Monday, 17 June 2019

விரதம் எதற்காக? உடல் ஆரோக்கியம் பெற, ஆயுள் வளர, இறை உணர்வும் வளர, நமக்கு கிடைத்த எளிதான வழி.. கடைபிடிப்போமே !!

உடல் ஆரோக்கியத்தை அடைவதற்கு, விரதம் நமக்கு பயன் தருகிறது.
சில குறிப்பிட்ட நாட்களில், தெய்வ சிந்தனையோடு விரதத்தை செய்யும் போது, தெய்வ அணுகிரஹமும் சேருகிறது.

விரதங்களில் மிகவும் உன்னதமானது "ஏகாதேசி".
இது மாதத்தில் இரண்டு நாட்களில் வரும்.

ஏகாதேசி விரதத்தை, குழந்தை வயதிலிருந்து கடைசி காலம் வரை கடைபிடிப்பவர்களை, நோய்கள் நெருங்க பயப்படும்.

ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள்,
ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்.
தசமியில், இரவு உணவை தவிர்க்க வேண்டும்.
ஏகாதசி அன்று முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும்.

மாதத்தில் இரண்டு தினங்களில் ஏகாதேசி வருகிறது.

விரதம் இருந்தால், நமக்கு "கேன்சர் போன்ற உயிர்கொள்ளும் நோய்கள் கூட வராது" என்று ஆராய்ச்சி செய்து ஜப்பான்காரர் இன்று சொல்லி, நோபல் பரிசு கூட வாங்கி விட்டார்.

* ஏகாதசி அன்று அதிகாலையிலேயே குளித்து விட்டு, பூஜை செய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

* ஏகாதசி திதி முழுவதும், முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும். 
முடியாத பட்சத்தில்,
குளிர்ந்த நீரை குடிக்கலாம்.
ஏழுமுறை துளசி இலையை சாப்பிடலாம்.

உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிடலாம்.
பூரண பட்டினி கிடப்பதினால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது. 

குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.
அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள்,
காய்கனிகள்,பழங்கள், பால், தயிர் போன்றவற்றை பெருமாளுக்கு காண்பித்து உண்ணலாம்.

* ஏகாதசி அன்று பகல் தூக்கம் கூடாது. 
* இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பஜனை செய்து கண் விழிக்கலாம். 
கண் விழிக்கிறோம் என்ற பெயரில் சினிமா, டிவி பார்க்க கூடாது.

* ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது. 
துவாதசி அன்று அதி காலையில் உணவு அருந்துவதை 'பாரணை' என அழைக்கிறோம்.
துவாதசியன்று அதி காலையில் நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளை உணவாக சேர்த்து
கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா... என மூன்று முறை கூறி, சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.

அகத்தி கீரை பொரியல், நெல்லிக்காய் பச்சடி, வறுத்த சுண்டைக்காய் சாம்பார் ஆகியவை முக்கியமானவை. 
'நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்தி கீரை' கட்டாயம் சேர்த்து சாப்பிடவேண்டும் என்று குறிப்பாக சொல்வதற்கு என்ன? 
உடல் ஆரோக்கியத்துக்காக சொல்லப்படும் இவை மூன்றும், ஆயுர் வேத மருத்துவ உணவுகள்.

ஒரு நாள் முழுக்க பட்டினி போட்ட வயிற்றில் அக்னி உருவாகி, உடம்பில் இருந்த கெட்ட செல்களை அழித்து விடும்.
அக்னியின் பாதிப்பால், காலியான வயிறும், அதே சமயம் புண்ணாகி  இருக்கும்.

இந்த புண்ணை சரி செய்வதற்கே கட்டாயம் 'நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்தி கீரை' மூன்றையும் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும் என்று நம் ஹிந்து சாஸ்திரம் சொல்கிறது .

வெறும்  கடவுள், இறை  பக்தி என்று மட்டும் சொல்லும் பொய் மதம் இல்லை, நம் ஹிந்து சனாதன தர்மம்.
நம் ஆரோக்கியத்துக்கும் அறிவுரை சொல்லும் அற்புதமான ஹிந்து  தர்மத்தை விட உயர்ந்த தர்மம் உலகில் கிடையாது.

* துவாதசியன்று பஞ்சாங்கத்தில் காட்டியபடி குறிப்பிட்டநேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும்.

* உணவு சாப்பிடும் முன், அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். * ஏகாதசி அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர்.
இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.

பகலில் சாப்பிடாமல், இரவில் சாப்பிடுவது உடலுக்கு கேடு என்று இன்றைய உலக வாழ்க்கையே நமக்கு காட்டுகிறது.
இன்று இரவில் வேலை பார்க்கும் பலர், பகலில் சாப்பிடாமல், இரவில் உண்டு, உடல் ஆரோக்கியம் இன்றி அவதிப்படுகின்றனர்.

வருடத்தில், "ஒரு மாதம் முழுவதும் பகலில் பட்டினி இரு, இரவில் நன்றாக அசைவம் சாப்பிடு" என்று அர்த்தமில்லாத விரத கட்டுப்பாடுகளை சொல்லாமல்,
விரதத்தின் மூலம் 'ஆன்மீக வளர்ச்சி'க்கும்,
அதே சமயம், விரதம் முடிக்கும் போது 'மருத்துவமும்' செய்து கொள்ள வழி காட்டி,
'ஆயுள், ஆரோக்கியத்து'க்கு வழி காட்டும் அற்புதமான விரதமே 'ஏகாதசி' போன்ற விரதங்கள்.

நம் ஹிந்து தர்மம் சொன்ன படி, விரதம் இருப்பவர்கள், 100 வயது வரை எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வார்கள். 
விரதங்கள் அனுஷ்டித்து தான், ஹிந்துக்கள் ஆரோகியமாக இது நாள் வரை வாழ்ந்தனர்.
விரதங்கள், நம் இறை வளர்ச்சிக்கும் மட்டும் அல்ல, நம் ஆரோக்கியத்துக்கும் மிக மிக தேவையான ஒன்று. 

100 வருடம் உழைக்க வேண்டிய இயந்திரங்கள், 50 வருடத்தில் பாழாகி போவதற்கு காரணம், அதற்கான ஓய்வு கொடுக்கப்படாமல் இருப்பதே..

'ஒரு வேளை' மட்டும் உண்டால், யோகி என்றும்,
'இரு வேளை' மட்டும் உண்டால், போகி என்றும்,
'மூன்று வேளை' மட்டும் உண்டால், ரோகி என்றும் சொல்வதுண்டு.
அந்த காலங்களில் அதிக பட்சம் மூன்று வேலைகள் தான் சாப்பிட்டார்கள் என்று தெரிகிறது..

இன்றோ நாலு வேளை, ஐந்து வேளை என்று கிடைக்கும் போதெல்லாம் வாயில் ஏதாவது போட்டுகொண்டு சாப்பிட்டு கொண்டே இருப்பதால்,  வயிற்றுக்கு ஓய்வு கிடைப்பதே இல்லை.

மனிதர்களின் பெரும்பாலான நோய்கள் வயிற்றில் இருந்து தான் ஆரம்பிக்கிறது.

இந்த வயிற்றுக்கு மாதம் இரு முறை ஓய்வு கொடுத்து, அந்த ஓய்வையும் ஏகாதசி போன்ற புண்ணிய காலங்களில் கடைபிடித்தால்,
உலகில் உணவு தேவையும் நம்மால் குறைகிறது. 
நம் வயிற்றுக்கும் மாதத்தில் இரண்டு நாள்  ஓய்வு கிடைக்கிறது. 

'நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்தி கீரை' போன்ற மருத்துவ குணங்கள் கொண்ட உணவை விரதம் முடிக்க சாப்பிடும் போது,
உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் பெறுகிறது.

உலகில் அனைவருக்கும் யோகத்தை சொல்லிக்கொடுத்தது ஹிந்து தர்மமே. 
விரதங்களின் மகத்துவத்தை என்றுமே வலியுறுத்தக்கூடிய ஹிந்து தர்மத்தை ஆராய்ச்சி செய்து, ஜப்பானியர்கள் இன்று நோபல் பரிசு பெறுகின்றனர். 

ஹிந்துக்கள் நம் பெருமை அறிவோம்.

Friday, 14 June 2019

ருத்ரன், ப்ரம்மா, வராஹ அவதாரம் நடந்த காலம் பற்றி ... ஹிந்துக்கள் தெரிந்து கொள்வோமே.

"வராஹ" அவதாரம் - உலக ஸ்ருஷ்டி ஆரம்பிக்கும் போது, ஸ்வாயம்பு மனு (1st Manu) காலத்தில் நடந்தது.
அனைத்து அவதாரங்களுக்கும் முற்பட்ட அவதாரம், "வராஹ" அவதாரம்.

அதை தொடர்ந்து, "நரசிம்ம" அவதாரம் நடந்தது.
ப்ரகலாதனின் பேரன் "பலி சக்ரவர்த்தி" ஆண்ட போது, 
"கூர்ம" அவதாரமும், "வாமன" அவதாரமும் செய்தார்.
"மத்ஸ்ய" அவதாரம் - இப்பொழுது நடக்கும் வைவஸ்வத மன்வந்திர (7th Manu) ஆரம்பத்தில் நடந்தது.

'பாகவதத்தில்' முதல் அவதாரமாக "வராஹ" அவதாரமே சொல்லப்படுகிறது.

ஸ்வாயம்பு மனு (1st Manu), ப்ரம்ம தேவனின் மானஸ புத்திரர்.

இப்பொழுது சத்ய லோகத்தில் உள்ள பிரம்மாவுக்கு வயது என்ன?
மனு அரசர்கள் யார் யார்? என்று தெரிந்து கொள்ள... Click செய்யுங்கள்..
முதன் முதலாக,
தாமரை மேல் ப்ரம்ம தேவனை சத்ய லோகத்தில் தன் நாபியில் இருந்து படைத்தார் பரவாசுதேவன் நாராயணன்.
பூலோகங்கள் படைக்கப்பட்டதற்கு முன்பேயே, ப்ரம்மாவுக்கும் முன், தாமரை படைக்கப்பட்டது என்று பார்க்கும் போது தாமரைக்கே (கமலம்) அது ஒரு ஏற்றம், பெருமை.

சத்ய லோகத்தில், படைக்கப்பட்ட ப்ரம்ம தேவன், ஞானியாக இருப்பதால்,
'இயற்கையாக பிறந்தோம்' என்று நினைக்காமல்,
'தன்னை படைத்தவர் இருக்க வேண்டுமே.. அவர் யார்?' என்று தியானம் செய்ய,
பகவான் நாராயணன் தியானத்திலேயே திவ்ய காட்சி கொடுத்து,
"உலக ஸ்ருஷ்டி என்ற கர்மாவை  செய்வதற்காக உன்னை நியமித்தேன்" என்று சொல்லி,
"வேதத்தை கொண்டு உலக ஸ்ருஷ்டி செய்" என்று பிரம்மாவிடம் வேதங்களை உபதேசித்தார்.
பரவாசுதேவன் கட்டளைக்கு கட்டுப்பட்டு, வேதத்தை கொண்டு, ப்ரம்மா உலக ஸ்ருஷ்டியை ஆரம்பித்தார்.

முதன் முதலில், சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர் என்ற 4 பாகவத உத்தமர்களை, தன் மனதால் ஸ்ருஷ்டி செய்தார் ப்ரம்ம தேவன்.
"நீங்கள் உலக ஸ்ருஷ்டியை செய்யுங்கள்"
என்று ப்ரம்ம தேவனே நியமித்தும்,
இவர்கள் நால்வருமே உலக விஷயமான ஸ்ருஷ்டியில் நாட்டமில்லாமல் இருந்தனர்.
ஞான மார்க்கத்திலேயே இருந்து மோக்ஷத்தை அடையவே விரும்பினார்கள்.

தன் முதன் ஸ்ருஷ்டியான, தன் 4 பிள்ளைகளும் இப்படி நிவ்ருத்தி என்ற ஞான மார்க்கம் சென்று விட்டார்களே!!... 
தான் சொன்னதை இவர்கள்  கேட்கவில்லை!! என்றதும், பிரம்மாவுக்கு கோபம் வந்தது.
ஞானியான ப்ரம்மா, கோபப்பட கூடாது என்று கோபத்தை அடக்கி கொள்ள,
பிரம்மாவின் நெற்றி புருவ மத்தியில் இருந்து சம்ஹார மூர்த்தியாக, ஒரு சிறு குழந்தை வெளிப்பட்டது.
திவ்யமான இந்த குழந்தை அழுது கொண்டே, பிரம்மாவை பார்த்து
"எனக்கு ஒரு பெயர் வை" என்று சொல்ல,
ப்ரம்ம தேவன் "நீ குழந்தை ரூபத்தில் அழுது (ரோதன) கொண்டே கேட்டதால், உனக்கு 'ருத்ரன்' என்று பெயர்" 
என்று சொல்ல,
அந்த குழந்தை, உடனே 11 ருத்ரர்களாக ஆகி காட்சி கொடுக்க,
அந்த 11 ருத்ரர்களுக்கும் ப்ரம்மா பெயர் கொடுத்தார்.
1. மன்யு
2. மனு
3. மஹினச
4. மஹான்
5. சிவன்
6. ருதத்வஜன்
7. உக்ரரேதா
8. பவன்
9. காலன்
10. வாமதேவன்
11. த்ருடவ்ரதா
யஜுர் வேதத்தில், ருத்ர ஸ்துதி செய்யும் போது,
'மன்யு' என்ற ருத்ரனின் பெயரை சொல்லி ஆரம்பிக்கிறது என்று பார்க்கிறோம்.

"நமஸ்தே ருத்ர மன்யவ உதோத இஷவே நம:"
- ருத்ரம் (யஜுர் வேதம்)

'தன்னுடைய முதல் 4 பிள்ளைகள் ஞான மார்க்கத்தில் சென்று விட்டார்களே'
என்று கோபத்தில் இருக்கும் போது வெளிப்பட்ட ருத்ரன்,
தன்னையே 11 ருத்ரர்களாக ஆக்கி கொண்டு,
ஒவ்வொரு ருத்ரனும், ஆயிரக்கணக்கான கணங்களை ஸ்ருஷ்டி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
ஏகாதச (11) ருத்ரர்களால் படைக்கப்பட்ட கணங்கள் யாவும் "பூத கனங்களாக" இருந்தார்கள்.

இந்த பூத கனங்கள், "பிரேதமாகவும், பிசாசாகவும், பூதமாகவும்"  அலையும் ஜீவன்களை கட்டுப்படுத்தும் அதிபதிகள் ஆகினர்.
வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவன், தானே க்ஷீராப்தி என்ற பாற்கடலை ஸ்ருஷ்டி செய்து, ஆதிஷேஷன், ஜெய விஜயர்களுடன், தானே விஷ்ணுவாக வ்யூஹ அவதாரமும் செய்து விட்டார்.

அதற்கு பிறகு, ப்ரம்ம தேவன்,
ஒன்பது ப்ரஜாபதிகளை சத்ய, ஜன, தப லோகங்களில் ஸ்ருஷ்டி செய்தார்.
1. மரீச்சி (இவர் மகன் கஷ்யபர்)
2. அத்ரி (மனைவி அனசுயா)
3. ஆங்கிரசர் (இவர் பரம்பரையில் குத்ஸ ரிஷி, கௌதம ரிஷி, பரத்வாஜ ரிஷி வந்தார்கள்)
4. புலத்ஸ்யர்
5. புலகர்
6. க்ரது
7. வசிஷ்டர்
8. ப்ருகு (இவர் பரம்பரையில் வந்த ரிஷிகள் ச்யாவன, ஆப்னவான, ஔர்வ, ஜாமதக்ன்ய)
9. தக்ஷன்

இவர்களில் 7 ப்ரஜாபதிகள், சப்த ரிஷிகளாக முதல் மனுவான 'ஸ்வாயம்பு மனு'வின் காலத்தில் உலக படைப்புகளில் ஈடுபட்டனர்.
1. மரீச்சி
2. அத்ரி
3. ஆங்கிரசர்
4. புலத்ஸ்யர்
5. புலகர்
6. க்ரது
7. வசிஷ்டர்

ப்ரஜாபதிகள் ஞான மார்க்கத்தை விரும்பினாலும், பரவாசுதேவனின் ஆணையை மறுக்காமல்,
ப்ரம்ம தேவனுக்காக உலக ஸ்ருஷ்டி செய்ய சம்மதித்து, உலகமெங்கும் மக்களை ஸ்ருஷ்டி செய்ய ஆரம்பித்தனர்.

முக்கியமாக, 'மரீச்சி' - கஷ்யப ரிஷியை ஸ்ருஷ்டி செய்தார்.
கஷ்யபர் - தேவர்களை, அசுரர்களை ஸ்ருஷ்டி செய்தார்.
இப்படி ஒன்பது ப்ரஜாபதிகளும்.
தேவ, அசுர, விலங்குகள், மனிதர்கள் என்று படைக்க ஆரம்பித்து விட்டனர்.

11 ருத்ரர்களால் ஸ்ருஷ்டி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பூத கணங்கள், ப்ரஜாபதிகளால் ஸ்ருஷ்டி செய்யப்பட்டவர்களை சம்ஹாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
"பிரளய காலத்தில் சம்ஹாரம் செய்தால் தகும்.. இப்பொழுது தான் மனித ஸ்ருஷ்டியே ஆரம்பிக்கிறது, அதற்குள் சம்ஹாரம் நடக்கிறதே" என்றதும்,
ப்ரம்ம தேவன், 11 ருத்ரர்களிடமும்
"நீங்கள் இப்போது உங்கள் சம்ஹார லீலையை ஆரம்பிக்காதீர்கள்..
ஸ்ருஷ்டியே இப்போது தான் நடக்க ஆரம்பித்து உள்ளது. நீங்கள் சம்ஹாரம் செய்வதை நிறுத்தி விடுங்கள்.
உங்களுக்கு 'உக்ரன் என்றும் காலன்' என்றும் பெயர் உண்டு என்றாலும்,
இப்போது நீங்கள் யாவரும் சங்கரனாக (நல்லதை செய்பவர்) இருங்கள்.
சம் (நல்லதை) கரோதி (செய்பவர்) இதி(=) சங்கர:
ஹிம்சையை செய்யாதீர்கள். 
உலக ஸ்ருஷ்டியை தடுக்காதீர்கள்."
என்று சமாதானம் செய்ய,
பிரளய காலம் வரை சம்ஹார வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதால்,
11 ருத்ரர்களும், தன் ஆயிரக்கணக்கான பூத கணங்களுடன், கைலாய லோகத்திற்கு சென்று தியான யோகத்தில் அமர்ந்தனர்.

அவ்வப்போது பூலோகத்தில் அவதாரம் செய்து, தன்னை பஜிக்கும் யோகிகளுக்கும், பக்தனுக்கும் காட்சி கொடுத்து, ஞானத்தை தருகிறார்கள்.

'ஓம்' என்ற ஓங்காரத்துக்கு ஈடான,
'ராம' என்ற தாரக மந்திரத்தையே எப்பொழுதும் ஜபம் செய்து கொண்டிருக்கும் ருத்ரர்கள், 
பூலோகத்தில் காசியில் விஸ்வநாதனாக, சிவபெருமானாக தானே இருந்து கொண்டு, 
காசியில் உயிர் பிரியும் பாக்கியம் பெற்ற அனைத்து ஜீவனுக்கும் (மனிதன், மிருகம், பறவை என்று அனைத்தும்), கடைசி மூச்சு போகும் சமயத்தில் அவர்கள் காதில் "ராம ராம ராம.." என்று தாரக மந்திரத்தை சொல்லி, தன் அணுகிரஹதால் எது சத்தியமான உண்மை என்ற  ஞானத்தை கொடுத்து,
ஞானம் அடைந்த ஜீவனுக்கு நாராயணன் மோக்ஷ வாசலை திறந்து விட வழி செய்து விடுகிறார்.

க்ஷீராப்தி என்ற பாற்கடலில், வ்யூஹ அவதாரத்துடன் இருக்கும் மஹாவிஷ்ணுவை தரிசிக்க, ஒரு சமயம் 4 குமாரர்களும் (சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர்) வந்த போது, ஜெய விஜயர்கள் தடுத்து விட, 
'பூலோகத்தில் பிறக்குமாறு' சபித்து விட்டனர்.
பிரம்மாவின் பிள்ளைகள் கொடுத்த சாபம், பொய் போக கூடாது என்பதற்காகவும்,
தானே விபவ அவதாரங்கள் செய்ய சங்கல்பித்ததால்,
'ஜெய விஜயர்கள்' முதலில் பிறக்கட்டும் என்று இப்படி ஒரு லீலையை செய்தார் பெருமாள்.

ஜெய விஜயர்களை பார்த்து,
'100 பிறவிகள் எடுத்து, விஷ்ணு பக்தி செய்து மீண்டும் க்ஷீராப்தி வருகிறீர்களா?
அல்லது
3 பிறவிகள் மட்டுமே எடுத்து, எனக்கு பரம எதிரியாக இருந்து, என் கையால் அழிக்கப்பட்டு, மீண்டும் வருகிறீர்களா?'
என்று மஹாவிஷ்ணு கேட்க,
100 ஜென்மங்கள் பெருமாளை பிரிந்து இருப்பதை விட, 3 ஜென்மங்கள் விஷ்ணுவுக்கு பகைவனாக இருந்து, அவர் கையாலேயே கொல்லப்பட்டு, வேகமாக பாற்கடல் அடைகிறோம் என்று சொல்ல,
முதல் பிறவியில் "ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு" என்று மகாபலம் கொண்ட அசுரர்களாக, அசுரர் குலத்தில் பிறந்தனர் ஜெய விஜயர்கள்.

ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு அவதரித்த பின், அசுரர்கள் பலம் கூடியது.
தேவர்களை அடக்கி, சொர்க்க லோகத்தில் அடிமைகள் ஆக்கினார்கள் அசுரர்கள்.

ப்ரம்ம லோகத்தையும் சேர்த்து 14 லோகங்களையும் கைப்பற்றினார்கள் அசுரர்கள்.

சொர்க்க லோகத்தில் இருந்து கொண்டு அட்டகாசம் செய்தனர் அசுரர்கள்.

மஹா விஷ்ணுவாகிய நாராயணன், தன் துவார பாலகர்கள் (gate keepers) கொஞ்ச காலம் 14 லோகங்களையும் ஆளட்டுமே என்று இருந்து விட்டார்.

அதர்மத்தின் கை ஓங்கியது.
இவர்களை எதிர்க்க தேவர்கள், ப்ரஜாபதிகள், மகரிஷிகள், ப்ரம்மா உட்பட எவராலும் முடியவில்லை.

தர்மம் அழிந்து, அதர்மம் ஓங்கி விட்டதால், பூமா தேவி வேதனையுற்றாள்.
ஹிரண்யாக்ஷன் ஒரு படி மேலே போய், 14 லோகங்களில் மனிதர்கள் வாழும் லோகமான பூலோகத்தை (earth) அதன் கதியில் இருந்தே அகற்றி,
கர்போதகம் என்ற மஹா பிரளய ஜலத்தில் எடுத்து கொண்டு போய், மூழ்கடித்து மறைத்து விட்டான்.

பூலோகத்தையே (earth) அதன் சுழற்சியில் இருந்து எடுத்து, 
வெளி மண்டலத்தில் சொல்லப்படும் கர்போதகம் என்ற மஹா பிரளய ஜலத்தில் மறைத்து விட்டான் என்றால், 
அசுரர்களை, சாதாரண மனிதர்கள், என்று நாம் நினைத்து விட கூடாது..

பூமியே மறைந்து கிடந்த காலம் அது என்று கவனிக்க வேண்டும்.

ப்ரஜாபதிகளால் படைக்கப்படும் மக்களை, ஒரு அரசனாக இருந்து காப்பதற்காக, ப்ரம்ம தேவன் "ஸ்வாயம்பு" என்ற மனுவை ஸ்ருஷ்டி செய்தார்.

தேவர்கள், அசுரர்கள் என்று ஸ்ருஷ்டி செய்த ப்ரஜாபதிகள்,
மனிதர்களை படைக்க ஆரம்பிக்க, "இந்த மனிதர்களை தரிக்க (தாங்க) இடம் வேண்டுமே?"
என்று ஸ்வாயம்பு மனு, சத்ய லோகத்தில் உள்ள ப்ரம்ம தேவனை சரண் அடைந்தார்.

நம் அனைவரையும் பூமி தரிப்பதால் (தாங்குவதால்), பூமியின் தேவதையான பூமாதேவிக்கு "தரா" (Dhara) என்று பெயர்.

நாம் அனைவரும் மனிதனாகவோ, விலங்காகவோ, பறவையாகவோ இந்த பூமியிலேயே பிறக்கிறோம், நடக்கிறோம், வாழ்கிறோம், மடிகிறோம்.

இந்த பூமியிலேயே வாழ்ந்து கொண்டு, 
பூமியையே சில சமயம் உடைக்கிறோம், உதைக்கிறோம்,  தோண்டுகிறோம், எச்சில் துப்புகிறோம், ஒடுகிறோம், குதிக்கிறோம்.
பூமியிலேயே பிறந்து, வாழ்ந்து, மடியும் நாம் செய்யும் அபச்சாரங்களை, ஹிம்சையை பூமாதேவி 'தன் குழந்தைகள் தானே' என்ற தாய் பாசத்தில் மன்னிக்கிறாள்.
மஹா பொறுமை கொண்டு பூமாதேவி இருப்பதால் அவளுக்கு "க்ஷமா" (மன்னிப்பவள்) என்றும் பெயர் உண்டு.

ஹிரண்யாக்ஷன் பூலோகத்தையே எடுத்து ஒளித்து விட்டான், என்றதும் ஸ்வாயம்பு மனு, ப்ரம்ம தேவனிடம் பூலோகத்தை மீட்டு கொடுக்க பிரார்த்திக்க,
ப்ரம்ம தேவன், ஸ்ரீ மந் நாராயணனை மனதில் தியானிக்க,
நாராயணனே, ஒரு கட்டை விரல் (அங்குஷ்ட) அளவுள்ள வராஹ மூர்த்தியாக வெளிப்பட்டார்.

பரவாசுதேவனே, தர்மமே வடிவான, 'யஞ்ய வராஹ'னாக வெளிப்பட்டார்.

பரவாசுதேவன் நாராயணனை இதயத்தில் தரிசனம் செய்து இருந்த ப்ரம்ம தேவன்,
இப்படி வராஹ மூர்த்தியாக சிறு ரூபம் எடுத்து கொண்டு தன்னிடம் இருந்தே வெளிபட்டதை கண்டு,
"இந்த குட்டி வராஹ மூர்த்தி என்ன செய்து விட போகிறது?"
என்று மனதுக்குள் ஒரு க்ஷணம் நினைக்க,
சத்ய லோகத்தை காட்டிலும் பெரிதாக வளர்ந்து, விஸ்வரூபனாக வளர்ந்து விட்டார் வராஹ பெருமான்.
கட்டை விரல் அளவுக்கு (அங்குஷ்ட மாத்ரத்தில்) காட்சி கொடுத்தாலும், உலகையே ரக்ஷிக்க கூடியவன் என்று காட்டுவது போலவும்,
"தான் அணுவுக்குள்ளும் அணுவாக இருக்கிறேன்" என்று காட்டவும்,
ப்ரம்ம தேவனிடமிருந்தே தன்னை வெளிப்படுத்தி, "சர்வ ஜீவனுக்குள்ளும், நானே அந்தர்யாமியாக இருக்கிறேன்" என்று காட்டவும்,
ப்ரம்ம தேவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை போக்க, மிகப்பெரிய  வராஹ ரூபத்துடன் வளர்ந்து காட்சி கொடுத்தார்.

ப்ரம்ம தேவனுக்கு தன்னை சின்ன கட்டை விரல் அளவுக்கு வராஹ மூர்த்தியாக காட்டி கொண்ட பரவாசுதேவன்,
தேவைப்பட்டால் எத்தனை பெரிய விஸ்வரூபத்தையும் எடுத்து தர்மத்தை காப்பேன் என்று உணர்த்தினார்.

நம் வீட்டிலும் சின்ன சிவபெருமான் விக்ரஹமோ, குட்டி கிருஷ்ணரோ, குட்டி விஷ்ணுவோ பூஜைக்காக வைத்து இருக்கிறோம்.
நம் வீட்டில் உள்ள கிருஷ்ணர் விக்ரஹம் சின்னதாக இருப்பதால், "இந்த குட்டி கிருஷ்ணரா என்னை காக்க போகிறார்? காக்கிறார்?" 
என்று நாம் நினைக்க கூடாது என்பதற்காக தான், 
பிரம்மாவுக்கும் அது போன்ற மனநிலையை உருவாக்கி, குட்டி வராஹனாக வந்த அவதார ரூபத்தை பார்த்து, அளவை பார்த்து "இந்த குட்டி வராஹ மூர்த்தியா பூலோகத்தை மீட்க போகிறது? என்று கேள்வி எழ, 
அளவிடமுடியாத, எந்த ரூபமாகவும் ஆக சக்தி பெற்ற நாராயணன், கிடு கிடுவென வளர்ந்து பெரிய வராஹமாக ஆகி விட்டார். 
அவருக்கு முன்னால் பெரும் மலைகள் கால் தண்டையில் போட்டு கொள்ளும் சிறு மணிகள் போல காட்சி அளித்தன என்றால், எத்தனை பெரிய விஸ்வரூபம் வராஹ அவதாரம் என்று புரிந்து கொள்ளலாம்.

"வந்திருப்பது சர்வேஸ்வரன்" என்று அறிந்த ப்ரம்மதேவன் வராஹ பகவானை நமஸ்கரித்தார்.

"தன்னை பூஜிக்க சுலபமாக இருக்குமே" என்பதற்காக
'தன்னையே சுலபமாக்கி கொண்டு, குட்டி விக்ரஹமாக உள்ளார் பெருமாள்' என்று அறிந்து கொள்ளும் போது தான், நமக்கும் பக்தி வரும்.
நம் வீட்டில் உள்ள சிவ பெருமானும், கிருஷ்ணரும், ராமரும் வெறும் பொம்மை அல்ல,  அளவில் சிறிதாக தோன்றினாலும், உண்மையான பக்தி நமக்கு இருக்குமானால்,
"நம்மை காக்க வல்லவர், எதிலும் அந்தர்யாமியாக இருப்பவர், நமக்காக இந்த விக்ரஹத்தில் புகுந்து இருக்கிறார் என்று புரிந்து விடும்". நமக்கும் இறை பக்தி செய்ய தோன்றும்.

என் வீட்டின் பூஜை அறையில் உள்ள இந்த குட்டி கிருஷ்ணனா, குட்டி சிவனா என்னை காப்பாற்ற போகிறார்? என்று சந்தேகம் நமக்கு வரக்கூடாது என்பதற்காக தான்,
ப்ரம்ம தேவனுக்கே இது போன்ற எண்ணத்தை வர வழைத்து, தன் முதல் அவதாரத்திலேயே நமக்கு வரப்போகும் இது போன்ற சந்தேகங்களுக்கு பதில் சொன்னார் நாராயணன்.

தான் அணுவுக்குள் அணுவாக (அனைத்து உயிருக்கும் உயிராக) இருப்பவன் என்று காட்ட, சிறு ரூபத்தை காட்டினாரேவொழிய,
அவர் ஐஸ்வரயம் எல்லை இல்லாதது என்று புரிந்து கொள்ள, எதுவாகவும் வருவார், எவ்வளவு பெரிய ரூபத்தையும் எடுப்பார் என்று காட்ட,
மிக பெரிய விஸ்வரூபத்தை காட்டினார் பரவாசுதேவன்.
பூலோகமே இல்லாத போதே, வராஹ மூர்த்தியாக வந்ததால், வராஹம் என்றால் என்ன? என்று பார்த்திராத, ப்ரம்ம லோகத்தில் உள்ள ரிஷிகள் அனைவரும் நடு நடுங்கி போனார்கள்.

நாம் பூலோகத்தில் காணும் பன்றியையோ, சிங்கத்தையோ, மீனையோ, மனிதர்களையோ, பெருமாள் செய்த அவதாரத்தோடு ஒப்பிட்டு பார்த்து விட கூடாது...

இப்படி ஒப்பீடு செய்து பார்க்க தோன்றினாலேயே,
அவர் எதற்காக அந்த அவதாரத்தை செய்தார்?
என்ன காரியத்தை செய்ய அப்படி ஒரு அவதாரம் செயதார்?
என்ற ஆலோசனை தோன்றாமல், பக்தி இல்லாமல் போய், நாம் காணும் மனிதனை போலவும், மீனை போலவும், பன்றியை போலவும் நினைத்து கொண்டு, பகவானின் கருணையை புரிந்து கொள்ளாமல், வெறும் கதையாகவும், நாதீகனாக இருந்தால் "உங்கள் பகவான் பன்றியா? மீனா?" என்ற அளவுக்கு கீழ்தர பேச்சுக்கள் சம்பவித்து விடும்.

"இது என்னவென்றே தெரியவில்லையே.. பெரிய ரூபத்தில் வளர்ந்து கொண்டே போகிறதே.   இது தேவனா, அசுரனா என்று தெரியவில்லையே" என்று ரிஷிகள் பயந்து நடுங்க...
"அபயம்.. அபயம்" என்று வராஹ மூர்த்தியாகவே இருந்து கொண்டு கர் கர் என்று கர்ஜிக்க, வந்திருப்பது பரவாசுதேவன் தான், ப்ரம்ம தேவனுக்கு அணுகிரஹம் செய்ய காட்சி கொடுக்கிறார் என்று பயம் தெளிந்தனர் ரிஷிகள்.

உலகத்தில் யஞ்யம் (வேத முறைப்படி இறை வழிபாடு) இருக்கும் வரையில்,
நல்ல காரியங்கள் நடக்கும் வரையில்,
தர்மம் (நியாயம்) உலகில் நிலைத்து இருக்கும் வரை,
உலகில் ஒரு பதிவ்ரதையாவது இருக்கும் வரை,
ஒரு வைஷ்ணவனாவது உலகில் இருக்கும் வரை,
அக்னிஹோத்ரம் செய்யும் ஒரு ப்ராம்மணனாவது இருக்கும் வரை,
உலகம் நிலைத்து இருக்கும்.

உலகம் சத்தியத்தாலும், தர்மத்தாலும் (நியாயம்) நிலைத்து இருக்கிறது.
உலக மக்களிடையே பொய் (அசத்யம்), நியாயத்துக்கு எதிரான செயல்கள் அதிகரிக்கும் போது, ஜனங்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை இட்டு, அழிவார்கள்.

அதர்மத்தாலும், அநியாயத்தாலும் சூழப்பட்டதால், பூமியே பிரளய ஜலத்தில் மூழ்கி கிடக்க,
மீண்டும் சத்தியத்தை நிலைநாட்டி, தர்மத்தை (நியாயத்தை) நிலைநாட்ட,
பிரளய ஜலத்தில் இருந்து மீட்டு, மீண்டும் பூமியை அதனுடைய ஸ்தானத்தில் வைக்க,
பெருமாள் "தர்மமே ரூபமாக, சத்தியமே ரூபமாக" கொண்ட 'யஞ்ய வராஹ' அவதாரம் எடுத்தார்.

பெருமாள் எடுத்த இந்த வராஹ அவதாரம் என்பதே தர்ம ஸ்வரூபமானது.

பூலோகமே இல்லாத சமயத்தில், தன்னை தானே வராஹனாக ஸ்ருஷ்டி செய்து கொண்டார் என்று பார்க்க வேண்டுமே தவிர, வராஹ ஸ்வரூபம் நாம் உலகில் காணும் சாதாரண பன்றி என்று நினைக்கக்கூடாது..

வராஹ மூர்த்தியை "தர்மத்தின் ஸ்வரூபமாக பார்" என்று நமக்கு காட்டுகிறது நம் புராணங்கள்.

உலகில் அலையும் சாதாரண பன்றியை போன்று தான், வராஹ அவதாரம் என்று நாம் பார்த்து விட கூடாது என்பதற்காகவே,
வராஹ மூர்த்தியின் ஸ்வரூபத்தை, சத்ய, ஜன, தப லோகத்தில் உள்ள ரிஷிகளே விளக்குகின்றனர்.

வராஹ மூர்த்தியாக அவதாரம் செய்து, பூலோகத்தை மீட்டு,
மனிதர்களை பிறக்க வைத்து, அவர்களால் மீண்டும் உலகில் தர்ம காரியங்கள், வேத முறையில் இறை வழிபாடுகள் இனி நடக்க போகிறது என்று அறிந்த ரிஷிகள், வராஹ பகவானையே யஞ்ய வராஹனாக பார்த்தனர்.

யாக குண்டத்தை சுற்றி, 4 பேர் உட்கார்ந்து கொண்டு யாகத்தை (யஞ்யம்) செய்வார்கள்.
1. ஹோதா (ரிக்வேதத்தில் உள்ள வேத ஸ்துதிகளை சொல்லி, தேவர்களை, ப்ரம்மா, ருத்ரன், பரவாசுதேவனை அழைத்து, தாங்கள் கொடுக்க ஆசைப்படும் ஆஹுதிகளை ஏற்றுக்கொள்ள அழைப்பவர். யாகம் செய்பவர்களில் மிகவும் மதிப்புக்கு உரியவர்)
2. அத்வர்யு (யஜுர் வேதத்தில் உள்ள வேத மந்திரப்படி யாகத்தினை முறைபடி சரியாக  நடத்துபவர் ,செய்பவர்)
3. உத்காதா (சாம வேதத்தில் உள்ள வேத மந்திரங்களை கானமாக பாடி, ஹோதாவால் அழைக்கப்படும் தேவதைகளை விசேஷமாக மகிழ்விப்பவர்)
4. ப்ரம்மா (யாகம் ஒழுங்காக நடக்கிறதா! என்று மேற்பார்வை செய்பவர். கர்மாக்கள் செய்கையில், அவ்வப்போது அத்வர்யுவாக இருப்பவர், பிரம்மாவை அனுமதி கேட்பார். அதற்கு பிரம்மா ‘ஓம்’ என்று சொல்லி அனுமதி தருவார்.
அவ்வப்போது யக்ஞத்தில் ஏற்படக்கூடிய தவறுகளுக்கான பிராயச்சித்தத்தைக் கூறுவதும், பிரம்மாவின் பொறுப்பே)
பொதுவாக யக்ஞம் என்ற சமஸ்கரித சொல்லுக்கு 'வழிபடுதல்' என்று பொருள்.

யாகத்தை செய்யும் இந்த நான்கு பேரும், வராஹ பகவானின் நான்கு 'கால்கள்' போலவும்,
யாகத்துக்கு இரண்டு இலை போன்ற தருவி வைத்து இருப்பார்கள்.
இந்த தருவியே, வராஹ பகவானின் இரண்டு 'காதுகள்' போலவும்,
யாகத்தில் கடைசியாக ஒரு நீண்ட பாத்திரம் வைத்து பூரண ஆஹுதி கொடுப்பார்கள்.
அந்த நீண்ட பாத்திரமே, வராஹ பகவானின் நீண்ட 'முகம்' போலவும்,
யாகத்துக்கு பயன்படுத்தப்படும் தர்ப்பைகளே, வராஹ பகவானின் 'ரோமங்களாக' இருக்க...

ஹோமத்துக்கு விடப்படும் நெய் (ஆஜ்யம்) ப்ரகாசத்திற்கு காரணமாக இருப்பதால், அவருடைய 'கண்கள்' போலவும் இருக்க,

வராஹ ஸ்வரூபமே, ரிஷிகளுக்கு  யக்ஞ ரூபமாக தெரிந்தது.
ரிஷிகள் "யக்ஞ வராஹனாக" தரிசனம் செய்தார்கள்.

யக்ஞ வராஹனாக காட்சி கொடுத்த பெருமாள், பிரளய ஜலத்தில் மூழ்கி பூமியை தூக்க, ஹிரண்யாக்ஷனுடன் போரிட்டு அவனை கொன்று,
ஒரு யானை ஒரு தாமரை பூவை தூக்கி கொள்வது போல, தந்தங்களினால் மிக எளிதாக தூக்கிக் கொண்டு மேலே வந்தார்.
பூலோகத்தை அதன் கதியில் மீண்டும் வைத்து, மனிதர்களை படைக்குமாறு அணுகிரஹம் செய்தார்.

பரவாசுதேவன் நாராயணனுக்கு, பூமா தேவியும், மஹா லட்சுமியும் பத்னிகள்.
தன்னை காப்பாற்றி, பூலோகத்தில் மீண்டும் ஜனங்களை ஸ்ருஷ்டிக்க அணுகிரஹம் செய்த 'வராஹ பெருமானை', நாராயணன் என்று உணர்ந்தாள், பூமி தாயார்.
பூலோகத்தில் பிறக்கும் நமக்கெல்லாம் தாய் "பூமா தேவி", தந்தை "நாராயணன்".
யாரும் 'அனாதை'கள் இல்லை இந்த உலகில்.

நாம் இந்த தாய் தந்தையிடம் பக்தியுடன் இருக்க வேண்டும். 

"நாம் மோக்ஷம் பெற வேண்டும்" என்பதற்காகவே எடுத்த அவதாரம் 'வராஹ அவதாரம்'.

பூமா தேவியுடன், வராஹ பெருமாள், தமிழ் நாட்டில் ஸ்ரீ முஷ்ணம் என்ற திவ்ய தேசத்தில் இருக்கிறார்கள்.
நம்மை பெற்ற பூமி தாயையும், பூமியையே மீட்டு கொடுத்த தந்தையான பெருமாளையும், நாமும் ஸ்ரீ முஷ்ணம் சென்று தரிசிக்க வேண்டும்.

"வராஹ புராணம், பாகவதம்" போன்ற புராணங்கள் "சாத்வீக புராணங்கள்" என்று புகழப்படுகிறது.

நாராயணனே கிருஷ்ணராக அவதாரம் செய்த போதும், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் "ராஜஸ புராணங்கள்" என்று சொல்லப்படுகிறது.
மகாபாரதத்தில் தான் பகவத் கீதை இருக்கிறது என்றாலும், பிற கதைகளை படிக்கும் போது பொறாமை, சூது, பழிக்கு பழி போன்ற ராஜஸ குணங்களும் காணப்படுகிறது.

ஆனால், பாகவதம், வராஹ புராணம் போன்ற சில புராணங்கள், மோக்ஷத்தை விரும்ப கூடியவர்கள் படிப்பதற்காகவே ஆரம்பம் முதல் கடைசி வரை சாத்வீகமாகவே உள்ளவை என்று சொல்லப்படுகிறது.

வராஹ புராணத்தில், ஹிரண்யாக்ஷனை ஒழித்து, பூமியை அதன் கதியில் நிறுத்தி விட்ட பின், வராஹ மூர்த்தியாக உள்ள நாராயணருக்கும், பூமா தேவிக்கும் இடையே நடந்த உரையாடல் உள்ளது.

"பூலோகத்தில் இப்படி ஜீவ கோடிகள் பிறந்து, வாழ்ந்து, இறந்து.. மீண்டும் பிறந்து, வாழ்ந்து, இறந்து கொண்டே இருக்கிறார்களே....
இவர்கள் இந்த சம்சார சூழலில் இருந்து விடு பட்டு, பரமபதம் என்ற மோக்ஷத்தை அடைய என்ன வழி?" என்று பூமா தேவி கேட்க,
வராஹ பகவான் 'நம்மை போன்ற ஜீவன்கள் மோக்ஷம் அடைய வழி என்ன" என்று சொல்கிறார்.
ஆரம்பம் முதல், கடைசி வரை,
ஒரு தாயும் தந்தையும், "தன் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டுமே" என்று கவலைப்பட்டு தங்களுக்குள் உரையாடி கொள்ளும் சாத்வீக புராணம் வராஹ புராணம்.

நம் மோக்ஷத்திற்காக, பெருமாளும், பூமி பிராட்டியும் பேசிக்கொள்ளும் அற்புதமான வராஹ புராணத்தை ஒருவன் படித்தாலே, அவனுக்கு மோக்ஷம் நிச்சயம்.

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க நம் வேதங்கள்.
வாழ்க நம் தெய்வங்கள்.

வளர்க நம் இறை பக்தி.

Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam - Morning (With meaning)

Sandhya Vandanam - Afternoon (With meaning)


Sandhya Vandanam - Evening (With meaning)

Saturday, 8 June 2019

இறைவனுக்கு சமஸ்கரித மொழியில் பூஜைகள் செய்தால் தான் பலன் கிடைக்குமா? தன் தாய் மொழியாக இருக்கும் மொழியில் பூஜைகள் செய்தால் பலன் கிடைக்காதா? ஒரு அலசல்...

இறைவனுக்கு சமஸ்கரித மொழியில் பூஜைகள் செய்தால் தான் பலன் கிடைக்குமா?
தன் தாய் மொழியாக இருக்கும் மொழியில் பூஜைகள் செய்தால் பலன் கிடைக்காதா? (ஹிந்தி, தமிழ், தெலுங்கு...!!)

இந்த கேள்வி,
உண்மையான இறைபக்தி உள்ளவனுக்கு வருகிறது.

இதே கேள்வி,
இறைபக்தியே இல்லாத நாதீகனுக்கும், 
வேறு மதத்தில் இருந்து கொண்டு, ஹிந்து தர்மத்தையும், தெய்வத்தையும் எப்படி சீர்குலைக்கலாம்? என்று அலையும் கூட்டத்துக்கும் உள்ளது.

"தமிழை வளர்ப்பது தான் நோக்கம்" என்றால்,
தமிழில் அர்ச்சனை செய்ய ஒரு தமிழன் ஆசைப்பட்டால், தமிழில் அர்ச்சனை சொல்லும் முன்,
'கேட்பவனும் அந்த தெய்வத்துக்கு முன் ஒரு பாசுரமாவது, திவ்ய பிரபந்தமாவது சொல்ல வேண்டும்'
என்று 'சட்டம்' கொண்டு வந்தால் தான், 'தமிழும் வளரும்', 'பக்தியும் வளரும்'.
உண்மையான பக்தன்,
'இறைவன் முன் நாயன்மார்கள் நமக்காக கொடுத்த பதிகத்தில் ஒரு ஸ்லோகத்தையாவது சொல்ல தனக்கு பாக்கியம் கிடைத்ததே'
என்று திருப்தி கொள்கிறான். திருப்தி கொள்வான்.

இப்படிப்பட்ட பக்தன் வந்தால், அர்ச்சகர் தமிழில் ஆனந்தமாக இறைவனுக்கு அர்ச்சனை செய்வார்.

பதிகங்களை பாடி, நாயன்மார்களை நினைவுபடுத்திய நம்மை கண்டு 'ஈசனும்' மகிழ்கிறார்.
இறை அருளும் கிட்டும். 
நாயன்மார்களின் ஆசியும் கிட்டும். 
தமிழும் வாழும்.

வெறும் சம்ஸ்க்ரித மொழியினால் ஏற்பட்ட பொறாமை தான், இது போன்ற கேள்வியை கேட்க வைக்கிறது என்றால், 
இறை பக்தியும் வளராது...தமிழும் வளராது..

கடந்த 60 ஆண்டுகளில்,
'தமிழை காக்கிறேன்' என்று நாத்தீக கூட்டமும்,
பிற மதத்தில் இருந்து கொண்டு 'தமிழை வளர்க்கிறேன்' என்று போர்வை போட்டு கொண்டு ஏமாற்றி வரும் கூட்டமும்,
பாசுரங்களை, பதிகங்கள் சொன்ன ஓதுவார்களை, கோவிலில் இருந்து அகற்றினர்.
கம்ப ராமாயணத்தை பற்றி பேசினால், 
தமிழோடு, 'ராம பக்தியும்' வளருமே என்று பேசாமல் இருந்தனர்.

பதிகங்களை சொல்லி தமிழ் வளர்த்தால், 
தமிழோடு 'சிவ பக்தி வளருமே' என்று பதிகங்கள் சொல்லும் ஓதுவார்களை கோவிலில் இருந்து விரட்டினர்.
கோவிலையே அரசாங்க கைக்குள் போட்டு கொண்டு, 
நாயன்மார், ஆழ்வார் பாடிய பாடல்களால் நிரம்பி இருந்த ஆயிரக்கணக்கான கோவில்களில் தமிழை ஒழித்தனர்.
"கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம்" போன்ற தமிழ் பாடல்களை வளர்த்தால், 
தமிழோடு 'முருக பக்தி' வந்து விடுமே என்று அதையும் அழிக்க முயன்றனர். 

அது மட்டுமா!!
முருகனையே "பாட்டன் என்றும்", "ஏதோ மனிதன் போலவும்" மாற்றி,
இவர் ஒரு தமிழர் என்ற அளவில் ஆக்க பெரும் "ஏமாற்று புரட்சி" மற்ற மதத்தில் இருந்து கொண்டு ஹிந்து தெய்வங்களை சிறுமை படுத்த முயற்சி நடக்கிறது.
தமிழோடு சிவபக்தி வளருமே!!.. அதனால் பாசுரம் வேண்டாம்.

தமிழோடு பெருமாள் பக்தி வளருமே!!..அதனால் பிரபந்தங்கள் வேண்டாம்.
தமிழோடு சக்தி வழிபாடு வளருமே!!.. அபிராமி அந்தாதி வேண்டாம்.

தமிழோடு முருக பக்தி வளருமே!!..  கந்த கவசம் வேண்டாம்.
தமிழோடு ராம பக்தி வளருமே!!... கம்பன் எழுதிய ராமாயணம் வேண்டாம்.

"தமிழை வளர்த்த இவை எதுவுமே நமக்கு வேண்டாம்.." 
என்று திட்டமிட்டு இந்த நாத்தீக கூட்டமும், பிற மதத்தில் இருந்து கொண்டு, ஹிந்து தர்மத்தை, தெய்வங்களை எப்படி கேலி செய்யலாம்!!, ஏமாற்றி நம் பொய் மதத்துக்கு மாற்றலாம் என்று 60 ஆண்டுகாலமாக தமிழகத்தில் குறிப்பாக முயற்சி நடக்கிறது.

இன்று வரை ஹிந்துக்களை ஏமாற்ற முடியவில்லை.
போலிகள், போய் சேர்ந்து விட்டனர்.
சமயபுர மாரியம்மனுக்கும், மதுரை அழகருக்கும் கூட்டம் குறையவில்லை.

போலிகளை ஹிந்துக்கள் எட்டி உதைக்க வேண்டும். இவர்களை கடுமையாக எதிர்க்க வேண்டும்.
நாதீகனுக்கும், பிற மதத்தில் உள்ளவனுக்கும் இங்கு என்ன வேலை? என்று கடுமையாக எதிர்க்க வேண்டும்.
தெய்வத்திடமே பக்தி இல்லாத போலிகள், "தமிழை மொழியை காக்கிறேன்" என்று சொல்லி
"பதிகங்கள், திவ்ய பிரபந்தங்கள், கந்த சஷ்டி கவசம்,  அபிராமி அந்தாதி போன்ற தமிழை கற்று கொள்ள வேண்டும்" என்று சொல்லாத நாத்தீக போலிகளை, 
பிற மதத்தில் இருந்து கொண்டு, கேலி பேச காத்து இருக்கும்  திருட்டு போலிகள் துரத்தப்பட வேண்டும்.

ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடிய "தமிழ்" பாடல்களை "தெய்வங்கள்" ஏற்று கொள்கிறார்கள்..

ஸ்ரீ ரங்கத்தில் திருபள்ளி எழுச்சியே "தமிழில்" தான் பாடப்படுகிறது.
மார்கழி மாதம் முழுவதும் "தமிழ் திருப்பாவை" தான் எங்கும் ஒலிக்கிறது.
அபிஷேகம் போன்ற வைதீக ஆராதனைகள் நடக்கும் போது புருஷ சூக்தம், ருத்ரம் போன்ற வேத சப்தங்கள் சொல்லப்படுகிறது.

சமஸ்கரித மொழியில் "ஒரே ஒரு சிறு ஸ்லோகம்" சொல்லி,
"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே"
சிறு பூஜை செய்தால் கூட,
நம்மை பார்த்து மிகவும் ஆனந்தப்படுகிறார்.
இதற்கு காரணம் உண்டு.

"ஓம்" என்ற பிரணவ ஒலியில் இருந்து தான் "வேதம் வெளிப்பட்டது".
வேதத்தை கொண்டு ப்ரம்ம தேவன் பஞ்ச பூதங்களை படைத்தார் (ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண் (உலகங்கள்))

ப்ரம்ம தேவனையும் படைத்தவர் "பரவாசுதேவன் நாராயணன்".

ப்ரம்ம தேவன் தன் தியானத்தால் "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தை வெளிப்படுத்தினார்.
('ப்ரணவஸ்ய ரிஷி ப்ரம்மா' என்று சொல்லி, பிரணவத்தை வெளிப்படுத்திய பிரம்மாவுக்கு தலை மேல் கை கூப்பி வணங்குவதாக பாவித்து, "தலையில் தொட்டு கொள்வது" சந்தியா வந்தனத்தில் உள்ளது)

உலகம் 'ஒலி'யால் சூழப்பட்டு உள்ளது.
சப்தத்திலேயே சமஸ்கரிதம் உள்ளது.
மற்ற மொழிகள், ரிஷிகளால் இலக்கணத்தோடு உருவாக்கப்பட்டது. 
அகத்திய முனியால் "தமிழ்" கொடுக்கப்பட்டது.
சில பாரத தேச மொழிகள், பிற நாடுகளில் உள்ள மொழிகள், மனிதர்களாலும் உருவாக்கப்பட்டது.

'ஓம்' என்ற மூல பிரணவத்தை (சம்ஸ்க்ரிதம்),
ஒரு பாத்திரத்தை காதில் மூடி வைத்து கேட்டால், நம்மாலும் 'அஉம்' என்ற பிரணவ சப்தத்தை உணர முடியும்..

தன் தியான சக்தியால், பிரணவ மந்திரத்தை ஸித்தி ஆக்கிய ரிஷிகள், பிரணவத்தில் மறைந்து இருக்கும் தேவ பாஷையில், இருந்த வேத மந்திரங்களை ரிஷிகள் வெளிப்படுத்தினர்.
வேத மந்திரங்களை மட்டுமா கொடுத்தார்கள் ரிஷிகள்?

தேவ பாஷையில் இருந்த
ஆயுர்வேதம் (medicine), 
ஸ்தாபத்யம் (engineering), 
காந்தர்வ வேதம் (music), 
தனுர் வேதம்(weapon), 
64 கலைகள், 
யோகம் 
என்று அனைத்தையும் உலக மக்களுக்கு, படித்து தெரிந்து கொள்ள கொடுத்து விட்டனர் நம் ரிஷிகள்.

தேவர்களும், ப்ரம்ம தேவனும் பயன்படுத்தும் மொழி சமஸ்கரிதம் என்பதையும் ரிஷிகள் அறிந்தனர்.

ஆதலால் பொதுவாக சம்ஸ்க்ரித மொழியை 'சப்த பிரம்மம்' (ஒலியிலேயே ஒளிந்து இருப்பதால்) என்றும் 'தேவ பாஷை' (மேல் உலக தேவர்கள் பேசும் பாஷையாகவும் இருப்பதால்) என்று சொல்கிறோம்.

நமக்கு மேல் உள்ள தேவர்கள், ப்ரம்மா, ப்ரம்மாவையும் படைத்த பரவாசுதேவனால்,
மனிதன் உருவாக்கிய மொழி மட்டுமல்ல,
அவன் ஊமையாக இருந்து மனதில் உருவாக்கும் மௌன பாஷையை கூட அறிந்து கொள்வார்கள்..
நாம் எந்த மொழியில் பேசினாலும், தெய்வங்களுக்கு புரியும். அதில் சந்தேகமில்லை.

கடவுள் அணுகிரஹம் செய்ய, மொழி தடை இல்லை..

ஆனால், நாம் புரிந்து கொள்ள வேண்டியது நம்முடைய "பக்தி எப்படிப்பட்டது?" என்பது தான்.

ஒரு தந்தை (தமிழ் தந்தை என்று வைத்து கொள்வோம்), தன் மகனுக்கு தமிழ் கற்று கொடுத்தான்.
வளர வளர, அவன் பல சமுதாய மக்களுடன் சகஜமாக பழகி கொள்ள ஏதுவாக இருக்க, "மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், பிரெஞ்ச், சீன" மொழி என்று பல மொழிகளும் கற்று கொள்ள, சூழ்நிலை ஏற்படுத்தி கொடுத்தான். தானும் அறிந்து இருந்தான்.
அந்த குழந்தை அனைத்து மொழியும் தெரிந்து கொண்டு, 
உலகில் எங்கு சென்றாலும் தன் எண்ணங்களை பறைசாற்றி,
தன் தாய் மொழியான தமிழில் உள்ள திவ்ய பிரபந்தங்கள், பாசுரங்கள், கம்ப ராமாயணத்தில் உள்ள கவித்துவம் என்று அனைத்தையும் உலகம் அறிய செய்தான்.
மற்ற மொழிகள் பேசும் மக்களுக்கு கூட,
இவன் மொழியான தமிழை கற்று கொள்ள ஆர்வம் உண்டானது.

மற்ற மொழிகள் கற்றதால், 'தன் தாய் மொழி தமிழை மறந்து விடுவான்' என்று நினைத்தால், 
இவன் 'தமிழ் மொழியில் எழுதப்பட்ட கம்ப ராமாயணத்தை, பாசுரங்களை உலக அரங்கில் பரப்பி பிரசித்தி ஆக்கினான்'.

ஒரு நாள், இந்த மகன், தன் தந்தையை பார்க்க வந்தான்.

இந்த மகன், தெலுங்கில் பேசினாலும், ஹிந்தியில் பேசினாலும், பிரெஞ்சில் பேசினாலும் புரிந்து கொள்வார் இவன் தந்தை.
மகிழ்ச்சியும் அடைவார்.
"இவன் எது கேட்டாலும் கொடுக்க வேண்டும்" என்றும் ஆசைப்படுகிறார்.

இந்த மகனோ, மிகவும் உத்தமான பிள்ளை.
தன் பெருமைகளை விரும்பாதவன். நன்றி உடையவன்.

மகன், தன் தந்தையின் தாய் மொழியான தமிழில் பேச ஆரம்பிக்க, "தன்னால் முதலில் கொடுக்கப்பட்ட மொழியான தமிழில் என்னுடன் பேசுகிறானே!!.. 
இது என்னுடைய தாய் மொழி என்று அறிந்து, அந்த மொழியில் பேச ஆசைப்படுகிறானே என் மகன்" 
என்று பேரானந்தம் அடைகிறார்.

'இவன் எது கேட்டாலும் கொடுக்க வேண்டும்' என்று ஆசைப்படுவதோடு நிற்காமல்,
"இப்படி ஒரு உத்தம பிள்ளையை பெற்றோமே" என்று "இவன் என் மகன்.. என் மகன்"
என்று தன் மகனை நினைத்து தானும் பெருமிதம் கொள்கிறார் தந்தை.

பல மொழிகள் தெரிந்தாலும், பல தேசங்களில் தன் புகழ் பேசப்பட்டாலும், தன் தாய் நாட்டை, தன் தாய் மொழியை மறக்காத உத்தம பிள்ளைகள் பாரத மண்ணில் உண்டு.
அதே போல,
சம்ஸ்க்ரிதம் என்ற சப்த பிரம்மம், பரவாசுதேவனால் ஜீவாத்மாக்களுக்கு கொடுக்கப்பட்ட மொழி.

947AD வரை,
பாரத நாட்டில் அனைவரும் ஆங்கிலம் போல, பொது மொழியாக மற்ற மொழி தேசத்துடன் பேசிக்கொண்டு இருந்த மொழி 'சம்ஸ்க்ரிதம்'.
'ராஜ ராஜ சோழன், ஆதி சங்கரர், ஸ்ரீ ராமானுஜர்', காஷ்மீர் வரை சென்ற பொழுது, பொது மொழியான 'சம்ஸ்க்ரித மொழியில்' தான் வர்த்தகங்கள், உரையாடல் நடந்தது.
அந்த அந்த தேசத்தில், 
ரிஷிகள் உருவாக்கிய 'தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்' போன்றவையும் செழித்து வளர்ந்தது. 
'சம்ஸ்க்ரிதம்' என்ற சப்த பிரம்மம்,
பொது பாஷையாகவும்,
ஆயுர்வேதம் (medicine), 
ஸ்தாபத்யம் (engineering, architect marvel), 
காந்தர்வ வேதம் (music), 
தனுர் வேதம்(weapon), 
64 கலைகள், 
யோகம் 
போன்றவை கற்று கொள்ளவும்,
தெய்வங்களை உபாசிக்கவும் பிரத்யேகமாக பயன்படுத்தப்பட்டது பாரத தேசம் முழுவதும்.

நம் தாய் மொழியில் பேசினாலும், ஊமை பாஷை பேசினாலும் இறைவன் புரிந்து கொள்வார்.
ஆனால்,
சப்த பிரம்மமாகிய சமஸ்கரிதத்தில் 'ஒரு ஸ்லோகம்' சொல்லி நமஸ்காரம் செய்தாலும்,
"என் பிள்ளை கஷ்டப்பட்டு சப்த பிரம்மமாகிய சமஸ்கரிதத்தில் ஒரு ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து என்னிடம் நிற்கிறானே!!.
எத்தனை பிரியம் என்னிடம் இருந்தால், எனக்காக கஷ்டப்பட்டு இந்த ஒரு சமஸ்கரித ஸ்லோகத்தை கற்று இருப்பான். 
இவன் காட்டும் பிரியத்துக்கு நான் செய்யும் கருணை போதாது" 
என்று பூரிப்பு கொள்கிறார்.


உண்மையான இறை பக்தி உள்ளவன்,
'இறைவனை நெருங்க எப்படியெல்லாம் முயற்சி செய்து பக்தி செய்யலாம்?!! 
என்று நினைப்பான். 

'தனக்காக சிரமப்பட்டு ஸ்லோகங்கள் சமஸ்க்ரிதத்தில் இருந்தாலும் படித்து சொல்கிறானே' என்று, பக்தனின் பக்தி சிரத்தையை கண்டு, இறைவன் கருணையை பொழிகிறார்.

தான் இருப்பதை மறைமுகமாகவும், 
பக்தி வளர வளர 'யாரோ வந்து உதவியது போலவும்', 
மேலும் பக்தி வளர வளர 'கனவில் திவ்ய காட்சிகள் கிடைக்க செய்தும்', 
மேலும் பக்தி வளர வளர 'தன் திவ்ய ரூபத்தை பக்தன் விரும்பியபடி ராமராகவோ, கிருஷ்ணராகவோ, நாராயணனாகவோ, சிவனாகவோ பரவாசுதேவன் காட்சி கொடுத்து 
மோக்ஷத்திற்கு வழி காட்டுகிறார்.

இறை நம்பிக்கை உள்ள பக்தன்,
"தெய்வத்துக்கு தமிழ் தெரியாதா?" என்று கேட்டு நேரத்தை வீணடிப்பதை விரும்புவதில்லை.
மனித ஆயுள் 100 வயது போல தோன்றினாலும், இது ஒரு அற்ப காலம் தான். காலம் பொன் போன்றது.
மாறாக,  
"தமிழில் கொட்டிக்கிடக்கும் பதிகங்கள், 4000 பிரபந்தங்களை, கந்த சஷ்டி கவசம், போன்றவற்றை படித்து, 
ஆழ்வார்கள்  போலவும், 
நாயன்மார்கள் போலவும், அருணகிரி நாதர் போலவும், கிருபானந்த வாரியார் போலவும், 
பாரத மண்ணில் இருக்கும் மகான்கள் போலவும், எப்படி தன்னுடைய பக்தியை உயர்த்தி கொள்ளலாம்!!" என்று தான் இறை நம்பிக்கை உள்ள பக்தன் நினைப்பான்.


பக்தி உயர உயர,
பிரபந்தங்கள், பதிகங்கள் பாட பாட,
"நாம் சமஸ்க்ரித மொழியில் பகவானே தன் திருவாயால் சொன்ன "பகவத் கீதையை" நாமும் சொல்லலாமே" என்று நினைக்கிறான்.

சர்வ தர்மான் பரித்யஜ்ய 
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ
மோக்ஷ இஷ்யாமி மா சுச:
(எல்லா தர்மங்களையும் விட்டு, என்னை ஒருவனையே சரண் அடைந்து விடு. 
உன் பாபங்கள் அனைத்தையும் மன்னித்து, மோக்ஷம் வரை உனக்கு கொடுக்கிறேன். கவலைப்படாதே)
என்று பரமாத்மா கிருஷ்ணரே தன் திருவாயால் நமக்கு சொன்ன ஆறுதல் வார்த்தை (ஸ்லோகம்) ஆயிற்றே.. 
இதன் அர்த்தம் புரிந்து கொண்டு, பெருமாள் முன்னால் நின்று கொண்டு சொல்லலாமே... 
வீட்டில் உள்ள பூஜை அறையில் தெய்வத்திடம் சொல்லலாமே..

இப்படியே இன்னும் என்ன சொல்கிறார் நம் கிருஷ்ணர் என்று மேலும் பல சுலோகங்களை அர்த்தத்துடன் தெரிந்து கொண்டு, தினமும் அனுபவித்து சொல்லலாமே.. 
பகவான் சொன்ன சொல்லை நாமும் சொல்ல, நமக்கு பக்தி தானே முக்கியம்.

"பகவான் நாமும் சமஸ்க்ரித மொழியில் ஒரு சுலோகம் சொல்வதை பார்த்து, ஆச்சர்யப்படுவாரே? நம் மீது விசேஷமாக கடாக்ஷம் செய்வாரே" 
என்று இறை பக்தியில் உருக்கம், ஆர்வம் போன்ற அனுபவங்களை பெறலாமே.

"தெய்வத்துக்கு இந்த மொழி தெரியாதா? அந்த மொழி தெரியாதா?" 
என்ற கேள்விகள் நாத்தீக போலிகள், பிற மதத்தில் இருந்து கொண்டு ஹிந்து தெய்வங்களை கிண்டல் செய்ய காத்திருக்கும் போலிகள் எழுப்புகிறார்கள்.
இவர்களுக்கு நம் பாசுரங்களும் தேவையில்லை. 
ஹிந்து தெய்வங்களும் தேவையில்லை. 
ஹிந்துக்களே தேவையில்லை. 

இறை பக்தி வளர, 
தமிழன், மீராவின் கீர்த்தனைகளை பாடினாலும் தெய்வம் ஏற்று கொள்ளும். 

இறை பக்தி வளர, 
தமிழன் பதிகங்களை, பிரபந்தங்களை  பாடினாலும், தெய்வம் ஏற்று கொள்ளும்.
இறை பக்தி வளர, 
எதுவுமே பேசாமல், மௌன மொழியில் பேசினாலும், தெய்வம் ஏற்று கொள்ளும்.

தேவ பாஷையான, இந்த உலகில் உள்ள ஒலியில் மறைந்து (மறை) இருக்கும் வேத மந்திரங்கள் கொண்டு பாடினால், 
பகவத் கீதையில் ஒரு சுலோகம் சொன்னாலும், 
தெய்வம் பெருமகிழ்ச்சி அடைந்து, நமக்கு நல்லவைகள் மட்டுமே நடக்க அருள் செய்கிறார்.

"ஹிந்து தெய்வத்தை கிண்டல் செய்து விட்டோம்" 
என்று நினைத்து, பிற மதத்தில் உள்ளவன் நினைத்தால், அந்த பாபங்களே அவனை படு குழியில் தள்ளி, அவன் வணங்கும் போலி தெய்வங்களும் அவனை கை விட்டு விடும்.

என் கனவிலும் பெருமாள் வருவாரா? 
தெய்வ காட்சிகள் கிடைக்குமா? 
நான் ஒழுக்கமாக வாழ்கிறேனா? 
என்று தன்னை தானே ஹிந்துவாக பிறந்த அனைவரும் கேட்டுக்கொள்ள வேண்டும்...


ஹிந்துக்கள் பக்தியை வளர்த்து கொள்ள முயற்சிக்க வேண்டுமே தவிர, "தெய்வம் புரிந்து கொள்ளுமா?" 
என்று திமிர் பிடித்த கேள்விகளை, 
நாத்தீகன் கேட்கிறானே ! பிற மதத்தில் இருந்து கொண்டு நம் மதத்தில் நுழைந்து கொண்டு இப்படி கேள்வி கேட்கிறானே !! நாமும் கேட்கலாமா என்று நினைக்க கூடாது... 

இறைவனுக்கு நம் மொழியும் தெரியும்.  
ஆனால், 
அவருக்காக நாம் ஒரு படி முன் வைத்தால், அவர் நம்மை நோக்கி 10 படி முன் வைத்து தான் இருப்பதை உணர செய்கிறார். 
பக்தி முக்கியமே தவிர...  விதண்டாவாத பேச்சுக்கள், தெய்வங்களை காட்ட உதவாது. 
விதண்டாவாத பேச்சுக்கள், அழிவையே தரும்.    

ஹிந்துக்கள், போலிகளை அடித்து துரத்த வேண்டும்.  

நாயன்மார்கள், சித்தர்கள், ஆழ்வார்கள், ராமானுஜர், சங்கரர், அகஸ்தியர், கம்பர் போன்றவர்கள், நடந்த இந்த தமிழத்தை, 
நாத்தீக போலிகள், மற்ற மதத்தில் இருந்து கொண்டு ஹிந்து தெய்வங்களை எப்படி குறை சொல்லலாம்? மதம் மாற்றலாம்? என்று போலி தெய்வங்களை வைத்து கொண்டு இருக்கும் போலிகளுக்கு இடம் தரவே கூடாது. 

வாழ்க ஹிந்துக்கள்.  

உலகில் எங்கு பிறந்தாலும் சோற்றுக்கு அலையும், போலி தெய்வங்களை வணங்கும் மனிதனாக பிறந்து இருப்போம். 
உலகில் ஹிந்துவாக பிறப்பதே அரிது. 
அதிலும் தமிழகத்தில், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ராமானுஜர், அருணகிரி நாதர் போன்ற மகான்கள் கால் பட்ட தேசத்தில் ஹிந்துவாக பிறப்பது கோடி புண்ணியம். 

"ஹிந்துவாக பிறந்தோமே" என்று பெருமிதம் கொள்வோம்.  
வாழ்க்கையை வீணடிக்காமல், இறை சிந்தனையை உயர்த்தி கொள்ளவும், போலிகளை எதிர்க்கவும் முயல்வோம்.


வாழ்க ஹிந்துக்கள். 

Hare rama, Hare Krishna (Listen to Bhajan)

Sandhya Vandanam (Morning with meaning)


Sandhya Vandanam (Afternoon with meaning)

Sandhya Vandanam (Evening with meaning)