Create your Own Website.. Try yourself Free for 14 days..........Just Easy!

PROUD HINDU DHARMA: ஏசு ஜோசப் யார்? Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...

Followers

Create your Own Website.. Try yourself Free for 14 days..........Just Easy!

Wednesday, 24 July 2019

ஏசு ஜோசப் யார்? Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...

ஏசு ஜோசப் யார்?
பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம்.
இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...


கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் தான், இவர்கள் என்று புரியும்..

மகாபாரதம் 5000 வருடம் முன் 'துவாபர' யுகத்தில் நடந்தது.
வியாசர், மகாபாரதம் நடக்கும் போதே எழுதினார்.
சம காலத்தில் இருந்தார்.
மகாபாரதம் எழுதி முடித்த பின், வியாசர் கிருஷ்ணரை பற்றி மட்டுமே  பாகவதம் என்ற புண்ணிய கிரந்தத்தையும் இயற்றினார்.
இதை அர்ஜுனன் பேரன் பரிக்ஷித் 7 நாட்கள் தொடர்ந்து கேட்டார்.

ராமாயணம் சுமார் 12 லட்ச வருடங்கள் முன் த்ரேதா யுகத்தில் நடந்தது.
தமிழ்நாட்டில் திருச்சி அருகில், அன்பில் என்ற ஊரில், ப்ருகு ரிஷியே வேடுவ ஜாதியில், ருக்சன் என்ற வேடுவனாக பிறந்து, ராம நாமத்தை ஜபித்து, வால்மீகி ரிஷியாகி, நாரதர், ப்ரம்மா, சரஸ்வதி அனுகிரஹத்துடன், ராமர் அவதாரம் செய்த காலத்திலேயே ராமாயணம் எழுதி, அதை ராமரின் புதல்வர்கள் லவன் மற்றும் குசனுக்கு சொல்லி, ராமாயணத்தை ஸ்ரீ ராமரே முதன் முதலாக தன் புதல்வர்கள் மூலமே கேட்டார் என்ற பெருமை அடைந்தது.
தமிழன் வால்மீகி த்ரேதா யுகத்தில் சமஸ்கரித மொழியில் கவி நடையில் ராமாயணம் எழுதினார்.
அது தமிழில் இல்லையே என்று, கலி யுகத்தில், கம்பர் தமிழில் கவி நடையில் தமிழாக்கம் செய்து தமிழனுக்கு கொடுத்தார்.

5000 வருடங்கள் முன் இருந்த இந்த இரு புராணங்களையும், இதன் காலத்தையும், முதலில் ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு பின்,
ஆராய்ச்சி செய்ய ஆர்வம் இருந்தால், 2000 வருடம் முன் உருவாக்கப்பட்ட பைபிளை படிக்கலாம்.

இப்படி படிக்கும் போது,  உண்மையான அறிவை நமக்கு கொடுக்கும்.
காலத்தை கணிக்கும் போதும் சில உண்மைகள் தானாக விளங்கும்.

5000 வருடங்கள் முன் நிகழ்ந்த மகாபாரதத்தை, அரைகுறையாக தெரிந்து கொண்டு,
12 லட்சம் வருடங்கள் முன் நிகழ்ந்த ராமாயணத்தை 'சீதைக்கு ராமன் சித்தப்பா, இலங்கையை சேர்ந்த ப்ராம்மண ராவணனை தமிழன்' என்ற அளவுக்கு தவறுதலாக புரிந்து கொண்டு, இருக்கும் ஹிந்துக்கள்,
2000 வருடம் முன் உருவாக்கப்பட்ட பைபிளை படித்தால், மோசம் போவது நிச்சயம்... ஏமாறுவதும் நிச்சயம்.

அற்புதமான ஹிந்து மதத்தில் பிறந்தும், மதம் மாறுவதற்கு காரணம் ராமாயண, மகாபாரத 'காலத்தை'யும், அதன் 'சரித்திரத்தை'யும் புரிந்து கொள்ளாமல் இருப்பதே..

ஹிந்துக்கள் மகா அறிவாளிகள் தான். சந்தேகமில்லை.
ஆனால் தன் மத விஷயங்களை பொறுத்தவரை, போதிய அறிவு இல்லாமல் உள்ளனர் என்பதே நம் பலவீனம்.
இது சற்று வருத்தம் அளிக்க கூடிய விஷயமாக உள்ளது.

இனி....
சுமார் 100ADல் உருவாக்கப்பட்ட பைபிள் வசனங்களை கவனிப்போம்..


ஏரோது (herod) என்ற ராஜா, "ஒரு குழந்தை பிறந்து இருக்கிறது" என்று கேட்டபொழுது, அவனும், அவனோடு கூட ஜெருசலம்  நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
Matthew 2.3
(3102BC முன், அதாவது சுமார் 5000 வருடம் முன் பரப்ரம்மமே ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்தார்.
கிருஷ்ணர் பிறந்து விட்டார் என்றதும், மதுரா அரசனாக கொடுங்கோல் ஆட்சி செய்யும் கம்சன் மனம் கலங்கினான்.
5000 வருடம் முன்பேயே நடந்த அதே நிகழ்வு.. இன்றும் மதுரா போய் பார்க்கலாம்..)
ஏரோது (herod) ராஜா, பிள்ளையைக் கொலை செய்யத் தேடுவான் என்பதால், அப்பா ஜோசப் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதன் தாய் மேரியையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப் போனான்.
Matthew 2.13, 2.14
(கிருஷ்ணரை கம்சன் கொன்று விடுவானோ என்று தேவகி பயப்பட, பிறந்த குழந்தையாக இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் 'அப்படி பயம் இருந்தால், தன்னை கோகுலம் எடுத்து செல்லுங்கள்' என்று சொல்ல, குழந்தை கிருஷ்ணரை எடுத்துக்கொண்டு  கோகுலம் புறப்பட்டார் வசுதேவர். 
 5000 வருடம் முன் நடந்த நிகழ்வு.. இன்றும் மதுரா உள்ளது..கிருஷ்ணர் பிறந்த இடம் உள்ளது. போய் பார்க்கலாம்.)

ஏரோது (Herod) மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலை செய்தான்.
Matthew 2.16
(கிருஷ்ணர் பிறந்து விட்டார் என்று அறிந்த கம்சன், ஒரு மாதத்தில் பிறந்த அனைத்து குழந்தையையும் கொன்று விட சொல்லி, பூதனை என்ற அரக்கியை கோகுலத்துக்கு அனுப்பினான்.
5000 வருடம் முன் நடந்த நிகழ்வு.. இன்றும் கோகுலம் உள்ளது.. போய் பார்க்கலாம்.)
ஏரோது (Herod) இறந்த பிறகு, பிள்ளையையும் அவன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான் ஜோசப். 
Matthew 2.20, 2.21
(கம்சனை தன் 11 வயதில் ஸ்ரீ கிருஷ்ணர் கொன்ற பின், மதுராவில் வசுதேவரும், தேவகியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்...)

5000 வருடம் (3102BCக்கு முன்) முன்பு, பாரத மண்ணில் நடந்த சரித்திரம்.

அரைகுறையாக யாரோ ஒரு கிராமத்தான் மஹாபாரத கதையை கேட்டு, அதே கதையை தன் அறிவுக்கு எட்டிய அளவுக்கு,
யவனர்கள் என்று அழைக்கப்பட்ட தேசங்களில் திரிந்து கொண்டிருந்தவர்களுக்கு சுமார் 2000 வருடம் (சுமார் 100ADல்) முன்பு சொல்லி இருக்கலாம்..

பொதுவாக உச்சரிப்பு புரிந்து கொள்ளாமல் போகும் போது, தவறான அர்த்தங்களை புரிந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது..  கீழே உள்ள வீடியோவை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

அது போல, 5000 வருடம் முன் நிகழ்ந்த ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம், உலகம் முழுக்க பேசப்பட்டு, சரித்திரம் உருமாறி 3000வருட காலத்தில் யவன தேசங்களான ஜெருசலம் போன்ற தேசங்களில் மாறுபட்டு இருக்க கூடும்.


இன்று கூட கிராமங்களில் நாடக நடிகர்கள் கிருஷ்ண கதையை "கண்ணன் பொறந்தான் மதுரைல... கோகுல கிராமத்துல வளந்து, பொல்லாத கம்சன ஒரே அடி போட்டு கொன்றான். பெத்த அப்பா அம்மாவை சிறையிலேந்து காப்பாற்றினான்" என்று அவர்கள் பாணியில் சொல்வது உண்டு.


இப்படி கண்ணன் கதை சொல்லும் பழக்கம் உலகம் முழுக்க, பரவி இருந்தது...
உலகத்தில் உள்ள க்ஷத்ரியர்கள் அனைவரும் பங்குபெற்ற மகாபாரத போருக்கு பின்னர், உலகமே தர்மபுத்திரர் ஆட்சிக்கு கீழ் வந்தது.

5000 வருடம் முன் நடந்த கிருஷ்ணன் கதையை, 2000 வருடம் முன் கிறிஸ்து ஆக்கியது போல தோன்றுகிறதா?

கம்ச மாமா கதையை திருடி, ஏரோது (herod) ஆக்கியது போல தோன்றுகிறதா?

மதுரா என்ற ஊரையே திருடி, பெத்லகேம் ஆக்கியது போல தோன்றுகிறதா?

கோகுலம் என்ற ஊரையே திருடி, எகிப்து ஆக்கியது போல தோன்றுகிறதா?

2000 வருடத்திற்கு முன் எழுதப்பட்ட கதை, 5000 வருடம் முன் இருந்த கதையை சுட்டுள்ளது என்று தோன்றுகிறதா?

ஏசு அவதார கதை இப்படி தான் பைபிளில் எழுதப்பட்டுள்ளது...
புதிய ஏற்பாடு "மத்யு" (Matthew) அப்படி தான் தெளிவாக, 5000 வருடத்திற்கு முன் இருந்த மகாபாரத கதையை சுட்டு சொல்கிறது...

இதை மாற்ற 3வது new testament கொண்டு வந்தாலும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை...

மற்றொரு புதிய ஏற்பாடு லூக்கில் சொல்வதை இனி பார்ப்போம்..
மேலும் தொடர்வோம்...
ஜோசப், தன் மனைவி மேரிக்கு பிறந்த குழந்தைக்கு 8வது நாளில் "ஹேசு கிறிஸ்து" என்று பெயர் வைத்தார்..
Luke 2.21
(குழந்தை பிறந்து 10வது நாள் பெயர் வைக்கும் பழக்கம் ஹிந்துக்களுக்கு உண்டு.
ஜோசப் அய்யாவிடம் இந்த பழக்கம் இருக்கிறது.
ஜோசப், ஏசு, மேரி ஒரு சுத்தமான ஹிந்து கலாச்சாரத்தை கொண்ட வெளிநாட்டில் வசித்த குடும்பம் என்று தெரிகிறது.)
இன்று கூட இஸ்கான் போன்ற கிருஷ்ண அமைப்புகளில், ஹிந்து கலாச்சாரத்தில்  ஈர்க்கப்பட்டு, வெளிநாட்டில் வாழும் குடும்பங்கள் இருப்பதை காண்கிறோம். இவர்கள் கிருஷ்ணா என்று உச்சரிப்பதில்லை. கிஸினா என்று தான் உச்சரிக்கிறார்கள். 
2000 வருடங்கள் முன், இந்த நாடுகளில் உச்சரிப்பில் கிருஷ்ணர் கிருஸ்துவாக மருவி இருக்க கூடும்.

உலகம் முழுவதும் ஹிந்து கலாச்சாரமே இருந்தது என்று இன்று வரை பூமியில் கிடைக்கும் சிவ லிங்கமும், கோவில்களின் பாகங்களே சாட்சி...
ஹிந்து கலாச்சாரத்தில், நன்றாக கவனித்தோம் என்றால்,  பரமாத்மாவை "ப்ரம்மம்" என்ற சொல் கொண்டு அழைக்கிறார்கள்.
அந்த ப்ரம்மமே, "வாமன, நரசிம்ம, ராம, கிருஷ்ணனாக அவதாரம் செய்தார், ருத்ரனாக" வந்தார்  என்று சொல்கிறார்கள்.
அவரே அனைத்துமாக இருக்கிறார்.
அவரே 'நாராயணன்' என்றும் சொல்கிறது ரிக் வேதம்.

ப்ரம்மமே 'பரமாத்மா' என்ற வழிபாட்டில் இருந்து, இரண்டு சித்தாந்தங்கள் வெளி வந்தன என்று பார்க்கிறோம்.
அந்த ப்ரம்மம் அரூபமானவர், வேதத்தில் உள்ள ருத்ரனே அந்த பரமாத்மா என்று "சைவ" சித்தாந்தமும்,

அந்த பரமாத்மா ரூபம் தரித்து நாராயணனாக இருக்கிறார் என்று புருஷ சூக்தம் போன்ற வேத சூக்தங்களை காட்டி நிரூபித்து, நாராயணனே அந்த பரமாத்மா என்று "வைணவம்" சித்தாந்தமும் உருவானது.
ப்ரம்மமே 'பரமாத்மா' என்று ஹிந்துக்கள் அனைவரும்  ஒப்புக்கொண்டாலும்,
அரூபமான ருத்ரனே 'பரமாத்மா' என்றும்,
விஷ்ணுவே 'பரமாத்மா' என்றும் இரண்டு சித்தாந்தங்களாக பிரிந்தது என்று பார்க்கிறோம்.

இது ஒரு ஆச்சரியமில்லை...

கொஞ்சம் நாம் கவனித்தால்,
2000 வருடங்கள் முன் தோன்றிய கிறிஸ்தவம், இஸ்லாம் இரண்டுமே "யூத மதத்தில் இருந்து பிரிந்த" இரு வேறு சித்தாந்தங்கள் என்ற ஒற்றுமையை பார்க்கிறோம்.

யூத மதம் "ப்ரம்மம்" என்ற சொல்(ஒலி) போலவே ஒலிக்கும், "ஆப்ரஹாம்" (இப்ராஹிம்) என்பவரே தங்கள் வழிகாட்டி என்று நம்புகின்றனர்.

ஒலி அடிப்படையில் சொல்லி பார்த்தால், "ப்ரம்மம், இப்ராஹிம், ஆப்ரஹாம்" மூன்றும் ஒரே மாதிரியான சப்தத்தை ஒலிக்கிறது என்று கவனிக்கலாம்.

சைவ சித்தாந்தங்கள் போலவே,
இறைவன் அரூபமானவர், அவரையே சரண் அடைய வேண்டும் என்று இஸ்லாம் என்ற சித்தாந்தம் நபிகளால் உருவானது.
இஸ்லாம் என்ற அரேபிய சொல்லுக்கே "சரணாகதி" என்று தான் பொருள். ஆங்கிலத்தில் surrender to god என்று பொருள் தருகிறது.

இறைவன் அரூபமானவர் என்று சொல்லும் சித்தாந்தத்தை சைவர்கள் கடைபிடிக்கின்றனர்.
அரூபமானவர் ருத்ரன் என்று காட்ட, ஒரு ரூபமில்லாத லிங்கத்தை ருத்ரனாக வழிபடுகின்றனர்.
தியானம் செய்கின்றனர்.
இஸ்லாமில் மசூதிகள் அமைப்பு லிங்க ரூபமாக உள்ளது.
தியானத்திற்கு அதிக மரியாதை உள்ளது.  
வீண் பேச்சுக்கள் பேச மாட்டார்கள் இஸ்லாமியர்கள்.

மற்றொரு சித்தாந்தத்தில்,
இறைவன் ரூபம் உடையவர்.
அவர் கிறிஸ்து என்று கிறிஸ்துவம் உருவானது.
இவர்கள் உருவ வழிபாடு செய்கின்றனர்.


இந்தியாவில் ஹிந்துவாக பிறந்தும், புரியாமல் மதம் மாறியுள்ள கிறிஸ்தவர்கள் கூட, இன்று 90 சதவீதம் ஹிந்து மதப்படி தான் பூஜை, ஸ்லோகங்கள், ஜபம், துளசி மாலை, இசை கச்சேரி, ஸ்தூபம், தூபம், தேர், பாத யாத்திரை என்று ஏறத்தாழ  ஹிந்துவாகவே கிறிஸ்துவை ஆக்கி, வழிபடுகின்றனர்.

ஏசு, கிருஷ்ண பக்தனா?
அல்லது கிருஷ்ணர் கதையை தான் கொஞ்சம் எடுத்து கிறிஸ்து என்ற பெயரில் எழுதப்பட்டதா? என்பது நமக்கு தேவை இல்லாத சர்ச்சை..
அது அவரவர் சிந்தனைக்கு விட்டு விடலாம்.

5000 வருடத்திற்கு முன் நடந்த கிருஷ்ண சரித்திரம், 2000 வருடத்திற்கு முன் நடந்ததாக சொல்லப்படும் சரித்திரத்தில் நடந்ததா? 
இல்லை கதை களம் மட்டும் எடுக்கப்பட்டதா? என்பது அவரவர் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏசு, ஜோசப், மேரி, ஸ்ரீ கிருஷ்ணரிடம் பக்தி கொண்ட ஒரு ஹிந்து குடும்பமாக தான் தெரிகிறது.
ரோமானிய அரசாட்சியில் இந்த யூத குடும்பங்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர் என்று பார்க்கிறோம்.

வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர் புகழ்.

தன் குழந்தைக்கு புண்யாஜலம் தெளித்து சுத்தி செய்ய, ஜெருசலத்தில் உள்ள 'கோவிலுக்கு' ஜோசப்பும், மேரியும் சென்று, தன் குழந்தையை தெய்வத்திடம் (lord) காண்பித்தனர்.
Luke 2:22
(குல தெய்வத்தை பார்க்க போகும் பழக்கம் ஜோசப் அய்யாவிடம் இருந்துள்ளது.
ஜோசப் அய்யா, எந்த தெய்வத்திடம் ஏசு குழந்தையை  காட்டினார்?? எந்த கோவிலுக்கு கூட்டி சென்றார்?? என்று மட்டும் சொல்ல பைபிள் மறுக்கிறது.. மறைக்கிறது !!
Luke 2:22 வசனம் எதிர்காலத்தில் மறைக்கப்படலாம்...

'என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்' என்று ஏசு சொல்லும் முக்கியமான வசனத்தில் கூட, அவர் எந்த சமூகத்தை உண்மையில் சொன்னார்? என்று சொல்ல பைபிள் மறுக்கிறது.. மறைக்கிறது)

அந்த காலங்களில் அடக்கி ஆண்ட ரோமானியர்களுக்கு பயந்து மறைக்கப்பட்டு இருக்கலாம்...
வீட்டில் பிறக்கும் ஒவ்வொரு முதல் ஆண் குழந்தையும் இறைவனால் புனிதப்படுத்தப்பட வேண்டும் என்ற விதிப்படி, ஏசுவை இறைவன் முன் காண்பித்தனர் அவன் பெற்றோர்கள்.
Luke 2:23
(ஏசுவுக்கு ஆசி கூறிய தெய்வம் நாராயணன் என்றோ ஸ்ரீ கிருஷ்ணர் என்றோ, சொல்ல பைபிள் மறுக்கிறது.. மறைக்கிறது.)

ஏசு உண்மையா? கற்பனையா? என்பது தேவை இல்லாத சர்ச்சை.

அப்படி ஒருவர் இருந்தார் என்றே நம்புவோம்.
கலியுக முடிவில், தான் வைகுண்டம் போக தீர்மானித்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.
தான் மறைந்து விட்டால், துவாரகை கடலில் மூழ்கி விடும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதும், லட்சக்கணக்கான யாதவர்கள் நான்கு திசையிலும் அவரவர்கள் குடும்பத்துடன் பிரிந்து சென்றனர் என்று மகாபாரதம் காட்டுகிறது.

பாரத நாட்டில் இன்றும் வடக்கில் யாதவர்கள் (yadav) என்றும், தெற்கில் குறிப்பாக தமிழகத்தில் கோனார்கள், யாதவர்கள் என்றும் இருக்கின்றனர்.

யூதர்கள் என்ற குலமும் யாதவர்கள் தான்.
யது குலத்தில் வந்த இவர்கள் யாதவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

யாதவ, யூத, யது என்ற சொல்லிலேயே ஒற்றுமை தெளிவாக தெரிகிறது.

பெயர் மருவி உள்ளதே தவிர, இவர்கள் வாழ்வு முறை, வழிபாடு, ஏசு "பரம பிதாவே என்று அழைக்கும் முறை" எல்லாம் ஹிந்து கலாச்சாரமாக தான் உள்ளது.
இவர்களுக்கு கிருஷ்ணரே குல தெய்வம் என்று தெளிவாக தெரிகிறது.

காலபோக்கில் உடை, பாஷை மாறி போனாலும், கதை களமோ, தன் மகனுக்கு கிறிஸ்து என்று பெயர் வைக்கும் பழக்கமோ இவர்களை விட்டு மாறவில்லை என்று தெரிகிறது.

ஸ்ரீ ராகவேந்திரர், க்ஷீரடி சாய் பாபா போன்ற உத்தமர்கள், ராம, கிருஷ்ண பக்தி செய்த மகான்கள்.

கிருஷ்ணரை வணங்கிய இந்த மகான்களையே தெய்வமாக இன்றும் பல லட்ச பாரத மக்கள் வணங்குகின்றனர் என்று பார்க்கிறோம்.

ஸ்ரீ கிருஷ்ணரை பரம பிதாவாக வழிபட்ட கிறிஸ்து ஒரு மகான் தான்.
மகானையே வழிபடும் பழக்கம் நமக்கு உண்டு.
இது இவர்களிடத்திலும் உள்ளது...

அடியேன் ராமானுஜ தாஸன் என்று வைணவர்கள் சொல்லி கொள்வார்கள்.

இந்த பழக்கமே கிறிஸ்து என்ற மகானை பின்பற்றியவர்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.

கிறிஸ்துவை வழிபடுவதில் தவறில்லை.
ஆனால் அவர் யாரை வணங்கினாரோ அந்த பரம பிதாவான ஸ்ரீ கிருஷ்ணரை புரிந்து கொள்ள, பகவத் கீதையை படித்து கிருஷ்ண பக்தர்களாக ஆக முயற்சிக்க வேண்டும்.
காலத்தை ஒட்டிய ஆராய்ச்சி செய்தால், கிறிஸ்து வெளிநாட்டில் வாழ்ந்த கிருஷ்ண பக்தன் என்றே தெரிகிறது...
யூத குலத்தில் ஏசு என்று ஒருவர் பிறந்தார் என்றே ஒப்புக்கொண்டாலும், இவர் தன் வாழ்நாள் முழுவதும் "பர மண்டலத்தில் இருக்கும் பிதாவே" என்று வழிப்பட்டது சாஷாத் யாதவ கண்ணனையே என்று தெரிகிறது.

ராமரை வணங்கிய ராகவேந்திரரையே தன் தெய்வமாக வழிபடும் பழக்கம் ஹிந்துக்களுக்கு உள்ளது போலவே,
கிருஷ்ணன் என்ற பரம பிதாவை வணங்கிய கிருஸ்து என்ற மகானை தன் தெய்வமாக வழிபடும் பழக்கம் வெளிநாட்டில் வாழ்ந்த ஹிந்துக்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது...
மாடு மேய்த்த கண்ணனை போல, பக்தனான இவரும் ஆடு மேய்க்க ஆசைப்பட்டார் என்று ஊருக்கு தகுத்தாற்போல சொல்லி இருக்கலாம் அங்கு இருந்த பெரியோர்கள்.
அல்லது, கிருஷ்ணர் கதையை சற்று மாற்றி, அங்கு மாடுகளை விட ஆடுகள் அதிகம் என்பதால், ஆடு மேய்த்தார் என்று சொல்லி இருக்கலாம்.

கிருஸ்துவின் கதை, கிருஷ்ணர் கதையில் இருந்து எடுக்கப்பட்டதா? 
அல்லது கிருஷ்ணர் கதையை ஒரு கிராமத்தான் தன் இஷ்டத்துக்கு மாட்டுக்கு பதில் ஆடு என்றும், கம்சனுக்கு பதில் ஏரோது என்றும்,
கிருஷ்ணருக்கு பதில் கிறிஸ்து என்றும்,
மதுராவுக்கு பதில் பெத்லகேம் என்றும்,
கோகுலம் என்ற ஊரை, எகிப்து என்றும் மாற்றினார்களா என்பதும் யோசிக்க வேண்டியதாக உள்ளது...
எது எப்படியோ!!  ஏசு ஒரு யாதவ பையன் தான். நம்ம பையன் தான்.
வெளிநாடுகளில் வாழும் இஸ்கான் ஹிந்துக்களை போல தான் இவர்கள் என்று புரிந்து கொள்ள முடியும்.

கிருஷ்ணனை தான் இப்படி கிறிஸ்து என்று  சொன்னார்களா? இல்லை,
தாங்கள் யாதவ குலம் என்பதால் கிருஷ்ண கதையை தன் போக்கில் எழுதி, ரோமானியர்களை பல தெய்வ கொள்கையில் இருந்து மாற்ற, ஒரே தெய்வம் தான், அவரே கிருஷ்ணர் என்று நிலை நாட்ட முயற்சித்தார்களா? என்பது அவரவர் சிந்தனைக்கு விட்டு விடலாம்...

கிருஷ்ண பக்தியை, கிருஷ்ணரே பரமாத்மா என்று சொல்லும் இஸ்கான் போன்ற அமைப்புகளும், யாதவர்கள் போன்ற மனோபாவம் கொண்டவர்களாக தான் உள்ளனர்.
அவர்களுக்கு ஒரே தெய்வம் தான். ஒரே ஜபம் தான். ஒரே குறிக்கோள் தான்.

வைணவம் என்ற சித்தாந்தம் மற்றும் இஸ்கான் என்ற சமீபத்தில் 1970ல் உருவாக்கப்பட்ட அமைப்பும், கிருஷ்ண பக்தியை அனைவரிடமும் பரப்ப ஆசைப்படுகிறது.

வைணவத்தில் ஜாதி மதம் பார்க்காமல் அனைவருக்கும் பஞ்ச சம்ஸ்காரம் செய்து, நாராயணன் சொத்து நீ என்று உபதேசங்கள் செய்து, வைணவனாக சேர்த்து கொள்கிறது.

இஸ்கான் போன்ற அமைப்புகள், ஒரு படி மேலே போய், கிருஷ்ண பக்தி செய்பவர்களுக்கு உண்ண உணவு, உடை, நிம்மதியான வாழ்க்கை, ஜபம், என்று கொடுத்து, பூணூல் போட்டு, பூஜைகள் செய்ய சொல்லிக்கொடுத்து உலக மக்கள் யாவரையும் கிருஷ்ண பக்தி செய்ய இழுக்கிறது...

ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்ட யாதவ, என்ற யூதர்களும், மத மாற்றம், கிருஸ்துவே கடவுள், அவர் பெயரை ஜபம் செய்யுங்கள் என்று கிருஸ்து பக்தி செய்ய அழைக்கிறார்கள்...

மனித அறிவுள்ள நாம், பாரத பூமியில் பிறந்த பிறகும், முட்டாளாக இருக்க கூடாது...

நமக்கு சுட்ட கதை வேண்டுமா ?
சுடாத கதை வேண்டுமா ?
என்று சிந்திக்க வேண்டும்.

இன்று கூட ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே என்ற ஜபத்தை வெளிநாட்டவர்கள் சொல்லும் போது, அவர்கள் உச்சரிப்பில் ஒரு வித்தியாசம் தெரிகிறது...

மும்பா தேவி என்று சொல்லை கூட சொல்ல முடியாமல் தவிக்கும் வெளிநாட்டவர்கள், "பாம்பே" என்று உலறினார்கள்...

பாரத நாடு என்று சொல்ல இயலாமல், சிந்து என்ற நதியை வைத்தே பாரத மக்களை அடையாளப்படுத்தி, அதையும் ஹிந்து, ஹிண்டு, இந்து என்றும் உளறி கொட்டினர்.
br />
1000 வருடங்கள் இவர்களிடம் சிக்கி, 1947ல் விடுபட்ட போது, மகா உளறல்காரர்களான பிரிட்டிஷ் நாட்டினர், இண்டியா என்று அவர்களாக நமக்கு ஒரு பெயர் வைத்து, பாரத நாட்டில் சிந்து பகுதியை, பாக்கி இடம் (பாகிஸ்தான்) என்று பெயர் கொடுத்து, கையெழுத்து போட்டு விட்டு தன் ஊருக்கு சென்றனர்.

உண்மையான பெயர் என்ன என்று தெரிந்த பின்னும், இப்பொழுது இருக்கும் பெயர் அர்த்தமில்லாத பெயர் என்றும் தெரிந்தும், அறிவுள்ள மனித சமுதாயம் அதை மாற்ற யோசிக்குமா? யோசிக்காதா?

பாம்பே என்ற அர்த்தமில்லாத பெயரை மாற்றி, மீண்டும் மும்பை என்று மாற்றினார்கள்.
இது போல பல அர்த்தமில்லாத பெயர்களை மாற்றி அதன் உண்மையான பெயர்களுக்கு மாற்றி உள்ளனர் அறிவு உள்ள நம் பாரதமக்கள்.

1000 வருடங்கள் உள்ளே நுழைந்த வெளி நாட்டினர்களுக்கு, உச்சரிப்பு பிரச்சனையால், ஊர் பெயர்களை மட்டுமல்ல, பாரதம் என்ற பெயரையே இண்டியா என்று மாற்றி விட்டனர் என்று பார்க்கிறோம்.

5000 வருடங்கள் முன் குடி பெயர்ந்த யாதவர்கள் ஊட்டிய கிருஷ்ண பக்தி யவன தேசங்களில் நிலைத்தாலும், கிருஷ்ண என்ற சொல் வெளிநாட்டவர்களால் கிறிஸ்து ஆகி இருக்கலாம். பெயர்கள் உருமாறி இருக்கலாம்.

பாரத மக்கள், ஒரிஜினல் எது? ஒரிஜினல் யார்? என்று புரிந்து கொள்ளும் போது, போலிகளை ஒதுக்கி, அர்த்தமில்லாத பெயர்களை மாற்றுவதில் தயங்குவதில்லை.

அதே போல,
யாதவ கூட்டம் யவன தேசங்களுக்கு சென்று வாழ்ந்த போது, என்றோ ஒரு காலத்தில் யூத குலம் என்று பெயர் மருவி இருக்கலாம்.

அங்கு 'கிறிஸ்து'  என்ற ஒரு நல்ல பிள்ளை, "கிருஷ்ணரே கதி" என்று வாழ்ந்து இருக்கலாம்.

இங்கு காந்தியை மகான் என்று, ஆஞ்சநேயர் போன்ற உத்தமமான பக்தர்களை கூட வழிபடும் பழக்கம் உண்டு..
இது போலவே,
யாதவ என்ற யூத குலத்தில் பிறந்த கிறிஸ்து என்ற மகானை தெய்வமாக கும்பிடும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

ஆர்வத்தால், கிருஷ்ணர் கதையை கொஞ்சம் இவர் சரித்திரத்தில் சேர்த்து இருக்கலாம்.

பக்தியின் காரணத்தால், தான் வணங்கும் குருவின் சரித்திரத்தில் தெய்வங்களின் சரித்திரத்தை பொருத்தி பார்ப்பது கூட உண்டு.

இதில் மறைக்கப்பட்ட உண்மை எதுவென்றால், "பரம பிதாவே" என்று ஏசு அழைக்கும் தெய்வம், அவர் அப்பா இவரை கூட்டிக்கொண்டு எந்த இறைவனை வணங்கினார்? எந்த கோவிலுக்கு போனார்? போன்றவை மறைக்கப்பட்டது தான். ரோமானியர்களுக்கு பயந்து அன்று மறைக்கப்பட்டு இருக்கலாம்.

யூத குலத்தில் பிறந்த மகான் ஏசு வழிபட்ட அந்த பரம பிதா கிருஷ்ணரே என்ற உண்மையை உணர்வது, உணர்த்துவது ஒவ்வொரு ஹிந்துவின் கடமையும் கூட..

பரம பிதாவின் ராஜ்யம் உலகெங்கும் பரவும் என்று ஏசு சொல்கிறார்...
இன்று இஸ்கான் போன்ற அமைப்புகளால் அது நிரூபணம் ஆகிறது என்று பார்க்கிறோம்..

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க யாதவர்கள்...
வாழ்க யது குலம்...
வாழ்க வெளிநாட்டில் சென்று வாழ்ந்த பெயர் மாறி போன யூத குலம்...
வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர் புகழ்.


ஸ்ரீ கிருஷ்ணர் சரித்திரத்தை அனைத்து கிறிஸ்தவர்களும் படிக்க வேண்டும்.
ஏசுவின் பிரியமான புத்தகம் பகவத் கீதையாக தான் இருக்க வேண்டும்.

ஸ்ரீ கிருஷ்ணரை இகழ்வது, ஏசுவுக்கு கட்டாயம் ஏற்பு உடையதாக இருக்காது..
பரம பிதா ஸ்ரீ கிருஷ்ணரை, ஏசும் எவரையும் ஏசு ஏற்க வாய்ப்பு இல்லை.

பாரத மண்ணில் பிறக்க கட்டாயம் ஏசு ஆசைப்பட்டு இருப்பார்.

சாய்பாபா என்ற மகாத்மாவை வணங்கும் ஹிந்துக்களுக்கு, கிருஸ்து என்ற கிருஷ்ண பக்தரை வணங்க தயக்கம் இருக்காது..
ஆனால் அவர் வணங்கிய பரம பிதாவை ஏசினால், ஏசுவும் கை விடுவார் என்றே புரிகிறது...

தவறான உச்சரிப்பில் உருவான தெய்வங்களை வணங்காமல், ஸ்ரீ கிருஷ்ணரையே அனைவரும் வணங்குவோம்.

இஸ்கானில் உள்ள வெளிநாட்டவர்கள் கிருஷ்ணரை கிஸினா என்று உச்சரிக்கிறார்கள். 1000 வருடங்கள் கழித்து, வெளிநாடுகளில் இவர்கள் வழிபாடு பிடித்து, எங்கள் தெய்வம் கிஸினா என்று சொல்லி கொண்டு அலைந்தால் எப்படி இருக்கும்? பொய்யான பெயர்களை களைவோம். கிருஷ்ணா என்ற உண்மையான பரமாத்மாவை பற்றிக்கொள்வோம்.

வாழ்க யூதர்கள்.  வாழ்க வெளிநாடுகளில் வாழ்ந்த, வாழும் கிருஷ்ண பக்தர்கள்.

வாழ்க ஹிந்துக்கள்..
வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர் புகழ்...


11 comments:

Murali said...

மஹாபாரதத்திலிருந்து உருவாக்கப்பட்டதுதான் பைபிள். பைபிளிலிருக்கும் வசனங்கள் கூட கீதையிலிருந்து எடுக்கப்பட்டதுதான்

Premkumar M said...

Jesus, Joseph பிறப்பு பற்றி Matthew, Luke வசனங்கள் என்ன சொல்கிறது?
ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்...
காலத்தை ஒட்டிய ஒரு அலசல்..

https://www.proudhindudharma.com/2019/07/Finding-Christ.html

Unknown said...

தாங்கள் பணி மேன்மேலும் வளர மனதார வாழ்த்துக்கள்

Premkumar M said...

ஏசு உண்மையா??..
உருமாறி போன பெயரா? உருமாறி போன கதையா? மக்களை ஏமாற்றி பிழைப்பா?
தெரிந்து கொள்ள...

https://www.proudhindudharma.com/2019/07/Finding-Christ.html

Premkumar M said...

அற்புதமான ஹிந்து குடும்பத்தில் பிறந்தும், மதம் மாறி போவதை விட முட்டாள் தனம் இருக்க முடியுமா?.. அவமானமல்லவா?..

MBBS வரை கஷ்டப்பட்டு படித்து விட்டு, மேலும் Specialized course படிக்க தகுதி பெற்றவன், மீண்டும் ஒன்றாம் வகுப்பு தான் சேருவேன் என்று சொல்வது எத்தனை முட்டாள் தனமோ, அது போல அல்லவா ஹிந்து மதம் மாறுவது..

இன்று இஸ்கான் என்ற அமைப்பு உள்ளது. உலகமே பார்க்கிறது.
இதில் உலகம் முழுக்க பலர் ஹிந்துவாக தன்னை உணர்ந்து கிருஷ்ண பக்தி செய்கின்றனர். இது உண்மையான ஆன்மீக முன்னேற்றம்.

கிருஷ்ண பக்தி செய்ய ஹிந்துவாக பிறந்தும், மதம் மாற நினைப்பவனை பெற்றவனுக்கு இதை விட அவமானம் வேறு உண்டா?...

இஸ்கான் போன்ற அமைப்பில் உள்ள வெளிநாட்டவர்கள் இன்று வரை கூட "கிருஷ்ணா" என்று சரியாக உச்சரிக்க முடியாமல் தான் இருக்கின்றனர். "கிஸ்ஸினா" என்று தான் உச்சரிகின்றனர்.

வெளிநாட்டவர்கள் சரியாக உச்சரிக்க முடியாதவர்களாக இருப்பதால் தான், நம் நாட்டை 1000 வருடங்கள் ஆக்கிரமித்த போது, ஊர், நாட்டின் பெயர் அனைத்தையுமே உளறி கொட்டினர்.
திருச்சிரார்பள்ளியை 'ட்ரிசி' என்றனர்.
சென்னையை மட்றாஸ் என்றனர்.
பாரதம் என்ற நம் நாட்டுக்கே, இண்டியா என்று உலறினர்.
கொல்கத்தாவை கல்கட்டா என்றனர்...

பெயரை மாற்றி வேறு மாதிரி பேசுவது, இவர்கள் இயல்பு.. இவர்களால் உச்சரிக்க முடியாது என்ற காரணத்தால் தான் கிருஷ்ணா என்ற பெயரை கூட கிஸினா என்று உச்சரிகின்றனர்.
தவறு இல்லை..
ஆனால் "கிசினா தான் தெய்வம், கிருஷ்ணர் தெய்வம் அல்ல" என்று 1000 வருடம் கழித்து முட்டாள் தனமான ஒரு கூட்டம் சொன்னால்?...
அதை ஹிந்துவாக இருப்பவனே நம்பி கிசினா தான் தெய்வம் என்றால்?..
முட்டாள் தனத்துக்கு ஒரு எல்லை வேண்டாமா?
இந்த சிந்தனையுடன்... மேலும் படியுங்கள்....

ஏசு உண்மையா??..
உருமாறி போன பெயரா? உருமாறி போன கதையா? மக்களை ஏமாற்றி பிழைப்பா?
தெரிந்து கொள்ள...

Comment your view..and share..

https://www.proudhindudharma.com/2019/07/Finding-Christ.html

Abilsam said...

அப்படி பார்த்தால் ஆதாமின் கதையை சுட்டு எழுதப்பட்டத்துதான் இந்த சிவனின் வாழ்க்கை வரலாறு

Abilsam said...

அப்படி பார்த்தால் ஆதாமின் கதையை சுட்டு எழுதப்பட்டத்துதான் இந்த சிவனின் வாழ்க்கை வரலாறு

Abilsam said...

எனக்கு என்னமோ பைபிள் படித்த சங்கிகள் தான் பைபிளில் வரும் ஒவ்வொரு மனிதர்களின் வரலாறுகளையும் இந்து கடவுள்களின் பெயர்களை இட்டு அங்கங்கே கோவில்களை கட்டி வைத்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது ஆனால் இவனுங்க குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்றே பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை போல கதை கட்டுறானுங்க இந்து மதம் கடந்த 2000 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி கதை கட்டிய மதம் பலகோடி ஆன்லைன் என்பதெல்லாம் பொய்

Paranik said...

You pity man

Paranik said...
This comment has been removed by the author.
Paranik said...

Nice research please continue