Followers

Search Here...

Wednesday 27 December 2017

மஹா பாரத சமயத்தில், ஈரான் முதல் கிரீஸ் வரை : (Iran, Greece and beyond)


மஹா பாரத சமயத்தில்,
ஈரான் முதல் கிரீஸ் வரை : (Iran, Greece and beyond)

மஹா பாரத சமயத்தில், ஈரான் வரை பாரத தேசமாக இருந்தது.

ஈரான் நாட்டை தாண்டி இருக்கும் தேசங்களில் கிரேக்கர்களை "யவனர்கள்" என்று அழைத்தனர். இவர்களை மிலேச்சர்கள் என்று அறியப்படுகின்றனர்.

இன்றைய ஈரான் நாடு, மஹாபாரத சமயத்தில், காம்போஜ தேசம், பஹ்லவ தேசம், சாக தேசம் என்று 3 தேசங்களாக அழைக்கப்பட்டது.

பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் போனற தேசங்கள், ரமத தேசம் என்று அழைக்கப்பட்டது.

பஹ்லவ தேச அரசர்கள், யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டனர்.

வேத மார்க்கத்தை விட்டு, மது, மாமிசம் என்று வாழ்க்கை முறை இந்த அனைத்து தேசங்களிலும் பரவி இருந்தது. பொதுவாக இந்த தேசத்தவர்கள் யாவரையும் மிலேச்சர்கள் என்று அறியப்பட்டனர்.


சிறந்த க்ஷத்ரியர்களாக இருந்த இவர்கள், இந்த காலத்தில் மலேச்சர்களாகி இருந்தனர்.
வேதங்கள் ஓதும் வேதியர்கள் இங்கு வாழ மறுத்தனர்.

இந்த காம்போஜ தேச அரசன் "சுதிக்ஷ்ணன்" துரியோதனனின் பக்கம் நின்று போரிட்டான்.

சாக தேசம், காம்போஜ தேசம், பஹ்லவ தேச படைகள், க்ருபாச்சாரியார் தலைமையில் போர் புரிந்தனர்.

சிவபெருமான் வழிபாடு அதிகம் இருந்த தேசமாக இருந்தது சாக தேசம். பின்னர் மிலேச்சர்கள் ஆகினர்.

யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்கு திக்விஜயமாக வந்த பீமன், சாக தேச அரசர்களை பீமன் போர் செய்து அடக்கினான்.

சாகர்கள் யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொள்ள வந்தனர். கொண்டு வந்த பரிசுகளை கொடுக்க மாளிகையின் வாசல் வரை சென்று வரிசையில் நிற்க வேண்டி இருந்தது. இவர்களுக்கு முன்னால் சீன தேசத்தவர்கள், வ்ருஷ்ணி என்ற யாதவ குலத்தை சேர்ந்தவர்கள் மேலும் பலர் முன் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

சாக படைகள், காம்போஜ தேச அரசன் "சுதிக்ஷ்ணன்" தலைமையில் போரிட்டனர்.

மஹா பாரத போரில், துரியோதனன் பக்கம் நின்று கடும் போர் புரிந்தனர் ரமத தேச, காம்போஜ தேச, பஹ்லவ தேச, சாக தேச, யவன தேச படைகள். அனைவரையும் அர்ஜுனன் ஒருவனே கொன்று குவித்தான்.

பாரத மண்ணில், காம்போஜ தேசத்தை தான் முதன் முதலில் பிற்காலத்தில் 3000 வருடத்திற்கு பிறகு வந்த கிரேக்க அரசன் அலெக்சாண்டர் கைப்பற்றினான். இதே ஊரில் பாபிலோன் என்ற இடத்தில், உயிர் விட்டான்.

மஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதேசம் : Kashmir, himalayas


மஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதேசம் : Kashmir, himalayas

காஷ்மீர தேசம், தாரத தேசம், தர்வபிஸார தேசம், லடாக் தேசம் என்று அறியப்பட்டது.

புலிந்த தேசம் என்பது ஹிமாலயா என்று அறியப்பட்டது. புலிந்த தேசத்தவர்கள், இமாலயம் முதல் அஸ்ஸாம் வரை படர்ந்து இருந்தனர்.

பாண்டவர்களை அரக்கு மாளிகையில் வைத்து கொலை செய்ய நினைத்த துரியோதனனிடம் இருந்து தப்பித்து சில காலம் மறைந்து வாழ்ந்தனர். இந்த சமயத்தில் புலிந்த தேசம் அடைந்து அங்குள்ள மணலி (manali) என்ற தேசத்தை அடைந்தனர். குளு மணாலி என்று சுற்றுலா செல்லும் இடமாக இன்று உள்ளது.

அங்கு இடும்பன், இடும்பி என்ற அரக்கர்கள் மனித மாமிசம் சாப்பிட்டு அங்கிருந்தவர்களை பயமுறித்திக்கொண்டிருந்தான்.

இடும்பனை பீமன் கொன்றான்.
தன் சகோதரனை கொன்றாலும், பீமனின் பலத்தை கண்டு ஆச்சரியப்பட்டு, பீமனை மணக்க ஆசைப்பட்டாள். குந்தி தேவி அனுமதி கொடுக்க பீமன் அவளை மணந்தான். இவர்களுக்கு கடோத்கஜன் என்ற மகன் பிறந்தான்.



பாண்டவர்கள் பதரிநாத் (உத்திர பிரதேசம்) நகரில் இருந்து, கடினமான இமாலயத்தை கடந்தனர். அப்பொழுது அங்கு இருந்த சீன தேசத்தை கண்டனர். அங்கிருந்து மேலும் பயணம் கொண்ட பாண்டவர்கள், இறுதியில், புலிந்த தேசத்தை (இமாலய தேசம்) மீண்டும் வந்து அடைந்தனர்.

13 வருடம் வனவாசம் செய்த இந்த சமயத்தில் தான், புலிந்த தேசத்தில், பீமன் ஹனுமானை தரிசித்தார்.

தாரத தேச அரசர்கள் க்ஷத்ரியர்கள். அங்கு இருந்த அரசர்கள் வேத கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பிராம்மணர்களை மதிக்காமல், வேத மார்க்க ஒழுக்கத்தில் இருந்தும் மீறி வாழ்க்கை நடத்தினர். இதனால், தாரத தேசத்தை மிலேச்ச பூமி என்றும், இவர்கள் வாலிகர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

காஷ்மீர தேசத்தில் விதஸ்தா என்ற நதி ஓடிக்கொண்டு உள்ளது. (இன்று இந்த நதி ஜீலம் நதி என்று பாகிஸ்தான் பகுதி காஷ்மீரில் உள்ளது).
இந்த நதியின் நீர் மிகவும் தூய்மையானாதாக இருந்தது என்று மஹா பாரதத்தில் உள்ளது. இந்த விதஸ்தா நதி, கடைசியில் சிந்து நதியில் கலக்கிறது என்று உள்ளது.

லடாக் தேசத்தவர்கள் மிலேச்சர்களாக இருந்தனர்.

யுதிஷ்டிரரின் ராஜசுய யாகம் நடத்த வேண்டி, அர்ஜுனன் வடக்கு நோக்கி படை எடுத்து, அனைவரையும் தோற்கடித்தான்.
காஷ்மீர தேச அரசர்கள், யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டனர்.

தாரத தேசத்தவர்கள் மஹா பாரத போரில், 'யவன'ர்களோடும் (ஆப்கான் நாட்டை தாண்டி, இருக்கும் வடக்கு தேசத்தவர்கள்), தர்வபிஸார தேச அரசர்களுடனும் சேர்ந்து, துரியோதனன் பக்கம் நின்று படு வலிமையுடன் போர் புரிந்தனர்.

லடாக் தேசத்தவர்கள் மஹா பாரத போரில், பாண்டவர்களோடு நின்று போர் புரிந்தனர். யுதிஷ்டிரரை காக்கும் பணியில் இருந்த "த்ருஷ்டத்யும்னன்" இருந்தான். த்ருஷ்டத்யும்னன் படையில், லடாக் தேச படையினர் அணிவகுத்தனர்.



மஹா பாரத போரில், 13ஆம் நாள் யுத்தத்தில், அபிமன்யு பல பேரால் சேர்ந்து போர் நியதிக்கு எதிராக கொன்றனர்.
14ஆம் நாள் யுத்தம் எல்லா நியதியையும் மீறியது. சூரியன் மறைந்தும் போர் தொடர்ந்தது.
கடோத்கஜன் பலம் அதிகரிக்க, பல போர் வீரர்களை அடித்து கொன்றான். இவனை எதிர்க்க துரியோதனன் யாரும் அஞ்சினர்.

இதனால், கர்ணன் அர்ஜுனனுக்காக இந்திர தேவனிடம் வரமாக வைத்து இருந்த சக்தி ஆயுதத்தை கடோத்கஜன் மீது விட்டான். கடோத்கஜன் அடிபட்டு, கீழே விழும் போது, பீமன் வீர மரணம் அடையப்போகும் தன் மகனை பார்த்து, தன் உருவத்தை பெரிதாக்கி துரியோதனன் படை நோக்கி கீழே விழுமாறு சொல்ல, தந்தை சொல்லை இறுதி சமயத்திலும் கேட்டு, அதே போல செய்து, வீர மரணம் அடைந்தான்.

ஜம்மு (JAMMU) என்ற பெயர் யாரை கொண்டு ஏற்பட்டது? தெரிந்து கொள்ள... http://www.proudhindudharma.com/2018/06/jammu.html படிக்கவும்