Followers

Search Here...

Showing posts with label மாட்டு இறைச்சி. Show all posts
Showing posts with label மாட்டு இறைச்சி. Show all posts

Monday 14 January 2019

பசுவதையை பாரத மக்கள் எதிர்க்க காரணம் என்ன? மனித பண்புள்ள ஹிந்துக்கள் என்ன செய்ய வேண்டும்? கொஞ்சம் அலசுவோம்...

பாற்கடலில் தோன்றிய காமதேனு, பகவான் விஷ்ணுவை ஆச்ரயித்தாள்.
பகவான் காமதேனுவுக்கு கோலோகம் என்ற லோகத்தை ஸ்ருஷ்டி செய்து அங்கு இருக்க அணுகிரஹம் செய்தார்.



பகவான் சொன்னபடி பூவுலகில் எங்கும் பசு மாடுகள், ரிஷபங்கள் ஸ்ருஷ்டி செய்தாள்.
உலகத்திலேயே அழகான மிருகம் பசுக்கள் தானே !!
பசுவை போல, மானும் அழகான மிருகம் என்ற போதிலும், மானால் அனைவருக்கும் உபயோகம் இல்லை.

ஒவ்வொரு மிருகத்தின் கண்களிலும் ஒரு குணம் வெளிப்படும்.
நாயின் கண்களில் நன்றி தென்படும்.
பசுவின் கண்களில் தாய் உள்ளம் தென்படும்.

பசுக்களின் உபயோகத்தையோ, சொல்லி மாளாது...
அந்த பசுவில் உண்டாகும் "பால்" நமக்கு உபயோகம் தருகிறது.
அந்த பாலில் இருந்து உருவாகும், தயிர், மோர், வெண்ணெய், நெய் என்று கடைசி சொட்டு வரை நமக்கு உபயோகம் தருகிறது.

பசு, சாணி போட்டாலும் நமக்கு உபயோகம்.
சாணியை காய வைத்து எரித்தாலும், அந்த சாம்பல் கூட நமக்கு உபயோகம் தருகிறது.

பசு மூத்திரம் கூட மருந்தாக நமக்கு உபயோகம் தருகிறது.
பசுவின் சாணி மண்ணில் விழுந்தாலும், மண்ணுக்கு உரமாகி நமக்கு பயிர் செய்ய உபயோகம் தருகிறது.
பசு காளை கன்றுகுட்டி ஈன்றாலும் விவசாயத்திற்கும், வண்டி இழுக்கவும் நமக்கு உபயோகம் தருகிறது.
பசு கிடாகன்று குட்டி ஈன்றாலும், அடுத்தபடி பால் கறக்க நமக்கு உபயோகம் தருகிறது.

உபயோகம் இல்லாத ஒரு பொருளும் பசுவினிடத்தில் இல்லை.

இப்படி எந்த விதத்திலும்,
பிறருக்காகவே பிறந்து,
பிறருக்காகவே வாழ்கிறது பசுக்கள்.

பிறருக்காகவே பிறந்து,
பிறருக்காகவே வாழ்பவர்களை
"தெய்வமாக" நினைக்காதவன் மனித பண்பு உள்ளவனா?


இப்படி எந்த விதத்திலும்,
பிறருக்காகவே பிறந்து,
பிறருக்காகவே வாழும் பசுக்களை,
கண் எதிரே உள்ள தெய்வமாக மனித பண்புள்ள ஹிந்துக்கள் கொண்டாடுவது ஆச்சர்யமில்லையே.
வேத தர்மத்தில் உள்ள ஹிந்துக்கள், உயர் மனித பண்பு உள்ளவர்கள் ஆயிற்றே.

இந்த பசுவிடமிருந்து 5 அம்ருதங்கள் நமக்கு உபயோகம் ஆகிறது என்கிறது வேத சாஸ்திரம்.
பால், தயிர், வெண்ணெய், கோமியம், கோமூத்திரம்.
இது அனைத்தும் ஆரோக்கியத்தை தர வல்லது.
தெய்வங்கள், பசுவில் உண்டான பால், தயிரால் செய்யப்படும் அபிஷேகத்தை மகிழ்ச்சியுடன் ஏற்கின்றனர்.
பசுவின் பாலை எடுத்து, தனக்கு அபிஷேகம் செய்தவனுக்கு, தெய்வங்கள் அணுகிரஹம் செய்கின்றனர்.

பிறருக்காகவே வாழும் பசுவை, வேதத்தில் உள்ள தெய்வங்கள் கொண்டாடுகின்றனர்.

தெய்வங்களே தன் தலையில் வைத்து கொண்டாடும் பசுவை, மனித பண்பு உள்ள மனிதன் வழிபடாமல் எப்படி இருப்பான்?

இப்படி பசுக்கள் நம் அனைவருக்கும் கண்ணெதிரே தெய்வமாக இருந்து, பிறருக்காகவே பிறந்து,
பிறருக்காகவே வாழ்ந்து, 
பிறருக்காகவே சஞ்சரித்து வருகிறது.

பசு மாட்டின் சாணத்தை எடுத்து வீட்டை அலம்பினால், அந்த வீடு மங்களம் அடைகிறது என்கிறது சாஸ்திரம்.
கிருமி நாசினியாக உள்ளது மாட்டின் மலம் கூட.

ஒரு வேளை, பச்சிளம் குழந்தை பிறந்து, தாய் இறந்து விட்டால் கூட, அந்த தாய் ஸ்தானத்தில் இருந்து, பசுமாடு தன் பாலை (கோ பால்) கொடுக்கிறது.
அந்த பசும்பாலை கொடுத்து, அந்த குழந்தையை வளர்த்து விடலாம்.
மற்ற எந்த மிருகத்தின் பாலும் பசுவின் பாலுக்கு ஈடு இல்லை. ஆரோக்கியமும் இல்லை.

தாயில்லாத குழந்தைகளுக்கு தாயாக பசு இருக்கிறது.
அது மட்டுமா?
தாயுள்ள குழந்தைகளுக்கும் தாயாக பசு இருந்து, தன் பாலை கொடுக்கிறது.
அது மட்டுமா?
அந்த தாய்க்கும், தாயாக பசு இருந்து, தன் பாலை கொடுக்கிறது.






தாய் சிறிது காலம் தான் பால் தருகிறாள் தன் குழந்தைக்கு. 
ஆனால்,
உலகத்தில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் பிறந்தது முதல் கடைசி மூச்சு வரை, அனைவருக்கும் தாயாக இருந்து, பசு தன் பாலை கொடுக்கிறது.
மனித பண்புள்ள ஹிந்துக்கள் பசுவை "கோமாதா" என்று தானே சொல்வார்கள்.

நாம் அனைவரும் அந்த பசுவின் பாலை குடிக்கிறோம் என்பதால் தானே, பசுவை தன் தாய்க்கும் மேல் மதித்து "கோமாதா"என்று சொல்கிறோம்.
நம்மை தாய் போல வளர்கிறதே பசுக்கள்.

குழந்தை, குமரன், குமரி, வயதானவர்கள் என்று எல்லோரும் அந்த பசுவின் பாலை தானே குடிக்கிறோம்.
நம்மை பெற்ற தாய் கூட, ஓரிரு வருடங்கள் தான், தன் பாலை கொடுத்து வளர்க்கிறாள்.

பசுவோ, நம் வாழ்நாள் முழுக்க தாயாக இருந்து, நமக்கு பால் கொடுக்கிறதே.
புத்தியுள்ளவன், நன்றியுள்ளவன், மனித இதயம் உள்ளவன், பசுவுக்கு தன் தாய்க்கு கொடுக்கும் மரியாதையை தராமல் இருப்பானா?

எல்லா மனிதர்களுக்கும் பசுக்கள், தாயாக பால் கொடுக்கிறது.
தான் சிறு குழந்தையாக இருந்த போது, தன் தாயிடம் பால் குடித்து, பால் குடித்து வளர்ந்து விட்டான்.

அந்த தாய் பால் கொடுக்க முடியாத பின், அவனுக்கு சாதம், சாதமாக போட்டு, பெரியவனாக வளர்த்து விட்டாள்.
இப்பொழுது வயதாகி, முடியாத நிலைக்கு வந்து விட்டாள்.
இவள் நன்றாக இருக்கும் வரை இவளிடம் பால் குடித்து, பின்னர் இவள் கையால் சாதம் சாப்பிட்டு, இனி இவளால் இவனுக்கு ப்ரயோஜனமில்லை என்றதும்,
"சனியன், இது உயிரோடு இருந்து தொந்தரவாக உள்ளது.. இது இனிமேல் வீட்டுக்கு சுமை தான். இவளை வைத்துக்கொண்டு இனி எவன் சோறு போடுவான்? ஏதாவது அனாதை ஆசிரமம் இருந்தால் இந்த கிழவியை அனுப்பி விடலாமா?"
என்று நன்றியில்லாத அவன் நினைப்பது போல,
காலம் முழுக்க "பசுவுடைய பாலை குடித்து விட்டு", அந்த பசு வயதாகி இனி பால் கொடுக்காது என்றதும்,
"இது மலட்டு மாடாகி போய் விட்டது. இது இனிமேல் வீட்டுக்கு சுமை. இதை வைத்துக்கொண்டு இனி எவன் தீனி போடுவான்? இதை கொலைகாரன் எவனுக்காவது கொடுத்து காசு வாங்கி கொள்ளலாம். அவன் இந்த மாட்டை எங்கோ இழுத்து கொண்டு போய் கொலை செய்து கொள்ளட்டும்"
என்று நினைப்பவன், எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சம் உடையவனாக, நெஞ்சில் துளியும் இரக்கம் இல்லாதவனாக இருக்க வேண்டும்?

மனித இதயம் செய்யக்கூடிய காரியமா இது?



இருக்கும் வரை தாயின் பாலை, உழைப்பை உறிஞ்சி விட்டு,
அனாதையாக விடுபவன்,
உழைக்கும் வரை உழைப்பையும், பாலையும் உறிஞ்சி விட்டு,
மாட்டை கொலைகாரன் கையில் கொடுத்து, காசுக்கு விற்பவன்,
மனித இதயம் உள்ளவனா?
மனித இதயம் உள்ள ஒருவன் இப்படி செய்வானா?

பசுக்களை அதன் கடைசி காலம் வரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் வேண்டாமா?
பெற்றவர்களை கடைசி காலம் வரை காக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டாமா?
இது தானே மனித பண்பு !!

அந்த காலங்களில் ஒவ்வொரு கிராமங்களிலும்,
வயதான பசுக்களை வைத்து காப்பாற்ற முடியாதவர்களுக்காக, அந்த ஊரில் உள்ள செல்வந்தர்கள் சேர்ந்து "பசு மடம்" கட்டி வைத்து இருப்பார்கள்.
தானே ரக்ஷிக்க முடியாத நிலையில், வயதான பசுவை "பசு மடத்தில்" விடுவார்கள்.
ஊரில் உள்ள செல்வந்தர்கள், பசுமடங்களில் உள்ள பசுக்களை கடைசி வரை காப்பாற்றுவதை கடமையாக நினைத்தனர்.

இந்த தர்மங்கள் எல்லாம் இப்போது எங்கே போனது நம் நாட்டில்?
இன்று உள்ள செல்வந்தர்களிடம் இது போன்ற தர்மங்கள் காணப்படவில்லையே !!
அரசாங்கமும் பசுக்களை காக்க வேண்டும் என்று நினைக்கவில்லையே? 

மனித உயிர்கள் மட்டும் தான் மதிப்பா? எங்கே போனது மனித பண்பு?

மனித பண்பு உள்ள எவனும் பசுவை கொல்வது தாயை கொல்வதற்கு சமம் என்று நினைப்பானே?

பஞ்சமர்கள், மிலேச்சர்கள், வாலிகர்கள் போன்றவர்களில் உள்ள மனித பண்பு இல்லாதவர்கள், இது போன்ற காரியங்களை தன் வயிறு வளர்க்க செய்கின்றனர்.

பஞ்சமர்கள் யார்?  Panchama படிக்கவும்.

மிலேச்சர்கள், வாலிகர்கள் யார்? Mlecha_Vahlika படிக்கவும்.

இன்றைய உலகில் பால் கறக்கும் மாடுகள் தென்படுகிறதே தவிர, வயதான கிழ மாடுகள் தென்படுவதே இல்லையே?

பசு மடங்கள் வைத்து பரிபாலிக்க "செல்வந்தர்களும்" முன் வரவில்லை இன்று.
இந்த கிழ மாடுகள் எங்கே போகின்றன?



லாரிகளில் ஏற்றி கசாப்பு கடைக்கு அனுப்பப்படும் அவலம், கலாச்சார சீர்கேடு, 
மனித பண்புக்கு பெயர் எடுத்த பாரத தேசத்தில் நடந்து கொண்டு இருக்கிறதே?

இதை பார்க்கும் மனித இதயம் கொண்ட சாதுக்கள், கண்ணீர் விடுகின்றனர்.
சில சாதுக்கள் சேர்ந்து கொண்டு, தங்களால் முடிந்த வரை பசுக்களை காக்கின்றனர்.
மனித இதயம் பாரத தேசத்தில் உள்ளவர்களுக்கு எங்கே போனது?

நாட்டு மக்களுக்கும் இந்த அவலத்தை பார்த்து சொரணை இல்லை. அரசும் இந்த அவலம் நடக்க அனுகூலம்.

அப்படி கொலை செய்ய மாடு, மற்ற மிருகங்களை போல துஷ்ட மிருகமா?
தன் வாழ்நாள் முழுவதும் உனக்கு எத்தனை உபயோகமாக இருந்தது !!

மனிதனுக்கு மனிதனே நன்றி கெட்ட பிறகு,
பெற்றெடுத்த அப்பா, அம்மாவிடமே, பிள்ளை நன்றி கெட்டவன் ஆன பிறகு,
மாட்டிடமா நன்றி இருக்க போகிறது?

ஹிந்துக்கள் ஹிந்துக்களாக இல்லையே !!

உயர்ந்த பண்பு கொண்டிருந்த ஹிந்துக்கள், சுயநலமே குணமாகி இப்படி ஆகி இருக்கிறார்களே!!
என்று மனம் வருந்தி, கண்ணீர் விடுகிறார்கள் சாதுக்களும், மகான்களும்.
பசுக்களிடம் அனைத்து தெய்வங்களும் குடி கொண்டுள்ளனர்.

பசுவை தெய்வமாக நினைத்து, தினமும் குளிப்பாட்டி, அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு, பசுவை வலம் வந்து நமஸ்கரித்து, கோமாதாவாக வழிபட்ட காலங்கள் போய் விட்டதே !!
ஜீவ காருண்யம் கொண்ட ஹிந்துக்கள் உள்ள இந்த பாரத தேசத்தில், பசுக்கள் சித்ரவதை செய்யப்படுவதை தடுக்க வேண்டும்.

செல்வந்தர்களும் தினமும் மாட்டின் பால், தயிர், வெண்ணெய் குடிப்பவர்கள் தானே? ஒரு குழுவாக சேர்ந்து கிராமம் கிராமமாக பசு மடங்கள் ஏற்படுத்தி, பால் கறக்காத மாடுகள் மாட்டு இறைச்சி தின்று வயிறு வளர்ப்பவனிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
மாட்டு இறைச்சி தின்பவன், நாயையும், பன்றியையும் தின்று வாழட்டுமே !!

மாட்டு இறைச்சி தின்பவன் கீழ் நிலை கொண்ட நன்றி கெட்டவன்.

இவர்களை சட்டத்தாலும் ஒடுக்க வேண்டும்.
மாடுகள் இவர்கள் கையில் சிக்காமல் இருக்க, செல்வந்தர்கள் கூடி வந்து பசு மடங்கள் அமைத்து, பசுக்கள் தங்கள் வாழ்நாளை முழுவதும் நன்றி கெட்டவர்கள் கையில் சிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

சிந்திக்க வேண்டும், மனித இதயம் உள்ள ஹிந்துக்கள்.
தாயை கொன்றதற்கு சமமான பசு வதை நடக்க இந்திய மக்களில் ஒருவன் கூட காரணமாக இருக்க கூடாது.

ஹிந்துக்களே பண்புள்ளவர்கள்.
ஹிந்துக்களே மனித பண்புள்ளவர்கள்.
பசுவை தாய்க்கு சமமாக மதித்த இந்திய மக்கள், கிராமம் கிராமமாக பசு மடங்கள் அமைய, அமைக்க முயற்சிக்க வேண்டும். 

HARE RAMA HARE KRISHNA - Bhajan

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 



sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka