Followers

Search Here...

Wednesday 4 January 2023

மகாபாரதம் முதல் ஸ்லோகம். நாராயண தியான ஸ்லோகம்... அறிவோம் மகாபாரதம்

நாராயண தியான ஸ்லோகம்

श्रीवेद व्यासाय नमः।। 1

नारायणं नमस्कृत्य 

नरं चैव नरोत्तमम्।

देवीं सरस्वतीं व्यासं 

ततो जयम् उदीरयेत् ।। 2

नारायणं सुरगुरुं जगदेक-नाथं 

भक्त-प्रियं सकल-लोक-नमस्कृतं च।

त्रैगुण्य-वर्जितम् अजं विभुम् आद्यम् ईशं 

वन्दे भवघ्नम् अमर-असुर सिद्ध वन्द्यम्'।। 3

- மஹாபாரதம் (முதல் தியான ஸ்லோகம்) - வியாசர்

வேத வியாசரை வணங்குகிறேன் (1)

நாராயணனை நமஸ்கரிக்கிறேன். நரர்களில் உத்தமரான நரனையும் (அர்ஜுனனையும்) நமஸ்கரிக்கிறேன். நர-நாராயணனை நமஸ்கரிக்கிறேன். வாக்குக்கு தேவதையான சரஸ்வதியையும், வ்யாஸ பகவானையும் பல்லாண்டு பாடுகிறேன். (2)

தேவர்களுக்கு (சுரர்கள்) குருவும், உலகங்களுக்கு ஒரே நாதனும், பக்தர்களுக்கு ப்ரியமானவரும், அனைத்து உலகத்து மக்களும் நமஸ்கரிப்படுபவரும், முக்குணங்களுக்கு அப்பாற்பட்டு நிர்குணமாக இருப்பவரும், எப்பொழுதும் இருப்பவரும் ஜனனமில்லாதவரும், எங்கும் வ்யாபித்து இருப்பவரும், முதல்வரும், தலைவனும் (ஈசன்), தேவர்களாலும் அசுரர்களாலும் ஸித்தர்களாலும் வந்தனம் செய்யப்படுகின்ற நாராயணனை நான் வந்தனம் செய்கிறேன். (3)


सौति: उवाच। (உக்கிரஸரவஸ் என்ற ஸூத பௌராணிகர் சொல்கிறார்)

आद्यं पुरुषम् ईशानं 

पुरुहूतं पुरुष्टुतम्।

ऋतम् एकाक्षरं ब्रह्म 

व्यक्त-अव्यक्तं सनातनम्।।

- மஹாபாரதம் - வியாசர்

ஆதி புருஷரும், தலைவரும் (ஈசனும்), அனைவராலும் யாகத்தில் அழைக்கப்பட்டவரும், அனைவராலும் ஸ்துதிக்கப்பட்டவரும், சத்யமே வடிவானவரும், அழிவில்லாத ஒரே பரப்ரம்மமாக இருப்பவரும், உலகமாக (ஸ்தூலமாக) தெரிபவரும் சூக்ஷ்மமாக (ஆத்மாவாக) இருப்பவரும், எப்பொழுதும் இருப்பவரும் (சனாதனம்), 

असच्च सच्च एव च 

यद् विश्वं सदसतः-परम्

पर आवराणां स्रष्टारं 

पुराणं परम् अव्ययम्।।

- மஹாபாரதம் - வியாசர்

அஸத்யமாக இருப்பவரும் (இல்லை என்பவருக்கு தன்னை காட்டாமலும்), ஸத்யமாகவும் இருப்பவரும் (உண்டு என்பவருக்கு தன்னை காட்டுபவரும்), உலகமாக இருப்பவரும், உலகங்களுக்கு அப்பாற்பட்டவரும், மேலானவைகளையும் கீழானவைகளையும் படைத்தவரும், எப்பொழுதுமே புதிதாகவே இருப்பவரும், பரதத்துவமாக இருப்பவரும், மாறுதல் இல்லாதவரும், 

मङ्गल्यं मङ्गलं विष्णुं 

वरेण्यम् अनघं शुचिम्।

नमस्कृत्य हृषीकेशं 

चराचर गुरुं हरिम्।।

- மஹாபாரதம் - வியாசர்

என்றும் மங்களமானவரும், மங்களத்தை தருபவரும், எங்கும் வ்யாபித்து இருப்பவரும், ப்ரார்த்திக்க தக்கவரும், பாபத்தை போக்குபவரும், பரிசுத்தமானவரும், 5 புலன்களை ஆள்பவரும், அசைகின்ற அசையாத உயிர்கள் அனைத்துக்கும் பிதாவாக இருக்கும் ஹரியை நான் நமஸ்கரிக்கிறேன்.

No comments: