யுதிஷ்டிரர் தன் சகோதரர்களோடு 12 வருடம் வன வாசம் செல்ல நேர்ந்தது. திரௌபதியும் உடன் வந்தாள்.
யுதிஷ்டிரர் வனம் செல்வதை கண்ட ஆயிரக்கணக்கான பிராமணர்கள் கூடவே வனம் வந்தனர்.
யுதிஷ்டிரர், வந்த பிராமணர்களுக்கு உணவு கொடுக்க வழி செய்ய முடியவில்லையே என்று வருந்த, அதை பற்றி கவலை வேண்டாம் என்று பிராமணர்கள் கூறியும், வருந்தினார்.
பாண்டவர்களின் குடும்ப புரோகிதராக இருந்த தவுமியர், சூரிய பகவானிடம் அன்னம் கிடைக்க பிரார்த்திக்க சொன்னார்.
யுதிஷ்டிரர் சூரியனிடம் அதிகமான உணவு நல்ல ஆரோக்கியம், சுகம் கிடைக்க, வியாதிகள் நீங்க பிரார்த்திக்கிறார்.
இதை நாமும் தினமும் சொல்லலாம்..
युधिष्ठिर उवाच।
त्वम् भानो जगतः चक्षुः ।
त्वम् आत्मा सर्व-देहिनाम् ।
त्वम् योनिः सर्व-भूतानाम् ।
त्वम् आचारः क्रिया-वताम् ।
யுதி⁴ஷ்டி²ர உவாச |
த்வம்ʼ பா⁴னோ ஜக³த: சக்ஷு: |
த்வம்ʼ ஆத்மா ஸர்வ-தே³ஹினாம்ʼ |
த்வம்ʼ யோனி: ஸர்வ-பூ⁴தானாம்ʼ |
த்வம்ʼ ஆசார: க்ரியா-வதாம்ʼ ||
பானுவே! நீங்கள் உலகத்துக்கு கண் போன்றவர். அனைத்து ஜீவனுக்கும் ஆத்மா நீங்களே. ஆகாசம் முதல் அனைத்து பூதங்களுக்கும் காரணம் நீங்களே. கர்மானுஷ்டானம் செய்பவர்களுடைய ஆசாரமும் நீங்களே.
त्वम् गतिः सर्व-साङ्ख्यानाम् ।
योगिनाम् त्वम् परायणम् ।
अनावृत-अर्गल-द्वारम् त्वम् गतिः ।
त्वम् मुमुक्षताम् ।
த்வம்ʼ க³தி: ஸர்வ-ஸாங்க்²யானாம்ʼ |
யோகி³னாம்ʼ த்வம்ʼ பராயணம்ʼ |
அனாவ்ருʼத-அர்க³ல-த்³வாரம்ʼ த்வம்ʼ க³தி: |
த்வம்ʼ முமுக்ஷதாம்ʼ ||
சாங்க்ய ஞானத்தைப் பின்பற்றுபவர்களின் இலக்கும் நீங்களே. யோகிகளின் பரம ஆதாரமும் நீங்களே. தாழ்ப்பாள் இல்லாத திறந்த வாயிலைப் போன்ற மோக்ஷ மார்க்கத்தின் இலக்கும் நீங்களே. மோக்ஷத்தை விரும்புபவர்களுக்கும் நீங்கள் அடைய வேண்டிய கதியாக இருக்கிறீர்கள்
त्वया संधार्यते लोकः ।
त्वया लोकः प्रकाश्यते ।
त्वया अपवित्री-क्रियते ।
निर्व्याजम् पाल्यते त्वया ।
த்வயா ஸந்தா⁴ர்யதே லோக: | த்வயா லோக: ப்ரகாஶ்யதே |
த்வயா அபவித்ரீ-க்ரியதே | நிர்வ்யாஜம்ʼ பால்யதே த்வயா | |
உங்களால் உலகம் தாங்கப்படுகிறது. உங்களால் உலகம் ஒளியூட்டப்படுகிறது. உங்களால் அது தூய்மைப்படுத்தப்படுகிறது. மனிதன் பதிலுக்கு நன்றி சொல்கிறானா? என்ற எந்த எதிர்பார்ப்பும் இன்றி உங்களால் இந்த உலகம் பாதுகாக்கப்படுகிறது.
त्वाम् उपस्थाय काले तु
ब्राह्मणाः वेद-पारगाः ।
स्व-शाखा-विहितैः मन्त्रैः अर्चन्ति ।
ऋषि-गण-अर्चित ।
த்வாம்ʼ உபஸ்தா²ய காலே து | ப்³ராஹ்மணா: வேத³-பாரகா³: |
ஸ்வ-ஶாகா²-விஹிதை: மந்த்ரைரர்சந்தி | ருʼஷி-க³ண-அர்சித ||
ரிஷிகளால் பூஜிக்கப்படுபவரே! வேதத்தின் கரை கண்ட பிராமணர்கள், உரிய காலத்தில், தங்கள் தங்கள் வேதசாகைகளில் விதிக்கப்பட்ட மந்திரங்களால் உங்களை வழிபாடு செய்கின்றனர்.
तव दिव्यम् रथम् यान्तम् अनुयान्ति वर-अर्थिनः ।
सिद्ध-चारण-गन्धर्वाः
यक्ष-गुह्यक-पन्नगाः ।
தவ தி³வ்யம்ʼ ரத²ம்ʼ யாந்தம்ʼ | அனுயாந்தி வர-அர்தி²ன: |
ஸித்³த⁴-சாரண-க³ந்த⁴ர்வா: | யக்ஷ-கு³ஹ்யக-பன்னகா³: ||
வரங்களை விரும்புகின்ற சித்தர்களும், சாரணர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், குஹ்யகரும், பன்னகரும், ஆகாயத்தில் நீங்கள் செலுத்திச் செல்லும் அந்த திவ்யமான ரதத்தைப் பின்தொடர்கின்றனர்.
त्रयस्त्रिंशत् च वै देवाः
तथा वैमानिकाः गणाः ।
स-उपेन्द्राः स-महेन्द्राः च
त्वाम् इष्ट्वा सिद्धिम् आगताः ।
த்ரயஸ்த்ரிம்ʼஶத் ச வை தே³வா: | ததா² வைமானிகா: க³ணா: |
ஸ-உபேந்த்³ரா: ஸ-மஹேந்த்³ரா: ச | த்வாம்ʼ இஷ்ட்வா ஸித்³தி⁴மாக³தா: ||
முப்பத்து மூன்று தேவர்களும், விமானங்களில் சஞ்சரிக்கும் தேவகணங்களும், உபேந்திரனுடனும் மகேந்திரனுடனும் சேர்ந்து, உங்களைப் பூஜித்து சித்தியை அடைந்துள்ளனர்.
उपयान्ति अर्चयित्वा तु त्वाम् वै प्राप्त-मनोरथाः ।
दिव्य-मन्दार-मालाभिः तूर्णम् विद्याधर-उत्तमाः ।
உபயாந்தி அர்சயித்வா து த்வாம்ʼ வை ப்ராப்த-மனோரதா: |
தி³வ்ய-மந்தா³ர-மாலாபி⁴: தூ³ர்ணம்ʼ வித்³யாத⁴ர-உத்தமா: ||
தங்கள் விருப்பங்கள் நிறைவேறிய சிறந்த வித்யாதரர்கள், திவ்யமான மந்தார மலர் மாலைகளால் உங்களை வழிபட்டு, விரைவாக உங்களின் பிரியத்துக்கு பாத்திரமாகிறார்கள்.
गुह्याः पितृ-गणाः सप्त
ये दिव्याः ये च मानुषाः ।
ते पूजयित्वा त्वाम् एव
गच्छन्ति आशु प्रधानताम् ।
கு³ஹ்யா: பித்ருʼ-க³ணா: ஸப்த | யே தி³வ்யா: யே ச மானுஷா: |
தே பூஜயித்வா த்வாம்ʼ ஏவ | க³ச்ச²ந்தி ஆஶு ப்ரதா⁴னதாம்ʼ ||
தேவலோகத்தில் உள்ள குஹ்யர்களும், தேவ சம்பந்தமும் மனுஷ்ய சம்பந்தமும் கொண்ட ஏழு வகையான பித்ரு கணங்களும் உங்களையே பூஜித்து சீக்கிரம் மேன்மை அடைகின்றனர்.
वसवः मरुतः रुद्राः
ये च साध्याः मरीचिपाः ।
वालखिल्य-आदयः सिद्धाः
श्रेष्ठत्वम् प्राणिनाम् गताः ।
வஸவ: மருத: ருத்³ரா: | யே ச ஸாத்⁴யா: மரீசிபா: |
வாலகி²ல்ய-ஆத³ய: ஸித்³தா⁴: | ஶ்ரேஷ்ட²த்வம்ʼ ப்ராணினாம்ʼ க³தா: ||
வசுக்களும், மருத்துக்களும், ருத்ரர்களும், ஸாத்யர்களும், மரீசியர்களும், வாலகில்யர் முதலான சித்தர்கள், உயிரினங்களில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர்.
स-ब्रह्मकेषु लोकेषु
सप्तसु अपि अखिलेषु च ।
न तत् भूतम् अहम् मन्ये
यत् अर्कात् अतिरिच्यते ।
ஸ-ப்³ரஹ்மகேஷு லோகேஷு | ஸப்தஸு அபி அகி²லேஷு ச |
ந தத் பூ⁴தம் அஹம்ʼ மன்யே | யத்³ அர்காத் அதிரிச்யதே ||
பிரம்ம லோகம் உள்ளிட்ட 7 உலகங்களும், மற்றும் அனைத்து உலகங்களிலும், உங்களை விட மேலானதாக யாரும் இருப்பதாக நான் அறியவில்லை.
सन्ति च अन्यानि सत्त्वानि
वीर्यवन्ति महान्ति च ।
न तु तेषाम् तथा दीप्तिः
प्रभावः वा यथा तव ।
ஸந்தி ச அந்யானி ஸத்த்வானி | வீர்யவந்தி மஹாந்தி ச |
ந து தேஷாம்ʼ ததா² தீ³ப்தி: | ப்ரபா⁴வ: வா யதா² தவ ||
வேறு பல உயிர்கள் வலிமைமிக்கவையாகவும் பெரியவையாகவும் இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு உங்களுடையதைப் போன்ற ஒளியோ, பிரபாவமோ இல்லை.
ज्योतींषि त्वयि सर्वाणि ।
त्वम् सर्व-ज्योतिषाम् पतिः ।
त्वयिसत्त्वं च सत्त्वं च सर्वेभावाश्च सात्त्विकाः ।।
ஜ்யோதீம்ʼஷி த்வயி ஸர்வாணி | த்வம்ʼ ஸர்வ-ஜ்யோதிஷாம்ʼ பதி: |
த்வயி ஸத்த்வம்ʼ ச ஸத்த்வம்ʼ ச ஸர்வே பா⁴வாஶ்ச ஸாத்த்விகா: ||
எல்லா ஜோதிகளும் உங்களிலேயே உள்ளன; அனைத்து ஜோதிகளுக்கும் நீங்கள் அதிபதி. உங்களிடத்தில் சத்வமும் நிலைபெற்றுள்ளது; அனைத்து சாத்விகமான நிலைகளும் உங்களிலேயே உள்ளன.
त्वत्-तेजसा कृतम् चक्रम्
सु-नाभम् विश्वकर्मणा ।
देव-अरीणाम् मदः येन
नाशितः शार्ङ्ग-धन्वना ।
த்வத்-தேஜஸா க்ருʼதம்ʼ சக்ரம்ʼ | ஸு-நாப⁴ம்ʼ விஶ்வகர்மணா |
தே³வ-அரீணாம்ʼ மத³: யேன | நாஶித: ஶார்ங்க³-த⁴ன்வனா ||
உங்களுடைய தேஜஸால், விஸ்வகர்மாவால் அழகிய நாபியைக் கொண்ட சக்கரம் உருவாக்கப்பட்டது. சார்ங்கத்தை வில்லாகக் கொண்ட விஷ்ணுவால், அந்தச் சக்கரத்தின் மூலம் தேவர்களின் பகைவர்களின் அகந்தை அழிக்கப்பட்டது.
त्वम् आदाय अंशुभिः तेजः
निदाघे सर्व-देहिनाम् ।
सर्व-औषधि-रसानाम् च
पुनः वर्षासु मुञ्चसि ।
த்வம்ʼ ஆதா³ய அம்ʼஶுபி⁴: தேஜ: | நிதா³கே⁴ ஸர்வ-தே³ஹினாம்ʼ |
ஸர்வ-ஔஷதி⁴-ரஸானாம்ʼ ச | புன: வர்ஷாஸு முஞ்சஸி ||
கோடைக்காலத்தில், உங்கள் கிரணங்களால் அனைத்து உயிர்களிடமிருந்தும் உள்ள சாரத்தையும், அனைத்து ஔஷதிகளின் சாரத்தையும் எடுத்துக்கொண்டு, மழைக்காலத்தில் அதை மீண்டும் வெளியிடுகிறீர்கள்.
तपन्ति अन्ये ।
दहन्ति अन्ये ।
गर्जन्ति अन्ये तथा घनाः ।
विद्योतन्ते प्रवर्षन्ति
तव प्रावृषि रश्मयः ।
தபந்தி அந்யே | த³ஹந்தி அந்யே | க³ர்ஜந்தி அந்யே ததா² க⁴னா: |
வித்³யோதந்தே ப்ரவர்ஷந்தி | தவ ப்ராவ்ருʼஷி ரஶ்மய: ||
சில கிரணங்கள் வெப்பமூட்டுகின்றன; சில எரிப்பதைப் போன்ற தீவிரத்தை அளிக்கின்றன. மழைக்காலத்தில் மேகங்கள் கர்ஜிக்கின்றன; உங்கள் கிரணங்கள் மின்னுகின்றன, மழையைப் பொழியச் செய்கின்றன.
न तथा सुखयति अग्निः
न प्रावाराः न कम्बलाः ।
शीत-वात-अर्दितम् लोकम्
यथा तव मरीचयः ।
ந ததா² ஸுக²யதி அக்னி: | ந ப்ராவாரா: ந கம்ப³லா: |
ஶீத-வாத-அர்தி³தம்ʼ லோகம்ʼ | யதா² தவ மரீசய: ||
குளிராலும் காற்றாலும் துன்புறும் உலகை, உங்கள் கிரணங்கள் அளிக்கும் அளவுக்கு நெருப்பும், மேலாடைகளும், கம்பளிகளும் சுகப்படுத்துவதில்லை.
त्रयोदश-द्वीपवतीम्
गोभिः भासयसे महीम् ।
त्रयाणाम् अपि लोकानाम्
हिताय एकः प्रवर्तसे ।
த்ரயோத³ஶ-த்³வீபவதீம்ʼ | கோ³பி⁴: பா⁴ஸயஸே மஹீம்ʼ |
த்ரயாணாம்ʼ அபி லோகானாம்ʼ | ஹிதாய ஏக: ப்ரவர்தஸே ||
13 தீவுகளுடன் கூடிய பூமியை கிரணங்களால் நீங்கள் பிரகாசப்படுத்துகிறீர்கள். மூன்று உலகங்களின் நன்மைக்கு நீங்கள் ஒருவரே செயல்படுகிறீர்கள்.
तव यदि उदयः न स्यात्
अन्धम् जगत् इदम् भवेत् ।
न च धर्म-अर्थ-कामेषु
प्रवर्तेरन् मनीषिणः ।
தவ யதி³ உத³ய: ந ஸ்யாத் | அந்த⁴ம்ʼ ஜக³த் இத³ம்ʼ ப⁴வேத் |
ந ச த⁴ர்ம-அர்த²-காமேஷு | ப்ரவர்தேரன்ʼ மனீஷிண: ||
உங்களுடைய உதயம் இல்லாவிட்டால், இந்த உலகம் இருளடைந்து விடும். நீங்கள் இல்லாமல் போனால், தர்மம், அர்த்தம், காமம் (அறம் பொருள் இன்பம்) என்ற லட்சியத்தை நோக்கி புத்திமான்கள் ஈடுபட முடியாது.
आधान-पशु-बन्ध-इष्टि-मन्त्र-यज्ञ-तपः-क्रियाः
त्वत्-प्रसादात् अवाप्यन्ते
ब्रह्म-क्षत्र-विशाम् गणैः ।
ஆதா⁴ன-பஶு-ப³ந்த⁴-இஷ்டி-மந்த்ர-யஜ்ஞ-தப:²-க்ரியா: |
த்வத்-ப்ரஸாதா³த் அவாப்யந்தே | ப்³ரஹ்ம-க்ஷத்ர-விஶாம்ʼ க³ணை: ||
உங்கள் அனுகிரகத்தாலேயே,
ஆதானம், பசுபந்தம், இஷ்டி, மந்திரம், யாகம், தவம் முதலிய வேதம் சார்ந்த கிரியைகள், உங்கள் அருளால் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்களால் நிறைவேற்றப்படுகின்றன
यत् अहः ब्रह्मणः प्रोक्तम्
सहस्र-युग-सम्मितम् ।
तस्य त्वम् अनादिः अन्तः च
कालज्ञैः परिकीर्तितः ।
யத்³ அஹ: ப்³ரஹ்மண: ப்ரோக்தம்ʼ | ஸஹஸ்ர-யுக³-ஸம்மிதம்ʼ |
தஸ்ய த்வம்ʼ அனாதி: அந்த: ச | காலஜ்ஞை: பரிகீர்தித: ||
பிரம்மாவின் எந்த பகலானது, ஆயிரம் யுகங்கள் அளவுள்ளது என்று சொல்லப்படுகின்றதோ, அதற்கு முதலாய் கடைசியாய் நீங்களே இருக்கிறீர்கள் என்று காலம் தெரிந்தவர்களால் சொல்லப்படுகிறீர்கள்.
मनूनाम् मनु-पुत्राणाम्
जगतः अमानवस्य च ।
मन्वन्तराणाम् सर्वेषाम्
ईश्वराणाम् त्वम् ईश्वरः ।
மனூனாம்ʼ மனு-புத்ராணாம்ʼ | ஜக³த: அமானவஸ்ய ச |
மன்வந்தராணாம்ʼ ஸர்வேஷாம்ʼ | ஈஶ்வராணாம்ʼ த்வம்ʼ ஈஶ்வர: ||
மனுக்களுக்கும், மனுவின் புதல்வர்களுக்கும், மனிதர்கள் அல்லாத உயிர்களைக் கொண்ட உலகத்திற்கும், அனைத்து மன்வந்தரங்களுக்கும், அவற்றின் ஈஸ்வரர்களுக்கும் நீங்களே ஈஸ்வரர்.
संहार-काले सम्प्राप्ते
तव क्रोध-विनिःसृतः ।
संवर्तक-अग्निः त्रैलोक्यम्
भस्मीकृत्य अवतिष्ठते ।
ஸம்ஹார-காலே ஸம்ப்ராப்தே | தவ க்ரோத⁴-வினி:ஸ்ருʼத: |
ஸம்வர்தக-அக்³னி: த்ரைலோக்யம்ʼ | ப⁴ஸ்மீக்ருʼத்ய அவதிஷ்ட²தே ||
சம்ஹார காலம் வந்தபோது, உங்கள் கோபத்திலிருந்து வெளிப்படும் சம்வர்த்தக அக்னி, மூன்று உலகங்களையும் சாம்பலாக்கி நிலைத்திருக்கிறது.
त्वत्-दीधिति-समुत्पन्नाः
नाना-वर्णाः महा-घनाः ।
स-ऐरावताः स-अशनयः
कुर्वन्ति आ-भूत-संप्लवम् ।
த்வத்-தீ³தி⁴தி-ஸமுத்பன்னா: | நானா-வர்ணா: மஹா-க⁴னா: |
ஸ-ஐராவதா: ஸ-அஶனய: | குர்வந்தி ஆ-பூ⁴த-ஸம்ப்லவம்ʼ ||
உங்கள் கிரணங்களிலிருந்து தோன்றிய பல நிறங்களைக் கொண்ட பெரிய மேகங்கள், ஐராவதர்களுடனும் மின்னல்களுடனும் கூடி, அனைத்து பூதங்களையும் மூழ்கடிக்கும் பெருவெள்ளத்தை ஏற்படுத்துகின்றன..
कृत्वा द्वादशधा आत्मानम्
द्वादश-आदित्यताम् गतः ।
संहृत्य एक-अर्णवम् सर्वम्
त्वम् शोषयसि रश्मिभिः ।
க்ருʼத்வா த்³வாத³ஶதா⁴ ஆத்மானம்ʼ | த்³வாத³ஶ-ஆதி³த்யதாம்ʼ க³த: |
ஸம்ஹ்ருʼத்ய ஏக-அர்ணவம்ʼ ஸர்வம்ʼ | த்வம்ʼ ஶோஷயஸி ரஶ்மிபி⁴: ||
தன்னை பன்னிரண்டு வகையாகப் பிரித்து, பன்னிரண்டு ஆதித்தியர்களின் தன்மையை அடைந்த நீங்கள், அனைத்தும் ஒன்றாகிய அந்த ஒரே பெருங்கடலையும் உங்கள் கிரணங்களால் வற்றச்செய்கிறீர்கள்.
त्वाम् इन्द्रम् आहुः ।
त्वम् रुद्रः । त्वम् विष्णुः ।
त्वम् प्रजापतिः ।
त्वम् अग्निः । त्वम् मनः सूक्ष्मम् ।
प्रभुः त्वम् ।
ब्रह्म शाश्वतम् त्वम् ।
த்வாம்ʼ இந்த்³ரம் ஆஹு: | த்வம்ʼ ருத்³ர: | த்வம்ʼ விஷ்ணு: | த்வம்ʼ ப்ரஜாபதி: |
த்வம்ʼ அக்³னி: | த்வம்ʼ மன: ஸூக்ஷ்மம்ʼ | ப்ரபு⁴: த்வம்ʼ | ப்³ரஹ்ம ஶாஶ்வதம்ʼ த்வம்ʼ ||
உங்களையே இந்திரன் என்று கூறுகின்றனர். நீங்களே ருத்ரன், விஷ்ணு, பிரஜாபதி, அக்னி. நீங்கள் சூட்சுமமான மனமும், பிரபுவும், நித்தியமான பிரம்மமும் ஆவீர்கள்.
त्वम् हंसः ।
सविता । भानुः । अंशुमाली । वृषाकपिः ।
विवस्वान् । मिहिरः । पूषा । मित्रः ।
धर्मः तथा एव च ।
த்வம்ʼ ஹம்ஸ: | ஸவிதா | பா⁴னு: | அம்ʼஶுமாலீ | வ்ருʼஷாகபி: |
விவஸ்வான் | மிஹிர: | பூஷா | மித்ர: | த⁴ர்ம: ததா² ஏவ ச ||
நீங்களே ஹம்ஸன், சவிதா, பானு, அஂசுமாலி, வ்ருஷாகபி, விவஸ்வான், மிஹிரன், பூஷா, மித்ரன், தர்மன் ஆகிய வடிவங்களில் போற்றப்படுகிறீர்கள்.
सहस्र-रश्मिः आदित्यः ।
तपनः त्वम् ।
गवाम् पतिः ।
मार्तण्डः । अर्कः । रविः । सूर्यः ।
शरण्यः । दिन-कृत् तथा ।
ஸஹஸ்ர-ரஶ்மி: ஆதி³த்ய: | தபன: த்வம்ʼ | க³வாம்ʼ பதி: |
மார்தண்ட³: | அர்க: | ரவி: | ஸூர்ய: | ஶரண்ய: | தி³ன-க்ருʼத் ததா² ||
ஆயிரம் கிரணங்களைக் கொண்ட ஆதித்தியரும், வெப்பத்தை அளிப்பவரும், பசுக்களின் அதிபதியும் நீங்களே. மார்த்தாண்டன், அர்க்கன், ரவி, சூரியன், சரண்யன், பகலை உருவாக்குபவன் ஆகிய பெயர்களாலும் நீங்களே அழைக்கப்படுகிறீர்கள்.
दिवा-करः । सप्त-सप्तिः ।धाम-केशी । विरोचनः ।
आशु-गामी । तमः-घ्नः च । हरित-अश्वः च । कीर्त्यसे ।
தி³வா-கர: | ஸப்த-ஸப்தி: | தா⁴ம-கேஶீ | விரோசன: |
ஆஶு-கா³மீ | தம:க்⁴ன: ச | ஹரித-அஶ்வ: ச | கீர்த்யஸே ||
பகலை உருவாக்குபவர், ஏழு குதிரைகளைக் கொண்டவர், ஒளிக்கதிர்களை உடையவர், பிரகாசிப்பவர், விரைவாகச் செல்பவர், இருளை அழிப்பவர், பச்சை/ஹரித நிறக் குதிரைகளைக் கொண்டவர் நீங்களே.
सप्तम्याम् अथवा षष्ठ्याम्
भक्त्या पूजाम् करोति यः ।
अनिर्विण्णः अनहंकारी
तम् लक्ष्मीः भजते नरम् ।
ஸப்தம்யாம் அத²வா ஷஷ்ட்²யாம் | ப⁴க்த்யா பூஜாம்ʼ கரோதி ய: |
அநிர்விண்ண: அநஹங்காரீ | தம்ʼ லக்ஷ்மீ: ப⁴ஜதே நரம்ʼ ||
ஸப்தமியிலோ, ஸஷ்டியிலோ எவன் மன சோர்வு இல்லாமல், வெறுப்பும் அகங்காரமும் இல்லாமல், பக்தியுடன் உங்களை பூஜை செய்கிறானோ அந்த மனிதனுக்கு லக்ஷ்மி அருள்புரிகிறாள்.
न तेषाम् आपदः सन्ति ।
न आधयः व्याधयः तथा ।
ये तव अनन्य-मनसा
कुर्वन्ति अर्चन-वन्दनम् ।
ந தேஷாம்ʼ ஆபத: ஸந்தி | ந ஆத⁴ய: வ்யாத⁴ய: ததா² | யே தவ அநன்ய-மனஸா | குர்வந்தி அர்சன-வந்த³னம்ʼ ||
எவர்கள் பூஜை செய்யும் போது, வேறிடத்தில் மனதை செலுத்தாமல், உங்களுக்கு பூஜையும், நமஸ்காரமும் செய்கிறார்களோ, அவர்களுக்கு ஆபத்துகள் இல்லை; அதுபோல மனவேதனைகளும் நோய்களும் அவர்களைப் பாதிக்காது.
सर्व-रोगैः विरहिताः ।
सर्व-पापैः विवर्जिताः ।
त्वत्-भाव-भक्ताः
सुखिनः भवन्ति चिरंजीविनः ।
ஸர்வ-ரோகை: விரஹிதா: | ஸர்வ-பாபை: விவர்ஜிதா: |
த்வத்-பா⁴வ-ப⁴க்தா: | ஸுகி²ன: ப⁴வந்தி சிரஞ்ஜீவின: ||
உங்களை பக்தியோடு மனதில் நினைப்பவர்கள், எல்லா வியாதிகளாலும் விடுபட்டு, எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட்டு, சுகமாக வெகு காலம் ஜீவிக்கும் பாக்கியத்தை அடைகிறார்கள்.
त्वम् मम आपन्न-कामस्य
सर्व-अतिथ्यम् चिकीर्षतः ।
अन्नम् अन्न-पते
दातुम् अभितः श्रद्धया अर्हसि ।
த்வம்ʼ மம ஆபன்ன-காமஸ்ய | ஸர்வ-அதித்யம்ʼ சிகீர்ஷத: |
அன்னம்ʼ அன்ன-பதே | தா³தும் அபி⁴த: ஶ்ரத்³த⁴யா அர்ஹஸி ||
ஓ அன்னத்தின் அதிபதியே! நிறைவேற்ற வேண்டிய விருப்பத்துடன், அனைவருக்கும் அதிதி உபசாரம் செய்ய விரும்பும் என்னிடம், நீங்கள் அன்னத்தை அளிக்க அருள வேண்டும்.
ये च ते अनुचराः सर्वे
पाद-उपान्तम् समाश्रिताः ।
माठर-अरुण-दण्ड-आद्याः
तान् तान् वन्दे अशनिक्षुभान् ।
யே ச தே அனுசரா: ஸர்வே | பாத³-உபாந்தம்ʼ ஸமாஶ்ரிதா: |
மாட²ர-அருண-த³ண்ட³-ஆத்³யா: | தான்ʼ தான்ʼ வந்தே³ அஶனிக்ஷுபா⁴ன்ʼ ||
உங்கள் பாதங்களின் அருகில் தங்கியிருக்கும் உங்கள் அனைத்து அனுசரர்களையும், மாடரர், அருணர், தண்டர் முதலியவர்களையும் நான் தனித்தனியாக வணங்குகிறேன்.
क्षुभया सहिता मैत्री
याः च अन्याः भूत-मातरः ।
ताः च सर्वाः नमस्यामि ।
पान्तु माम् शरणागतम् ।
க்ஷுப⁴யா ஸஹிதா மைத்ரீ | யா: ச அந்யா: பூ⁴த-மாதர: |
தா: ச ஸர்வா: நமஸ்யாமி | பாந்து மாம்ʼ ஶரணாக³தம்ʼ ||
க்ஷுபையுடன் சேர்ந்த மைத்ரி தேவியையும், மற்ற அனைத்து பூத மாதர்களையும் நான் வணங்குகிறேன். சரணம் அடைந்த என்னை அனைவரும் காப்பாற்றுங்கள்.
இவ்வாறு பிரார்த்தனை செய்ய, சூரிய தேவன் பிரத்யக்ஷமாகி, அக்ஷய பாத்திரத்தை கொடுத்தார்.
வன பர்வம் - வியாச mahaabaaradham





