Create your Own Website.. Try yourself Free for 14 days..........Just Easy!

PROUD HINDU DHARMA: பெருமை

Followers

Create your Own Website.. Try yourself Free for 14 days..........Just Easy!

Showing posts with label பெருமை. Show all posts
Showing posts with label பெருமை. Show all posts

Monday, 13 July 2020

ஹிந்து மக்களின் பெருமைகள் என்ன? தெரிந்து கொள்வோம்...

ஹிந்துவின் பெருமையை உணருவோம்.. 

விஷ்ணு பகவான் 'கருமை நிறம்'. அவர் பத்னியான மஹாலக்ஷ்மியோ 'பொன்னிறம்'.

விஷ்ணு (கள்ளழகர்) மீனாக்ஷியை தன் தங்கையாக கருதினார்.
மீனாக்ஷி 'கருமை நிறம்'. 
இவள் மணந்து கொண்ட சிவபெருமானோ 'பொன்னிறம்'.

முருகன் தன் மாமனை போன்று பேரழகன், நிறத்தில் தந்தையை போன்று 'பொன்னிறம்'.

விநாயகன், மகா புத்திசாலி..யானை என்ற 'மிருகத்தின் உருவத்தை' ஏற்றவர். பிரம்மச்சாரி.

நீ கருப்பா?..  உனக்கு இருக்கிறார் 'கருமை நிற பெருமாள்'.. 

நீ வெளுப்பா?.. உனக்காக இருக்கிறார் 'சிவபெருமான்'.

நிற வெறி காட்டாத உன் ஹிந்து தெய்வங்களை விட்டு விட்டு, வெளிநாட்டில் பிறந்து இறந்து போன, நிறவெறியை தூண்டும் blonde தெய்வம் உனக்கு தேவையா?...

"கடவுளுக்கு உருவம் கிடையாது" என்ற சித்தாந்தம் உனக்கு இருந்தால், உனக்காக தானே அத்வைத மார்க்கம் உள்ளது..  
ஆதி சங்கரரை விட அத்வைதி உண்டா?..
கோவிலுக்கு கூட செல்லாமல், காடுகளில் இருந்த படியே,  ரூபமற்ற பிரம்மத்தை (கடவுளை) மனதிலேயே தியானித்த ரிஷிகள் உன் கண்ணுக்கு தெரியவில்லையா?..

'கட்டுக்கோப்புடன் வாழ்' என்று சொல்லி பழக்கிய போது சமுதாயங்கள் ஏற்படுவது இயற்கை தானே..

டாக்டர் சமுதாயம், வக்கீல் சமுதாயம் என்று இன்று கூட சமுதாயங்கள் உருவாகி கொண்டே தானே இருக்கிறது..

அதில் சில நல்லவர்கள் உதிக்கும் போது அவர் பெயரால் சமுதாயம் விரிவடைவதும் இயற்கை தானே..

ஷத்ரிய குலத்தில் தோன்றிய யது என்ற அரசன் புகழ் ஓங்கியதால், அவன் வழி வந்த சில லட்சம் ஷத்ரியர்கள் தங்களை "யாதவர்கள்" என்றும் "கோனார்' என்றும் சொல்லிக்கொள்வது இயற்கை தானே...

'எம்ஜிஆர் வழி, காந்தி வழி' என்று இன்று சொல்கிறார்களே.. இது சொல்வது இயற்கை தானே...

இந்த பல தரப்பட்ட சமுதாயங்கள் கட்டுக்கோப்பான அமைப்பை நம் பூமியில் ஏற்படுத்தியதால் தானே, ஆங்காங்கு நடந்த சிறு சிறு பிரச்சனைகளை ஆங்காங்கே பஞ்சாயத்து கூட்டி சரி செய்தனர்.

பல பிரச்சனைகள் கோர்ட்டு வரை செல்லாமலேயே நான்கு பெரியவர்களால் பேசி முடிக்கப்பட்டதே..

இந்த சமுதாய அமைப்பை சிதைத்து, நம்மை ஒழித்து கட்ட, கிறிஸ்தவ வெளிநாட்டினர், நம் சமுதாய அமைப்பை ஜாதி என்ற முத்திரை குத்தி, ஒரு சமுதாயத்துக்கும், இன்னொரு சமுதாயத்துக்கும் பகையை கிளப்பி, ஊர் பஞ்சாயத்துக்களை குலைத்து, கலாச்சாரத்தை கெடுத்தனர்.

இன்றுவரை, 1000 வருடங்களாக எங்களை அடிமை படுத்தி இருந்தனர் ப்ராம்மணர்கள் என்று உளரும் சிலர், 1000 வருடம் நம் நாட்டில் ஆட்சி செய்தது அந்நிய இஸ்லாமியர்களும், அந்நிய கிறிஸ்தவர்களும் தான் என்று ஏன் புரிந்து கொள்ளவில்லை?..

1000 வருடங்கள் முன் நன்றாக இருந்த காலத்தில், ஹிந்துக்களை ஹிந்து தானே ஆட்சி செய்தான்.

கும்பகோணத்தை ஆட்சி செய்த சோழர்கள் ஒரு தெருவில் சிவனுக்கு கோவில் கட்ட, மறு தெருவில் பெருமாளுக்கும் கோவில் கட்டி உள்ளானே.. 
வேலைவாய்ப்பு பலருக்கு கொடுத்து, அதே சமயம் அவரவர் சிற்ப, கட்டிட கலைகளை கூட ஊக்குவித்து இருக்கிறார்களே..

இன்று, ஒரு வீட்டில் நடக்கும் விவகாரம் ஆரம்பித்து, நாட்டில் நடக்கும் விவகாரம் வரை, ஒரே ஒரு நிதிமன்றம் தன் தலையில் எடுத்து கொண்டு, எதற்கும் தீர்வு கொடுக்க முடியாமல் தவிக்கிறதே!!

நிறவெறி இல்லாத நம் தெய்வங்களை விட்டு விட்டு, நிறவெறி தூண்டும் போலி தெய்வம் நமக்கு எதற்கு? வெளிநாட்டவனுக்கும் இந்த நிறவெறி தூண்டும் போலி தெய்வம் எதற்கு?..
அனைவரையும் ஹிந்துவாக ஆக்குவோம். 
உனக்கு கருப்பு கடவுள் விருப்பமா?.. பெருமாளை வணங்கு..
உனக்கு ஸ்படிகம் போல வெண்மையான தெய்வம் விருப்பமா? சிவனை வணங்கு.
தெய்வம் குழந்தை போல இருக்க வேண்டுமா? முருகனை வணங்கு.
உனக்கு இயற்கையே தெய்வமா? சக்தியை வணங்கு.
உனக்கு ஒரே தெய்வம் மட்டுமே வேண்டுமா? ஆதி மூலமான நாராயணனை வணங்கு.

அந்த ஆதிபுருஷனும் உருவம் ஏற்று இருக்க கூடாது என்று நினைக்கிறாயா? பரப்ரம்மம், பரஞ்சோதி என்று வணங்கு.

கடவுளே வேண்டாம், என் தாயே தெய்வம் என்று நினைக்கிறாயா? உன் தாயையே வணங்கு..

தெய்வங்களே தங்களுக்குள் சொந்தம் கொண்டாடும் ஹிந்து தர்மத்தை விட்டு, நிறவெறி தூண்டும் போலி தெய்வம் உனக்கு எதற்கு?

தெய்வங்களுக்கு பொறாமை கூட இங்கு இல்லையே...

மஹாவிஷ்ணுவே கிருஷ்ணராக தோன்றியும், அர்ஜுனன் சிவபெருமானிடம் பாசுபத அஸ்திரம் கேட்டு தவம் செய்ய போகிறேன் என்றான். 
கிருஷ்ணர் எதிர்க்கவில்லையே.. 
தெய்வங்களுக்குள் சண்டை இல்லையே!

நெல்லையப்பர் கோவிலுக்கு செல்.. 
மஹாவிஷ்ணு, தன் மாப்பிள்ளை சிவபெருமானுக்கு தன் கையால் பூஜை செய்கிறார்..
சிவபெருமான், காசியில் "ராம ராம" என்று ராம நாமத்தை ஜபம் செய்கிறார்.
மதுரைக்கு சென்றால், மாமன் வீற்று இருக்கும் கள்ளழகர் மலையில், முருகன் வந்து விட்டார்.
திருப்பதி செல்ல ஆரம்பித்தால், காளஹஸ்தி என்ற இடத்தில் சிவபெருமான் இருக்கிறார்.
108 திவ்ய தேசத்தில் ஒன்றாக இருக்கும் சித்ரகூடம் என்ற சிதம்பரத்தில், பெருமாள் நடராஜருக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டு இருக்கிறார்.

கும்பகோணம் சென்றால், ஒரு தெருவில் கும்பேஸ்வரர் இருந்தால், மறு தெருவில் சாரங்கபாணி இருக்கிறார்.

தெய்வங்கள் சொந்தம் கொண்டாடி கொண்டு இருக்கும் போது, கட்டுக்கோப்பான சமுதாயங்கள் பிற்காலத்தில் ஜாதி என்ற பெயரால் அழைக்கப்பட்டாலும், வெறுப்பை நமக்குள் ஊட்டியதே, நிறவெறி கொண்ட கும்பல் தானே..

வெளிநாட்டில் இருந்து வந்த இந்த அந்நியர்கள் நிறவெறி குணத்தை அடைந்தற்கு காரணமே, அவர்கள் வழிபட்ட நிறவெறி தூண்டும் போலி தெய்வங்கள் தானே..

சிந்திப்போம்... 
நிறவெறி தூண்டும் வெளிநாட்டு தெய்வங்களை பௌத்த மதத்தை வீசியது போல வீசுவோம்..

நம் தெய்வங்கள் நமக்கு உறவு அல்லவா...
எத்தனை தேர் திருவிழா கண்டு இருப்போம். 
தெய்வங்கள் நம்மிடம் உறவு கொள்வது புரியவில்லையா?..
நம் தெரு வழியாக, நம் வீடு தேடி  தெய்வங்கள் வீதி உலா வருவதை பார்த்தும், தெய்வங்கள் நம்மிடம் உறவு கொள்வது புரியவில்லையா?..

ப்ரம்ம தேவன் "உலகை படைத்தார். நம்மையும் படைத்தார்" என்று ஹிந்து தர்மம் சொல்கிறது..
ப்ரம்ம நமக்கு பிதா அல்லவா..

ப்ரம்ம தேவன், தன்னை படைத்த நாராயணனை "தனக்கு பிதா" என்கிறார். 

அப்படியென்றால் நாராயணன் நம் பாட்டனார் இல்லையா.. 

விஷ்ணு சஹஸ்ரநாமம், "பெருமாள் நம் சொந்த பாட்டனார்" என்று உறவு சொல்கிறதே.. கவனிப்பது இல்லையா?

சொந்தம் கொண்டாடும் தெய்வத்தை விட்டு விட்டு, நிறவெறி தூண்டும் போலி தெய்வத்தை ஏற்பானா மனசாட்சி உள்ளவன்?..

சிந்திப்போம்...  
700 கோடி உலக மக்களில், எங்கு வேண்டுமானாலும் நாம் பிறந்து இருக்கலாம்...
ஆனால், 
80 கோடி ஹிந்துக்கள் கூட்டத்தில் நாம் ஹிந்துவாக பிறந்து இருக்கிறோம் என்றால், நாம் எத்தனை புண்ணியம் செய்தவர்கள் என்று புரியும்.

கிடைத்தற்கரிய இந்த ஆயுளையும், போலி தெய்வத்திடம் செலவழித்து விரயம் செய்து வீணாக்கி விட கூடாது..

கையில் வைரம் கிடைத்தும், கண்ணாடி என்று தூக்கி போடுவது எத்தனை முட்டாள்தனமோ, அது போல, ஹிந்துவாக பிறந்தும் தன் பெருமையை அறிந்து கொள்ளாமல் இருப்பது...

வேதத்தில் சொன்ன தெய்வங்கள் நிஜமானவை..

இந்த தெய்வங்கள் தரிசனம் பெற்றவர்கள் அநேகம்... ஆதிசங்கரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், யோகிகள், மகான்கள், சாதுக்கள், பக்தர்கள் இந்த 80 கோடி ஹிந்து கூட்டத்தில் தான் தோன்றினார்கள் என்பதை மறக்க கூடாது...

ஹிந்து தர்மம் சொல்லும் போதனைகளை, போலி மதங்கள் திருடி 'தான் சொல்வது போல சொன்னாலும்', ஹிந்துக்கள் ஏமாற கூடாது..

நாம் சொல்லாத எந்த நல்ல தர்மங்களையும் இவர்கள் சொல்லவில்லை. 

"நல்ல விஷயம் தானே சொல்கிறான்" என்று ஏமாற கூடாது..

'பால் தான் குடிக்க கொடுக்கிறான்' என்றாலும், 'நாய் தோலில் செய்த பாத்திரத்தில் ஊற்றி கொடுத்தால் சாப்பிடுவாயா...?'

தங்க பாத்திரத்தில் பால் ஊற்றி கொடுத்தால் சாப்பிடலாம்.

நம் ஹிந்து தர்மம் தங்க பாத்திரம் போன்றது.. அது சொல்லும் பால் போன்ற தர்மங்களை பருகுவதே நல்லது.

நம்மிடம் தங்க பாத்திரத்தில் பால் இருக்கும் போது, நாய் தோலில் செய்யப்பட்ட பாத்திரம் நமக்கு எதற்கு?

சிந்திப்போம். 
நம் கோவில் தெய்வங்களில் விளக்கு எறிய செய்வோம். திருவிழா நடக்க செய்வோம். 
தேர் இழுப்போம்.

ஹிந்துவாகவே வாழ்வோம்..

Monday, 18 May 2020

ச்யவன ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே... ச்யவனர் கோத்திர ரிஷி இவர். தெரிந்து கொள்வோமே!! நம் ரிஷிகள் பெருமையை, பக்தியை..

ச்யவனர் (ச்யாவன) ரிஷி கோத்திரம்
'ப்ருகு ரிஷி'யின் பரம்பரையில் வந்த முக்கியமான சில ரிஷிகளின் பெயர்:
  1. ச்யாவன
  2. ம்ருகண்டு
  3. மார்க்கண்டேயர்
  4. ஹேம ரிஷி
  5. ஆப்னவான
  6. ஔர்வ
  7. ஜாமதக்ன்ய (ஜமதக்னி)
  8. பரசுராமர்
ப்ருகு ரிஷியின் வம்சத்தில் வந்தவர் ச்யவனர்.
ஆயுர்வேதத்துக்கு ரிஷி இவர்.
இவர் பெயரில் தான் இன்றுவரை "ச்யவன ப்ராசம்" என்ற லேகியம் தயாரிக்கப்படுகிறது.

"ராம நாமம் என்ற தாரக மந்திரமே அனைவருக்கும் மோக்ஷம் தரக்கூடியது" என்று சொன்ன ரிஷி இவர்.

'ச்யவனபிராஸ் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம்' என்று இந்த ரிஷி சொல்வதை ஏற்கும் நாம்,
'"ராம" நாமத்தை சொன்னால் ஆத்மாவுக்கு ஆரோக்கியம்' என்று இந்த ரிஷி சொல்வதை கேட்க வேண்டாமா?
சுற்று சிந்தித்து பார்க்க வேண்டும் நாம்.

கடுமையான தவம் செய்வார். ஒரு சமயம் பல வருடங்கள் தவத்தில் அமர்ந்து விட்டார். இவரை சுற்றி புற்று உருவாகி விட்டது.
அந்த சமயம், "சர்யாதி" என்ற அரசன், தன் மகள் "சுகன்யாவுடன்" காட்டுக்கு வேட்டையாட வந்தார்.

ஒரு கூடாரம் போட்டு தங்கினார்கள்.
தன் தோழிகளுடன் சுகன்யா கொஞ்சம் உலாவி கொண்டு இருந்தாள்.

அங்கு ச்யவனர் மேல் சுற்றி இருக்கும் புற்றை கண்டாள்.
அந்த புற்றில் ச்யவனரின் இரண்டு கண்களே இரண்டு ஜோதியாக (வெளிச்சம்) தெரிய... "இது என்னவாக இருக்கும்? குத்தி பார்க்கலாமா?" என்று தன் தோழிகளிடமே கேட்டுக்கொண்டு, ஒரு குச்சியை எடுத்து குத்தி விட்டாள்.
கண்கள் பறிபோய் விட்டது. குருடனாகி விட்டார் ச்யவனர்.

"வயதானவர்..  கோபக்காரர். சபித்து விடுவாரோ!!" என்று பயந்தான் அரசன். தன் மகள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டான்.

"தான் குருடனாகி விட்டதால், இனி துணை இல்லாமல் இருக்க முடியாது. ஆதலால் உன் மகளை எனக்கு துணைவியாக கொடு"
என்று சொல்லிவிட்டார் ச்யவனர்.

மறுபேச்சு இல்லாமல், சுகன்யாவை விதிப்படி மணம் செய்து கொடுத்து விட்டார் அரசர்.

மகளை பார்த்து, "எந்த நிலையிலிலும் கணவருக்கு அபச்சாரம் செய்து விடாதே.. கவனமாக இரு. உனது கற்ப்பாலும், தொண்டினாலும் அவர் சந்தோஷப்படும் படியாக இருக்க வேண்டும்"
என்று சொல்லிவிட்டு, தன் அரண்மனைக்கு திரும்பி விட்டார் அரசர்.

நேற்றுவரை ராஜகுமாரி.. இன்று ரிஷி பத்தினி.
நேற்றுவரை அரண்மனை வாசம்.. இன்று காட்டில் ஆஸ்ரம குடிசையில் வாசம்.
நேற்றுவரை அரண்மனை விருந்து உண்டவள்... இன்று காய், கிழங்கு உண்கிறாள்.
நேற்று பட்டாடை உடுத்திய சுகன்யா... இன்று மரவுரி ஆடை உடுத்திக்கொண்டாள்.

"தன் கணவனே தெய்வம்" என்று வாழ்ந்து வந்தாள் சுகன்யா.
இந்திர தேவன், தேவர்களுக்கான யாகத்தில் அஸ்வினி குமாரர்களுக்கு சோமபானம் கிடையாது என்று ஒதுக்கி வைத்து இருந்தார்.
அஸ்வினி குமாரர்கள் தேவர்களுக்கு மருத்துவர்கள்.

தான் வயதானவனாக இருந்தாலும், ரிஷியாக ப்ரம்மச்சர்யத்தில் இருந்தாலும், கற்புடன் தனக்கு சேவை செய்து கொண்டு இருக்கும் சுகன்யாவுக்கு அணுகிரஹம் செய்ய விரும்பினார் ச்யவனர்.

உடனே யாகத்தில் அஸ்வினி குமாரர்களுக்கும் சேர்த்து சோமபானம் கொடுத்தார்.
தன்னை உபசரித்த ச்யவன ரிஷிக்கு, தன்னை போன்றே திவ்யமான தேவ ரூபத்தை கொடுத்து விட்டனர்.
இளமையான ச்யவன ரிஷியாக ஆகி விட்டார்.
சுகன்யா பெரிதும் ஆச்சர்யப்பட்டாள். ஆனந்தமாக இல்லறத்தில் வாழ்ந்து வந்தார்கள்.

ஒரு சமயம், சர்யாதி தன் மகள் எப்படி காட்டில் இருக்கிறாளோ, என்று பார்க்க வந்தான்.
வந்து பார்த்த போது, இளமையான ஒருவருடன் சுகன்யா இருப்பதை பார்த்து மிகவும் கோபித்து கொண்டார்.

"அப்பா.. இவர் உங்கள் மாப்பிளை தான். தபோ பலத்தால் இளமையாகி விட்டார்" என்றாள் சுகன்யா.

அதற்கு  ச்யவனர், "ராஜனே! சுகன்யா தன் கற்பின் பலத்தால் என்னை இளமையாக்கி விட்டாள்" என்று பெருமையுடன் சொன்னார்.

அரசன் பெருமகிழ்ச்சியுடன் திரும்பினான்.

ஸ்யாவன ரிஷியின் பரம்பரையில் வருபவர்கள் நீங்கா இளமையுடன் இருப்பார்கள்.
ராம பக்தி கொண்டு இருப்பார்கள்.
ஆயுர்வேதம் படிப்பு படித்தால், பெரும் வைத்தியர்கள் ஆவார்கள்.

ப்ருகு ரிஷியின் வம்சத்தில் வருவதால், பெருமாளிடம் பக்தியும், மஹாலக்ஷ்மி அணுகிரஹமும் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.Sunday, 17 May 2020

பரத்வாஜ ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே... பரத்வாஜ கோத்திர ரிஷி இவர். தெரிந்து கொள்வோமே நம் ரிஷிகள் பெருமையை, பக்தியை..

பரத்வாஜ ரிஷி கோத்திரம் (பரம்பரை)யில் பிறந்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
1. பரத்வாஜர்
2. கஸ்யபர்
3. அத்ரி
4. ஜமதக்னி
5. கௌதமர்
6. வசிஷ்டர்
7. விஸ்வாமித்திரர்
இந்த 7 ரிஷிகளும் சப்த ரிஷிகள்.இவர்கள் பிரம்ம ஆயுசு முழுக்க இருப்பவர்கள்.
தேவர்களுக்கும் மேல் இருப்பவர்கள்.
நக்ஷத்திர ரூபமாக இவர்கள் துருவ மண்டலத்தை வலம் வந்து கொண்டு இருக்கின்றனர்.
அங்கீரஸ ரிஷியின் புத்திரர் "பரத்வாஜர்".

'பரத்' என்றால் "நிரம்பிய" என்று அர்த்தம்.
'வாஜம்' என்றால் "அன்னம்" என்று அர்த்தம்.

அன்னதானத்திற்கு பெரும் புகழ் பெற்றவர் இந்த ரிஷி.

துர்வாச ரிஷி ஒருவரே "பத்தாயிரம் பேர் சாப்பிட கூடிய உணவை" சாப்பிட்டு விடுவார். அவருடைய தபோ பலம் அப்படிப்பட்டது.

பரத்வாஜ ரிஷியோ, தன் தபோ பலத்தால் "பத்தாயிரம் பேருக்கு சாப்பாடு போடுவார்".
அவருடைய தபோ பலம் அப்படிப்பட்டது.
தன் தபோ பலத்தை செலவழித்து, எத்தனை பேர் வந்தாலும் அன்னதானம் செய்து விடுவார் பரத்வாஜர்.

பரதன் அயோத்தி மக்களோடு கிளம்பி ராமபிரானை பார்க்க சித்ரகூடம் நோக்கி வந்தார்.

வரும் வழியில் பரத்வாஜர் ஆசிரமத்துக்கு தங்கினார்.

அன்று பரத்வாஜர் போட்ட அன்னதானத்தை சாப்பிட்டுவிட்டு,  "அயோத்தியை ராமர் ஆளட்டும், பரதன் ஆளட்டும். நாம் இங்கேயே இருந்து விடலாம்" என்று சொன்னார்கள் என்றால், பரத்வாஜர் செய்த அன்னதானம் எப்பேர்ப்பட்டது என்று அனுமானிக்கலாம்.
ராமபிரான் வனவாசம் முடிந்து, ராவண வதம் முடிந்து, இலங்கையில் இருந்து அயோத்தி திரும்பும் வழியில், 
இன்று பிரயாக்ராஜ் (பிரயாகை) என்று சொல்லப்படும் இடத்திற்கு புஷ்பக விமானத்தில் (flight) இருந்து இறங்கினார்.
அப்போதும் அனைவருக்கும் அன்னதானம் செய்தார் பரத்வாஜர்.

சாம வேதியான அப்பைய தீக்ஷிதர், பரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்தவர்.

அன்னதானம் செய்வதை உயர்வாக நினைப்பவனுக்கு பரத்வாஜரே குரு.

பரத்வாஜ ரிஷி பரம்பரையில் (கோத்திரம்) இருப்பவர்கள், அன்னதானம் செய்ய செய்ய, தன் ரிஷியை சந்தோஷப்படுத்துகிறார்கள்.

Friday, 21 June 2019

ப்ரம்மாவின் பெருமை ஈடு இணை இல்லாதது. பிரம்மாவின் கருணையாலேயே, நமக்கு ரங்கநாதர் கிடைத்தார், காஞ்சியில் வரதராஜன் கிடைத்தார். பிரம்மா கேட்டதால் தான் பரமாத்மா வாசுதேவன் அவதாரங்கள் செய்தார்.

ஸ்ரீ பாகவதம், யார் சிறந்த பாகவதன்? என்று சொல்லும்போது 'ப்ரம்மாவை' தான் முதலில் சொல்லுகிறது.

ப்ரம்மாவின் பெருமை ஈடு இணை இல்லாதது.பரவாசுதேவன் முதன் முதலாக படைத்ததே ப்ரம்மாவை தான்.

தன் திருவாயாலேயே ப்ரம்ம தேவனுக்கு "ப்ரம்ம வித்யை"யை உபதேசம் பண்ணினார் பகவான்.

"உலக ஸ்ருஷ்டி செய்யும் பொழுதும், எப்பொழுதும் என் இதயத்தில் ஹரியையே நான் தியானம் செய்து கொண்டிருக்கிறேன்"
என்று சொல்கிறார் ப்ரம்மா.

"மது-கைடபர்கள் வேதத்தை கொண்டு போய் விட்டார்கள்" என்ற பொழுது, ப்ரம்மா பிரார்த்தனை செய்த பின்பு தான், பெருமாள் அவருக்காக மத்ஸ்ய அவதாரம் எடுத்தார்.

"தேவர்கள் அசுரர்களால் துன்பப்படுகிறார்கள்" என்றதும், அவர்கள் பிரம்மாவிடம் ஓடி வழி கேட்க, ப்ரம்மா பிரார்த்தனை செய்த பின்பு தான், பெருமாள், அவருக்காக கூர்ம அவதாரம் எடுத்தார்.

"பூமி பிரளய ஜலத்தில் மூழ்க", ஸ்வாயம்பு மனு பிரம்மாவிடம் சென்று முறையிட, ப்ரம்மா பிரார்த்தனை செய்த பின்பு தான், பெருமாள், அவருக்காக பிரம்மாவின் ஹ்ருதயத்தில் இருந்தே வெளிவந்து வராஹ அவதாரம் எடுத்தார்.

ஹிரண்யகசிபுவுக்கு ப்ரம்மா தான் வரம் கொடுத்தார். பின் 'இவன் அட்டகாசம் தேவர்களை துன்புறுத்த', அவர்களுக்காக, க்ஷீராப்தி வந்து ப்ரம்மா செய்த பிரார்த்தனைக்காக, பெருமாள் நரசிம்ஹ அவதாரம் எடுத்தார்.
ராம அவதாரமும், ப்ரம்மா செய்த பிரார்த்தனைக்காகவே நடந்தது.

பூமி தேவி துஷ்டர்கள் பெருகியதால் "பூபாரம் தாங்க முடியாமல்", ப்ராம்மாவிடம் பிரார்த்திக்க, மீண்டும் ப்ரம்மா செய்த பிரார்த்தனைக்காக, பெருமாள் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் எடுத்தார்.

ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில், பிருந்தாவனத்திற்கு வந்து, "இங்கு புல்லாய் இருக்கவாவது அனுமதி கொடு. எனக்கு இந்த ப்ரம்ம பதவி கூட வேண்டாம்"
என்று பிரார்த்திக்கிறார் ப்ரம்மா.
"நீ ஆதிகாரி புருஷன். நீ உன் பதவியில் போய் இரு"
என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொல்ல, வேறு வழி இல்லாமல் திரும்ப செல்கிறார் ப்ரம்ம லோகத்துக்கு.இப்படி விபவ அவதாரங்கள், இந்த பூமியில் நிகழ செய்தது மட்டும் இல்லாமல், 
இந்த அவதாரங்கள் நிகழ்ந்த சமயத்தில் இல்லாத நமக்கும் அணுகிரஹம் செய்ய, 
ப்ரம்ம லோகத்தில் தான் வழிபட்ட ஸ்ரீ ரங்கநாதரை, உலக ஸ்ருஷ்டி செய்து,  ஸ்வாயம்பு மனுவை பதவியில் அமர்த்தி, 
அவர் பூமியில் வழிபட தான் வழிபட்ட ஸ்ரீ ரங்கநாதரை வழங்கி விட்டார் ப்ரம்மா.

அந்த ரங்கநாதரை இக்ஷ்வாகு குலத்தில், ஸ்ரீ ராமராக அவதாரம் செய்து, தன் குல தெய்வமாக ஸ்ரீ ராமரே வழிபட்டு,
ராவண வதம் முடிந்து, விபீஷணனுக்கு தன் அடையாளமாக, ஸ்ரீ ரங்கநாதரை கொடுக்க,
ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீரங்க க்ஷேத்ரத்தை தானே தேர்ந்தெடுத்து இன்று வரை நாமும் காண முடியும் என்கிற அளவுக்கு கருணை செய்தார்.

பிரம்மாவின் கருணையாலேயே, நமக்கு ஸ்ரீ ரங்கநாதர் கிடைத்தார்.

'அவரே ப்ரம்ம லோகத்தில் வழிபட்ட தெய்வம்' என்று நாம் பார்க்கும் போது தான், ஸ்ரீ ரங்கநாதரை பற்றியும் புரியும், பிரம்மாவின் கருணையும் புரியும்.
அதே ப்ரம்ம தேவன், இப்பொழுது காஞ்சியில் அஸ்வமேத யாகம் செய்து, நமக்காக, காஞ்சியில் வரதராஜனாக பெருமாளை வெளிப்படுத்தினார்.

இதை உணரும் போது,
பிரம்மாவை விட, சிறந்த பக்திமான் யார் இருக்க முடியும்?