சிலர் "மரணத்தை நோக்கி பிறந்தோம்' என்று சொல்கிறார்கள்..
இறப்பு என்பது விலங்குக்கும் உண்டு.
அனைவருக்கும் பொதுவான முடிவு "இறப்பு".
விலங்குக்கும், மனிதனுக்கும் பொதுவான 'இறப்பே' மனித பிறவியின் நோக்கம்!
என்று சொல்லிவிட்டால், மனிதனும், விலங்கும் ஒன்று என்று ஆகி விடும்.
மனிதன் மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபட்டு இருக்கிறான் என்று தெளிவாக தெரியும் போது, 'மனித நோக்கம் தனித்துவமாக தான் இருக்க வேண்டும்' என்று தெரிகிறது.
"மனிதர்களாகிய நாம் எதை நோக்கி செல்ல வேண்டும்?" என்று வேதாந்தம் வழி காட்டுகிறது.
மனித நோக்கம் என்ன? என்பதை புரிந்து கொள்ள,
* 'எந்த விஷயம் மனிதனுக்கும், விலங்குக்கும் பொதுவாக உள்ளது?' என்று கவனித்துப் பார்க்க வேண்டும்..
* 'எந்த விஷயம் மனிதனுக்கு மட்டும் அதிக சலுகையுடன் கொடுக்கப்பட்டு உள்ளது? மற்ற விலங்குகளுக்கு கொடுக்கப்படவில்லை' என்று கவனித்துப் பார்க்க வேண்டும்..
வேதாந்தம்.. சொல்கிறது
மனிதனுக்கும், விலங்குக்கும் பொதுவாக கொடுக்கப்பட்ட விஷயங்கள் பல.. அதில் ஒரு சில…
* கேட்பதற்கு 'காது'
* சுவைக்க 'நாக்கு'
* பார்க்க 'கண்'
* தொடுவதை உணர 'தோல்'
* முகர்ந்து உணர 'மூக்கு'
* மரணம்
விலங்குக்கும், மனிதனுக்கும்பொதுவாக இருக்கும் விஷயத்தையே 'மனித நோக்கம்' என்று நினைத்தால்,
அவனை 'விலங்கு' என்று தானே சொல்ல வேண்டும்..
மனிதனுக்கு மட்டும் பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட, விலங்குகளிடம் காணப்படாத விஷயங்கள் சில உண்டு.. அதில் ஒரு சில…
* சுவைக்க செய்யும் 'நாக்கு', மனிதனை மட்டும் 'பேச' வைக்கிறது
* படுத்தவாறே வளர்கிறது விலங்குகள்.
மனிதன் மட்டும், முதுகு நிமிர்ந்து மேல் நோக்கி வளருகிறான்.
இப்படி விலங்குக்கு இல்லாத சில சலுகைகளை, மனிதன் மட்டும், அந்த பரம்பொருளாக இருக்கும் பரப்ரம்மத்தின் கருணையால், பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் பெற்று இருக்கிறான்.
ஏன் மனிதனை மட்டும் முதுகு நிமிர்த்தி படைத்தார்?
ஏன் மனிதனுக்கு மட்டும் நாக்கை வைத்து பேசும் சக்தியை கொடுத்தார்?
இது மட்டுமா கொடுத்தார்? இப்படி கொடுத்த வாக்கை, காரணத்தை விசாரித்து சிந்திக்க, 6வது அறிவையும் மனிதனுக்கு கொடுத்து இருக்கிறார் பரமாத்மா.
* ஏன்? எதற்கு? இது நல்லதா? இது கெட்டதா? இது தான் லட்சியமா? இது புண்ணியமா? இது பாபமா? என்று அறிந்து செயல்பட, 6வது அறிவான விசார புத்தியையும் மனிதனுக்கு ஆசையோடு கொடுத்தார்.
இந்த 6வது அறிவை (புத்தியை) பயன்படுத்தாமலோ, பயன்படுத்த தெரியாமல் இருப்பதால், மனிதர்களில் பலருக்கு, மிருகத்திற்கு உள்ள ஆசையே இருக்கிறது.
* சிலருக்கு, உணவே லட்சியமாக இருக்கிறது..
* சிலருக்கு, பல வித உலக காட்சிகளை பார்ப்பதே லட்சியமாக இருக்கிறது..
* சிலருக்கு, பல வித உலக பொருட்களை நுகர்வதே லட்சியமாக இருக்கிறது..
* சிலருக்கு, தொடுவதே லட்சியமாக இருக்கிறது..
* சிலருக்கு, பல வித உலக விஷயங்கள் கேட்பதே லட்சியமாக இருக்கிறது..
அதற்காக தனக்கு பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட 6வது அறிவை பயன்படுத்தி, பல பாவ, புண்ணிய காரியங்கள் மனிதர்கள் செய்கிறார்கள்..
விலங்குகளை பார்.
அனைத்தும் படுத்தபடி நீள வாக்கில் வளருகிறது. நீ மட்டும் ஏன் முதுகு நிமிர்ந்து வளருகிறாய்?
அதிலிருந்தே, மனித நோக்கம் தெரியவில்லையா?
'முதுகு நிமிர்ந்து, உன் நோக்கமும் மேல் நோக்கி போவது தான் உன் லட்சியம் என்று அறிந்து கொள்' என்று வேதாந்தம் காட்டுகிறது.
உன் உடல் வளர்ச்சியை கவனித்தே, உன் மனித பிறவியின் நோக்கத்தை புரிந்து கொள்" என்கிறது வேதம்.
அதே போல,
கண், காது, மூக்கு, தோல், நாக்கு என்ற 5 உறுப்புகள், பார்க்கவும், கேட்கவும், முகரவும், தொடவும், சுவைக்கவும் இருக்கிறது.
இது மனிதனுக்கும் உள்ளது. மிருகத்துக்கும் உள்ளது.
சுவைக்க வைக்கும் நாக்கே, மனிதனுக்கு மட்டும் கூடுதலாக, பேச வைக்கும் கருவியாகவும் இருப்பதை காட்டி,
உனக்கு கொடுக்கப்பட்ட இந்த அருமையான பேச்சை மேல் நோக்கிய விஷயங்களுக்கே பயன்படுத்து.
உனக்கு தெய்வம் கொடுத்த இந்த அருமையான 'வாக்கை' உலக விஷயமான விஷயங்களை பார்க்கவோ, கேட்கவோ, சுவைக்கவோ, நுகரவோ, தொடவோ செலவு செய்து மீண்டும் விலங்காக ஆகாதே!
பார்க்க ஆசைப்பட்டால். கோவிலுக்கு சென்று தெய்வத்தை பார்
கேட்க ஆசைப்பட்டால். தெய்வத்தை பற்றி சொல்லப்படும் மகான்கள் பேச்சை, பாடல்களை கேள்
சுவைக்க ஆசைப்பட்டால், கோவிலில் கொடுக்கப்படும் பல வித பிரசாதங்களையே சாப்பிடு
முகர ஆசைப்பட்டால், மனம் கமழும் பல வித பூக்களால் தெய்வத்துக்கு அர்ச்சனை செய்து அந்த பிரசாதத்தை நுகர்ந்து கொள்.
தொட ஆசைப்பட்டால், உன் வீட்டிலேயே கணபதி, முருகன், கிருஷ்ணர், ராமர், சிவன் என்று மூர்த்திகளை ஸ்வாமி அறையில் வைத்து, அவர்களுக்கு பக்தியுடன் நீயே தொட்டு தொட்டு அபிஷேகம், அலங்காரம் செய்.
நல்லது கெட்டது, பாவ புண்ணிய வித்தியாசம் அறிய உனக்கு கொடுக்கப்பட்ட இந்த 6வது அறிவை தெய்வத்தை நோக்கி மேல் நோக்கி திருப்பு'
என்று சொல்கிறது..
எப்பொழுது மிருகத்தை விட அதிகப்படியாக, மனிதனுக்கு வாக்கும், 6வதுஅறிவும் கொடுக்கப்பட்டதோ, அதிலிருந்தே, 'விலங்குகள் அனுபவிக்கும் சுகத்தை விட, மனிதனுக்கு அதிக சுகம் கொடுக்க பரமாத்மாஆசைப்படுகிறார்! என்று புரிந்து கொள்',
என்று சொல்கிறது..
மிருகங்களுக்கு நல்லது கெட்டது பிரிக்கும் விசார புத்தி இல்லை. அதனால் அவைகளுக்கு பாபமும் சேர்வதில்லை. புண்ணியமும் சேருவதில்லை.
அதன் லட்சியம் சாப்பிடுவதோடு (நாக்கு), உறவு (தொடுவது) கொள்வதோடு முடிந்து விடுகிறது.
சுகத்தை அனுபவிக்கிறோம் என்று கூட புரிந்து கொள்ள தெரியாது.
மரணம் நிச்சயம். மீண்டும் ஒரு விலங்காகவே பிறந்து விடுகிறது.
மகான்களின் திருவடி பட்டால், மகான்கள் கருணையோடு ஒரு விலங்கையோ, மரத்தையோ பார்த்தால், அவர்களின் ஆசையை நிறைவேற்ற, தெய்வம் இந்த ஆத்மாக்களுக்கு மனித பிறவி தருகிறது..
மகான்கள் பாதம் எங்கும் பட வேண்டும் என்பதால் தான், பொதுவாகவே சந்நியாசிகள், மகான்கள் பல ஊர்களுக்கு செல்கிறார்கள்.
அவர்கள் பாத தூளி பட்ட, அவர்கள் பார்வையில் பட்ட மரங்கள், செடி கொடிகள், விலங்குகள், பறவைகள் அனைத்துக்கும், அடுத்த ஜென்மமாக மனித பிறவி கிடைக்கிறது.
மிருகத்தை காட்டிலும், வாக்கு கொடுத்தும், விசார புத்தி கொடுத்தும், மிருகத்தை விட அதிக சுகம் ஒரு மனிதன் அனுபவிக்கவில்லை என்றால், அதற்கு காரணம் கீழ் நோக்கிய லட்சியங்களே!
விலங்கும் உணவுக்காக அலைகிறது. கொஞ்சம் கஷ்டப்படுகிறது.
கிடைக்காமல் போனாலும் வேதனை அடைவதில்லை.. தேடிக்கொண்டே இருக்கிறது.
இன்று உணவு கிடைத்தால் சாப்பிட்டு விட்டு அமைதியாக இருந்து விடுகிறது. நாளை கிடைக்குமா? என்று கவலைப்படுவது இல்லை.
மனிதனும் தன் லட்சியமாக உணவுக்காகவே அலையும் போது, விசார புத்தி இருப்பதால், கிடைக்கவில்லையென்றால் வேதனை படுகிறான்.
இன்று கிடைத்தாலும், நாளை கிடைக்குமா? என்று வேதனை படுகிறான்.
இது போல,
உலக விஷயங்களை மிருகம் போல சுவைக்கவும், கேட்கவும், முகரவும், பார்க்கவும், தொடவும் லட்சியமாக கொள்ளும் போது,
விசார புத்தி (6வது அறிவு) இவனுக்கு இருப்பதால், 'போதவில்லையே!!' என்று தோன்றி, விலங்கு அனுபவிக்கும் சுகத்தை கூட அனுபவிக்க முடியாமல், வேதனையில் மூழ்கி கிடக்கிறான்.
அடுத்த பிறவியாக சில ஆத்மாக்கள், மீண்டும் விலங்காகவோ, மரமாகவோ பிறந்து, மீள முடியாத சம்சார சூழலில் சிக்கி விடுகிறார்கள்.
4000 திவ்ய பிரபந்தங்கள், நாயன்மார் கொடுத்த அள்ளி கொடுத்த பதிகங்கள், தமிழ் மொழியில் உள்ளது.
மூல ராமாயணம் வால்மீகி எழுதினார்.
ஆபஸ்தம்ப சூத்திரம் (formula), நாரத பக்தி சூத்திரம் என்று பல வித சூத்திரங்கள் சம்ஸ்க்ரித மொழியில் உள்ளது.
கணாத ரிஷி சொன்ன சூத்திரத்தை அப்படியே நியூட்டன் சொல்கிறான். ஆனால் நமக்கு தெரியவில்லை.
இவை படித்து புரிந்து கொள்ள,
அனைவரும் 'ஒரு வருடமாவது' தன் வாழ்க்கையை சங்க தமிழ் கற்கவும், சம்ஸ்க்ரிதம் கற்கவும் செலவு செய்ய வேண்டும்..
இதை பல முறை, காஞ்சி மஹா பெரியவர். ஹிந்துக்களுக்கு சொல்லி இருக்கிறார்.
ஆனந்த விகடன், கல்கி படிப்பதால், நம் நோக்கம் மேல் நோக்கி செல்லாது..
கொஞ்சம் கஷ்டப்பட்டு குறைந்த பட்சம் சங்கதமிழ் மொழியையும், சம்ஸ்க்ரித மொழியையும் கற்று கொண்டு விட்டால்,
அனைவரும் ஆராய்ச்சியாளர்கள் ஆகி விடலாம்.
அனைவரது சிந்தனையையும் 4000 திவ்ய பிரபந்தமும், பதிகங்களும் தானே உயர்த்தி கொண்டு சென்று விடும்.
வேத மந்திரங்கள் அர்த்தம் தானாக புரிந்து விடும்.
அர்த்த விவாதங்கள் ஏற்படும். ஆன்மீக வளர்ச்சி ஏற்படும்.
கணாத ரிஷி சொன்னதை நியூட்டன் சொன்னான்.. அது போல பொதிந்து கிடக்கும் பல ரகசியங்கள் நமக்கு புரிய ஆரம்பிக்கும்.
நம் மூதாதையர்கள்,
மண்ணை தங்கமாக்கியது எப்படி? என்ற ஆராய்ச்சிகள் தொடங்கும்.
12 லட்சம் வருடம் முன், த்ரேதா யுகத்தில் நடந்த ராமாயணம், வானில் பறக்கும் புஷ்பக விமானத்தை (flight) பற்றி சொல்கிறது.
இதன் வேத சூத்திரங்களை தொலைத்து இருக்கிறோம் இன்று.
கோவில்கள், அதன் சிற்பங்களை பார்த்தால் தலை சுற்றுகிறது..
அதனை வடித்த சிற்பி படித்த. சிற்ப வேத சாஸ்திரம் இன்று புரியவில்லை, காணவில்லை.
இன்று அனைவரும் அம்பு தயாரித்து பானம் விடுவது எப்படி? என்று கற்று கொள்கிறார்கள்..
சாதாரணமான பானங்கள் பயன்படாத போது, பலவித அஸ்திரங்கள் (bomb) பயன்படுத்தி பல ஆயிரம் பேரை ஒரே நேரத்தில் வீழ்த்தினார் என்று சொல்கிறது.
இதை இப்போது Atom Bomb, Nuclear Bomb என்று வெளிநாட்டவர்கள் கண்டுபிடித்து நமக்கே கொடுத்து விற்று விட்டார்கள்.
அஸ்திரங்கள் எப்படி பயன்படுத்தினார்கள்? என்ற ரகசியம், நமக்கு சம்ஸ்க்ரிதம் தெரியாததால் அழிந்து விட்டது.
இந்த சம்ஸ்க்ரித மொழியை வெளிநாட்டவர்கள் கற்று கொண்டு, பல ரகசிய சூத்திரங்களை என்றோ திருடி கொண்டு சென்றுவிட்டனர்.
சம்ஸ்க்ரித மொழியில் ராமாயணம் எழுதிய வால்மீகி முனி "தமிழன்" என்று கூட தெரியவில்லை தமிழனுக்கு.
அவர் பிறந்த 'அன்பில்' என்ற ஊரில் உள்ளவர்களுக்கு மட்டும் தெரிந்து இருக்கிறது..
அவர் முக்தி ஸ்தலம் சென்னைக்கு அருகில் உள்ள 'திருநீர்மலை' என்பதும் அங்கு இருப்பவர்களுக்கு மட்டும் தெரிகிறது.
அகத்தியர் 'தமிழ் முனி' என்று தெரிகிறது. அதே தமிழ் முனி தான், ராமபிரானுக்கு போர் சமயத்தில், எதிரிகளை வெற்றி கொள்ள 'ஆதித்ய ஹ்ருதயம்' என்ற சம்ஸ்க்ரித மந்திரம் சொன்னார் என்று தெரியவில்லை. அதன் அர்த்தமும் சம்ஸ்க்ரித மொழி தெரியாததால் புரியவில்லை.
'அறம் பொருள் இன்பம் வீடு' என்ற தமிழ் சொல் மட்டும் தெரிகிறது.
'தர்ம, அர்த்த, காம, மோக்ஷ' என்று அதே வரிசையில் சமஸ்க்ரிதமும் சொல்கிறதே? என்று ஆராய்ச்சி அறிவு இல்லை.
ஆனால், மோக்ஷம் என்ற அர்த்தத்தை குறிக்கும் சொல்லுக்கு நிகரான சொல் 'விடுதலை' தானே? ஆனால் வீடு என்று குறிப்பிட்டு தமிழ் சொல்கிறதே? என்று காரணம் புரியவில்லை.
அதன் அர்த்தத்தை விளக்கும் சங்க தமிழை புரிந்து கொள்ள, தமிழன் தமிழனாக இல்லை.
அதுபோல,
'அறம் பொருள் இன்பம் (தர்ம, அர்த்த, காம)'என்று இந்த வரிசையில் குறிப்பாக ஏன் சொன்னார்கள்?
பொருள் தானே!! மிக மிக முக்கியம்..
'பொருள் இன்பம் அறம் (அர்த்த, காம, தர்ம)' என்று சொல்லி இருக்கலாமே? என்று யோசிக்க கூட முடியவில்லை தமிழனால்..
ஆராய்ச்சி செய்வதற்கு கூட சங்கதமிழ் தெரிந்து இருப்பது அவசியமாகிறது.
மிகவும் எளிதான தமிழில் எழுதப்பட்ட ஆத்திசூடிக்கும், திருக்குறளுக்கும், இன்றைய தமிழனுக்கு தமிழுக்கு தமிழ் உரை தேவைப்படுகிறது.
இதன் காரணத்தால், அர்த்தங்கள் புரியாத நிலையில், பாசுரங்கள் வெறும் பாட்டாகவே ஆகி விட்டது..
பதிகங்கள் கோவில் சுவரில் ஒதுங்கி அழிந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலை மாற வேண்டும் என்றால், மகான்கள் ஆசைப்படும் படி, அனைவரும் குறைந்தது,
உண்மையான சங்க தமிழை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்,
உண்மையான சம்ஸ்க்ரித மொழியை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இன்றைய இன்டர்நெட் காலத்தில்,
வால்மீகி ராமாயணம் சம்ஸ்க்ரித ஸ்லோகம் என்ன?அதன் சொல்லுக்கு அர்த்தம் என்ன?
என்று கொஞ்சம் நேரம் ஒதுக்கினால், நமக்கே பல விஷயங்கள் உண்மையாகவே புரிந்து விடும்.
கணாத ரிஷி சூத்திரம் என்னென்ன? என்ன சொல்கிறார்? என்ற தேடுதல் நமக்குள் ஏற்பட்டால், பல அற்புதங்கள் நமக்கே தெரிய வரும்.
4000 பாசுரம், பதிகங்கள் என்ன சொல்கிறது?
என்ன தமிழ் சொல் பயன்படுத்தி இருக்கிறார்கள்?
என்று ஒரு வருடம் முயற்சி செய்தால் கூட, பல அற்புத அனுபவங்கள் நமக்குள் ஏற்படும்.
1000 வருட அந்நிய மத ஆக்ரமிப்பால், நாம் இழந்தது அதிகம்..
ஆனால், இன்றும் ஹிந்துக்கள் என்று நாம் இருக்கும் போது, மேலும் நம் ஹிந்து தர்மத்தை அழிய விட்டு விட கூடாது.
நம் சொத்துக்கள் சங்கதமிழ் மொழியில் எழுதப்பட்டு ஒளிந்து கொண்டு இருக்கிறது.
நம் சொத்துக்கள், சம்ஸ்க்ரித மொழியில் எழுதப்பட்டு, ஆயுர் வேதம், சிற்ப சாஸ்திரம், நாரத பக்தி சூத்திரம், ஆபஸ்தம்ப சூத்திரம், கன்வ சூத்திரம், ஆதித்ய ஹ்ருதயம், கருட புராணம், வால்மீகி ராமாயணம் என்று பல வித ரூபத்தில் ஒளிந்து கொண்டு இருக்கிறது.
இதை வேரோடு அழித்து விடாமல், இன்றே நாம் தண்ணீர் ஊற்றி பாதுகாக்க முயற்சித்து விட்டால், 80 கோடி ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்தால், மீண்டும் மந்திரங்களை சொல்லியே அஸ்திரங்கள் தயாரித்து காட்டலாம்.
மண்ணை தங்கமாக்கலாம்.
கல் என்று நாம் நினைக்க, ஆழ்வார்களுடன் பேசிய தெய்வத்திடம் நாமும் பேச தகுதி பெறலாம்.
நமது இன்றைய கடமை:
ஒவ்வொரு தமிழனும், ஒரு வருடமாவது
தமிழில் தேவாரமோ, திருவெம்பாவையோ, திவ்ய பிரபந்தோமோ ஒன்றை எடுத்து கொண்டு, ஒவ்வொரு தமிழ் சொல்லுக்கும் என்ன அர்த்தம்? என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு தமிழனும், ஒரு வருடமாவது
தமிழன் வால்மீகி சம்ஸ்க்ரித மொழியில் கொடுத்த ராமாயணத்தையோ, ஆயுர் வேத சம்ஸ்க்ரித வாக்கியங்களோடு உடைய ஆயுர் வேதத்தையோ, ஒன்றை எடுத்து கொண்டு, ஒவ்வொரு சம்ஸ்க்ரித சொல்லுக்கும் என்ன அர்த்தம்? என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த அறிவு ஆராய்ச்சியை, 80 கோடி ஹிந்துக்களும் செய்ய ஆரம்பித்தால், ஒரு வருடத்தில் பல ரகசிய படைப்புகள் வெளி வந்து விடும்.
"ராமபிரான் சீதைக்கு சித்தப்பா" என்று ஒருவன் சொன்னால்,
"ராமபிரான் மனிதன் என்று சொன்னால்" என்று ஒருவன் சொன்னால்,
வால்மீகி ராமாயணம் படித்த புரிந்து கொண்டவர்களுக்கு, பேசுபவன், 'ராமபிரானை தன் இஷடத்துக்கு சொல்லி, மதம் மாற்ற பார்க்கிறான், நாதீகனாக்க பார்க்கிறான்' என்பது புரியும்.
நம் அறிவை வளர்த்து கொள்வதே ஹிந்துக்களாகிய நமக்கு பலம்.
இந்த அறிவை வளர்க்க, நம்மிடம் உள்ள பொக்கிஷங்கள் 'சங்க தமிழ்' ரூபத்திலும், 'சம்ஸ்க்ரித மொழி'யிலும் ஒளிந்து கிடக்கிறது.
12 லட்சம் வருடம் முன் த்ரேதா யுகத்தில், இரண்டு தமிழர்கள் "வால்மீகி" (வேடுவ ஜாதியில் பிறந்தவர்) அகத்தியர் - தமிழும் அறிந்து இருந்தார்கள், சமஸ்கரிதமும் அறிந்து இருந்தார்கள்.
காலங்கள் கடந்து அழியாமல் இன்றும் வாழ்கிறார்கள்.
இந்த அறிவை நாம் அறிய, குறைந்த பட்சம் இவர்கள் நமக்கு கொடுத்த வைத்திய முறைகளை, ராமாயணத்தை, ஒவ்வொரு சொல்லின் அர்த்தத்தோடு ஒரு வருடத்துக்குள் புரிந்து கொள்ள முயற்சி செய்து விட வேண்டும்.
நம் பெருமையை, நாமே படித்து உணர, நமக்கு கட்டாயம் சங்க தமிழ் அறிவும், சமஸ்க்ரித மொழி அறிவும் கட்டாயம் வேண்டும்.
சங்க தமிழும், சமஸ்க்ரிதமும் நமக்கு தெரிந்தால், அனைத்தும் தெரிந்து விடும்.
ராமாயணம், பாசுரங்கள், பதிகங்கள் அர்த்தம் புரிந்து கொண்டு படிக்க, முதுகு நிமிர்ந்து படைக்கப்பட்ட மனித பிறவி, மேல் நோக்கிய சிந்தனையை நிச்சயம் இறை அருளால் பெற்று விடும்.
இறை அருள் பெறும் போது, விலங்குகள் அனுபவிக்கும் சுகத்தை காட்டிலும், ஆனந்தம் நமக்கு கிட்டும்.
பூர்ணமானவன், முழுமையானவன் (விஸ்வம்), அனைத்திலும் பிரவேசித்து இருப்பவன் (விஷ்ணு), அனைத்தையும் தன் வசத்தில் வைத்து இருப்பவன் (வஷட்காரோ), மூன்று உலகங்களுக்கும் எஜமானனாக இருப்பவன் (பூத பவ்ய பவத் ப்ரபு:), ப்ரம்ம தேவன் கோபாலர்களை, அவர்கள் கொண்டு வந்த மாடு, பாத்திரம் உட்பட எடுத்து சென்று விட, அனைத்தையும் (உயிருள்ள, உயிரற்ற) தானே ஸ்ருஷ்டி செய்தார். எதனுடைய உதவியும் இல்லாமல், எதையும் சார்ந்து இல்லாமல், அனைத்தையும் தானே ஸ்ருஷ்டி செய்பவன், எல்லோரையும் படைத்தவன் (பூதக்ருத்), உலகங்கள் எல்லாவற்றையும் அந்தந்த இடத்தில் தாங்கி நிற்பவன் (பூதப்ருத்), எல்லா பொருள்களிடமும் கூடி இருப்பவன் (பாவோ), உலகம் அனைத்துமே சரீரமாக, தான் உலகத்துக்கு ஆத்மாவாக இருப்பவன் (பூதாத்மா), அனைத்து பூதங்களின் (ஜீவன்) தேவைகளையும் கொடுத்து போஷாக்கு அளிப்பவன் (பூதபாவன:)
पूतात्मा परमात्मा च मुक्तानां परमा गतिः ।
अव्ययः पुरुषः साक्षी क्षेत्रज्ञो अक्षर एव च ॥ २॥
பூதாத்மா பரமாத்மா ச
முக்தானாம் பரமா கதி: |
அவ்யய: புருஷ: ஸாக்ஷீ
க்ஷேத்ரஞோ க்ஷர ஏவ ச || 2
boothaatma paramaatmaa cha
muktaanaam paramaa-gatih |
Avyayah purusha saakshee
kshetragyo-kshara eva cha ||
மிகவும் பரிசுத்தமானவன். நம் இதயத்தில் இருந்தாலும் நம் தோஷங்கள் அவனைப்பாதிப்பதில்லை (பூதாத்மா), பரம புருஷனாய், பரம் பொருளாய், கடவுளாய் இருப்பவன் (பரமாத்மா), இந்த ஸம்ஸாரத்தில், மறுபிறப்பிலிருந்து விடுதலை பெற விரும்புவோருக்கு கதியாய் இருப்பவன் (முக்தானாம் பரமா கதி:), விடுதலை அடைந்த முக்தர்களைத் தன்னிடமே வைத்திருப்பவன் (அவ்யய:), காலத்துக்கும், தேசத்துக்கும், பொருளுக்கும் கட்டுப்படாதவன் (புருஷ:), நாம் பேசுவதையும்,செய்வதையும் அறிந்தவன் (ஸாக்ஷீ), எல்லா உலகங்களுக்கும் சொந்தக்காரன். அதிபதி (க்ஷேத்ரஞ), குறையாதவன். அனுபவிக்க அனுபவிக்க தெவிட்டாதவன் (அக்ஷர)
योगो योग विदां नेता प्रधान पुरुषेश्वरः ।
नारसिंह वपुः श्रीमान् केशवः पुरुषोत्तमः ॥ ३॥
யோகோ யோக விதாம் நேதா
ப்ரதான புருஷேஸ்வர: |
நாரஸிம்ஹ வபு: ஸ்ரீமான்
கேசவ: புருஷோத்தம: || 3
Yogo yoga-vidhaam nethaa
pradhaana purusheshvarah |
Naarasimha vapu shreeman
keshavah purushothamah ||
மோக்ஷம் தந்து நம்மை சேர்த்துக் கொள்பவன் (யோக:), நாம் செய்யும் காரியங்களுக்கு பலன் அளிப்பவன் (யோகவிதாம் நேதா:), ப்ரக்ருதியை, இயற்கையை நடத்திச் செல்பவன் (ப்ரதான புருஷேஸ்வர:), மனிதனாயும் சிங்கமாயும் சேர்த்து, வேண்டும் உருவம் எடுக்கும் சக்தி உள்ளவன் (நாரஸிம்ம வபு:), எந்த உருவம் எடுத்தாலும், மிக்க அழகுடையவன் (ஸ்ரீ மான்:), பிரம்மனுக்கும் தலைவன். அழகான திருமுடி உடையவன் (கேசவ:), புருஷர்களில் சிறந்தவன்: தான் ஒருவனே புருஷன் என்ற பெருமை உடையவன் (புருஷோத்தம:)
सर्वः शर्वः शिवः स्थाणुर् भूतादिर् निधि रव्ययः ।
सम्भवो भावनो भर्ता प्रभवः प्रभु रीश्वरः ॥ ४॥
ஸர்வ: சர்வ: சிவ: ஸ்தாணுர்
பூதாதிர் நிதி ரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்தா
ப்ரபவ: ப்ரபு ரீஸ்வர: || 4
Sarvah sarvah shivah sthaanoor
bhoothadir nidhi ravyayah |
Sambhavo bhaavano bharthaa
prabhavah prabhu reeshvarah ||
எல்லா படைப்புகளுமாய் இருப்பவன் (ஸர்வ:), நம் தோஷங்களை விலக்குபவன் (சர்வ), மங்களத்தை அளி்ப்பவன் (சிவ:), நிலை நிற்கும் பலனைத் தருபவன் (ஸ்தாணு:), எல்லோராலும் விரும்பப்படுபவன் (பூதாதி:), அழிவற்ற நிதியாய், வைத்த மாநிதியாய், பொக்கிஷாமாய் இருப்பவன் (நிதிரவ்யய:), ஸம்பவாமி யுகே யுகே என்று அவ்வப்போது அவதாரம் செய்பவன் (ஸம்பவ:), நம்முள் பக்தியை வளரச்செய்து நம்மை உயர்த்துபவன் (பாவன:), நம்மை ஆதரித்து போஷிப்பவன் (பர்தா:), தன் இச்சையாலே ஸங்கல்பத்தாலே சிறப்பான அவதாரங்கள் செய்பவன் (ப்ரபவ:), மிருகமாய்,மனிதனாய் அவதரித்தாலும் தனது மேன்மை குறையாதவன் (ப்ரபு : ), வ்யூஹ, விபவ, அர்ச்சா அவதாரத்திலும் ஈச்வரத் தன்மையோடு இருப்பவன் (ஈச்வர :).
स्वयम्भूः शम्भु रादित्यः पुष्क राक्षो महास्वनः ।
अनादि निधनो धाता विधाता धातु रुत्तमः ॥ ५॥
ஸ்வயம்பூ ஸம்பு-ராதித்ய:
புஷ்க ராக்ஷோ மஹாஸ்வன: |
அநாதி நிதனோ தாதா
விதாதா தாதுர் உத்தம:|| 5
Swayambhoo shambhu raadhithyah
pushka raaksho mahaa-svanah |
Anaadi nidhano dhaathaa
vidhaathaa dhaatur uththamah ||
நம் மீது உள்ள கருணையாலே தானே அவதரிப்பவன் (ஸ்வயம் பூ:), தன் அழகிய உருவத்தாலும், நற்குணங்களாலும் நம் மனதை கவர்பவன் (சம்பு:), சூர்ய மண்டலத்தின் நடுவே இருந்து நமக்கு ஒளி தருபவன் (ஆதி்த்ய:), செந்தாமரை கண்களை உடையவன் (புஷ்கராக்ஷ:), வேத ஒலியால் பூஜிக்கப்படும் திருநாமத்தை உடையவன் (மஹாஸ்வன்:), ஆதியும் அந்தமும் இல்லாதவன். முதலும் முடிவும் அற்றவன் (அநாதி நிதன:), எல்லோரையும் ஸ்ருஷ்டி செய்பவன் (தாதா:), பிரம்மனையும் படைத்தவன் (விதாதா:), தான் படைத்த எல்லாவற்றையும் விட சிறந்தவன் (தாதுர் உத்தம:)
अप्रमेयो हृषीकेशः पद्मनाभो अमर प्रभुः ।
विश्व कर्मा मनुस् त्वष्टा स्थविष्ठः स्थविरो ध्रुवः ॥ ६॥
அப்ரமேயோ ஹ்ருஷீகேஸ:
பத்மநாபோ அமர ப்ரபு: |
விஸ்வகர்மா மனுஸ் த்வஷ்டா
ஸ்தவிஷ்ட: ஸ்தவிரோ த்ருவ: || 6
Aprameyo hrushee-keshah
padhmanaabho-amara-prabhuh |
Vishva-karmaa manus thvastaa
sthavishtah sthaviro dhruvah ||
நம் அறிவுக்கு எட்டாத பெருமைகளை உடையவன் (அப்ரமேய:), நமக்கு கண், கை, கால் முதலிய இந்த்ரியங்களைக் கொடுத்தவன் (ஹ்ருஷீகேச:), தன் தொப்புள் கொடியில் தாமரையை உடையவன் (பத்ம நாப: ), நமக்கு காற்று, மழை, ஒளி இவைகளைக் கொடுக்கும் தேவர்களை நடத்திச் செல்லும் தலைவன் (அமர ப்ரபு:), உலகங்களை அமைத்தவன் (விஸ்வகர்மா:), மனதில் எண்ணியவாறே ஸ்ருஷ்டிப்பவன் (மனு:), உருவமற்ற விந்துகளுக்கு உருவத்தைக் கொடுக்கும் சிற்பி (த்வஷ்டா:), சிறியதாக தோன்றியவற்றைப் பெரியதாக்குபவன் (ஸ்தவிஷ்ட:), எக்காலத்திலும் அழியாதிருப்பவன் (ஸ்தவிர:), காலத்தால் மாறும் நம்மைப் போல் அல்லாது மாறாதிருப்பவன் (த்ருவ:)
अग्राह्यः शाश्वतः कृष्णो लोहिताक्षः प्रतर्दनः ।
प्रभूतस् त्रिक कुब्धाम पवित्रं मङ्गलं परम् ॥ ७॥
அக்ராஹ்ய: சாஸ்வத: க்ருஷ்ணோ
லோஹிதாக்ஷ: ப்ரதர் தன: |
ப்ரபூதஸ் த்ரிக குப்தாம
பவித்ரம் மங்களம் பரம் || 7
Agraahyah shaashvatah krishno
lohithaakshah prathar dhanah |
Prabhoothas trika kubdhaama
pavithram mangalam param ||
நம் புலன்களுக்கு புலப்படாதவன் (அக்ராஹ்ய:), ஓய்வில்லாத ஜகத் கார்யங்களைச் செய்தவன் (ஸாஸ்வத:), லீலைகள் செய்பவன், ஆனந்தமயன், ஆனந்தத்துக்கு இருப்பிடமானாவன் (க்ருஷ்ண), நம் மீதுள்ள வாத்ஸல்யத்தால் அன்பினால் கண்களில் கருணை என்ற நீர் கோத்து, சிவந்த கண்களை பெற்றவன் (லோஹி தாக்ஷ :), ப்ரளய காலத்தில் நம்மைத் தன் வயிற்றில் வைத்துக் காப்பவன் (ப்ரதர்தன:), அளவற்ற செல்வம் உடையவன் (ப்ரபூத:), த்ரிபாத் விபூதி எனப்படும் பரமபதத்தை தன் இல்லமாகக் கொண்டவன் (த்ரிக குப்தாமா), தானும் பரிசுத்தனாய், பக்தர்களையும் பரிசுத்தமாக்குபவன் (பவித்ரம்:), மங்கள குணங்களே நிரம்பியவன் (மங்களம்பரம்)
உலகங்களையெல்லாம் அடக்கி ஆள்பவன் (ஈஸான :), தன்னை எக்காலமும் அனுபவிக்கும் சக்தியைக் கொடுப்பவன் (ப்ராணத:), தன்னை நேசிப்பவர்க்கு உயிராய் இருப்பவன் (ப்ராண:), எவ்வுயிர்க்கும் முதல்வன் (ஜ்யேஷ்ட:), மிக்க மேன்மையானவன் (ஸ்ரேஷ்ட:), ப்ரக்ருஷ்ட ஜன்மமுடைவர்களான நித்ய ஸுரிகளுக்கும் தலைவன் (ப்ராஜபதி:), பொனுலகமான பரமபதத்தில் வாழ்பவன் (ஹ்ரண்யகர்ப:), நம் பூமியை தன்னுள் வைத்து காப்பவன் (பூ கர்ப),மஹாலக்ஷ்மியைப் பெற பாற்கடலையே கடைந்த ஸ்ரீ வல்லபன் (மாதவ), அரக்கர் போன்ற நம் இந்திரியங்களை வெல்ல கதியாய் இருப்பவன் (மதுஸுதன: )
ईश्वरो विक्रमी धन्वी मेधावी विक्रमः क्रमः ।
अनुत्तमो दुराधर्षः कृतज्ञः कृति रात्मवान् ॥ ९॥
ஈஸ்வரோ விக்ரமீ தன்வீ
மேதாவீ விக்ரம: க்ரம: |
அனுத்தமோ துராதர்ஷ:
க்ருதக்ஞ: க்ருதி: ஆத்மவான்|| 9
Eeshvaro vikramee dhanvee
medhaavee vikramah kramah |
Anuththamo dhuraa-dharshah
kruthagyah kruthi-raathmavaan ||
எல்லோருக்கும் ஸ்வாமியாய் இருப்பவன் (ஈஸ்வர:), எத் தடைகளையும் போக்கும் பராக்ரம் உடையவன் (விக்ரமீ:), வில்லை திவ்ய ஆயுதமாக தன் திருக்கையில் தரித்துள்ளனர் (தன்வீ:), எங்கும் நடந்ததும், நடப்பதும், நடக்கப்போகும் அறிந்த ஸர்வக்ஞன் (மேதாவீ:), கருடாழ்வானை தன் வாஹனமாகக் கொண்டவன் (விக்ரம:), எங்கும் வ்யாபித்து எல்லாவற்றையும் தனதாக கொண்டவன் (க்ரம:), தனக்கு மேம்பட்டவர் யாரும் இல்லாதவன் (அனுத்தம:), கடல் போன்று கலக்கம் ஏதுமில்லாது, தெளிந்த ஸ்வாபம் உடையவன் (துராதர்ஷ:), தன் பக்தர்களுக்கு கடன்பட்டவனாக தன்னை நினைத்திருப்பவன் (க்ருதக்ஞ:), தன்னிடம் பக்தி கொள்ளும்படியான மனதை நமக்கு கொடுப்பவன் (க்ருதி:), நம் ஆத்மாவுக்குள் அந்தராத்மாவாய் இருப்பவன் (ஆத்மவான்)
सुरेशः शरणं शर्म विश्वरेताः प्रजाभवः ।
अहः संवत्सरो व्यालः प्रत्ययः सर्व दर्शनः ॥ १०॥
ஸுரேச: ஸரணம் சர்ம
விஸ்வ ரேதா: ப்ரஜாபவ: |
அஹ: ஸம்வத்ஸரோ வ்யால:
ப்ரத்யய: ஸர்வ தர்ஸன: || 10
Suresha sharanam sharma
vishva-rethaah prajaa-bhavah |
Ahah samvathsaro vyaalah
prathyaya sarva-darshanah ||
ப்ரம்மா முதலிய தேவர்களுக்கும் தலைவனாக இருப்பவன் (ஸுரேச:), நாம் முக்தி பெற உபாயமாய் இருப்பவன் (சரணம்:), நமக்கு பகலாய் இருந்து நம் வாழ்க்கைக்கு ஒளி தருபவன் (அஹ:), நம்முள் அந்தராத்மாவாய் நன்கு வசிப்பவன் (ஸம்வத்ஸர:), தன்னை அண்டினார்க்கு அபயம் கொடுத்து அருளுபவன் (வ்யாள:), நம்ப தகுந்தவன். தன்னைச் சரணம் அடைந்தவர்களை நல்வழி நடத்துபவன் (ப்ரத்யய), மெள்ள மெள்ள, தன் மகிமைகள் எல்லாவற்றையும் நமக்கு காட்டுபவன் (ஸர்வதர்சன:)
अजः सर्वेश्वरः सिद्धः सिद्धिः सर्वादि रच्युतः ।
वृषा कपिर मेयात्मा सर्व योग विनिःसृतः ॥ ११॥
அஜஸ்: ஸர்வேஸ்வர: ஸித்த:
ஸித்திஸ்: ஸர்வாதி ரச்யுத: |
வ்ருஷா கபிர மேயாத்மா
ஸர்வ யோக வினிஸ்ருத: || 11
Ajas sarveshvaras siddhah
siddhi sarvaadhi rachyuthah |
Vrukshaa kapira meyaathmaa
sarva-yoga vinih-sruthah ||
தன்னை அடையவொட்டாமல் தடுக்கும் இடையூறுகளை போக்குபவன் (அஜ:), தன்னைப் பற்றியவர்களைத் தானே சென்று அடைபவன் (ஸர்வேஸ்வர:), பக்தர்கள் தன்னை அடையத் தானே உபாயமாய் இருப்பவன் (ஸித்த:), தன்னை அடைய எவ்வுபாயம் மேற்கொண்டாலும் பலனளிப்பவன் (ஸித்தி:), இம்மையிலும், மறுமையிலும் நாம் வேண்டுவதை அளிப்பவன் (ஸர்வாதி:), தன்னைப் பற்றியவர்களைக் கை விடாதவன் (அச்யுத:).
वसुर् वसुमनाः सत्यः समात्मा ऽसम्मितः समः ।
अमोघः पुण्डरीकाक्षो वृषकर्मा वृषाकृतिः ॥
வஸுர் வஸுமனாஸ்: ஸத்யஸ்:
ஸமாத்மா ஸம்மிதஸ் ஸம: |
அமோக: புண்டரீகாக்ஷோ
வ்ருஷ கர்மா வ்ருஷா க்ருதி: || 12
Vasur vasumaanas sathyah
samaathma sammithas samah |
Amoghah pundaree-kaaksho
vrusha-karmaa vrushaa-krutih ||
எத்தனையோ திருப்பதிகள் இருப்பினும் நம்முள் வசிப்பவன் (வஸு:), பக்தர்களை தன் சொத்தாக நினைப்பவன் (வஸுமனா:), பக்தர்களுக்கு அனுகூலமாக இருப்பவன் (ஸத்ய:), வேடுவன் குகன், ஜாம்பவான், காட்டுவாசியான சபரி, வானரர்கள் என்று வித்தியாசம் பாராதவன் (ஸமாத்மா:), பக்தர்களுக்கு கட்டுப்பட்டவன். அவர்களுக்காக தூது போயும் காப்பவன் (ஸம்மித:), தன்னை அடைந்தவர் எல்லோரிடமும் ஸமமான அன்பு வைத்துள்ளவன் (ஸம:), தன்னை அடைந்தவர் யாவருக்கும் மோகமில்லாமல் பாரபட்சம் காட்டாமல், சரண் தருபவன் (அமோக :), பக்தர்கள் அனைவருக்கும் கண்ணாய் இருக்கும் தாமரைக் கண்ணன் (புண்டரீ காக்ஷ:), நம் நலத்தை மனதில் கொண்டு நம்மை நடத்துபவன் (வ்ருஷ கர்மா:), தர்மமே உருவானவன். பரிசுத்தமானவன் (வ்ருஷா க்ருதி :)
रुद्रो बहुशिरा बभ्रुर् विश्वयोनिः शुचि श्रवाः ।
अमृतः शाश्वत स्थाणुर् वरारोहो महातपाः ॥ १३॥
ருத்ரோ பஹுசிரா பப்ருர்
விஸ்வயோனி: ஸுசி ஸ்ரவா: |
அம்ருத: ஸாஸ்வத ஸ்தாணுர்
வரா ரோஹோ மஹா தபா: || 13
Rudro bahushiraa babhruh
vishva-yoni shuchi-shravaah |
Amrita shaashvathas sthaanur
varaa roho mahaa-thapaah ||
பக்தர்களின் கண்களில் ஆனந்தக்கண்ணீரை பெருக செய்பவன் (ருத்ர:), ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: என்று பல தலைகளை உடையவன் (ப்ஹுஸிர:), உலகங்களையெல்லாம் தாங்குபவன் (பப்ரு:), அனைத்து உலகத்தோருடனும் தொடர்பு உடையவன் (விஸ்வயோனி:), அடியார்களின் ஸ்தோத்திரங்களை மனமுவந்து கேட்பவன் (ஸிசிஸ்ரவா:), பக்தர்களுக்கு அமுதமாய் தித்திப்பவன் (அம்ருத:), ப்ரும்ம ருத்ராதி தேவர்களைப் போலில்லாமல் என்றும் அழிவில்லாதவன் (ஸாஸ்வத ஸ்தாணு), தம்மை அடைந்தவர்களை மிக மேன்மையுடயவர்களாக ஆக்குபவன் (வராரோஹ:), எல்லையில்லா ஞானத்தை உடையவன் (மஹாதபா:)
सर्वगः सर्वविद् भानुर् विष्वक्सेनो जनार्दनः ।
वेदो वेद विदव्यङ्गो वेदाङ्गो वेदवित् कविः ॥ १४॥
ஸர்வக: ஸர்வவித் பானுர்
விஷ்வக் ஸேனோ ஜநார்தன: |
வேதோ வேத விதவ் யங்கோ
வேதாங்கோ வேதவித் கவி: || 14
Sarvaga sarva-vidh bhaanuh
vishva-kseno janardhanah |
Vedho vedha-vidhav yango
vedhaango vedha-vith-kavih ||
எல்லாவற்றையும் தன்னுள் வைத்திருந்து பின் அவற்றை அப்படியே ஸ்ருஷ்டிப்பவன் (ஸர்வக:), ப்ரளயத்தின் போது, எல்லாவற்றையும் மறுபடியும் தன்னுள் வைப்பவன் (ஸர்வவித்:), எல்லோரையும் படைத்தும் தான் தன் உருவில் மாறாதிருப்பவன் (பாநு:), எல்லோருக்கும் ரக்ஷகன் (விஷ்வக்ஸேன:), பக்த விரோதிகளை,தீயோர்களை அழிப்பவன் (ஜநார்தன்:), வேதங்களைத் தந்த சாஸ்த்ர ப்ரதன் (வேத:), வேதங்களை உபதேசித்தவன் (வேதவித்), வேதங்களின் அங்கங்களான ஸிக்ஷை,வ்யாக்ரணம், சந்தஸ், நிருக்தம், கல்பம், ஜோதிஷம் அனைத்துமாக தானேயாயிருப்பவன் (அவ்யங்க), வேதங்களையே தன் அங்கங்களாய் உடையவன் (வேதாங்க:), வைதீக கர்மங்களை அனுஷ்டிக்கும்படி செய்து அவைகளை தன் ஆராதனமாய் ஏற்பவன் (வேதவித்:), நம் கணகளுக்கு அப்பால் இருப்பவையையும் காண்பவன் (கவி:)
அனைத்து லோகங்களுக்கும் அத்யக்ஷன் / அதிபதி (லோகா த்யக்ஷ:), ப்ரம்ம ருத்ராதி அனைத்து தேவர்களுக்கும் தலைவன் (ஸுரா த்யக்ஷ:), ஸகல கர்மங்களுக்கும் உரிய பலனைத் தருபவர் (தர்மா த்யக்ஷ:), நித்யமான இவ்வுலக சுகங்கள்,நித்யமான மோக்ஷம் இரண்டும் தருபவன் (க்ருதா க்ருத:). வாஸுதேவன் (தன்னை மறைத்து கொண்டிருக்கும் தேவன்), ப்ரத்யும்னன் (விஷ்ணுவுக்கு ஆத்மாவாக), அனிருத்தன் (ப்ரம்மாவுக்கு ஆத்மாவாக), ஸங்கரஷன்ன் (ருத்ரனுக்கு ஆத்மாவாக) என்று உலக ச்ருஷ்டிக்காக நான்கு வ்யூஹ மூர்த்திகளானவன் (சதுராத்மா ), நான்கு மூர்த்திகளாய் (நாராயணன், விஷ்ணு,ப்ரம்மா,ருத்ரன்) த்யானத்திலும் அனுக்ரஹிப்பவன் (சதுர் வ்யூஹ), சிங்கம் போன்று வீர பற்களை உடையவன் (சதுர் தம்ஷ்ட்ர), திவ்ய ஆயுதங்களை ஏந்திய நான்கு திருக்கைகளை உடையவன் (சதுர் புஜ:)
भ्राजिष्णुर् भोजनं भोक्ता सहिष्णुर् जगदादिजः ।
अनघो विजयो जेता विश्वयोनिः पुनर्वसुः ॥
ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா
ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ: |
அனகோ விஜயோ ஜேதா
விஸ்வயோனி: புனர்வஸு: || 16
Bhraajishnur bhojanam bhokthaa
sahishnur jagadhaadhijah |
Anagho vijayo jethaa
vishva-yonih punar-vasuh ||
திவ்ய ஆயுதங்களுடன் தன் சதுர்புஜத்தை பக்தர்களுக்கு காட்டி அருள்பவன் (ப்ராஜிஷ்ணு), நாம் ருசித்து உண்ணும் உணவாக நீராக தானே இருப்பவன். பக்தர்களுக்கு தன்னையே நல் உணவு போல் அனுபவிக்கக் கொடுப்பவன். (போஜனம்), தனக்கு முன்னால் வந்து நிற்கும் அனைவரையும் விழுங்கி தன் பக்தனாக ஆக்குபவன், பக்தர்கள் அன்புடன் சமர்ப்பிக்கும் ப்ரஸாதத்தை ஏற்பவன் (போக்தா). தன்னை சரணடைந்தோரின் பாபங்களை மன்னித்து அருள்பவன் (ஸஹிஷ்ணு), ஆதி முதல்வன், இவ்வுலங்கள் படைக்கப்பட்டதற்கும் முன்னமேயே இருந்தவன் (ஜகதாதிஜ)தோஷங்களுள்ள நம்முள் அந்தராத்மாவாக இருந்தாலும் தோஷமற்றவன் (அனக:), நல்லோருக்கு ஜெயத்தை தருபவன் (விஜய :), நம் அறியாமைகளைப் போக்கி நம்மையும் ஜெயித்து பக்தனாக ஏற்பவன் (ஜேதா :), உலகத்துக்கு காரணமானவன் (விச்வயோனி:), பிரம்மா, சிவ: என்று எல்லோருக்குள்ளும் அந்தராத்மாவாக இருப்பவன் (புனர்வஸு:)
उपेन्द्रो वामनः प्रांशुरमोघः शुचिरूर्जितः ।
अतीन्द्रः सङ्ग्रहः सर्गो धृतात्मा नियमो यमः ॥ १७॥
உபேந்த்ரோ வாமன: ப்ராம்ஸு:
அமோக: ஸுசி ஊர்ஜித: |
அதீந்த்ர: ஸங்க்ரஹ: ஸர்கோ
த்ருதாத்மா நியமோ யம: || 17
Upendhro vaamanah praamshuh
amogha suchi roorjithah |
Atheendhra sangrahah sargo
dhruthaatmaa niyamo yamah ||
கஸ்யப முனிவரின் பிள்ளை இந்திரன். அவருடைய இளைய சகோதரனாக வாமன அவதாரம் செய்தவன். ஆதலால், உப-இந்திரனாக இருப்பவன் (உபேந்த்ர:), இந்திரனுக்கு இளையவன், குள்ளன் என்றாலும், பால் திரட்டி போனாலும் எப்படி அழகாக சுவையாக இருக்குமோ அது போல, குட்டி உருவில் தோன்றிய பேரழகன் (வாமன:), அதே அவதாரத்தில் ஓங்கி உலகளந்து வையம் கண்ட த்ரிவிக்ரமன் (ப்ராம்ஸு :), அபரிமிதமான,அளவற்ற பெருமைகளை உடையவன் (அமோக :), நமக்கு நன்மைகள் பல செய்தும், ப்ரதிபலன் எதிர்பாராத பரிஸுத்தன் (ஸுசி :), எதையும் நடத்தி காண்பிக்கும் வல்லமை படைத்தவன் (ஊர்ஜத:). இந்திரனுக்கு தம்பியாகப் பிறந்தும் அவனுக்கும் மேம்பட்டவன் (அதீந்த்ர :), அடியவர்களால் எளிதில் கிரஹிக்கப்படுபவன். உணரப்படுபவன். (ஸங்க்ரஹ :), அடியவர்களுக்காக, தானே அனைத்து அவதாரங்களும் செய்து கொள்பவன் (ஸர்வ :), எல்லா ஆத்மாக்களுக்கும் உயிரளித்து தரிப்பவன். நடத்திச் செல்பவன் (த்ருதாத்மா), காற்று, வெப்பம், கடல், பருவங்களை சீராக நடத்த தேவர்களை நியமிப்பவன் (நியம :), ஈரேழு பதிநான்கு லோகங்களையும் உள்ளிருந்து ஆள்பவன், மரணத்திற்கு அதிபதியானவன் (யம :)
वेद्यो वैद्यः सदायोगी वीरहा माधवो मधुः ।
अतीन्द्रियो महामायो महोत्साहो महाबलः ॥ १८॥
வேத்யோ வைத்ய: ஸதா யோகீ
வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரியோ மஹா மாயோ
மஹோத் ஸாஹோ மஹாபல: || 18
Vedhyo vaidhya sadhaa yogee
veeraha maadhavo madhuh |
Atheendhriyo mahaa-maayo
mahoth saaho mahaa-balah ||
அடியார்களுக்கு எளியவன் (வேத்ய), நோய்களை போக்குபவன் (வைத்ய), நம்மை நினைத்து யோகத்திலிருப்பவன் (ஸதாயோகீ), வீரம் பேசும் அன்ய மதவாதிகளின் வார்த்தைகளை பொய்யாக்குபவன் (வீரஹா), மா தவத்தாலே அடையப்படும் லக்ஷ்மீ பதி (மாதவ), தேனிலும் இனியவன் (மது). புலன்களுக்கு அப்பாற்பட்டவன் (அதீந்த்ரிய:), புலன்களை இயக்கம் பெரிய மாயன். (மஹாமாய:), அடியார்க்கு நன்மை செய்வதில் ஊக்கமுடையவன் (மஹோத்ஸாஹ:), எவரின் உதவியும் இல்லாமல் அனைத்தையும் செய்து முடிக்கும் அஸஹாய சூரன் (மஹாபல:)
நாம் நினைப்பது, நாம் செய்வதுஎல்லாம் அறிந்தவன் (மஹாபுத்தி:), அழியாத சக்தியை உடையவன் (மஹாவீர்ய:), தன் சங்கல்பத்தாலேயே உலகங்களை எல்லாம் படைத்தவன் (மஹாசக்தி:), நம் உள்ளும் புறமும் உள்ள இருளைப் போக்க வல்லவன் (மஹாத்யுதி:). உவமை சொல்ல முடியாத திருமேனியை உடையவன் (அநிர்தேஸ்ய வபு:), பெரும் செல்வமும், அழகும், ஒளியும், ஞானமும் உடையவன் (ஶ்ரீமான் :), கணக்கற்ற திவ்ய கல்யாண குணங்கள் உடையவன் (அமேயாத்மா :), ஆமையாய் மந்தர மலையை தாங்கி, சிறுவனாய் கோவர்த்தன மலையைத் தாங்கி, தன்னை அண்டினரை மலை தூக்கியும் காப்பவன் (மஹாத்ரி த்ருத் :).
महेष्वासो महीभर्ता श्रीनिवासः सतां गतिः ।
अनिरुद्धः सुरानन्दो गोविन्दो गोविदां पतिः ॥ २०॥
மஹேஷ்வாஸோ மஹீ பர்தா
ஶ்ரீநிவாஸ: ஸதாங்கதி: |
அநிருத்த: ஸுரா நந்தோ
கோவிந்தோ கோவிதாம் பதி: || 20
Mahesh vaaso mahee-bharthaa
shreenivaasa sathaangathih |
Aniruddha suraa-nandho
govindo govidhaam pathih ||
மகாவில்லாளன். அம்பு மழை பொழிந்து சத்ரு நிரஸனம் செய்பவன். (மஹேஷ்வாஸ:), இப்பூமியை தாங்குபவன் (மஹீ பர்தா:), மஹாலக்ஷ்மியை தன் திரு மார்பில் வைத்துள்ளவன் (ஶ்ரீநிவாஸ்:), நல்லோர்களுக்கு புகலிடமாய் இருப்பவன் (ஸதாங்கதி :). தன் இச்சையை நிறைவேற்றுவதில் தடங்கலற்றவன் (அனிருத்த:), நல்லோர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுபவன் (ஸுராநந்த:),கோவர்தன மலையை கொடையாக பிடித்து தன் பக்த ஜனங்களை காப்பவன், நம் துதிகளை ஏற்று அனுக்ரஹிப்பவன் (கோவிந்த:), வேத கோஷத்தால், தன்னை ஆராதிப்பவர்களைக் காப்பவன் (கோவிதாம்பதி:)
मरीचिर् दमनो हंसः सुपर्णो भुजगोत्तमः ।
हिरण्यनाभः सुतपाः पद्मनाभः प्रजापतिः ॥
மரீசிர் தமனோ ஹம்ஸ:
ஸுபர்ணோ புஜகோத்தம: |
ஹிரண்யநாப: ஸுதபா:
பத்மநாப: ப்ரஜாபதி: || 21
Mareechir dhamano hamsah
suparno bhuja-goththamah |
Hiranya-naabhah suthapaah
padma-naabhah prajaa-pathih ||
பூரண சந்திரன் போன்ற அழகிய ஒளி உள்ளவன் (மரீசி:), தன் குளிர்ந்த ஒளியால் நம் தாபங்களைத் தீர்ப்பவன் (தமந:), அழகிய நடை உள்ளவன். ஹம்ஸாவதாரம் செய்தவன் (ஹம்ஸ:), கருடனை வாகனமாக உடையவன். நம்மை ஸம்ஸார சாகரத்தை தாண்டுவிப்பவன் (ஸுபர்ண:), ஆதிசேஷன் மீது சயனித்து நமக்கு சேவை சாதிப்பவன் (புஜ கோத்தம:), அழகிய திருநாபியை உடையவன் (ஹிரண்ய நாப:), பெரும் தவம் செய்து பெறத்தக்க திவ்ய ஞான ஸ்வரூபி (ஸுதபா:), தாமரை பூத்த திருநாபியை உடையவன் (பத்மநாப:), பிரம்மனுக்கும் ஸ்வாமி (ப்ரஜாபதி:)
நாம் குழந்தையாயிருக்கும்போதே நமக்கு அறிவைக் கொடுத்து வளர்ப்பவன் (அக்ரணீ :), எல்லா ஜீவன்களுக்கும் தலைவன் (க்ராமணீ :), மிகுந்த சிறப்புடையவன் (ஸ்ரீ மான்:), நீதி வழுவாமல், அவரவர் செய்த கர்மாவுக்கு பலனை கொண்டு, உலகங்களை நடத்துபவன் (ந்யாய:), வைகுந்தம் அடைவித்து நம்மைக் கரை சேர்ப்பவன் (நேதா:), பற்பல திவ்ய அவதாரங்கள் எடுத்து ஆச்சர்ய சேஷ்டிதங்கள் செய்பவன் (ஸமீரண:). ஆயிரம் தலைகளை உடையவன், அதாவது தானே அனைத்துமாக இருப்பவன் (ஸஹஸ்ர மூர்தா:), ஸகல லோகங்கத்துக்கும் ஆத்மாவாக இருப்பவன் (விச்வாத்மா:), ஆயிரம் கண்களை உடையவன், அதாவது அனைத்தையும் பார்க்கும் சக்தி உள்ளவன் (ஸஹஸ்ராக்ஷ:), ஆயிரம் திருவடிகளை உடையவன், அதாவது எங்கும் ப்ரத்யக்ஷம் ஆக கூடியவன் (ஸஹஸ்ரபாத்:)
आवर्तनो निवृत्तात्मा संवृतः सम्प्रमर्दनः ।
अहः संवर्तको वह्नि रनिलो धरणीधरः ॥ २५॥
ஆவர்தனோ நிவ்ருத்தாத்மா
ஸம்வ்ருத: ஸம் ப்ரமர்தன: |
அஹ: ஸம்வர்தகோ வஹ்னி
ரநிலோ தரணீ தர: || 25
Aavarthano nivruththaathmaa
sam-vrutha sam pramardhanah |
Aha-samvarthako vahnih
ranilo dharanee-dharah ||
கால சக்கரத்தை தன் இஷடபடி சுழற்றுபவன். தன் சக்தியினால் சூரிய சந்திரர்களை நடத்திச் செல்பவன் (ஆவர்த்தன:), இயற்கையையே நடத்தும் அளவற்ற மேன்மை உடையவன் (நிவ்ருத்தாத்மா:), தன் பக்தர் அல்லாதவர்க்கு தன்னை மறைத்து வைத்திருப்பவன் (ஸம்வ்ருத:), பக்தர்களின் அஞ்ஞானத்தைப் போக்கி மாயையிலிருந்து விடுவிப்பவன் (ஸம்ப்ரமர்தன:), பகல்,இரவு, பருவ காலங்கள் என்று காலத்தை சுழலச்செய்யும் பரம்பொருள் (அஹஸ் ஸம்வர்தக:), உலகங்களையெல்லாம் எங்கும் பரந்த ஆகாயத்தில் தாங்கி நிற்பவன் (வஹ்னி:), கண்ணுக்குத் தெரியாத காற்றாய் இருந்து நம்மை வாழ வைப்பவன் (அனில:), நம்மைத் தாங்கும் பூமியையும் அந்தரத்தில் நிற்க வைத்து தாங்குபவன் (தரணீ தர:)
நம்மை தம் பக்தனாக ஏற்று மென்மேலும் அருள் புரிபவன் (ஸுப்ரஸாத:), விருப்பு,வெறுப்பு அற்ற தெளிவான சிந்தனை உள்ள நேர்மையாளன் (ப்ரஸந்நாத்மா:), தன் கருணையாலே, நமக்காக பற்பல பொருட்களை படைத்தருளியவன் (விஸ்வத்ருக்:), கரந்த பாலில் நெய்யே போல எங்கும் வியாபித்து தானே உலகாள்பவன் (விச்வபுக் விபு:), நல்லோர்களிடம் அன்புடன் இருப்பவன் (ஸத் கர்தா:), நல்லோர்களால் பூஜிக்கப்படுபவன் (ஸத் க்ருத:), தன் பக்தன் கேட்டால், தூது போகவும், தேரோட்டவும் தயாராக இருக்கும் எளியோன் (ஸாது :), பக்தரல்லார்க்குத் தன் பெருமைகளையெல்லாம் மறைப்பவன் (ஜஹ்நு:), அனைத்து நர ஜீவனுக்கும் அயணமாக / அடைக்கலமாக இருப்பவன் (நாராயண:), அழிவற்றவன் (நர:)
सिद्धार्थः सिद्ध सङ्कल्पः सिद्धिदः सिद्धि साधनः ॥ २७॥
அஸங்க் யேயோ ப்ரமே யாத்மா
விசிஷ்ட: ஸிஷ்ட க்ருச் ஸுசி: |
ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப:
ஸித்தித: ஸித்தி ஸாதன: || 27
Asankh yeyo prame-yaathmaa
vishishta shishta-kruch suchih |
Sidhdhaarthah siddha-sankalpah
siddhidha siddhi-saadhanah ||
லக்ஷோப லக்ஷம் எண்ணற்ற ஆத்மாக்களை தன்னுள் வைத்து ரக்ஷிப்பவன் (அஸங்க்யேய:), எண்ணற்ற உயிர்களிலும் பொருள்களிலும் வ்யாபித்திருப்பவன் (அப்ரமேயாத்மா:), தன்னுள் எல்லாம் எல்லாவற்றிலும் தான் என்னும் சிறப்புடையவன் (விசிஷ்ட:), தன் அடியார்களை நல்லோர்களாக தெய்வமாக ஆக்குபவன் (சிஷ்டக்ருத் :), தூய்மையானவன், பவித்ரமானவன் (சுசி :), எல்லா ஐஸ்வர்யமும் உடையவன் (ஸித்தார்த்த:), நினைத்த படி நடத்த வல்லவன் (ஸித்தஸங்கல்ப:), நாம் வேண்டும் வல்லமையை அளிப்பவன் (ஸித்தித:), நாம் வேண்டுவனவற்றைப் பெற ஸாதனமாய் உள்ளவன் (ஸித்தி ஸாதன:)
वृषाही वृषभो विष्णुर् वृषपर्वा वृषोदरः ।
वर्धनो वर्धमानश्च विविक्तः श्रुतिसागरः ॥ २८॥
வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர்
வ்ருஷ பர்வா வ்ருஷோ தர: |
வர்த்தனோ வர்தமானஸ் ச
விவிக்த: ஸ்ருதி ஸாகர: || 28
Vrushaahee vrushabho vishnuh
vrusha-parvaa vrusho-dharah |
Vardhano vardha-maanas cha
viviktha shruthi-saagarah ||
தன்னை அடையும் நாளை நன் நாளாக்கி நன்மை பொழிபவன் (வ்ருஷாஹீ :), நம் துன்பங்கள் தீரும்படி அருள்பொழிபவன் (வ்ருஷப:), எங்கும் பரந்து அருள்மழை பொழிபவன் (விஷ்ணு:), தர்மமெனும் படிகளும் அவனே, அவற்றால் அடையப்படுபவனும் அவனே (வ்ருஷ பர்வா:), தர்மமே உருவாய் இருப்பவன் தர்மத்தைக் கண்டு வயிறு நிறைபவன் (வ்ருஷோதர:), வளர்ச்சியைத் தருபவன். நாம் முன்னேற அவனே வழியாய் இருப்பவன் (வர்தன:), பக்தர்கள் புகழ் வளர, வளர தன் புகழும் வளரப்பெறுபவன் (வர்தமான:), தனிச் சிறப்புடன் நிகரில்லாது இருப்பவன் (விவிக்த:), கடல் போன்ற வேதமாக இருப்பவன், வேதஸ்வரூபி (ஸ்ருதி ஸாகர:)
सुभुजो दुर्धरो वाग्मी महेन्द्रो वसुदो वसुः ।
नैकरूपो बृहद्रूपः शिपिविष्टः प्रकाशनः ॥ २९॥
ஸுபுஜோ துர்தரோ வாக்மீ
மஹேந்த்ரோ வஸுதோ வஸு: |
நைக ரூபோ ப்ருஹத் ரூப:
ஸிபிவிஷ்ட: ப்ரகாஸன: || 29
Subhujo durdharo vaagmee
mahendhro-vasudho vasuh |
Naika-roopo bruhadh-roopah
shibi-vishtah prakaa-shanah ||
அழகிய புஜங்களை உடையவன் (ஸுபுஜ :), ப்ரளய ஜலம் போல், யாராலும் தடுக்க முடியாத சக்தியை உடையவன் (துர்தர :), மஹோ உன்னதமான பகவத்கீதையைத் தந்த திரு வாக்கை உடையவன் (வாக்மீ :), எல்லா ஐஸ்வர்யங்களுக்கும் அதிபதி (மஹேந்த்ர :), எல்லையற்ற தன் ஐஸ்வர்யங்களை நமக்கும் அளிக்கும் கொடைவள்ளல் (வஸுத:), வைத்தமாநிதி - தானே நமக்கெல்லாம், செல்வமாய் உள்ளவன் (வஸு:), ஒரு உருவம் தான் என்றில்லாதபடி பற்பல திவ்ய ரூபங்களில் உள்ளவன் (நைகரூப:), சூரியன் முதலிய ஒளிகளின் கிரணங்கள் தோறும் வ்யாபித்திருப்பவன் (ப்ருஹத் ரூப:), அணு முதல் அண்டங்கள் வரை எல்லாம் தன்னுள் கொண்ட விஸ்வரூபன் (ஸிபிவிஷ்ட:), எல்லா பொருள்களிலும் வ்யாபித்து நமக்கு தன்னை வெளிப்படுத்துபவன் (ப்ரகாஸன:)
மலையையும் தூக்கும் பலமும், மிக்க பலம் உள்ளோரையும் வெல்லும் சாமர்த்தியமும், கொண்ட ஜோதிர் மயமானவன் (ஓஜஸ் தேஜோ த்யுதிதர:), தன் திவ்ய திருக்கல்யாண குணங்களை நாம் அறிய செய்பவன் (ப்ரகாஸாத்மா:), தர்மத்தின் எதிரிகளை தன் உக்ரத்தினால் எரித்து விடுபவன் (ப்ரதாபன:), தன் அருளால் நம்மை நிரம்பச் செய்பவன் (ருத்த:), இவனே பரம்பொருள் என்று வேதங்களால் தெளிவாய் தெரிவிக்கப்படுபவன் (ஸ்பஷ்டாக்ஷர:), தன்னை மனதில் த்யானம் செய்வோரைக் காப்பவன் (மந்த்ர:), வெண்மதியின் குளிர்ந்த ஒளியாய் இருந்து நம் தாபங்களைத் தீர்ப்பவன் (சந்த்ராம்ஸு:), சூரியனின் ஒளியாய் இருந்து நம் இருள் நீக்குபவன் (பாஸ்கர த்யுதி:)
अमृतां शूद्भवो भानुः शशबिन्दुः सुरेश्वरः ।
औषधं जगतः सेतुः सत्य धर्म पराक्रमः ॥ ३१॥
அம்ருதாம் ஸூத்பவோ பானு:
ஸஸபிந்து: ஸுரேஸ்வர: |
ஒளஷதம் ஜகத: ஸேது:
ஸத்ய தர்ம பராக்ரம: || 31
Amruthaam-shoodh bhavo bhaanuh
shasha-bindhu-sureshvarah |
Ausha-dham jagatha sethuh
sathya-dharma para-kramah ||
குளிர்ந்த சந்திரனை தன் மனதிலிருந்து ஸ்ருஷ்டித்த குளிர்ந்த மனத்தை உடையவன் (அம்ருதாம் சூத்பவ:), தானே சூரியனாகவும் இருந்து உலகங்களை இருளிலிருந்து காப்பாற்றுபவன் (பாநு:), தீயோர் மனதைத் திருத்தி தன்னுடன் கூடாதோரையும் ஆட்கொள்ளுபவன் (ஸஸிபிந்து:), இமையோர் தலைவனாய், தீமைகளைக் களைந்து, நல்லதை வளர்ப்பவன் (ஸுரேஸ்வர:), மருத்துவனாய் நிற்கும் மாமணிவண்ணன். எந்நோய்க்கும் இவனே மருந்து (ஔஷதம்:), வெவ்வேறு உலகங்களை ஒன்றோடொன்று மோதாமல் காக்கும் அணை (ஜகதஸ்ஸேது:), ஸத்யத்தையும், தர்மத்தையும் காக்கும் தோள்வன்மை உடையவன் (பராக்ரம:)
भूतभव्य भवन्नाथः पवनः पावनो ऽनलः ।
कामहा कामकृत् कान्तः कामः काम प्रदः प्रभुः ॥ ३२॥
பூதபவ்ய பவந்நாத:
பவன: பாவனோ அநல: |
காமஹா காமக்ருத் காந்த:
காம: காம ப்ரத: ப்ரபு: || 32
Bhootha-bhavya bhavan naathah
pavanah paavano-analah |
Kaamahaa-kaama-kruth kaanthah
kaamah kaama-pradhah prabhuh ||
கடந்த, நிகழ், எதிர் என்று முக்காலங்களிலும் ரக்ஷகன் இவனே (பூத பவ்ய பவன் நாத:), எக்காலத்திலும் வீசி நம்மைக் காக்கும் காற்று இவனே (பவன:), தன்னை மனதில் கொண்டு செய்யும் எக்காரியத்தையும் புனிதமாக்குபவன் (பாவன:), பக்தர்களுக்கு எவ்வளவு அருளியும் தான் திருப்தி அடையாதவன் (அநல:), பக்தர்களின் மனதிலிருந்து மற்ற காமங்களை, ஆசைகளை அகற்றுபவன் (காமஹா:), பக்தர்கள் மனதினிலே தன்னிடம் ஆசையை வளர்ப்பவன் (காமக்ருத்:), தன் திருமேனி அழகாலும், திரு குணங்களாலும் நம்மை வசீகரிப்பவன் (காந்த:), பக்தர்களை தன் மீது பக்திகொள்ள வைத்து பித்தராக ஆக்குபவன் (காம:), தர்ம, அர்த்த, காம, மோக்ஷங்களெனும் புருஷார்த்தங்களை அளிப்பவன் (காமப்ரத:), நம் மனதைக் கவர்ந்து, ஆக்ரமித்து, நம் ஸ்வாமியாய் இருப்பவன் (ப்ரபு:)
युगादि कृद् युगा वर्तो नैक मायो महाशनः ।
अदृश्यो व्यक्त रूपश्च सहस्र जिद नन्त जित् ॥ ३३॥
யுகாதி க்ருத் யுகா வர்தோ
நைக மாயோ மஹாஸன: |
அத்ருஸ்யோ வ்யக்த ரூபஸ்ச
ஸஹஸ்ர ஜித்அநந்த ஜித் || 33
Yugaadhi-krudh yugaa vartho
naika-maayo mahaa-shanah |
Adhrushyo vyaktha-roopaschha
sahasra jith anantha jith ||
ப்ரளயத்துக்கு பின் மறுபடி ஸ்ருஷ்டியைத் தொடங்குபவன் (யுகாதிக்ருத்), யுகங்களை மறுபடியும் மறுபடியும் ஏற்படுத்தி காலசக்கரத்தை சுழற்றுபவன் (யுகா வர்த்த:), ஒரு மாயம் தான் என்றில்லாமல் அநேக மாயச்செயல்களைச் செய்பவன் (நைகமாய:), ப்ரளய காலத்தில் உலகை தன்னுள் ஏற்ற உலகம் உண்ட பெருவாயன் (மஹாசன:), பக்தி கண்களாலன்றி நம் மாமிச கண்களால் காணமுடியாதவன் (அத்ருச்ய:), பக்தியுள்ள அடியார்க்கு தன் திவ்ய திருமேனியை நன்கு தரிசிக்க வைப்பவன் (வ்யக்த ரூப:), ஆயிரமாயிரம் ப்ரளயங்களையும் தாண்டி அழிவில்லாது நிற்பவன் (ஸஹஸ்ர ஜித்:), முடிவில்லா மகிமைகளை உடையவன் (அனந்த ஜித்:).
इष्टोऽ विशिष्टः शिष्टेष्टः शिखण्डी नहुषो वृषः ।
क्रोधहा क्रोध कृत्कर्ता विश्व बाहुर् महीधरः ॥ ३४॥
இஷ்டோஷ் விஸிஷ்ட: ஸிஷ்டேஷ்ட:
ஸிகண்டீ நஹுஷோ வ்ருஷ: |
க்ரோதஹா க்ரோத க்ருத் கர்தா
விஸ்வபாஹுர் மஹீதர: || 34
Ishto-vishishta shishteshtah
shikhandee nahusho vrushah |
Krodhahaa krodha-kruth karthaa
vishva-baahur maheedharah ||
எவ்வித வித்யாஸமுமின்றி எல்லோரையும் தாய் போல நேசிப்பவன் (இஷ்ட, அவிசிஷ்ட:), சிஷ்டர்களான அடியார்களால் பெரிதும் விரும்பப்படுபவன் (சிஷ்டேஷ்ட:), எல்லையற்ற தேஜஸை உடைய கிரீடத்தை புகழை அணிந்தவன் (சிகண்டீ:), இயற்கை என்னும் பல அழகுகளை இவ்வுலகில் தோற்றிவித்திருப்பவன் (நஹுஷ:), மேகமாய் இருந்து நம்மீது அருள் மழை பொழிபவன் (வ்ருஷ:), தர்மத்தை அழிப்பவர்களைத் தான் அழித்து கோபம் தணியப் பெற்றவன் (க்ரோதஹா:), தர்மத்தை, தர்மத்தை காப்பவர்களை அழிக்க நினைப்பவர்களை கண்டு கோபிப்பவன் (க்ரோதக்ருத்:), நாம் செய்த பாப புண்யங்களுக்கேற்ப நம்மை நடத்துபவன் (கர்தா:), உலகங்களையெல்லாம் ஸ்ருஷ்டித்த திருக்கைகளை உடையவன் (விச்வபாஹு:), பூமியின் பாரங்களை அழித்து பூமி தரித்து நிற்கும்படி செய்பவர் (மஹீதர :).
अच्युतः प्रथितः प्राणः प्राणदो वासवानुजः ।
अपां निधिर धिष्ठान मप्रमत्तः प्रतिष्ठितः ॥ ३५॥
அச்யுத: ப்ரதித: ப்ராண:
ப்ராணதோ வாஸவா நுஜ: |
அபாம்நிதி அதிஷ்டானம்
அப்ரமர்த்த: ப்ரதிஷ்டித: || 35
Achyutha-prathithah praanah
praanadho vaasavaa nujah |
Apaam nidhira dhishtaana
mapra-maththah prathishtithah ||
பக்தர்களை கை விடாதவன் (அச்சுத:), பக்தர்களைக் கைவிடாதவன் என்று புகழ் பெற்றவன் (ப்ரதித:), அடியார்களுக்கு உயிராய் இருப்பவன் (ப்ராண:), அடியார்களுக்கு உயிரளிப்பவன். தேவர்களுக்கு ஆமையாய் இருந்து அமுதம் ஈந்தவன் (ப்ராணத:), தன் அடியவனான இந்திரனுக்கு தம்பியாய் இருந்தவன் (வாஸவா நுஜ:), திருப்பாற்கடலுக்கு நிதியாய் இருப்பவன் (அபாம் நிதி:), கடலைக் கடைய மந்த்ர மலைக்கு ஆஸனமாய் முதுகை கொடுத்தவன் (அதிஷ்டானம்:), தன்னை சரணடைந்தோரைக் காப்பதில் மிகுந்த ஊக்கமுடையவன் (அப்ரமர்த்த:), மந்த்ர மலைக்கு மட்டுமல்லாமல், எல்லாவற்றிற்கும் ஆதாரமாய் இருப்பவன் (ப்ரதிஷ்டித:).
स्कन्दः स्कन्दधरो धुर्यो वरदो वायुवाहनः ।
वासुदेवो बृहद् भानु रादिदेवः पुरन्दरः ॥ ३६॥
ஸ்கந்த: ஸ்கந்த தரோ துர்யோ
வரதோ வாயு வாஹன: |
வாஸுதேவோ ப்ருஹத் பானு:
ஆதிதேவ: புரந்தர: || 36
Skandhah skandha-dharo dhuryo
varadho vaayu-vaahanah |
Vaasudhevo bruhadh bhaanuh
aadhi devah purandharah ||
தீயோரை அழிப்பவன். அழிக்கும் கடவுளும் இவனே (ஸ்கந்த:), மற்ற தெய்வங்களையும் தாங்கி நடத்தும் தெய்வ நாயகன் (ஸ்கந்த தர:), அகில புவனத்தையும் தாங்கி நடத்திச்செல்லும் ஒரே பரப்பரம்மம் (துர்ய:), உலகத்தின் அன்றாட வேலைகளை கவனிக்கும் தேவர்களுக்கு அதற்குரிய ஸாமர்த்யத்தைத் தருபவன். (வரத:), ப்ரானவாயுவை நம் வரை நடத்தித் தந்து உலகுக்கு ஓருயிராய் இருப்பவன் (வாயு வாஹன:). எங்கும் வஸிப்பவன். எல்லா ஆத்மாக்களிலும் நிறைந்திருப்பவன் (வாஸுதேவ:), நாம் காணும் சூரியன், இவன் ஒளியில் ஒரு பங்கே என்னும்படி நினைப்பவன் (ப்ருஹத் பானு:), உலகங்களுக்கெல்லாம் காரணமான ஆதி முதல்வன் (ஆதி தேவ:), நம் இல்லங்களுக்கு ஆதாரமாய் இருந்து நமக்கு நல் வாழ்வு கொடுப்பவன் (புரந்தர:).
अशोकस् तारणस् तारः शूरः शौरिर् जनेश्वरः ।
अनुकूलः शतावर्तः पद्मी पद्म निभेक्षणः ॥ ३७॥
அஸோகஸ் தாரணஸ்-தார:
சூர செளரிர் ஜனேஸ்வர: |
அனுகூல: ஸதா வர்த:
பத்மீ பத்ம நிபேக்ஷண: || 37
Ashokas thaaranas thaarah
soora-shaurir janesh varah |
Anu-koola sadhaa-varthah
padhmee padhma-nibhekshanah ||
நம் துன்பங்களை அழித்து நம்மை சந்தோஷமாக வைப்பவன் (அசோக:), இந்த ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவிப்பவன். நமக்கு மோக்ஷம் தருபவன் (தாரண:), நம்மை ரக்ஷிப்பவன். நம் பாபங்களை விலக்குபவன் (தார:), ஸுலபமாக வெற்றி அடைபவன். நமக்கு வெற்றியளிப்பவன் (சூர:), மாவீரனான தசரதனின் குமாரன் (சௌரி:), எல்லா மக்களுக்கும் ஈச்வரனாய் இருப்பவன் (ஜனேஷ்வர:). நல்லோர்க்கு கட்டுபட்டவன். யசோதை கட்ட, தானே கட்டுண்டவன் (அனுகூல:), சுழன்று பெருகி ஓடும் நதிபோல், நற்குணப் பெருக்கை உடையவன் (ஸதா வர்த்த:), நாபியில் தாமரையை உடைவன் (பத்மீ:), நம் பாபங்களை விலக்கும் இனிய பார்வையை உடையவன் (பத்ம நிபேக்ஷண:)
செல்வ மகளான மஹாலக்ஷ்மீயை திருமார்பில் கொண்ட திருச்செல்வன் (மஹர்தி:), அடியார்களின் ஸ்ம்ருத்தியைக் கண்டு ஸந்தோஷிப்பவன் (ருத்த:), ஸகல ஆத்மாக்களையும் படைத்த பரமாத்மா (வ்ருத்தமா:), வேதாத்மாவான கருடனை ரதமாகக் கொண்டவன் (மஹாக்ஷ:), அந்தக் கருடனை தன் கொடியாகவும் கொண்டவன் (கருடத்வஜ:)
अतुलः शरभो भीमः समयज्ञो हविर्हरिः ।
सर्व लक्षण लक्षण्यो लक्ष्मीवान् समितिञ् जयः ॥ ३९॥
அதுல: சரபோ பீம:
ஸம யக்ஞோ ஹவிர் ஹரி: |
ஸர்வ லக்ஷண லக்ஷண்யோ
லக்ஷ்மீ வான் ஸமிதிஞ் ஜய: || 39
Athula-sharabho bheemah
sama-yagyo havir-harih |
Sarva lakshana lakshanyo
lakshmeevan samithinj jayah ||
ஒப்பற்றவன். தனக்கு நிகராக யாரும் இல்லாதவன் (அதுல :), அழிப்பவன். வரம்புகள் மீறுவோரை அழிப்பவன் (சரப :), தவறு செய்தோர் மனதில் பயமூட்டுபவன் (பீம:), காலமறிந்தவன். காத்திருந்து தக்க காலத்தில் நமக்கு உதவுபவன் (ஸமயக்ஞ:), நாம் செய்யும் ஹோமங்களை ஏற்பவன் (ஹவிர் ஹரி:), எல்லா லக்ஷணங்களும் பொருந்திய பேரழகன் (ஸர்வலக்ஷண லக்ஷண்ய:), திருமகள் நாதன். ஸ்ரீமான் என்ற சொல்லுக்கு பொருத்தமானவன் (லக்ஷ்மீவான்:), நமக்கு நற்புத்தியைக் கொடுத்து நம்மை ஆட்கொள்பவன் (ஸமிதிஞ்ஜய:)
विक्षरो रोहितो मार्गो हेतुर् दामोदरः सहः ।
महीधरो महाभागो वेग वान मिताशनः ॥ ४०॥
விக்ஷரோ ரோஹிதோ மார்கோ
ஹேதுர் தாமோதர: ஸஹ: |
மஹீதரோ மஹாபாகோ
வேக வாந மிதாசன: || 40
Viksharo rohitho maargo
heythur-dhaamodhara sahah |
Mahee-dharo mahaa-bhaago
vega vaana-mithaashanah ||
குறையற்றவன். எல்லா செல்வங்களும் உடையவன். மென்மையான திருக் குணங்களை உடைவன். குறை ஏதும் இல்லாதவன். பக்தர்களிடம் குறை காணாதவன். நீங்காத அன்புள்ளவன் (விக்ஷர:),செந்தாமரைக் கண்ணும், சிவந்த பாதங்களும், பழுத்தகனிப் போன்ற அதரங்களையுடையவன் (ரோஹித:), அவனே நாம் வாழ வேண்டிய வழி காட்டுபவன். வழித் துணைவன் (மார்க:), நாம் வாழ்வதற்கு ஒரே காரணமாய் இருப்பவன் (ஹேது:), யசோதையினால் உரலுடன் சேர்த்துக் கட்டப்பட்டவன். பக்தர்களுக்காக திருக் கோயிலில் கட்டுண்டு கிடப்பவன் (தாமோதர:), பொறுமை உள்ளவன். நாம் செய்யும் அபசாரங்களைப் பொறுப்பவன் (ஸஹ:), பூமியைத் தாங்குபவன். தீயோர்களை அழித்து மன பாரம் நீக்குபவன். (மஹீதர:), மஹாலக்ஷ்மீ விரும்பும் மஹாபாக்யம் உடையவன் (மஹாபாக:), ஆதிமூலமே என்றழைத்து மாத்திரத்தில் வேகமாய் ஓடி வந்து காத்தவன், கோவிந்தா என்று திரௌபதி அழைத்ததும், உடனே காத்தவன் (வேகவான்:), சிறிதேயானாலும், பெரிதேயானாலும் நம் நைவேத்யத்தை ஏற்பவன் (அமிதாசன:).
उद्भवः क्षोभणो देवः श्रीगर्भः परमेश्वरः ।
करणं कारणं कर्ता विकर्ता गहनो गुहः ॥ ४१॥
உத்பவ: க்ஷோபனோ தேவ:
ஸ்ரீகர்ப: பரமேஸ்வர: |
கரணம் காரணம் கர்தா
விகர்தா கஹனோ குஹ: || 41
Udhbhavah shobhano dhevah
shree-garbhah parameshvarah |
Karanam kaaranam karthaa
vikarthaa gahano guhah ||
மெய் ஞானம் கொடுத்து பக்தர்களின் ஸம்ஸார பந்தங்களை நீக்குபவன் (உத்பவ:), பக்தர் அல்லாதோரின் மனதை அஞான இருள் சூழ்ந்து வைத்திருப்பவன் (க்ஷோபன:), லீலைகள் புரிந்து விளையாடுபவன் (தேவ:), திருமகளைப் பிரியாதவன் (ஸ்ரீ கர்ப:), பெரு மேன்மை உடையவன் (பரமேஸ்வர:), நாம் முக்தி அடைய ஸாதனமாகவும், காரணமாகவும் இருப்பவன் (கரணம்:), உலகங்களின் செயல்பாடுகளுக்கு எல்லாம் காரணமாய் இருப்பவன் (காரணம்:), நாம் செய்யும் காரியங்களை நம் வினைக்கேற்ப செய்விப்பவன் (கர்தா:), மாயைகளில் சிக்கி சீரழியும் ஆத்மாக்களைக் கண்டு துக்கம் அடைபவன் (விகர்தா:), பக்தர்கள் அல்லாதவர்களால் புரிந்து கொள்ள முடியாதவன் (கஹன்:), காக்கும் இயல்பு கொண்டவன். நம் எல்லோருக்கும் ரக்ஷகன் (குஹ :)
व्यवसायो व्यवस्थानः संस्थानः स्थानदो ध्रुवः ।
परर्द्धिः परम स्पष्ट स्तुष्टः पुष्टः शुभेक्षणः ॥ ४२॥
வ்யவ ஸாயோ வ்யவ ஸ்தான:
ஸம் ஸ்தான: ஸ்தானதோ த்ருவ: |
பரர்த்தி: பரம ஸ்பஷ்ட :
துஷ்ட: புஷ்ட: சுபேக்ஷண: || 42
Vyava-saayo vyava sthaanah
sam sthaanah sthaanadho dhruvah |
Parardhdhih parama-spashta
thushtah pushtah-shubhekshanah ||
நக்ஷத்திரங்களுக்கெல்லாம் ஆதாரமாய் ஆகாயமே தன் சரீரமாக உள்ளவன் (வ்யவஸாய:), காலவரையரைகளுக்கும் ஆதாரமாய் எல்லா க்ரஹங்களையும் நடத்துபவன் (வ்யவஸ்தான:), எல்லாவற்றையும் ப்ரளய காலத்தில் முடிவடையச் செய்பவன்.(ஸம்ஸ்தான:), ப்ரளயத்தில் அழியும் எல்லாவற்றிற்கும் தன் வயிற்றில் இடம் அளிப்பவள். (ஸ்தாநத:), எல்லாவற்றையும் அழித்து, தானொருவனே நிலையாய் இருப்பவன் (த்ருவ:)மேலான திருக்கல்யாண குண பூர்த்தியுள்ளவன் (பரர்த்தி:), அவனே பரம்பொருள் என்று ஸ்பஷ்டமாய் தெளிவாய் தெரிபவன் (பரம ஸ்பஷ்ட:), ஆனந்தமே உருவானவன். வனவாசத்தையும் களிப்புடன் ஏற்பவன் (துஷ்ட:), எந்நிலையிலும் வாடாதிருப்பவன் குணங்களால் பரிபூர்ணமாவன் (புஷ்ட:), மங்களகரமான திருக்கண்களால் நமக்கு அருள் செய்பவன் (சுபேக்ஷண:)
रामो विरामो विरतो मार्गो नेयो नयोऽनयः ।
वीरः शक्तिमतां श्रेष्ठो धर्मो धर्म विदुत्तमः ॥ ४३॥
ராமோ விராமோ விரதோ
மார்கோ நேயோ நயோ நய: |
வீர: ஸக்தி மதாம் ஸ்ரேஷ்ட்டோ
தர்மோ தர்ம விதுத்தம: || 43
Raamo viraamo viradho
maargo neyo nayo-nayah |
Veera-shakti-mathaam shreshto
dharmo dharma-vidhuth-thamah ||
தன்னைக் காண்பவர் யாவரையும் மகிழ்விப்பவன், ரமிக்க செய்பவன் (ராம:), தன்னை எதிர்ப்பவர்களை வெற்றிக் கிட்டாமல் ஓய்ந்து போகும்படிச் செய்பவன் (விராம:), பக்தர்களுக்கு எல்லாம் கொடுத்தும் தான் ஏதும் எதிர் பார்க்காதவன் (விரத:), பக்தர்களால் விரும்பித் தேடப்படுபவன் (மார்க்க:), பக்தர்களுக்கு கட்டுப்பட்டவன் (நேய:), அடியார்களை வைகுண்டம் அழைத்து செல்பவன் (நய:), பக்தர்களல்லாதாரால் அணுக முடியாதவன் (அநய:), எதிரிகளை பயத்தால் நடுங்க செய்பவன் (வீர:), சக்தி படைத்தவர்களுள் மிகச் சிறந்தவன் (சக்தி மதாம் ச்ரேஷ்ட:), தர்மமே வடிவெடுத்தவன் (தர்ம:), தர்மத்தை நன்கறிந்தவன். தானே முன் உதாரணமாய் நிற்பவன் (தர்ம விதுத்தம:)
தடைகளைப் போக்கி நம்மை தன்னிடம் சேர்த்துக் கொள்பவன் (வைகுண்ட:), காலத்துக்கும், தேசத்துக்கும், பொருளுக்கும் கட்டுப்படாதவன் (புருஷ:), நமக்கு மிகவும் வேண்டியவன் (ப்ராண:), அந்தர்யாமியாய் இருந்து நம்மை உயிருடன் இருக்க செய்பவன் (ப்ராணத:), தன் மேன்மை பொருந்திய திருக்குணங்களால் நம் வணக்கத்துக்கு உரியவன் (ப்ரணவ:), எல்லா புகழுக்கும் உரியவன் (ப்ருது:), அடியார்க்கு வேறு செல்வம் வேண்டாத படி பொக்கிஷமாய் இருப்பவன் (ஹிரண்யகர்ப:), விரோதிகளை முடிப்பவன் (சத்ருக்ன:), எங்கும் வியாபித்து இருப்பவன். பக்தர்கள் பால் அன்பு நிறைந்தவன் (வ்யாப்த:), எங்கும் சென்று காட்சி தருபவன் (வாயு:), நாம் எவ்வளவு அனுபவித்தாலும் குறையாதவன் (அதோக்ஷஜ:)
வேதங்களின் மூலம் எல்லாவற்றையும் விரிவாக சொல்பவன் (விஸ்தார:), அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய பிறகே ஓய்வெடுப்பவன். இதை காக்கும் தொழிலாக கொண்டவன் (ஸ்தாவர ஸ்தானு:), எது நன்மை, எது தீமை என்று அறிய, தானே சான்றாக இருப்பவன் (ப்ரமாணம்:), அழியாத வித்தாய் இருந்து தர்மத்தை மறுபடியும் முளைக்க செய்பவன் (பீஜமவ்யயம்:), நம் பிறவியின் பயனாய் இருப்பவன். நாம் அடைய வேண்டியவன் இவனே (அர்த்த:), அற்ப பலன்களை, சிற்றின்பங்களை விரும்புவோருக்கு, பொருளற்றவன், பொல்லாதவர்க்கு அனர்த்தத்தை விளைவிப்பவன் (அனர்த்த:), எவ்வளவு அனுபவித்தாலும் அழியாத செல்வமாய் இருப்பவன் (மஹா கோஸ:), பேரின்பத்தை அளிப்பவன் (மஹா போக:), அறம்,பொருள், இன்பம்,வீடு- நான்கு புருஷார்த்தங்களையும் தருபவன் (மஹா தன:)
अनिर्विण्णः स्थविष्ठो ऽभूर् धर्मयूपो महामखः ।
नक्षत्र नेमिर् नक्षत्री क्षमः क्षामः समीहनः ॥ ४७॥
அநிர்விண்ண: ஸ்தவிஷ்டோ பூர்-
தர்ம யூபோ மஹாமக: |
நக்ஷத்ர நேமிர்-நக்ஷத்ரீ
க்ஷம: க்ஷாம: ஸமீஹன: || 47
Anir-vinnah sthavishto bhooh
dharma-yoopo mahaa-makhah |
Nakshatra-nemir-nakshathree
kshamah kshaamah-samee-hanah ||
நாம் அவன் பக்தனாக ஆகும்வரை சோர்வில்லாமல் முயல்பவன் (அனிர்விண்ண:), பெருத்தவன், த்ரிவிக்ரமனாய் உலகமெங்கும் வியாபித்திருப்பவன் (ஸ்தவிஷ்ட:), உலகங்கள் அனைத்தையும் தாங்குபவன் (பூ:), தர்ம ஸ்வரூபமாய் இருப்பவன் (தர்மயூப:), யக்ஞ ஸ்வரூபமாய் இருப்பவன் (மஹாமக:)