Followers

Search Here...

Showing posts with label மதம்.மாறுவது. Show all posts
Showing posts with label மதம்.மாறுவது. Show all posts

Sunday 12 November 2017

ஒரு ஹிந்து செய்யக்கூடாத காரியம் - மதம் மாறுவது


சந்திரகுப்த மௌரியன், கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் கைப்பற்றிய பகுதியை, மீண்டும் கைப்பற்றினான்.
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் முழுவதையும் ஆண்ட இந்த அரசன், தன் மகன் பிந்துசாராவுக்கு ராஜ்யத்தை கொடுத்து விட்டு, ஜைன மதத்தில் சேர்ந்தான்.



பிந்துசாராவின் மகன் உலக புகழ் பெற்ற வீரனாக இருந்த சாம்ராட் அசோக சக்கரவர்த்தி.
265BCல் கலிங்க போரில் வெற்றி பெற்ற பின், ஒரு புத்த பிக்ஷுவின் பேச்சை வேத வாக்காக எடுத்து, சமாதானம் பொறுமை அன்பு என்ற வார்த்தையில் மயங்கி பௌத்த மதத்தை ஏற்றான்.

ஒரு அரசன் நாட்டை காக்க எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். க்ஷத்ரியனாக இருக்க வேண்டும். சந்யாசி போன்று பேச கூடாது. வீரர்களையும் போர் பயிற்சி குறையாதவர்களாக, வீரர்களாக எப்போதும் வைத்து இருக்க வேண்டும்.

பௌத்த மதத்தை ஏற்ற அசோக சக்கரவர்த்தி, தன் குடையின் கீழ் இருந்த ஆப்கான் முதல் பாகிஸ்தான், இந்தியா முழுவதும் இருந்த அரசர்களை பௌத்த வழியில் இழுத்தான்.

பௌத்த மதம் மிக வேகமாக பரவியது. எங்கு பார்த்தாலும் மொட்டை தலைகள். யார் வாயிலும் "புத்தம் சரணம் கச்சாமி" என்ற வார்த்தைகள்.
இது போதாது என்று வேத தர்மத்தை தன் இஷ்டத்துக்கு புரிந்து கொண்டு புது புது மதங்கள் உருவானது.

காபாலி என்ற கடவுளின் பெயரால், நர பலி கொடுக்கும் கூட்டம் உருவானது.
அரசனே பௌத்த மதம் என்று போனதால், போர் வீரர்கள் புத்த கோவில் கட்டவும், காவல் காக்கவும் ஈடுபடுத்த பட, போர் பயிற்சி குறைந்த, வீரம் குறைந்த வீரர்களாக ஆகிக் கொண்டிருந்தனர்.

இப்படி பௌத்த மதம் பாரதத்தில் தலை விரித்து ஆடிக்கொண்டிருந்த சமயத்தில், இந்தியாவிற்கு மேற்கு திசையில் இரு புது மதங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டு இருந்தன.

ஒரு மதம் வன்முறை மூலமாக தன்னை பரப்ப முயற்சி செய்து கொண்டிருந்தது.
மற்றொரு மதம், பௌத்த மதத்தை போல அன்பு, இரக்கம் என்ற போர்வையில் பணத்தை கொடுத்தாவது பரப்ப முயற்சி செய்து கொண்டிருந்தது.

சுமார் 788 AD - 820 ADல் இறைவனே இந்த வேதத்தை, பாரதத்தை காப்பதால், பௌத்தம் தலை விரித்து ஆடும் பாரதத்தை, வேத மார்க்கத்தில் இருந்து விலகி உருவான பொய் மதங்களை ஒடுக்க சிவபெருமானே "ஆதி சங்கராக" அவதரித்து 70க்கும் மேற்பட்ட பொய் மதங்களை ஒடுக்கினார். மீண்டும் வேத மார்க்கத்தை ஒளிர் விட செய்தார்.

சந்திரகுப்த மௌரியனும், அசோக சக்கரவர்த்தியும் விதைத்த பௌத்த விதைகள், பிற் காலத்தில் வந்த அரசர்களையும், வீரர்களையும் கோழைகள் ஆக்கி விட்டது.

இந்த 2 ஹிந்துக்கள் மதம் மாறியதன் விளைவு, கோடீஸ்வரர்களாக இருந்த நாம், 947 ADல் ஆரம்பித்து, 1947 வரை இந்திய தேசமும், வாழும் ஹிந்துக்களும் இந்த புதிய உருவாக்கப்பட்ட மதத்தை சேர்ந்த வெளிநாட்டவர்கள், இந்தியாவில் கால் ஊன்றி, மத மாற்றம், கொள்ளை, கற்பழிப்பு, பெரிய பெரிய கோவில்களை இடித்து அவர்கள் வழிபடும் ஸ்தலங்களாக மாற்றுவது, அடிமை படுத்துவது, கலாச்சாரத்தை கெடுத்து தன் மாமிச மது கலாச்சாரத்தை புகுத்துவது என்று அனைத்தையும் நம் முன்னோர்கள் அனுபவிக்க வித்திட்டது.



பௌத்த மதம் ஆப்கான் தாண்டி, ஈரான் வரை பரவி இருந்தது. ஹிந்துக்களாக இருந்த ஈரானியர்கள், 900AD சமயங்களில் பௌத்த மதத்தை தழுவி இருந்தனர்.

947ADல், அமீர் சூரி என்ற ஈரான் அரசன் பௌத்த மதத்தில் இருந்தான்.
இந்த சமயத்தில், புதிதாக உருவாகி இருந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அரசர்கள் இந்தியா பக்கம் வர முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
ஸபாரிட் பரம்பரை (Saffarid Dynasty) சேர்ந்த இஸ்லாமிய படையை எதிர்க்க வேண்டிய நிலை அமீர் சூரிக்கு உருவானது.

ஒரு அரசன் அன்பு இரக்கம் என்று பௌத்த மதத்தில் இருப்பதை விட மதத்தை பரப்ப ஆயுதம் எடுக்கும் இவர்கள் மதம் பிடித்து போனது.
தான் பௌத்தனாக இருந்த போதிலும், தன் மகனுக்கு "முகமது பின் சூரி" என்று இஸ்லாமிய பெயர் வைத்தான் அமீர் சூரி.

தன் வரை பௌத்தனாக இருந்துவிட்டாலும், இவன் மகன் முகமது பின் சூரி இஸ்லாமியனாக வளர்ந்தான். முகமது பின் சூரி தன் மகன் "அபுஅலி இபின் முகம்மது"வை ஒரு இஸ்லாஸ்மியனாக வளர்த்தான்.

அபுஅலி, தான் பௌத்த குடும்பத்தை சேர்ந்தவன், அதற்கு முன் ஹிந்துவாக இருந்தவன் என்ற நினைவு இன்றி, தன் பௌத்த தேசமாக இருந்த ஈரான் தேசத்தை முழுவதையும், இஸ்லாமிய தேசமாக மாற்றினான். மசூதிகள் கட்டினான்.
மதராசாக்களை நியமித்தான். மத வெறி உருவானது.

ஒருவன் மதம் மாறினால், அவனுக்கு பின் வரும் அவன் சந்ததியினர் என்ன அட்டூழியம் செய்வார்கள் என்பது இவர்கள் ஹிந்துக்களுக்கு செய்த அட்டூழியத்தை கண்டே தெரிந்து கொள்ளலாம்.

இவன் மதம் மாறியதால், இவன் பிள்ளைகள், பின் வந்த சந்ததியினர்கள் ஹிந்துக்களுக்கு செய்யாத கொடுமைகள் இல்லை. ஈரான், ஆப்கான் போன்ற தேசங்கள் இஸ்லாமிய தேசங்கள் ஆகின.

அமீர் சூரி தன் மகனுக்கு இஸ்லாமிய பெயர் வைத்து, புதிதாக "கோரி பரம்பரை" என்ற முதல் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு உருவானது.

இவன் பரம்பரையில் வந்தவனே "முகம்மது கோரி". இவன் ஒருவனே 1000க்கும் மேற்பட்ட பெரிய பெரிய ஹிந்து கோவில்களை சிந்து தேசம், குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா போன்ற தேசங்களில் இடித்தான்.

கொள்ளை அடித்த தங்கங்களை கொண்டு ஆப்கான் நாட்டை இஸ்லாமிய தேசமாக்கி, சேர்த்தான்.

ஹிந்து பெண்களை தன் தேசங்களுக்கு எடுத்து சென்று விற்று விட்டான். எதிர்ப்பவர்களை கொன்று, பயந்தவர்களை மதம் மாற்றினான்.

மதம் மாறிய அமீர் சூரி என்ற ஒருவனால், அடுத்த 1000 வருடங்கள் உலகமே ரத்தத்தில் புரண்டது.

கோரியின் காலம் முடிந்து பின் வந்த அலாவுதீன் கில்ஜி டெல்லியை கைப்பற்றி இருந்தான்.
ஒரு சமயம் குஜராத் தேசத்தை நோக்கி போர் செய்த போது, அங்கு இருந்த "மாணிக்" என்ற ஒரு ஹிந்துவை தன் அடிமையில் ஒருவனாக விலைக்கு வாங்கினான்.



 இந்த மாணிக் என்ற ஹிந்து, போர் கலையில் வீரனாக இருப்பதை கண்டு அலாவுதீன் கில்ஜி இவனை அடிமை தனத்தில் இருந்து விலக்கி, தன் படைத்தளபதியாக ஆக்கினான்.
இதனால் கவரப்பட்ட மாணிக், தன்னை இஸ்லாஸ்மியனாக மாற்றிக்கொண்டான்.

மாலிக் காபுர் என்ற பெயரில், அலாவுதீன் கில்ஜியின் கட்டளையின் பெயரில், இவன் ஆந்திராவில் ஒரு லட்சம் படையுடன் சென்று அங்கு இருந்த ஹிந்து அரசனை தோற்கடித்து, ஊரையே கொள்ளை அடித்தான்.

கோவில்களை இடித்து, கோஹினூர் வைரத்தை காளியின் கோவிலில் இருந்து எடுத்துக்கொண்டு, பின்னர் மதுரை மீது படை எடுத்து, அங்கு இருந்த மீனாக்ஷு கோவிலை முற்றுகை இட்டான்.

உள்ளே புகுந்து, லிங்கமாக இருக்கும் சுந்தரேஸ்வரர் இருக்கும் இடத்தில், வேறொரு லிங்கத்தை இடித்து கீழே தள்ளி விட்டு கோவிலை நாசமாக்க முயன்றான். அடுத்த 60 வருடங்கள், மீனாக்ஷி கோவிலில் சுந்தரேஸ்வரருக்கு பூஜை இல்லாமல் தடைபட்டு போனது.

பாண்டிய மன்னனின் தொடர் போராலும், டெல்லியில் இருந்து மேலும் படைகள் கிடைக்க சிரமம் ஏற்பட, அங்கிருந்து ஸ்ரீ ரங்கம் நோக்கி சென்று, அங்கு இருந்த ஸ்ரீ ரங்கநாதர் கோவிலை முற்றுகை இட்டான்.

அங்கு இருந்த 10000 வைஷ்ணவர்களை கொன்றான். உத்சவர் ஸ்ரீ ரங்கநாதரை எடுத்து டெல்லிக்கே சென்று விட்டான். அங்கு தன் மகள் சுரதானிக்கு பொம்மை என்று கொடுத்து விட்டான். பின்னர், சுரதானி ஸ்ரீ ரங்கனாதானுக்கு பக்தை ஆகி, துலுக்க நாச்சியார் ஆகி விட்டாள் என்று பார்க்கிறோம்.

மதம் மாறியவன் செய்த செயல்களை திரும்பி பார்க்கும் போது, கோஹினூர் வைரம் முதல், கோவில்கள் நாசமாக்கப்பட்டதும், ஹிந்துக்கள் பலர் உயிர் இழக்க காரணமானதும், மதம் மாறி இன்று முஸ்லிமாகவும், கிறிஸ்தவனாகவும் திரியும் ஹிந்துக்களும், நாம் ஏழைகள் ஆனதற்கும், வளரும் நாடு என்று ஆனதற்கும் என்ன காரணம் என்ற உண்மை புரியும்.



ஒரு ஹிந்து செய்யக்கூடாத காரியம் - தானும், தன் ஹிந்து சொந்தங்களும் மதம் மாறுவது. இதுவே ஹிந்துக்களுக்கு ஒரு பாடம்.