Followers

Search Here...

Wednesday 11 October 2017

ஸ்ரீ ராமரை பற்றி ஆஞ்சநேயர்


ஆஞ்சநேயர் ஸ்ரீ ராமரை பற்றி:
ஒருவர் சிறந்த
1. புத்திசாலியாகவும்,
2. மிகுந்த பலசாலியாகவும்,
3. சுறுசுறுப்பாகவும்,
4. மிகவும் புகழ் பெற்றவராகவும்,
5. புலன்களை அடக்கியவராகவும்,
6. மகா தைரியசாலியாகவும்,
7. பயம் அறியாத சுத்த வீரனாகவும்,
8. ஆரோக்யம் உடையவராகவும்,
9. சிறந்த கல்வி தேர்ச்சி பெற்றவராகவும்,
10. சிறந்த பேச்சுத்திறமை உள்ளவராகவும்
ஒரு சேர காண முடியாது.



இதில் நமக்கு, ஏதாவது ஒன்று இரண்டு இருந்தாலே, கர்வம் தலைக்கு மேல் ஏறி விடும்.

இவை அனைத்தையும் ஒரு சேர கொண்டவர் ஸ்ரீ ஆஞ்சநேயர்,

ஆனால் இவரோ, "ராமருக்கு நான் தாசன்" என்று கர்வமே இல்லாமல், கை குவித்து நிற்கிறார்.
ஸ்ரீ ராமரை அந்த பரவாசுதேவன் "நாராயணன்" என்று உணர்ந்து இருந்தார்.

இத்தனைக்கும் ஸ்ரீ ராமர், தான் ஒரு ராஜ குடும்பத்தை சேர்ந்தவன். அயோத்தி அரசர், தசரதனின் மகன். ஒரு மனிதன் என்று சொல்லிக்கொண்டார்.
இது போதாது என்று, ஸ்ரீ ஆஞ்சநேயரை துணைக்கு வேறு அழைத்துக்கொண்டார்.


வயதிலும் மூத்தவரான, ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்ரீ ராமரை பகவான் என்று எப்படி உணர்ந்தார்?

மாயாஜாலம், மருத்துவம், பலம்  இவற்றையெல்லாம் வைத்து, யாரையும் பகவான் என்று சொல்ல கூடாது. சாஸ்திரம் பகவானின் குணங்கள் என்ன என்று சொல்கிறது.

நோய் தீர்ப்பவர் கடவுள் என்று நினைத்தால், எல்லா மருத்துவரும் கடவுள் என்று சொல்ல வேண்டியது தான்.

கடவுளை பலத்தாலோ, மாயாஜாலத்தாலோ, கண்டு பிடிக்கமுடியாது. கண்டு பிடிக்கவும் கூடாது.
போலி மதங்கள் இப்படி ஏமாற்றியே தான் மக்களை ஏமாற்றி வளர்ந்தன. ஏமாற்றுகின்றன.

சாதாரணமாக, ஒரு மனிதன் தன்னை தாழ்த்தி கொள்ள, "நான் நாய் போன்று நன்றியுடன் இருப்பேன்" என்று சொல்லுவான்.
கொஞ்சம் உயர்வாக தன்னை எண்ணும் போது "நான் கடவுள்" என்பான்.

மனிதர்களை விட உயர்ந்தவர்கள் தேவர்கள். தேவர்களை பொறுத்தவரை, மனித பிறவியே தாழ்ந்த பிறவி.
தேவர்களையும் விட உயர்ந்த லோகத்தில் இருப்பவர்கள், ரிஷிகள்.
அவர்களுக்கும் மேல் லோகத்தில் இருப்பவர் ப்ரம்மா.
இவை அனைத்தையும் படைத்தவர் பரவாசுதேவன்.

மனிதர்களில் சிலர் "நான் கடவுள்" என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுவது போல, பரவாசுதேவன், ஸ்ரீ ராமனாக அவதாரம் செய்து, "நான் மனிதன்" என்று சொல்லிக்கொள்ள ஆசைப்பட்டார். மனிதனாக தர்ம வழியில் வாழ்ந்து காட்ட, அவதாரம் செய்ததால், யார் கேட்டாலும், "நான் மனிதன்" என்று சொல்லிக்கொண்டார்.

முடிந்தவரை, தான் மனிதனாகவே இருக்க முயற்சி செய்தார். ஆனாலும், இவரின் வேடம் யாரிடமும் பலிக்கவில்லை.

ஸ்ரீ ஆஞ்சநேயரிடமோ, சீதையிடமோ, சகோதரர்களிடமோ, சபரியிடமோ, பெற்றோர்களிடமோ, விஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகத்தியர், போன்ற ரிஷிகளிடமோ, மாரீசன், கும்பகர்ணன் விபீஷணன் போன்ற அரக்கர்களிடமோ கூட  பலிக்கவில்லை. இன்று வரை இவர் சரித்திரம் நமக்கு தேவைப்படுகிறது.

இவர் "நான் மனிதன்" என்று சொன்னாலும் இவர்கள் யாவரும் இவரை அந்த பரவாசுதேவன் என்று அனைவரும் உணர்ந்து இருந்தனர்.

பகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்களை விஷ்ணு புராணம் சொல்கிறது.
1. பூர்ணமான ஐச்வர்யம்
2. பூர்ணமான தர்மம்
3. பூர்ணமான புகழ்
4. பூர்ணமான ஸ்ரீ
5. பூர்ணமான வைராக்யம்
6. பூர்ணமான மோக்ஷம்
ஸ்ரீ ஆஞ்சநேயர் இந்த லக்ஷணங்களை ஸ்ரீ ராமரிடத்தில் கண்டார்.

ஸ்ரீ ஆஞ்சநேயரிடம், "ஸ்ரீ ராமர் பகவான் என்று தெரிந்தும், நீங்கள் மட்டும், அவரிடம் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீ ராமர் எப்படி இருப்பார்? எப்படி பழகுவார்?" என்று கேட்டால்,

ஸ்ரீ ஆஞ்சநேயர் சொல்கிறார்,
"ஸ்ரீ ராமரை பார்க்கும்போதே பகவான் என்று நமது ஆத்மா உணரும். அவரின் கண்கள் கருணை என்ற குளிர்ச்சியை வர்ஷிக்கும். நமக்கு பார்க்கும் போதே குளிர்ச்சியாக இருக்கும்.
பார்க்கும் போதே நம் மனம் சாந்தி அடையும்.
பேதம் பார்க்காமல் அனைவரிடமும் சமமாக  பழகுவார்.
நம் குறையே அவர் கண்ணுக்கு தெரியாது.
நம்மில் இருக்கும் ஒரு சிறு நிறையையும் பெரிதாக நினைத்து அன்போடு பழகுவார். கருணையே வடிவமாக கொண்டிருப்பார்.
நீல வர்ணமாக இருக்கும் ஸ்ரீ ராமரை பார்த்தாலே, அனைவருக்கும் அவரிடம் போய் பேசலாமா? பழகலாமா? என்று ஆசை வரும்.
அவரும் நம்மிடம் ஆசையாக பழக முன் வருவார். ஆனால், நான் அவரிடம் நெருங்கி பேசலாம் என்று முயற்சி செய்யும் போது, அவரின் எண்ணிலடங்கா பகவத் குணங்கள் என்னை ஒரு ஜீவன் என்று உணர்த்தி விடுகிறது.
பரமாத்மாவிடம் நெருங்கும் ஜீவன், தன்னை தாசன் என்று உணர்வது போல, ஸ்ரீ ராமரை நெருங்கும் போதெல்லாம் நான் தாசன், அவர் பரவாசுதேவன் என்ற நினைவு வந்து விடுகிறது. நான் ராம தாசன் ஆகி விடுகிறேன்.

ஒருவேளை நமக்கு தெரிந்த 1000 நற்குணங்கள் யாவும் ஸ்ரீ ராமரிடம் உள்ளதா என்று பார்க்க முயற்சித்தால், அதைவிட அதிகமான நற்குணங்கள் கொண்டு இருப்பார். குணக்கடலாக இருக்கிறார்.



பொதுவாக கடலை காணும் போது, மனிதர்களுக்கு ஏதோ புரியாத சந்தோஷம் உருவாகிறது.
சிலருக்கு பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
சிலருக்கு கடலில் நீந்தலாம் என்றும் தோன்றுகிறது.
சிலருக்கு கடலில் பயணம் செய்யலாம் என்று தோன்றுகிறது.
சிலருக்கு கடலில் முங்கி குளிக்கலாம் என்று தோன்றுகிறது.
சிலருக்கு கடலில் உள்ளே சென்று முத்து எடுக்கலாம் என்று தோன்றுகிறது.
ஆனால் யாருமே, கடலை முழுவதும் அறிந்தவர்கள் இல்லை.

அதே போல, ஸ்ரீ ராமரின் குணம் என்ற கடலை கண்டு ஆனந்தப்பட்டு அருகில் வருபவன், கடல் அருகே வந்து அதன் கம்பீரத்தை, பலத்தை பார்த்து, அப்படியே கரையில் நின்று விடுவது போல, அவர் அருகில் சென்ற பிறகு  அமைதியாக நின்று விடுகிறேன்.
பார்ப்பதற்கு கடல் போல குளிர்ச்சியாக இருக்கிறார். அவரின் தரிசனம் மட்டுமே திருப்தி அளிக்கிறது" என்றார் ஹனுமான்.

Tuesday 3 October 2017

தவறு செய்தாலும் பரிகாரம் கேட்காத உத்தமர்கள் - பரிக்ஷித், தசரதர்.. நல்லவர்கள் சில சமயம் செய்யும் தவறை, நாம் ஒரு போதும் சொல்லி காட்ட கூடாது


தவறு செய்தாலும், துக்கம் வந்தாலும், பரிகாரம் (பாவ மன்னிப்பு) கேட்காத பக்தன்:

கலி ஆரம்ப சமயம்:
வேட்டையாட சென்ற பரீக்ஷித், ஏதோ  ஒரு கோபத்தில் சமீகர் என்ற ரிஷி மீது, அங்கு இருந்த செத்த பாம்பை அவர் கழுத்தில் போட்டு விட்டு, சென்று விட்டார்.


ரிஷியின் 7 வயது மகன்  ஸ்ருங்கி இதை பார்த்து, 'இப்படி செய்தவன் 7ஆம் நாள் தக்ஷகன் என்ற பாம்பு கடிக்க கடவது' என்று சபித்துவிட்டான்.

அரண்மனை சென்றிருந்த பரீக்ஷித் "இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டோமே! அர்ஜுனனின் பேரன், அபிமன்யு மகனாக, ஸ்ரீ கிருஷ்ணரை குல தெய்வமாக கொண்ட இந்த பரம்பரையில், நாம் பிறந்து, எப்படி இப்படி ஒரு காரியம் செய்தோம்?
தன் தாத்தா 'தர்மபுத்திரர் யுதிஷ்டிரர்' அரசாண்ட இந்த அரசாட்சியில், நாம் இப்படி ஒரு அதர்ம காரியத்தை செய்து விட்டோமே!
மக்கள் தவறு செய்தால், அரசன் தண்டனை கொடுப்பான். அரசனான நானே செய்த இந்த குற்றத்துக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்?
இந்த அரசனுக்கு, பகவானே, நீயே தகுந்த  தண்டனை கொடு"
என்று மிகவும் மனம் வருந்தி கேட்டுக் கொண்டார்.

இந்த சமயம், அங்கு வந்த சமீகரின் சிஷ்யர்
'7ஆம் நாள் தக்ஷகன் என்ற பாம்பு கடிக்க கடவது என்று சமீகரின் மகன் உங்களை சபித்துவிட்டார், இதை உங்களுக்கு தெரிவித்து விட சொன்னார்'
என்று சொல்லிவிட்டு சென்றார்.


கலியில், சில சமயங்களில் மிகவும் நல்லவர்களும், சில தவறு செய்து விடுவார்கள்.

இவர்கள் நல்லவர்களாக இருப்பதால், இப்படி செய்தோமே!! என்று பிறகு  வருந்தவும் செய்வாரகள். இது கலியின் தோஷம்.

ஆகையால், நல்லவர்கள் சில சமயம் செய்யும் தவறை, நாம் ஒரு போதும் சொல்லி காட்ட கூடாது.

இவர்கள் பொதுவாக எத்தனை நல்லவர்களாக இருந்தார்கள் என்று நினைத்து, கலியில் சில சமயம் நல்லவர்களின் புத்தியும், அவர்களையும் மீறி செயல் படுத்த செய்து விடும் என்று அவர்கள் தவறுகளை நம் மனதில் நிறுத்தி  கொள்ளாமல், தள்ளி விட வேண்டும்.

இப்பொழுது ஒரு கேள்வி!
சபித்த விஷயத்தை எதற்காக தன் சிஷ்யர்களை விட்டு உடனே சொல்ல சொன்னார்? சொல்லாமல் இருந்திருக்கலாமே?




இதற்கு காரணம், சாபம் பலித்தால், இன்னும் 7 நாளில் அரசன் மடிந்து விடுவான்.
அரசன் இல்லாத நாடு என்ன நிலையாகும்?? மக்கள் கஷ்டப்படுவார்கள். நல்லவர்களை  காத்த அரசன் போனால், தீயவர்கள் பெருகுவார்கள். அதர்மம் பெருகும்.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான், சமீகர் விஷயத்தை உடனே பரீக்ஷித்திடம் சொல்ல சொன்னார்.

பொதுவாக உலகில் அனைவருக்கும் துன்பம் வருகிறது.
துன்பத்திற்கு  காரணம், அவன் இந்த ஜென்மத்திலோ, போன ஜென்மங்களிலோ செய்த கர்மாவே, செயல்களே காரணம்.

தெரிந்தோ தெரியாமலோ, அகலிகை போன்ற, நலகூபுர போன்ற தேவர்கள் கூட சில சமயம் தவறு செய்து சாபத்தை வாங்கினர். 

சாபம் கொடுத்தவர்களிடமே இவர்கள் சென்று, பரிகாரம் கேட்டு, அந்த சாபத்திலிருந்து தப்பித்து உள்ளனர். 
அகலிகை 'கல்லாக போ' என்று சபிக்கப்பட்டதும், பரிகாரம் கேட்க, ஸ்ரீ ராமரின் பாத தூளி பட்டால், சாபம் விலகும் என்று பரிகாரத்தை அறிந்தாள்.

இப்படி சாபத்துக்கு பரிகாரம் உண்டு என்பதால், ஒரு வேளை, பரீக்ஷித் மகாராஜன் பரிகாரம் கேட்டால், பரிகாரம் சொல்லி காப்பாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் தான், சமீகர் தன் சிஷ்யனை அனுப்பி வைத்தார்.

சரித்திரத்தை ஆதியில் இருந்து பார்க்கும் போது, தான் செய்த தவறுக்கு, வரும் கஷ்டத்தை, சாபத்தை, பரிகாரம் கேட்காமல் ஏற்றுக்கொண்டவர்கள் இருவர் மட்டுமே!!

  1. ஒருவர், ஸ்ரீ ராமரின் தந்தை 'தசரதர்',
  2. மற்றொருவர், 'பரீக்ஷித்'.

வேட்டையாட வந்த தசரதர், "யானைதான் தண்ணீர் குடிக்கின்றது" என்று நினைத்து, ஒலி வந்த திசை நோக்கி அம்பு விட்டார்.
ஆனால், தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த ஸ்ரவனன் என்ற 16 வயது சிறுவனை தவறுதலாக அம்பு எய்து கொன்றுவிட்டார்.


"தான் செய்த தவறுக்கு பகவானே ஒரு தண்டனை தரட்டும்" என்று நினைத்த தசரதர், அவர் நினைத்தது போலவே, ஸ்ரவனனின் கண் தெரியாத அவர் தந்தை, "எப்படி நாங்கள் எங்கள் குழந்தையை இழந்து, உயிரை விட போகிறோமோ, அதே போல, நீயும் உன் பிள்ளைகளை இழந்து உயிரை விடுவாய்" என்று சபித்தார்.


"செய்த தவறுக்கு, சரியான தண்டனை கிடைத்தது" என்று, தசரதரும் அவரிடம் பரிகாரம் கேட்கவில்லை.
அதே போல, இங்கு பரீக்ஷித் மகாராஜனும் பரிகாரம் கேட்கவில்லை.

"உயிரே போகும் துக்கம் வந்தாலும், இதற்கு தெய்வம் தான் காரணம், தெய்வம் உதவி செய்யவில்லை" என்று உண்மையான பக்தன் சொல்ல மாட்டான்.
மாறாக,
"இது என் கர்மத்துக்கான வினை" என்று மேலும் பகவானை நெருங்குவான், பக்தி செய்வான்.

"உயிரே போகும் துக்கம் வந்தும், பகவானை குறை சொல்லாமல், பக்தி செய்தவர்" பரீக்ஷித் மகாராஜன்.
இதுவே நமக்கு பாடம்.

சமாதானம் அடைய முடியாமல், மனம் வருந்திக் கொண்டிருந்த பரீக்ஷித், "தனக்கு இப்படி ஒரு தண்டனை தகும்" என்று ஏற்றுக்கொண்டார்.

"உடனே தக்ஷகன் கடித்து சாகாமல், தனக்கு 7 நாள் அவகாசம் கொடுத்து இருக்கிறாரே!!" என்று மகிழ்ந்து, அப்படியே ராஜ்யத்தை மந்திரிகளிடமும், தன் மகன் ஜனமேஜெயனுக்கு விட்டு விட்டு, கங்கை நதி ஓரம் வந்து அமர்ந்தார்.

அங்கு வந்த ரிஷிகள், ஒவ்வொருவராக, நடந்த விஷயத்தை பற்றி விசாரிக்க முயல, பரீக்ஷித் விசாரிப்பதை  நிறுத்தச்சொன்னார்.

பொதுவாக, ஒருவனுக்கு துக்கம் வரும் போது, தன் கஷ்டத்தை பற்றி குறைந்த பட்சம் யாராவது விசாரிப்பார்களா?? என்று எதிர்பார்ப்பார்கள். இது இயற்கை.

இறந்தவன் வீட்டில் சென்று, துக்கம் விசாரிப்பார்கள்.
துக்கம் விசாரிப்பதால், இறந்தவன் வரப்போவதில்லை.

விசாரித்தால், துக்கத்தில் உள்ளவனுக்கு ஒரு மன ஆறுதல் கிடைக்கும்.

ஞானி போன்ற வைராக்ய நிலையில் இருந்த பரீக்ஷித்துக்கு, இப்படி ரிஷிகள் வந்து விசாரிப்பது தேவைப்படவில்லை.

"இந்த சாபம் தனக்கு ஏற்பு உடையது தான்" என்று துக்கம் அடையாமல், இனி இந்த 7 நாளில் என்ன செய்ய வேண்டும்? எதை உண்மையில் தெரிந்து கொள்ள வேண்டும்?
என்ற கேள்வியுடன் அமைதியாக அமர்ந்திருந்தார்.

வந்த ரிஷிகள், பரீக்ஷித்தின் பக்குவ நிலையை பார்த்து,
'நாங்கள் இவரை சாந்தமாக ஆக்க விசாரிக்க வந்தால், இவரோ, 7ஆம் நாள் மரணம் என்று தெரிந்தும், சாந்தமாகவே இருக்கிறாரே' 
என்று ஆச்சர்யப்பட்டனர்.

ரிஷிகள் கூட்டம், பரீக்ஷித் மகராஜனை சூழ்ந்து அமைதியாக அமர்ந்தனர்.

மனிதராக பிறந்தவன் உண்மையில் எதை தெரிந்து கொள்ள வேண்டும்? என்ற கேள்வியுடன் இருந்த பரீக்ஷித் மகாராஜனை பார்க்க வ்யாசரின் புத்திரர் 'சுகர்' வந்தார்.
7 நாளும் பாகவதம் சொன்னார்.
பாகவதம் கேட்டதனாலேயே பரீக்ஷித் முக்தி பெற்றார்.

குருவே துணை

மௌன விரதம் பற்றி விநாயகர், வ்யாசரிடம் உரையாடல்


மகாபாரதம் கடைசி ஸ்லோகத்தை சொல்லி, அதை விநாயகர் எழுதி முடித்தவுடன், வேத வியாசர், பெருமிதம் கொண்டு, விநாயகரை பார்த்து சொன்னார்,

"விநாயகரே !! தெய்வ கிருபையால் என் வாக்கில் இருந்து வந்த 20,000துக்கும் மேலான மகா பாரத ஸ்லோகங்களை, நீங்கள் ஆச்சர்யமாக அதே வேகத்தில் எழுதி விட்டீர்கள். இது ஒரு ஆச்சர்யம் என்பதை விட, நீங்கள் எழுதுவதிலேயே கவனம் கொண்டிருந்தீரே தவிர, ஒரு பேச்சு ஒரு கேள்வி உங்களிடம் இருந்து வரவில்லை. நீங்கள் இத்தனை நேரமும் காத்த அமைதியே, மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கிறது" என்று விநாயகரை கொண்டாடினார்.

விநாயகர், ஆச்சர்யமாக பேசலானார்.
வேத வ்யாஸரை பார்த்து,




"வேத ரிஷியே !! பொதுவாக யாவருக்கும் இத்தனை காலம் தான் வாழ்க்கை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எறியும் விளக்கிற்கும் கூட ஆயுசு உண்டு.

இப்படிப்பட்ட குறுகிய காலம் வாழப்போகும் ஒருவன், அறிவாளியாக இருக்கும் பட்சத்தில், இருக்கும் சக்தியை வீணடித்து, இருக்கும் குறுகிய ஆயுசை இன்னும் குறைத்துக் கொள்ள மாட்டான்.
மனம், வாக்கு, காயம் முதலியவைகளை ஒரு அறிவாளி, வீணாக பயன்படுத்த மாட்டான்.

எவன் ஒருவன் சுய கட்டுப்பாட்டுடன் மனம், வாக்கு, காயம் முதலியவைகளை தன் வசம் வைத்து இருக்கிறானோ, அவனுக்கு, சக்தி ஒருங்கிணைந்து, செய்யும் எந்த காரியத்திலேயும் வெற்றி கிடைக்கும்.

முதலில், அனைவரும் கடைபிடிக்க வேண்டிய விரதம், "மௌன விரதமே".
இந்த மௌன விரதமே, என் சக்தி அனைத்தும் நான் எழுதும் போது, ஒருங்கிணைத்து உதவி செய்தது.

வாய் ஓயாது உலக விஷயம் பேசுபவன், தன் சக்தியை இழக்கிறான். நான் மௌன விரதத்தின் மகத்துவம் அறிந்தவன்" என்றார்.

Make effective communication, rest, be in mouna vradham. It saves energy.

--- மௌன விரதம்.

சயன கோலத்தில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாதர் கைகளை காட்டி என்ன சொல்கிறார் ?


பெருமாள் ஒரு கையை தலை பக்கமும், தன் இன்னொரு நீண்ட கையை கால் பக்கமும் நீட்டி சயன கோலத்தில் காட்சி தருகிறார்.
இதை எல்லோரும் பார்த்து இருப்போம். இதன் உண்மை உணர்ந்தால், பெருமாள் யார் என்று தெரியும், பக்தியும் தானே வரும்.





நன்றாக கவனித்தால், பெருமாள் நம்மிடம், தன் தலையில் உள்ள பெரிய கிரீடத்தை காட்டி, 'வாழும் காலத்தில், யார் யாரையோ நம்பிக்கொண்டு, ஏமார்ந்து, கடைசியில் ஒருவரும் காக்க முடியாத மரணம் வந்து, இத்தனை நாள் யார் யாரையோ நம்பி வாழ்ந்தது வீண் என்று வெறுத்து, கிடைத்த மனித பிறவியை வீண் செய்யாமல், இந்த உலகத்தையும், உன்னையும் படைத்த மகாராஜன் நான் என்று பார்.
நான் காப்பாற்ற முடிவு செய்தவனை, உலகமே எதிர்த்து கவிழ்க்க நினைத்தாலும் முடியாது.
நான் உலகை படைத்த மகா ராஜா என்று தெரிந்தால் மட்டும் போதுமா, இதோ என் காலை இறுக பிடித்துக் கொள். சம்சார சாகரத்தில் இருந்தும் நான் உன்னை விடுவித்து, மோக்ஷம் தருகிறேன்.

குருவே துணை - ஜூலை 23, 2017

பெருமாள் 'அபய ஹஸ்தம்' அர்த்தம் என்ன?


கோவிலுக்கு போகும் பக்தன்,
அர்ச்சகர் தனக்கு என்ன கொடுப்பார்?,
ஏன் மாலை தனக்கு கொடுக்கவில்லை?
அர்ச்சகர் பக்கத்தில் இருந்தவருக்கு என்ன கொடுத்தார்?
என்று யார் என்ன கொடுக்கிறார்கள் என்று பார்த்து,
யாரை காண வந்தோமோ அவரை பார்க்காமல் விட்டு விட கூடாது.

அவர் என்ன கொடுத்தார், இவர் என்ன கொடுத்தார் என்று எண்ணத்தை சிதற விட்டு, வந்த நோக்கத்தை விடக்கூடாது.


நமக்கு தேவையான ஒன்றை யாரும் தரமுடியாத ஒன்றை பெருமாள் வைத்துக்கொண்டு நமக்காக நிற்கிறார். நமக்காகவே நிற்கிறார்.
உலகத்தையும், உன்னையும் படைத்த பெருமாள், கையை கவனித்தால், அவர் நமக்கு என்ன தருகிறார் என்று தெரிந்து விடும்.

கோவிலுக்கு வந்து, அவர் முன் வீண் பேச்சு பேசி, யார் என்ன கொடுக்கிறார்? என்று பார்க்க கூடாது.
உலகில் பல வித துன்பங்கள், ஆபத்துகள், மரணத்துக்கு நடுவே நிற்கும் நமக்கு, பெருமாள் தன் கையை காட்டி 'அபயம்' என்று சொல்கிறார்.

அர்ச்சகர் தீர்த்தம் கொடுத்தாரா?
100 ரூபாய் கொடுத்தேனே ஒரு மாலை போட்டாரா?
என்று கேட்டு, நமக்கு தேவையான சொல்லான 'பயப்படாதே' என்ற அபயம் கொடுக்கும் பெருமாளை கவனிக்க மறந்து விடக்கூடாது.
பெருமாள் 'அபயம்' என்று சொன்ன பின், உலக பயம் என்பது நமக்கு ஏது?

குருவே துணை

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka