Followers

Search Here...

Friday 29 January 2021

"காயேன வாசா மனசே ... நாராயணாயேதி சமர்ப்பயாமி' என்று நாம் சொல்லும்போது, நாராயணன் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்? தெரிந்து கொள்வோமே!!

ஐந்து வயது குழந்தை 'கிணறு...' என்று எழுத ஆசைபட்டது..

எப்படியாவது எழுதி , தன் அப்பாவிடம் காட்டி, மகிழ வேண்டும் என்று  ஆசைபட்டது.

கொஞ்சம் முயற்சி செய்து, 'கிணறு'க்கு பதில்,"கனாரு.." என்று கஷ்டப்பட்டு தப்பாக எழுதி, தன் அப்பாவிடம் ஆசையோடு கொடுத்தது.

"தன் குழந்தை கஷ்டப்பட்டு எழுதி, அதை தன்னிடம் ஆசையோடு காட்டுகிறதே!!" என்று ஆனந்தம் அடைந்த தகப்பன், "தானே அதை சரி செய்து 'அம்மா.. அப்பா..' என்று எழுதி விட்டு... அது போதாதென்று, தன் குழந்தைக்கு 100க்கு 100 மதிப்பெண் போட்டு, தன் குழந்தையை கொஞ்சி மகிழ்ச்சிப்படுத்தினான்.





அது போல நாம்,

எந்த உலக காரியம் செய்தாலும், தவறாகவே செய்து இருந்தாலும், 

நமக்கு தாயாகவும் தகப்பனாகவும் இருக்கும், ப்ரம்ம தேவனையும் படைத்த நாராயணனிடம் காட்ட வேண்டும் என்ற ஆசையுடன், 

அப்பாவிடம் தான் செய்ததை ஆசையோடு காட்டிய குழந்தை போல, நாம் செய்ததை சமர்ப்பணம் செய்தால், 

தன்னிடம் ஆசையோடு சமர்ப்பணம் செய்யும் நம்மை கண்டு மகிழ்ந்து, 

நாம் செய்த காரியத்தில் குறை இருந்தாலும், 

தானே அதை சரி செய்து, 

நன்றாக செய்தது போல ஆக்கி, 

முழு பலனையும் தந்து விடுகிறார் பரமாத்மா நாராயணன்.


சந்தியாவந்தனம், சஹஸ்ரநாமம் என்று ஏதுவாக இருந்தாலும், முடிவாக, இந்த மந்திரம் சொல்வதற்கு காரணமும் இதுவே... 


ஸ்லோகம், சந்தியாவந்தனம் செய்ததில் குறை இருந்தாலும், அப்பாவிடம் காண்பித்து, அவரே குறையை சரி செய்து, முழு பலனை கொடுக்கட்டும் என்ற 'புத்தியுடன்' இந்த மந்திரத்தை நாம் சொல்ல வேண்டும் .


எந்த காரியத்தை செய்தாலும், செய்த காரியத்தை, நம் அனைவருக்கும் அப்பாவாக உள்ள நாராயணனிடம், ஒரு குழந்தை தன் தகப்பனிடம் காட்டுவது போல காட்ட வேண்டும்.

உணவு செய்தாலும், பெருமாளுக்கு காட்டி விட்டு, பிறகு சாப்பிட வேண்டும். 

அப்படி செய்தால், உணவில் உள்ள தோஷங்கள் (தெய்வ சிந்தனை இல்லாமல் சமையல் செய்தது) நீங்கி விடும்.

 

ஹிந்துக்கள் அனைவரும் சொல்ல வேண்டிய மந்திரம்...

"காயேன வாசா மனசே இந்த்ரியர்வா புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே ஸ்வபாவாத் கரோமி யத் யத் சகலம் பரஸ்மை நாராயணாயேதி சமர்பயாமி"


அர்த்தம்

நான் உடலாலும், மனதாலும், இந்த்ரியங்களாலும், புத்தியாலும் செய்த தவறுகள் அத்துனையையும் நாராயணனுக்கே அர்பணிக்கிறேன்.





மந்திரத்தின் அர்த்தம் தெரிந்து கொள்வதை விட, நாராயணனிடம் அர்பணித்தற்கு  காரணத்தை உணர்ந்து சொல்லும் போது, நமக்கும், பெருமாளுக்கும் உள்ள உறவு புரியும்.


நாம் செய்த காரியத்தில் இருந்த குறையை அவர் அப்பாவாக இருந்து சரி செய்து கொடுக்கிறார் என்ற அனுபவம் ஏற்படும் போது, இந்த மந்திரத்தின் பெருமை நமக்கு புரியும்..


நாராயணன் என்ற சொல்லுக்கு "மனிதர்களுக்கு (நர) ஆதாரமாக (அயணம்) இருக்கும் பரமாத்மா" என்று அர்த்தம்.


நமக்கு ஆதாரமாக இருக்கும் தகப்பனிடம், நாம் செய்த காரியத்தை காட்டும் போது, தகப்பன் என்ற உறவு இருப்பதால், நாம் செய்த காரியத்தில் குறை இருந்தாலும், சரி செய்து முழு பலனை கொடுத்து விடுகிறார்.


வாழ்க ஹிந்து தர்மம்...

No comments: