும் வாழ இயலாத நிலையில், பிராம்மணன், க்ஷத்ரியன் போன்றோர் வைசிய தொழிலான விவசாயமே செய்தாலும், ஜீவ ஹிம்சை இல்லாதபடி, பிறர் உதவி தேவைப்படாத படி விவசாயம் செய்து வாழலாம்.

कृषिं साधुइति मन्यन्ते सा वृत्तिः सद्विगर्हिताः ।
भूमिं भूमिशयांश्चैव हन्ति काष्ठमयोमुखम् ॥
விவசாயம் சிறந்த தொழில் என்று மனிதர்கள் நினைக்கலாம். இருந்த போதிலும், இதிலும் ஹிம்சை இருக்கிறது. விவசாயம் செய்ய பூமியை, பூமியில் உள்ள உயிர்களை இரும்பால், மரத்தால் ஹிம்சித்து தான் விவசாயம் செய்ய வேண்டியுள்ளது

इदं तु वृत्तिवैकल्यात् त्यजतो धर्मनैपुणम् ।
विट्पण्यमुद्धृतोद्धारं विक्रेयं वित्तवर्धनम् ॥ 
- மனு ஸ்மிருதி
தனக்கு விதிக்கப்பட்ட கடமை மூலம் ஜீவிக்க இயலாத நிலையில், பிராம்மணன், க்ஷத்ரியனின் தொழிலையோ, வைசியனின் தொழிலான விவசாயமோ, பசுவை வளர்ப்பதையோ விரும்பாத பட்சத்தில், சில பொருட்களை விற்று ஜீவனம் செய்து கொள்ளலாம்.

सर्वान् रसानपोहेत कृतान्नं च तिलैः सह ।
अश्मनो लवणं चैव पशवो ये च मानुषाः ॥ 
தன் கடமை மூலம் ஜீவிக்க இயலாத நிலையில், பிராம்மணன், க்ஷத்ரியன், எந்த சுவையான பொருட்களையும், சமைத்த உணவையோ, எள், கற்கள், உப்பு, மிருகங்கள், மனிதனை விற்றோ வர்த்தகம் செய்ய கூடாது.

सर्वं च तान्तवं रक्तं शाणक्षौमाविकानि च ।
अपि चेत् स्युररक्तानि फलमूले तथौषधीः ॥ 
தன் கடமை மூலம் ஜீவிக்க இயலாத நிலையில், பிராம்மணன், க்ஷத்ரியன், சிவப்பு நிற துணிகளை, சணலினால் செய்யப்பட்ட துணிகள், கம்பிளிகள் போன்றவற்றை விற்றோ வர்த்தகம் செய்ய கூடாது. பழங்கள், கிழங்குகள், மருந்துகள் விற்றோ வர்த்தகம் செய்ய கூடாது.

अपः शस्त्रं विषं मांसं सोमं गन्धांश्च सर्वशः ।
क्षीरं क्षौद्रं दधि घृतं तैलं मधु गुडं कुशान् ॥ 
பிராம்மணன் தன் தர்மத்தில் (வேதம் சொல்லி கொடுத்தல், யாகம் செய்து வைத்தல், தானம் வாங்குதல்) வாழ முடியாத நிலை ஏற்பட்டால், வியாபாரம் செய்யலாம். ஆனால், தண்ணீர், மந்திர பூர்வமான ஆயுதங்கள், விஷம், மாமிசம், ஸோம கொடி, வாசனை பொருட்கள், பால், தேன், தயிர், வெண்ணெய், எண்ணெய், வெல்லம், தர்ப்பை போன்றவற்றை வியாபாரம் செய்ய கூடாது.


आरण्यांश्च पशून् सर्वान् दंष्ट्रिणश्च वयांसि च ।
मद्यं नीलिं च लाक्षां च सर्वांश्चैकशफांस्तथा ॥
பிராம்மணன் தன் தர்மத்தில் (வேதம் சொல்லி கொடுத்தல், யாகம் செய்து வைத்தல், தானம் வாங்குதல்) வாழ முடியாத நிலை ஏற்பட்டால், வியாபாரம் செய்யலாம். ஆனால், அனைத்து வன விலங்குகள், கூர்மையான பற்கள் கொண்டவைகள், பறவைகள், மது வகைகள், சாய பொருட்கள், அரக்கு போன்ற பசைகள், ஒற்றை கொம்பு உள்ள மிருகங்களையும் வர்த்தகம் செய்ய கூடாது.

काममुत्पाद्य कृष्यां तु स्वयमेव कृषीवलः ।
विक्रीणीत तिलांशूद्रान् धर्मार्थमचिरस्थितान् ॥
- மனு ஸ்மிருதி
பிராம்மணன் தன் தர்மத்தில் (வேதம் சொல்லி கொடுத்தல், யாகம் செய்து வைத்தல், தானம் வாங்குதல்) வாழ முடியாத நிலை ஏற்பட்டால், தர்ம காரியங்களுக்கு பயன்பட வேண்டும் என்று நினைத்து எள் பயிர் செய்து விவசாயம் செய்யலாம். ஆனால் விளைந்த எள்ளை உடனே தர்ம காரியங்களுக்கு கொடுத்து விட வேண்டும். உடனே விற்று விட வேண்டும்


भोजनाभ्यञ्जनाद् दानाद् यदन्यत् कुरुते तिलैः ।
कृमिभूतः श्वविष्ठायां पितृभिः सह मज्जति ॥
எந்த பிராம்மணன் சாப்பிடுவது, உடம்பில் தேய்த்து கொள்வது, தானம் கொடுப்பது தவிர, மற்ற காரியத்துக்கு எள்ளை பயன்படுத்துகிறானோ, அவனும் அவன் மூதாதையர்களும் நாய் மலத்தை உண்ணும் புழுவாக பிறப்பார்கள். 

सद्यः पतति मांसेन लाक्षया लवणेन च ।
त्र्यहेण शूद्रो भवति ब्राह्मणः क्षीरविक्रयात् ॥ 
மாமிசம், அரக்கு (சாயம்), உப்பு போன்றவற்றை விற்கும் பிராம்மணன், உடனே பிராம்மண தன்மையை இழக்கிறான்.
பாலை விற்கும் பிராம்மணன் 3 நாளில் சூத்திரன் ஆகிறான்.

इतरेषां तु पण्यानां विक्रयादिह कामतः ।
ब्राह्मणः सप्तरात्रेण वैश्यभावं नियच्छति ॥ 
விற்ககூடாத பொருட்கள் என்று சொல்லப்பட்டதை தன் விருப்பத்தால் வர்த்தகம் செய்யும் பிராம்மணன் 7 நாளில் வைஸ்யனாகி விடுவான்.

रसा रसैर्निमातव्या न त्वेव लवणं रसैः ।
कृतान्नं च कृतान्नेन तिला धान्येन तत्समाः ॥
பிராம்மணன் சுவையான பொருட்களை விற்றால் அதற்கு மாற்றாக மற்றொரு சுவையான பொருளை பண்ட மாற்று செய்து கொள்ள வேண்டும். உப்பு விற்க கூடாது. சமைத்த உணவுக்கு சமைத்த உணவையே பண்ட மாற்று செய்து கொள்ள வேண்டும். எள் விற்றால் அதற்கு பதில் மற்ற தானியம் சரி சமமாக வாங்கி கொள்ளலாம்.

जीवेदेतेन राजन्यः सर्वेणाप्यनयं गतः ।
न त्वेव ज्यायंसीं वृत्तिमभिमन्येत कर्हि चित् ॥ 
வாழ வழி இல்லாத நிலை க்ஷத்ரியனுக்கு ஏற்பட்டால், பிராம்மணன் விற்ககூடாது என்று சொல்லப்பட்ட அனைத்தையும் க்ஷத்ரியன் வர்த்தகம் செய்யலாம். 

यो लोभादधमो जात्या जीवेदुत्कृष्टकर्मभिः ।
तं राजा निर्धनं कृत्वा क्षिप्रमेव प्रवासयेत् ॥ 
பேராசையால், அதர்மமாக வாழ்பவர்கள் மற்றவர்கள் தொழிலை செய்தால், அவர்களை அரசன் கண்டுபிடித்து, அவர்கள் செல்வத்தை பறிமுதல் செய்து நாடு கடத்த வேண்டும்.

वरं स्वधर्मो विगुणो न पारक्यः स्वनुष्ठितः ।
परधर्मेण जीवन् हि सद्यः पतति जातितः ॥ 
தனக்கென்று விதிக்கப்பட்ட தர்மத்தை கடைபிடித்து வாழ வேண்டும். பிறருடைய தர்மத்தை கடைபிடித்து வாழ்பவன் தன் குலத்தை விட்டு விலகிவிடுகிறான்.

वैश्योऽजीवन् स्वधर्मेण शूद्रवृत्त्याऽपि वर्तयेत् ।
अनाचरन्नकार्याणि निवर्तेत च शक्तिमान् ॥ 
வைசியன் (employer) தன் தர்மத்தில் உள்ள வேலையை செய்தும், வாழ இயலாத நிலை ஏற்பட்டால், சூத்திரன் (employee) வேலையை செய்யலாம். ஆனால் ஆசாரம் இல்லாத வேலையை செய்ய கூடாது

अशक्नुवंस्तु शुश्रूषां शूद्रः कर्तुं द्विजन्मनाम् ।
पुत्रदारात्ययं प्राप्तो जीवेत् कारुककर्मभिः ॥
சூத்திரன் (employee) இரு பிறப்பாளர்களுக்கு (பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய) உதவியாக வேலை செய்தும் வாழ இயலாத நிலை ஏற்பட்டால், தன் பிள்ளைகள், மனைவியை காப்பாற்ற கைத்தொழில் செய்து பிழைக்கலாம்.

यैः कर्मभिः प्रचरितैः शुश्रूष्यन्ते द्विजातयः ।
तानि कारुककर्माणि शिल्पानि विविधानि च ॥ 
சூத்திரன் கைத்தொழில், கலை தொழில் செய்து பிழைக்கலாம் என்றாலும், இரு பிறப்பாளர்களுக்கு (பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய) பயன்படும் படி செய்ய வேண்டும்.

वैश्यवृत्तिमनातिष्ठन् ब्राह्मणः स्वे पथि स्थितः ।
अवृत्तिकर्षितः सीदन्निमं धर्मं समाचरेत् ॥
வாழ முடியாத நிலையில், பிராம்மணன் வைஸ்யனுக்கு விதிக்கப்பட்ட தொழிலை செய்ய விரும்பாத பட்சத்தில், என்னென்ன காரியங்கள் செய்து பிழைக்கலாம் என்று மேலும் சொல்கிறேன்.


सर्वतः प्रतिगृह्णीयाद् ब्राह्मणस्त्वनयं गतः ।
पवित्रं दुष्यतीत्येतद् धर्मतो नोपपद्यते ॥ 
நெருக்கடி காலத்தில் பிராம்மணன், பவித்ரம் இல்லாத பொருளை, தூஷிக்க தக்கவனிடம் வாங்க நேர்ந்தாலும், அது தர்மத்தை மீறியதாகாது.

नाध्यापनाद् याजनाद् वा गर्हिताद् वा प्रतिग्रहात् ।
दोषो भवति विप्राणां ज्वलनाम्बुसमा हि ते ॥
- மனு ஸ்மிருதி
தெளிந்த நீர் போலவும், நெருப்பு போல சுத்தமாகவும் இருக்கும் வேதியன் என்ற விப்ரன் என்ற பிராம்மணன் தன் கடமையை செய்து வாழ வழி இல்லாத நிலை நேர்ந்தால், தகுதி இல்லாதவனுக்கு கற்று கொடுத்தாலும், யாகம் செய்து வைத்தாலும், தானம் வாங்கினாலும் தோஷம் ஆகாது.

जीवित अत्ययम् आपन्नो योऽन्नमत्ति ततस्ततः ।
आकाशमिव पङ्केन न स पापेन लिप्यते ॥ 
வேதியன் என்ற விப்ரன் என்ற பிராம்மணன் தன் கடமையை செய்து வாழ வழி இல்லாமல், உயிர் போகும் நிலை ஏற்படும் போது, தகுதி இல்லாதவனிடம் தண்ணீர், உணவு வாங்கி உண்டாலும் பாபம் இல்லை. ஆகாசத்தில் எறியப்பட்ட சேறு போல, வேதியன் ஆகாசத்தை போல பாபம் அடையாமல் இருப்பான்.


अजीगर्तः सुतं हन्तुमुपासर्पद् बुभुक्षितः ।
न चालिप्यत पापेन क्षुत्प्रतीकारमाचरन् ॥
உயிர் போகும் நிலை ஏற்பட்ட சமயத்தில் முன்பு அஜீகர்தர் என்ற வேதிய பிராம்மணன், தன் மகனை விற்று, அதற்கு ஈடாக 100 பசுக்களை தன் ஜீவனத்துக்கு பெற்றார். இவருக்கு இதனால் பாபம் ஏற்படவில்லை 


श्व-मांसम् इच्छनार्तोऽत्तुं धर्माधर्मविचक्षणः ।
प्राणानां परिरक्षार्थं वामदेवो न लिप्तवान् ॥ 
அதே போல, வாம தேவர் என்ற மற்றொரு ரிஷி தர்மம் எது? அதர்மம் எது? என்று நன்கு அறிந்தவர். அவர் பசியால் வாடி உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையில், நாய் மாமிசத்தை சாப்பிடும் படியாக ஆன போதும், அவருக்கு பாபம் உண்டாகவில்லை.

भरद्वाजः क्षुधार्तस्तु सपुत्रो विजने वने ।
बह्वीर्गाः प्रतिजग्राह वृधोस्तक्ष्णो महातपाः ॥
மகாதபஸ்வியான பரத்வாஜர் கூட, இது போன்ற ஆபத்து சமயத்தில், தனக்கும், தன் புத்திரர்கள் ஜீவிக்கவும், வ்ருதன் என்ற தச்சனிடம் பசுதானம் வாங்கி கொண்டனர்.

क्षुधार्तश्चात्तुमभ्यागाद् विश्वामित्रः श्वजाघनीम् ।
चण्डालहस्तादादाय धर्माधर्मविचक्षणः ॥
தர்மம் அதர்மம் அறிந்த விஸ்வாமித்திரர் பசியினால் வாடிய போது, சண்டாளன் கொடுத்த நாயின் முழங்கால் மாமிசத்தை வாங்கி கொண்டார். ஆபத்து காலத்தில் இதனால பாபம் உண்டாகாது.

प्रतिग्रहाद् याजनाद् वा तथैवाध्यापनादपि ।
प्रतिग्रहः प्रत्यवरः प्रेत्य विप्रस्य गर्हितः ॥
- மனு ஸ்மிருதி
அந்தணன் என்ற வேதியன் என்ற விப்ரன், தானம் வாங்கலாம். யாகம் செய்து வைக்கலாம், வேதம் சொல்லி கொடுக்கலாம். விதிக்கப்பட்ட கடமையாக இருந்தாலும் இதில் தாழ்ந்தது தானம் வாங்குவதே. (காரணம்: தானம் கொடுத்தவன் பாபம் வந்து சேரும்)

याजनाध्यापने नित्यं क्रियेते संस्कृतात्मनाम् ।
प्रतिग्रहस्तु क्रियते शूद्रादप्यन्त्यजन्मनः ॥ 
யாருக்கு வேதம் விதிக்கப்பட்டு உள்ளதோ, யாகம் விதிக்கப்பட்டு உள்ளதோ அவர்களுக்கு வேதம் சொல்லி கொடுக்கலாம். யாகம் செய்து வைக்கலாம். தானம் யாரிடமும் வாங்கலாம், சூத்திரன் உட்பட.


जपहोमैरपेत्येनो याजनाध्यापनैः कृतम् ।
प्रतिग्रहनिमित्तं तु त्यागेन तपसैव च ॥ 
- மனு ஸ்மிருதி
வேதம் சொல்லி கொடுப்பதால், யாகம் செய்து வைப்பதால் ஏற்படும் குறைகளை, ஜபம் செய்தும் ஹோமம் செய்தும் சரி செய்து கொள்ளலாம். தானம் வாங்குவதால் ஏற்படும் பாபத்தை தான் தானம் செய்தும், வ்ரதங்கள் போன்ற தவத்தாலுமே போக்கி கொள்ள முடியும்

शिलौञ्छमप्याददीत विप्रोऽजीवन् यतस्ततः ।
प्रतिग्रहात् शिलः श्रेयांस्ततोऽपि उञ्छः प्रशस्यते ॥ 
- மனு ஸ்மிருதி
தானம் வாங்க ஆசைப்படாத அந்தணன் என்ற விப்ரன், சிதறி கிடக்கும் தானியங்களை எடுத்து கொண்டோ, உஞ்சவிருத்தி செய்தோ ஜீவனம் செய்து கொள்ளலாம். தானம் வாங்குவதை விட சிதறிய தானியத்தை எடுத்து கொள்வது சிறந்தது. அதை விட உத்தமமானது உஞ்சவிருத்தி (பகவந் நாமாவை கேட்க செய்து பதிலுக்கு தானம் வாங்குவது) 

सीदद्भिः कुप्यम् इच्छद्भि: धने वा पृथिवीपतिः ।
याच्यः स्यात् स्नातकै: विप्रै: अदित्संस्त्यागम् अर्हति ॥
- மனு ஸ்மிருதி
திருமணம் செய்து கொண்ட பிறகு அந்தணன் என்ற வேதியன் என்ற விப்ரன், குடும்பத்துக்கு கொஞ்சம் செல்வம் வேண்டும் என்று ஆசைப்பட்டால், அரசனிடம் கேட்கலாம். கஞ்சனான அரசன் கொடுக்க மறுத்தால், அவனிடம் என்றுமே இனி வாங்க கூடாது

अकृतं च कृतात् क्षेत्राद् गौरजाविकमेव च ।
हिरण्यं धान्यमन्नं च पूर्वं पूर्वमदोषवत् ॥
உழுது விவசாயம் செய்ய வேண்டிய நிலத்தை விட, உழுவதற்கு அவசியமில்லாத விவசாய நிலம் (மரம், பூந்தோப்பு) அந்தணன் என்ற விப்ரனுக்கு சிறந்தது. அரசன் அது போன்ற தானம் செய்தால் சிறந்தது. பசு, வெள்ளாடு, செம்மறியாடு, தங்கம், தானியம், அன்னம் போன்றவற்றில், அரசன் கொடுக்கும் தானத்தில் பசு தானம் மிக உயர்ந்தது. தானத்தில் மிகவும் தாழ்ந்தது அன்ன தானம்.


सप्त वित्तागमा धर्म्या दायो लाभः क्रयो जयः ।
प्रयोगः कर्मयोगश्च सत्प्रतिग्रह एव च ॥
- மனு ஸ்மிருதி
1. பரம்பரையாக கிடைத்த சொத்து,
2. ஒரு பொருளை விற்று கிடைத்த லாப சொத்து,
3. விலை கொடுத்து வாங்கிய சொத்து,
4. வெற்றியினால் கிடைத்த சொத்து,
5. கற்று கொடுத்ததற்கு கிடைத்த குரு தக்ஷிணை
6. பலனை எதிர்பார்க்காமல் தான் செய்யும் வேலையில் கிடைக்கும் சம்பளம்,
7. அதர்மமில்லாமல் வாங்கப்பட்ட தானம்,
இந்த 7 விதமான செல்வமும் தர்மத்துக்கு உட்பட்ட செல்வமே. 


विद्या शिल्पं भृतिः-सेवा गोरक्ष्यं विपणिः कृषिः ।
धृतिर्भैक्षं कुसीदं च दश जीवनहेतवः ॥ 
- மனு ஸ்மிருதி
படிப்பு சொல்லி கொடுப்பது, சிற்பக்கலை, சம்பளத்துக்கு வேலை செய்வது, பசுவை காப்பது, வியாபாரம் செய்வது, விவசாயம் செய்வது, சேவை செய்வது, பிக்ஷை எடுப்பது, வட்டி வாங்குவது, கலை துறையில் இருப்பது, 
ஆகிய 10ம் ஜீவனம் செய்ய வழிகளாகும்.

ब्राह्मणः क्षत्रियो वाऽपि वृद्धिं नैव प्रयोजयेत् ।
कामं तु खलु धर्मार्थं दद्यात् पापीयसेऽल्पिकाम् ॥ 
- மனு ஸ்மிருதி
பிராம்மணனும், க்ஷத்ரியனும் கடன் கொடுப்பது கூடாது (தானம் செய்யலாம்). ஒரு வேளை வாங்குபவன் பாபியாக இருந்து தர்ம காரியத்துக்கு கேட்டால், கொஞ்சம் வட்டியுடன் கடன் கொடுக்கலாம்.

चतुर्थमाददानोऽपि क्षत्रियो भागम् आपदि ।
प्रजा रक्षन् परं शक्त्या किल्बिषात् प्रतिमुच्यते ॥
- மனு ஸ்மிருதி
மக்களுக்கு 4ல் ஒரு பங்கு வரி விதிக்கும் க்ஷத்ரியன் பாபத்தை பெறுகிறான், அந்த மக்களை ஆபத்து காலங்களில் காக்கும் க்ஷத்ரியன், பாபத்திலிருந்து விடுபடுவான்.

स्वधर्मो विजयस्तस्य नाहवे स्यात् पराङ्मुखः ।
शस्त्रेण वैश्यान् रक्षित्वा धर्म्यमाहारयेद् बलिम् ॥ 
- மனு ஸ்மிருதி
வெற்றி பெறுவதே க்ஷத்ரியனின் தர்மம். புறமுதுகு காட்டி ஓட கூடாது. ஆயுதங்கள் கொண்டு வைஸ்யனை (business people) காக்க வேண்டும். அதற்கு பதிலாக நியாயமான வரி வாங்கி கொள்ளலாம்.

धान्येऽष्टमं विशां शुल्कं विंशं कार्षापणावरम् ।
कर्मोपकरणाः शूद्राः कारवः शिल्पिनस्तथा ॥ 
- மனு ஸ்மிருதி
தானியங்களுக்கு 20ல் 8 பங்கு வரியாக, தங்கத்துக்கு 20ல் 1 பங்கு வரியாக க்ஷத்ரியன், வாங்கலாம். சூத்திரர்கள் (சம்பளத்திற்கு சேவை செய்பவர்கள் employee), கைவினைஞர்கள், சிற்பிகள் போன்றவர்களிடம் வரி வாங்க அவசியமில்லை.

शूद्रस्तु वृत्तिमाकाङ्क्षन् क्षत्रमाराधयेद् यदि ।
धनिनं वाऽप्युपाराध्य वैश्यं शूद्रो जिजीविषेत् ॥
- மனு ஸ்மிருதி
சூத்திரன் (employee) பிராம்மணனுக்கு வேலை செய்வது உத்தமம். ஆனால், பணம் சேர்க்க ஆசைப்பட்டால் க்ஷத்ரியனுக்கு (army/police) உதவியாக (admin) வேலை செய்யலாம். இன்னும் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டால், வைஸ்யனுக்கு (businessmen/employer) வேலை செய்யலாம்.


स्वर्गार्थमुभयार्थं वा विप्रान् आराधयेत् तु सः ।
जातब्राह्मणशब्दस्य सा ह्यस्य कृतकृत्यता ॥
- மனு ஸ்மிருதி
பணம் சம்பாதிப்பதை காட்டிலும், நல்லுலகமே வேண்டும் என்று ஆசைப்படும் சூத்திரன் (employee) விப்ரன் என்ற வேதியன் என்ற அந்தணனை ஆராதிக்க வேண்டும், அந்த விப்ரனுக்கு சேவை செய்து வந்தால், பிரம்மத்திலேயே மனதை செலுத்தும் பிராம்மணனை போல ஆகி விடுவான், சொர்க்க லோகமும் கிட்டும்.  

विप्रसेवैव शूद्रस्य विशिष्टं कर्म कीर्त्यते ।
यदतोऽन्यद् हि कुरुते तद् भवत्यस्य निष्फलम् ॥
விப்ரன் என்ற வேதியன் என்ற அந்தணனுக்கு சேவை செய்வதே சூத்திரனுக்கு விசேஷத்தை கொடுக்கும். மற்றவர்களுக்கு பணத்திற்காக செய்யும் வேலையால் மேலுலக பலன் கிடைக்காது.

प्रकल्प्या तस्य तैर्वृत्तिः स्वकुटुम्बाद् यथार्हतः ।
शक्तिं चावेक्ष्य दाक्ष्यं च भृत्यानां च परिग्रहम् ॥ 
- மனு ஸ்மிருதி
தனக்கு வேலை செய்யும் சூத்திரனை (employee), தன் சக்திக்கு ஏற்றபடி அவனுடைய குடும்ப சுமையை தயையோடு பராமரித்து பாதுகாக்க வேண்டும்.


उच्छिष्टमन्नं दातव्यं जीर्णानि वसनानि च ।
पुलाकाश्चैव धान्यानां जीर्णाश्चैव परिच्छदाः ॥
- மனு ஸ்மிருதி
தான் சாப்பிட்ட பிறகு, தன் வீட்டில் சமைத்த உணவை வேலை செய்யும் சூத்திரனுக்கும் (employee) கொடுக்க வேண்டும். தன்னிடம் உள்ள தானியங்கள், காய்கறிகள் கொடுக்க வேண்டும்


न शूद्रे पातकं किं चिन्न च संस्कारमर्हति ।
नास्याधिकारो धर्मेऽस्ति न धर्मात् प्रतिषेधनम् ॥
- மனு ஸ்மிருதி
சூத்திரன் (employee) தன் நேரத்தை பிறருக்கு கொடுத்து சம்பாதிக்கிறான். அதனால் அவன் எந்த சம்ஸ்காரமும் செய்ய அவசியமில்லை. கட்டுப்பாடும் இல்லை. செய்யாத பாபமும் அவனுக்கு இல்லை. எந்த சடங்கும் செய்ய அவசியமில்லை. ஆனால் புண்ணியத்தை தரும் சடங்குகள் செய்ய எந்த தடையும் இல்லை

धर्मैप्सवस्तु धर्मज्ञाः सतां वृत्तमनुष्ठिताः ।
मन्त्रवर्ज्यं न दुष्यन्ति प्रशंसां प्राप्नुवन्ति च ॥
சூத்திரன் (employee) தன் நேரத்தை பிறருக்கு கொடுத்து சம்பாதிக்கிறான். நேரம் இல்லாத சூத்திரன் (employee), தர்ம சிந்தனை உடையவனாக இருந்தால், வேதோக்தமான தர்மமான காரியங்கள் செய்யலாம். ஆனால் பயிற்சி இல்லாத இவன் வேதம் ஓத கூடாது, கேட்டால் போதும். சூத்திரன் (employee) தர்ம காரியங்கள் செய்வதிலேயே பெரும் புகழ் அடைவான்.

यथा यथा हि सद्वृत्तमातिष्ठति अनसूयकः ।
तथा तथैमं चामुं च लोकं प्राप्नोति अनिन्दितः ॥ 
- மனு ஸ்மிருதி
நல்ல குணத்திலும் தோஷம் பார்ப்பது அஸூயை. எப்பொழுது வரை சூத்திரன் (employee) தனக்கு வேலை கொடுத்தவரை கண்டு அஸூயை இல்லாமல் இருக்கிறானோ, அது வரை உலகத்தால் நிந்திக்கப்படாமல் இருப்பான், நல்ல லோகங்களையும் அடைவான். 

शक्तेनापि हि शूद्रेण न कार्यो धनसञ्चयः ।
शूद्रो हि धनमासाद्य ब्राह्मणानेव बाधते ॥ 
- மனு ஸ்மிருதி
சக்தி இருந்தாலும், சூத்திரன் (employee) அதிகப்படியான தேவைக்கு மீறிய செல்வம் சேர்க்க கூடாது. இப்படி சேர்க்கும் சூத்திரன் (employee) பிரம்மத்தில் லயித்து இருக்கும் பிராம்மணனை ஹிம்சிக்க ஆரம்பிப்பான்.

एते चतुर्णां वर्णानाम् आपद्धर्माः प्रकीर्तिताः ।
यान् सम्यग् अनुतिष्ठन्तो व्रजन्ति परमं गतिम् ॥
- மனு ஸ்மிருதி
நான்கு வர்ணத்தில் இருப்பவர்கள் கஷ்ட காலங்களில் அனுமதிக்கப்பட்ட ஆபத்து தர்மங்கள் கூறப்பட்டன. இதை அனுசரித்து கடைப்பிடிப்பவர்கள் நற்கதியை பெறுவார்கள்

एष धर्मविधिः कृत्स्नश्चातुर्वर्ण्यस्य कीर्तितः ।
अतः परं प्रवक्ष्यामि प्रायश्चित्तविधिं शुभम् ॥
- மனு ஸ்மிருதி
இதுவரை 4 வர்ணத்தில் இருப்பவருக்கான தர்மங்கள் சொல்லப்பட்டன. இனி சுபத்தை கொடுக்கும் பிராயச்சித்த விதிகளை பார்ப்போம்