Followers

Search Here...

Showing posts with label லோபம். Show all posts
Showing posts with label லோபம். Show all posts

Wednesday 27 December 2017

நரகத்திற்கு அழைத்து போகும் நான்கு குணங்கள் எது? தெரிந்து கொள்வோமே...

நமது உபநிஷதம், "ஹே புத்தி உள்ளவனே" என்று நம்மை ஆசையாக,  கூப்பிட்டு, பின் வருமாறு சொல்கிறது. 



  1. அஸ்ரத்தை (ஈடுபாடு இன்மை),
  2. லோபம் (பேராசை),
  3. கோபம்,
  4. பொய்

- இந்த 4ம் உன்னிடம் இருந்தால், அது உன்னை "நரகத்திற்கு அழைத்து போகும்".
"ஹே புத்தி உள்ளவனே ! 
ஈஸ்வரனை அடைய, மேலும் உலகத்திலும் சௌக்கியமாக வாழ, 
மேல் சொன்ன இந்த நான்கையும், உன் குணத்திலிருந்து துரத்தி விடு.

  1. ஸ்ரத்தை (ஈடுபாடு)
  2. தானம்
  3. பொறுமை
  4. உண்மை 

- என்ற இந்த நான்கை உன் வாழ்வில் பிடித்துக்கொள்"
என்கிறது.

"இந்த உண்மையை நீ புரிந்து கொள்வாய்" என்பதால் தான், வேதம் நம்மை "ஹே புத்தி உள்ளவனே !" என்று அழைக்கிறது.

"இனி நரக வழியை தேர்ந்தெடுக்காதே, ஈஸ்வரனை நோக்கி வா" என்று  வைதீகமான வேதம், நம்மை ஆசையுடன் அழைக்கிறது.

நீ ஸ்ரத்தை (முழு மனதுடன் ஈடுபாடு) இல்லாமல் எந்த காரியம் செய்தாலும் அது பலன் அளிக்காது. 

உலக விஷய காரியமானாலும் சரி,
தெய்வ விஷய காரியமானாலும் சரி,
ஸ்ரத்தை இல்லாமல் நீ செய்தால், ஒரு பலனும் இல்லை. 

லோபம் என்றால் எது ?
"உலகில் உள்ள அனைத்தும் எனக்கு மட்டும் வேண்டும்" என்று சொல்வது லோபம்.
"தன்னிடம் உள்ள எதுவும் (அறிவு, செல்வம்) மற்றவர்க்கு கிடைக்க கூடாது என்று வைத்துக் கொள்வதும்" லோபம்.

இந்த "இரண்டுமே லோபம் தான்". 
இந்த லோபம் ஒருவனை நரகத்திற்கு தான் இட்டு செல்லும். 



அதனால் "லோபத்தை (பேராசை) விடு" என்கிறது உபநிஷத்.

அதே போல,
"பொய் பேசுதல், கோபப்படுதல் இதையும் விட்டு விடு" என்கிறது உபநிஷத்.

பொதுவாக, ஒரு விஷயத்தை விடு என்றால், அது தீயது என்று தெரிந்தாலும், மனிதனால் விட முடிவதில்லை.

நம் நிலையை அறிந்த ஸனாதன வைதீக வேதம், "இன்னொரு நான்கை காட்டி, அதை பிடி" என்கிறது.

"எப்பொழுதும் தானம் செய்யும் ஸ்வபாவம் வேண்டும்" என்று நாம் ஆசைபட ஆரம்பிக்கும் போது, தானாகவே, "தனக்கு என்று சேர்த்துக் கொள்ள வேண்டும், அது வேண்டும், இது வேண்டும்" என்கிற லோபம் (பேராசை) தானாக நம்மை விட்டு அழியும்.

ஆக, புத்திசாலியான நீ, "லோபத்தை (பேராசை), தானத்தால் நீக்க வேண்டும்".
வெறும் தானம் செய்தால், "தான் செய்தோம் என்ற கர்வம் உண்டாகும்". அதனால்,
"தானம் செய்யும் போது, அந்த ப்ரம்மத்துக்கு (பரமாத்மா, பர வாசுதேவன்) தானம் செய்தோம்" என்ற புத்தியுடனேயே தானம் செய்ய வேண்டும்.

ஆக, புத்திசாலியான நீ, "தானம் செய்து செய்து லோபத்தை அழிக்க வேண்டும்".

அதேபோல, புத்திசாலியான நீ,
"நீ பொறுமையால், கோபத்தை நீக்க வேண்டும்".

அதேபோல, புத்திசாலியான நீ, "உண்மையால், பொய்யை நீக்க வேண்டும்".

அதேபோல, புத்திசாலியான நீ, "அஸ்ரத்தையை, ஸ்ரத்தையால் நீக்க வேண்டும்".

எந்த காரியத்தை எடுத்தாலும் "ஸ்ரத்தை என்ற ஈடுபாடுடன்" நீ செய்தால், எத்தனை முறை தோற்றாலும், ஸ்ரத்தை இருந்தால், முயற்சி செய்து கொண்டே இருப்பாய்.


ஈஸ்வரனை நேரில் காண வேண்டும் என்றால் கூட, உன் ஸ்ரத்தையே வழி கொடுக்கும். உன் ஈடுபாடு ஒன்றே வழி கொடுக்கும்.

ஆக,
நாம் வாழப்போகும் இன்னும் சில கால ஜீவ வாழ்க்கையில்,
இந்த உபதேசத்தால், நாம் க்ரஹிக்க (மனதில் பதியவைக்க) வேண்டியது என்ன?
1. நாம் எப்போதும் "தானம் செய்யும்" ஸ்வபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.  
லோபம் (பேராசை) தானாக நம்மை விட்டு அழிந்து விடும்
வெறும் தானம் "கர்வத்தை தரும்" என்பதால்,
அந்த "பரமாத்மாவுக்கு தானம் செய்தேன்" என்று நினைப்புடன் எப்போதும் தானம் செய்யும் ஸ்வபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.



2. எப்பொழுதும் நம் சாஸ்திரத்திலும், குரு வாக்கியத்திலும் நமக்கு ஸ்ரத்தையை(ஈடுபாடு) வளர்த்துக்கொள்ள வேண்டும். 
'அஸ்ரத்தை' (ஈடுபாடு இன்மை) தானாக நம்மை விட்டு அழிந்து விடும்.

3. நாம் எப்போதும் பொறுமை ஸ்வபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

'கோபம்' தானாக நம்மை விட்டு அழிந்து விடும்.   

4. சத்யம் பேசும் ஸ்வபாவத்தை எப்பொழுதும் வளர்த்துக்கொள்ள வேண்டும். 
சத்தியத்தையே சொல்ல வேண்டும்.
அஸத்யத்தை (பொய்) எப்பொழுதும் சொல்லக்கூடாது.
அஸத்யம் (பொய்) என்றுமே இறுதியில் ஜெயிக்காது.


உபநிஷத் "சத்யம் ஏவ ஜயதே" (சத்தியமே ஜெயிக்கும்) என்று உறுதியாக சொல்கிறது.

ஆக,
"அஸ்ரத்தை, லோபம், கோபம், பொய்"
- இந்த நான்கை நம்மிடமிருந்து விரட்ட,
"ஸ்ரத்தை, தானம், பொறுமை, உண்மை"
என்ற இந்த நான்கை கொண்டு நீ ஜெயித்து விட்டால்,
"புத்திசாலியே !! நீ ஈஸ்வரனை எளிதில் கண்டு கொள்வாய்." என்று உபநிஷதத்தில் உள்ளது.

இது போன்ற பல உபதேசங்கள், வேதத்தில் உள்ளது, உபநிஷதத்தில் உள்ளது.

இப்படிப்பட்ட பொக்கிஷங்கள் உள்ள வேதத்தை நாம் காக்க வேண்டும். 
வேதம் அறிந்த வேதியர்கள் நடமாடும் தெய்வங்கள் என்பதை நாம் உணர்ந்து, அவர்களை மதிக்க வேண்டும். 
வேதம் அறிந்த வேதியர்களிடம் உபதேசங்கள் கேட்டு, "ஈஸ்வரன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்?" என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

உபன்யாசம் extract from சிருங்கேரி பெரியவர்.


வாழ்க ஹிந்துக்கள்.   
ஹிந்துக்கள் சொல்லாத நல்ல விஷயங்கள், பிற போலி மதங்களில் இல்லை.

பிற போலி மதங்கள் சொல்லும் அனைத்து நல்ல விஷயங்களும், நம்மிடம் இருந்து எடுக்கப்பட்டவை தான்.