Followers

Search Here...

Showing posts with label அ உ ம. Show all posts
Showing posts with label அ உ ம. Show all posts

Sunday 28 January 2018

"ஓம்" என்ற ஓங்கார ப்ரணவத்தின் விளக்கம் என்ன? - ஹிந்துக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டாமா?...




'நமோ' என்றால் என்ன?
'நாராயணா' என்றால் என்ன?

ந ம: (நமோ) என்ற சம்ஸ்க்ரித சொல்லுக்கு 'நான் (மம) இல்லை' என்று அர்த்தம். 
நான் என்ற கர்வத்தை போக்குகிறது.

நர அயணம் (நாராயண) என்ற சம்ஸ்க்ரித சொல்லுக்கு 'நரர்களுக்கு (நர) அடைக்கலமாக (அயணம்) இருப்பவர்' என்று அர்த்தம். 

'நமோ நாராயணா' என்று சொல்லும் போது, 'நான் என்ற கர்வம் விட்டு, நமக்கெல்லாம் அடைக்கலம் தரும் அந்த பரமாத்மா வாசுதேவனை தியானிக்க வேண்டும்'

'ஓம்' என்ற சொல் 'பரமாத்மாவே இந்த தேகத்தில் இருக்கிறார்.. அதே சமயம் அவர் தனித்த பொருள்' என்றும் அறிவு தருகிறது...

'ஓம்' என்ற சொல்லுக்கு அர்த்தம் மேலும் தெரிந்து கொள்வோம்....

"ஓம்" என்ற ப்ரணவத்தில் இருந்து தான் "வேதங்கள்" வெளிப்பட்டது.
"ஓம்" என்ற ப்ரணவமே, "பரவாசுதேவன் நாராயணன்" ஸ்வரூபம் தான்.
"ஓம்" என்ற பிரணவம், ஜீவாத்மாவுக்கு, பரமாத்மாவின் உறவை காட்டுகிறது

பிரம்மாவை படைத்த நாராயணன், அவரிடம் வேதங்களை கொடுக்க,
அதில் சொன்னது போல, பிரம்மா உலகங்களை ஸ்ருஷ்டி செய்து, 
புண்ணியங்கள் செய்த ஜீவன்களுக்கு "இந்திரன், வருணன், யமன்" என்ற தேவ பதவிகளை கொடுத்து, 
சொர்க்க லோகத்தில் அவர்களை வேலைக்கு அமர்த்தி, 
மோக்ஷம் அடையாத பல ஜீவ கோடிகளுக்கு மீண்டும் பூமியில் பிறக்க வாய்ப்பு கொடுத்து, 
உலகத்தை நடத்தி வருகிறார். 
அனைத்து உலகங்களையும், தேவர்களையும், பிரம்மா முதல் புல் புழு வரை, தன் சங்கல்பத்தால், ஆக்ஞையால் நடத்தி செல்கிறார் நாராயணன்.

மீண்டும் ஒரு முறை கவனத்துடன் படியுங்கள்....

"ஓம்" என்ற ப்ரணவத்தில் இருந்து தான் "வேதங்களே" வெளிப்பட்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும்..
"வேதமே 'ஓம்' என்ற பிரணவத்தில் அடக்கம்" என்று அறிகிறோம்.

வேத சொற்களின் அர்த்தம், நமக்கு புரியாமல் போனாலும், வேத சொற்களை நம் காதால் கேட்டால் கூட, அது நமக்கு ஒரு தெய்வீக அனுபவத்தை ஏற்படுத்தும்.
வேதம் என்ற இந்த ஒரு சொல், அனைவரையும் ஈர்க்கிறது என்று பார்க்கிறோம்.

அற்புதமான இந்த வேத சொற்கள், தங்கள் புனித நூலில் இல்லாவிட்டாலும், தங்கள் புனித நூலுக்கு "வேறு பெயர்" இருந்தாலும், அதற்கும் "வேதம்" என்று இவர்களாகவே பெயர் கொடுத்து கொண்டு, 'வேதம்' என்ற சொல்லை நம்மிடமிருந்து திருடி பயன்படுத்துகின்றனர், பாரத நாட்டில் பிறந்தும், மதம் மாறி வாழும் போலிகள்.

வேதம் என்ற சொல்லை, மற்றவர்கள் பயன்படுத்துவதை, அனுமதிப்பது கூட, ஹிந்துக்கள் செய்யும் மாபெரும் தவறே.



இந்த போலிகள், வேதம் என்ற சொல்லை நம்மிடமிருந்து திருடி, தங்கள் நூலுக்கும் 'வேதம்' என்று வைத்து கொண்டாலும்,
நம் வேத மந்திரங்களை கேட்கும் போதும்,
அவர்கள் சொல்லும் அலறலை கேட்கும் போதும்,
எது போலி? என்று தெரிந்து விடுகிறது.

நம் வேதத்தை காதால் கேட்டால் கூட, "தங்க கிண்ணத்தில் பாலும் தேனும் கலந்து குடிப்பதை போன்ற" சுகமளிககும்.
'வேதம்' என்ற சொல்லை மட்டும் நம்மிடமிருந்து திருடி பிழைக்கும் போலிகள் சொல்லும் அலறலை கேட்டால்,
"நாய் ஊளை இடுவது போலவும், நாய்  தோலில் பால் ஊற்றி குடிப்பது போன்ற" உணர்வும் அளிக்கும்.
நம் சனாதன தர்மம், பரவாசுதேவன் நாராயணனை தெய்வம் (பால்) என்று சொல்வது போல, பிற மதங்களும் ஏதோ ஒரு தெய்வத்தை (பால்) சொல்கின்றன. தவறில்லை.

"எந்த தெய்வமும் பரவாசுதேவன் நாராயணனே" என்ற அறிவுள்ள ஹிந்துக்கள், பிற மதத்தில் மூளை மழுங்கி மாறி போனவர்களை கூட தடுப்பதில்லை.

தெய்வத்திடம் குறை காண தேவையில்லை ஹிந்துக்கள்.

பரவாசுதேவன் நாராயணனே பல ரூபங்களில் அவரவருக்கு ஏதோ ஒரு தெய்வமாக காட்சி கொடுக்கிறார் என்ற போதிலும்,
தெய்வத்தை (பால்) பற்றி சொல்லும் பாத்திரம் நம் வேதமாக (தங்க கிண்ணம்) இருந்தால் குடிக்க ஆசையாக உள்ளது.
'நானும் பால் தான் கொடுக்கிறேன்' என்று சொல்லி, ஒருவன் நாய்த்தோலில் கிண்ணம் செய்து, அதில் பாலை ஊற்றி கொடுத்தால்?, குடிப்பானா ஒருவன்!!.

வேதம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது.

"தங்க கிண்ணம்" போன்ற வேதம், நமக்கு தெய்வத்தை (பால்) காட்டுகிறது.
அந்த தெய்வத்தின் அனுபவத்தை நமக்கு கொடுக்கிறது.
அப்படிப்பட்ட வேதமே, 'ஓம்' என்ற பிரணவத்தில் அடக்கம் என்றால், இந்த "பிரணவ மந்திரம் எத்தனை அற்புதமானது!!" என்பது நமக்கு புரியும்.



"ஓம்" என்ற ஓங்கார நாதத்தின்
- உட்பொருளை நம் மனதில் உள்வாங்கி கொண்டோம் என்றால்,
- ஒரு ஆத்ம குருவை அடைந்து, அவர் மூலமாக பிரணவ மந்திர உபதேசம் பெற்று கொண்டோம் என்றால்,
- அர்த்தம் புரிந்து கொண்டு நாம் தியானத்தால்,
குருவின் அணுகிரஹ பலத்தால் ஸித்தி பெற்றோம் என்றால்,
அந்த ஓங்கார நாதமே,
நமக்கு மறு பிறவி ஏற்படாமல் செய்து விடும்.

இந்த ஓங்கார பிரணவ மந்திரமே, சம்சார சூழலில் மாட்டி இருக்கும் நம்மை, இறந்த பின் மீண்டும் பிறந்து விடாமல் செய்து, பிறவா நிலை என்ற மோக்ஷத்தை கொடுத்து விடும்.

"மோக்ஷமே கொடுத்து விடும்" என்று சொல்லும் போது, "உலக சௌக்கியம் கிடைக்குமா?" என்ற கேட்பதே குழந்தைத்தனமானது.

"ஓம்" என்ற ஓங்காரத்தில் ஸித்தி ஆனவன், உலக வாழ்வில் ஒரு விஷயமாக ஆசைப்பட்டால், அவை அனைத்துமே, தானாகவே நடக்கும்.

ஆனால், ஓங்காரத்தை சொல்ல சொல்ல, பொதுவாகவே, 
"மோக்ஷம் அடைய வேண்டும், மீண்டும் பிறவி தனக்கு ஏற்பட கூடாது" என்ற எண்ணமே அதிகம் ஏற்படுவதால், 
பொதுவாகவே பிரணவத்தில் ஸித்தி ஆனவர்கள், உலக மக்களோடு பழகுவதை விரும்புவது இல்லை. தனிமையை பெரும்பாலும் விரும்புவார்கள்.

ஒரு சிலர் மட்டும், இரக்கத்தின் காரணமாக, உலக மக்களின் துயரை கண்டு, உலக மக்களுக்கு ஆன்மீக சிந்தனைகள் வளர்வதற்காக, தங்களை உலகத்தில் காட்டி கொள்கின்றனர். பழகுகின்றனர்.

இப்படிப்பட்ட யோகிகள், மகான்கள் இன்றும் நம் பாரத தேசத்தில் உள்ளனர். நாம் காணலாம்.



இவர்கள் தன்னை வெளி உலகிற்கு காட்டி கொள்ள நினைத்தால், உலகமே இவர்களை சுற்றிக்கொண்டு மொய்க்கிறது.

சும்மா இருக்கிறார்கள், சாமியார்கள். 
இவர்களுக்கு ஏன் இத்தனை மரியாதை?
இவர்களுக்கு ஏன் இத்தனை கூட்டம்?
இவர்களுக்கு போய் ஏன் பணத்தை கொட்டுகிறீர்கள்?
என்று பொறாமை படுவதை காட்டிலும்,  சற்று யோசித்து பார்த்தால் உண்மை புரியும்.

இவர்கள் ஒரு சமயத்தில், சில காலங்கள் தனிமையில் செய்த யோக பயிற்சிகளே இப்படி ஒரு இடத்தை இவர்களுக்கு கொடுத்துள்ளது என்று தெரிந்து கொண்டால், பொறாமை படுவதை தவிர்த்து, தாங்களும் அந்த இறை நிலையை அடைய, ஸித்திகளை அடைய முயற்சிக்கலாமே என்று தோன்றும்.

"வேதமே" ஓங்காரத்தில் இருந்து தான் வெளிப்பட்டது என்பதை கவனிக்கும் போது தான், ஓம் என்ற ஓங்காரத்தின் பெருமையை நம்மால் உணர முடியும்.

"ஓம்" என்ற ஓங்காரத்தின் உட்பொருளை உணர்ந்து ஸித்தி அடைபவன், வேதத்தையே கற்றவனாகிறான்.
அத்தனை மகத்துவம் வாய்ந்தது "ஓம்" என்ற இந்த பிரணவ மந்திரம்.

"ஓம்" என்ற ஓங்காரத்தை அர்த்தத்துடன் தியானித்து, அதில் ஸித்தி பெற்ற ரிஷிகள், அந்த ஓங்காரத்தில் இருந்து வெளிப்பட்ட "வேத மந்திரங்களை" தியானத்தில் க்ரஹித்து நமக்கு தந்து விட்டனர்.

"வேதத்தின் சாரம், இந்த ஓங்காரத்திலேயே உள்ளது" என்ற உண்மையும் புரியும்.

"ஓம்" என்ற ஓங்காரத்தில் இருந்து வெளிப்பட்ட 4 வேதத்தின் உண்மையான உள்அர்த்தத்தை, ஒரு மனிதன் தன் 100 வயதுக்குள் புரிந்து கொள்வது என்பதே, இந்த கலியில் நடக்காத காரியம்.
ஆனால், ஓம் என்ற பிரணவத்தின் உள் அர்த்தத்தை நாம் அனைவரும் கொஞ்சம் மனதோடு கவனித்தால், புரிந்து கொண்டு விடலாம்.




வேதத்தின் அர்த்தத்தை புரிந்து கொள்வது ஒருபுறம் இருக்கட்டும்..
ஒரே ஒரு வேதத்தை மட்டும், மனப்பாடம் செய்து அதை அப்படியே சொல்வதற்கே, ஒரு மனிதன் தன் வாழ்நாளை அர்ப்பணிக்க வேண்டி இருக்கிறது.

வேத சொற்களை ஒருவன் அர்த்தம் புரியாமல் கேட்டால் கூட, அதன் தெய்வீகத்தை உணர முடியும்.
தடித்த நாக்கு உள்ளவர்கள் வேதத்தை சொல்வதற்கே கஷ்டப்படுவார்கள்.

தவறுதலான உச்சரிப்பு அர்த்தத்தையே மாற்றி விடும். 

கும்பகர்ணன், நித்தியமாக (சாகாமல்) இருக்க வேண்டும் என்று கேட்கலாம் என்று நினைத்து,பிரம்மாவை பார்த்தவுடன், தவறாக உச்சரித்து விட்டான். 

அர்த்தமே மாறி, அவனுக்கு வினையாகி போனது.
நித்யத்துவம் (சாகாமல் இருக்க வேண்டும்) என்று கேட்பதற்கு பதில்,
நித்ரத்துவம் (தூங்கி கொண்டே இருக்க வேண்டும்) என்று கேட்டு விட்டான் கும்பகர்ணன்.

வேதத்தை சொல்வதற்கே தனி மனித ஒழுக்கம், பொறுமை, உலக பற்று இன்மை போன்ற பல விஷயங்கள் தேவைப்படுகிறது.


உணவில் கட்டுப்பாடு, தெய்வீக சிந்தனையே கொண்ட சிலர் மட்டுமே, இந்த வேதத்தை சொல்ல முடியும் என்பதால், 
உலக வாழ்க்கையில் அதிகம் ஈடுபாடு இல்லாத பிராம்மண சமூகம், வேதத்தை படித்து, வேதத்தையே எப்பொழுதும் ஓதிக்கொண்டு, ரிஷிகள் தியானத்தால் கண்டுபிடித்த வேதத்தை இன்று வரை அழியாமல் காப்பாற்றி வருகின்றனர்.


உதாரணத்திற்கு, ஒரு 2 நிமிட வேதத்தை கேட்டு பாருங்கள்.
அர்த்தம் புரியாமல் போனாலும், அதன் தெய்வீகத்தை அனைவரும் உணரலாம்.
இந்த சிறு வேத பாகத்தை கேட்கும் போதே, எத்தனை கடினமானது "வேதம்" என்றும் புரிந்து கொள்ளலாம்.
கடினமானதாக இருந்தாலும், புரியாமல் போனாலும், கேட்கும் போதே ருத்ரன் (சிவ பெருமான்) நம் நினைவுக்கு வருவது மனதிற்கு புரியும்.
இதுவே நம் வேதத்தின் மகிமை. 
தங்க கிண்ணம் போன்றது நம் வேதம்.

கடினமான வேதத்தை நாம் எளிதில் கற்று கொள்ள முடியாது.
"கடினமான வேதத்தை தன் வாழ்நாளை முழுவதுமாக செலவழித்து, இன்று வரை காப்பாற்றும் வேதியர்களை காப்பற்றினாலே, அந்த வேதம் காக்கப்படும்" என்று புரிந்து கொள்ளும் போது தான், 
ஏன் அந்த காலங்களில் அரசர்கள், வைஸ்யர்கள், சூத்திரர்கள் என்று அனைவரும் வேதம் கற்ற ப்ராம்மணர்களை காப்பாற்றினார்கள்? என்று புரிந்து கொள்ள முடியும்.
வேதம் கற்காத இன்றைய கால போலி ப்ராம்மணர்களை சொல்லவில்லை.
இன்றும் 'வேதம்' கற்ற ப்ராம்மணர்கள் உள்ளனர். அவர்கள் இன்றும், என்றும் மதிக்கபட வேண்டும்.

வேதத்தை வாழ்நாள் முழுவதும் சொல்லிக்கொண்டு, வாழ்ந்த இந்த ப்ராம்மணர்களை நாம் காப்பாற்ற வேண்டும், என்று ஏன் க்ஷத்ரிய அரசர்களுக்கு (army), வைஸ்யர்களுக்கு (business), சூத்திரர்களுக்கு (employee) தோன்றியது?
இன்றைய நிலையில், 
ஏன் வேதம் படிக்காத ப்ராம்மணர்களுக்கும், மற்ற சமுதாயத்தில் உள்ளவர்களுக்கும், வேதம் கற்ற வேதியனை காப்பாற்ற வேண்டும் என்று தோன்றவில்லை?
காரணம் உள்ளது..

அன்றைய காலங்களில், அனைவருமே சமஸ்க்ரிதம் மொழி தெரிந்து இருந்தனர். 

அனைவருமே 4 உபவேதங்கள் என்று சொல்லப்படும் ஆயுர் வேதம் (medicine), ஸ்தாபத்யம் (engineering), காந்தர்வ வேதம் (music), தனுர் வேதம் (weaponary) கற்றனர்.
அது மட்டுமல்ல, 
64 கலைகளையும் கற்றனர். 
சமஸ்க்ரித மொழியில் தானே இவை அனைத்தும் உள்ளது. 

சமஸ்க்ரித மொழியின் பெருமை, 4 வேதத்தின் பெருமையை அறிந்து இருந்ததால், அன்று இருந்த க்ஷத்ரிய அரசர்களுக்கு (army), வைஸ்யர்களுக்கு (business), சூத்திரர்களுக்கு (employee), ப்ராம்மணர்களை காப்பாற்ற வேண்டும் தோன்றியது. 

மொழி அறிவு இருந்ததால், வேதத்தின் மதிப்பு தெரிந்ததால், அன்று பிராம்மணர்கள் மதிக்கப்பட்டனர்.


அன்றைய காலங்களில், வைஸ்ய (business), க்ஷத்ரிய (army), பிராம்மண (spiritual) குணங்கள் கொண்ட அனைவரும் வேதம் கற்றனர்.

கற்ற வேதத்தை எப்பொழுதும் அப்யாஸம் செய்து, அந்த தெய்வங்களின் த்யானத்திலேயே இருந்தனர் ப்ராம்மணர்கள். மதிக்கப்பட்டனர்.
மகாபாரதத்தில் "சுதாமா" என்ற ப்ராம்மணன், க்ஷத்ரியனாக அவதரித்த "ஸ்ரீ கிருஷ்ணருடன்" சாந்தீபனியிடம் சேர்ந்து படித்தார்கள்.

க்ஷத்ரியனாக அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணர் 
  • 4 வேதம் மட்டுமில்லாமல், 
  • 4 உபவேதங்கள், 
  • 6 சாஸ்திரங்கள், 
  • 8 வேதாந்த சித்தாந்தங்கள், மேலும் 
  • 64 கலைகள் என்று அனைத்தையும் கற்றார்.




ஸ்ரீ கிருஷ்ணர் க்ஷத்ரியன். ஆனால் வேதமும் கற்றார்.

இந்திய நாடு இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் 1000 வருடம் சிக்கி, லட்சக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டு, ஹிந்துக்கள் கொலை செய்யப்பட்டு, 
அதற்கு பின் 1400ADல் ஆரம்பித்து 1947 வரை கிறிஸ்தவர்களாலும் மதம் மாற்றப்பட்டு, ஆயிரக்கணக்கான அரசர்கள் (வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் போன்று பலர்) இவர்களால் கொல்லப்பட்டு, 
இவர்கள் அனைவரும் 1947ல் விரட்டப்பட்டு விடுதலை அடைந்த போது, 
ப்ராம்மணர்கள் மட்டுமல்ல, மற்ற வர்ணத்தாரும் பூணுல் அணிந்து வாழ்ந்தனர் என்று பார்க்கிறோம். 
இன்றும் சில ப்ராம்மணர் அல்லாத குடும்பங்களில் கூட, பூணுல் அணிந்து இருப்பதை காணலாம்.

64 கலைகளும் சம்ஸ்க்ரித மொழியில் தானே இருந்தது. 
"குதிரை ஏற்றம், பூ கட்டுதல், நடனம், நாட்டியம், ஓவியம், சிற்பம்" என்று அனைத்து கலைகளும் சம்ஸ்க்ரித மொழி தெரிந்ததால் தானே ஹிந்துக்கள் இதில் சூரர்களாக இருந்து இருக்க முடியும். 
வேதமும் கற்றதால், சமஸ்க்ரித மொழியும் தெரிந்து இருந்ததால், பொதுவாகவே ஹிந்துக்கள் அனைவரும் பூணுல் அணிந்து இருந்தனர்.
.
சம்ஸ்க்ரித மொழி பயன்பாட்டில் இருந்து இஸ்லாமியர்களால், கிறிஸ்தவர்களால் 1200 வருடங்களில் அழிக்கப்பட்டதால், 
இன்று இந்த பொக்கிஷங்களை இழந்து, அந்நிய மொழியை நம்பிக்கொண்டு, நம்மை கோடீஸ்வரனாக வைத்து இருந்த சம்ஸ்க்ரித மொழியை அறிவில்லாமல் எதிர்த்து கொண்டு இருக்கிறோம்.

வேதத்தை கற்று கொள்ள, வேதமே பல தகுதிகளை எதிர்பார்க்கிறது. இன்றைய சூழ்நிலையில், பிராமண குடும்பத்தில் பிறந்தவர்களுக்கே உச்சரிப்பு சரியாக இல்லை. வாழ்க்கை முறையிலும் ஆசைகளை வளர்த்து கொண்டு உள்ளனர். 
வேதத்தை இவர்கள் படிப்பதற்கு அருகதை இழந்து வருகின்றனர். 
ஒரு சில வேதியர்கள் மட்டுமே இன்றும் வேதத்தை அழிந்து விடாமல் காப்பாற்றி வருகின்றனர்.

உச்சரிப்பு சரியாக வராத போது, கும்பகர்ணன் போல தான் வேதத்தை தப்பும் தவறுதலாக உச்சரிப்போம். 

கடினமான வேதத்தை படிப்பதற்கு, தகுதிகள் தேவைப்படுகிறது. 



ரிஷிகள் கிரஹித்து சொன்ன வேதத்தை தவறுதலாக உச்சரித்து நாம் ஒன்று நினைத்து சொன்னால், பலன் வேறாக கூட அமைந்து விடும் அபாயம் உண்டு.

வேதத்தை படிப்பது கடினம். 
ஆனால், அந்த வேதமே ஓங்காரத்தில் அடக்கம் என்று கவனிக்கும் போது, அந்த ஓங்காரத்தை நாம் பிடித்து கொண்டால், வேதத்தை கற்ற பலனும் நமக்கு கிடைக்கும். மோக்ஷமும் கிடைக்கும். 


ஓங்காரத்தின் விளக்கத்தை பாப்போம். 
"ஓம்" என்ற ப்ரணவமே, "பரவாசுதேவன் நாராயணன்" ஸ்வரூபம் தான். 
பரவாசுதேவன் "நாராயணன்" ஓங்காரத்திற்கும் முன்னால் இருக்கிறார். அதனால் தான், "ஹரி: ஓம்" என்று சொல்கிறோம்.
வேதமே 'ஓம்' என்ற பிரணவத்தில் அடக்கம் என்பதால், வேதம் முழுவதும் படிப்பதற்கு சமமானது "ஓம்" என்ற பிரணவ மந்திரம். 

அந்த ஓம் என்ற பிரணவம் மூன்று அக்ஷரங்களால் ஆனது. 



"அ உ ம" என்ற மூன்று அக்ஷரங்களே ஓம் என்ற ஓசையை ஒலிக்க செய்கிறது.. 
  • உலகம் "வேதத்தில்" அடங்குகிறது. 
  • வேதம் "பிரணவத்தில்" அடங்குகிறது. 
  • பிரணவம் "அ" என்ற அக்ஷரத்தில் ஆரம்பிக்கிறது. 
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கீதையில்,
"அக்ஷரங்களில் நான் 'அ' என்ற அக்ஷரமாக இருக்கிறேன்" என்கிறார். 
உலகமே "வேதத்தில்" அடக்கம்.
வேதமே "ப்ரணவத்தில்" அடக்கம் என்றால், ப்ரணவத்தின் சக்தி எப்பேற்பட்டது? என்று எண்ணி பார்க்க வேண்டும்
அதனை உணர்ந்து ஜபம் செய்யும் போது மோக்ஷம் கூட கிடைத்துவிடும். 


'அ' என்ற அக்ஷரம்

'அ' என்ற அக்ஷரம், ப்ரணவத்தின் (அஉம) முதல் அக்ஷரமாக உள்ளது

"அ" என்ற அக்ஷரம் "பரமாத்மாவை" குறிக்கிறது. 

அக்ஷரமாக (வெறும் எழுத்தாக) பார்க்கும் போது, 
"அ" என்ற சொல்லை "உயிர் எழுத்து" என்று அழகான பொருத்தமான தமிழ் பெயரில் சொல்கிறோம்.



இதற்கு "உயிர்" (ஆத்மா) என்ற பெயர் கிடைத்ததே, இது "பரமாத்மாவை" குறிக்கிறது என்பதால் தான். 

நாம் (ஆத்மா) அனைவரும் ஜீவாத்மாக்கள்.
நம்மை படைத்தவர், அந்த பேருயிரான பரமாத்மா நாராயணன். 

"அ" என்ற அக்ஷ்ரம் சொல்லும்போது,
"நம்மை படைத்த  பரமாத்மாவை தியானிக்கிறோம்" என்ற கவனத்துடன், கர்வமில்லாமல் சொல்ல வேண்டும்.
இந்த "அ" என்ற உயிர் எழுத்து தனித்து தெரிவதால், இது பரமாத்மாவை குறிக்கிறது. ஜீவாத்மாக்கள் சொல்லவில்லை என்று உணர வேண்டும்.


'' என்ற அக்ஷரம்

'ம' என்ற அக்ஷரம், ப்ரணவத்தின் (அஉம) கடைசி அக்ஷரமாக உள்ளது. 

"ம" என்ற அக்ஷரம் ஜீவாத்மாவான () நாம், இந்த உடலில் (ம்) புகுந்து இருக்கும் நிலையை குறிக்கிறது. 
அக்ஷரமாக பார்க்கும் போது, 
"ம" என்ற சொல்லை, "உயிர்மெய்' எழுத்து என்று அழகான பொருத்தமான தமிழ் பெயரில் நாம் சொல்கிறோம்.



இதற்கு உயிர்மெய்(ம)  என்ற பெயர் கிடைத்ததே, இது ஜீவாத்மாவாகிய(அ) நாம் இந்த உடலில்(ம்) சிக்கி இருக்கும் நிலையை குறிக்கிறது என்பதால் தான்.

அதாவது,
'அ' என்ற உயிரும்,
'ம்' என்ற மெய்யும், சேரும் போது, 'ம' என்ற உயிர்மெய் உருவாகிறது. 

"" என்ற அக்ஷரம், உடலோடு இருக்கும் நம்மை தான் குறிக்கிறது.
பார்ப்பதற்கு 'ம' தனி எழுத்தாக தோன்றினாலும், அது ம் என்ற மெய் (உடல்), என்ற உயிருடன் சேர்ந்ததால் ஏற்பட்ட தோற்றமே என்று விளங்கும்.
"ம்" என்ற அசைவற்ற இந்த உடலில், "" என்ற உயிர் புகுந்து, அசையாத உடல் "உயிருள்ளது போல" காட்டுகிறது என்று அறிந்து கொள்கிறான் ஞானி.

இந்த ரகசியத்தை தான், நாம் "ம" என்ற அக்ஷரம் உச்சரிக்கும் போது  உணர வேண்டும். தியானிக்க வேண்டும்

ம = அ + ம்
உயிர்மெய் = உயிர் + மெய்

"அ உ ம" என்ற 3 அக்ஷரங்கள் சேரும் போது, "ஓம்" (அஉம்) என்ற சப்தம் ப்ரணவ மந்திரம் ஆகிறது. 

"ஓம்" (அஉம்) என்ற ப்ரணவ மந்திரத்தில் இருந்தே, வேதம் உண்டானது. 
வேத சப்தங்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளது. 
வேத சப்தங்களே உலகை உருவாக்கின.  
வேத சப்தங்கள் இருப்பதாலேயே உலகம் அதே மாத்திரையில் சுழல்கிறது

உலகமே வேத சப்தத்தால் உருவானது என்று சொல்லும் போது, உலகத்தில் தாறுமாறுகள் நம்மால் ஏற்பட்டால் கூட, வேத சப்தங்களை கொண்டே சரி செய்து கொள்ளலாம். 



மழை பெய்யாமல் போனால், வேதத்தில் "மழைக்கு காரணமான வேத வாக்கியங்களை" வேதியர்கள் சொல்லும் போது, மழை சம்பவிக்கிறது.
வேதத்தாலேயே நோய்கள் குணமாக்கப்பட்டன. 

உலகத்தில் ஏற்படும் அத்தனை இடர்களையும், வேதத்தை கொண்டே சரி செய்தனர் ஹிந்துக்கள். 

மழைக்கான வேத வாக்கியங்களை (சப்தங்களை) பூகம்பம் வராமல் இருக்க பயன்படுத்தினால்? ப்ரயோஜனமில்லை. 
"எந்த வேத மந்திரத்தை எந்த காரியத்துக்கு பயன்படுத்த வேண்டும்" என்று தெரியாமல் செய்தால் பலன் அளிக்காது.

ஆனால், வேதத்திற்கும் மூலமான "ஓம்" என்ற ப்ரணவத்தை அதன் தத்துவத்தை புரிந்து ஜபம் செய்தால், நம்மை சுற்றியுள்ள இயற்கையும், நம் உடலும் தானாக சரி செய்து கொள்ளும். 

இன்றைய விஞ்ஞானம் "உலகம் ஒலியால் (Sound Theory) உண்டாகி இருக்குமா?" என்று ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறது. 
இதை நம் ரிஷிகள் எப்பொழுதோ சொல்லி விட்டனர். 

ப்ரணவமாக (ஓம் = அஉம்) சொல்லும் போது,
'ம' என்ற உயிர்மெய் எழுத்தாக முடிக்காமல்,
'ம்' என்று மெய் எழுத்தாக சொல்லி முடிக்கிறோம்.

"ம" என்ற அக்ஷரம், ப்ரணவ மந்திரத்தை சொல்லும் போது "ம்" என்று முடிவதற்கு காரணம்,
உடலே (ம்) நான் என்று நினைப்பாயாகில், உயிர் (அ) இல்லாத இந்த உடலை(ம்) கொண்டு கர்வப்பட என்ன இருக்கிறது? என்ற ஞானத்தை நமக்குள் புகட்டவே "ம்" என்று சொல்லி முடிக்கிறோம்..

ப்ரணவத்தை 'ஓம' என்று சொல்லாமல், 'ஓம்' என்று சொல்வதற்கு இதுவே காரணம்.



"அ" என்ற உயிர் (நான்)
"ம" என்ற உயிர்மெய்யில் (உடலில்) மறைந்து இருப்பதை உணராமல், 
'ம்' என்ற மெய் என்ற மனித தேகத்தையே, "நான்" என்று நினைப்பது அஞானியின் லக்ஷணம். 

ஆக,
"ம" என்ற அஷரத்தால், "சரீரமே நான் என்ற புத்தி ஒழிய வேண்டும்" என்று தியானிக்க வேண்டும்.
'ம' என்ற அக்ஷரம் சொல்லும் போதே, "சரீரம்(ம்) வேறு, நான்/ஆத்மா(அ) வேறு" என்று தியானிக்க வேண்டும்.

ஆனால், இதில் ஒரு குறை வந்து விடுகிறது.

'' என்ற உயிர்மெய்யில் உள்ள ஆத்மா (அ), "தான் சுதந்திரமானவன்" என்று நினைத்து விடுகிறான் "அல்லது"
"" என்ற உயிர்மெய்யில் இருக்கும் இந்த உடலில் இருக்கும் "அ" என்ற உயிரும், தனியாக ஓம் என்பதில் முதலாக உள்ள "அ" என்ற "பரமாத்மாவும்" ஒன்று என்று நினைத்து விடுகிறான்.

"தான் தாசன்(ஜீவன்)", தனித்து இருக்கும் தன் எஜமானன் "அந்த பரமாத்மா" என்று அறியாமல்,
தானும் (ஜீவாத்மாவும்), பரமாத்மாவும் ஒன்று என்று நினைத்து, தான் சுதந்திரமானவன் என்று நினைக்கிறான்.

இப்படி "தேகம் வேறு, ஆத்மா வேறு" என்று தெரிந்தும், "உடலில் சிக்கி இருக்கும் ஆத்மா" சுதந்திரமானவன் என்று நினைப்பவனுக்கு,
"கைவல்யம்" பலனாக கிடைத்து விடுகிறது.
ஆனால் வைகுண்டம் கிடைக்காது.

பரமாத்மாவும்(உம என்ற பிரணவத்தின் "அ" என்ற முதல் அக்ஷரம்), 
ஜீவாத்மாவும் ( என்ற அக்ஷரத்தில் ஒளிந்து இருக்கும் "அ" என்ற அக்ஷரம்) ஒன்று என்று நினைக்கும் ஞானி "கைவல்யம்" என்ற மோக்ஷத்தை மட்டுமே அடைகிறான். 
வைகுண்டம் என்ற பரமபதம் - இந்த ஞானிக்கு கிடைப்பதில்லை.



'ம' என்ற அக்ஷரம் சொல்லும் போது, அதற்குள் ஒளிந்து இருக்கும் '' என்ற சொல்லை பார்த்து, "தான் சுதந்திரமானவன்" என்று நினைப்பான். 
அது தவறு. 
'ம' என்ற அக்ஷரத்தில் உள்ளே இருக்கும் 'அ' 'ஜீவாத்மாவை' குறிக்கிறது. ப்ரணவத்தின் முதல் அக்ஷரமான 'அ' என்ற சொல்லில் பரமாத்மா தனித்து இருக்கிறார். 

ஜீவாத்மாவாக ('ம'வில் ஒளிந்து இருக்கும் 'அ') தேகத்தின் உள்ளே இருக்கும் "நான், சுதந்திரமானவன் இல்லை, என்னை படைத்த அந்த பரமாத்மாவுக்கே('அ' என்ற பிரணவத்தின் முதல் அக்ஷரம்) சொந்தம்" என்று உணர்பவன், "பரமபதம் அடைகிறான்".

இப்படி, ஒரு தேகத்தில் (ம்) அகப்பட்ட ஜீவாத்மா (), தன்னிலை உணர்ந்து, தான் விடுதலை பெற்று, அந்த பரமாத்மாவை () அடைய வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

"ஜீவாத்மாவாகிய எனக்கு இந்த உடல் கொடுத்து, ஞானம் அடைவதற்கு கருணை செய்ததே அந்த பரமாத்மா தான்" 
என்று உணரும் போது, தான் இருப்பதற்கே அந்த ஈஸ்வரன் தான் காரணம் என்று புரியும்.
ஜீவாத்மா "தான் செய்கிறோம்" என்ற கர்வதத்தை விடுகிறான்.

உள்ளிருக்கும் ஆத்மா சுதந்திரமானவன் இல்லை, அந்த பரமாத்மாவை அடைவதே லட்சியம் என்று நினைப்பவனுக்கு வைகுண்டம் பலனாக கிடைத்து விடும்.

'' என்ற அக்ஷரம்
'' என்ற ஒலி ஓங்காரத்தின் நடுவில் உள்ள ஒலி

என்ற சப்தம் மூலம், "ஆத்மா வேறு, சரீரம் வேறு" என்று உணர்ந்து கொள்கிறான்.
மேலும் "தான் ஜீவாத்மா" என்றும் புரிந்து கொள்கிறான். 

ஆனால், ஜீவாத்மாவாகிய தன்னை படைத்தவன் யார்? என்ற கேள்விக்கு,
நீ அந்த "அ" என்ற அக்ஷரத்திற்கு உரிமையாளனான "பரமாத்மாவின்" சைதன்யமே என்ற உறவை சொல்வதே "உ" என்ற அக்ஷரம்.

"தான் இந்த உடம்பில் வந்ததும், இந்த உடம்பை விட்டு போவதும் தன் இஷ்டத்தில் இல்லை" என்று உணர்கிறான் ஜீவாத்மா.
அதனாலேயே, "தான் யாருக்கோ அடிமை" என்று மட்டும் புரிந்து கொள்கிறான்.


ஆனால் யாருக்கு அடிமை?
ஜீவாத்மாவாகிய என்னை, யார் படைத்தார்?
என்ற கேள்விக்கு,
'உ' என்ற சப்தத்தின் மூலம், ஜீவாத்மாவை பார்த்து,
'நீ யாருக்கும் அடிமை அல்ல. அந்த பரவாசுதேவனுக்கே அடிமை நீ'
என்ற உறவை உணர்த்துகிறது.
"பரவாசுதேவனுடன்(அ) உள்ள உறவை உணராமல், தானும் (ஜீவாத்மா) பரமாத்மாவும் ஒன்று என்று நினைப்பவன்" கைவல்யத்தை அடைகிறான்.
"உடல் வேறு, உயிர் வேறு" என்ற  ஞானம் மட்டுமே இதில் இருப்பதால், பரவாசுதேவன் "கைவல்யம்" என்ற மோக்ஷத்தை கொடுத்து விடுகிறார். 
"கைவல்யம்" பிறவி கடலை தாண்ட வழி வகுத்தாலும், கைவல்யம் பெறுவது "ஆத்மாவுக்கு செய்யும் பெரிய துரோகம்" என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள். 

நம் ஆத்மாவுக்கு "ஜீவன்" என்று பெயர் உண்டு.
இந்த ஜீவாத்மா அந்த "பரமாத்மாவின் சொந்தம்"
ஜீவாத்மா அடைய வேண்டிய இடம் "பரமாத்மாவே".

பரமாத்மாவை அடையாமல், வெறும் சுதந்திரம் மட்டும் பெற்ற ஜீவாத்மா, கைவல்யத்தை அடைகிறது

பிறவி கடலை கடந்து, பரமாத்மாவை அடையும் ஜீவனை, பரமபதம் (வைகுண்டம்) அடைந்தார் என்கிறோம். 

பரமாத்மாவை அடையாமல், பிறவி கடலை மட்டும் கடந்த ஜீவனை, கைவல்யம் அடைந்தார் என்கிறோம்.

பரமாத்மாவாகிய பரவாசுதேவன், ஜீவாத்மாவுக்கு கணவன் போன்றவர். 
ஜீவாத்மாவாகிய நாம் அனைவரும் அந்த பரமாத்மாவுக்கு முன், பெண் போன்றவர்கள். 
உயிர்மெய்யாக(ம), இந்த உடலில்(ம்) புகுந்து இருக்கும் ஜீவாத்மாவாகிய(அ) நாம்,
தனித்து இருக்கும் அந்த பரமாத்மாவை(அ) அடைய எண்ணம் இல்லாமல், எப்படியாவது "இந்த உடலை விட்டு, மீண்டும் பிறக்காத வண்ணம் இருந்தால் போதும்" என்று ப்ரணவம் மட்டும் சொல்லி கொண்டு வந்தால், அது 
"ஒரு ஆயுள் கைதி எப்படியாவது ஜெயிலில் இருந்து விடுதலை அடைந்தால் போதும்" என்று நினைப்பது போன்ற ஆசை. 


விடுதலை ஆக என்னென்ன முயற்சி செய்வானோ அதை செய்து, அந்த பரவாசுதேவன் அணுகிரஹம் செய்து, விடுதலை செய்து விடுகிறான். 

ஆனால் இவன் தன்னை அடைய ஆசை இல்லாமல் இருந்ததால், "கைவல்யம்" என்ற மோக்ஷத்தை கொடுத்து விடுகிறான். 

இது, "விடுதலை அடைந்த ஆயுள் கைதி, தனக்கு சொந்தமான வீட்டுக்கு திரும்பாமல், அங்கு இவனுக்காக காத்து இருக்கும் சொந்தங்களை (பரவாசுதேவனை) காணாமல், நிம்மதியாக அவன் வீட்டிற்கு போய் தங்காமல், விடுதலை அடைந்தோம் என்ற திருப்தியில் தெரு தெருவாக அலைந்து கொண்டு இருப்பது போன்ற நிலை". இதுவே "கைவல்யம்".
"மோக்ஷம் அடைந்தும், அலைந்து கொண்டிருக்கும் நிலை" என்பதால், இது "ப்ரயோஜனம் இல்லாத நிலை, முயற்சி செய்ய கூடாத நிலை" என்று பெரியோர்கள் ஞானிகள் எச்சரிக்கின்றனர். 
இப்படி ப்ரணவ மந்திரம் சொல்லும் போது,
உடல் வேறு, ஆத்மா வேறு என்ற உண்மையை "" என்ற அக்ஷரத்தாலும், 
உடலில் புகுந்து இருக்கும் ஜீவாத்மா சுதந்திரமானவனா? என்ற கேள்விக்கு,
"நீ சுதந்திரமானவன் இல்லை, நீ அந்த பரமாத்மாவுக்கு சொந்தமானவன்" என்ற உறவை "" என்ற அக்ஷரத்தாலும், 
தனித்து முதலில் இருக்கும் "பரமாத்மாவே" 'பகவான்' என்பதை "" என்ற அக்ஷரத்தாலும், 
உணர்ந்து குருவை கொண்டு "ப்ரணவ மந்திரத்தை" உபதேசம் பெற்று, தினமும் ஜபம் செய்பவன், பரமபதம் அடைகிறான்.

ஓம் என்ற பிரணவம், ஜீவாத்மாவுக்கு, பரமாத்மாவின் உறவை மட்டும் காட்டுகிறது.
ஆனால், யார் அந்த பரமாத்மா? என்று சொல்லவில்லை. 

"ஹரி ஓம்" என்றும், லக்ஷ்மியின் கணவன் என்ற புருஷ சூக்தத்தில் வேதம் அந்த பரமாத்மா, அந்த "நாராயணனே" என்று முடிவாக சொல்கிறது. 
பரமாத்மா யார்? யார் ஆதி புருஷன்? Whois_Supreme_VedicGod படிக்கவும்.



"பரமாத்மா" என்று மட்டும் சொன்னால், நமக்கு பக்தி செய்ய முடியாது. 
அதனால்,
ஸ்ரீனிவாசபெருமாளே, தொண்டைமான் சக்கரவர்த்திக்கு,
அந்த பரமாத்மா "நானே" என்று திருஅஷ்டாக்ஷர மந்திரத்தை (ஓம் நமோ நாராயணாய) உபதேசித்தார்.

"நமோ நாராயணா" என்ற சொல்லின் அர்த்தம் என்ன? Click Here

Hare Rama Hare Krishna - Listen to Bhajan


Sandhya Vandanam - Morning (with meaning)


Sandhya Vandanam - Evening (with meaning)


Sandhya Vandanam - Afternoon (with meaning)