Followers

Search Here...

Showing posts with label self introduction. Show all posts
Showing posts with label self introduction. Show all posts

Monday 25 December 2017

கடவுளிடம், பெரியோர்களிடம், மகான்களிடம், நம்மை எப்படி அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டும்? எப்படி சொன்னால், அவர்கள் நம்மையும் மதிப்பார்கள்? தெரிந்து கொள்வோமே...

பெரியோர்களை கண்டால் எப்படி அபிவாதயே (self introduction), சொல்ல வேண்டும்? எப்படி அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டும்?
எப்படி சொன்னால், அவர்கள் நம்மையும் மதிப்பார்கள்?




தீய குணம் உள்ளவர்கள் நாம் கேட்காமலேயே நம்மிடம் வலிய வந்து பழக வருவார்கள்.
ஆனால்,
நல்லவர்களை, எப்பொழுதுமே நாம் தான் தேடி போக வேண்டும்,
நல்ல குணம் கொண்டவர்கள், மகாத்மாக்கள், ஞானிகள் அவர்களாகவே நம்மிடம் பழக வரமாட்டார்கள். ஏன்?

பகவானுக்கு தன் பக்தர்களை விட, தன் பக்தனுக்கு பக்தனாக இருப்பவர்கள் மீது பிரியம் அதிகம் ஏற்படும். அவர்கள் செய்யும்  அபச்சாரங்களை கூட மன்னித்து விடுவார். ஏன்?

பொதுவாக பகவானிடம் பக்தனாக இருப்பவன், நேரிடையாக சென்று வணங்க கூடாது என்கிறது நம் சாஸ்திரம்.

"பெரியோர்களை முன் நிறுத்திதான் வணங்க வேண்டும்" என்று சொல்கிறது.

இங்கு பெரியோர்கள் என்பது நம் குருவையோ, ரிஷிகளையோ குறிக்கிறது.

பொதுவாக நாம் நேரிடையாக பெரியோர்களிடம், நம்மை அறிமுக படுத்திக்கொண்டால்,
நம் தகுதி என்ன?, என்று பார்த்து,
பின் பேசலாமா? என்ற நினைப்பை அவர்களுக்கு தந்து விடும்.

கெட்ட பழக்கம் உடையவர்கள், நல்லவனையும் தன் பக்கம் இழுத்து அவனுக்கும் கெட்ட பழக்கத்தை புகுத்தி விடுவார்கள். இது உலக இயற்கை.

"துஷ்டனை கண்டால், தூர விலகு" என்று ஒரு வசனம் உண்டு.
தகாத செயல்கள், தீய எண்ணங்களை விதைக்கும் மனிதர்கள் நம்மிடம் எப்பொழுதும் வந்து கொண்டே இருப்பார்கள்.
அவர்களை விட்டு நாம் விலகி இருப்பதே, நம் ஆன்மீக வளர்ச்சிக்கு நல்லது.

பெரியோர்கள், ஒருவன் நல்லவனாக இருந்தால் மட்டும் தான் பழக ஆசைப்படுவார்கள்.

இதன் காரணமாகவே, பெரியோர்களை நேரிடையாக சென்று வணங்க கூடாது என்கிறது நம் சாஸ்திரம்.

நம்மை பொறுத்தவரை 'நல்லவன்' என்று நினைத்து கொண்டு இருப்போம். நம்மிடம் உள்ள தீய குணங்கள் நமக்கு தெரியாது. ஆனால் பிறருக்கு தெரியும்.




நம் தீய குணங்களோ எண்ணிலடங்காமல் இருக்கிறது.
அதில் ஒன்று அவர்கள் கண்ணில் பட்டாலும், நம்மிடம் நல்லவர்கள் பழக அஞ்சுவார்கள்.

துஷ்டனை கண்டால் தூர விலகு என்பதால்,
நல்லவர்கள் பொதுவாக தானாக வந்து, கெட்ட பழக்கம் உடையவர்களிடம் பழக விரும்ப மாட்டார்கள்.
தீய குணங்கள் நமக்கும் வந்து விடுமோ என்று அஞ்சுவார்கள். பாவத்தை சேர்த்து கொள்ள அஞ்சுவார்கள்.
ஆதலால்,
நல்லவர்களை நாம் தான் தேடி போக வேண்டும்.

இதற்கு ஒரே வழியாக தான் நம் சாஸ்திரம் அபிவாதயே என்ற self introductionஐ காட்டுகிறது.
நாம் அவருக்கு அபிமானமான ஒருவரை முன்னிட்டு தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம்.

கோவிலுக்கு செல்லும் போது, பெருமாளிடம் நேரிடையாக தன்னை பற்றி சொல்லிக்கொள்ளாமல்,
"அடியேன் ராமானுஜ தாஸன்" என்று சொன்னால்,
ராமானுஜர் மீது அதீத ப்ரேமை கொண்ட பகவான், நம்மை பற்றி, நம் தரத்தை பற்றி துளி கூட யோசிக்காமல், மோக்ஷம் என்ற கதவை திறந்து விடுகிறார்.

அதே போல, பெரியவர்களை பார்த்து, அபிவாதயே (self intro) சொல்லும் போதும்,
நாம் வேதம் படிக்காமலேயே "யஜுர் சாகா அத்யாயி" என்று யஜுர் வேதம் படிக்கிறேன் என்று சொன்னாலும், அதற்கு முன் நான் இந்த ரிஷியின் வம்சத்தில் வந்தவன்,
இந்த கோத்திரத்தில் வந்தவன் என்று சொல்லும் போதே,
உண்மையான பெரியோர்கள், "ஆஹா... நீ அந்த அந்த ரிஷியின் வம்சமா? அந்த கோத்திரத்தை சேர்ந்தவனா?"
என்று ரிஷிகளின் பெருமையை தியானித்து,
நம்மிடம் அந்த வம்சத்தில் வந்தவன் பேசுகிறான் என்ற நோக்கில் பார்த்து பெருமிதமாக பழகுவர். நம்மிடம் தோஷம் இருந்தாலும் பிறகு பெரியோர்கள் அதை பொருட்படுத்துவதில்லை.
ரிஷிகளை கொண்டே நாம் பெரியோர்களை நாட வேண்டும்.


பிராம்மண சமுதாயம் மட்டுமல்ல, உலக மனிதர்கள் யாவரும் ரிஷிகள் பரம்பரையில் வந்தவர்களே.. ஒவ்வொருவரும், தாங்கள் எந்த ரிஷி பரம்பரையில் வந்தவர்கள் என்று கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும்.
மேலும் அந்த ரிஷியின் சரித்திரம், பெருமைகள் தெரிந்து கொள்ள ஆசை பட வேண்டும்.

உதாரணத்திற்கு ப்ருகு ரிஷியின் கோத்திரத்தில் வந்தவர்கள், அவரை பற்றி இங்கு படித்து தெரிந்து கொள்ளலாம்.

மனித சமுதாயம் ரிஷிகளால் உருவானது.
பொய் மதங்கள் சொல்வது போல, ஆடை அணியாத முட்டாள் ஆதாம், ஏவாள் மூலம் வந்தவர்கள் அல்ல நாம் என்று அறிய வேண்டும்.
நம் குல பெருமை மகத்தானது. இதை மறந்து விட கூடாது.

மகான்களை கொண்டே, நம் குருவை கொண்டே, பகவானையும் நாட வேண்டும்.
பிராம்மண குலத்தில் பிறந்தும், தீய புத்தியால், தன் தவ வலிமையாலும், பலத்தாலும் தேவர்களையே மிரட்டி கொண்டு, பிறர் மனைவி என்று தெரிந்தும் பேடியாக ராமர் இல்லாத சமயத்தில் சீதையை இழுத்து வந்தான் ராவணன்.
வீரனாக ராமரிடம் போரிட்டு சீதையை கொண்டு வராமல், இப்படி கொண்டு வந்து வைத்து இருக்கிறாயே என்று கேள்வி கேட்ட தம்பி விபீஷணனை,
"அந்த ராமனோடு போ. இங்கு இருக்காதே!!" என்று எல்லோரும் பார்க்க சபையில் எட்டி உதைத்து துரத்தினான் ராவணன்.

அதர்மம் செய்யும் ராவணன் அண்ணனாக இருந்தாலும், அவனோடு இருக்க கூடாது என்று முடிவு செயதார் விபீஷணன்.
துஷ்டனை கண்டால் தூர விலகு என்பது வெளி மனிதர்களுக்கு மட்டுமல்ல, தன் சொந்த ரத்தமாக இருந்தாலும் விலக வேண்டும் என்று காட்டினார் விபீஷணன்.
கொஞ்சம் கவனித்து பார்த்தால், ஸ்ரீ ராமரை நோக்கி வந்த விபீஷணன், நேரிடையாக ஸ்ரீ ராமரிடம் சென்று விடவில்லை என்று தெரியும்.
விபீஷணன் ராமரின் படைகள் அனைவரையும் பார்த்து, தன்னை ஸ்ரீ ராமருக்கு அறிமுகப்படுத்தமாறு கேட்கிறார்.
இதுவே ரகசியம்.
தான் ராமரிடம் நேரிடையாக செல்ல கூடாது.
ராமரின் அபிமானத்துக்கு பாத்திரமான இந்த வானர படைகளில் யாராவது ஒருவர், தன்னை பற்றி ராமரிடம் சொல்லி, சேர்த்துக்கொள்ள சொன்னால், ராமர் தயக்கமின்றி தன்னை சேர்த்து கொள்வார் என்ற சாஸ்திரத்தை உணர்ந்து இருந்தார்.


ஹனுமான் ஸ்ரீ ராமரிடம் இவர் ராவணன் தம்பியாக இருந்தாலும், இவரை நம்பலாம் என்று பரிந்துரை செய்தார்.

தன்னை சரண் அடைந்தவர்கள் எவராக இருந்தாலும், அபயம் தரும் ஸ்ரீ ராமர்,
தனக்கு பிரியப்பட்ட ஹனுமானுக்கும் பிரியப்பட்டவராக விபீஷணன் இருக்கிறார் என்றதும் ஒரு கேள்வி இல்லாமல், விபீஷணனை ஏற்றுக்கொண்டார்.
"ஸ்ரீ ராமரே லட்சியம்" என்று இருந்தவர்கள் லக்ஷ்மணனும், பரதனும்.

ஸ்ரீ ராமருக்கும், இவர்கள் இருவர் மேல் அளவுக்கடந்த அன்பு உண்டு.

லக்ஷ்மணனிடத்திலும், பரதனிடத்திலும், தனக்கு உள்ள அன்பை விட, தன் கடைசி தம்பி சத்ருக்னன் மீது அன்பு அதை விட வைத்து இருந்தார் ஸ்ரீ ராமர்.

இதற்கு காரணம் உண்டு.

சத்ருக்னனுக்கு ஒரே லட்சியம், தன் அண்ணன் பரதனுக்கு சேவை செய்வது மட்டும் தான்.
இவருக்கு ராமர் கூட இரண்டாம் பட்சம் தான்.

பொதுவாக பகவானுக்கு தன் அடியார்கள் தனக்கு சேவை செய்வதை காட்டிலும்,
தன் அடியாருக்கு சேவை செய்யும் அடியார்க்கு அடியாக இருப்பவர்களை மிகவும் பிடிக்கும்.
இவர்களிடம் கெட்ட நடத்தை இருந்தாலும், தன் அடியாருக்கு சேவை செய்கிறான் என்பதாலேயே, அவனுக்கும் மோக்ஷத்தின் கதவை திறந்து விடுகிறார்.

ராவணனுடைய தங்கை "கும்பினி"க்கும், உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு தேசத்து அரசன் "மது" என்பவனுக்கும் பிறந்தவன் "லவனாசுரன்".
இவனை, சத்ருக்னன் வதம் செய்தார்.




இதையே ஒரு வாய்ப்பாக கொண்டு, ஸ்ரீ ராமர் "மது" ஆண்ட தேசத்தை, தன் தம்பி சத்ருக்னனுக்கு கொடுத்து, அரசனாக்கினார்.
இந்த மது நகரமே, இன்றைய "மதுரா".
சத்ருக்னன் ஆளும் இந்த மதுராவை ஒரு புண்ணிய க்ஷேத்ரமாக ஆக்க வேண்டும் என்று ஸ்ரீ ராமர் ஆசைப்பட்டார்.
உத்திர பிரதேசத்தில் உள்ள இதே மதுராவில், த்ரேதா யுகத்தில், ஸ்ரீ ராமரே, கிருஷ்ணராக அவதரித்தார்.

தன் சகோதரன் "சத்ருக்னன்" ஆண்ட இந்த தேசத்தில் தான், தன் அடுத்த அவதாரம் என்று சங்கல்பித்து அவதரித்து, மதுராவை திவ்ய தேசம் ஆக்கினார் பகவான் நாராயணன்.

அடியாருக்கு அடியாராக இருந்து, தன் குருவின் சொல்படி இருந்தாலே, பகவான் மிகவும் ப்ரசன்னமாகி எதையும் தந்து விடுவார்.
நமக்கு ஏன் குரு வேண்டும்?
நமக்கு ஆத்ம குரு இருந்தால், பகவான் நம்மை பார்க்கும் போது, நம் கெட்ட குணங்களை, அபசாரத்தை கண்டு கொள்ளா மாட்டார்.
தன் பக்தனை குருவாக ஏற்றுள்ளான், தன் பக்தனின் அபிமானத்துக்கு, கருணைக்கு பாத்திரமானவன் என்ற காரணத்துக்காகவே, நமக்கும் மோக்ஷம் தந்து விடுவார் பெருமாள்.

நாம் ஞானியும் இல்லை, சுத்த சித்தம் உள்ளவனும் இல்லை.
நேரிடையாக பகவானிடம் சென்றால், அவர் நம் தகுதியை எதிர்பார்க்கிறார்.

ஒரு குருவை பிடித்து கொண்டு, பகவானிடம் சென்றால், கேள்வி கேட்காமல் சேர்த்துக்கொள்கிறார். இதுவே ரகசியம்.

குரு இல்லாதவன் சுய முயற்சி செய்து பகவானை அடைவது மிக கடினம். நமக்கு குருவே கதி.

ஆத்ம குருவை ஒவ்வொரு மனிதனும் அடைவது அவசியம். குருவின் துணை கொண்டு, தெய்வத்திடம் நாம் செய்யும் பிரார்த்தனைகள் யாவும், பலிக்கின்றன.

ஹிந்துவாய் பிறக்கவே புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.

Hare Rama Hare Krishna - Bhajan (listen)


Sandhya Vandanam - Morning (With Meaning)

Sandhya Vandanam - Afternoon (With Meaning)

Sandhya Vandanam - Evening (With Meaning)