Followers

Search Here...

Tuesday 12 October 2021

சத்சங்கத்தில் என்ன கிடைக்கும்? சத்சங்கத்தின் மகிமைகள் என்ன? ஏன் சத்சங்கம் வேண்டும்? சத்சங்கத்தினால் என்ன பயன்?

சத்சங்கத்தில் என்ன கிடைக்கும்? சத்சங்கத்தின் மகிமைகள் என்ன? ஏன் சத்சங்கம் வேண்டும்? சத்சங்கத்தினால் என்ன பயன்?

1. ப்ரதமம் மஹதாம் சேவாம் 

சாதுக்களின் தரிசனம் கிடைக்கும். சாதுக்கள் வரும் வழியில் முள் இருக்கிறதே! அவர்கள் அமரும் இடம் சுத்தமாக இல்லையே! கொஞ்சம் சுத்தம் செய்வோமே, என்ற சேவை புத்தி ஏற்படும்.


2. தத் தயா பாத்ரதா தத:

நமக்காக இந்த இடத்தை சுத்தம் செய்தது யார்? யாரப்பா நீ? என்று அவர்கள் விசாரித்து கேட்க, சாதுக்களின் கருணைக்கு  பாத்திரமாகும் பாக்கியம் கிடைக்கும்.

3. தேஷாம் கைங்கர்ய லாபஸ்ச

அந்த சாதுக்களுக்கு நேரிடையாக அவர்களே சொல்லி, கைங்கர்யம் செய்யும் பாக்கியம் கிடைக்கும்


4. தத் உச்சிஷ்டா அன்ன போஜனம்

சாதுக்கள் சாப்பிட்டால் நமக்கு கொடுக்காமல் இருப்பார்களா? பழம் சாப்பிடு என்று தன் கையால் கொடுப்பார்கள். அவர்கள் கொடுக்கும் பிரசாதத்தை எடுத்துக்கொள்ள பாக்கியம் கிடைக்கும்.





5. தத் தர்மே அபிருசி: சாத:

உச்சிஷ்ட பிரசாதத்தை எடுத்துக்கொள்ள, எடுத்துக்கொள்ள, சாதுக்கள் அனுசரிக்கும் தர்மத்தில் நாமும் இருக்க வேண்டும் என்ற ருசி (ஆசை) ஏற்படும். 


6. தத்வ ஞானம்

தர்மத்தை நாமும் அனுசரிக்க அனுசரிக்க, உலக வாழ்க்கை மாயை, தற்காலிகம் தான் என்ற தத்துவ ஞானம் ஏற்படும்.

7. த்ருடா ரதி:

இந்த அனுபவத்தை கொடுத்த குருநாதன் மீது அசைக்க முடியாத அன்பு ஏற்படும்.


8. சாரித்ர ஸ்ரவணம் ஹரே:

அவர் சொல்லும் பகவத் கதைகளை கேட்க ஆசை ஏற்பட்டு, பெரும் சுகத்தை கிடைக்க செய்யும்.


9. பக்தி பாவோதய: சாத  

பகவானின் மீது பக்தி பாவம் உண்டாகும். அதற்கான சாதனை செய்ய தூண்டும்.


10. சம்சார தாப: நிஷ்சே

பகவானும், குருநாதருமே நெஞ்சில் எப்பொழுதும் இருக்க, சம்சார உலகில் ஏற்படும் தாபங்கள் அழிந்தே போய் விடும்.


11. பரமா சாந்தி: அப்யதே 

அழியவே அழியாத பரம சாந்தி நமக்கு வந்து விடும்.

சத்சங்காத் லபதே நூனம்

சத்சங்கத்தில் ஒருவன் சேருவதால், இந்த 11 பலன்கள் கிடைக்கிறது. 


காட்டுவாசியாக இருந்த சபரி, மதங்க முனிவரின் ஆசிரமத்தை கண்டாள்.


இந்த 11 பலன்களையும் பெற்றாள். 

கடைசியில்  குருவின் அணுகிரஹத்தால், ராமபிரானின் தரிசனமும் பெற்றாள்.


No comments: