Followers

Search Here...

Showing posts with label போலிகள். Show all posts
Showing posts with label போலிகள். Show all posts

Thursday 28 February 2019

அன்பே சிவம் என்றும் செயலே தெய்வம் என்று சொல்லும் போலிகளுக்காக ஒரு அலசல்...

நாம் செய்யும் செயலுக்கு, தானாகவே பலன் கிடைத்துவிடும். நடுவில் கடவுள் எதற்கு? என்று கேட்கிறார்கள் சில மூடர்கள். கடவுளை எப்படியாவது மறுக்க வேண்டும் என்பதற்காக, இவர்கள்
"செயலே (கர்மா) தெய்வம்" என்று விஷமமாக பேசுகிறார்கள்..


"கடமையே தெய்வம்", "செயலே தெய்வம்" என்று சொல்லும் இந்த போலிகள், கடவுளை மறுக்க முயல்கிறார்கள்.
அதே போல,
இன்னும் சிலர்,
"அன்பே சிவம்" என்று சொல்லி, கடவுளை மறுக்க முயல்கிறார்கள்.

இன்னும் சிலர்,
"தமிழே தெய்வம்" என்று சொல்லி, கடவுளை மறுக்க முயல்கிறார்கள்.

இன்னும் சிலர்
"அறிவே தெய்வம்" என்று சொல்லி, கடவுளை மறுக்க முயல்கிறார்கள்.

உண்மையை உணர்ந்த ஞானியோ,
"அன்பு மட்டும் தான் தெய்வமா? 
தமிழ் மட்டும் தான் தெய்வமா?
அறிவு மட்டுமே தெய்வமா? 
செயல் (கர்மா) மட்டுமே தெய்வமா? 
எல்லாமுமே தெய்வம் தான்." என்கிறார்கள்.


"தமிழே தெய்வம்" என்று சொன்னால், உலகத்தில் உள்ள பிற மொழிகள் எல்லாம் தெய்வம் இல்லையா?
இப்படி சொல்லும் பிரிவினைவாதிகள் அனைவருமே போலிகள். இவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். மனித சமுதாயத்துக்கே ஒரு கறை போன்றவர்கள்.

தெலுங்கு பேசுபவனுக்கு "தெலுங்கே தெய்வம்",
ஹிந்தி பேசுபவனுக்கு "ஹிந்தியே தெய்வம்".
அவனவனுக்கு அவன் தாய் மொழி தெய்வம்.

"தாய் மொழியை மதிக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டு பிற மொழிகளை மிதிக்கலாமா?

இப்படி "தமிழே தெய்வம்" என்று பேசுபவர்கள், "தமிழ் மொழியே தெய்வம், என்று சொல்லி சொல்லி, தெய்வத்தை மறுப்பது மட்டுமில்லாது, பிற மொழி வெறுப்பையும் விதைக்கிறார்கள்.

இவர்கள் உண்மையில் திருடர்கள். இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவர்களை ஒதுக்க வேண்டும்.

"தமிழே தெய்வம்" என்று சொல்ல ஆரம்பிக்கும் போதே,
"சமஸ்கரிதம் தெய்வமில்லை, கன்னடம் தெய்வமில்லை. ஜப்பானிய மொழி தெய்வமில்லை" 
என்றெல்லாம் பேச வைக்கும்.

இப்படி பேசுவதாலேயே, நமக்குள் ஒரு விஷம் ஏற்றப்படுகிறது. பிறமொழி பேசும் சக மனிதனிடம் பகை உண்டாக்கப்படுகிறது.


குறுகிய மனப்பான்மை கொண்டு, தெய்வத்தை மறுத்து, ஒரு மொழியை மட்டும் தெய்வம் என்று ஏமாற்றும் கூட்டத்தை கண்டிக்க வேண்டும்.

"என் மொழி உயர்ந்தது, தொன்மை வாய்ந்தது" என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம்.
அதற்காக தெய்வத்தை மறுத்து, தன் மொழியையே தெய்வம் என்று சொல்லலாமா? 
தமிழ் வேதமாக போற்றப்படும் 4000 திவ்ய பிரபந்தங்கள், நாயன்மார் பாசுரங்கள் தமிழ் மொழியில் தானே எழுதப்பட்டது? 
"தமிழே தெய்வம்" என்று சொல்லும் இந்த போலிகள் பாசுரங்களை மேடைகளில் சொல்லி தமிழை வளர்க்கிறார்களா, வளர்ப்பார்களா? 
தமிழ் பாசுரங்களை, பிரபந்தங்களை ஏற்காமல், அந்த பாசுரங்கள் துதிக்கும் தெய்வங்களை ஏற்காமல், "தமிழே தெய்வம்" என்று பேசும்போதே இவர்கள் போலிகள் என்று தெளிவாக தெரிந்து விடுகிறது.





தமிழை வளர்த்த சித்தர்கள், மகான்கள், சிவனையும், நாராயணனையும் தானே தெய்வம் என்றனர்?
தெய்வத்தை ஒதுக்கி விட்டு, 
இவர்கள் தந்த பாசுரங்களையும் ஒதுக்கி விட்டு, இன்றைய நாத்தீக  போலிகள் "தமிழே தெய்வம்" என்று சொல்லி, ஊரை  ஏமாற்றுகின்றனர். 

"செயலே தெய்வம்" என்றும்,
"மொழியே தெய்வம்" என்றும்,
"அன்பே தெய்வம்" என்றும்
சொல்லி, நம் தெய்வத்தை நிராகரிக்கும் இந்த போலிகளை உதைத்து விரட்டுவோம்.

"அன்பே தெய்வம்" என்று தெய்வத்தை மறுத்து பேசும் போலிகளுக்கு, திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்,
"அன்பு மட்டுமா தெய்வம்?. பாவமும் தெய்வம் தான், புண்ணியமும் தெய்வம் தான். நரகமும் தெய்வம் தான். சொர்க்கமும் தெய்வம் தான்" என்கிறார்.

அன்பு என்பது ஒரு குணம் தானே.
ஒரு குணமே எப்படி தெய்வமாக முடியும்?

தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் மட்டுமே "அன்பே சிவம்" என்று சொல்லி, தெய்வத்தை நிராகரிக்க முயல்வார்கள். 
இது போன்ற போலிகளை ஒரு போதும் வளர்க்க கூடாது.

நாயன்மார்களை கேட்டால், அந்த அன்பு என்ற கருணை உடையவன் ஈசன் என்று சொல்லி, "சிவமே அன்பு" என்று அன்பு என்ற குணம் சிவனில் அடக்கம் என்று, சொல்கிறார்கள்.
அப்படி இருக்க ஒரு குணம் மட்டும் எப்படி தெய்வம் என்று சொல்ல முடியும்?
இது தான் தெய்வத்தை மறுப்பவர்கள் பகுத்தறிவா? வெட்கக்கேடு..
இது போன்ற உரையாடல் தான் யாதவப்ரகாசருக்கும், ஸ்ரீ ராமானுஜருக்கும் ஏற்பட்டது. 


யாதவப்ரகாசர் தன் சிஷ்யர்களிடம் "அறிவே தெய்வம்" என்று பேசினார்.

"அறிவே தெய்வம்" என்று சொல்வதால், வேதத்தில் சொன்ன பரமாத்மா 'தெய்வம்' இல்லை என்று சொல்வது போல ஆகி விட்டது.
ஸ்ரீராமானுஜர் எழுந்து
"அறிவே தெய்வம் என்று சொல்கிறீர்களே...
அறிவே தெய்வமா? அல்லது, அறிவு உடையவன் தெய்வமா?" 
என்று திருப்பிக்கேட்டார்.

மேலும்,
"'அறிவே தெய்வம்' என்று சொன்னால் கேட்பதற்கு நன்றாக இருக்கலாம்.
ஆனால், தெய்வத்தை மறுத்து 'அறிவே தெய்வம்' என்று நம்மை சொல்லச் சொல்லவிலலையே?

இப்படி சொல்ல ஏன் அனுமதித்தார்கள்? என்று பார்க்க வேண்டி இருக்கிறது.

பெற்ற அறிவை (கல்வியை) பொக்கிஷம் போல, தன் உயிர் போல, ஒருவன் பாதுகாக்க வேண்டும். அறிவை வளர்த்துக்கொள்ள எப்பொழுதும் முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காக, "அறிவே தெய்வம்' என்று சொல்லும் பழக்கம் வந்ததே தவிர, தெய்வத்தை மறுத்து, அறிவு மட்டுமே தெய்வம் என்று சொல்வதற்காக சொல்லப்படவில்லை.

'அன்பே தெய்வம்' என்று சொல்வதன் நோக்கம், "நாம் அனைவரும் பிற உயிர்களிடத்தில் அன்பாக இருக்க வேண்டும்" என்பதற்காக சொல்லப்பட்டது. அன்பு என்ற குணம் மட்டுமே தெய்வம் என்று சொல்லி, தெய்வத்தை மறுப்பதற்காக சொல்லப்படவில்லை.

அது போல,
'தமிழே தெய்வம்' என்று சொல்வதன் நோக்கம், "நம்முடைய தாய் மொழியாக உள்ள தமிழை அப்படி உயிராக நினைக்க வேண்டும், பற்று வர வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதே தவிர, தெய்வத்தை மறுத்து, தமிழ் என்ற மொழியையே தெய்வம் என்று சொல்வதற்காக இல்லை.
கடவுளை மறுப்பவன், இது போன்ற சொல்லை பயன்படுத்தினால், கண்டிக்க வேண்டியது ஹிந்துக்களின் கடமை.

அது போல,
'கர்மாவே தெய்வம்', 'கடமையே தெய்வம்' என்று சொல்வதன் நோக்கம்,
"அவனவனுக்கு விதிக்கப்பட்ட கடமையை உயிராக நினைத்து செய்ய வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதேயன்றி, தெய்வத்தை மறுத்து, செயலே தெய்வம் என்று பேசுவதற்காக இல்லை. 

ஒரு செயலே எப்படி தானாக பலன் கொடுக்க முடியும்?
நியாயமாக உழைத்தால் அதற்கு தகுந்த கூலி அந்த செயலாலேயே கிடைத்து விடும் என்றால், எதற்காக சம்பளம் போதாது என்று போராட்டம் நடக்கிறது?
செய்த செயலுக்கு கூலி கிடைக்கவில்லையே என்று போராட்டங்கள் ஏன் நடக்கிறது? 
கர்மாவே தெய்வம் என்றால், போராட்டங்கள் எதற்கு? 

அவனவன் செயலுக்கு, அந்த செயலே கூலி தரும் என்று பேசினால், வேலையை செய்து விட்டு, கூலி தானாக கிடைக்கும் என்று அமைதியாக இருக்கலாமே?

உலக வழக்கில் பார்த்தாலே, நாம் செய்த கர்மாவுக்கு (செயலுக்கு), கூலியை ஒரு முதலாளி தானே, நமக்கு கொடுக்கிறான்.

முதலாளியின் பிரியத்தை சம்பாதித்தவன், தான் செய்யும் செயலுக்கும் மீறி, அதிகமாக கூட கூலி பெறுகிறானே...
கர்மாவே தெய்வமா? கர்மாவுக்கு பலன் கொடுக்கும் முதலாளி தெய்வமா?
யோசிக்க வேண்டாமா?

சில அசட்டு பக்தன், தெய்வம் காப்பாற்றுவார் என்று தன் கடமையை கூட செய்யாமல் இருந்து விடுவான்.

தனக்கு விதிக்கப்பட்ட கர்மாவை செய்யாமல் இருக்க கூடாது, "கர்மாவை செய்" என்று ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்கிறார் என்று பார்க்கிறோம்.
அர்ஜுனனை பார்த்து "க்ஷத்ரியனான நீ, உன் கடமையை செய். தர்மத்துக்காக போரிடு. என்னிடம் பக்தியுடன் இரு. நான் உன் கடமைக்கு ஏற்ற கூலியை கிடைக்க செய்கிறேன்" என்கிறார்.

'கர்மாவை செய்' என்று தன் பக்தனுக்கும் சேர்த்து சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.
"கர்மாவை செய்.. பலனை எதிர்பார்த்து கர்மாவை செய்யாதே.. பலன் கொடுப்பதை என்னிடம் விட்டுவிடு" என்கிறார்.

தன்னை சரண் அடைந்தவனும் கர்மாவை செய்ய வேண்டும் என்று சொல்லும் ஸ்ரீ கிருஷ்ணர்,
தன் பக்தன் செய்யும் செயலில் குற்றம் குறை இருந்தாலும், முதலாளியாக இருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், செயலுக்கு தகுந்த பலன் மட்டும் கொடுக்காமல், அவன் எதிர்பார்த்ததை விட அதிகமாக பலன்களை, உலக சௌக்கியங்கள் ஆரம்பித்து, மோக்ஷம் வரை வழி செய்து கொடுத்து விடுகிறார்.
"கர்மாவே தெய்வம்" அதனால் வேறு தெய்வம் இல்லை என்று நாத்தீகனை போல பேசும் மூடர்கள் செய்த கர்மா அளவுக்கு மட்டும் பலனை பகவானிடம் இருந்தே பெற்று, கடவுள் இல்லை, கர்மாவே தெய்வம் என்று உலறுக்கிறார்கள்.

தெய்வத்தை மறுத்து,
"அன்பே சிவம்" என்றும்,
"தமிழே தெய்வம்" என்றும்,
"அறிவே தெய்வம்" என்றும் 
பேசும் போலிகளை ஒடுக்குவோம்.

சனாதன தர்மத்தில் இருக்கும் ஹிந்துக்கள் ஒன்று படுவோம்.
போலிகளை ஒடுக்குவோம்.

HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka