Followers

Search Here...

Monday 25 December 2017

கடவுளிடம், பெரியோர்களிடம், மகான்களிடம், நம்மை எப்படி அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டும்? எப்படி சொன்னால், அவர்கள் நம்மையும் மதிப்பார்கள்? தெரிந்து கொள்வோமே...

பெரியோர்களை கண்டால் எப்படி அபிவாதயே (self introduction), சொல்ல வேண்டும்? எப்படி அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டும்?
எப்படி சொன்னால், அவர்கள் நம்மையும் மதிப்பார்கள்?




தீய குணம் உள்ளவர்கள் நாம் கேட்காமலேயே நம்மிடம் வலிய வந்து பழக வருவார்கள்.
ஆனால்,
நல்லவர்களை, எப்பொழுதுமே நாம் தான் தேடி போக வேண்டும்,
நல்ல குணம் கொண்டவர்கள், மகாத்மாக்கள், ஞானிகள் அவர்களாகவே நம்மிடம் பழக வரமாட்டார்கள். ஏன்?

பகவானுக்கு தன் பக்தர்களை விட, தன் பக்தனுக்கு பக்தனாக இருப்பவர்கள் மீது பிரியம் அதிகம் ஏற்படும். அவர்கள் செய்யும்  அபச்சாரங்களை கூட மன்னித்து விடுவார். ஏன்?

பொதுவாக பகவானிடம் பக்தனாக இருப்பவன், நேரிடையாக சென்று வணங்க கூடாது என்கிறது நம் சாஸ்திரம்.

"பெரியோர்களை முன் நிறுத்திதான் வணங்க வேண்டும்" என்று சொல்கிறது.

இங்கு பெரியோர்கள் என்பது நம் குருவையோ, ரிஷிகளையோ குறிக்கிறது.

பொதுவாக நாம் நேரிடையாக பெரியோர்களிடம், நம்மை அறிமுக படுத்திக்கொண்டால்,
நம் தகுதி என்ன?, என்று பார்த்து,
பின் பேசலாமா? என்ற நினைப்பை அவர்களுக்கு தந்து விடும்.

கெட்ட பழக்கம் உடையவர்கள், நல்லவனையும் தன் பக்கம் இழுத்து அவனுக்கும் கெட்ட பழக்கத்தை புகுத்தி விடுவார்கள். இது உலக இயற்கை.

"துஷ்டனை கண்டால், தூர விலகு" என்று ஒரு வசனம் உண்டு.
தகாத செயல்கள், தீய எண்ணங்களை விதைக்கும் மனிதர்கள் நம்மிடம் எப்பொழுதும் வந்து கொண்டே இருப்பார்கள்.
அவர்களை விட்டு நாம் விலகி இருப்பதே, நம் ஆன்மீக வளர்ச்சிக்கு நல்லது.

பெரியோர்கள், ஒருவன் நல்லவனாக இருந்தால் மட்டும் தான் பழக ஆசைப்படுவார்கள்.

இதன் காரணமாகவே, பெரியோர்களை நேரிடையாக சென்று வணங்க கூடாது என்கிறது நம் சாஸ்திரம்.

நம்மை பொறுத்தவரை 'நல்லவன்' என்று நினைத்து கொண்டு இருப்போம். நம்மிடம் உள்ள தீய குணங்கள் நமக்கு தெரியாது. ஆனால் பிறருக்கு தெரியும்.




நம் தீய குணங்களோ எண்ணிலடங்காமல் இருக்கிறது.
அதில் ஒன்று அவர்கள் கண்ணில் பட்டாலும், நம்மிடம் நல்லவர்கள் பழக அஞ்சுவார்கள்.

துஷ்டனை கண்டால் தூர விலகு என்பதால்,
நல்லவர்கள் பொதுவாக தானாக வந்து, கெட்ட பழக்கம் உடையவர்களிடம் பழக விரும்ப மாட்டார்கள்.
தீய குணங்கள் நமக்கும் வந்து விடுமோ என்று அஞ்சுவார்கள். பாவத்தை சேர்த்து கொள்ள அஞ்சுவார்கள்.
ஆதலால்,
நல்லவர்களை நாம் தான் தேடி போக வேண்டும்.

இதற்கு ஒரே வழியாக தான் நம் சாஸ்திரம் அபிவாதயே என்ற self introductionஐ காட்டுகிறது.
நாம் அவருக்கு அபிமானமான ஒருவரை முன்னிட்டு தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம்.

கோவிலுக்கு செல்லும் போது, பெருமாளிடம் நேரிடையாக தன்னை பற்றி சொல்லிக்கொள்ளாமல்,
"அடியேன் ராமானுஜ தாஸன்" என்று சொன்னால்,
ராமானுஜர் மீது அதீத ப்ரேமை கொண்ட பகவான், நம்மை பற்றி, நம் தரத்தை பற்றி துளி கூட யோசிக்காமல், மோக்ஷம் என்ற கதவை திறந்து விடுகிறார்.

அதே போல, பெரியவர்களை பார்த்து, அபிவாதயே (self intro) சொல்லும் போதும்,
நாம் வேதம் படிக்காமலேயே "யஜுர் சாகா அத்யாயி" என்று யஜுர் வேதம் படிக்கிறேன் என்று சொன்னாலும், அதற்கு முன் நான் இந்த ரிஷியின் வம்சத்தில் வந்தவன்,
இந்த கோத்திரத்தில் வந்தவன் என்று சொல்லும் போதே,
உண்மையான பெரியோர்கள், "ஆஹா... நீ அந்த அந்த ரிஷியின் வம்சமா? அந்த கோத்திரத்தை சேர்ந்தவனா?"
என்று ரிஷிகளின் பெருமையை தியானித்து,
நம்மிடம் அந்த வம்சத்தில் வந்தவன் பேசுகிறான் என்ற நோக்கில் பார்த்து பெருமிதமாக பழகுவர். நம்மிடம் தோஷம் இருந்தாலும் பிறகு பெரியோர்கள் அதை பொருட்படுத்துவதில்லை.
ரிஷிகளை கொண்டே நாம் பெரியோர்களை நாட வேண்டும்.


பிராம்மண சமுதாயம் மட்டுமல்ல, உலக மனிதர்கள் யாவரும் ரிஷிகள் பரம்பரையில் வந்தவர்களே.. ஒவ்வொருவரும், தாங்கள் எந்த ரிஷி பரம்பரையில் வந்தவர்கள் என்று கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும்.
மேலும் அந்த ரிஷியின் சரித்திரம், பெருமைகள் தெரிந்து கொள்ள ஆசை பட வேண்டும்.

உதாரணத்திற்கு ப்ருகு ரிஷியின் கோத்திரத்தில் வந்தவர்கள், அவரை பற்றி இங்கு படித்து தெரிந்து கொள்ளலாம்.

மனித சமுதாயம் ரிஷிகளால் உருவானது.
பொய் மதங்கள் சொல்வது போல, ஆடை அணியாத முட்டாள் ஆதாம், ஏவாள் மூலம் வந்தவர்கள் அல்ல நாம் என்று அறிய வேண்டும்.
நம் குல பெருமை மகத்தானது. இதை மறந்து விட கூடாது.

மகான்களை கொண்டே, நம் குருவை கொண்டே, பகவானையும் நாட வேண்டும்.
பிராம்மண குலத்தில் பிறந்தும், தீய புத்தியால், தன் தவ வலிமையாலும், பலத்தாலும் தேவர்களையே மிரட்டி கொண்டு, பிறர் மனைவி என்று தெரிந்தும் பேடியாக ராமர் இல்லாத சமயத்தில் சீதையை இழுத்து வந்தான் ராவணன்.
வீரனாக ராமரிடம் போரிட்டு சீதையை கொண்டு வராமல், இப்படி கொண்டு வந்து வைத்து இருக்கிறாயே என்று கேள்வி கேட்ட தம்பி விபீஷணனை,
"அந்த ராமனோடு போ. இங்கு இருக்காதே!!" என்று எல்லோரும் பார்க்க சபையில் எட்டி உதைத்து துரத்தினான் ராவணன்.

அதர்மம் செய்யும் ராவணன் அண்ணனாக இருந்தாலும், அவனோடு இருக்க கூடாது என்று முடிவு செயதார் விபீஷணன்.
துஷ்டனை கண்டால் தூர விலகு என்பது வெளி மனிதர்களுக்கு மட்டுமல்ல, தன் சொந்த ரத்தமாக இருந்தாலும் விலக வேண்டும் என்று காட்டினார் விபீஷணன்.
கொஞ்சம் கவனித்து பார்த்தால், ஸ்ரீ ராமரை நோக்கி வந்த விபீஷணன், நேரிடையாக ஸ்ரீ ராமரிடம் சென்று விடவில்லை என்று தெரியும்.
விபீஷணன் ராமரின் படைகள் அனைவரையும் பார்த்து, தன்னை ஸ்ரீ ராமருக்கு அறிமுகப்படுத்தமாறு கேட்கிறார்.
இதுவே ரகசியம்.
தான் ராமரிடம் நேரிடையாக செல்ல கூடாது.
ராமரின் அபிமானத்துக்கு பாத்திரமான இந்த வானர படைகளில் யாராவது ஒருவர், தன்னை பற்றி ராமரிடம் சொல்லி, சேர்த்துக்கொள்ள சொன்னால், ராமர் தயக்கமின்றி தன்னை சேர்த்து கொள்வார் என்ற சாஸ்திரத்தை உணர்ந்து இருந்தார்.


ஹனுமான் ஸ்ரீ ராமரிடம் இவர் ராவணன் தம்பியாக இருந்தாலும், இவரை நம்பலாம் என்று பரிந்துரை செய்தார்.

தன்னை சரண் அடைந்தவர்கள் எவராக இருந்தாலும், அபயம் தரும் ஸ்ரீ ராமர்,
தனக்கு பிரியப்பட்ட ஹனுமானுக்கும் பிரியப்பட்டவராக விபீஷணன் இருக்கிறார் என்றதும் ஒரு கேள்வி இல்லாமல், விபீஷணனை ஏற்றுக்கொண்டார்.
"ஸ்ரீ ராமரே லட்சியம்" என்று இருந்தவர்கள் லக்ஷ்மணனும், பரதனும்.

ஸ்ரீ ராமருக்கும், இவர்கள் இருவர் மேல் அளவுக்கடந்த அன்பு உண்டு.

லக்ஷ்மணனிடத்திலும், பரதனிடத்திலும், தனக்கு உள்ள அன்பை விட, தன் கடைசி தம்பி சத்ருக்னன் மீது அன்பு அதை விட வைத்து இருந்தார் ஸ்ரீ ராமர்.

இதற்கு காரணம் உண்டு.

சத்ருக்னனுக்கு ஒரே லட்சியம், தன் அண்ணன் பரதனுக்கு சேவை செய்வது மட்டும் தான்.
இவருக்கு ராமர் கூட இரண்டாம் பட்சம் தான்.

பொதுவாக பகவானுக்கு தன் அடியார்கள் தனக்கு சேவை செய்வதை காட்டிலும்,
தன் அடியாருக்கு சேவை செய்யும் அடியார்க்கு அடியாக இருப்பவர்களை மிகவும் பிடிக்கும்.
இவர்களிடம் கெட்ட நடத்தை இருந்தாலும், தன் அடியாருக்கு சேவை செய்கிறான் என்பதாலேயே, அவனுக்கும் மோக்ஷத்தின் கதவை திறந்து விடுகிறார்.

ராவணனுடைய தங்கை "கும்பினி"க்கும், உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு தேசத்து அரசன் "மது" என்பவனுக்கும் பிறந்தவன் "லவனாசுரன்".
இவனை, சத்ருக்னன் வதம் செய்தார்.




இதையே ஒரு வாய்ப்பாக கொண்டு, ஸ்ரீ ராமர் "மது" ஆண்ட தேசத்தை, தன் தம்பி சத்ருக்னனுக்கு கொடுத்து, அரசனாக்கினார்.
இந்த மது நகரமே, இன்றைய "மதுரா".
சத்ருக்னன் ஆளும் இந்த மதுராவை ஒரு புண்ணிய க்ஷேத்ரமாக ஆக்க வேண்டும் என்று ஸ்ரீ ராமர் ஆசைப்பட்டார்.
உத்திர பிரதேசத்தில் உள்ள இதே மதுராவில், த்ரேதா யுகத்தில், ஸ்ரீ ராமரே, கிருஷ்ணராக அவதரித்தார்.

தன் சகோதரன் "சத்ருக்னன்" ஆண்ட இந்த தேசத்தில் தான், தன் அடுத்த அவதாரம் என்று சங்கல்பித்து அவதரித்து, மதுராவை திவ்ய தேசம் ஆக்கினார் பகவான் நாராயணன்.

அடியாருக்கு அடியாராக இருந்து, தன் குருவின் சொல்படி இருந்தாலே, பகவான் மிகவும் ப்ரசன்னமாகி எதையும் தந்து விடுவார்.
நமக்கு ஏன் குரு வேண்டும்?
நமக்கு ஆத்ம குரு இருந்தால், பகவான் நம்மை பார்க்கும் போது, நம் கெட்ட குணங்களை, அபசாரத்தை கண்டு கொள்ளா மாட்டார்.
தன் பக்தனை குருவாக ஏற்றுள்ளான், தன் பக்தனின் அபிமானத்துக்கு, கருணைக்கு பாத்திரமானவன் என்ற காரணத்துக்காகவே, நமக்கும் மோக்ஷம் தந்து விடுவார் பெருமாள்.

நாம் ஞானியும் இல்லை, சுத்த சித்தம் உள்ளவனும் இல்லை.
நேரிடையாக பகவானிடம் சென்றால், அவர் நம் தகுதியை எதிர்பார்க்கிறார்.

ஒரு குருவை பிடித்து கொண்டு, பகவானிடம் சென்றால், கேள்வி கேட்காமல் சேர்த்துக்கொள்கிறார். இதுவே ரகசியம்.

குரு இல்லாதவன் சுய முயற்சி செய்து பகவானை அடைவது மிக கடினம். நமக்கு குருவே கதி.

ஆத்ம குருவை ஒவ்வொரு மனிதனும் அடைவது அவசியம். குருவின் துணை கொண்டு, தெய்வத்திடம் நாம் செய்யும் பிரார்த்தனைகள் யாவும், பலிக்கின்றன.

ஹிந்துவாய் பிறக்கவே புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.

Hare Rama Hare Krishna - Bhajan (listen)


Sandhya Vandanam - Morning (With Meaning)

Sandhya Vandanam - Afternoon (With Meaning)

Sandhya Vandanam - Evening (With Meaning)

நாம் குளிக்கும் போது கட்டாயம் செய்ய வேண்டியது என்ன? ஹிந்துக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்

"தினமும் குளிக்கும் போது, 
நமது பாரத பூமியை பசுமையாக்கும், 
நமக்கு உணவாக தானியங்கள் கிடைக்க செய்யும், 
தேவதைகளின் அம்சமான ஒவ்வொரு புண்ணிய நதிகளையும்,
நன்றியுடைய மனிதனும் நினைக்க வேண்டும்" 
என்று சாஸ்திரம் சொல்கிறது.




நாம் குளிக்க வைத்திருக்கும் தண்ணீரும் அந்த புனித நீராக மனதில் தியானித்து, நம் உள்ளும் அந்த பரமாத்மா இருக்கிறார் என்ற த்யானத்துடன், அவருக்கு செய்யும் "அபிஷேகமாக" நினைத்து குளித்தாலும், புண்ணியம் சேரும்.

ஸ்லோகம்:
'கங்கே'-ச 'யமுனே'-சைவ
'கோதாவரி' 'சரஸ்வதி'
'நர்மதே' 'சிந்து' 'காவேரி'
ஜலேஸ்மின் சந்நிதம் குரு

"கங்கா-நதி தேவியே, 
யமுனா-நதி தேவியே, 
கோதாவரி-நதி தேவியே,  
சரஸ்வதி-நதி தேவியே, 
நர்மதா-நதி தேவியே, 
சிந்து-நதி தேவியே, 
காவேரி-நதி தேவியே, 
உங்கள் அணுகிரஹத்தால், நீங்கள் அனைவரும் நான் வைத்திருக்கும் ஜலத்தில் வந்து, உங்கள் சாநித்தயத்தை தாருங்கள்"
என்று பிரார்த்தனை செய்து, குளிக்கலாம்.

ஒவ்வொரு நதியும் தேவதைகளால் உருவானவை. ஒவ்வொரு தேவதையும் ஒரு பலன் தருகிறது.
சரஸ்வதி தேவி, நதியாக உருமாறி உலகில் வந்த போது, அந்த சரஸ்வதி நதியில் ஸ்நானம் செய்பவர்களுக்கு "ஞானம்" உண்டாகும் படி செய்தாள்.
அதேபோல கங்கை, நதியாக உருமாறி உலகில் வந்த போது, அந்த கங்கா நதியில் ஸ்நானம் செய்பவர்களுக்கு "வைராக்கியம்" உண்டாகும் படி செய்தாள்.
கங்கையில் எப்பொழுதும் நீராடும் காசி, கேதார்நாத் போன்ற இடங்களில் இருப்பவர்கள் வைராக்கியம் அதிகம் பெறுகின்றனர்.
அதேபோல யமனின் தங்கை, சூரியனின் புத்ரி யமுனா, நதியாக உருமாறி உலகில் வந்த போது, அந்த யமுனா நதியில் ஸ்நானம் செய்பவர்களுக்கு "பிரேமை (அன்பு)" உண்டாகும் படி செய்தாள்.
அதேபோல காவேரி, நதியாக உருமாறி உலகில் வந்த போது, அந்த காவேரி நதியில் ஸ்நானம் செய்பவர்களுக்கு "அர்ச்ச அவதாரத்தில் பூஜை, அர்ச்ச அவதாரத்தில் பக்தி" உண்டாகும் படி செய்தாள்.




இப்படி ஒவ்வொரு நதிக்கும் ஒரு சாநித்யம் உண்டு என்று சாஸ்திரம் சொல்கிறது.

எளிதான இந்த 7 நதிகளை நினைத்து சொல்லி குளிக்கும் போது, 3 பலன்கள் கிடைக்கிறது.
1. குளித்ததற்கு குளித்தது போலவும் ஆகிறது. உடலில் உள்ள அசுத்தம் போகிறது.
2. புண்ணிய நதியை நாம் வைத்திருக்கும் தண்ணீரில் சாநித்யமாக இருக்க செய்வதால், நம் உள்ளே இருக்கும் கடவுளுக்கு அபிஷேகம் செய்து பூஜித்த பலனும் கிடைக்கிறது. 
மேலும்,
3. ஜீவனாகிய நமக்கு, இந்த தேவதைகளின் ஆசியால், மெய்யான ஞானமும், வைராக்கியமும், ப்ரேமையும், அர்ச்ச அவதாரத்தில் பக்தியும் மேலும் பல அணுகிரஹங்கள் ஏற்படுகிறது. இதனால் மனதில் உள்ள கீழ் தரமான எண்ணங்கள் அழிந்து, இறை ஞானம் உண்டாகிறது.

இனி அனைவரும் இந்த ஸ்லோகத்தை சொல்லி 7 நதிகளை தியானத்தில் கொண்டு வந்து பிராத்தனை செய்து, 3 பலன்களையும் சேர்த்து அடைவோம்.

ஹிந்துவாய் பிறப்பதே புண்ணியம். 

Thursday 21 December 2017

கர்பக்ரஹத்தில் உள்ள சிலையை ஏன் தெய்வம் என்று ஹிந்து வணங்குகிறான்

ஒரு ஞானி, வெறும் கல்லை, தெய்வ சாந்நித்யம் செய்து, நமக்காக பிரதிஷ்டை செய்து விடுகிறார்.
ஒரு ஞானிக்காக கல்லில் கூட தெய்வம் பிரவேசிக்குமா?

கோவில் தூண்களில் உள்ள அழகான சிவனின் சிலையை  "தெய்வம்" என்று வணங்குவதில்லை.
அதே கோவிலில் கர்பக்ரஹத்தில் உள்ளே இருக்கும் அழகு கூட இல்லாத, ரூபமில்லாத நிலையில் உள்ள சிவ லிங்கமாக இருக்கும் சிலையை, "தெய்வம்" என்கிறான். இதன் ரகசியம் என்ன?

ஹிந்துக்கள், எல்லா கல்லையும் தெய்வமாக வணங்கவில்லை என்று தெளிவாக இது புரிய வைக்கிறது. ஏன் கர்பக்ரஹத்தில் இருக்கும் சிலை மட்டும் "தெய்வமாக" தெரிகிறது?
இதன் ரகசியம் என்ன?

விளக்கம்:
கீழ்நிலை மதங்களில் உள்ளவர்கள், ஹிந்துக்கள் பார்க்கும் கல்லை எல்லாம் தெய்வம் என்று வழிபடுவதாக நினைக்கின்றனர்.

அவர்களுக்கும் ஒரு கல் சிலையோ, கல்லோ தேவைப்படுகிறது என்பதை மறந்து பேசுவது நகைப்புக்கு உரியது.

ஹிந்துக்கள் என்ற சனாதன தர்மத்தில் உள்ளவர்கள், மியூசியத்தில் இருக்கும் சிவன் சிலையையும், பெருமாள் சிலையையும் தெய்வமாக  கும்பிடுவதில்லை.
சிலையாக தான் பார்க்கின்றனர்.

சிலையில் உள்ள தெய்வத்துக்கு மரியாதை வேண்டுமானால் செய்கின்றனர். ஆனால் சிலையையே "தெய்வம்" என்று நினைப்பதில்லை.

சாஸ்திரத்தில் சொல்லாத எந்த தெய்வங்களும் மனிதன் செய்த கற்பனையே.
அவன் புத்தியை கொண்டு ஒருவரை தெய்வம் என்று கூறிக்கொள்கிறான்.
அதனாலேயே எதை எதையோ தெய்வம் என்றும், யார் யாரையோ தெய்வம் என்றும் சொல்லி மற்ற நாட்டில் இருந்து, இறக்குமதியான பொய் மதங்களை ஹிந்துக்கள் புறக்கணிக்கின்றனர்.

கோவிலுக்கு செல்லும் போது, மிக அழகான சிற்பங்கள் ஒவ்வொரு தூணிலும் காணலாம்.

அரசர்கள் கட்டிய இந்த சிலைகளில் சிவன், ப்ரம்மா, அக்னி, விஷ்ணு போன்ற தெய்வங்களின் உருவங்கள்,மிக அழகாக அப்படியே செதுக்கப்பட்டு இருக்கும்.

இந்த சிற்பங்களை பார்த்து, ஹிந்து வணங்குவதில்லை, பக்தி செய்வதும் இல்லை.
அழகாக சிற்பம் உள்ளது என்று மட்டும் தான் ரசிப்பான்.
சிலை தான் என்றும் சொல்லுவான்.

ஆனால், கர்பக்ரஹத்தில் இருக்கும் சிலையை கண்டவுடன், அவனுக்கு அது தெய்வம் என்ற உணர்வை கொடுத்து விடுகிறது.

"தெய்வம்" என்ற உணர்வு வந்தவுடன், அதன் முன் பிரார்த்தனை செய்கிறான், பக்தி செய்கிறான். தன் குறைகளை, தன் கஷ்டங்களை கூட சொல்லி வேண்டுகிறான். அழுகிறான். பூஜிக்கிறான்.



தூணில் இருக்கும் தெய்வ சிலைகள், இந்த கர்பகிரஹத்தில் இருக்கும் சிலையை விட அழகானதாக கூட இருக்கும்.

அழகுக்காக தூணில் இருக்கும் சிலையை "தெய்வம்" என்று கொண்டாடுவதில்லை ஹிந்து என்று நாம் கவனிக்க வேண்டும்.

அறிவு உள்ள மனிதன், தூணில் இருக்கும் அழகான தெய்வசிலையை, சிலை என்று தான் உணர்கிறான். சிலையில் உள்ள தெய்வத்துக்கு மரியாதை கொடுக்கிறான். ஆனால் அந்த சிலையையே "தெய்வம்" என்று கொண்டாடுவதில்லை.

அதே சமயம், கர்பக்ரஹத்தில் இருக்கும் சிலையை கண்டதும், சிலை என்ற நினைவையும் மீறி, இறைவன் என்று உணர்கிறான்.

இதில் என்ன ரகசியம் உள்ளது?
இதை கவனிக்கும் போது தான், ஏன் திருப்பதி, ஸ்ரீ ரங்கம், காசி போன்ற க்ஷேத்ரங்களில் மக்கள் அலை அலையாக வருகின்றனர் என்பது புரியும்.

தெய்வ அணுகிரஹம் அடைந்த ஒரு ஞானியால், ரிஷியால், பக்தனால் ஆராதித்து வணங்கப்பட்ட சிலையில், தெய்வங்கள் தன் சாநித்யத்தை ப்ரகாசப்படுத்துகின்றன.

சில ஞானிகள், ரிஷிகள், மகாத்மாக்கள் தாங்களே  பிரதிஷ்டை செய்த தெய்வங்களிடம், சில காலமோ, நிரந்தரமாகவோ சாநித்யத்தோடு அந்த இடத்திலோ, ஒரு சிலையிலோ இருக்குமாறு பிரார்த்தனை செய்து பக்தியால் கட்டிப்போட்டு விடுகின்றனர்.

அவர்கள் காலத்துக்கு பின்னும், தெய்வங்கள் அந்த மகானின் அன்புக்காக, முழு சாநித்யத்தோடு அந்த சிலையில் இருந்து, வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை தருகின்றனர்.

திருப்பதி போன்ற க்ஷேத்திரங்களில் வெங்கடேச பெருமாள், தானே தோன்றியவர். எந்த ரிஷியும் வேண்டி வந்தவர் இல்லை. தானே சங்கல்பித்து அர்ச்ச அவதாரமாக வந்தவர்.

ஸ்ரீ ரங்கம், காஞ்சிபுரம் போன்ற க்ஷேத்திரங்களில் தோன்றிய பெருமாள், ப்ரம்ம தேவனுக்காக வந்த அர்ச்ச அவதாரங்கள்.

சொன்ன வண்ணம் செய்த பெருமாள், தீபப்ரகாச பெருமாள், சரஸ்வதி தேவிக்காக வந்த அர்ச்ச அவதாரங்கள்.

காஞ்சியில் உள்ள நிலாத்திங்கள் பெருமாள், சிவபெருமானுக்காக வந்த அர்ச்ச அவதாரங்கள்.

108 திவ்ய க்ஷேத்ரங்களும் ஆழ்வார்களால் பாடப்பட்ட ஸ்தலங்கள்.

சில கோவில்களில், ஒரு விளக்கு ஏற்றுவார் இல்லாமல் இருக்கும் நிலையிலும், அங்கு இருக்கும் பெருமாளை, இன்று சென்று பார்த்தால் கூட சாநித்யம் இருப்பதை, நிம்மதியை, அமைதியை உணரலாம்.

ஏதோ ஒரு பக்தனின் பிரார்த்தனைக்காக, தெய்வங்கள் சிலைகளில் சாநித்யத்துடன் இன்றும் இருக்கின்றனர்.

இதன் காரணத்தினால் தான், நாம் கர்பக்ரஹத்தில் இருக்கும் சிலையை கண்டால், நம் ஆத்மா இதை "தெய்வம்" என்று பார் என்று தோன்ற செய்கிறது.

அதே போன்ற சிலை, ஒரு தூணில் இருந்தால், அதை ஒரு கல் சிலையாக பார்க்க செய்கிறது.

கோவில்களில் கர்பக்ரஹத்தில் உள்ள தெய்வங்கள் பெரும்பாலும் ரிஷிகள், யோகிகள், பக்தர்கள், மகான்கள் வழிபட்ட தெய்வ விக்ரஹங்கள் என்பதை நாம்  மறக்க கூடாது.

நம்மை போன்ற அஞானிகளும் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால், இவர்கள் நமக்காக பெருமாளிடமோ, சிவனிடமோ பேசி, எப்பொழுதும் அந்த சிலையில் வாசம் செய்யுமாறு கேட்டு, வரமாக வாங்கி விட்டார்கள், நம் மீது உள்ள கருணையின் காரணமாக.

ஒரு ஞானி, வெறும் கல்லை, தெய்வ சாந்நித்யம் செய்து, நமக்காக பிரதிஷ்டை செய்து விடுகிறார்.

தெய்வங்கள் நம் அபச்சாரங்களை பொறுத்து கொண்டு, அந்த பக்தனின் பிரார்த்தனைக்காக சாந்நித்யம் குறையாமல் இருந்து, வரும் பக்தனுக்கு அருள் செய்கின்றனர்.

ஞானியும், ரிஷியும் கூட பிரதிஷ்டை செய்யாத பெருமாள் வெங்கடேச பெருமாள்.
பரவாசுதேவன், தானே விருப்பத்துடன் வந்த அர்ச்ச அவதாரம்.
இதன் காரணத்தாலேயே, மலை உச்சியில் இருந்தாலும், மக்களால் சென்று பார்க்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது.

ஒரு ஞானிக்காக கல்லில் கூட தெய்வம் பிரவேசிக்குமா?
ப்ரகலாதனே இதற்கு பிரமாணம்.

ஹிரண்யகசிபு தன் மாளிகையில், தான் கட்டிய தூணை பார்த்து, "இதில் உன் நாராயணன் இருக்கிறானா?" என்று தன் மகன் பிரகலாதனை பார்த்து கோபத்துடன் கேட்கிறான்.

எங்கும் இருக்கும் நாராயணன், இதிலும் உள்ளார் என்று பிரகலாதன் சொல்லி, "அப்பா, இந்த தூணில் இருக்கிறார்" என்றான்.

கல்லும், மண்ணும் கொண்டு தானே கட்டிய தூணில் நாராயணன் இருக்கிறானா, என்று படு பயங்கர கோபத்தில் அந்த தூணை ஒரு குத்து விட, அதிலிருந்து நாராயணன் நரசிம்மமாக ஆவிர்பவித்து வெளி வந்து அவனை கிழித்து எறிந்து விட்டார்.

தூணில் எப்படி பகவான் சாந்நித்யம் ஏற்படும்? அது கல் தானே? பிரகலாதன் என்ற பக்தன் கேட்டான் என்பதற்காக, கல் தூணில் இருந்து வெளி வந்தார் பகவான்.

இதன் காரணமாகவே கீதையில், "அஹம் பக்த பரா தீநஹ:" என்று சொல்கிறார். என் பக்தனுக்காக எதையும் செய்வேன் என்கிறார்.

உண்மையான ஒரு பக்தன், ஒரு கல்லில் பகவானை பிரதிஷ்டை செய்தாலும், அவனுக்காக பகவான் வந்து விடுகிறார்.

பார்க்கும் சிலைகள் எல்லாம் தெய்வமாக தெரியாது.
பொருட்காட்சியில் உள்ள சிலைகள், சிலைகளே.

ஆனால் கோவிலில் உள்ள சிலைகள் பேசும் தெய்வங்கள். பக்தி உள்ளவனுக்கு அவன் கேட்பதை கொடுக்கிறது இந்த தெய்வங்கள்.

ஹிந்துவாய் பிறந்தது நினைத்து பெருமை கொள்ள வேண்டும்.
மதம் மாறி, பொய் மாதங்களில் சேர்ந்து கெட்டு போன்றவர்களும், தான் பாட்டனார்கள் இந்துக்களே என்ற பெருமை கொண்டு, பொய் தெய்வங்களை விட்டு, பரவாசுதேவனை வணங்கி அருள் பெற வேண்டும். 

Tuesday 19 December 2017

அதர்மத்தை தட்டி கேட்க வேண்டும். முயற்சியை விட கூடாது - ஸ்ரீ கிருஷ்ணர்

குருவின் உபதேசம்

ஸ்ரீ கிருஷ்ணரின் மீது பக்தி வர வேண்டுமென்றால், அவர் சொன்ன கீதையை நாம் படித்து புரிந்து கொண்டாலே போதும். பக்தியும் வரும். ஸ்ரீ கிருஷ்ணரையும் நமக்கு புரியும்.



கிருஷ்ணர் கீதையில் சொன்னது வெறும் வார்த்தை அல்ல, அறிவுரை அல்ல.
கீதை சொன்ன பொழுது, ஸ்ரீ கிருஷ்ணருக்கும், அர்ஜுனனுக்கும் 100 வயது. 


தன் அனுபவத்தை தான், மனம் ஒடிந்து போயிருந்த அர்ஜுனனுக்கு சொல்லிக்கொண்டிருந்தார்.

அவர் தன் வாழ்க்கையில், தான் எப்படி இருந்தேன் என்று தான் சொல்கிறார்.
கீதை அவரது குணம்.





ஸ்ரீ கிருஷ்ணர், கீதையில் பொதுவாக நமக்கு என்ன சொல்கிறார்? அனைவருக்கும் வாழ்க்கையில் துன்பம் வரும், சுகம் வரும், வெற்றி வரும், தோல்வி வரும், மானம், அவமானம் வரும், ஆரோக்கியம் வரும், ரோகம் வரும். இது சகஜம்.

எது வந்தாலும் கலங்காமல், சமமாக இரு.

உலகம் அனித்யம் (மாறக்கூடியது) என்று புரிந்து, கலங்காமல் தீரமாக, தர்மத்தில் இரு.

முயற்சி செய்வதை விடாதே.

இப்படி தான் சொன்னதோடு இல்லாமல், ஸ்ரீ கிருஷ்ணர் தன் வாழ்க்கையிலும் நடத்திக் காட்டினார்.

  • எந்த ஒரு நிலையிலும் இவர் கலங்கவில்லை.
  • ஜெயிலில் பிறந்தோம் என்று சோர்வடையவில்லை.
  • தர்மம், அதர்மம் தெரிந்தும், அதர்மத்திற்கு துணை போன கர்ணனை போன்று, தானும் செல்லவில்லை.
  • தர்மத்திற்காக யுதிஷ்டிரனுக்கு தேரோட்டவும் தயார் என்றார்.

கீதை மூலமே ஸ்ரீ கிருஷ்ணர் தன் வாழ்க்கையை எப்படி தர்ம வழியில், தீரமாக நடத்தினார் என்று புரிந்து கொள்ளலாம்.

ஜெயிலில் பிறந்தும், க்ஷத்ரியனாக பிறந்தும் மாடு மேய்க்கும் நிலை வந்தும், பிறந்த பொழுதே தாய் தந்தை அரவணைப்பு இல்லாமல் வளர்ந்தும், எதிரிகள் பலர் இருந்தும், எந்த நேரத்திலும், ஸ்ரீ கிருஷ்ணர் புலம்பிய, கலங்கிய சுவடு இல்லை.

துரியோதனின் அதர்மத்தை எதிர்க்க முடியாமல், பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்றோர் ஏதேதோ காரணங்கள் சொல்லி துரியோதனின் பக்கம் நின்றனர். 
துரியோதனின் மகளை மணந்து இருந்தான் ஸ்ரீகிருஷ்ணரின் மகன்.
சம்பந்தி என்ற உறவு. ஆனாலும், அதர்மத்தில் இருந்த துரியோதனுக்கு துணை போகவில்லை.

படை பலம் சிறிதாக இருந்தாலும், தர்மத்தில் உள்ள பாண்டவர்களுக்கு துணை நின்றார்.

சுய முயற்சியால் முன்னேறினார். வாழ்க்கையை தீரமாக எதிர்கொண்டார்.

எந்த நிலையிலும் அதர்மத்தை கண்டித்தார்.

எந்த நிலையிலும், சோகத்தை காட்டிக்கொள்ளாதவராக இருந்தார்.

தர்ம வழியில் நடப்பவர்களுக்கு துணை நின்றார்.


நாம், பகவத் கீதையில் எந்த ஒரு ஸ்லோகத்தையும் படிக்கும் போது, நாம் முதலில் தியானிக்க வேண்டியது - "ஸ்ரீ கிருஷ்ணர் எந்த சம்பவத்தை மனதில் வைத்து இப்படி சொன்னார்' என்று சிந்திக்க வேண்டும்.

இந்த தியானமே, ஸ்ரீ கிருஷ்ணரின் மீது பக்தி உண்டாக்கும்.

எப்படி ஸ்ரீ கிருஷ்ணர் தன் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை எதிர்கொண்டார் என்பது புரியும்.

துக்கங்கள் பல, ஒருவன் வாழ்வில் இருந்தாலும், சோகத்தை முகத்தில் காட்டாதவர் ஸ்ரீ கிரிஷ்ணர்.

ஸ்ரீ கிருஷ்ணரை ஒரு ஓவியன் கூட சிரித்த மாதிரி தான் வரைவான். சோக கிருஷ்ணனை நாத்தீகன் கூட ஒத்துக்கொள்ள மாட்டான்.

இவரை பார்த்தாலே, பார்ப்பவனுக்கு உற்சாகம் வரும்.

பொறாமை குணம் உடையவர்களுக்கு மட்டுமே, ஸ்ரீ கிருஷ்ணரை பிடிக்காது.
வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் நமக்கு அமையலாம், இருக்கலாம், ஆனால், நாம் மாறிவிட கூடாது.



நாம் தர்மத்திலேயே இருக்க வேண்டும். சுகம் வந்தாலும், துக்கம் வந்தாலும் சமமாக இருக்க வேண்டும்.

அதர்மத்தை தட்டி கேட்க வேண்டும். முயற்சியை விட கூடாது. இதுவே ஸ்ரீ கிருஷ்ணர் தன் வாழ்வில் காட்டியது.

Monday 18 December 2017

அர்ச்சா அவதாரம் செய்து விக்ரஹ (சிலை) ரூபமாக உள்ள இறைவன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்? கூரத்தாழ்வார் "கைங்கர்யம் கொடு" என்று பிரார்த்திக்கிறார்.. ஹிந்துக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரார்த்தனை.

பெருமாளின் சேவையே பக்தி. 
பெருமாளின் சேவையே மோக்ஷத்திற்கு வழி. 
கூரத்தாழ்வார், வரதராஜஸ்தவத்தில்  கைங்கர்யம் (சேவை) வேண்டி வரதராஜனிடம் கதறுகிறார். 




"வரதா, நீங்கள் பரம தயாளு அல்லவா! 
நான் ஆசையோடு உங்களுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று வந்தால், நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உன் கைங்கர்யம் எனக்கு வேண்டாம். சீ போ!! என்று சொல்லி விடாதீர்கள்.
உங்களுக்கு ஆயிரம் பேர் கைங்கர்யம் செய்ய வருவார்கள். 
அதனால் நீ செய்ய வேண்டாம் என்று என்னை பார்த்து சொல்லிவிடலாம்.
ஆனால், எனக்கோ, நீங்கள் ஒருவரே தெய்வம்.

என்னை போன்றவர்கள் உங்களுக்கு ஆயிரம் பேர் கிடைத்து விடுவார்கள், ஆனால் உம்மை போன்ற தெய்வம் வேறு இல்லையே!!
உங்களுக்கு கைங்கர்யம் செய்யாமல் நான் எப்படி இருக்க முடியும்?

நீங்கள் பரம தயாளு என்று ஏன் சொல்கிறேன் தெரியுமா? 
ஆசையினால் "கைங்கர்யம் கொடு" என்று கேட்கிறேன்.
இதை நம்பி, நீங்களும் கைங்கர்யம் கொடுத்து விடுவீர்கள்.
ஆனால், வரதா!! நீங்கள் நினைப்பதை போல நான் திறமையானவனும் இல்லை. 
ஆதலால், ஆசையினால் வாங்கிய கைங்கர்யத்தையும் குறை சொல்லும் படியாக செய்து விடுவேன் என்ற பயமும் எனக்கு உண்டு.
ஆகையால், வரதா! 
நீங்கள் தயாளுவாக நான் செய்யும் தவறை மன்னித்து விடுங்கள்.

ஆனால் கைங்கர்யம் செய்யாமல் இருக்க மட்டும் என்னை விட்டு விடாதீர்கள்.

'உங்களுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும் என்ற புத்தி எனக்கு வராவிட்டால், அடித்து இழுத்தாவது எனக்கு கைங்கர்யத்தை கொடுங்கள்'.

‘அப்படியாவது உனக்கு கைங்கர்யம் கொடுக்க வேண்டும் என்று, எனக்கு என்ன அவசியம்?’ 
என்று ஒரு வேளை நீங்கள் கேட்க விரும்பினால்,
‘நீர் எனக்கு பிதா, நான் உங்கள் புத்திரன் என்ற உறவு உள்ளது என்ற உரிமையில் கேட்கிறேன்' என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சரி கைங்கர்யமே கதி என்று இருந்தால், உன் குடும்பம் என்னாவது?
உன் குடும்பத்தை யார் நடத்துவார்கள்?
என்று கேட்டால்,
அதற்கு, "இப்படி நீங்கள் கவலைப்பட்ட பின்பும் எனக்கு என்ன கவலை"
என்று இன்னும் தீவிரமாக கைங்கர்யம் செய்வேன்.

அஞானியாக உள்ள நானே என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றி கொள்ள முடியும் என்றால், பிதவான நீங்கள் என் குடும்பத்தை காப்பாற்றுவது ஒரு பெரிய காரியமோ?

எனக்கு நல்லது கெட்டது தெரியாது. உமக்கும் தெரியாமலா போய் விடும்.

பிதாவாகிய நீங்கள், கெட்ட விஷயங்களில் செல்லும் குழந்தையை தடுத்து, அடித்தாவது நல்ல விஷயங்களில் திருப்ப வேண்டாமோ?

உலக விஷயங்களுக்காக பிறர் காலில் விழுந்து, பிறரை நம்பிக்கொண்டு அலையும் என்னை பிடித்து இழுத்து என் காலில் விழு, எனக்கு தொண்டு செய் என்று சொல்ல வேண்டாமோ?
எனக்கு எது நல்லது?
உமக்கு கைங்கர்யம் செய்வது தானே எனக்கு நல்லது!!
எல்லாம் சரி, ஆனால் உன்னை திருத்த முடியாதே என்று மட்டும் சொல்லிவி டாதீர்கள்.
உங்களால் என்னை நல்லவனாக்க முடியாதா?

நான் தீய வழியில் சென்றாலும்!! 
கைங்கர்யமே வேண்டாம் என்று சொன்னாலும்!! 
பெருமாளே வேண்டாம் என்று நான் சென்றாலும்!! 
ஒரு தாய் வீம்பு செய்யும் குழந்தையை அடித்தாவது திருத்துவது போல, என்னை போகும் போக்கில் போக விடாமல், பலவந்தமாகவாவது அடித்து இழுத்தாவது உங்கள் அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.

நான் பிறந்திருக்கிறேன் என்பதாலேயே, இத்தனை நாள் வரை நான் மோக்ஷம் அடையவில்லை என்பது தெரிகிறது.
இதற்கு காரணம், நீங்கள் என்னை போகற போக்குக்கு விட்டதால் தானே?

எனக்கு ஏன் இப்படி சுதந்திரம் தருகிறீர்கள்?

இப்படியே இருக்க விட்டால், நாங்கள் உலக விஷயத்திலேயே உழன்று கொண்டே தான் இருப்போம்.
உமக்கு வைகுண்டதுக்கு வர ஒரு ஆள் கிடைக்காது.

வைகுண்டத்தை கூட விடுங்கள். வரதா!! அரச்சா திருமேனியுடன் நிற்கும் உனக்கு கைங்கர்யம் செய்ய கூட ஆள் கிடைக்காமல் போய் விடும்.




ஆதலால், எந்த காரணத்தை காட்டியும், கைங்கர்யம் கொடுக்க முடியாது என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.
அடித்து இழுத்தாவது உங்கள் பக்கம் இழுத்து எங்களுக்கு கைங்கர்யம் கொடுங்கள்"
என்று வரதனை கண்டு கைங்கர்யம் வேண்டும் என்று கதறுகிறார் கூரத்தாழ்வார்.
.

ஹனுமானை முதலில் கண்ட பொழுது, லக்ஷ்மணன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது, ராமரின் தம்பி என்று சொல்லிக்கொள்ளாமல், 
"இவருக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் ஒரு தாஸன், ஒரு அடிமை" 
என்றார்.



"எதற்காக ஸ்ரீ ராமரிடம் அடிமை ஆனீர்கள்?" என்று கேட்க,
லக்ஷ்மணன், 
"அவர் குணத்திற்கு அடிமையானேன்" 
என்றார்.

"அப்படி என்ன குணத்தை கண்டீர்கள்?" என்று கேட்க,
லக்ஷ்மணன், 
"என் தீய குணத்தையும் பொறுத்துக்கொண்டு, என்னை இன்னும் கூடவே வைத்துக் கொண்டு இருக்கிறாரே என்ற அவரின் உயர்ந்த குணத்தை கண்டு அடிமை ஆனேன்" 
என்று பதில் சொன்னார் லக்ஷ்மணன்.

பின்னர், ஒரு சமயம், ஹனுமானின் கைங்கர்யத்தை கண்டு 
"உமக்கு பதில் செய்ய முடியாதபடி கடனாளி ஆகிவிட்டேனே !!" 
என்று ஸ்ரீராமர் ஹனுமானை கட்டித் தழுவ, 

ஸ்ரீ ராமரை கண்ணீருடன் அஞ்சலி செய்து, 
"உங்களுக்கு என்னை போல ஆயிரம் ஹனுமான் கிடைத்து விடுவார். 
ஆனால், உம்மை போன்ற தெய்வம் கிடைக்குமா? 
நான் செய்த கைங்கர்யம் உங்கள் குணத்திற்கு முன்னால் எம்மாத்திரம்? 
எனக்கு உங்கள் கைங்கர்யமே எப்பொழுதும் கிடைக்க அருள் செய்யுங்கள்" 
என்று கைங்கர்யமே தன் குறிக்கோளாக இருந்த ஹனுமான் சொன்னார். 

அர்ச்ச அவதாரத்துடன் பாரத தேசம் முழுதும் 'கோவிலிலும், வீட்டிலும்' வீற்றிருக்கும் பகவான், 
நம்மிடம் எதிர்பார்ப்பது, நம்மால் முடிந்த கைங்கர்யமே. 




கைங்கர்யத்தின் பலனாக மோக்ஷத்தை தர காத்து கொண்டு இருக்கிறார் நம் பெருமாள். 

நாம் சாப்பிடும் உணவில், தினமும் ஒரு கைப்பிடி அரிசியாவது அருகில் தீபம் கூட ஏற்றாமல் இருக்கும் கோவிலில் சென்று கொடுக்கலாமே!!

தன் வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது, அருகில் உள்ள கோவிலுக்கு சென்று ஒரு தீபம் ஏற்றலாமே!!.

"சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பு இது"
என்று உணர்ந்தால், "நமக்காக தான் அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார்" என்பது புரியும். 

'நாம் செய்யும் மிக சாதாரணமான சேவையையும் ஏற்பதற்கே' பெருமாள் அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார்.
இதை உணர்ந்தால்,
ஒரு உண்மையான பக்தனுக்கு, நன்றி உடையவனுக்கு, 'சேவை செய்யாமல் எப்படி இருக்க முடியும்'? 

இந்த "சேவை" உணர்வு, ஹிந்துக்களுக்கு வந்தாலே,
அரசாங்கமும் தேவை இல்லை, கோவில் நிர்வாகமும் தேவை இல்லை. அனைத்து கோவில்களிலும் தீபம் எரியும். 

வரதனிடம் நாம் கேட்க வேண்டிய வரமே, "நான் உனக்கு சேவை செய்யும் உணர்வை தா" என்பது தான். 
நமக்காக அல்லவோ அர்ச்ச அவதாராமாக நிற்கிறார் என்ற உணர்வு வந்தாலே போதும்.
நமக்கு சேவை செய்ய வேண்டும் என்ற புத்தி வந்து விடும். 
சக்கரவர்த்தியாக இருந்த 'அம்பரீஷன்',
தன் மனைவி கோவிலில் கூட்டி பெருக்க, தான் பெருமாளுக்கு தீவெட்டி பிடிப்பாரராம். 

அவர் மாளிகையில், அவருக்கு பணிவிடை செய்ய 100 வேலைக்காரர்கள் உண்டு. 
பின்பு ஏன் இப்படி தானே செய்கிறார்?

கோவிலை பெருக்க ஆள் போடலாமே? 
தீவெட்டி பிடிக்க ஆள் போடலாமே? என்றால், அம்பரீஷன் சொல்கிறார், "நான் இந்த தேசத்துக்கு சக்கரவர்த்தி, ஆனால் எம்பெருமானோ அகிலத்துக்கும் சக்கரவர்த்தி ஆயிற்றே! 
அவர் அர்ச்ச அவதாரம் எடுத்து இருக்கும் போது, இந்த சந்தர்ப்பத்த்தில்  நானே சேவை செய்யாமல் எப்படி இருக்க முடியும்?. 

மேலும் நான் இந்த சேவையை என் வேலைகாரனிடம் கொடுத்து செய்ய சொன்னால், அது 'புண்ணியமாகிவிடும்'. 
நானே செய்தால்,பெருமாளுக்கு நான் செய்யும் 'சேவையாகி விடும்'. மோக்ஷத்திற்கு வழி செய்யும். நான் அதையே விரும்புகிறேன்." 
என்கிறார். 

சேவை யாருக்கு செய்கிறோம்? என்று உணரும் போது தான், "ஆஹா!! நமக்கு கிடைத்தது வாய்ப்பு இது" என்று சேவை நாமே செய்ய தோன்றும். 

நம்மால் முடிந்த அளவு சிறிது அரிசி, பூ, தீபம் ஏற்றினால் கூட, அர்ச்ச அவதாரமாக இருக்கும் பகவான் நம் சேவையை பரிபூரணமாக ஏற்று, அணுகிரஹிக்கிறான். 
வீட்டில் இருக்கும் குட்டி கிருஷ்ண விக்ரஹமும், நாம் எந்த அளவு சேவை செய்ய ஆசையோடு இருக்கிறோம்? என்று தான் காத்துக் கொண்டு இருக்கிறார்.




நாம் பூஜை செய்யாமல், அழுக்காக விக்ரஹ ரூபத்தில் உள்ள தெய்வங்களை அவமதித்தாலும், என்றாவது ஒரு நாள் இவன் நமக்கு சேவை செய்வானா? 
இவனுக்கு அதன் பலனாக மோக்ஷமும் கொடுத்து விடலாமா? என்று நமக்காகவே நம் வீட்டிலும், கோவிலிலும் அர்ச்சா திருமேனியுடன் நாம் செய்யும் அபச்சாரங்களை சகித்துக்கொண்டு, என்று காத்துக்கொண்டு இருக்கிறார். 

பெருமாளின் சேவையே பக்தி. பெருமாளின் சேவையே மோக்ஷத்திற்கு வழி. 

வாழ்க ஹிந்துக்கள்... வாழ்க நம் தெய்வ தொண்டு.