திருமங்கை ஆழ்வார் "அர்ச்சா திருமேனியையே" பெருமாளின் அவதாரமாக அனுபவித்தார்.
பாசுரம் : (ஊரகம் - உலகளந்த பெருமாளுக்கு மங்களாசாசனம்)
'தன்னுடைய ப்ரியனுடைய பெயரையெல்லாம் இந்த கிளிக்கு சொல்லி தந்து, தான் கேட்க வேண்டும்' என்று ஆசைப்பட்டாளாம் இந்த பரகால நாயகி.
தன் கிளியையே தன் சத்சங்கமாக ஆக்கி கொண்டாளாம்.
அந்த ஆசையில், தான் வளர்த்த கிளிக்கு தன் ப்ரியனை பற்றி சொல்லி தருகிறாள்.
இந்த உலகளந்த பெருமாள், விபவ அவதாரம் செய்த போது, 'பிருந்தாவனத்தையே அழிக்கிறேன்' என்று ஒரு சமயம் இந்திர தேவன் கோபப்பட்டு, பிரளய காலத்தில் பொழியக்கூடிய கல் போன்ற மழையை (கல்மாரி) கொட்டியும்,
தன் சுண்டு விரலில் கோவர்த்தனம் என்ற மலையை 7 வயதில் எடுத்து (கல்லெடுத்து) பிருந்தாவனத்தையும், யாதவ ஜனங்களையும் காத்த கிருஷ்ண பரமாத்மா இவர் என்று பலத்தை சொல்லி தர,
(கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும்)
அனைவரும் விரும்பும் அழகிய கச்சியில் (காஞ்சீபுரத்தில்), அமைந்துள்ள திருவூரகத்தில் வீற்று இருக்கும் உலகளந்த பெருமாள், அகில உலகுக்கே அதிபதி என்று சொல்லி தர,
(காமரு பூங்கச்சி ஊரகத்தாய் என்றும்)
விபவ அவதாரம் செய்த போது, யாரும் அசைக்க முடியாத சிவ தனுஷை முறித்து (வில்லிறுத்து), மஹாலக்ஷ்மியான சீதையை கைபிடித்து மணந்து கொண்ட ராமபிரான் இவர் என்று பராக்ரமத்தை சொல்லி தர,
(வில்லிறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தாய் என்றும்)
இதே காஞ்சியில் உள்ள வெஃகாவில், சொன்ன வண்ணம் செய்த பெருமாளாக சயனித்து இருக்கும் பெருமாள் இவர் என்று திவ்ய தேச பெருமையை சொல்லி தர,!
(வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே என்றும்)
முஷ்டீகன், சாணூரன் என்ற இரு மல்லர்களின் வலிமையை அடக்கி, ஒழித்த கண்ணனும் இவர் தான், என்று சொல்லி தர!
(மல்லடர்த்து மல்லரையன்று அட்டாய் என்றும்)
குதிரை போன்ற வடிவத்தில் வந்த கேசி என்ற அரக்கனை, தன் கையால் கிழித்து ஒழித்த என் மைந்தன் இவர் தான், என்று யசோதையாக தன்னை நினைத்து சொல்லி தர!
(மாகீண்ட கை தலத்து என் மைந்தா என்றும்)
இவையனைத்தையும் கவனமாக கேட்டு கொண்ட இவளுடைய கிளி, அப்படியே மனதில் வாங்கி கொண்டு விட்டதாம்..
அடுத்த நாள்,
பரகால நாயகியாக இருக்கும், திருமங்கையாழ்வார், அந்த கிளியை பார்த்து "கல்லெடுத்து..."
என்று முதல் சொல்லெடுத்து கொடுத்தவுடனேயே, கற்றுக்கொண்ட அவள் கிளி தானாகவே
"கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும் !..."
என்று திரும்ப சொல்வதை கேட்டு,
(சொல்லெடுத்துத் தன் கிளியை சொல்லே என்று)
பரகால நாயகி தன் நாயகனை நினைவில், ஆனந்தத்தில் கண்ணீர் பெருக்கி (துளிசோரச்), அவள் மார்பை நனைக்க, பெருமாளின் நினைவுடனேயே கண் அயர்ந்து நின்றாளாம்.
(துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே)
இப்படி பரகால நாயகியாக இருக்கும் திருமங்கை ஆழ்வார், பெருமாளின் நினைவில் தன்னை மறந்து நின்றார்.
'காதல் கொண்டு பெருமாளுடன் உறவு கொள்வது, பக்தியின் உச்சம்' என்று சொல்லப்படுகிறது.
சாமானிய ஜனங்கள் இது போன்ற ஆழ்வார்களின் அனுபவத்தை, தாங்கள் அனுபவிக்கும் உலக காமத்துடன் ஒப்பிட்டு விடுவார்கள் என்பதாலேயே, பக்தியில் தகுதி இல்லாதவர்களுக்கு பாசுரங்களின் அர்த்தங்களை சொல்ல பயந்தனர்.
மூன்று பக்தி நிலைகள் என்ன? என்று தெரிந்து கொள்ள...
இங்கே படிக்கவும்.
பாசுரம் : (ஊரகம் - உலகளந்த பெருமாளுக்கு மங்களாசாசனம்)
கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும் !
காமரு பூங்கச்சி ஊரகத்தாய் என்றும்!
வில் அறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தாய் என்றும்!
வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே என்றும்!
மல்லடர்த்து மல்லரையன்று அட்டாய் என்றும்!
மாகீண்ட கை தலத்து என் மைந்தா என்றும்!
சொல்லெடுத்துத் தன் கிளியை சொல்லே என்று
துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே
-- திருநெடுந்தாண்டகம் (திருமங்கையாழ்வார்)
திருமங்கையாழ்வார், தன்னை ஒரு பெண்ணாக (பரகால நாயகியாக) பாவித்து, 'உலகளந்த பெருமாளை' தன்னுடைய பிரியனாக (நாயகனாக) பார்க்கிறார்.
தன் நாயகனின் பெருமைகளை, குணங்களை,
தன் நாயகன் இருக்கும் திவ்ய தேசங்களை பற்றி, யாரிடமாவது சொல்லி கொண்டே இருக்க வேண்டும்,
பிறர் தன் நாயகனை பற்றி சொல்ல கேட்க வேண்டும்
என்று சத்சங்கத்திற்கு ஆசைப்பட்ட இந்த பரகால நாயகி,
"ஒரு கிளியை வளர்த்து விட்டால், அதற்கு பெருமாளை பற்றி சொல்லி தரலாமே" என்று நினைத்தாளாம்.
இந்த பரகால நாயகி, ஒரு அறிவில்லா கிளி ஒன்றை வளர்த்து வந்தாளாம்.'தன்னுடைய ப்ரியனுடைய பெயரையெல்லாம் இந்த கிளிக்கு சொல்லி தந்து, தான் கேட்க வேண்டும்' என்று ஆசைப்பட்டாளாம் இந்த பரகால நாயகி.