Followers

Search Here...

Friday 13 April 2018

How can identify Good Person? What are the Qualities of Good Person? What is meant by Power of Association?

Why do we need to associate with Good People?

Always engage yourself with good people.
By engaging yourself with good people, "you stay as good person".
By engaging yourself with bad people, "you will give yourself a chance to become bad person".




The people whom you associate or engage will influence you and change your nature or habit.
This is a human restriction. Beware of human nature.
By Nature, human gets influenced with other's association. 
So always engage yourself with good people, to become good person.



How to identify a good person?
Our Sanathana dharma (veda) guides us, to identify a good person.
Sanathana Dharma identifies Good Person by representing 3 qualities within that person.
1. Irrespective of time and situation, a person who never do an act which harms others by any means, can be identified as good person.
2. Irrespective of time and situation, a person who always thinks about other's welfare, can be identified as good person.
3. Irrespective of time and situation, a person who always see the positive qualities on others and never even interested to look at negative or bad qualities on others by any means, can be identified as good person.

Finding and associating with such a good person of having any one of such quality itself, will bring good behaviour on us.
A person who possess all these 3 qualities together are called as "sath purusha" (good people).
Association of such good people is extremely gifted.

If you identify such good person and associate with them, you will also gain these qualities.
At one stage,
1. You will also, be never interested to harm others in any form.(including animals)
2. You will also, be thinking about other's welfare.
3. You will also, be seeing only the positive side of others and never even interested to see their dark side of others.

Jagadguru Adhi Sankara says
"You should start now, to engage and associate yourself with such good person who possess these 3 qualities to absorb those good qualities inside you."

Being Good Human is the greatest service which each of us, can offer in their life before death.


From divine discourse of Sri Sri Bharati theertha swamigal - Sringeri Jagadguru Sarada peedam.

Mera Bharath Mahaan - My Bharat is filled with Mahatmas.


INTERESTED TO READ MORE?... CLICK HERE ->  There are 4 Kinds of Teachers in this world.. Who are they?

4 kind of teachers exist... Who are they? - Let us know what Sanathana Dharma Says...

4 kind of Teachers exist in this World.




Our Sanathana Dharmasastra says,
"By just Associating yourself with teacher, if queries don't arise in you, then consider him as your spiritual guru. He is the Best Teacher you can get".

Association of Spritual guru itself will give true knowledge.
Finding such level 1 teacher is a gift for a soul.

Here are 4 kind of teachers guided by our sanathana dharma.
 Click here

Level 1 teacher : (Best teacher/Spiritual Teacher/God Himself)
By just his association, all queries will be answered. 

Here, Student will gain knowledge by just his teacher's presence. 
No verbal communication is required in any form (direct or indirect). 


Idol Worship of Lord Krishna, Vishnu, Shiva depicts this secret.  
By just the presence of Lord Krishna, Lord Ram, Lord Shiva in Idol form itself, will guide us and clear all our Queries. 
His presence itself will give guidance to us.

Level 2 teacher : (Great teacher/Also Spiritual Guru/ God Himself too)
As and when, students have queries, it will be answered by teacher by himself, even before student ask his query.




When you have your Spiritual Guru, When you have some Questions in mind, thru' his lecture or his speech he will answer your queries even though you didnt ask him directly.


Level 3 teacher : (Academic Teachers)
As and when students have queries, he need to ask the teacher. Teacher will clarify his queries. Student gain knowledge. Mostly these are the teacher we would see in schools, college. 






Level 4 teacher : (Worst Teacher)
As and when students have queries, he will ask the teacher. Teacher will not understand the question and he will say something else and never try to answer his queries. 
Student will never gain knowledge. Association of these teachers must be avoided.

Be Proud to be Hindu.

Hare Rama Hare Krishna -  Listen to Bhajan


INTERESTED TO READ MORE? CLICK HERE -> Why INDIANS are known for Hospitality? What is meant by Aditi Devo Bhava



Friday 6 April 2018

நல்லவர்களுக்கு சில சமயம் தீய குணம் கொண்ட குழந்தைகள் பிறப்பது ஏன்? காரணத்தை தெரிந்து கொள்வோமே.

சொன்ன சொல் மீறாத தசரதனுக்கு, சத்ய ஸ்வரூபமாக ஸ்ரீராமர் பிறந்ததில் ஆச்சரியமில்லை. 
நல்லவர்களுக்கு நல்ல பிள்ளைகள் பிறப்பதில் ஆச்சரியமில்லை.

பிறர் மனைவியை அபகரிக்க நினைத்த ராவணனுக்கு, அவனை போன்ற கீழ் தரமான, பிள்ளையாக பிறந்தான் இந்திரஜித். 
அப்பன் செய்த தவறுக்கு தானும் உடந்தையாக இருந்து, உயிரை விட்டான். 
கெட்டவனுக்கு கெட்ட பிள்ளைகள் பிறப்பதும் ஆச்சரியமில்லை.




சில சமயங்களில், நல்ல குடும்பத்தில் ஒரு அயோக்கிய பிள்ளை பிறந்து விடுகிறான். 

அயோக்கியனுக்கு, சில சமயம் நல்ல பிள்ளை பிறந்து விடுகிறான். 
கடவுள் நம்பிக்கை உள்ளவனுக்கு, நேர் மாறாக நாத்தீகன் பிள்ளையாக பிறந்து விடுகிறான். 

இது ஏன் நடக்கிறது? இதன் ரகசியம் என்ன? 
ஹிரண்யகசிபுவுக்கு, ;பிரகலாதன் என்ற விஷ்ணு பக்தன் எப்படி மகனாக பிறந்தான்'? 
பிரகலாதன் பிறப்பை, கவனிக்கும் போது, இதன் ரகசியம் புலப்படுகிறது.

ஹிரண்யகசிபு நாத்தீகனை விட ஒரு படி மேல். "நானே கடவுள்" என்று சொல்லிக்கொண்டான். 
சொன்னது மட்டுமல்ல, அதை நிரூபித்தும் காட்டினான். 
ப்ரம்மா, சிவன் உட்பட அனைத்து தேவர்களையும் அடக்கி, க்ஷீராப்தி என்ற பாற்கடலுக்கும் சென்று, அந்த விஷ்ணுவாகிய நாராயணனையும் அடக்கி விடலாம் என்று, தன் தவ வலிமையால் சென்று பார்த்தான். 

விஷ்ணு மறைந்து விட, தன் எதிரி 'அந்த நாராயணன் ஒருவனே, மற்ற தேவர்கள் எல்லாம் எனக்கு அடிமை' என்று உலகிற்கு காட்டி, "நான் கடவுள்" என்று நிரூபித்தே விட்டான். 



தன்னிடம் சிக்காத விஷ்ணுவுக்காக காத்திருந்தான். 
இப்படி தேவர்களும், சிவனும், பிரம்மாவும் கூட எதிர்க்க முடியாத சக்தி கொண்ட ஹிரண்யகசிபுவை, சாதாரண பூலோக ஜனங்கள் என்ன செய்து விட முடியும்? 
உலகத்தையே ஆட்டிப் படைத்தான்.

இவனே பல லட்ச வருடங்கள் "தானே கடவுள்" என்று உலகை ஆண்டு வந்தான். 
உலக மக்கள் "நாமோ நாராயணா" என்ற சொல்லை கூட மறந்து விட்டனர். 
அனைவரும்  "ஹிரண்யகசிபுவே நம:" என்று சொல்லும் அளவிற்கு, நிலைமை ஆகி விட்டது.

இப்படி எதிரிகளே இல்லாத ஹிரண்யகசிபுவுக்கு, அவன் பெற்ற பிள்ளை, இவனுக்கு நேர் எதிராக இருந்தான். 

ஹிரண்யகசிபுவை "கடவுள்" என்று சொல்ல மறுத்தான் பிரகலாதன் 

இதை விட ஆச்சர்யம், உலகமே நாராயணா என்ற சப்தத்தை கூட மறந்து இருந்த நிலையில், "நாராயணனே எங்கும் உள்ளார். அவரே பரமாத்மா" என்று தைரியமாக சொன்னான். 
இப்படி மகா கெட்டவனுக்கு, எப்படி பக்த பிரகலாதன் பிறந்தான்? 
நாரதர், பிரகலாதன் கருவில் இருக்கும் போதே, அணுகிரஹம் செய்தார் என்பது ஒரு விஷயம்.

அதற்கு முன் நடந்த சம்பவமே உண்மையை நமக்கு விளக்குகிறது.    

ஹிரண்யகசிபு, தன் சகோதரன் "ஹிரண்யாக்ஷன்" இறந்து விட்டான் என்று தெரிந்ததும், நாராயணன் மீது கடும் கோபம் கொண்டான். 

அந்த விஷ்ணுவை எப்படியாவது கண்டுபிடித்து, அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், மேலும் தவம் செய்து தன் வலிமையை கூட்டிக்கொள்ள நினைத்தான்.




அதற்காக தன் அரண்மனையை விட்டு, தவம் செய்ய காட்டுக்கு கிளம்புகிறான்.
ஏற்கனவே இவன் சம்பாதித்து உள்ள பலம் அதிகம். 

இன்னும் பலம் பெறுவானானால், இன்னும் பல லட்ச வருடம் இவனை எதிர்க்க ஆளில்லாமல் போய் விடும் என்று நினைத்த, நாரதர், தன்னுடன் பர்வத முனியையும் அழைத்து கொண்டு, இரண்டு கிளியாக மாறி ஹிரண்யகசிபு அரண்மனை வாசலில், ஒரு மரத்துக்கு மேலே, அவன் பார்க்கும் விதமாக வந்து அமர்ந்தனர். 

தவத்திற்காக அரண்மனையை விட்டு, வெளியே வந்து ஹிரண்யகசிபுவை பார்த்தவுடன், "நாராயணா, நாராயணா" என்று பறவை ரூபத்தில் இருந்து கூவினர்.

இதை கேட்ட ஹிரண்யகசிபு, மகா ஆத்திரம் வந்தது. "சீ.. இது என்ன கெட்ட சகுனம்" என்று நினைத்தான்.
"யாரை அழிக்க நினைத்தோமோ, அவன் பெயரை கேட்க நேர்ந்ததே" என்று கோபம் அடைந்தான். "சகுனம் சரி இல்லை" என்று நினைத்தான்.

"இந்த சமயத்தில் தவம் செய்ய போக வேண்டாம், நாளை போகலாம்" என்று அரண்மனை திரும்பி விட்டான்.

திரும்பி வந்த ஹிரண்யகசிபு, தன்  மனைவி "கயாது" இருக்கும் அந்தப்புரம் சென்றான். 

அந்த பறவைகள் சொன்ன, நாராயண சப்தம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க,
"இப்படி என் தவம் செய்ய முடியாமல், இந்த நாராயண சப்தம் கேட்க நேர்ந்ததே" 
என்று நினைத்து கொண்டே இருந்தான்.

இந்த நினைவு மனதை விட்டு நீங்காமல், "இப்படி பக்ஷிகள் நாராயணா என்று சொல்லி என் தவத்தை இன்று தடுத்து விட்டதே !!" என்ற நினைவுடனேயே அன்று இரவு தன் மனைவியுடன் சேர்ந்தான்.

கயாது மிக நல்லவள். 
அந்த சமயத்தில் ஹிரண்யகசிபுவும் "நாராயணா என்று சொல்லி என் தவம் கெட்டு விட்டதே!!,  நாராயணா என்று சொல்லி, என் தவம் கெட்டு விட்டதே!!" 
என்ற நாராயண நினைவுடனேயே தன் மனைவியுடன் சேர்ந்ததால், பக்த பிரகலாதன் பிறந்தான். 
அதனால் தான், நம் சாஸ்திரம் 'கணவன் மனைவி சேரும் போது கூட, நல்ல மனதுடன், தெய்வ சிந்தனையுடன் இருக்க வேண்டும்' என்று வழி சொல்கிறது.

'கணவனும், மனைவியும் எந்த சிந்தனையில் அந்த சமயத்தில் இருக்கிறார்களோ, அந்த குணத்திற்கு ஏற்ற ஆத்மாக்கள் இவர்களுக்கு குழந்தையாக பிறக்கிறது' என்கிறது நம் சாஸ்திரம்.

இதன் காரணமாக தான், நல்லவர்களுக்கு கூட, சில கெட்ட பிள்ளைகள் பிறந்து விடுகின்றனர். 

ஹிந்துவாக இருப்பதால், நம்மை வழி நடத்த, நம் சாஸ்திரங்கள் ஒவ்வொரு சமயமும் நமக்காக நல் வழிகளை காட்டுகிறது. 

வாழ்க ஹிந்துக்கள். 


Tuesday 3 April 2018

கல் தெய்வமாகி விட முடியுமா?

கல் தெய்வமாகி விட முடியுமா?
 நாம் குப்பை செடி என்றும் ப்ரயோஜனம் இல்லாத செடி என்று நினைக்கும் இலைகளை, ஒரு மருத்துவன் கையில் எடுக்கும் போது, அதை ஏதோ செய்து, ப்ரயோஜனம் இல்லாத செடி என்று நினைத்த நமக்கே, உடல் உபாதை வரும் போது, சாப்பிட சொல்கிறான். நோய் விலகுகிறது.

சாதாரண மனிதன் செடி தானே என்று நினைக்கிறான்.
அதே செடியை, தன் கை பக்குவத்தால், மருந்தாக்கி, அந்த மனிதனுக்கே கொடுத்து விடுகிறான் மருத்துவன்.

அதேபோல,

சாதாரண மனிதன் கல் தானே என்று நினைக்கிறான்.
அதே கல்லை, தன் பக்தியாலும், தவத்தாலும் எங்கும் உள்ள தெய்வத்தை அதில் நிலைநிறுத்தி, சாதாரண மக்களும் வந்து பார்த்து, கேட்கும் வரங்களை கொடுக்குமாறு வரமும் வாங்கி, காண முடியாத, எங்கும் உள்ள தெய்வத்தை, இங்கு பூரணமாக இருக்கிறார் என்று உணர செய்து, அந்த சாதாரண மனிதனுக்கே கொடுத்து விடுகிறார்கள் ஞானியும், ரிஷியும், தேவர்களும்.

மகாபலிபுரத்தில்,  மிகவும் ஆச்சர்யமான அழகான சிவனின் சிலைகளை செதுக்கி விற்பனைக்கு வைத்துள்ளனர் சிற்பிகள். இந்த அற்புதமான சிலைகளை கண்டால் சிலை என்று தான் தோன்றுமே தவிர, தெய்வம் என்று தோன்றாது.

பார்க்கும் கல்லை எல்லாம் தெய்வம் என்று சொல்லும் முட்டாள் அல்ல பாரத தேச ஹிந்துக்கள்.

ஆனால், அழகே இல்லாமல், லிங்கமாக கர்பக்ரஹத்தில்  இருக்கும் சிலையை கண்டால் மட்டும் தெய்வம் என்று தோன்றும். ஆச்சர்யம் !!

இந்த கல்லுக்கு மட்டும் எதனால் தெய்வம் என்ற ஸ்தானம் கிடைத்தது?

எந்த கல்லை, ஒரு மகான், ஒரு ஞானி, ஒரு ரிஷி, ஒரு பக்தன் தன் பக்தியால் தெய்வ பிரதிஷ்டை செய்கிறானோ, அந்த கல் தெய்வ சாந்நித்யம் பெறுகிறது.

கல் தானாக தெய்வமாகவில்லை.
ஒரு ஞானியின் பக்தியால்,  தெய்வம் கல்லுக்குள் பிரவேசிக்கிறது.

நமக்கு எளிதில் தெய்வ அருள் கிடைக்க, ஞானிகளும் மகான்களும் செய்த பெரிய உபகாரம் இது.

அதனால் தான், நம் சாஸ்திரம், ஒரு ஞான குருவும், இஷ்ட தெய்வமும் ஒரு சேர வந்தால், தெய்வத்தை கூட வணங்க வேண்டாம், ஆனால் அந்த குருவுக்கே முதல் நமஸ்காரம் செய்ய வேண்டும் என்கிறது.

ராம பக்தர், கபீர் தாஸ் தன் கவிதைகளில் இதையே சொல்கிறார்.

ஞானிகளும், ரிஷிகளும், பக்தனும், யோகிகளும் இருப்பதாலேயே, நமக்கு தெய்வ சாந்நித்யம் கொண்ட சிலைகள் கிடைத்தன.
கல்லில் குடிகொண்டுள்ள இந்த தெய்வங்களே, நமக்கு அணுகிரஹமும், தெய்வ சிந்தனையும் ஏற்பட செய்கிறது.

பாரத தேசத்தை தவிர, ஞானிகள் வேறு எங்கும் பிறக்க பிரியப்படாததால் தான், தெய்வ சிந்தனை குறைந்த மக்கள் உலகெங்கிலும் உள்ளனர்.

மேலும் படிக்க....   Click செய்யவும்.

Tuesday 27 March 2018

அக்னி பிரவேசம் செய்த போது, தேவி சீதை என்ன நினைத்தாள்? ராமபிரான் என்ன நினைத்தார்? லக்ஷ்மணன், ஹனுமான் என்ன நினைத்தார்கள்?. சீதையின் உண்மை நிலை என்ன? யாரிடமும் கடிந்து பேசாத ஸ்ரீ ராமர், சீதையை பார்த்து ஏன் கடிந்து பேசினார்?

ராவணன், சீதையை அபகரித்து இலங்கைக்கு கொண்டு சென்று விட்டான்.
அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதை, "ஸ்ரீராமர் வந்து காப்பாற்றுவார்" என்று பத்து மாதங்கள் காத்திருந்தாள்.
சீதையை மீட்க,
பெரும் வானர படை திரட்டி, கடலில் சேது அமைத்து,
பெரும் போர் செய்து,  ராவணன் 10 தலையையும் கீழே சாய்த்து,
விபீஷணனை இலங்கை அரசனாக்கி,
மகிழ்ச்சியுடன் விபீஷணனை பார்த்து,
சீதையை தன்னிடம், அழைத்து வர சொன்னார் ஸ்ரீ ராமர்.




சீதையை சகல மரியாதையுடன், மூடு பல்லக்கில் அழைத்து வந்தார் விபீஷணன்.

"எந்த சீதைக்காக, தங்கள் உயிரை கூட தியாகம் செய்ய தயாராக இருந்தார்களோ! அந்த சீதையை, வானரர்கள் தரிசனம் செய்ய வேண்டும்"
என்று ஆசைப்பட்ட ஸ்ரீ ராமர், சீதையை பல்லக்கை விட்டு இறங்கி, வானரர்கள் பார்க்க நடந்து வர சொன்னார்.

க்ஷத்ரிய பெண்ணான சீதை, ராவணனை கூட கண்டு அஞ்சாத வீரமிக்கவள், என்ன காரணத்தாலோ, 'திடீரென்று, தன் முகத்தை தன் புடவையால் மூடி கொண்டு, முகத்தை காட்டிக்கொள்ள பிரியப்படாமல், தலை குனிந்து கொண்டே', வானரர்களுக்கு இடையே நடந்து, ராமபிரான் அருகில் வந்து நின்றாள்.

தன் உயிருக்கு உயிரான சீதையை மீட்க, இலங்கை வரை படையை திரட்டிக்கொண்டு சென்று, ராவணனை கொன்று, 'தன் பத்னியான சீதையை ஆசையுடன் அழைத்து வர சொன்ன ஸ்ரீ ராமர்'தலை குனிந்து கொண்டே தன் அருகில் வந்து நிற்கும் சீதையை கவனித்ததும்,
அவளை பார்க்க கூட செய்யாமல், எங்கோ பார்த்து கொண்டு, யாருமே எதிர்பார்க்காத கடும் சொற்களை பேசினார்.

இந்த கடும் சொற்களை கேட்ட சீதை, துளியும் பயம் இல்லாமல், லக்ஷ்மணரை பார்த்து,
"லக்ஷ்மணா! எனக்கு இங்கேயே அக்னியை மூட்டு, நான் அக்னி பிரவேஷம் செய்கிறேன்." என்றாள்.

"அக்னியை மூட்டுவதா? வேண்டாமா?" என்ற நிலையில், லக்ஷ்மணன் ராமபிரானை பார்க்க, ஸ்ரீ ராமர் முகத்தில் சம்மதம் தெரிந்தது. உடனே அக்னி மூட்டிவிட்டார்.

ஸ்ரீ ராமருக்காக 'சீதையை தேடி இலங்கை சென்று பார்த்த' ஆஞ்சநேயரும் இங்கு நடக்கும் நிகழ்வை கண்டு துக்கப்படவில்லை.

வெளியோட்டமாக பார்க்கும் போது, யாரிடமும் கடிந்து பேசாத ஸ்ரீ ராமர், சீதையை பார்த்து ஏன் இப்படி பேசினார்? என்று தோன்றும்.

ராமபிரான் கடிந்து பேசியதே ஆச்சர்யம்! 
அதற்கு சீதை பதிலாக "நான் அக்னி பிரவேசம் செய்து என்னை நிரூபிக்கிறேன்" என்று சொன்னதும் ஆச்சர்யம்.
இதை கண்டு, பதட்டம் அடையாத லக்ஷ்மணரும், ஹனுமனும் கூட ஆச்சர்யமே !!

நடப்பது அநியாயம் போல தோன்றும் இந்த நிகழ்வில், ஏன் ஹனுமனும், லக்ஷ்மணனும் அமைதியாக இருந்தனர்? என்றும் கேள்விகள் தோன்றும்.

ஸ்ரீ ராமரும், சீதையும் திவ்ய தம்பதிகள்.

சாதாரண தம்பதிகளுக்கும், திவ்ய தம்பதிக்கும் பல வித்யாசம் உண்டு.

சாதாரண உலக தம்பதிகளுக்கு, மற்றவர் என்ன சொல்ல நினைக்கிறார்? என்ன ஆசைப்படுகிறார்? என்பதை சொன்னால் தான், புரிந்து கொள்ள முடியும்.

திவ்ய தம்பதிகளுக்கு, தன் கணவன் என்ன சொல்ல நினைக்கிறார்? தன் மனைவி என்ன சொல்ல நினைக்கிறாள்? என்ன ஆசைப்படுகிறார்? என்பதை  அவர்கள் குறிப்பு அறிந்தே புரிந்து கொள்ள முடியும்.
திவ்ய தம்பதிகள் தன் தேவைகளுக்கு பேச கூட அவசியமில்லாமல் இருப்பர். 
திவ்ய தம்பதிகள் பேசினால், பேசுவதற்கு ஆசை பட்டு தான் பேசுவார்களே தவிர, தேவைக்கு பேசக்கூட அவசியமில்லாமல் இருப்பார்கள்...

ஸ்ரீ ராமரும், சீதையும் திவ்ய தம்பதிகள் என்பதை நாம் மறக்க கூடாது.

நம்மை போன்ற சாதாரண தம்பதிகள் என்ற பார்வையில் பார்த்தாலே, அது நமக்கு பாவத்தை தரும்.
இவர்கள் சாக்ஷாத் அந்த 'விஷ்ணுவும், லட்சுமியும்' என்ற உணர்வில் பார்க்க வேண்டும்.

உண்மையில் என்ன நிகழ்ந்தது?
ஸ்ரீ ராமர், ராவணனை கொன்ற பின், விபீஷணனை பார்த்து சீதையை சகல மரியாதையுடன் அழைத்துவர சொன்னார்.

சுக்ரீவனும் அவனுடைய சேனைகளும், சீதையை பார்த்தது கூட இல்லை. ஆனால், சீதைக்காக தங்கள் உயிரை கூட விட துணிந்து போர் செய்தனர்.
யாருக்காக தன் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருந்தார்களோ! அந்த சீதையின் தரிசனம் இவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று கருணை கொண்டார் ஸ்ரீராமர்.

இதன் காரணமாக, சீதையை ஸ்நானம் செய்து, சர்வ ஆபரணத்துடன் சேனைகளுக்கு நடுவே நடத்தி அழைத்து வருமாறு சொன்னார்.

பத்து மாதம் சிறையில் இருந்த சீதையை, விபீஷணன் தன் மனைவியை முன்னிட்டு, "ஸ்ரீ ராமர் தங்களை பார்க்க ஆவலாக, அழைப்பதாக" சொன்னார்.

இந்த ஒரு சொல்லுக்காக காத்திருந்த சீதை, உடனே சந்தோசத்துடன் கிளம்ப தயாரானாள்.

ஸ்ரீ ராமர், "சீதையை ஸ்நானம் செய்து, சர்வ ஆபரணத்துடன் அழைத்து வருமாறு" சொன்னதாக சொல்ல,
பணிப்பெண்களும், விபீஷணனின் பத்னியும், சீதைக்கு ஸ்நானம், அலங்காரம் செய்து, மூடு பல்லக்கில், மகாராணி சீதையை சர்வ மரியாதையுடன் அழைத்துக் கொண்டு, ஸ்ரீ ராமரை நோக்கி வந்தனர்.

வானர சேனைகள், சீதையை காண முடியாமல், மூடு பல்லக்கை ஆச்சர்யமாக பார்த்தனர்.




வானர படைகளின் "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற கோஷம் விண்ணை முட்டியது.

'வானரர்கள் யாருக்காக தன் உயிரையும் துறக்க துணிந்தார்களோ! அவர்களுக்கு சீதையின் தரிசனம் கிடைக்க வேண்டும்' என்று எண்ணினார் ஸ்ரீ ராமர்.




உடனே, ஸ்ரீ ராமர், வானரர்கள் சீதா தேவியை பார்க்க வேண்டும் என்ற கருணையால், மூடு பல்லக்கு இல்லாமல், சீதையை சகல மரியாதையுடன் நடத்தி அழைத்து வருமாறு சொன்னார்.

கம்பீரமான, தாயுள்ளம் கொண்ட சீதை, மகிழ்ச்சியுடன் பெரும் சேனைக்கு நடுவே ஸ்ரீ ராமரை நோக்கி நடக்கலானாள்.

'தனக்காக பெரும் படையை திரட்டி, ஜெயராமனாக இருக்கும் ஸ்ரீராமரை காணப்போகிறோம்' என்று ஆனந்தப்பட்டாள் சீதை.

பெரும் வானர படை வீரர்களை கண்டு, ஸ்ரீ ராமருக்கும், தனக்கும் கிடைத்த குழந்தைகள் போல நினைத்தாள், சீதை.
தாயுள்ளதோடு அனைவரையும் கண்டாள்.

சீதையை கண்டதும், பேரிரைச்சல் உண்டானது.
வானர்கள்,
"இதோ சீதா மாதா...",
"ஆஹா... இவள்தான் சீதா தேவியோ !",
"சீதா ராம் கீ ஜெய்"
என்று எங்கும் பேரிரைச்சல் உண்டானது.

மூடு பல்லக்கில் வரும் வரை மனம் சஞ்சலம் அடையாமல், ஸ்ரீ ராமரை அடையப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தாள் சீதை.

மூடு பல்லக்கில் இருந்து இறங்கி, வானர படைகளின் பேரிரைச்சல் நடுவில் நடக்கும் போது, சீதைக்கு திடீரென்று மனம் சஞ்சலம் அடைந்தது. பெரும் துக்கம் சூழ்ந்தது.

தன்னை வெளிக்காட்டி கொள்ள விரும்பாத சீதை, உடனே தன் புடவை தலைப்பு கொண்டு, தன் முகத்தை முழுவதுமாக மூடி, அவமானத்தால் கூனி குறுகி நடந்து வந்து, ஸ்ரீ ராமர் முன் நின்றாள்.

சீதையின் நிலை என்ன? என்ன துக்கத்தை அடைந்தாள் சீதை?

கற்புக்கரசியான சீதை, தான் களங்கப் படாதவளாக இருந்தாலும், 
பத்து மாதங்கள் ஒருவன் பிடியில் அகப்பட்டதையும், 
அதனால் உலகம் தன்னையும், ஸ்ரீ ராமரையும் கேட்கப் போகும் கேள்விக்கும், 
அதனால் ஸ்ரீ ராமருக்கு உண்டாக போகும் தர்ம சங்கடத்திற்கு தான் காரணமாகிவிட்டோமே!!
என்று தன்னை தானே வெறுத்தாள்.

"இப்படி ஒரு நிலையை ஸ்ரீ ராமருக்கு தந்து விட்டோமே!!" என்று சொல்லமுடியாத துக்கம் அடைந்தாள்.
"இப்பொழுதே அக்னிப்ரேவேசம் செய்து பிராண தியாகம் செய்து விடலாமா?" என்று எண்ணினாள்.
"இருந்தாலும் ஸ்ரீ ராமர் மனம் தெரியாமல் தானாக முடிவு செய்யக் கூடாது" என்ற மனசஞ்சலத்தோடு ஸ்ரீ ராமரை நோக்கி நடந்தாள்.

ஸ்ரீ ராமரும், சீதையும், மனம் ஒத்த திவ்ய தம்பதிகள்.
சாக்ஷாத் நாராயணனும் லக்ஷ்மியும் ஆவார்கள்.
பேசிக்கொள்ளாமலேயே,  இருவருக்கும் மற்றவர் என்ன நினைக்கிறார்? என்ன ஆசைப்படுகிறார்? என்று தெரியும்.

சமாதானமே செய்யமுடியாத சோகத்துடன் வரும் சீதையின் மன சஞ்சலத்தை அறிந்து கொண்டார் ஸ்ரீராமர்.

தன்னை இந்த உலகிற்கு கொடியவனாக காட்டி கொண்டாலும் பரவாயில்லை, ஆனால் 'சீதையை யாரும் குறை சொல்ல கூடாது' என்று எண்ணினார்.

உடனே, சீதையின் முகத்தையும் பாராமல்,
"சீதை, உன்னை காப்பாற்றியது, என்னுடைய கடமை.
நானும் ஒரு புருஷன் என்று நிருபித்தேன்.
உன்னிடம் மீண்டும் வாழவேண்டும் என்றில்லை.
நீ வாழ்வதோ! உயிரை போக்கி கொள்வதோ! உன் இஷ்டம்.
நீ வாழவேண்டும் என்றால், கவலை படாதே. நான் உன்னை வாழ வைக்கிறேன்.
உன்னை தாயை போன்று, என் தம்பிகள் உன்னை காப்பாற்றுவார்கள்.
அயோத்யாவிலேயே நீ வாழலாம். 
இல்லை என்றால், கிஷ்கிந்தையில் நீ வாழலாம்.
சுக்ரீவனும் உன்னை தாயை போல காப்பாற்றுவான்.
இல்லை என்றால், இங்கேயே வாழலாம்.
விபிஷணன் உன்னை காப்பாற்றுவான்.
எதுவும் பிடிக்க வில்லை என்றால், நீ எங்கு வேண்டுமானாலும் வாழ். 
நான் உன்னை வாழ வைக்கிறேன்."
என்றார்.

சீதைக்காகவே 1000 மைல் நடந்து,
சீதைக்காகவே படைகளை  திரட்டி, 
சீதைக்காவவே கடலில் பாலம் அமைத்து, 
சீதைக்காகவே ராக்ஷஸர்களுடன் போர் செய்து,
சீதைக்காகவே ராவணனை கொன்று,
சீதையை மீட்ட பின், ராமபிரான் இப்படி கடுமையாக பேசியது, அங்கு கூடி இருந்த சுக்ரீவன் போன்றவர்களுக்கே திகைப்பை ஊட்டியது.




ஆனால், இந்த கடுஞ் சொற்கள், சீதைக்கு மன சமாதானமாக இருந்தது.
இதை ஒரு வாய்ப்பாக எடுத்து, லக்ஷ்மணனை பார்த்து சீதை கட்டளை இட்டாள்,
"லக்ஷ்மணா, இந்த இடத்திலேயே எனக்கு அக்னியை மூட்டு, நான் அக்னி பிரவேசம் செய்யப்போகிறேன்.
நான் பதிவ்ரதை!! என்பது உண்மையானால், 
ஸ்ரீ ராமரும் ஏக பத்னிவ்ரதன்!! என்பது உண்மையானால், 
இந்த அக்னி என்னை பாதுகாக்கட்டும்" 
என்றாள்.

லக்ஷ்மணன், ஸ்ரீ ராமர் முகத்தை பார்த்தார். 
ஸ்ரீ ராமர்  முகத்தில் சம்மதம் தெரிந்தது. தைரியமாக சிதை மூட்டினார்.

அருகில்,
ஆஞ்சநேயர் எந்த ஒரு மன சஞ்சலமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தார்.

லக்ஷ்மனின் நிலை என்ன? ஆஞ்சநேயர் நிலை என்ன?

லக்ஷ்மணன், ஸ்ரீ ராமரை நன்கு உணர்ந்தவர்.
ஸ்ரீராமர், எந்த ஒரு நிலையிலும் நீதி தவறாதவர், குற்றமற்றவர், நிதானமனாவர், தர்மம் தெரிந்தவர், சர்வ நல்ல குணங்களும் உள்ளவர் என்று நன்கு உணர்ந்தவர் லக்ஷ்மணன்.

இப்படிப்பட்ட "ஸ்ரீஅண்ணாவுக்கு சம்மதம் என்றால், அதுவே சாஸ்த்ரம்.
மறு கேள்வி இல்லை." என்று நினைத்தார்.
இது லக்ஷ்மணனின் நிலை.

ஆஞ்சனேயர், "சீதைக்கு அக்னியால் ஒன்றும் ஆகாது" என்று திடமாக முடிவு செய்திருந்தார்.
தான் இலங்கையை நெருப்பால் பொசுக்கிய போது, சீதை செய்த சபதம் அவருக்கு ஞாபகம் வந்தது.

"நான் பதிவ்ரதை என்பது உண்மையானால், இந்த அக்னி, ஹனுமனை சுடாமல், குளிர்ச்சி கொடுக்கட்டும்" என்றாள் சீதை .

"சீதையின் கற்பிற்கு தானே சாட்சி" என்பதாலும்,
சீதை இப்பொழுது செய்த சபதத்தில்,
"நான் பதிவ்ரதை என்பது உண்மையானால்,
ஸ்ரீ ராமர் ஏக பத்னிவ்ரதன் என்பது உண்மையானால், 
இந்த அக்னி என்னை பாதுகாக்கட்டும்"
என்று சொன்னதால், துளியும் கவலை இல்லாமல், அமைதியாக
இருந்தார், ஹனுமார்.
சீதை உடனே அக்னி பிரவேசம் செய்தாள்.
புகைக்கு உள்ளே சென்று வெளியே வருவது போல, சீதை தன் நெற்றியில் வியர்வை கூட இல்லாமல், வெளியே வந்தாள்.
அக்னி பிரவேசம் செய்து வெளி வந்ததால், சீதை "தன் கற்பை நிரூபித்த திருப்தி அடைந்தாள்".
இப்பொழுது சீதையின் மனோநிலை, சமாதானம் அடைந்தது.

"தன்னை சேர்த்து கொண்டால், தேசத்தின் அரசனான ஸ்ரீ ராமரை இந்த உலகம் என்ன கேட்குமோ? என்ற சங்கடம் நீங்கி, நிம்மதி அடைந்து இருந்தாள் சீதை.

தன் நிலையை உணர்ந்து, வெளி உலகத்திற்கு தன்னை கோபக்காரனாக காட்டினாலும், ஸ்ரீ ராமரின் அனுக்ரஹத்தை எண்ணி உருகினாள்.

சீதையை கோபமாக பேசியது ஸ்ரீராமரின் நோக்கம் அல்ல.
அக்னி பிரவேசம் செய்த பின், மன சஞ்சலம் இல்லாமல் இருந்தாள் சீதை.
உற்சாகத்துடன் ஸ்ரீ ராமர் அருகில் நின்றாள்.
மனதில் குறை அகன்று இருந்த சீதையை கண்டு, ஸ்ரீ ராமர், மகிழ்ச்சியுடன் சீதையை அருகில் அமர செய்து, சீதா ராம தம்பதிகளாய் காட்சி கொடுத்தனர்.

சற்று முன் ராமபிரான் காட்டிய கோபமும், அக்னி பிரவேசம் செய்த பின், சீதையை மகிழ்ச்சியுடன் சேர்த்து கொண்ட காரணத்தையும் புரிந்து கொள்ள, 
சீதையின் நிலை எவ்வாறு இருந்தது என்று நம்மால் பார்க்க முடிந்தால் மட்டுமே, "ராமபிரானின் இதயத்தை" புரிந்து கொள்ள முடியும். 


வாழ்க திவ்ய தம்பதிகள் புகழ்.  வாழ்க சீதா ராம புகழ்.
வாழ்க அயோத்தியா.