Followers

Monday, 24 December 2018

கலாச்சாரம் இருந்தாலும், சத்தியம் இந்திய மக்களிடம் குறைய காரணம் என்ன ? பொய் பேசுவது சகஜமாகி போய் விட்டதே, ஏன்?

சத்தியம் என்ற உன்னதமான தர்மம், இன்றைய இந்திய மக்களிடம் வீழ்ச்சி அடைந்துள்ளதை நாம் காண முடிகிறது.கொடுத்த வாக்கில் உண்மையாக இருப்பது - "சத்தியம்"

"பொய் சொல்ல பயம் இல்லாமல்" போனதே இந்த வீழ்ச்சிக்கு காரணம்.

"நாளை 10 மணிக்கு உங்களை பார்க்க வருகிறேன்" 
        என்று ஒரு ஜப்பான்காரன் சொன்னால், அவனை நம்ப முடிகிறது.
"நாளை 10 மணிக்கு உங்களை பார்க்க வருகிறேன்" 
        என்று ஒரு இந்தியன் சொன்னால், இவன் சத்தியத்தை இன்று நம்ப                        முடிவதில்லை.
இது மறுக்க முடியாத கசப்பான உண்மை.

947AD வரை, பாரத மக்களில் ஒருவர் கூட, வெளிநாடு மோகம் கொள்ளவில்லை.
இன்னும் சொல்லப்போனால், "அலெக்சாண்டர்" இறந்த பின், அவனால் நியமிக்கப்பட்ட "செலூகஸ் நிகேடர்" என்பவன் சந்திரகுப்த மௌரியனிடம் தோற்று, கிரேக்க பெண்ணை மணம் செய்து கொடுத்தான்.

வெளிநாட்டவர் இங்கு சம்பந்தம் செய்ய பார்த்தனரே தவிர, இந்தியன் வெளிநாட்டுக்கு சென்று வாழ விரும்பாமல் இருந்த காலம் அது.

மேலும்,
இத்தாலி நாட்டுக்காரன் "கொலம்பஸ்", இந்தியாவை தேடி அலைந்து, வழி மாறி அமெரிக்காவை பார்த்தான் என்று பார்க்கிறோம்.
அங்கு இருந்தவர்களை "சிவப்பு இந்தியர்கள்" (Red Indians) என்று அடையாளப்படுத்தினர் என்றும் பார்க்கிறோம்.

அவனை தொடர்ந்து,
வாஸ்கோடகாமா என்ற போர்ச்சுகல் வணிகன் இந்தியாவில் நுழைந்தான்  என்று பார்க்கிறோம்.

இவனை தொடர்ந்து,
பிரிட்டிஷ், டட்ச், பிரெஞ்சு என்று ஐரோப்பா கண்டா நாடுகள் இந்தியாவை நோக்கி வந்தன.
இங்கேயே தங்கி வாழ முயற்சி செய்தனர்.

இது மட்டுமா?
அரபியர்கள், இஸ்லாமிய படையெடுப்பு செய்து, பாரத மக்கள் செல்வத்தை 1000 வருடங்கள் கொள்ளை அடித்தனர்.

சரித்திரத்தில், பழைய கால வரலாற்றை பார்த்தால்,
வெளி நாட்டவன் அழுகிய திராட்சை ரசம், ரொட்டியும், தேனும், ஒட்டக பால் குடித்து "அமிர்தம்" என்று நினைத்த காலத்தில்,
 • ஆயிரக்கணக்கான உணவு வகைகள், 
 • ஆயிரக்கணக்கான  உடை அலங்காரங்கள், 
 • ஆயிரக்கணக்கான நகைகள், 
 • பல நூறு பாஷைகள், 
 • பல வித கலாச்சாரங்கள், 
 • பல வித கலைகள், 
 • பல வித வேத சம்பந்தமான தெய்வங்கள்,
 • ஆகாய விமானத்தை பற்றி த்ரேதா யுகத்தில் ராமாயணத்திலேயே உள்ளது.
 • பணம் சம்பாதிக்க அர்த்த சாஸ்திரம்.
 • கலை வளர்த்துக்கொள்ள சிற்ப சாஸ்திரம்.
 • மருத்துவத்துக்கு ஆயுர் வேதம்
 • யோகத்திற்கு யோகா சாஸ்திரம்
 • கணித சாஸ்திரம்

என்று பாரத நாடே வளர்ச்சி அடைந்த நாடாக மட்டுமில்லாமல், கலாச்சாரம் கொண்ட நாடாகவும் இருந்துள்ளது என்று தெரிகிறது. 

மஹாபாரத போரில் வில் அம்புடன் போர் செய்த போது, அஸ்திரங்கள், சஸ்திரங்கள் (Atom, Nuclear Bomb) பயன் படுத்தினர் என்று சொல்கிறார்கள். 
"ப்ரம்மாஸ்த்திரம் போட்டால் உலகம் அழியும்" என்று துரோணர், அவன் பிள்ளை அஸ்வத்தாமா போன்றவர்களை ஸ்ரீ கிருஷ்ணர் எதிர்த்தார் என்று பார்க்கிறோம்.

இந்திய நாட்டில் இந்த அந்நியர்கள் கால் வைக்கும் முன், வளர்ச்சியின் உச்சத்தில் இருந்த நாம், செல்வங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதால், வளரும் நாடாக ஆகி உள்ளோம்.

"வளர்ச்சி அடைந்த நாடு" என்று பெருமை பட்டு கொள்ளும் வெளிநாடுகளுக்கு ஒரே கேள்வி,
"இந்தியாவுக்கு நுழையும் முன் (947AD) என்ன ஆச்சர்யமா கண்டுபிடித்தார்கள் இவர்கள்?"

மருத்துவம், அறிவியல் என்று எதை தேடினாலும், இந்தியாவுக்குள் நுழைந்த காலத்திற்கு பின் தான், இவர்கள் வளர்ச்சி உண்டானது.
நம்மை அழித்து, இவர்கள் வளர்ந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

இன்று வரை கலாச்சாரம் கொஞ்சம் நமக்கு ஒட்டி உள்ளதால் தான், இன்றும் குடும்பங்களில் ஒரு மனைவிக்கு ஒரு கணவன் என்று இன்றும் வாழ்கிறோம்.

1000 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆட்சியில், "நாம் கலாச்சாரத்தை இழக்காவிட்டாலும், இந்த சத்தியத்தை இழந்து விட்டோம்"

இன்று வளர்ச்சி அடைந்த நாடுகளில், கலாச்சார ஒழுக்கம் இல்லாமல் போனாலும், இவர்கள் வளர்ச்சி அடைய காரணமாய் இருப்பது - சத்தியம் என்ற கொள்கையே.இன்று,
அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்த "சத்தியத்தை" உயிராக மதிக்கின்றனர். 
இந்தியாவில் சத்தியத்தற்கு மதிப்பு குறைந்துள்ளது, நாம் வருந்தத்தக்க விஷயம்.

"சத்தியத்தை மதிக்கும் நாடு" எப்பொழுதுமே பிரகாசம் அடையும். இந்த நாடுகள் எப்படி வலிமையாக இருக்கிறது? என்று பார்க்கும் போதே தெரிகிறது.

சத்தியத்துக்காக வாழ்ந்த ஸ்ரீராமர் பிறந்த நாட்டில், இந்த தர்மம் வீழ்ந்ததற்கு காரணம் என்ன ? 
சத்தியத்தில் நின்ற ஸ்ரீராமர் போன்றவர்கள் சரித்திரத்தை நாம் மறந்ததே, நாம் சத்தியத்திலிருந்து வீழ்ந்ததற்கு காரணம். 

"சத்தியத்தில் நிற்கும் மக்களே, சத்தியத்தில் நிற்கும் தலைவர்களே", ஒன்று சேர்ந்து நாட்டை உயர்த்த முடியும்.

இனி இந்தியா முன்னேற ஒவ்வொரு இந்தியனும் முதலில் கடைப்பிடிக்க வேண்டியது "சத்தியமே" !

எப்படி இந்தியாவில் பொய் பேசும் பழக்கம் அதிகமாய் போனது? 
"பொய் பேச தேவை இல்லை" என்ற  இடத்தில் கூட, வெகு சாதாரணமாக இப்பொழுது இந்தியர்கள் பொய் பேசுகின்றனர்.
இது ஏன்? 

எப்படி இந்த சத்தியம் என்ற தர்மம் இந்தியர்களிடம் இப்போது மலிந்து காணப்படுகிறது ?

அன்று மக்களிடம் இதயத்தில் சத்தியம் இருந்தது.
இன்றுள்ள மக்களிடம் இதயத்தில் சத்தியம் இல்லாமல் போனதால், தானும் கெட்டு, நாட்டை அழிவு பாதைக்கு இழுத்து செல்கின்றனர்.

இஸ்லாமியர்களின் 1000 வருட ஆதிக்கத்தில் இருந்த பொழுது கூட, ஹிந்துக்களிடம் இருந்த சத்தியம் அழியாமல் தான் இருந்துள்ளது. 

"சத்தியமாக இருக்க வேண்டும்" என்ற பண்பு படிப்படியாக கிறிஸ்தவர்களின் ஆட்சியில் இருந்து குறைய தொடங்கி,
இப்பொழுது விடுதலை அடைந்த பின்பும், ஹிந்துக்கள் தன் குணமாக வைத்திருந்த இந்த சத்யம் (உண்மையாக இருத்தல்) இன்று குன்றி போய் உள்ளது என்பதே உண்மை.

"சத்யம் ஏவ ஜயதே" ( "Truth Alone Triumphs") என்று இன்றும் இந்தியா சொல்லிக் கொண்டாலும், இந்தியாவில் யாருமே பொய் சொல்ல மனம் அஞ்சாததால், அரசன் முதல் பொது மக்கள் வரை பொய் பேச இன்று தயங்குவதில்லை.
நீதிமன்றத்தில் உள்ள ஏராளமான "வழக்குகள்" இதற்கு சாட்சி. 

இந்த சத்தியத்தை உயிராக கொண்டவர் ஸ்ரீ ராமர்
ராமரிடம் அன்பு உள்ளவன் பொய் பேச அஞ்சுவான். சத்தியத்தில் இருப்பான்.

இஸ்லாமியர்கள் காலம் வரை, ஹிந்துக்கள் பெரும்பாலும் அவரவர்கள் உயிராக மதிக்கும் "தெய்வத்தை வைத்தோ, தாய் தந்தை" மீதோ சபதம் செய்து "வாணிகமோ, உடன்படிக்கையோ" செய்து கொண்டனர் என்று பார்க்கிறோம்.
பத்திரம் கிடையாது, பதிவு கிடையாது.
இப்படி வாய் மொழியாக செய்த சபதம், பெரும்பாலும் ஜெயித்துள்ளது.

அரசன் வரை, செல்லும் வழக்குகள் மிக குறைவு அந்த காலங்களில்

அப்படி வரும் வழக்கும், சில நாட்களில் தீர்வு காணப்பட்டு விடும். 
இது எப்படி சாத்தியமானது? 
இந்த சபதமே யார் குற்றவாளி என்பதை காட்டி விடும் சக்தி கொண்டதாக இருந்தது.

தன் தாய் மீதோ, தன் ப்ரியப்பட்ட தெய்வத்தின் மீதோ சபதம் செய்த பின,
குற்றம் செய்தவன், பொய் சொன்னதில்லை. பொய் சொல்ல தயங்கினான்.

இந்த சபதம் உள்ளுக்குள் சென்று மனதை தொடுவதால், ஹிந்துக்கள் முதலில் "சபதம் செய்", பின் பத்திரம், பட்டா போன்றவை எழுதிக் கொள்ளலாம் என்றனர். 

கிறிஸ்தவர்களின் ஆட்சி ஆரம்பித்ததில் இருந்து, "பத்திரம், பட்டா" போன்றவை மிக முக்கியம் என்று கொண்டு வரப்பட்டு, "சபதம் செய்" என்பது காணாமல் போனது. 


நம் ஹிந்து தெய்வங்களின் மீது இருந்த பொறாமை த்வேஷ புத்தியே, இதற்கு காரணம். 

"ஹிந்துக்களின் தெய்வங்கள் பொய்" என்று நிரூபிக்க நினைத்த கிறிஸ்தவர்கள், ஹிந்துக்களின் தெய்வத்தின் பெயரை சொல்லி எப்படி சபதம் செய்ய வைப்பார்கள்?

ஹிந்துக்களின் தெய்வத்தின் பெயரை சொல்லி சபதம் செய்தால், எப்படி இவர்கள் நம்பிக்கையை கெடுக்க முடியும்? 
தங்கள் மதத்தை பரப்புவது மட்டுமே நோக்கம் கொண்ட இவர்கள், இது போன்று "ஹிந்து தெய்வத்தின் பெயரால்" என்று சபதம் செய்ய அனுமதித்தால், 1000 வருடம் இஸ்லாமியர்கள் ஆட்சியில் மழுங்கி போன ஹிந்துக்கள் விழித்து கொள்ள வழி வகுக்கும், தன் மதத்தை பரப்ப இயலாமல் போகும் என்று கணித்தனர். 

அதனால் லீகல் சிஸ்டம் என்பதை மட்டுமே முக்கியப்படுத்தி, இவர்களின் தெய்வ நம்பிக்கை பயன் அளிக்கும் என்று தெரிந்தாலும், இதனை தந்திரமாக நம் வழக்கத்தில் இருந்து அகற்றினர். 

தன் தாய் மீதோ, தெய்வத்தின் பெயராலோ சபதம் செய்பவனுக்கு, மனதால் ஒரு வித சஞ்சலம் / நெருடல் ஏற்படும். 
இந்த சபதம் செய்யும் பழக்கம், காணாமல் போனதும், பத்திரத்தில் கை ரேகை பதித்தாலும், கை எழுத்தே போட்டாலும், "இது என் கை எழுத்து இல்லை" என்று தைரியமாக பொய் சொல்ல ஆரம்பித்தனர். 

பொய் சொல்ல பயந்த நீதி மன்றத்தில், இன்று சகஜமாக பொய் சொல்கின்றனர். 
நீதிபதிகளுக்கு ஒரு வழக்கை முடிக்க பல வருடங்கள் ஆகிறது. 
யார் உண்மை சொல்கின்றனர்? யார் பொய் சொல்கின்றனர்? 
என்பது கண்டு பிடிக்க முடியாது போய், ஒரு வழக்கு முடிய பல வருடங்கள் எடுக்கிறது.

உண்மையை நிலைநாட்ட எங்கும் பயன்படுத்தப்பட்ட சபதம் செய்யும் முறை, நீதி மன்றத்தில் மட்டும் இன்றும் உள்ளது. 
இன்றும் ஹிந்துக்கள் கீதையை கொண்டோ, பிற மதத்தில் மாறிய/மாற்றப்பட்ட ஹிந்துக்கள் அவர்களின் நூலையோ கை வைத்து சபதம் செய்கின்றனர். 

இந்த சபதம் செய்யும் பழக்கம், சகஜமாக ஒவ்வொரு வீட்டிலும், இருந்தது.

வீட்டில் சண்டை என்றால், ஊர் பஞ்சாயத்தில் இந்த "சபதம்" என்ற மனோவியல் கொண்டே பல தீர்க்க படாத வழக்குகள் அரசன் வரை சொல்லாமலேயே அந்த காலத்தில் எளிதாக தீர்த்துள்ளனர். 

இன்றோ, 
அரச பதவியில் இருக்கும் அதிகாரி முதல் வீட்டில் உள்ள குழந்தை வரை, பொய் பேச பயப்படுவதில்லை. 

பத்திரத்தில் கையெழுத்தோ, சாட்சியை கொலை செய்யவோ, திருடவோ இவர்களுக்கு (நமக்கு) பயமில்லை. 
பணம் இருந்தால் தப்பிக்க வழி தேடுவோம் என்று தான் நினைக்கின்றனர். 

இந்த அதர்ம புத்தி ஒழிய வேண்டும் என்றால், அனைவரும் ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை தினமும் தியானிக்க வேண்டும். 
தந்தை செய்த சத்தியத்துக்கு, தான் 14 வருடம் காடு செல்ல கூட தயார் என்று சென்ற ஸ்ரீ ராமர் இந்த நாட்டில் இருந்தவர் என்பதை நாம் மறக்க கூடாது. 

14 வருடங்கள் வட இந்தியாவில் இருந்து ராமேஸ்வரம் வரை இவர் கால் தடம் உள்ளது என்பதை மறக்க கூடாது. 

ராமர் வாழ்ந்த காலத்தில் வால்மீகி என்ற ஒரு வேடுவ குலத்தில் பிறந்த ரிஷி, நம் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்பதையும் மறக்க கூடாது. 

ராமர் ராவணனை தேடி வரும் பொழுது, நம் தமிழ் நாட்டில் இருந்த அகத்திய முனிவர் தன்னிடம் இருந்த அத்தனை அஸ்திரங்களையும் தந்தார் என்பதையும் மறக்க கூடாது. 


சத்தியத்தால் மட்டுமே நாட்டுக்கு மதிப்பு. 
இந்த தர்மமே அமெரிக்கா, ஜப்பான் மக்களிடம் காணப்படுகிறது. 

இது அடிப்படை குணமாக இருந்த சமயத்தில், இந்தியன் மதிப்பு மிக்கவனாக இருந்தான். 
சரித்திரத்தில், வாஸ்கோடகாமா இந்தியாவை நோக்கியே வந்தான். 
இந்தியர்கள் அந்த காலங்களில் கை நீட்டி கேட்பவர்களாக இல்லை. 

இப்பொழுது எதற்கு எடுத்தாலும் இந்தியன் அமெரிக்காவையும், ஜப்பானையும் எதிர்பார்க்கும் நிலை வந்ததற்கு காரணம், இந்த சத்தியத்தை நாம் விட்டதே மூலகாரணம். 

ஸ்ரீ ராமர் வழியில் செல்ல செல்ல, சத்தியம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வளரும். 
நாடு சத்தியத்தில் நிற்கும். மதிப்பு தானாக பெருகும். 

"சத்யம் ஏவ ஜயதே" ( "Truth Alone Triumphs") என்று சொல்லும் வாக்கு உண்மையாகும்.


No comments: