Followers

Search Here...

Thursday 16 November 2023

பெண்ணை பற்றி மனு சொன்ன விஷயம் என்ன? தெரிந்து கொள்வோம்

அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மர், ஸ்வாயம்பு மனு ப்ரம்ம லோகம் செல்லும் முன்னர் கடைசியாக சொன்ன வார்த்தையை யுதிஷ்டிரனிடம் சொல்கிறார்.

स्त्रियः पुंसां परिददौ मनुर्जिगमिषुर्दिवम्।

अबलाः स्वल्पकौपीनाः सुहृद सत्यजिष्णवः।।

ईर्षवो मानकामाश्च चण्डाश्च सुहृदोऽबुधाः।

स्त्रियस्तु मानमर्हन्ति ता मानयत मानवाः।।

स्त्रीप्रत्ययो हि वै धर्मो रतिभोगाश्च केवलाः।

परिचर्या नमस्कारास्तदायत्ता भवन्तु वः।।

- வியாச மஹாபாரதம்

(அனுஸாஷன பர்வம்)

மனு தன்னுடைய உலகத்துக்கு செல்லும் முன் இவ்வாறு சொன்னார்.

"மனிதர்களே! பெண்கள் ஆண்களை விட உடல் பலம் குறைந்தவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்கள். நல்ல குணம் கொண்டவர்கள். சத்யத்தை ஜெயிப்பவர்கள், பொறாமையும் கொண்டவர்கள், கௌரவத்தை விரும்புபவர்கள், 

மனிதர்களே! பெண்களை கௌரவமாக நடத்துங்கள். தர்மமே பெண்ணை நம்பி தான் இருக்கிறது. காமமும் பெண்ணை நம்பியே இருக்கிறது. அனைத்து பூஜைகளும், வழிபாடும் (நமஸ்காரமும்)  பெண்ணை நம்பியே இருக்கிறது. இவை அனைத்துக்கும் காரணமாக இருக்கும் பெண்ணை மதியுங்கள்.

उत्पादनमपत्यस्य जातस्य परिपालनम्।

प्रीत्यर्थं लोकयात्रायाः पश्यत स्त्रीनिबन्धनम्।।

सम्मान्यमानाश्चैता हि सर्वकार्याष्यवाप्स्यथ।

विदेहराजदुहिता चात्र श्लोकमगायत।।

नास्ति यज्ञः स्त्रियाः कश्चिन्न श्राद्धं नोप्रवासकम्।

धर्मः स्वभर्तृशुश्रूषा तया स्वर्गं जयन्त्युत।। 

- வியாச மஹாபாரதம்

(அனுஸாஷன பர்வம்)

உன் குடும்பத்தில் சந்ததி உருவாக்கி கொடுப்பதும் பெண்ணே. அந்த சந்ததியை வளர்த்து காப்பதும் பெண்ணே. உலக வாழ்க்கை உங்களுக்கு ஆனந்தமாக தெரிவதற்கு காரணமே பெண் தான் என்று பாருங்கள். அவர்களை நீங்கள் கௌரவத்தோடு நடத்தினால், எல்லா பலனையும் பெறுவீர்கள்" என்று சொல்லி, புருஷர்களிடம் பெண்களை தகப்பன் போல கொடுத்து விட்டு, சொர்க்க லோகம் சென்றார் மனு. 

No comments: