Followers

Search Here...

Showing posts with label யாரை. Show all posts
Showing posts with label யாரை. Show all posts

Saturday 10 December 2022

யாரை நண்பனாக கொள்ள வேண்டும்? யாரை நண்பனாக கொள்ள கூடாது? யுதிஷ்டிரர் கேட்க, பதில் சொல்கிறார் பீஷ்மர். அறிவோம் மஹாபாரதம் - வியாசர்

யாரிடம் நட்பு வைத்து கொள்ள கூடாது? யாரை நண்பனாக கொள்ள கூடாது?

இப்படி யுதிஷ்டிரர் கேட்க, பதில் சொல்ல ஆரம்பிக்கிறார் பீஷ்மர்.


"யுதிஷ்டிரா! யாரை நண்பனாக கொள்ள வேண்டும்? யாரை நண்பனாக ஏற்க கூடாது? என்று உண்மையாக சொல்கிறேன். கேள்.


लुब्धः क्रूर: त्यक्त धर्मा निकृतिः शठ एव च।

क्षुद्रः पापसमाचारः सर्व-शङ्की तथा अलसः।।  

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

1. பேராசை குணத்தோடு இருப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

2. மஹா கோபக்காரனை நண்பனாக ஏற்க கூடாது.

3. தன் தர்மத்தை விட்டவனை நண்பனாக ஏற்க கூடாது.

4. பிறருக்கு ஹிம்ஸை செய்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

5. ரகசியமாக பிடிக்காததை செய்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

6. முயற்சி இல்லாதவனை நண்பனாக ஏற்க கூடாது.

7. சோம்பேறி குணமுள்ளவனை நண்பனாக ஏற்க கூடாது.

दीर्घसूत्रो अनृजुः क्रुष्टो गुरु-दार-प्रधर्पकः।

व्यसने यः परित्यागी दुरात्मा निरपत्रपः।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

8. கோணல் புத்திக்காரனை நண்பனாக ஏற்க கூடாது.

9. பிறரால் திட்டப்பட்டவனை நண்பனாக ஏற்க கூடாது.

10. தன் குருவின் தாரத்தை அடைய நினைத்தவனை நண்பனாக ஏற்க கூடாது.

11. துன்பம் ஏற்படும் சமயத்தில் விலகி செல்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

12. கெட்ட புத்தியுள்ளவனை நண்பனாக ஏற்க கூடாது.

13. வெட்கமே இல்லாதவனை நண்பனாக ஏற்க கூடாது.

सर्वतः-पापदर्शी च नास्तिको वेदनिन्दकः।

संप्रकीर्ण इन्दियो-लोके यः कालनिरतश्चरेत्।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

14. யாரிடமும் குறை பார்ப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

15. கடவுள் இல்லை என்று சொல்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

16. வேத மந்திரங்களை இகழ்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

17. புலன்களுக்கு கட்டுப்பட்டு உலகத்தோடு செல்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

18. காமத்தில் பற்று கொண்டு உலகத்தில் அலைபவனை நண்பனாக ஏற்க கூடாது.

असभ्यो लोकविद्विष्टः समये चानवस्थितः।

पिशुनोऽथाकृतप्रज्ञो मत्सरी पापनिश्चयः।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

19. பலர் கூடும் சபையில் இருக்க தகுதி இல்லாதவனை நண்பனாக ஏற்க கூடாது.

20. உலகத்தால் பகைக்கப்பட்டவனை நண்பனாக ஏற்க கூடாது.

21. கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் ஏமாற்றியவனை நண்பனாக ஏற்க கூடாது.

22. பிறரை பற்றி கோள் சொல்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

23. கல்வி அறிவு (Subject matter expert) இல்லாதவனை நண்பனாக ஏற்க கூடாது.

24. அடுத்தவன் நன்றாக இருப்பதை கண்டு பொறாமைப்படுபவனை நண்பனாக ஏற்க கூடாது.

25. கெட்ட எண்ணத்தோடு இருப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

दुःशीलो अथाकृत-आत्मा च नृशंसः कितवस्तथा।

मित्रै:-अपकृति: नित्यम्-अटते-अर्थं धनेप्सया।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

26. கெட்ட இயற்கையோடு (by nature) இருப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

27. நல்ல மனம் இல்லாதவனை நண்பனாக ஏற்க கூடாது.

28. ஆலோசிக்காமல், கொடுமையான செயல்கள் செய்ய தயங்காதவனை நண்பனாக ஏற்க கூடாது.

29. வேடதாரியை (கபடம்) நண்பனாக ஏற்க கூடாது.

30. நண்பர்களோடு விரோதம் செய்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

31. எப்பொழுதும் பொருளை பற்றியே நினைத்து அலைபவனை நண்பனாக ஏற்க கூடாது.

ददत:-च-यथा-शक्ति यो न तुष्यति मन्दधीः।

अधैर्यम् अपि यो युङ्क्ते सदा मित्रं नराधमः।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

32. தனக்கு ஒருவன் தன் சக்திக்கு உட்பட்டு உதவி செய்தாலும், அதை கண்டு சந்தோஷமடையாமல் இருக்கும் அல்பனை நண்பனாக ஏற்க கூடாது.

33. எப்பொழுதும் நண்பனுக்கு பயத்தை உண்டு பண்ணுபவனை நண்பனாக ஏற்க கூடாது.

अस्थान-क्रोधनो यश्च अकस्माच्च विरज्यते।

सुहृद: च एव कल्याणानाशु त्यजति किल्बिपी।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

34. காரணமில்லாமல் கோபப்படுபவனை நண்பனாக ஏற்க கூடாது.

35. காரணமில்லாமல் வெறுப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

36. நண்பர்களையும், நல்ல காரியங்களையும் திடீரன்று விலக்குபவனை நண்பனாக ஏற்க கூடாது.

अल्पेऽप्यपकृते मूढे न संस्मरनि यत्कृतम्।

कार्यसेवी-च-मित्रेषु मित्रद्वेषी नराधिप।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

37. அறியாமல் செய்த அல்ப உதவியானாலும், அதை நினைத்து பார்க்காமல் இருப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

38. தன் காரியம் நடக்க வேண்டுமென்றால், நண்பர்களை கூட்டி கொள்ளும் த்வேஷியை நண்பனாக ஏற்க கூடாது.

शत्रुर्मित्रमुखो यश्च जिह्नप्रेक्षी विलोचनः।

न तुष्यति च कल्याणे यम्त्यजेत्तादृशं नरम्।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

39. நண்பனை போலவே இருக்கும் சத்ருவை நண்பனாக ஏற்க கூடாது.

40. கண்ணை நேருக்கு நேர் பார்க்காமல், கோணல் பார்வையோடு பேசுபவனை நண்பனாக ஏற்க கூடாது.

41. எப்பொழுதும் தனக்கு எதிரான பார்வை கொண்டவனை நண்பனாக ஏற்க கூடாது.

42. நன்றாக இருப்பதை பார்த்து சந்தோஷப்படாதவனை நண்பனாக ஏற்க கூடாது.

पानपो द्वेषणः क्रोधी निर्घृणः परुपस्तथा।

परोपतापी मित्रध्रुक् तथा प्राणिवधे रतः।।

कृतघ्नश्चाधमो लोके न सन्धेयः कथंचन।

मित्रद्वेषी ह्यसंधेयः सन्धेयानपि मे शृणु।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

குடிகாரர்களும், மனதில் பகை உணர்ச்சி உள்ளவர்களும், கோபமுள்ளவர்களும், இரக்கமில்லாதவர்களும், கெட்ட புத்தி உள்ளவர்களும், பிறரை துன்பப்படுத்துபவர்களும், நண்பனுக்கு துரோகம் செய்பவர்களும், மற்ற உயிர்களை கொல்பவர்களும், நன்றி கொன்றவர்களும், நண்பனாக கூட இருக்க தகுதி அற்றவர்கள்.

மற்ற நண்பர்களை பகையாக நினைப்பவனை  நண்பனாக ஏற்கவே கூடாது. 

இனி யாரிடம் ஸ்நேஹம் செய்து கொள்ள வேண்டும்? என்று சொல்கிறேன். கேள்.

कुलीना वाक्य-संपन्ना ज्ञानविज्ञानकोविदाः।

रूपवन्तो गुणोपेता: तथा अलुब्धा जित-श्रमाः।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

1. தர்மம் அதர்மம் சொல்லி வளர்க்கப்பட்ட நல்ல குலத்தில் பிறந்தவனை நண்பனாக ஏற்க வேண்டும்.

2. இனிமையாக பேச்சு உள்ளவனை நண்பனாக ஏற்க வேண்டும்.

3. அறிவிலும், அந்த அறிவில் மெய் எது என்று அறிந்தும் இருக்கும் சாமர்த்தியசாலியை நண்பனாக ஏற்க வேண்டும்.

4. அங்க குறை இல்லாமல், நல்ல ரூபம் உள்ளவனை நண்பனாக ஏற்க வேண்டும்.

5. நல்ல குணமுள்ளவனை  நண்பனாக ஏற்க வேண்டும்.

6. ஆசை இல்லாதவனை  நண்பனாக ஏற்க வேண்டும்.

7. தன் சிரமத்தை பாராட்டாது இருப்பவனை நண்பனாக ஏற்க வேண்டும்.

सन्मित्राश्च कृतज्ञाश्च सर्वज्ञा लोभवर्जिताः।

माधुर्यगुणसंपन्नाः सत्य-सन्धा जितेन्द्रियाः।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

8. நல்ல நண்பரகளே கொண்டிருப்பவனை நண்பனாக ஏற்க வேண்டும்.

9. நல்ல அறிவு உள்ளவனை நண்பனாக ஏற்க வேண்டும்.

10. எல்லாம் அறிந்தவனை நண்பனாக ஏற்க வேண்டும்.

11. தன்னிடம் உள்ள செல்வத்தில் பேராசை (லோபி) இல்லாதவனை, நண்பனாக கொள்ள வேண்டும்http://www.proudhindudharma.com/2018/10/MariyadhaRaman.html

12. இனிய குணம் நிறைந்துள்ளவனை, நண்பனாக கொள்ள வேண்டும்.

13. சத்தியத்தையே பேசுபவர்களை, நண்பனாக கொள்ள வேண்டும்.

14. புலன்களை அடக்கியவர்களை, நண்பனாக கொள்ள வேண்டும்.

व्यायामशीलाः सततं भृत्यपुत्राः कुलोद्वहाः।

दोषैः प्रमुक्ताः प्रथितास्ते ग्राह्याः पार्थिवै: नराः।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

15. எப்பொழுதும் சிரமம் பார்க்காமல் காரியம் செய்பவர்களை, நண்பனாக கொள்ள வேண்டும்.

16. நல்ல குலத்தில் பிறந்த பிள்ளைகளை, நண்பனாக கொள்ள வேண்டும்.

17. நல்ல குலத்தில் தலையாக இருப்பவரை, நண்பனாக கொள்ள வேண்டும்.

18. எந்த குறையும் சொல்ல முடியாதபடி வாழ்பவர்களை, நண்பனாக கொள்ள வேண்டும்.

19. பிரபலமாக இருப்பவனை, நண்பனாக கொள்ள வேண்டும்.

20. அரசர்கள் நண்பனாக கொள்பவனை, நண்பனாக கொள்ள வேண்டும்.

यथाशक्ति समाचाराः संप्रतुष्यन्ति हि प्रभो।

नास्थाने क्रोधवन्त: च न च अकस्माद् विरागिणः।।

विरक्ताश्च न दुष्यन्ति मनसा अपि अर्थ कोविदाः।

आत्मानं पीडयित्व अपि सुहृत्कार्यपरायणाः।

विरज्यन्ति न मित्रेभ्यो वासो रक्तमिवाविकम्।।

दोषां च लोभ-मोह आदीन् अर्थेषु युवतीपु च।

न दर्शयन्ति सुहृदो विश्वस्ता बन्धुवत्सलाः।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

ப்ரபுவே ! இப்படிப்பட்ட நண்பர்கள், தன் சக்திக்கு உட்பட்ட காரியங்கள் செய்து, சந்தோஷப்படுத்துவார்கள்.

இப்படிப்பட்ட நண்பர்கள், காரணமில்லாமல் கோபத்தையும், காரணமில்லாமல் வெறுப்பையும் காட்ட மாட்டார்கள்

இப்படிப்பட்ட நண்பர்கள், ஒருவேளை வெறுப்பு அடைந்தாலும், காரியத்தில் சாமர்த்தியசாலிகளாகவே இருப்பார்கள்.

இப்படிப்பட்ட நண்பர்கள், மனத்தால் குற்றம் செய்ய மாட்டார்கள்.

இப்படிப்பட்ட நண்பர்கள், தன்னை கஷ்டப்படுத்திக்கொண்டாவது, நண்பனுக்கு உதவி செய்வார்கள்.

இப்படிப்பட்ட நண்பர்கள், ஆட்டு முடியில் சிவப்பு வர்ணம் பூசப்பட்ட ஆடை எப்படி நிறம் மாறாமல் இருக்குமோ, அது போல, நிறம் மாறாமல் தன் நண்பனிடம் ஸ்நேஹம் மாறாமல் இருப்பார்கள்.

நம்பிக்கையும், குடும்பத்தில் நம்பிக்கையும் பெற்று இருக்கும் இப்படிப்பட்ட நண்பர்கள், நண்பனின் பொருளில் ஆசையோ, நண்பனின் பெண்ணிடமோ மோகம் அடைய மாட்டார்கள்.

लोष्ट-काञ्चनतुल्यार्थाः सुहृत्सु दृढबुद्धयः।

ये चरन्त्यनभीमाना निसृष्टार्थविभूषणाः।

संगृह्णन्तः परिजनं स्वाम्यर्थपरमाः सदा।।

ईदृशैः पुरुषश्रेष्ठैर्यः सन्धिं कुरुते नृपः।

तस्य विस्तीर्यते राज्यं ज्योत्स्ना ग्रहपतेरिव।।

सत्ववन्तो जितक्रोधा बलवन्तो रणे सदा।

जन्मशीलगुणोपेताः सन्धेयाः पुरुषोत्तमाः।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

மண்ணையும்-பொன்னையும் சமமாக பார்க்கும், நண்பனிடத்தில் உறுதியான புத்தியோடு இருக்கும், நம்பிக்கையை குணமாக கொண்டிருக்கும், செல்வத்திலும்-நகைகளிலும் ஆசையற்று இருக்கும்,  குடும்பத்தை சேர்க்க முயற்சிக்கும், தன் முதலாளியின் பொருளில் பெரும் மதிப்பு வைத்திருக்கும் உத்தமர்களை எந்த அரசன் நண்பனாக கொள்கிறானோ, அந்த அரசனுடைய அரசாட்சியானது, சந்திரனின் குளிர்ந்த கிரணங்கள் மேலும் மேலும் பிரகாசிப்பது போல பிரகாசிக்கும். யுத்தத்தில் பலமுள்ளவர்களை, கற்றுக்கொடுக்காமல், பிறப்பிலேயே நல்ல குணத்தோடு இருக்கும் உத்தமர்களை அரசன் நேசித்து தன்னோடு சேர்த்து கொள்ள வேண்டும்.

ये च दोपसमायुक्ता नराः प्रोक्ता मयाऽन।

तेषामप्यधमा राजन्कृतघ्ना मित्रघातकाः।

त्यक्तव्यास्तु दुराचाराः सर्वेषामिति निश्चयः।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

குற்றமில்லாத அரசனே!  யாரை நண்பனாக சேர்த்து கொள்ள கூடாது? என்று நான் முன்பு சொன்னதில், குறிப்பாக, நன்றி கொன்றவனை, நட்புக்கு துரோகம் செய்தவனை மிகவும் தாழ்ந்தவன் (அதமன்) என்று தள்ள வேண்டும்.

கெட்ட நடத்தை உள்ளவனை, பொதுவாக யாருமே நிச்சயமாக சேர்த்து கொள்ள கூடாது


இவ்வாறு பீஷ்மர், "யாரை நண்பனாக கொள்ள வேண்டும்? யாரை நண்பனாக கொள்ள கூடாது?" என்று யுதிஷ்டிரருக்கு விளக்கினார்.

Thursday 13 February 2020

மஹாலக்ஷ்மி யாரிடம் தங்குவாள்? யாரை விட்டு விலகுவாள்? தெரிந்து கொள்வோமே...

ஸ்ரீ கிருஷ்ணர், துவாரகை என்ற ஆச்சரியமான நகரத்தை உருவாக்கி, ராஜ்யம் செய்து கொண்டிருந்தார்.
சத்யபாமாவுக்கு, அவள் அரண்மனையில் செல்வங்கள் கொட்டி இருந்தாலும், 'போதவில்லையே!' என்று எப்பொழுதும் குறைப்பட்டு கொண்டாள்.
"இன்னும் கொஞ்சம் செல்வம் சேர்ந்தால் நன்றாக இருக்குமே!!" என்று கூட தோன்றியது.




சாஷாத் நாராயணனின் அவதாரமான கிருஷ்ணனுக்கு மனைவியாக இருந்தும், 
பெரிய அரண்மனையில் இருந்தும், 
'சத்யபாமா' இப்படி குறைபட்டு கொண்டாள்.
மஹாலக்ஷ்மியே ருக்மிணி தேவியாக அவதரித்து இருந்தும்,
'ருக்மிணி அனுக்கிரகம் தனக்கு வேண்டாம்' என்று நினைத்தாள்.

'ருக்மிணியின் அரண்மனையில் செல்வங்கள் நிறைந்து இருப்பது போல, தன்னிடம் இல்லையே!!'
என்று அசூயைபட்டாள் சத்யபாமா.
ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து, "மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டாள்.

சத்யபாமாவிடம் கிருஷ்ணரும்,
"சரி, அப்படியென்றால் மஹாலக்ஷ்மியை ஸ்தோத்திரம் செய்து அவள் கடாக்ஷம் பெறுவோம்"
என்று, பரப்ரம்மமாகிய ஸ்ரீ கிருஷ்ணரே, க்ஷீராப்தியில் இருக்கும் மஹாலக்ஷ்மியை ஸ்தோத்திரம் செய்து தரிசனம் தர பிரார்த்தித்தார்.

கிருஷ்ண பரமாத்மா கூப்பிட்டும், மஹாலக்ஷ்மி வராமல் இருப்பாளா?...

தாமரை பூவின் மேல் அமர்ந்தபடி, இரண்டு கைகளிலும் தாமரை மலரை வைத்துக்கொண்டு,
மஹாலட்சுமி காட்சி தந்தாள்.
சாமானிய மனிதனை போல லட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி விட்டு, கிருஷ்ண பரமாத்மா, ச்ரத்தையுடன் இரு கைகளையும் கூப்பி வணங்கி நிற்க... சத்யபாமாவும் ஸ்ரீகிருஷ்ணருடன் சேர்ந்து வணங்கினாள்.

ஸ்ரீ கிருஷ்ணர் நாராயணனின் அவதாரம் தானே!!
அவரின் பத்னி தானே மஹாலக்ஷ்மி!!
மஹாலக்ஷ்மிக்கு ஸ்ரீ கிருஷ்ணர் நாராயணன் என்று தெரியாதா?
கிருஷ்ண பரமாத்மா, எதற்கு வணங்கினார்?... என்ற கேள்வி நமக்கு எழலாம்.

ஒரு சமயம் அர்ஜுனனை வைகுண்டமே அழைத்து கொண்டு சென்று விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.
பரவாசுதேவன் நாராயணனை, ஸ்ரீ கிருஷ்ணர் நமஸ்கரித்தார்.
ஏன் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னையே நமஸ்கரித்தார்? 
ஸ்ரீ கிருஷ்ணர் நமஸ்கரிக்கவில்லையென்றால், தனக்கு பின்னால் நிற்கும் அர்ஜுனன் மரம் போல நிற்பான் என்று, தானே நமஸ்கரிக்க, அர்ஜுனனும் பரவாசுதேவனை நமஸ்கரித்தான்.

ராமபிரான், தன் அர்ச்ச அவதாரமான ஸ்ரீரங்கநாதரை வணங்கியதும் இதன் காரணமே...

நாம் அவரிடம் எப்படி பழக வேண்டும்? என்பதையும் தானே காட்டுகிறார்.

அதுபோல, இப்பொழுது ஸ்ரீ கிருஷ்ணர், மஹாலக்ஷ்மியை பார்த்து கை குவித்துக்கொண்டு,
"அம்மா.... நீ ஒரு இடத்தில் ஸ்திரமாக இருக்கமாட்டேன் என்று இருக்கிறாயே!!
திடீரென ஒருவனை கோடீஸ்வரனாக செய்துவிடுகிறாய்..
திடீரென ஒருவனை தரித்திரனாக செய்துவிடுகிறாய்...
ஒரு இடத்தில் இல்லாமல் ஓடி ஓடி போய் விடுகிறாயே!!
ஒரே இடத்தில் ஸ்திரமாக நீ இருக்க கூடாதா?"
என்று கிருஷ்ண பரமாத்மா கேட்க,

உடனே ஸ்ரீதேவி சொல்கிறாள்,
"நான் ஒருவனிடம் வருவதற்கு காரணம் இருக்கிறது..
எதற்காக நான் ஒருவனிடம் வருகிறேன் என்று சொல்கிறேன்..

நான் வந்தால், 'தான தர்மம் செய்வானே!' என்பதற்காக வருகிறேன்.
இப்படி ஆசையோடு நான் வந்த பிறகு, இவன் என்ன செய்கிறான் தெரியுமா?




முதலிலாவது கொஞ்சம் தான தர்மம் செய்து கொண்டிருந்தவன்,
நான் செல்வங்களை அள்ளி கொடுத்த பின், கொஞ்சம் செய்து கொண்டிருந்த தான தர்மத்தையும் விட்டு விடுகிறான்.
அது மட்டுமல்ல, 
என் கடாக்ஷத்தால் கிடைக்கும் செல்வங்களை கொண்டு,
எவர்கள்  'சூதாடு'கிறார்களோ!
எவர்கள்  'மது பானம்' அருந்துகிறார்களோ!
எவர்கள்  'ஜீவ ஹிம்சை' செய்கிறார்களோ!
இவர்கள் வீட்டில் நான் தங்குவதில் எனக்கு பிரியமில்லை.
மேலும்,
எவன் 'வேசி வீட்டுக்கு' செல்கிறானோ!
எவர்கள் 'பொய் சாட்சி' சொல்கிறார்களோ!
எவர்கள் 'பேராசையுடன்' இருக்கிறார்களோ!
எவர்கள் 'லோபியாக' (கஞ்சன்) இருக்கிறார்களோ!
இவர்களிடத்தில் நான் இருப்பதை விரும்ப மாட்டேன்.




மேலும்,
எவர்கள் பிறருடைய சொத்தை அபகரிக்க நீதிமன்றத்திலேயே நேரத்தை செலவழிக்கிறார்களோ!
எவர்கள் மற்றவர்களை பார்த்து அசூயை (பொறாமை) படுகிறார்களோ!
அவர்களிடத்திலும் நான் இருப்பதை விரும்பாமல் சென்று விடுவேன்.
மேலும்,
எவர்கள் பிறருடைய ஏழ்மையை பார்த்து சந்தோஷப்படுகிறார்களோ!
எவர்கள் தன்னிடம் உள்ள செல்வங்களை நினைத்து கர்வப்பட்டு கொள்கிறார்களோ!
எவர்கள் தற்புகழ்ச்சியே செய்து கொள்கிறார்களோ!
அவர்களிடத்தில் இருந்தும் நான் சென்று விடுகிறேன்.

தானம் வாங்க தகுதி இல்லாதவனுக்கு யார் அள்ளி கொடுகிறார்களோ!
யாருக்கு தானம் கொடுப்பது நியாயமோ அவர்களுக்கு தானம் கொடுக்காமல் யார் தள்ளுகிறார்களோ!
சாதுக்கள், மகாத்மாக்கள் விஷயத்தில் யார் தர்மம் செய்யவில்லையோ!
தெய்வங்கள் விஷயத்தில் யார் தர்மம் செய்யவில்லையோ!
தர்மங்கள் விஷயத்தில் யார் தர்மம் செய்யவில்லையோ!
அவர்கள் வீட்டில் நான் தங்குவதில்லை.

மேலும்,
எவர்கள் சோம்பேறிகளோ!
எவர்கள் நாதீகர்களோ!
எவர்கள் தன் ஆசாரத்தை, தர்மத்தை செய்வதில்லையோ!
அவர்கள் வீட்டில் நான் தங்குவதில்லை.
மேலும்,
விசேஷமாக சொல்கிறேன்...
யார் விஷ்ணுவிடம் குறிப்பாக த்வேஷம் காட்டுகிறார்களோ!
யார் விஷ்ணுவின் அடியார்களை கிண்டல், கேலி என்று த்வேஷிக்கிறார்களோ!
அவர்களை விட்டு உடனேயே விலகி விடுவேன்."
என்று மஹாலக்ஷ்மி சொன்னாள்.
செல்வமே இல்லாமல், ஏழையாக இருந்தும், மஹாலக்ஷ்மி சாநித்யம் இருந்ததால், குசேலன் ஏழ்மை நிலையிலும் ஒரு குறையும் தோன்றாமல், நிம்மதியாக இருந்தார்.




சத்யபாமா "ருக்மிணி கடாக்ஷம் வேண்டாம்' என்று நினைத்ததால், 
செல்வம் குவிந்து கிடந்தும், ஸ்ரீ கிருஷ்ணரே கணவனாக அமைந்தும், போதவில்லையே என்ற மனகுறையுடன் இருந்தாள் சத்யபாமா.
இது மஹாபாரதத்தில் நடந்த சம்பவம்.

சத்யபாமா "ருக்மிணி கடாக்ஷம் வேண்டாம்' என்று நினைத்ததால், விஷ்ணுவின் பக்தையை வெறுத்ததால், சத்யபாமாவுக்கே இப்படி மனக்குறை ஏற்பட்டது என்று கவனிக்க வேண்டும்.

மஹாலக்ஷ்மி தாயார் இப்படி சொல்ல, ஸ்ரீ கிருஷ்ணர் பேசினார்..
"அம்மா... நீ இப்பொழுது என்ன காரணத்தால் நீ ஒருவன் வீட்டில் நிலையாக இருப்பதில்லை என்று சொன்னாய்.
இனி,
நீ எந்த வீட்டில் ஸ்திரமாக இருப்பாய் என்றும் சொல்ல வேண்டும்"
என்று கிருஷ்ண பரமாத்மா கேட்க,
மஹாலக்ஷ்மி சொல்ல ஆரம்பித்தாள்...
"எவனிடத்தில் நன்னடத்தை இருக்கிறதோ!
எந்த வீட்டில் தான தர்மங்கள் நடக்கிறதோ!
எந்த வீட்டில் சாதுக்களுக்கு மரியாதை இருக்கிறதோ!
அந்த வீட்டில் நான் சாஸ்வதமாக இருப்பேன்.

எந்த வீடு பசுஞ்சாணியால் மெழுக்கப்பட்டு, வாசலில் அலங்காரமாக கோலங்கள் போட்டு, சுத்தமாக இருக்கிறதோ!
எந்த வீட்டில் துளசி செடியோ, வில்வ மரமோ இருக்கிறதோ!
அந்த வீட்டில் நான் இருக்க ஆசைப்படுவேன்.

எந்த வீட்டில் சுமங்கலியான பெண்கள் நிறைய இருக்கிறார்களோ!
அந்த சுமங்கலியாக இருக்கும் பெண்கள், எந்த வீட்டில் மாலை வேளையில் முத்து போல அழகான தீபம் ஏற்றி வைக்கிறார்களோ!
அந்த வீட்டில் நான் இருப்பேன்.
எந்த வீட்டில் பகவானை ஆராதனை செய்யும் மணி ஓசை தினமும் கேட்கிறதோ!
எந்த வீட்டில் என் பதியான விஷ்ணுவுக்கு பூஜை தினமும் நடக்கிறதோ!
எந்த வீட்டில் வைஷ்ணவனுக்கு அன்ன தானம் நடக்கிறதோ!
அந்த வீட்டில் நான் இருப்பேன்.
எந்த வீட்டில் வேத மந்திரங்கள் சொல்லப்படுகிறதோ!
எந்த வீட்டில் ஸ்தோத்திர பாடங்கள் நடக்கிறதோ!
எந்த வீட்டில் அங்கு உள்ளவர்கள் யாரிடத்திலும் விநயமாகவும், அன்புடனும் பழகுகிறார்களோ!
அந்த வீட்டில் நான் இருப்பேன்.

எந்த வீட்டில் இருப்பவர்கள் மற்ற சொந்தங்களை பார்த்து பொறாமை, அசூயை அடையாமல் இருக்கிறார்களோ!
எந்த வீட்டில் ஒருவருக்கு ஒருவர் ப்ரேமையுடன் (அன்புடன்) இருக்கிறார்களோ!
அந்த வீட்டில் நான் இருப்பேன்.

எந்த வீட்டில், ஒரே கூச்சலும், சண்டையும், துக்கமும், அழுகையும், ஒப்பாரியும் இருக்கிறதோ!
அந்த வீட்டில் எனக்கு இருக்க பிடிக்காது. உடனேயே சென்று விடுவேன்.

சுருக்கமாக சொல்கிறேன்...
எந்த வீட்டில் தினசரி விஷ்ணு பூஜை நடக்கிறதோ!
அந்த வீட்டில் நான் மிகவும் சமதோஷமாக வாசம் செய்கிறேன்"
என்று மஹாலக்ஷ்மி சொல்லி அணுகரஹம் செய்து விட்டு மறைந்தாள்.




"மஹாலக்ஷ்மி யாரிடம் தங்குவாள்? யாரை விட்டு விலகுவாள்?"
என்பதை, மஹாலக்ஷ்மியின் திருவாயாலேயே, கிருஷ்ணரும், சத்யபாமாவும் கேட்ட பின்,
ஸ்ரீ கிருஷ்ணர், சத்யபாமாவை பார்த்து,
"கேட்டாயா சத்யபாமா! மஹாலக்ஷ்மி சொன்னது போல நாமும் நடக்க வேண்டும்.
அப்பொழுது தான் நமக்கும் நிறைந்த செல்வம் உண்டாகும்"
என்று உபதேசித்தார்.

சத்யபாமாவுக்கு, ருக்மிணி தேவி குறையே இல்லாமல் இருப்பதற்கு காரணம் புரிந்தது.
ருக்மிணியிடம் இருந்த பொறாமையை விலக்கி கொண்டாள், சத்யபாமா.