Followers

Search Here...

Showing posts with label ஹிந்து மதம். Show all posts
Showing posts with label ஹிந்து மதம். Show all posts

Saturday 19 March 2022

நாதீகனுக்கும் இடம் கொடுக்கும் ஒரே மதம், நம்முடைய ஹிந்து மதம். ஏன் சனாதன தர்மம் நாதீகனுக்கு இடம் கொடுக்கிறது? எந்த வேத வாக்கியம் நாதீகனுக்கும் இடம் கொடுக்கிறது? நாதீகனை என்னவென்று அழைக்கிறது? தெரிந்து கொள்வோம்...

நாதீகனுக்கும் இடம் கொடுக்கும் ஒரே மதம், நம்முடைய 'ஹிந்து மதம்' ஒன்றே.

நாதீகனுக்கும் இடம் கொடுக்கும் ஒரே தர்மம், நம்முடைய 'சனாதன தர்மம்' ஒன்றே

கீழே உள்ள வேத வாக்கியம் நாதீகனுக்கும் இடம் தருகிறது என்று பார்க்கிறோம்.

அஸ்தி ப்ரம்மேதி சேத் வேதா

சந்தமேநம் ததோ விதூரிதி |

அஸத் ப்ரம்மேதி வேதசேத்

அஸன்நேவ ஸ: பவதி ||

- தைத்தரீய உபநிஷத்

"'கடவுள் இருக்கிறார்' என்று சொல்பவனுக்கு, தான் இருப்பதை அந்த பரமாத்மாவே உணர செய்கிறார்

'கடவுள் இருக்கிறார்' என்று எவன் சொல்கிறானோ, அவனே சத்தியமாக வாழ்கிறான் (ஸத்துக்கள்)

'கடவுள் இல்லை' என்று சொல்பவனுக்கு, அந்த பரமாத்மா (ஸ:) தான் இருந்தும், இல்லாதது போலவே (அஸன்நேவ) உணர செய்கிறார்.

'கடவுள் இல்லை' என்று எவன் சொல்கிறானோ, அவன் வாழ்ந்தும் நடைபிணம் போல, பொய்யாக வாழ்கிறான் (அஸத்துக்கள்)"

இது வேத வாக்கியம்.


'ஸத்துக்கள்' என்று ஆஸ்தீகனை வேதம் சொல்கிறது.

'அஸத்துக்கள்' என்று நாஸ்தீகனை வேதம் சொல்கிறது.


மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிற மதங்களில், நாஸ்தீகனுக்கு இடமில்லை.

'கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை! கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி'

என்று சொல்பவனை மட்டுமல்ல, அப்படிப்பட்டவரகளை ஆதரிப்பவரகளை கூட பிற மதங்கள் ஏற்று கொள்வதில்லை. 

'கடவுள் உண்டு' என்று  உண்மையாக நம்பும் பிற மதங்களை சேர்ந்தவர்கள், இப்படி பொதுவாக "கடவுள் இல்லை. கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி" என்று கடவுளை சொல்லி எழுதி பேசுபவர்களை துளியும் ஏற்பதில்லை. கடவுள் நம்பிக்கை நிஜமாக உள்ளவர்களால் ஏற்கமுடியாது.





நம்முடைய சனாதன தர்மமாகிய வேதம் மட்டுமே, நாஸ்தீகனுக்கும் வேத வாக்கியத்தாலேயே இப்படியெல்லாம் 'பேசவும்வாழவும்' இடம் தருகிறது.


ஆனால் "ஐயோ! அஸத்துக்களாக வாழ்கிறார்களே!" என்று குறைபட்டு கொண்டே, பல குழந்தை பெற்ற தாய், ஒரு முட்டாள் பிள்ளையையும் பெற்று வருத்தப்படுவது போல, நாதீகனுக்கும் இடம் கொடுக்கிறது.


ஸத்துக்கள், அஸத்துக்கள் (ஆஸ்தீகன்-நாஸ்தீகன்) இருவருமே தான் செய்யும் நல்ல காரியங்கள், கெட்ட காரியங்களுக்கு ஏற்ப பலனை அடைகிறார்கள்.

ஆனால், 

வேதத்தால் 'ஸத்துக்கள்' என்று அழைக்கப்படும் ஆஸ்தீகர்கள், தெய்வ பிரார்த்தனைகள் மூலம், தன் பாப கர்மாக்களின் பலனை அழித்து கொள்கிறார்கள்

தெய்வ பிரார்த்தனைகள் மூலம், தன் புண்ணிய கர்மாக்களின் பலனையும் அழித்து கொண்டு 'மோக்ஷம்' அடைந்து விடுகிறார்கள். 


வேதத்தால் 'அஸத்துக்கள்' என்று அழைக்கப்படும் நாஸ்தீகர்கள், தான் சமைத்த உணவை தான் மட்டுமே உண்டு, மறுநாள் மிச்சமாகி போன உணவையும் தான் மட்டுமே உண்டு வாழ்பவன் போல, 

தான் செய்த செயலுக்கான பலனை, சில நாட்கள் நல்ல காலமாகவும், சில நாட்கள் கெட்ட காலமாகவும் அனுபவித்து கொண்டே வாழ்ந்து, கடைசியில் இறந்து, பிறகு மீண்டும் பிறந்து, இறந்து கொண்டே இருக்கிறார்கள். 

ஒரு ஜென்மத்தில், உலக கஷ்டங்களை உணர்ந்து, தனக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்று உணர்ந்து, ஒரு நாள் "கடவுள் இருக்கிறார்" (அஸ்தி) என்று இந்த ஆத்மாக்களும் உணரும் போது, அவர்களும் படிப்படியாக முன்னேறி, ஒருநாள் விஷ்ணு பாதத்தை அடைந்து விடுகிறார்கள்.


ஊரெல்லாம் அலைந்து திரிந்து சம்பாதித்து வளர்த்த தகப்பனை, 

சில பிள்ளைகள் கடைசி வரை கூடவே வைத்து கொண்டு காக்கிறார்கள்.

சில பிள்ளைகள் தகப்பனை அலட்சியம் செய்து விடுகிறார்கள்.





"பிள்ளை அலட்சியம் செய்கிறான்" என்பதால் தகப்பனும், தன் பிள்ளையிடம் நெருங்காமல் இருக்கிறார்.

இருந்தும் இல்லாதவர் போலவே இருக்கிறார். (அஸன்நேவ ஸ: பவதி)

தாயோ, 'தன் பர்தா (கணவன்) இப்படி அமைதியாக இருக்கிறாரே! இப்படி என் பிள்ளையும் தகப்பனை அலட்சியம் செய்கிறானே!' என்று தவிக்கிறாள்.

'எப்பொழுதாவது, தன் அசட்டு பிள்ளையும் தகப்பனின் அருமையை உணர்ந்து கொள்வான்' என்ற நம்பிக்கையிலேயே வாழ்கிறாள்.


அது போல,

வேதம் என்ற தாய், "விஷ்ணு" என்ற தகப்பனை நிராகரிக்கும் தன் நாஸ்தீக பிள்ளையை நிராகரிக்க முடியாமல், 'ஒருநாள் தன் தகப்பனின் பெருமையை உணர்ந்து கொண்டு இவனும் வருவான். விஷ்ணுவை ஒருநாள் அடைந்து விடுவான்' என்ற நம்பிக்கையில், ஒரு தாயை போல இருந்து கொண்டு, நாதீகனுக்கும் இடம் தருகிறாள்.


Thursday 27 June 2019

ஹிந்து மதம் உருவான கதை... வந்தேறிகள் யார்? ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்...









பாரத நாடு - 947AD க்கு முன்பு
மனிதன் 1 : விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 2 : முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 3: மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 4: தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 5: சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 6: எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது
மனிதன் 7: எனக்கு தெய்வ நம்பிக்கை இல்லை.

அவரவர் வழிபாடுகள் நடந்தது. அரசர்கள் அனைவருக்கும் கோவில் அமைத்தான். தெய்வ சிந்தனை இருந்ததே தவிர, தெய்வத்தின் பெயரால் சண்டைகள் இல்லாத உலகம்.
அரசர்கள் வளர்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றில் நிம்மதியாக செயல் பட்டார்கள்.

சனாதனமாக (காலம் காலமாக) உள்ள தர்மத்தில் அனைவரும் நிம்மதியாக வாழ்ந்தனர்.


பாரத நாடு - கோரி படைகள் நுழைந்து 947ADக்கு பின்




மனிதன் 8 : இறைவன் இருக்கிறார். அவரை நம்ப வேண்டும். அவரை உருவகப்படுத்த கூடாது. அவர் போதனை என்ன என்று எங்கள் புனித நூல் ஒன்று மட்டும் தான் சொல்கிறது. எதிர் கேள்வி கேட்காமல் அப்படியே கடைபிடிக்க வேண்டும். உங்கள் கடவுள் நம்பிக்கை எப்படி?
மனிதன் 1 : இறைவன் இருக்கிறார். விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 2 : இறைவன் இருக்கிறார். முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 3: இறைவன் இருக்கிறார். மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 4: இறைவன் இருக்கிறார். தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 5: இறைவன் இருக்கிறார். சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 6: இறைவன் இருக்கிறார். எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது.
மனிதன் 7: எனக்கு தெய்வ நம்பிக்கை இல்லை.
மனிதன் 8 : ஒப்புக்கொள்ளவே முடியாது. இறைவனுக்கு பெயர் வைத்து, ஒரு கோவில் கட்டி, நீங்கள் வழிபடுவதை ஏற்கவே முடியாது.
நீங்கள் எல்லோரும் நரகம் போவீர்கள்.
ஒன்று என் நம்பிக்கையை கடைபிடியுங்கள்.. இல்லை நாங்கள் சமயம் பார்த்து உங்களை அழிக்க முயல்வோம். உங்களை கத்தி முனையை கொண்டாவது எங்கள் வழியில் இறைவனை வணங்க செய்வோம்.
அவரவர் வழிபாடுகள், வந்தேறிகளால் தடைபட்டது.
அரசர்களையும் வந்தேறிகள் தாக்கினர், மக்களையும் தாக்கினர், கட்டப்பட்டு இருந்த கோவில்களையும் தாக்கி சேதப்படுத்தினர்.




தெய்வத்தின் பெயரால் சண்டைகள் உருவாக்கப்பட்ட காலம்.

அரசர்கள் வளர்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றில் நிம்மதியாக செயல்பட முடியாமல், இந்த வந்தேறிகளுடன் சண்டை இடும்படியாக காலம் அமைந்தது.

சனாதனமாக (காலம் காலமாக) உள்ள தர்மத்தில், நிம்மதியாக வாழ்ந்த பாரத மனிதர்களை,
வந்தேறிகள் சிந்து தேசக்காரன் என்று அடையாள படுத்தி,
உச்சரிப்பு என்றுமே சரியாக இல்லாத இந்த வந்தேறி அந்நியர்கள்,
சிந்து என்று சொல்ல தெரியாமல், "ஹிந்து" என்று அடையாள படுத்தி கூப்பிட்டான்.

ஹிந்து என்ற வார்த்தை பாரத நாட்டில் இருந்து எடுக்க வேண்டும் என்று வந்தேறிகள் ஆசைப்பட்டால், சனாதன மதம் என்றோ,  ரிஷி மதம் என்றோ, மாற்றி கொண்டு விடலாம்.
அதனோடு, இந்தியா என்ற பெயரையும், பாரத் என்று மாற்றி விடலாம்.

பாரத நாடு - Vasco da Gama நுழைவுக்கு 1498 ADக்கு பின்




மனிதன் 9: இறைவன் இருக்கிறார். அவரை கொன்று விட்டார்கள்.
அவர் இறந்து போனது, நமக்காக என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் நமக்காக திரும்பவும் வருவார். எப்பொழுது வருவார் என்று கேட்க கூடாது.
அவரை நம்பாது இருந்தால் நீங்கள் நரகம் போவீர்கள்.
உங்களுக்காக உயிர் விட்ட அவரே உங்கள் தெய்வம்.
மனிதன் 1 : விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 2 : முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 3: மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 4: தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 5: சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 6: எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது.
மனிதன் 7: எனக்கு தெய்வ நம்பிக்கை இல்லை.
மனிதன் 8 : இறைவன் இருக்கிறார். அவரை நம்ப வேண்டும். அவரை பற்றி நாமாக உருவகப்படுத்த கூடாது. அவர் போதனை என்ன என்று எங்கள் புனித நூல் மட்டும் தான் சொல்கிறது.
எதிர் கேள்வி கேட்காமல் அப்படியே கடைபிடிக்க வேண்டும்.
மனிதன் 9 சொல்வது சுத்த பொய். இவன் உருவ வழிபாடு செய்பவன். இறந்தவர்களை இறைவன் என்று சொல்கிறான்.
ஒரு கொலை செய்யப்பட்ட மனிதனை ஒப்புக்கொள்ளவே முடியாது.
நீங்கள் சொல்லும் எந்த முறையையும் ஒப்புக்கொள்ள முடியாது.
இறைவனுக்கு பெயர் வைத்து, ஒரு கோவில் கட்டி, நீங்கள் வழிபடுவதை ஏற்கவே முடியாது.
நீங்கள் எல்லோரும் நரகம் போவீர்கள்.
ஒன்று என் நம்பிக்கையை கடைபிடியுங்கள்.. இல்லை நாங்கள் சமயம் பார்த்து உங்களை அழிக்க முயல்வோம். உங்களை கத்தி முனையை கொண்டாவது எங்கள் வழியில் இறைவனை வணங்க செய்வோம்.

மனிதன் 9: கிடையாது.. கிடையாது. மனிதன் 8 சொல்லும் புனித நூல், எங்கள் புனித நூல்க்கு பின் உருவாக்கப் ப்ட்டது.
இவர்கள் சொல்வதில் எங்களுக்கு உடன்பாடு எப்பொழுதுமே இல்லை. நீங்கள் வணங்கும் அனைவரும் சைத்தான்கள்.
கொல்லப்பட்டாலும் அவரே கடவுள் என்று நீங்கள் நம்பியே ஆக வேண்டும்.
அவரை நீங்கள் வணங்க வேண்டும்.
உங்களுக்கு பணம் தந்தாவது, உங்கள் தெய்வத்தை கிண்டல் செய்தாவது, எப்படியாவது உங்கள் நம்பிக்கையை குலைக்க பாடுபடுவோம்.
இதுவே எங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமை.

அவரவர் வழிபாடுகள், 2 வந்தேறிகளாலும் தடைபட்டது.
இரண்டு வந்தேறிகளுக்கும் கோட்பாடுகளில் வேற்றுமை உண்டு. பகையும் உண்டு. இவர்களுக்குள்ளும் தாக்குதலும் உண்டு.
அரசர்களையும் வந்தேறிகள் தாக்கினர், மக்களையும் தாக்கினர், கட்டப்பட்டு இருந்த கோவில்களையும் தாக்கி சேதப்படுத்தினர்.

தெய்வத்தின் பெயரால், வந்தேறிகளால் பெரும் சண்டைகள் உருவாக்கப்பட்ட இருண்ட காலம்.

அரசர்கள் வளர்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றில் நிம்மதியாக செயல்பட முடியாமல், இந்த வந்தேறிகளுடன் சண்டை இடும்படியாக காலம் அமைந்தது.

ஹிந்துக்கள் என்று வந்தேறிகளால் அறியப்படும், சனாதன தர்மத்தில் உள்ளவர்கள், தங்கள் பெருமை உணர்ந்து கொண்டாலே, பொய் மதங்களில் வீழாமல் பார்த்து கொள்ளலாம்.