Followers

Search Here...

Showing posts with label ஆசைக்கு. Show all posts
Showing posts with label ஆசைக்கு. Show all posts

Thursday 13 April 2017

தாலி கட்டுவதை விட, பாணிக்ரஹனம் தான் மிக முக்கியம் என்று சொல்லப்படுகிறது. தெரிந்து கொள்வோம்.- ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை, ஆசைக்கு ஒரு பெண்

இந்த வைதீக திருமணத்தில், பாணிக்ரஹனம் செய்து கொள்ளும் மணமகன், மணமகளை பார்த்து "ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தையும், ஆசைக்கு ஒரு பெண் குழந்தையும் நமக்கு கிடைக்கட்டும்" என்ற அர்த்தத்தில், மணப்பெண்ணின் 5 விரல்களை சேர்த்து பிடித்து மந்திரம் சொல்லுகிறான்.


ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை என்று கேட்பதற்கு உண்மையான அர்த்தம் :

இது முதலில் ஆஸ்தி அல்ல, அஸ்தி என்று நாம் அறிய வேண்டும்.
இங்கு, ஆண் மணப்பெண்ணின் 5 விரல்களை பிடித்து "என்னுடைய வம்ச பரம்பரை, அழிந்து விடாமல் "அஸ்தி" என்று சொல்லும்படியாக தொடர்ந்து இருக்க வேண்டும். அதற்கு நமக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும்" என்கிறான். கட்டை விரல் ஆண் என்பதை குறிக்கும்.

ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று சொல்வது கொஞ்சுவதற்காக அல்ல. குழந்தையாக இருக்கும் போது தான் கொஞ்சுவதெல்லாம்.  பையன் வளர்ந்த பின்னும் கொஞ்சுவதற்காக ஆண் குழந்தை வேண்டும் என்று இங்கு  கேட்கவில்லை.

பிற் காலத்தில் அவன் சம்பாதித்து பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் ஆண் குழந்தை வேண்டும் என்று கேட்கவில்லை.

என்னுடைய வம்சத்தில் என் வரை காத்து வந்த பழக்கவழக்கம், கலாச்சாரம், தெய்வ பக்தி, ஒரு ஆண் குழந்தை மூலம் மேலும் வளரட்டும் என்பதற்காகவே இப்படி ஒரு பிரார்த்தனை. சுயநலத்திற்காக அல்ல.


ஆசைக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று கேட்பதற்கு உண்மையான அர்த்தம் :

பெண் குழந்தை பிறந்தால் நம்மிடம் ஆசையாய் இருக்கும் என்பதற்காகவா? இல்லை.

நாம் (ஆண்) கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்த போது, யாரோ ஒருவர் (மாமனார்) தன் பெண் குழந்தையை குழந்தை பருவத்தில் இருந்து ஜாக்கிரதையாக வளர்த்து, வேறு கோத்திரத்தை சேர்ந்த நமக்கு, நம் குடும்பம் வ்ருத்தியாகட்டும் என்று தன் பணத்தையும் செலவழித்து, பெண்ணையும் தானமாக கொடுத்தாரே !!.
நாம் சுகமாக இருப்பதற்கும், நம் குடும்பம், நம் தர்மம் வ்ருத்தியாவதற்கும் வளர்த்த பெண்ணை அப்படியே கொடுத்து விட்டாரே !! இத்தனை வருடம் தன் பெண்ணை வளர்த்தது, கடைசி காலம் வரை இவள் என்னை காப்பாள் என்று இல்லாமல், அவளையும், அவள் திறன், சம்பாத்தியம் அனைத்தையும் நான் அனுபவிக்கலாம் என்று தானம் செய்து விட்டாரே !!  எத்தனை பெரிய மனிதன் அவர் !!
இப்படி ஒருவர் நமக்கு கொடுத்ததால் தானே நமக்கு குடும்பம் ஏற்படுகிறது.

எங்கிருந்தோ வந்த அவள், நமக்காக வாழ்நாள் முழுதும் இருந்து, நம் குடும்பத்தை பார்த்து கொள்வாள். இதை நினைக்கும் போது, நாமும் இதே போன்று ஒரு பெண் குழந்தை பெற்று, இன்னொரு சத் குடும்ப பையனுக்கு கொடுக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் என்று ஆண், மணப்பெண்ணின் 5 விரல்களை பிடித்து, "அஸ்திக்கு ஒரு ஆணும், ஆசைக்கு பெண்ணும்" நம் இல்லற வாழ்வில் பெற்றுக் கொள்வோம் என்கிறான்.


இந்த பாணிக்ரஹன நிகழ்ச்சி, அந்த மணபெண்ணுக்கு, அந்த மணமகனிடம் ஒரு நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. இவனிடம் ஏற்பட்ட பெண் குழந்தை ஆசை, தன் தந்தை செய்த "கன்னிகாதானம்" என்ற உயர்ந்த தானத்தை கண்டு தான் என்று அறிந்து கொள்கிறாள். தன் தந்தையின் இந்த "கன்னிகாதானம்" இவன் மனதிலும் தானம் செய்யும் ஆசையை உருவாக்கி உள்ளது. அதனால் தான், தனக்கும் ஒரு பெண் குழந்தை கேட்கிறான் என்று உணர்கிறாள்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka



sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka