Followers

Showing posts with label ஸ்லோகம். Show all posts
Showing posts with label ஸ்லோகம். Show all posts

Thursday, 31 December 2020

லக்ஷ்மணனுக்கு 7 ஸ்லோகங்களால் ஸ்தோத்திரம். சீதாதேவியே செய்தது என்பது கவனிக்கத்தக்கது. தெரிந்து கொள்வோமே! - வால்மீகி ராமாயணம்

கடல் கடந்து, சீதையை தரிசித்த ஹனுமான், விடை பெரும் சமயத்தில், பேசலானார்…
ஹத்வா ச சமரே க்ரூரம ராவணம் சஹ பாந்தவம் |
ராகவஸ்த்வாம் விசாலாக்ஷி நேஷ்யதி ஸ்வாம் புரீம் ப்ரதி ||
- வால்மீகி ராமாயணம் 
हत्वा च समरे क्रूरम रावणं सह बान्धवम् |
राघवस्त्वाम् विशालाक्षि नेष्यति स्वाम् पुरीम प्रति ||
- वाल्मीकि रामायण
தேவீ! ராவணனையும் அவனோடு சேர்ந்துள்ள அனைத்து ராக்ஷஸர்களையும் கொன்று விட்டு, ராமபிரான் உங்களை நிச்சயம், தன் தேசத்துக்கு கூட்டி செல்வார். 

ப்ரூஹி யத் ராகவோ வாச்யோ 
லக்ஷ்மணஸ்ச மஹாபல: |
சுக்ரீவா வாபி தேஜஸ்வீ 
ஹரயோ அபி சமாகதா: ||
- வால்மீகி ராமாயணம் 
ब्रूहि यद् राघवो वाच्यो लक्ष्मणश्च महाबलः |
सुग्रीवो वापि तेजस्वी हरयो अपि समागताः ||
- वाल्मीकि रामायण
ராமபிரானுக்கும், மஹா பலசாலியான லக்ஷ்மணருக்கும், தேஜஸ்வியான சுக்ரீவருக்கும் தங்களிடமிருந்து நான் எடுத்து செல்ல வேண்டிய சேதி என்ன? என்று கூறுங்கள்.
இத்யுக்தவதி தஸ்மி: ச 
சீதா சுர சுதோபமா |
உவாச சோக சந்தப்தா 
ஹனுமந்தம் ப்லவங்கமம் ||
- வால்மீகி ராமாயணம் 
इत्युक्तवति तस्मिंश्च सीता सुरसुतोपमा |
उवाच शोक सन्तप्ता हनुमन्तम् प्लवड्गमम् ||
- वाल्मीकि रामायण
இப்படி ஹனுமான் கேட்டதும், பெரும் சோகத்தில் இருந்த சீதாதேவி பேசலானாள்.

கௌசல்யா லோக பர்தாரம் 
சுஷுவே யம் மனஸ்வினீ |
தம் மமார்தம் சுகம் ப்ருச்ச 
சிரஸா ச அபிவாதய ||
- வால்மீகி ராமாயணம் 
कौसल्या लोकभर्तारं सुषुवे यं मनस्विनी |
तं ममार्थे सुखं पृच्छ शिरसा चाभिवादय ||
- वाल्मीकि रामायण
"கௌசல்யை மாதா பெற்றெடுத்த, உலகத்துக்கே ரக்ஷகனாக இருக்கும் அவருக்கு என் நமஸ்காரத்தை தெரிவியுங்கள்.

ஸ்ரஜ: ச சர்வ ரத்னானி 
ப்ரியா யா: ச வராங்கனா: |
ஐஸ்வர்யம் ச விசாலாயாம்
ப்ருதிவ்யாம் அபி துர்லபம் ||
- வால்மீகி ராமாயணம் 
स्रजश्च सर्वरत्नानि प्रिया याश्च वराङ्गनाः |
ऐश्वर्यं च विशालायां पृथिव्याम् अपि दुर्लभम् ||
- वाल्मीकि रामायण
யாருக்கும் எளிதில் கிடைக்காத பூஷணங்கள், ஐஸ்வர்யம், அழகான பெண்கள், உலகையே ஆளும் வாய்ப்பு வலிய வந்து கிடைத்தாலும், எனக்காக எதையும் அவர் ஏற்பதில்லை.

பிதரம் மாதரம் சைவ 
சமமான்ய அபி ப்ரஸாத்ய ச |
அனு ப்ரவ்ரஜிதோ ராமம் 
சுமித்ரா யேன சுப்ரஜா: ||
- வால்மீகி ராமாயணம் 
पितरं मातरं चैव संमान्याभिप्रसाद्य च |
अनुप्रव्रजितो रामं सुमित्रा येन सुप्रजाः || 1
- वाल्मीकि रामायण
பிதாவின் சத்தியத்தை காப்பாற்ற, மாதாவின் ஆசையை நிறைவேற்ற அவர் வனவாசம் புறப்பட்ட போது, அவரோடு சகோதரனான லக்ஷ்மணனும் கூடவே வந்தார்.
இது போன்ற பிள்ளையை பெற சுமத்திரை மாதா பெரும் பாக்கியம் செய்து இருக்க வேண்டும்.

ஆனுகூல்யேன தர்மாத்மா
த்யக்த்வா சுகம் அநுத்தமம் |
அணுகச்சதி காகுத்ஸ்தம்
ப்ராதரம் பாலயன்வனே ||
- வால்மீகி ராமாயணம் 
आनुकूल्येन धर्मात्मा त्यक्त्वा सुखमनुत्तमम् |
अनुगच्छति काकुत्स्थं भ्रातरं पालयन्वने || 2
- वाल्मीकि रामायण
லக்ஷ்மணன் தனக்குள்ள சுகமான வாழ்க்கை தியாகம் செய்து விட்டு, ராகவனை பின்தொடர்ந்து வந்து, ஒரு காவலாளி போல இருந்து சேவை செய்தார்.

சிம்ஹ: கந்தோ மஹா பாஹு:
மனஸ்வீ ப்ரிய தர்ஸன: |
பித்ருவத் வர்ததே ராமே
மாத்ரு வன்மாம் சமாசரன் ||
- வால்மீகி ராமாயணம் 
सिंहस्कन्धो महाबाहुर्मनस्वी प्रियदर्शनः |
पितृवद्वर्तते रामे मातृवन्मां समाचरन् || 3
- वाल्मीकि रामायण
சிங்கத்தை போன்ற உறுதியான தோள் கொண்ட, உறுதியான புஜங்கள் கொண்ட லக்ஷ்மணன், அதே சமயம் இதயத்தில் பெரும் பாசம் கொண்டவர்.
அவர் என்னை தாயாகவும், ராமபிரானை தந்தையாகவுமே நினைத்து பழகுவார். 

ஹ்னியமானாம் ததா வீரோ 
ந து மாம் வேத லக்ஷ்மண: ||
- வால்மீகி ராமாயணம் 
ह्रियमाणां तदा वीरो न तु मां वेद लक्ष्मणः | 4
- वाल्मीकि रामायण 
பாவம் அன்று லக்ஷ்மணனுக்கு, நான் கடத்தப்பட்டேன் என்பது கூட தெரியாது.

வ்ருத்தோப சேவி லக்ஷ்மீவாஞ்
சக்தோ ந பஹு பாஷிதா |
ராஜபுத்ர: ப்ரிய ஸ்ரேஷ்ட:
ஸத்ருஷ: ஸ்வசுரஸ்ய மே ||
- வால்மீகி ராமாயணம் 
वृद्धोप सेवी लक्ष्मीवाञ् शक्तो न बहुभाषिता |
राजपुत्रः प्रियश्रेष्ठः सदृशः श्वशुरस्य मे || 5
- वाल्मीकि रामायण
லக்ஷ்மணன் வயதில் மூத்தவர்களுக்கு அனைவருக்கும் தயங்காமல் சேவை செய்வார்.
தானே செல்வங்களை திரட்டும் மஹா பலசாலி. அதே சமயம், அதிகம் பேசாமல் அமைதியாகவே இருப்பார்.
என் மாமனார் தசரதர் போல, அனைவரிடத்திலும் பாசமோடு பழகுபவர். 
மத்த: ப்ரியதரோ நித்யம்
ப்ராதா ராமஸ்ய லக்ஷ்மண: |
நியுக்தோ துரி யஸ்யாம்
து தாம் உத்வஹதி வீர்யவான் ||
- வால்மீகி ராமாயணம்
मत्तः प्रियतरो नित्यं भ्राता रामस्य लक्ष्मणः |
नियुक्तो धुरि यस्यां तु तामुद्वहति वीर्यवान् || 6
- वाल्मीकि रामायण
ராமபிரானுக்கு என்னை காட்டிலும், தன் சகோதரன் லக்ஷ்மணன் மேல் ப்ரியம் அதிகம். லக்ஷ்மணன் ராமபிரானின் வாக்கை எப்பொழுதும் மதித்து பின்பற்றுவார்.

யம் த்ருஷ்ட்வா ராகவோ ந ஏவ 
வ்ருத்தம் ஆர்யம் அனுஸ்மரத் |
ச மமார்தாய குசலம்
வக்தவ்யோ வசனான் மம |
ம்ருது: நித்யம் சுசி: தக்ஷ:
ப்ரியோ ராமஸ்ய லக்ஷ்மண: || 
- வால்மீகி ராமாயணம் 
यं दृष्ट्वा राघवो नैव वृद्धमार्यमनुस्मरत् |
स ममार्थाय कुशलं वक्तव्यो वचनान्मम |
मृदुर्नित्यं शुचिर्दक्षः प्रियो रामस्य लक्ष्मणः || 7
- वाल्मीकि रामायण 
லக்ஷ்மணன் கூடவே இருந்ததால், ராமபிரானுக்கு 'தனக்கு அப்பா இல்லையே' என்று ஒரு க்ஷணம் கூட தோன்றியதில்லை.
மென்மையாகவே பழகும், தூயமையான லக்ஷ்மணன், எப்பொழுதுமே ராமபிரானுக்கு பிரியப்பட்டவர்.
லக்ஷ்மணனிடம் நான் குசலம் விசாரித்ததை தெரிவியுங்கள்.

இவ்வாறு 'லக்ஷ்மணனின் குணத்தை' பற்றி 7 ஸ்லோகங்களில் சீதாதேவியே பேசினாள்

தொடர்ந்து,

இதம் ப்ரூயா: ச மே நாதம் 
சூரம் ராமம் புன: புன: |
ஜீவிதம் தாராயிஷ்யாமி 
மாசம் தசரதாத்மஜ  || 
- வால்மீகி ராமாயணம் 
इदं ब्रूयाश्च मे नाथं शूरं रामं पुनः पुनः |
जीवितं धारयिष्यामि मासं दशरथात्मज ||
- वाल्मीकि रामायण 
நான் சொல்லும் செய்தியை ராமபிரான் கேட்ட பிறகு, உடனே என்னை கூட்டி செல்ல முயற்சி செய்யட்டும்.
'நான் இன்னும் ஒரு மாதம் வரை தான் என் உயிரை தரித்து இருப்பேன்' என்று மீண்டும் மீண்டும் அவருக்கு இதை ஞாபகப்படுத்துங்கள்.

ஊர்த்வம் மாசான் ந ஜீவேயம்
சத்யேநாஹம் ப்ரவீமி தே |
ராவணேனோப ருத்தாம் மாம்
நிக்ருத்யா பாபகர்மணா || 
- வால்மீகி ராமாயணம் 
ऊर्ध्वं मासान्न जीवेयं सत्येनाहं ब्रवीमि ते |
रावणेनोपरुद्धां मां निकृत्या पापकर्मणा ||
- वाल्मीकि रामायण 
என்னால் இங்கு ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது. இது சத்தியம். என்னை சிறைவைத்த, இந்த பாவியான ராவணனிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்."

த்ராதும் அர்ஹஸி வீர த்வம்
பாதாளாதிவ கௌசிகீம் |
ததோ வஸ்த்ர கதம் முக்த்வா
திவ்யம் சூடாமணிம் சுபம் |
ப்ரதேயோ ராகவ ஆயேதி
சீதா ஹனுமதே ததொள ||
- வால்மீகி ராமாயணம் 
त्रातुमर्हसि वीर त्वं पातालादिव कौशिकीम् |
ततो वस्त्रगतं मुक्त्वा दिव्यं चूडामणिं शुभम् |
प्रदेयो राघवायेति सीता हनुमते ददौ ||
- वाल्मीकि रामायण 
இவ்வாறு சொல்லிக்கொண்டே தன் தலையில் சூட்டி இருந்த சூடாமணியை எடுத்து, ஹனுமானிடம் கொடுத்து "இதை ராமபிரானிடம் கொடுங்கள்" என்றாள்.


ப்ரதிக்ருஹ்ய ததோ வீரோ
மணிரத்னம் அநுத்தமம் |
அங்குல்யா யோஜயாமாச
ந ஹ்யஸ்யா ப்ராபவத் புஜ: || 
- வால்மீகி ராமாயணம் 
प्रतिगृह्य ततो वीरो मणिरत्नमनुत्तमम् |
अङ्गुल्या योजयामास न ह्यस्या प्राभवद्भुजः ||
- वाल्मीकि रामायण
சீதாதேவி கொடுத்த அந்த சூடாமணியை தன் கையில் பத்திரமாக வைத்து கொண்டார் ஹனுமான்.

மணிரத்னம் கபிவீர: 
ப்ரதி க்ருஹ்ய அபிவாத்ய ச |
சீதாம் ப்ரதக்ஷிணம் க்ருத்வா
ப்ரணத: பார்ஷ்வத: ஸ்தித: || 
- வால்மீகி ராமாயணம் 
मणिरत्नं कपिवरः प्रतिगृह्याभिवाद्य च |
सीतां प्रदक्षिणं कृत्वा प्रणतः पार्श्वतः स्थितः ||
- वाल्मीकि रामायण
கையில் சூடாமணியோடு,  ஹனுமான் சீதாதேவியின் முன் நமஸ்கரித்து, கைக்குவித்து கொண்டே, தேவியை ஒரு சுற்று சுற்றி வலம் வந்து, சீதாதேவியின் முன் கைக்குவித்து நின்றார்.
ஹர்ஷேன மஹதா யுக்த:
சீதா தர்சன ஜேன ச: |
ஹ்ருத்யேன கதோ ராமம்
சரீரேன து விஷ்டித: || 
- வால்மீகி ராமாயணம் 
हर्षेण महता युक्तः सीतादर्शनजेन सः |
हृदयेन गतो रामं शरीरेण तु विष्ठितः ||
- वाल्मीकि रामायण
சீதாதேவியை நேரில் பார்த்து விட்ட ஆனந்தம் ஒரு புறம் இவரை உற்சாகப்படுத்த, இதயத்தில் ராமபிரானை பார்த்து கொண்டிருந்தார் ஹனுமான்.

மணிவரம் உபக்ருஹ்ய தம் மஹார்ஹம்
ஜனக ந்ரூப ஆத்மஜயா த்ருதம் ப்ரபாவாத் |
கிரிவர பவனா வதூத முக்த:
சுகித மனா: ப்ரதி ஸங்க்ரமம் ப்ரபேதே ||
- வால்மீகி ராமாயணம் 
मणिवरमुपगृह्य तं महार्हं
जनकनृपात्मजया धृतं प्रभावात् |
गिरिवरपवनावधूतमुक्तः
सुखितमनाः प्रतिसङ्क्रमं प्रपेदे ||
- वाल्मीकि रामायण
கையில் சீதாதேவியின் அடையாளமாக சூடாமணி இருக்க, ஹனுமாம் மலைபோல ரூபத்துடன் ஆகி விட்டார். உடனே கடலை கடந்து ராமபிரானை பார்க்க, ஆனந்தமாக தன்னை தயார் செய்து கொண்டார் ஹனுமான்.


Monday, 25 December 2017

நாம் குளிக்கும் போது கட்டாயம் செய்ய வேண்டியது என்ன? ஹிந்துக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்

"தினமும் குளிக்கும் போது, 
நமது பாரத பூமியை பசுமையாக்கும், 
நமக்கு உணவாக தானியங்கள் கிடைக்க செய்யும், 
தேவதைகளின் அம்சமான ஒவ்வொரு புண்ணிய நதிகளையும்,
நன்றியுடைய மனிதனும் நினைக்க வேண்டும்" 
என்று சாஸ்திரம் சொல்கிறது.
நாம் குளிக்க வைத்திருக்கும் தண்ணீரும் அந்த புனித நீராக மனதில் தியானித்து, நம் உள்ளும் அந்த பரமாத்மா இருக்கிறார் என்ற த்யானத்துடன், அவருக்கு செய்யும் "அபிஷேகமாக" நினைத்து குளித்தாலும், புண்ணியம் சேரும்.

ஸ்லோகம்:
'கங்கே'-ச 'யமுனே'-சைவ
'கோதாவரி' 'சரஸ்வதி'
'நர்மதே' 'சிந்து' 'காவேரி'
ஜலேஸ்மின் சந்நிதம் குரு

"கங்கா-நதி தேவியே, 
யமுனா-நதி தேவியே, 
கோதாவரி-நதி தேவியே,  
சரஸ்வதி-நதி தேவியே, 
நர்மதா-நதி தேவியே, 
சிந்து-நதி தேவியே, 
காவேரி-நதி தேவியே, 
உங்கள் அணுகிரஹத்தால், நீங்கள் அனைவரும் நான் வைத்திருக்கும் ஜலத்தில் வந்து, உங்கள் சாநித்தயத்தை தாருங்கள்"
என்று பிரார்த்தனை செய்து, குளிக்கலாம்.

ஒவ்வொரு நதியும் தேவதைகளால் உருவானவை. ஒவ்வொரு தேவதையும் ஒரு பலன் தருகிறது.
சரஸ்வதி தேவி, நதியாக உருமாறி உலகில் வந்த போது, அந்த சரஸ்வதி நதியில் ஸ்நானம் செய்பவர்களுக்கு "ஞானம்" உண்டாகும் படி செய்தாள்.
அதேபோல கங்கை, நதியாக உருமாறி உலகில் வந்த போது, அந்த கங்கா நதியில் ஸ்நானம் செய்பவர்களுக்கு "வைராக்கியம்" உண்டாகும் படி செய்தாள்.
கங்கையில் எப்பொழுதும் நீராடும் காசி, கேதார்நாத் போன்ற இடங்களில் இருப்பவர்கள் வைராக்கியம் அதிகம் பெறுகின்றனர்.
அதேபோல யமனின் தங்கை, சூரியனின் புத்ரி யமுனா, நதியாக உருமாறி உலகில் வந்த போது, அந்த யமுனா நதியில் ஸ்நானம் செய்பவர்களுக்கு "பிரேமை (அன்பு)" உண்டாகும் படி செய்தாள்.
அதேபோல காவேரி, நதியாக உருமாறி உலகில் வந்த போது, அந்த காவேரி நதியில் ஸ்நானம் செய்பவர்களுக்கு "அர்ச்ச அவதாரத்தில் பூஜை, அர்ச்ச அவதாரத்தில் பக்தி" உண்டாகும் படி செய்தாள்.
இப்படி ஒவ்வொரு நதிக்கும் ஒரு சாநித்யம் உண்டு என்று சாஸ்திரம் சொல்கிறது.

எளிதான இந்த 7 நதிகளை நினைத்து சொல்லி குளிக்கும் போது, 3 பலன்கள் கிடைக்கிறது.
1. குளித்ததற்கு குளித்தது போலவும் ஆகிறது. உடலில் உள்ள அசுத்தம் போகிறது.
2. புண்ணிய நதியை நாம் வைத்திருக்கும் தண்ணீரில் சாநித்யமாக இருக்க செய்வதால், நம் உள்ளே இருக்கும் கடவுளுக்கு அபிஷேகம் செய்து பூஜித்த பலனும் கிடைக்கிறது. 
மேலும்,
3. ஜீவனாகிய நமக்கு, இந்த தேவதைகளின் ஆசியால், மெய்யான ஞானமும், வைராக்கியமும், ப்ரேமையும், அர்ச்ச அவதாரத்தில் பக்தியும் மேலும் பல அணுகிரஹங்கள் ஏற்படுகிறது. இதனால் மனதில் உள்ள கீழ் தரமான எண்ணங்கள் அழிந்து, இறை ஞானம் உண்டாகிறது.

இனி அனைவரும் இந்த ஸ்லோகத்தை சொல்லி 7 நதிகளை தியானத்தில் கொண்டு வந்து பிராத்தனை செய்து, 3 பலன்களையும் சேர்த்து அடைவோம்.

ஹிந்துவாய் பிறப்பதே புண்ணியம். 

Monday, 9 January 2017

எளிதான ஆஞ்சனேயர் ஸ்லோகம்

எளிதான ஆஞ்சனேயர் ஸ்லோகம்.

ஆஞ்சனேய மதி பாடலாலனம்
காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம் !
பாரிஜாத தருமூல வாஸினம்
பாவயாமி பவமான நந்தனம் !!

சிவந்த முகம் உடையவரும்,
தங்கம் போன்ற காந்தி உடையவரும்,
பாரிஜாத மரத்தின் அடியில் வஸிப்பவரும்,
வாயு குமாரனுமான ஆஞ்சனேயரை தியானிக்கின்றேன்.


யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம் !
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷ ஸாந்தகம் !!

எங்கெங்கு ராம நாம கீர்த்தனம் நடக்கிறதோ,
அங்கங்கு சிரமேற் கை குவித்து,
ஆனந்தக் கண்ணீருடன் நிற்பவரான,
மாருதியை வணங்குங்கள்.
மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் !
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராம தூதம் சிரஸா நமாமி !!

மனதை விட வேகமானவரும்,
புலன்களை அடக்கியவரும்,
புத்திமான்களில் சிறந்தவரும்,
வானரர்களில் முக்கியமானவரும்,
வாயு குமாரனுமான ஸ்ரீ ராம தூதனை வணங்குகிறேன்.

புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா !
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச
ஹனுமத் ஸ்மரணாத் பவேத் !!

ஹனுமானை நினைப்பதால் புத்தியும், பலமும், புகழும், தைரியமும், அபயமும், ஆரோக்யமும், கல்வியும், பேச்சுத் திறமையும் உண்டாகும்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka
sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka