Followers

Search Here...

Monday 27 November 2017

மஹாபாரத சமயத்தில் மஹாராஷ்டிரா : Maharashtra எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே

மஹாபாரத சமயத்தில் மஹாராஷ்டிரா : Maharashtra எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே


விதர்ப தேசம், குந்தல தேசம், கோமந்த தேசம் ஆகிய தேசங்கள், இன்றைய மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தன.

குந்தல தேசம், இன்றைய மஹாராஷ்டிரா மாநிலத்தில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள். பெரும்பாலும் இவை கிராமங்கள்.

கோமந்த தேசம், இன்றைய மஹாராஷ்டிரா மாநிலத்தில் மேற்கு மற்றும் கோவா பகுதிகள். இந்த தேசங்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆட்சியின் கீழ் இருந்தது.

மகத அரசன் (பீஹார்) 'ஜராசந்தன்' யாதவர்கள் மீது தீராத கோபம் கொண்டு மதுராவை பல முறை தாக்கினான்.
இதனால், ஸ்ரீ கிருஷ்ணர், யாதவ மக்கள் அனைவரையும் துவாரகை (Gujarat) என்ற நகரை அமைத்து குடியேற்றினார்.
அங்கும் வந்து பல முறை போரிட்டு யாதவர்களை அழிக்க நினைத்தான் ஜராசந்தன்.
இந்த சமயத்தில், அங்கு இருந்த யாதவர்கள், தங்கள் எல்லையை பாதுகாக்க, துவாரகையிலிருந்து கோமந்த தேசம் வரை படைகளை நிறுத்தி யாதவ மக்களுக்கு பாதுகாப்பாக இருந்தனர்.
யாதவ ராஜ்யம் குஜராத்திலிருந்து கோவா (Goa) வரை, ஸ்ரீ கிருஷ்ணரின் கண் காணிப்பில், பாதுகாப்பாக இருந்தது.

மகாபாரத காலத்துக்கு பின், சுமார் 3000 வருடங்கள் பின் வந்த போர்ச்சுகல் (Portuguese), பிரிட்டன் (british) போன்ற கிறிஸ்தவ வணிகர்கள், கோவா சூரத் போன்ற கடல் ஓர நகரங்களை ஆக்கிரமித்து, கலாச்சாரத்தை கெடுத்து இன்றுவரை கோவா போன்ற நகரங்களை கீழ் தரமான கண்ணோட்டத்தில் பார்க்கும் அளவிற்கு செய்தனர்.

947ADக்கு பிறகு, போர்ச்சுகல் (Portuguese), பிரிட்டன் (british) போன்ற கிறிஸ்தவ வணிகர்களை எதிர்த்து, இஸ்லாமியர்களையும் எதிர்த்து, யாதவர்கள் கடுமையாக போராடினர்.
947ADக்கு பிறகு, யாதவ சமுதாயம் தங்களை காத்துக்கொள்ள பல இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
தமிழ்நாட்டில் இருந்த 'முல்லைக்கு தேர் கொடுத்தான்' என்றும், வள்ளல் என்றும் ஒளவையார் புகழ்ந்த பாரி போன்ற அரசர்கள் துவாரகையில் இருந்து பிற் காலத்தில் இடம் பெயர்ந்த க்ஷத்ரியர்கள்.
யாதவ அரசர்கள் எத்தனை நல்ல மனம் படைத்தவர்கள் என்பதற்கு பாரி போன்ற அரசர்களே ப்ரமானம்.
5000 வருடங்கள் தாண்டியும், யாதவர்கள் (yadav) இன்று வரை உள்ளனர். இவர்களுக்கு இன்று வரை ஸ்ரீ கிருஷ்ணரே அரசன், குல தெய்வம்.

விதர்ப தேசம், இன்றைய மஹாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் கிழக்கு பகுதிகள்.
இன்றைய மத்திய பிரதேசத்தின் (Madhya Pradesh) வடக்கு எல்லையில்  உள்ளது என்றும் சொல்லலாம்.

விதர்ப தேசத்தில் (மகாராஷ்டிரா) ருக்மிணி வளர்ந்து வந்தாள்.
இவள் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைபருவம் முதல் இன்று வரை என்ன செய்தார்? எப்படி இருப்பார்? என்று, அவரைப்பற்றி அறிந்து இருந்தாள்.

மணந்தால், இவரை தான் மணக்க வேண்டும் என்று முடிவு கொண்டாள்.
இதற்கு ருக்மிணியின் தந்தை சம்மதித்தார்.



ருக்மிணியின் சகோதரன் பெயர் 'ருக்மி'.
இவன், தன் தங்கையை சேடி அரசன் (MadhyaPradesh) சிசுபாலனுக்கு கொடுப்பது என்று முடிவு கட்டி, திருமணத்திற்கு பிடிவாதமாக ஏற்பாடு செய்தான்.

மனம் வெதும்பிய ருக்மினி, ஸ்ரீ கிருஷ்ணருக்கு கடிதம் ஒன்றை ஒரு யோகியிடம் கொடுத்து, "எப்படியாவது வந்து, தன்னை ஸ்ரீ கிருஷ்ணர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்று எழுதி  அனுப்பினாள்.
ஸ்ரீ கிருஷ்ணர், விதர்ப தேசம் வந்து, ஜராசந்தன், ருக்மி போன்றோர் பார்க்க, ருக்மிணியை தூக்கி சென்றார்.
ஜராசந்தன் ஸ்ரீ கிருஷ்ணரை துரத்த, பலராமர் வந்து ஜராசந்தன் படையை சிதறடித்தார்.

ருக்மி கோபத்துடன் ஸ்ரீ கிருஷ்ணரை துரத்த, கடைசியில் சண்டையிட்டு தோற்றான்.
"இவனை கொல்ல கூடாது" என்று நினைத்த ஸ்ரீ கிருஷ்ணர், "ருக்மிணியின் அண்ணன்" என்பதால், உயிரோடு விட தீர்மானித்தார்.
அப்படியே விட்டால், "திருமணம் நடக்கும் முன், மீண்டும் படையை திரட்டி துவாரகை (Gujarat) நோக்கி வருவான்" என்பதால், ஒரு சில மாதங்கள் இவன் காட்டிலேயே அலையட்டும் என்று தீர்மானித்து ருக்மி உடம்பில் கரும் புள்ளி, செம் புள்ளி குத்தி, பாதி மொட்டை அடித்து 3 குடுமிகள் முன்னும் பின்னும் வைத்து அனுப்பினார்.
ருக்மிணிக்கும், ஸ்ரீ கிருஷ்ணருக்கும் வெகு விமரிசையாக திருமணம் துவாரகையில் நடந்தது.
குஜராத்துக்கும் (Gujarat), மஹாராஷ்டிரத்துக்கும் (Maharastra) சம்பந்தம் உண்டானது.

ஒரு சமயம், துவாரகையில் இருக்கும் போது, தேவகி ஸ்ரீ கிருஷ்ணரிடம் 'நீ குழந்தையாக இருந்த போது என்ன செய்தாய்? எப்படி இருந்தாய்? என்று பார்க்க முடியாது போய் விட்டதே!! 
இந்த பாக்கியம் யசோதைக்கு கிடைத்ததே. அவளே பாக்கியம் செய்தவள்' என்றாள்.
தன் தாய் தேவகியின் மனக்குறையை போக்க, அவளுக்காக தன்  மாய  சக்தியால், சிறு குழந்தையாக உருமாறி, அனைத்து பால லீலைகளையும் செய்து காண்பித்தார்.
அப்போது, இந்த அதிசயத்தை ருக்மிணியும்  பார்த்து விட்டாள். 

இந்த ஆச்சர்யத்தை கண்ட ருக்மிணி, தான் கண்ட குட்டி கிருஷ்ணரை போலவே ஒரு சிலை செய்தாள். அதை ஸ்ரீ கிருஷ்ணரிடமே காண்பித்து ஆசிர்வத்திக்க சொன்னாள்.
ஸ்ரீ கிருஷ்ணர் அதை தொட்டு, ருக்மிணியிடம் கொடுத்தார். 


அன்றிலிருந்து, தினமும் ருக்மிணி தேவியே அந்த விக்ரஹத்துக்கு பூஜை செய்து வந்தாள்.
இந்த விக்ரஹம், சுமார் 4000 வருடங்களுக்கு பிறகு, 12ஆம் நூற்றாண்டில் வந்த மத்வாசாரியர் மூலம் கர்நாடகாவில் உள்ள உடுப்பி (Udupi) என்ற நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று வரை காணும் படியாக இருக்கிறார். 

சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ணரின் பால லீலையை பார்த்து, ருக்மிணி தேவியே வழிபட்ட மூர்த்தியே இன்று உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணராக உள்ளார்.

மகா பாரத போர் நிச்சயம் என்ற நிலையில், ருக்மி, "பாண்டவர்களுக்கு சகாயம்" செய்ய நினைத்தான். 
தன் நண்பனான கிருஷ்ணனிடம் ருக்மி பகைமை கொண்டவன், கிருஷ்ணனிடம் தோற்றவன்" என்பதால், விதர்ப தேச சகாயத்தை மறுத்து விட்டான் அர்ஜுனன்.
"அர்ஜுனன் மறுத்த தேசத்தை தான் ஏற்றுக்கொண்டால் அது அவமானம்" என்று துரியோதனனும் ருக்மியின் உதவியை மறுத்தான்.

மஹா பாரத போரில், விதர்ப தேசத்தை பொதுவாக பாண்டவர்களும், கௌரவர்களும் தங்கள் அணிக்கு அழைக்கவில்லை.

பெரும்பாலும், விதர்ப தேசத்தவர்கள், இருவருக்கும் பொதுவாகவே இருந்தனர்.
ஒரு சில விதர்ப தேசத்தவர்கள், துரியோதனன் படையில் சேர்ந்து கொண்டு பீஷ்மரின் கட்டளை படி போரிட்டனர்.

மஹா பாரத போரில், குந்தல தேசத்தவர்கள், பாண்டவர்கள் பக்கம் இருந்து போரிட்டனர்.


போருக்கு முன், துரியோதனன் ஆசைப்படி, ஸ்ரீ கிருஷ்ணர், தன் படைகள் துரியோதனன் பக்கமும், தான் ஒருவன் மட்டும் ஆயுதம் இல்லாமல் பாண்டவர்கள் பக்கமும் இருப்பதாக சொல்லி இருந்தார்.

கோமந்த தேச படைகள், ஸ்ரீ கிருஷ்ணரின் ஆணைப்படி, துரியோதனன் பக்கம் நின்று போர் புரிந்தனர்.

No comments: