शिशुपाल उवाच। ( சிசுபாலன் பீஷமரை பார்த்து பேசினான் )
बिभीषिकाभिर्बह्वीभिर्भीषयन्भीष्म पार्थिवान्।
न व्यपत्रपसे कस्माद्वृद्धः सन्कुलपांसनः।।
ஓய் பீஷ்மா ! குலத்தை கெடுப்பவனே ! நீ இங்கு இருக்கும் அரசர்களை பயமுறுத்த நினைக்கிறாயா? உனக்கு வெட்கமாக இல்லை ?
युक्तमेतत्तृतीयायां प्रकृतौ वर्तता त्वया।
वक्तुं धर्मादपेतार्थं त्वं हि सर्वकुरूत्तमः।।
தர்மத்துக்கு எதிராக நீ இப்படி பேசுவது உன்னை பொறுத்தவரை சரி தான் . நீ ஆணும் இல்லாத , பெண்ணும் இல்லாத அலி தானே ! கௌரவ குலத்துக்கு நீ தலைவன் என்ற பெயர் வேறு .
नावि नौरिव सम्बद्धा यथान्धो वान्धमन्वियात्।
तथाभूता हि कौरव्या येषां भीष्म त्वमग्रणीः।।
ஏய் பீஷ்மா ! உன்னை தலைவனாக பெற்ற கௌரவர்கள் , ஒரு படகோடு கட்டப்பட்ட மற்ற படகுகள் போல , ஓரு குருடன் பின்னால் செல்லும் குருடனை போல இருக்கின்றனரே !
VIDEO
पूतनाघातपूर्वाणि कर्माण्यस्य विशेषतः।
त्वया कीर्तयताऽस्माकं भूयः प्रव्यथितं मनः।।
சிறு குழந்தையாக இருந்த போது , இந்த கிருஷ்ணன் "பூதனையை " கொன்றான் என்று ஸ்தோத்திரம் செய்து அவனை பற்றி பாட்டு பாடுகிறாயே ! இதை கேட்க எனக்கு வெறுப்பாக இருக்கிறது .
अवलिप्तस्य मूर्शस्य केशवं स्तोतुमिच्छतः।
कथं भीष्म न ते जिह्वा शतधेयं विदीर्यते।।
ஏய் பீஷ்மா ! கர்வம்பிடித்த , முட்டாள் யாதவனான இந்த கிருஷ்ணனை நீ ஸ்தோத்திரம் செய்த போதே , உன் நாவானது ஏன் நூறாக வெடிக்காமல் போனது ?
यत्र कुत्सा प्रयोक्तव्या भीष्म बालतरैर्नरैः।
तमिमं ज्ञानवृद्धः सन्गोपं संस्तोतुमिच्छसि।।
பீஷ்மா ! இவன் ஒரு பொடியன் . மதிக்ககூட தகுதி இல்லாத இந்த இடையனை , உனக்கு அறிவு இருந்தும் துதிக்க நினைக்கிறாயே !
यद्यनेन हता बाल्ये शकुनिश्चित्रमत्र किम्।
तौ वाऽश्ववृषभौ भीष्ण यौ न युद्धविशारदौ।।
குழந்தையாக இருந்த போதே ஒரு பறவையை ( பகாசுரன் ) கொன்றான் . ' பறவையை கொன்றான் ..' என்று இவனை துதிக்கிறாயே ! இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது ? பீஷ்மா ! யுத்தம் செய்ய பயிற்சி இல்லாத குதிரையை , காளை மாட்டை இவன் குழந்தையாக இருந்த போது கொன்றான் . அதையும் துதிக்கிறாயே ! இதில் ஆச்சர்யபடும் அளவிற்கு ஒரு காரியமும் இல்லையே !
चेतनारहितं काष्ठं यद्यनेन निपातितम्।
पादेन शकटं भीष्ण तत्र किं कृतमद्भुतम्।।
பிறந்த குழந்தையாக இருந்த போதே , உயிரில்லாத ஒரு மர தொட்டிலை , காலால் உதைத்தான் . 'அது உடைந்து விட்டது .. உடைந்து விட்டது .'. என்று பெரிதாக துதிக்கிறாயே ! இதில் ஆச்சர்யபட என்ன இருக்கிறது ?
अर्कप्रमाणौ तौ वृक्षौ यद्यनेन निपातितौ।
नागश्च दमितोऽनेन तत्र को विस्मयः कृतः।।
ஏதோ உளுத்து போன இரு மரங்களுக்கு இடையே இவன் போன போது , அது தானாக முறிந்து விட்டது . ' இரண்டு மருத மரத்தை முறித்தான் .. மரத்தையே முறித்தான்' என்று துதிக்கிறாயே ! பிறகு , ஒரு பாம்பை கொன்று இருக்கிறான் . அதையும் பெரிதாக கொண்டாடுகிறாய் . இதில் என்ன ஆச்சரியமான காரியம் இருக்கிறது ?
VIDEO
वल्मीकमात्रः सप्ताहं यद्यनेन धृतोऽचलः।
तदा गोवर्धनो भीष्म न तच्चित्रं मतं मम।।
ஏய் பீஷ்மா ! ஒரு புற்று போல இருக்கும் கோவர்தன மலையை இவன் 7 நாள் தூக்கினான் என்று கொண்டாடுகிறாயே ! எனக்கு ஒரு ஆச்சர்யமும் இதில் தோன்றவில்லையே !
भुक्तमेतेन बह्वन्नं क्रीडता नगमूर्धनि।
इति ते भीष्ण शृण्वानाः परे विस्मयमागताः।।
ஏய் பீஷ்மா ! மலைக்கு ஈடாக வைக்கப்பட்ட அன்னத்தை , இவன் ஒருவனே விழுங்கினான் என்று சொல்லி துதித்தாயே ! அதை கேட்டு மற்றவர்கள் வாய் பிளந்து கேட்கலாம் . ஆனால் எனக்கு ஒரு ஆச்சர்யமும் தோன்றவில்லை !
यस्य चानेन धर्मज्ञ भुक्तमन्नं बलीयसः।
स चानेन हतः कंस इत्येतत्तु बलीयसः।
தர்மம் தெரிந்த பீஷ்மா ! இவன் உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்தவன் . மகா பலசாலியான கம்ஸனுடைய உணவையே தின்று விட்டு , கம்சனையே கொன்றவன் இவன் என்பது தான் இவன் செய்த ஆச்சர்யமான வேலை .
न ते श्रुतमिदं भीष्म नूनं कथयतां सताम्।
यद्वक्ष्ये त्वामधर्मज्ञं वाक्यं कुरुकुलाधम।।
பீஷ்மா ! குருவம்சத்தில் இழிவானவனே ! பெரியோர்கள் எது தர்மம்? என்று சொல்லி தரும் பொது , நீ அவர்கள் சொல்லை கேட்டதில்லை என்று தெரிகிறது . ஆகையால் நான் உனக்கு தர்மத்தை சொல்லி தருகிறேன் .
स्त्रीषु गोषु न शस्त्राणि पातयेद्ब्राह्मणेषु च।
इति सन्तोऽनुशासन्ति सञ्जना धर्मिणः सदा।
भीष्म लोके हि तत्सर्वं वितथं त्वयि दृश्यते।।
'பெண்களையும் , பசுக்களையும் , ப்ராம்மணனையும் , தன்னிடம் அடைக்கலம் கேட்டு வந்தவனையும் கொல்ல கூடாது' என்று தர்மம் அறிந்த அறிஞர்கள் எப்பொழுதும் உபதேசிக்கின்றனர் . பீஷ்மா ! உலகத்தில் உள்ள இந்த தர்மங்கள் எல்லாம் உன்னிடத்தில் இருப்பதாக கூட தெரியவில்லையே !
ज्ञानवृद्धं च वृद्धं च भूयांसं केशवं मम।
अजानत इवाख्यासि संस्तुवन्कौरवाधम।।
அறிவு முதிர்ச்சி இல்லாமல் , வயதும் முதிர்ந்து விட்ட நீ! கேசவனை எனக்கு எதிரில் பெருமை படுத்துகிறாய் . இவனை பற்றி தெரியாதவன் என்று நினைத்து , எனக்கு சொல்கிறாய் .
गोघ्रः स्त्रीघ्नश्च सन्भीष्म त्वद्वाक्याद्यदि पूज्यते।
एवम्भूतश्च यो भीष्म कथं संस्तवमर्हति।।
பீஷ்மா ! வத்ஸாசுரன் என்று சொல்லி பசுவை கொன்ற இவனை , பூதனை என்று சொல்லி பெண்ணை கொன்ற இவனை நீ உன் வாயால் எப்படி துதி செய்கிறாய்?
असौ मतिमतां श्रेष्ठो य एष जगतः प्रभुः।
सम्भावयति चाप्येवं त्वद्वाक्याच्च जनार्दनः।
एवमेतत्सर्वमिति तत्सर्वं वितथं ध्रुवम्।।
உன்னை போன்றோர் , இவனை மஹா புத்திசாலி என்றும் , உலகத்துதுக்கே ப்ரபு (ஜகந்நாதன் ) என்றும் சொல்லி புகழ்வதால் , இவனும் நீங்கள் சொல்வதெல்லாம் சரி தான் என்று நினைத்து , தன்னை ஜனார்தனன் என்று நினைக்கிறான் . இவை அனைத்தும் பொய் என்பதே என் முடிவு .
आत्मानम् आत्मनाऽऽधातुं यदि शक्तो जनार्दनः।
अकामयन्तं तं भीष्म कथं साध्विव पश्यसि।।
ஏய் பீஷ்மா ! இவன் ஜனார்த்தனன் , இவன் ஆத்மாவுக்கு ஆத்மாவாக இருக்கிறான் , அனைத்தும் அறிய சக்தியுள்ளவன் என்று நீ சொல்கிறாயே ! தனக்கு முதல் மரியாதை கொடுப்பார்கள் என்று அவனுக்கே தெரியாத போது , நீ எதற்காக இவனுக்கு போய் முதல் மரியாதை செய்தாய் ?
न गाथा गाथिनं शास्ति बहुचेदपि गायति।
प्रकृतिं यान्ति भूतानि कुलिङ्गशकुनिर्यथा।।
எத்தனை முறை துதித்தாலும் , அதற்கு சிலர் தகுதி இல்லாமல் தான் இருப்பார்கள் . என்ன தான் பழக்கினாலும் , குலிங்கசகுனி போன்ற பறவைகள் அதனதன் மடத்தனமான குணத்தை விடாது
नूनं प्रकृतिरेषा ते जघन्या नात्र संशयटः।
नदीसुतत्वात्ते चित्तं चञ्चलं न स्थिरं स्मृतम् ।।
அதுபோல , உன்னுடைய இயற்கையான குணமும் இழிவாக இருக்கிறது ! இதில் சந்தேகமே இல்லை . நீ சஞ்சலமான கங்கை நதியின் பிள்ளை தானே ! உன்னிடம் எப்படி ஸ்திரமான மனநிலையை எதிர்பார்க்க முடியும் ?
अतः पापीयसी चैषां पाण्डवानामपीष्यते।
येषामर्च्यतमः कृष्णस्त्वं च येषां प्रदर्शकः।।
இந்த கிருஷ்ணனை பூஜிப்பதும் , அதற்காக நீ இவனை ஸ்தோத்திரம் செய் வ தும் இழிவானது . நீ சொன்னதை கேட்கும் இந்த பாண்டவர்கள் குணம் அதை விட இழிவானது என்று தெரிகிறது .
VIDEO
धर्मवांस्त्वमधर्मज्ञः सतां मार्गादवप्लुतः।
को हि धर्मिणमात्मानं जानञ्ज्ञानविदां वरः।।
உனக்கு தர்மமும் தெரியவில்லை , பெரியவர்கள் சொன்ன வழியை பின்பற்றவும் தெரியவில்லை .
நீயா தர்மிஷ்டன் ? பீஷ்மா ! எந்த தர்மம் தெரிந்தவன் , தெரிந்தே உன்னை போன்ற காரியத்தை செய்வான் ?
कुर्याद्यथा त्वया भीषम कृतं धर्ममवेक्षता।
चेत्त्वं धर्मं विजानासि यदि प्राज्ञा मतिस्तव।।
अन्यकामा हि धर्मज्ञा कन्यका प्राज्ञमानिना।
अम्बा नामेति भद्रं ते कथं साऽपहृता त्वया।।
பெரிய தர்மம் தெரிந்தவன் , பெரிய அறிவாளி என்று சொல்லிக்கொள்கிறாயே ! பீஷ்மா ! வேறொருவனை காதலித்த அம்பாவை நீ தானே அபகரித்து கொண்டு சென்றாய் !
तां त्वयाऽपहृतां भीष्म कन्यां नैषितवान्नृपः।
भ्राता विचित्रवीर्यस्ते सतां मार्गमनुस्मरन्।।
அப்படி அவளை கூட்டி சென்றும் , பெரியோர்கள் காட்டிய தர்ம வழியை அறிந்த உன் சகோதரன் விசித்ரவீர்யன் உன்னுடைய இந்த அதர்மத்தை ஏற்கவில்லையே . அந்த கன்னிகையை ஏற்க மறுத்தானே !
भार्ययोर्यस्य चान्येन मिषतः प्राज्ञमानिनः।
तव जातान्यपत्यानि सज्जनाचरिते पथि।।
அவன் மனைவிகளுக்கு (விசித்ரவீர்யன் இறந்த பிறகு ), வேறொருவரால் சந்ததிகள் ஏற்பட்டதே தவிர , நீ உயிரோடு இருந்தும் நீ ப்ரயோஜனப்படவில்லை .
को हि धर्मोऽस्ति ते भीषम ब्रह्मचर्यमिदं वृथा।
यद्धारयसि मोहाद्वा क्लीबत्वाद्वा न संशयः।।
பீஷ்மா ! உனக்கு என்ன தர்மம் இருக்கிறது ? உன் ப்ரம்மச்சர்யமே ஒரு பொய் . பகட்டுக்காக தான் ப்ரம்மச்சர்யம் என்று சொல்லி கொள்கிறாய் . நீ ஆண்மையில்லாதவன் என்பதே உண்மை . அதில் சந்தேகமே இல்லை .
न त्वं तव धर्मज्ञ पश्याम्युपचरं क्वचित्।
न हि ते सेविता वृद्धा य एवं धर्ममब्रवीः।।
நீ எந்த தர்மத்திலும் இருப்பதாக எனக்கு தெரியவே இல்லை . நீ பெரியோர்களுக்கு சேவை செய்ததாகவும் தெரியவில்லை . தர்மமே தெரியாத நீ தர்மம் பேசுகிறாய் .
इष्टं दत्तमधीतं च यज्ञाश्च बहुदक्षिणाः।
सर्वमेतदपत्यस्य कलां नार्हन्ति षोडशीम्।।
தானங்கள் அள்ளி கொடுப்பதும் , யாகங்கள் செய்வதும் , தக்ஷிணைகள் அதிகமாக கொடுப்பதும் தர்மமே என்றாலும் , சந்ததி என்னும் தர்மத்தை உருவாக்கியவனுக்கு முன்னால் இந்த தர்மங்கள் எல்லாம் , 16ல் ஒரு பங்கு தான் .
व्रतोपवासैर्बहुभिः कृतं भवति भीष्म यत्।
सर्वं तदनपत्यस्य मोघं भवति निश्चयात्।।
பீஷ்மா ! சந்ததி இல்லாதவன் , பலவகை விரதங்கள் , உபவாசங்கள் செய்தாலும் பயனற்றது என்று சாஸ்திரம் சொல்கிறது .
सोऽनपत्यश्च वृद्धश्च मिथ्याधर्मानुशासनात्।
हंसवत्त्वमपीदानीं ज्ञातिभ्यः प्राप्नुया वधम्।।
சந்ததியும் இல்லாமல் , வயதாகி போன நீ , பொய்யான தர்மத்தை உபதேசித்த ஹம்ச பக்ஷி (அன்ன பறவை), தன் சுற்றத்தாராலேயே இறந்து போனது போல , இறந்து போக போகிறாய் .
एवं हि कथयन्त्यन्ये नरा ज्ञानविदः पुरा।
भीष्म यत्तदहं सम्यग्वक्ष्यामि तव शृण्वतः।।
பீஷ்மா ! முன்னொரு காலத்தில் சொல்லப்பட்ட இந்த ஹம்சபக்ஷியின் கதையை சொல்கிறேன் . இதையாவது ஒழுங்காக கேள் .
VIDEO
वृद्धः किल समुद्रान्ते कश्चिद्धंसोऽभवत्पुरा।
धर्मवागन्यथावृत्तः पक्षिणः सोऽनुशास्ति च।।
धर्म चरत माऽधर्ममिति तस्य वचः किल।
पक्षिणः शुश्रुवुर्भीष्म सततं धर्मवादिनः।।
முன்னொரு காலத்தில் , மற்றவர்களுக்கு தர்மத்தை சொல்லிக்கொண்டும் , தான் அதன் வழியில் வாழாமலும் , ஒரு கிழ ஹம்ச பறவை ஒன்று இருந்தது . அது மற்ற பறவைகளுக்கு தர்மத்தை உபதேசிப்பது வழக்கம் . " தர்மத்தையே செய்யுங்கள் . அதர்மம் செ ய் யாதீர்கள் " என்று அழகாக உபதேசம் செய்யும் அந்த பறவை. பீஷ்மா ! இதை கேட்டு மற்ற பறவைகளும் நடந்தன .
हंसस्य तु वचः श्रुत्वा मुदिताः सर्वपक्षिणः।
ऊचुश्चैव स्वगा हंसं परिवार्य च सर्वशः।।
कथयस्व भवान्सर्वं पक्षिणां तु समासतः।
को हि नाम द्विजश्रेष्ठ ब्रूहि नो धर्म उत्तमः।।
எப்பொழுதும் தர்மத்தையே பேசும் இந்த அன்ன பறவையை கண்டு மற்ற பறவைகள் மகிழ்ந்தன . ஒருநாள் , அந்த பறவைகள் எல்லாம் சேர்ந்து கொண்டு , "நீங்கள் எங்களுக்கு தர்மங்களை எல்லாம் தொகுத்து சொல்ல வேண்டும் . எங்களுக்கு எது சிறந்த தர்மம் என்று சொல்ல வேண்டும் ?" என்று கேட்டு கொண்டன ...
हंस उवाच।। ( அந்த அன்னப்பறவை பேசியது )
प्रजास्वहिंसा धर्मो वै हिंसाऽधर्मः खगव्रजाः।
एतदेवानुबोद्धव्यं धर्माधर्मः समासतः।।
மற்ற பறவைகளை பார்த்து , "நம் மக்களுக்கு துன்பம் தராமல் இருப்பதே தர்மம் . அவர்களுக்கு கஷ்டங்கள் கொடுப்பதே பாபம். பாவ புண்ணியங்களை சுருக்கமாக இவ்வாறே நீங்கள் அறிந்து கொள்ளலாம் " என்று சொன்னது .
शिशुपाल उवाच।। ( சிசுபாலன் சொன்னான் )
वृद्धहंसवचः श्रुत्वा पक्षिणस्ते सुसंहिताः।
ऊचुश्च धर्मलुब्धास्ते स्मयमाना इवाण्डजाः।।
இந்த கிழ பறவை இப்படி தர்ம உபதேசம் செய்ததை கேட்ட மற்ற பறவைகள் பெரிதும் மகிழ்ந்தன .
धर्मं यः कुरुते नित्यं लोके धीरतरोऽण्डजः।
स यत्र गच्छेद्धर्मात्मा तन्मे ब्रूहीह तत्त्वतः।।
அவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து அந்த கிழப்பறவையிடம் "தர்மாத்மாவாக இருந்து இந்த உலகில் தர்மத்தில் உறுதியாக இருந்து வாழ்க்கை நடத்துபவர்கள் எந்த கதியை அடைவார்கள் என்று தாங்கள் சொல்ல வேண்டும் " என்று கேட்டன ,
हंस उवाच।। ( அன்னப்பறவை பேச ஆரம்பித்தது )
बाला यूयं न जानीध्वं धर्मसूक्ष्मं विहङ्गमाः।
धर्मं यः कुरुते लोके सततं शुभबुद्धिना।
न चायुषोऽन्ते स्वं देहं त्यक्त्वा स्वर्गं स गच्छति।।
तथाऽहमपि च त्यक्त्वा काले देहमिमं द्विजाः।
स्वर्गलोकं गमिष्यामि इयं धर्मस्य वै गतिः।।
एवं धर्मकथां चक्रे स हंसः पक्षिणां भृशम्।
पक्षिणः शुश्रुवुर्भीष्म सततं धर्ममेव ते।।
"குழந்தைகளே ! தர்மம் என்ன என்று அறிந்து கொள்ளுங்கள் . எவன் இந்த உலகில் நல்ல எண்ணத்தோடு , தர்ம சிந்தனையோடு வாழ்கிறானோ ! அவன் தன் வாழ்நாள் முடிவில் இந்த உடம்பை விடும் போது , ஸ்வர்க லோகம் சென்று விடுவான் . இதுவே தர்மத்தின் முடிவு ." என்று மற்ற பறவைகளிடம் பலமுறை உபதேசம் செய்து கொண்டிருந்தது . பீஷ்மா ! இது போன்று 100 முறை தர்ம உபதேசம் இந்த கிழ பறவையிடம் கேட்டு கொண்டு இருந்தது மற்ற பறவைகள் .
अथास्य भक्ष्यमाजह्रुः समुद्रजलचारिणः।
अण्डजा भीष्म तस्यान्ये धर्मार्थमिति शुश्रुम।।
பீஷ்மா ! அந்த பறவைகள் பறந்து சென்று சமுத்திரத்தில் கிடைக்கும் உணவுகளை எடுத்து வந்து , தர்ம உபதேசம் செய்யும் இந்த கிழ பறவைக்கு கொடுப்பது வழக்கம் .
ते च तस्य समभ्याशे निक्षिप्याण्डानि सर्वशः।
समुद्राम्भस्यमोदन्त चरन्तो भीष्म पक्षिणः।।
பீஷ்மா ! அந்த பறவைகள் எல்லாம் , தாங்கள் இட்ட முட்டைகளை அந்த கிழ அன்னத்துக்கு அருகில் வைத்து விட்டு , கடல் நீரில் மகிழ்ச்சியோடு உலாவிக்கொண்டு இருந்தன .
तेषामण्डानि सर्वेषां भक्षयामास पापकृत्।
स हंसः सम्प्रमत्तानामप्रमत्तः स्वकर्मणि।।
தன் காரியத்தை நடத்தி கொள்வதில் கை தேர்ந்த அந்த கிழ பறவை , எச்சரிக்கை இல்லாத மற்ற பறவைகளின் முட்டைகளை தின்றது .
ततः प्रक्षीयमाणेषु तेषु तेष्वण्डजोऽपरः।
अशङ्कत महाप्राज्ञः स कदाचिद्ददर्श ह।।
ஒரு நாள் , எதேச்சையாக ஒரு புத்திசாலி பறவை மட்டும் , முட்டைகள் குறைவதை உணர்ந்து சந்தேகம் அடைந்தது .
VIDEO
ततः सङ्कथयामास दृष्ट्वा हंसस्य किल्बिषम्।
तेषां परमदुःखार्तः स पक्षी सर्वपक्षिणाम्।।
இப்படி இந்த கிழ பறவை முட்டைகளை தின்பதை கண்ட ஒரு நாள் பார்த்து விட்ட அந்த பறவை , மற்ற பறவைகளிடம் நடக்கும் பாவ செயலை தெரிவித்து விட்டது .
ततः प्रत्यक्षतो दृष्ट्वा पक्षिणस्ते समीपगाः।
निजघ्नस्तं तदा हंसं मिथ्यावृत्तं कुरूद्वह।।
கௌரவனே ! இப்படி அந்த பறவை சொன்னதும் , மற்ற பறவைகளும் தன் கண்களால் நடப்பதை பார்த்தது . தாங்களே அந்த கிழ பறவையை கொன்று போட்டன .
एवं त्वां हंसधर्माणमपीमे वसुधाधिपाः।
निहन्युर्भीष्म सङ्क्रुद्धाः पक्षिणस्तं यथाण्डजम्।।
ஏய் பீஷ்மா ! அந்த கிழ பறவையின் ஒழுக்கத்தை போன்றே நீயும் இருப்பதால் , ஒரு நாள் உன்னையும் இந்த அரசர்களே கொல்வார்கள் .
गाथामप्यत्र गायन्ति ये पुराणविदो जनाः।
भीष्म यां तां च ते सम्यक्वथयिष्यामि भारत।।
अन्तरात्मन्यभिहते रौषि पत्ररथाशुचि।
अण्डभक्षणकर्मैतत्तव वाचमतीयते।।
பீஷ்மா ! இப்படி இந்த அன்னப்பறவையின் கதையை புராண கதையாக பாடி அந்த பறவையை பார்த்து கடைசியாக பாடுகிறார்கள் . அதன் அர்த்தத்தை சொல்கிறேன் கேள் . "ஏ பறவையே ! மனம் கெட்டு மன தூய்மை இல்லாத பேச்சை பேசியே வாழ்ந்தாய் . உன் மக்களின் முட்டைகளையே தின்று , சொல்வது ஒன்று , செய்வது ஒன்று வாழ்ந்து கடைசியில் மரணித்தாய் "
शिशुपाल उवाच। ( சிசுபாலன் மேலும் சொல்கிறான் )
स मे बहुमतो राजा जरासन्धो महाबलः।
योऽनेन युद्धं नेयेष दाक्षोऽयमिति संयुगे।।
இந்த கிருஷ்ணன் ஒரு வேலைக்கார பயல் என்பதால் தானே , மஹாபலசாலியான ஜராஸந்தன் இவனோடு மல்யுத்தம் செய்ய விரும்பவில்லை . நான் ஜராஸந்தனை வெகுமானிக்கிறேன் .
केशवेन कृतं कर्म जरासन्धवधे तदा।
भीमसेनार्जुनाभ्यां च कस्तत्साध्विति मन्यते।।
ஜராஸந்தனை கொல்வதற்காக இந்த கேசவன் செய்த காரியத்தையும் , பீம அர்ஜுனன் செய்த காரியத்தையும் அறிந்த எவன் இவர்களை மதிப்பான் ?
उद्वारेण प्रविष्टेन छद्मना ब्रह्मवादिना।
दृष्टः प्रभावः कृष्णेन जरासन्धस्य भूपतेः।।
ஜராஸந்தனின் பராக்ரமம் தெரிந்ததால் தானே , பின் வாசல் வழியாக நுழைந்து , தன்னை பிராம்மணன் என்று கூறிக்கொண்டான் இந்த கிருஷ்ணன்.
येन धर्मात्मनाऽऽत्मानं ब्रह्मण्यमभिजानता।
प्रेषितं पाद्यमस्मै तद्दातुमग्रे दूरात्मने।।
மஹாத்மாவான ஜராஸந்தன் , ப்ராம்மணர்களுக்கு தானம் கொடுக்க பாத்யம் கொடுக்கும் போது , பிராம்மண வேஷத்தில் இவன் முதலில் வந்து இந்த துராத்மா பாத்யம் பெற்றுக்கொண்டான் .
भुज्यतामिति तेनोक्ताः कृष्णबीमधनञ्जयाटः।
जरासन्धेन कौरव्य कृष्णेन विकृतं कृतम्।।
பிராம்மணர்கள் போல வந்த இந்த கிருஷ்ணனை , பீமனை ஜராசந்தன் பூஜித்து , தானம் செய்ய முற்பட்டான் . தானத்திற்கு பதிலாக இந்த கிருஷ்ணன் காரியங்கள் செய்தான் .
यद्ययं जगतः कर्ता यथैनं मूर्ख मन्यसे।
कस्मान्न ब्राह्मणं सम्यगात्मानमवगच्छति।।
மூர்க்கனே ! இவனை நீ எப்படி உலகத்தை படைத்தவன் என்று சொல்லி திரிகிறாய் ? இவன் முதலில் தான் பிராம்மணன் இல்லை என்று கூட அறியவில்லையே !
VIDEO
इदं त्वाश्चर्यभूतं मे यदिभे पाण्डवास्त्वया।
अपकृष्टाः सतां मार्गान्मन्यन्ते तच्च साध्विति।।
अथवा नैतदाश्चर्यं येषां त्वमसि भारत।
स्त्रीसधर्मा च वृद्धश्च सर्वार्थानां प्रदर्शकः।।
இந்த பாண்டவர்களும் , நல்லவர்கள் சொல்லும் வழியை பின்பற்றாமல் , நீ சொல்வதை சரி என்று நினைத்து இழுக்கப்பட்டு இருக்கிறார்கள் . பாரதனே ! இது எனக்கு ஒரு பக்கம் ஆச்சர்யமாக இருந்தாலும் , பெண் தன்மை கொண்ட கிழவனான உன்னிடம் உபதேசம் பெற்ற இவர்கள் , செய்யும் இந்த செயலை கண்டு எனக்கு ஆச்சர்யம் ஏற்படவில்லை .
वैशम्पायन उवाच।। ( வைசம்பாயனர் ஜனமேஜெயனிடம் சொல்கிறார் )
तस्य तद्वचनं श्रुत्वा रूक्षं रूक्षाक्षरं बहु।
चकोप बलिनां श्रेष्ठो भीमसेनः प्रतापवान्।।
இப்படி சிசுபாலன் சபையில் மிக்க கோபத்தோடும் , கடுமையான சொற்களாலும் பேசியதும் , பலவான்களில் சிறந்தவனும் , பராக்ரமசாலியுமான பீமசேனன் கோபித்தான் .
तथा पद्मप्रतीकाशे स्वभावायतविस्तृते।
भूयः क्रोधाभिताम्राक्षे रक्ते नेत्रे बभूवतुः।।
இயற்கையாகவே தாமரை போன்று நீண்ட கண்களும் , சிவந்தும் காணப்படும் பீமனின் கண்கள் மேலும் சிவந்து காணப்பட்டது .
त्रिशिखां भ्रकुटीं चास्य ददृशुः सर्वपार्थिवाः।
ललाटस्थां त्रिकूटस्थां गङ्गां त्रिपथगामिव।।
அவன் கோபத்தில் புருவத்தை உயர்த்தி கோபத்தோடு பார்த்த போது , அவன் நெற்றியில் ஏற்பட்ட மூன்று கோடுகள் , த்ரிகூட மலையில் மூன்று பிரிவாக ஓடும் கங்கை போல அங்கு இருந்த மற்ற அரசர்கள் கண்டனர் .
दन्तान्सन्दशतस्तस्य कोपाद्ददृशुराननम्।
युगान्ते सर्वभूतानि कालस्येव जिघत्सतः।।
கோபத்தால் பீமசேனன் பற்களை கடிப்பதை பார்த்து , பிரளய காலத்தில் அனைத்து உயிர்களையும் விழுங்க வந்த காலன் போல தெரிந்தது அங்கு இருந்தவர்களுக்கு .
उत्पतन्तं तु वेगेन जग्राहैनं मनस्विन्।
भीष्म एव महाबाहुर्महासेनमिवेश्वरः।।
கோபம் தாங்காமல் குபீரென்று வேகமாக கிளம்பிய பீமனை , மஹா சேனனான குமரனை (முருகனை ) சிவபெருமான் தடுத்தது போல தடுத்தார் .
तस्व भीमस्य भीष्मेण वार्यमाणस्य भारत।
गुरुणा विविधैर्वाक्यैः क्रोधः प्रशममागतः।।
அந்த பீமனுக்கு பல வார்த்தைகள் சொல்லி பீஷ்மர் சமாதானம் செய்த பிறகு , பீமனின் கோபம் அடங்கியது .
नातिचक्राम भीष्मस्य स हि वाक्यमरिन्दमः।
समुद्वृत्तो घनापाये वेलामिव महोदधिः।।
எப்படி சமுத்திர ஜலம் கரையை கடக்காமல் கட்டுப்பட்டு இருக்குமோ , அது போல , பீஷ்மரின் வார்த்தையை மீற முடியாமல் பீமன் கட்டுப்பட்டு இருந்தான் .
VIDEO
शिशुपालस्तु सङ्क्रुद्धे भीमसेने जनाधिप।
नाकम्पत तदा वीरः पौरुषे व्यवस्थितः।।
தன் பராக்ரமத்தில் அதீத நம்பிக்கை கொண்ட சிசுபாலனோ , பீமசேனன் கோபித்த போதும் துளியும் கலங்கவில்லை .
उत्पतन्तं तु वेगेन पुनः पुनररिन्दमः।
न स तं चिन्तयामास सिंहः क्रुद्धो मृगं यथा।।
பீமசேனன் கோபப்பட்டு சிசுபாலனை நோக்கி வேகமாக வர முயன்ற போதெல்லாம் , கோபமுள்ள சிங்கம் எப்படி மற்ற மிருகத்தை மதிக்காதோ , அது போல , பீமஸேனனின் கோபத்தை பொருட்படுத்தாமலேயே இருந்தான் .
प्रहसंश्चाब्रवीद्वाक्यं चेदिराजः प्रतापवान्।
भीमसेनमभिक्रुद्धं दृष्ट्वा भीमपराक्रमम्।।
मुञ्चैनं भीष्म पश्यन्तु यावदेनं नराधिपः।
मत्प्रभावविनिर्दग्धं पतङ्गमिव वह्निना।।
அது மட்டுமில்லாமல் , கோபத்தோடு காணப்பட்ட பீமனை பார்த்து , சிரித்து கொண்டே , "ஏய் பீஷ்மா ! இவனை ஏன் தடுக்கிறாய் ? இவனை விடு . விளக்கில் தானாக வந்து விழும் விட்டிற்பூச்சி போல , என் பராக்ரமம் என்ற அக்னியில் விழுந்து இவன் எரியப்போவதை இங்கு இருக்கும் அரசர்கள் பார்க்கட்டும் " என்று கர்ஜித்தான் .
ततश्चेदिपतेर्वाक्यं श्रुत्वा तत्कुरुसत्तमः।
भीमसेनमुवाचेदं भीष्मे मतिमतां वरः।।
இப்படி சேதி நாட்டு அரசன் சிசுபாலன் சொன்னதும் , கௌரவர்களில் உத்தமரான பீஷ்மர் , பீமனை பார்த்து இவ்வாறு பேசலானார் .
नैषा चेदिपतेर्बुद्धिर्यत्त्वामाह्वयतेऽच्युतम्।
भीमसेन महाबाहो कृष्णस्यैव विनिश्चयः।।
"பீமஸேனா ! யுத்தத்தில் தோல்வியே அடையாத உன்னை , இவன் யுத்தத்திற்கு அழைக்கிறான் பார் ! இப்பொழுது இவன் சுய புத்தியோடு பேசவில்லை என்று அறிந்து கொள் . இவன் இப்படி பேச வேண்டும் என்று கிருஷ்ணன் சங்கள்பித்து விட்டான் " என்று சொன்னார் .
भीष्म उवाच।। ( பீஷ்மர் மேலும் சொல்கிறார் )
चेदिराजकुले जातख्यक्ष एष चतुर्भुजः।
रासभारावसदृशं ररास च ननाद च।।
பீமா ! இந்த சிசுபாலன் சேதி ராஜனுக்கு பிறக்கும் போது , மூன்று கண்களோடு, நான்கு கைகளோடு பிறந்தான் . பிறக்கும் போது கழுதை போல இரைந்து ஊளையிட்டான் .
तेनास्य मातापितरौ त्रेसतुस्तौ सबान्धवौ।
वैकृतं तस्यत तौ दृष्ट्वा त्यागायाकुरुतां मतिम्।।
ततः सभार्यं नृपतिं सामात्यं सपुरोहितम्।
चिन्तासंमूढहृदयं वागुवाचाशरीरेणी।।
இப்படி இவன் பிறந்ததை பார்த்த இவன் தாய் தந்தை இருவரும் , இவனை தியாகம் செய்ய முடிவு செய்தனர் . அந்த அரசர் , தன் மனைவியோடும் , மந்திரிகளோடும் , புரோஹிதர்களோடும் கலந்து இதை பற்றி ஆலோசித்து கொண்டு இருந்த போது , அசரீரி வாக்கு கேட்டது .
एष ते नृपते पुत्रः श्रीमाञ्जातो बलाधिकः।
तस्मादस्मान्न भेतव्यमव्यग्रः पाहि वै शिशुम्।।
न च वै तस्य मृत्युस्त्वं न कालः प्रत्युपस्थितः।
यश्च शस्त्रेण हन्ताऽस्य स चोत्पन्नो नराधिप।।
संश्रुत्योदाहृतं वाक्यं भूतमन्तर्हितं ततः।
पुत्रस्नेहाभिसन्तप्ता जननी वाक्यमब्रवीत्।।
"ராஜன் ! உன்னுடைய புத்ரன் பலம் மிகுந்தவனாக பிறந்து இருக்கிறான் . ஆதலால் , இவனை கண்டு பயப்பட வேண்டாம் . கலக்கமில்லாமல் இவனை காப்பாற்று . இவனுக்கு உன்னால் மரணமில்லை . மரணகாலம் இவனுக்கு இப்போது இல்லை .
ராஜன் ! இவனை ஆயுதத்தால் கொல்ல போகிறவன் எவனோ , அவனும் பிறந்து இருக்கிறான் " என்று அசரீரி வாக்கு கேட்டது .
येनेदमीरितं वाक्यं ममैतं तनयं प्रति।
प्राञ्जलिस्तं नमस्यामि ब्रवीतु स पुनर्वचः।।
याथातथ्येन भगवान्देवो वा यदि वेतरः।
श्रोतुमिच्छामि पुत्रस्य कोऽस्य मृत्युर्भविष्यति।।
இப்படி தன் மகனை பற்றி அசரீரி வாக்கு கேட்டதும் , புத்ர பாசம் உள்ள , தாயானவள் , "என் புத்ரனை பற்றி இவ்வாறு பேசியவர் யாரோ , அவரை நான் கை கூப்பி வணங்கி கேட்கிறேன் . மஹிமையுள்ள தேவ புருஷராகிய நீங்கள் யாராக இருந்தாலும் , எனக்காக மறுபடியும் விரிவாக சொல்ல வேண்டுகிறேன் . என் பிள்ளைக்கு காலனாக போகிறவன் யார் என்று அறிய விருபுகிறேன் " என்று பிரார்த்தனை செய்தாள் .
अन्तर्भूतं ततो भूतमुवाचेदं पुनर्वचः।
यस्योत्सङ्गे गृहीतस्य भुजावभ्यधिकावुभौ।।
पतिष्यतः क्षितितले पञ्चशीर्षाविवोरगौ।
तृतीयमेतद्बालस्य ललाटस्थं तु लोचनम्।।
தன்னை மறைத்து கொண்டு பேசிய அந்த தேவன் , மேலும் இவ்வாறு பேசலானான் .
"எவன் தன் மடியில் இந்த குழந்தையை எடுத்து கொள்ளும் போது , இயற்கைக்கு மாறான அதிகப்படியான இரண்டு கைகளும் , 5 தலை நாகம் போல தரையில் விழுமோ , எவனை இந்த குழந்தை பார்த்தவுடனேயே மூன்றாவது கண்ணும் மறைந்து போகுமோ ! அவனே இவனுக்கு காலனாக அமைவான் " என்று சொல்லி மறைந்தது .
निमज्जिष्यति यं दृष्ट्वा सोऽस्य मृत्युर्भविष्यति।
त्र्यक्षं चतुर्भुजं श्रुत्वा तथा च समुदाहृतम्।।
पृथिव्यां पार्थिवाः सर्वे अभ्यागच्छन्दिदृक्षवः।
तान्पूजयित्वा सम्प्राप्तान्यथार्हं स महीपतिः।।
இப்படி அசரீரி சொன்ன பிறகு , நான்கு கைகளோடும் , மூன்று கண்களோடும் இருந்த இவனை பூமியில் இருக்கும் அனைத்து அரசர்களும் வந்து வந்து பார்த்தனர் .
एकैकस्य नृपस्याङ्के पुत्रमारोपयत्तदा।
एवं राजसहस्राणा पृथक्त्वेन यथाक्रमम्।।
சேதி அரசன் , வந்த அரசர்கள் ஒவ்வொருவரையும் தகுந்த மரியாதையோடு பூஜித்து , ஒவ்வொரு அரசனின் மடியிலும் தன் பிள்ளையை கொடுத்து பார்த்தான் . இது போல , அநேக ஆயிரம் அரசர்கள் மடியில் குழந்தையை கொடுத்து பார்த்தான் .
VIDEO
शिशुरङ्के समारूढो न तत्प्राय निदर्शनम्।
एतदेव तु संश्रुत्य द्वारवत्यां महाबलौ।।
இத்தனை முயற்சி செய்தும் , குழந்தையின் அதிகப்படியான அங்கங்கள் மறையவில்லை . மஹாபலசாலிகளான , யாதவர்களான ராமனும் கிருஷ்ணனும் துவாரகா நகரத்தில் இதை பற்றி கேள்விப்பட்டனர் .
ततश्चेदिपुरं प्राप्तौ सङ्कर्षणजनार्दनौ।
यादवौ यादवीं द्रुष्टुं स्वसारं तौ पितुस्तदा।।
अभिवाद्य यथान्यायं यथाश्रेष्ठं नृपं च ताम्।
कुशलानामयं पृष्ट्वा निषण्णौ रामकेशवौ।।
யாதவ குல பெண்ணான , தன் தகப்பனார் "வசுதேவரின் " தங்கையான சேதி நாட்டு அரசியை பார்க்க பலராமரும் , கிருஷ்ணனும் வந்தனர் . ராமரும் , கிருஷ்ணனும் தன் தந்தைக்கு சமமான அந்த அரசரை வந்தனம் செய்து க்ஷேமத்தை விஜாரித்தார் .
साऽभ्यर्च्य तौ तदा वीरौ प्रीत्या चाभ्यधिकं ततः।
पुत्रं दामोदरोत्सङ्गे देवी संन्यदधात्स्वयम्।।
வந்திருந்த ராம , கிருஷ்ணன் இருவரையும் ஆசையோடு வரவேற்று , தன் பிள்ளையை தானே கிருஷ்ணன் மடியில் வைத்தாள்
न्यस्तमात्रस्य तस्याङ्के भुजावभ्यधिकावुभौ।
पेततुस्तच्च नयनं न्यमज्जत ललाटजम्।।
கிருஷ்ணன் மடியில் வைத்த மாத்திரத்தில் , அந்த குழந்தையின் அதிகப்படியான இரண்டு கைகளும் விழுந்தன . அதன் நெற்றியில் (லலாடம் ) இருந்த கண்ணும் உடனே மறைந்தன .
तद्दृष्ट्वा व्यथिता त्रस्ता वरं कृष्णमयाचत।
ददस्व मे वरं कृष्ण भयार्ताया महाभुज।।
त्वं हि आर्तानां सम आश्वासो भीतानाम् अभयप्रदः।
एवम् उक्तस्ततः कृष्णः स : अब्रवीद् मदुनन्दनः।।
இதை கண்ட அந்த அரசி , பெரும் துக்கமும் , பயமும் அடைந்தாள் . கிருஷ்ணனை பார்த்து , "கிருஷ்ணா ! உறுதியான புஜங்கள் கொண்டவனே ! பயத்தினால் தவிக்கும் எனக்கு நீ ஒரு வரம் தருவாயோ ? நீ துயரப்படுபவர்களுக்கு ஆறுதலும் , பயத்தில் உள்ளவர்களுக்கு அபயமும் அளிப்பவன் ஆயிற்றே ! " என்றாள்
मा भैस्त्वं देवि धर्मज्ञे न मत्तोऽस्ति भयं तव।
ददामि कं वरं किं च करवाणि पितृष्वसः।।
शक्यं वा यदि वाऽशक्यं करिष्याणि वचस्तव।
एवमुक्ता ततः कृष्णमब्रवीद्यदुनन्दनम्।।
இவ்வாறு இவள் சொன்னதை கேட்ட கிருஷ்ணன் "அரசியே ! தர்மம் தெரிந்தவளே ! நீங்கள் பயப்பட வேண்டாம் ! என்னால் உங்களுக்கு பயம் வேண்டாம் . என் தகப்பனாரின் சகோதரியே ! உங்களுக்கு என்ன வரம் நான் கொடுக்க வேண்டும் , அல்லது நான் என்ன செய்ய வேண்டும் ? செய்ய முடிந்ததாக இருந்தாலும் , செய்ய முடியாததாக இருந்தாலும் நீங்கள் சொன்னால் செய்வேன் " என்று வாக்கு கொடுத்தார் .
शिशुपालस्यापराधान्क्षमेथास्त्वं महाबल।
मत्कृते यदुशार्दूल विद्ध्येनं मे वरं प्रभो।।
இப்படி சொன்ன கிருஷ்ணனை பார்த்து , "மஹா பலசாலியே ! யது குலத்தில் உயர்ந்தவனே ! ப்ரபோ ! சிசுபாலன் செய்யும் பிழைகளை எனக்காக பொறுப்பாயாக . இதுவே நான் கேட்கும் வரம் " என்றாள் .
कृष्ण उवाच। ( கிருஷ்ணர் சொல்கிறார் )
अपराधशतं क्षाम्यं मया ह्यस्य पितृष्वसः।
पुत्रस्य ते वधार्हस्य मा त्वं शोके मनः कृथाः।।
"அத்தை ! உன்னுடைய பிள்ளை என்னை பார்த்து 100 முறை ஏசும் வரை , அவன் அபராதத்தை பொறுத்து கொண்டு இருப்பேன் .நீ துக்கத்தில் மனதை செலுத்தாதே !" என்று சமாதானம் செய்து வாக்குறுதி கொடுத்தார் .
भीष्म उवाच। ( பீஷ்மர் பீமனிடம் சொன்னார் )
स जानन्नात्मनो मृत्युं कृष्णं यदुसुखावहम्।
एवमेष नृपः पापः शिशुपाः सुमन्दधीः।
त्वां समाह्वयते वीर गोविन्दवरदर्पितः।।
வீரனான பீமஸேனா ! யாதவ மக்களை காப்பாற்றி சுகப்படுத்தும் ஸ்ரீகிருஷ்ணன் தான் 'தனக்கு ம்ருத்யுவை தர போகிறான் ' என்று தெரிந்த இந்த பாவியான சிசுபாலன் , கிருஷ்ணன் கொடுத்த வரத்தினால் பாதுகாக்க படுவதால் , கர்வப்பட்டு , மதி இழந்து உன்னை வேண்டுமென்றே யுத்தத்திற்கு அழைக்கிறான் .
भीष्म उवाच।। ( மேலும் பீஷ்மர் சொன்னார் )
नैषा चेदिपतेर्बुद्धिर्यया त्वाह्वयतेऽच्युतम्।
नूनमेव जगद्भर्तुः कृष्णस्यैव विनिश्चयः।
பீமஸேனா ! நீ எந்த யுத்தத்திலும் தோல்வி அடையாதவன் என்று தெரிந்தும் , இந்த சேதி நாட்டு அரசன் உன்னை யுத்தம் செய்ய அழைக்கிறான் என்றால் , இவன் இவனுடைய புத்தியால பேசவில்லை என்று புரிந்து கொள் . லோகநாதனாகிய கிருஷ்ணனின் எண்ணத்தின் படி தான் இவன் இப்போது பேசி கொண்டு இருக்கிறான் .
को हि मां भीमसेनाद्य क्षितावर्हति पार्थिवः।
क्षेप्तुं कालपरीतात्मा यथैष कुलपांसनः।।
இவன் குலத்தை நாசம் செய்து கொள்ள , கெட்ட காலத்தின் பிடியினால் மதி கேட்டு பேசும் இந்த சிசுபாலன் , யாருமே தூஷிக்க துணியாத என்னை பார்த்து தூஷிக்கிறான் .
एष ह्यस्य महाबाहुस्तेर्जोशश्च हरेर्ध्रुवम्।
तमेव पुनरादातुं कुरुतेऽत्र मतिं हरिः।।
உறுதியான புஜங்களை கொண்ட இந்த சிசுபாலனும் , ஸ்ரீ கிருஷ்ணனின் சக்தியில் ஒரு பாகம் தான் என்பது மறுக்கமுடியாத நிஜமே . ஸ்ரீ கிருஷ்ணன் இப்போது அந்த சக்தியை தன்னோடு சேர்த்து கொள்ள முடிவு செய்து விட்டார் என்று தெரிகிறது .
VIDEO
येनैष कुरुशार्दूल शार्दूल इव चेदिराट्।
गर्जत्यतीव दुर्बुद्धिः सर्वानस्मानचिन्तयन्।।
குரு வம்சத்தில் உதித்த உத்தமனே ! அதனால் தான் இன்று இந்த மதி கெட்ட சிசுபாலன் , நாம் எல்லோரையும் மதிக்காமல் புலி போல கர்ஜித்து கொண்டு இருக்கிறான் . இவ்வாறு பீஷ்மர் சொன்னார்
वैशम्पायन उवाच।। ( வைசம்பாயனர் சொல்கிறார் )
ततो न ममृषे चैद्यस्तद्भीष्मवचनं तदा।
उवाच चैन सङ्क्रुद्धः पुनर्भीष्ममथोत्तरम्।।
இப்படி பீஷ்மர் சொல்வதை கேட்ட சேதி நாட்டு அரசன் சிசுபாலன் , பொறுக்க முடியாமல் , மறுபடியும் பீஷ்மரை பார்த்து கோபமாக பேசலானான் .
शिशुपाल उवाच।। ( சிசுபாலன் பேசுகிறான் )
द्विषतां नोऽस्तु भीष्मैष प्रभावः केशवस्य यः।
यस्य संस्तववक्ता त्वं बन्दिवत्सततोत्थितः।।
ஏய் பீஷ்மா ! நீ இந்த கேசவனை துதி பாடியதை எல்லாம் என் மீது பாட கற்றுக்கொள் . நீ ராஜாக்களுக்கு துதி பாடும் பந்திக்கள் போல , ஓயாமல் இவனையே ஸ்துதி செய்கிறாயே !
संस्तवे चमनो भीष्म परेषां रमते यदि।
तदा संस्तुहि राज्ञस्त्वमिमं हित्वा जनार्दनम्।।
ஏய் பீஷ்மா ! உனக்கு அப்படி தான் வெளியாளான ஜனார்தனனை துதிக்க பழக்கம் இருந்தால் , அதை மாற்றி