Followers

Search Here...

Showing posts with label HOLOCAUST. Show all posts
Showing posts with label HOLOCAUST. Show all posts

Sunday 27 June 2021

சீதையின் பெருமை.. கோவிலில், தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்? வால்மீகி ராமாயணம்

கோவிலில், தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்? வால்மீகி ராமாயணம்

"14 வருடங்கள் தண்டக வனத்தில் வாழ வேண்டும்" என்று கைகேயி வரமாக தசரதரிடம் கேட்டு கொண்டதால், ராமபிரான் சித்ர கூடத்தில் பரதனை பார்த்து தன் பாதுகையை கொடுத்து சமாதானம் செய்து, அயோத்திக்கு திருப்பி அனுப்பிய பிறகு தண்டக வனத்தில் பிரவேசித்தார்.


அங்கு சரபங்க முனிவரை தரிசித்தார். 

ராமபிரானை தரிசித்த பிறகு,  சரபங்க ரிஷி தன் உடலை அக்னியில் விட்டு விட்டு, ப்ரம்ம லோகம் சென்று விட்டார்.


சரபங்கர் சொன்னபடி, சுதீக்ஷன ரிஷியை பார்க்க பல வனங்கள், மலைகள் கடந்து வந்து கொண்டிருந்தார் ராமபிரான். கூடவே லக்ஷ்மணரும், சீதா தேவியும் வந்து கொண்டிருந்தனர்.

வரும் வழிகளில், பல ரிஷிகள் தவத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சில ரிஷிகள் ராமபிரானை பார்த்து, தங்களுக்கு நேரும் அபாயத்தை பற்றி விவரித்து, ராமபிரானிடம் அபயம் கேட்டனர். 





स: अयं ब्राह्मण भूयिष्ठो 

वानप्रस्थ गणो महान् |

त्वन्नाथ: अनाथवद् राम 

राक्षसै: वध्यते भृशम् ||

- वाल्मीकि रामायण

ஸ: அயம் ப்ராஹ்மண பூயிஷ்டோ

வான ப்ரஸ்த கணோ மஹான் |

த்வன்நாத: அனாதவத் ராம

ராக்ஷஸை: வத்யதே ப்ருஸம் ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! We are a group of great sages, mostly brahmins, leading a vanaprastha life. Yet with a protector like you, we are slaughtered in large numbers like orphans by rakshasas.

ராமா ! நாங்கள் பெரும்பாலும் வானப்ரஸ்தம் ஏற்ற ப்ராம்மணர்கள். உங்களை போன்ற பாதுகாவலர் இருந்தும், இங்கு ராக்ஷஸர்களால் அனாதைகள் போல நாங்கள் குவியல் குவியலாக கொல்லப்படுகிறோம்.


एहि पश्य शरीराणि 

मुनीनां भावित आत्मनाम् |

हतानां राक्षसै र्घोरै: 

बहूनां बहुधा वने ||

- वाल्मीकि रामायण

யேஹி பஸ்ய சரீராணி

முனீனாம் பாவித ஆத்மநாம் |

ஹதானாம் ராக்ஷஸை கோரை: 

பஹுனாம் பஹுதா வனே ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! Come and see the huge number of dead bodies, who had perceived the Supreme Spirit, killed in large numbers in the forest by the fierce rakshasa.This is a veritable Holocaust.

ராமா ! இதோ பாருங்கள்.. இங்கு குவியலாக கிடக்கும் எலும்பு குவியலை. நர மாமிசம் உண்ணும் ராக்ஷஸர்கள், தவம் செய்து கொண்டிருக்கும் ரிஷிகளை விழுங்கி துப்பிய எலும்புகள் இவை. 


पम्पा नदी निवासानाम् 

अनु-मन्दाकिनीम् अपि |

चित्रकूट आलयानां च 

क्रियते कदनं महत् ||

- वाल्मीकि रामायण

பம்பா நதீ நிவாஸானாம்

அனு-மந்தாகினீம் அபி |

சித்ரகூட ஆலயானாம் ச

க்ரியதே கதனம் மஹத் ||

- வால்மீகி ராமாயணம்

O Rama ! A great slaughter is taking place amongst those residing on the bank of the Pampa lake, near the river Mandakini, and on mount Chitrakuta.

ராமா! பம்பா நதிக்கரையில், மந்தாகினி ஓடும் நதிக்கரையில், சித்ரகூட சமீபத்தில் வசிக்கும் அனைவரையும் கொத்து கொத்தாக கொன்று குவிக்கிறார்கள் ராக்ஷஸர்கள்.


एवं वयं न मृष्यामो 

विप्रकारं तपस्विनाम् |

क्रियमाणं वने घोरं 

रक्षोभि: भीम कर्मभिः ||

- वाल्मीकि रामायण

ஏவம் வயம் ந ம்ருஷ்யாமோ

விப்ரகாரம் தபஸ்வினாம் |

க்ரியமானம் வனே கோரம்

ரக்ஷோபி: பீம கர்மபி: ||

- வால்மீகி ராமாயணம்

We are not able to tolerate the fearful deeds perpetrated by the dreadful rakshasas in the forest.

ராமா! ராக்ஷஸர்கள் செய்யும் இந்த பெரும் நாசத்தை, எங்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. 





तत: त्वां शरणार्थं च 

शरण्यं सम उपस्थिताः |

परिपालय नो राम 

वध्यमानान् निशाचरैः ||

- वाल्मीकि रामायण

தத: த்வாம் சரணார்தம் ச

சரண்யம் ஸம உபஸ்திதா: |

பரிபாலய நோ ராம

வத்யமானான் நிஸாசரை: ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! you are worthy of refuge. Hence we have come to you seeking your protection. We are being killed by the night stalkers. Save us.

நீங்கள் அடைக்கலம் கொடுப்பதற்கு தகுதியானவர். எனவே உங்கள் பாதுகாப்பை நாடி நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸர்களால் நாங்கள் கொல்லப்படுகிறோம். எங்களை காப்பாற்றுங்கள்.


परा त्वत्तो गतिर्वीर 

पृथिव्यां न: उपपद्यते |

परिपालय न सर्वान् 

राक्षसेभ्यो नृप आत्मज ||

- वाल्मीकि रामायण

பரா த்வத்தோ கதி வீர

ப்ருதிவ்யாம் ந: உபபத்யதே |

பரிபாலய ந சர்வான்

ராக்ஷஸேப்யோ ந்ருப ஆத்மஜ ||

- வால்மீகி ராமாயணம்

O great warrior ! Here on this earth, there is no protector as mighty as you. So, O prince ! Save us all from these demons raakshas.

பராக்ரமசாலியே ! ராமா ! இந்த உலகில் உங்களை போன்ற வலிமையான ரக்ஷகன் இல்லவே இல்லை. நீங்கள் எங்கள் அனைவரையும் இந்த ராக்ஷஸர்களிடமிருந்து ரக்ஷிக்க வேண்டும். 


एतत् श्रुत्वातु काकुत्स्थ: 

तापसानां तपस्विनाम् |

इदं प्रोवाच धर्मात्मा 

सर्वान् एव तपस्विनः ||

- वाल्मीकि रामायण

ஏதத் ஸ்ருத்வாது காகுத்ஸ்த:

தாபஸானாம் தபஸ்வினாம் |

இதம் ப்ரோவாச தர்மாத்மா

சர்வான் ஏவ தபஸ்வின: ||

- வால்மீகி ராமாயணம்

Having heard this, righteous Rama of the Kakutstha dynasty said to all the ascetics engaged in penance.

இவ்வாறு தவ ரிஷிகளின் சொல்ல, தர்மத்தில் இருப்பவர்களை காக்கும் காகுஸ்தனான ராமபிரான் கம்பீரமாக பேசலானார்.. 


नैवम् अर्हथ मां वक्तुम् 

आज्ञाप्य अहं तपस्विनाम् |

केवलेन् आत्म कार्येण 

प्रवेष्टव्यं मया वनं ||

- वाल्मीकि रामायण

நைவம் அர்ஹத மாம் வக்தும்

ஆஞாப்ய அஹம் தபஸ்வினாம் |

கேவலேன ஆத்ம கார்யேன

ப்ரவேஷ்டவ்யம் மயா வனம் ||

- வால்மீகி ராமாயணம்

You should not speak to me this way. I deserve to be commanded to do this task. I am at your service. I came to the forest only for my work.

ரிஷிகளான தாங்கள் இவ்வாறு என்னிடம் கேட்பது கூடாது. எனக்கு நீங்கள் ஆணை இட வேண்டும். நீங்கள் இட்ட ஆணையை செயல்படுத்தும் சேவகன் நான். நான் என்னுடைய கடமையை செய்யவே வனத்திற்கு வந்தேன்.


विप्रकारम् अपाक्रष्टुं 

राक्षसै:  भवताम् इमम् |

पितु: तु निर्देश-करः 

प्रविष्ट: अहमिदं वनम् ||

- वाल्मीकि रामायण

விப்ரகாரம் அபாக்ரஷ்டும்

ராக்ஷஸை: பவதாம் இமம் |

பிது: து நிர்தேச கர:

ப்ரவிஷ்ட: அஹம் இதம் வனம் ||

- வால்மீகி ராமாயணம்

I came into this forest in obedience to my father's orders to repel the aggression of demons against you.

என் தந்தையின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து இந்த காட்டிற்கு வந்த நான், உங்களுக்கு தொந்தரவு செய்யும் இந்த ராக்ஷஸர்களை தடுப்பேன்.


भवताम् अर्थ सिद्ध्यर्थम् 

आगत: अहं यदृच्छया |

तस्य मे अयं वने 

वासो भविष्यति महाफलः ||

- वाल्मीकि रामायण

பவதாம் அர்த சித்தார்தம்

ஆகத: அஹம் யத்ருச்சயா |

தஸ்ய மே அயம் வனே

வாஸோ பவிஷ்யதி மஹாபல: ||

- வால்மீகி ராமாயணம்

But by good fortune, I have got a chance to accomplish your mission. Therefore, My forest life shall become greatly fruitful by this.

அதிர்ஷ்டத்தால், உங்களுக்கு சேவை செய்ய, எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களுக்கு சேவை செய்வதால் என் வனவாசம் பலன் பெற்றது.




तपस्विनां रणे शत्रून् 

हन्तुम् इच्छामि राक्षसान् |

पश्यन्तु वीर्यम् ऋषय: 

सभ्रातु: मे तपोधनाः ||

- वाल्मीकि रामायण

தபஸ்வினாம் ரணே சத்ரூன்

ஹந்தும் இச்சாமி ராக்ஷஸான் |

பஸ்யந்து வீர்யம் ருஷய:

ஸ-ப்ராது: மே தபோதன: ||

- வால்மீகி ராமாயணம்

I wish to kill those raakshasas who are your enemies. O great rishis !, you may witness my valor supported by my brother.

உங்களுக்கு எதிரியாக இருக்கும் அந்த ராக்ஷஸர்களை நான் ஒழிப்பேன். மஹாத்மாக்களான ரிஷிகளே! என் சகோதரனோடு நான் வெளிப்படுத்தும் வீரத்தை நீங்கள் காணப்போகிறீர்கள்.


दत्त्वा अभयं च अपि तपोधनानां 

धर्मे धृतात्मा सह लक्ष्मणेन।

तपोधनै: च अपि सभाज्यवृत्तः 

सुतीक्ष्णमेव अभिजगाम वीरः ||

- वाल्मीकि रामायण

தத்வா அபயம் ச அபி தபோதனானாம்

தர்மே த்ருதாத்மா சஹ லக்ஷ்மணேன |

தபோதனை: ச அபி ஸபாஜ்ய வ்ருத்த:

சுதீக்ஷ்ண மேவ அபி-ஜகாம வீர: ||

- வால்மீகி ராமாயணம்

Brave Rama who is Steadfast in righteousness, worthy of honour, gave assurance to protect the rishis endowed with the wealth of penance, and proceeded towards sage Suteekshna.

சங்கல்பத்தில் உறுதியும், மரியாதைக்குரியவருமான துணிவுடைய ராமபிரான், தவமே செல்வமாக கொண்ட ரிஷிகளைப் பாதுகாப்பதாக உறுதியளித்தார். மேலும், சுதீக்ஷ்ண ரிஷியை நோக்கி தரிசிக்க முன்னேறினார்.


சுதீக்ஷ்ண ரிஷியை தரிசித்து, அவர் ஆசிரமத்தில் ஒரு இரவு தங்கி விட்டு, மேலும் தண்டக வனத்திற்குள் சஞ்சரிக்கலானார்.

குற்றங்களே கண்ணுக்கு தெரியாத, கருணையே உருவான சீதாதேவி... ராமபிரானிடம் சொல்கிறாள்...


त्रीण्येव व्यसनानि 

अत्र कामजानि भवन्ति उत |

मिथ्या वाक्यं परमकं 

तस्माद् गुरुतरौ उभौ ||

परदार अभिगमनं 

विना वैरं च रौद्रता ||

- वाल्मीकि रामायण

த்ரீன் ஏவ வ்யஸனானி

அத்ர காமஜானி பவந்தி உத |

மித்யா வாக்யம் பரமகம்

தஸ்மாத் குருதரௌ உபௌ ||

பரதார அபிகமனம் 

வினா வைரம் ச ரௌத்ரதா ||

- வால்மீகி ராமாயணம்

O Man of Truth! Three things born out of lust. 

speaking untruth, 

having sexual relation with others' wives and

resorting to violence with no enmity. 

The later two are worst than the 1st.

ஓருவனுக்கு திருப்தியே இல்லாத போது, மூன்று வகையான தீமைகள் பிறக்கின்றன. 

திருப்தியே இல்லாதவன், பொய் பேச துணிவான். 

திருப்தியே இல்லாதவன், பர தாரத்தை கூட அபகரிக்க நினைப்பான்.

திருப்தியே இல்லாதவன், தன்னிடம் பகை காட்டாதவனிடம் கூட வலிய சென்று பகையை காட்டுவான். 

பொய் சொல்வதை காட்டிலும், மற்ற இரண்டும் மிகவும் கொடியது.

मिथ्यावाक्यं न ते भूतं 

न भविष्यति राघव |

कुत: अभिलाषणं स्त्रीणां 

परेषां धर्म नाशनम् ||

- वाल्मीकि रामायण

மித்யா வாக்யம் ந தே பூதம்

ந பவிஷ்யதி ராகவ |

குத: அபிலாஷனம் ஸ்த்ரீணாம்

பரேஷாம் தர்ம நாஸனம் ||

- வால்மீகி ராமாயணம்

O Raghava! you never spoke untruth in the past nor you will speak in future. 

Also, you will never desire other man's wife both in past and future.

ராகவா! நீங்கள் அன்றும் இன்றும் என்றுமே சத்தியத்தை மீறுபவர் இல்லை. உங்களிடம் அஸத்தியம் கிடையவே கிடையாது. 

ராகவா! அதே போல, பிற தாரத்தின் மேல் ஆசை கொள்வதில்லை.


तव नास्ति मनुष्येन्द्र 

न च अभूत् ते कदाचन |

मनस्यपि तथा राम 

न च एतद् विद्यते क्वचित् ||

- वाल्मीकि रामायण

தவ நாஸ்தி மனுஷ்யேந்த்ர

ந ச அபூத் தே கதாசன |

மனஸ்யபி ததா ராம

ந ச ஏதத் வித்யதே க்வசித் ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! You hadn't desire for other women in the past. You havn't it now. Never does it exist even in your mind

ராகவா! பிறர் தாரத்தை அடையும் ஆசை உங்களுக்கு முன்பும் இருந்தது இல்லை.  இப்பொழுதும் இல்லை. உங்கள் மனதில் இந்த எண்ணமே இல்லை.


स्वदार-निरत: त्वं 

च नित्यमेव नृपात्मज |

धर्मिष्ठ: सत्य-सन्धश्च 

पितु र्निर्देश कारकः ||

- वाल्मीकि रामायण

ஸ்வதார நிரத: த்வம்

ச நித்யம் ஏவ ந்ருப ஆத்மஜ |

தர்மிஷ்ட: சத்ய சந்த: ச

பிது நிர்தேஸ காரக: ||

- வால்மீகி ராமாயணம்

O prince! you are always faithful to your wife. You are righteous, truthful and obedient to your father's orders.

ராகவா! நீங்கள் எப்பொழுதுமே உங்கள் பத்னிக்கு துரோகம் செய்யாதவராக இருக்கிறீர்கள். நீங்கள் தர்மத்தை அறிந்தவர், சத்தியத்தை மீறாதவர், தகப்பனார் ஆணையை மீறாதவர்.


सत्यसन्ध महाभाग 

श्रीमन् लक्ष्मण पूर्वज |

त्वयि धर्मश्च सत्यं च 

त्वयि सर्वं प्रतिष्ठितम् ||

- वाल्मीकि रामायण

சத்யசந்த மஹாபாக

ஸ்ரீமந் லக்ஷ்மண பூர்வஜ |

த்வயீ தர்ம: ச சத்யம் ச

த்வயி ஸர்வம் ப்ரதிஷ்டிதம் ||

- வால்மீகி ராமாயணம்

Rama! O Man of truth! O auspicious one! O brother of lakshmana! In you,  truth and righteousness are ever present.

ராகவா! சத்யசந்தரே! போற்றுதலுக்கு உரியவரே! லக்ஷ்மணனுக்கு சகோதரரே! உங்களிடம் எப்பொழுதும் தர்மமும், சத்தியமும் குடி கொண்டு இருக்கிறது.


तत् च सर्वं महाबाहो 

शक्यं धर्तुं जितेन्द्रियैः |

तव वश्येन्द्रिय त्वं 

च जानामि शुभ-दर्शन ||

- वाल्मीकि रामायण

தத் ச ஸர்வம் மஹாபாஹோ

சக்யம் தர்த்தும் ஜிதேந்த்ரியை: |

தவ வஸ்யேந்த்ரிய த்வம்

ச ஜானாமி சுப தர்சன ||

- வால்மீகி ராமாயணம்

Only those who restrain their senses can hold all these features. I know that you have control over your senses.

ராகவா! புலனடக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது போன்ற நற்குணங்கள் காணப்படும். நீங்கள் புலனடக்கம் உள்ளவர் என்பதை நான் அறிவேன்.





तृतीयं यदिदं रौद्रं 

पर-प्राणाभि हिंसनम् |

निर्वैरं क्रियते मोहात् 

तत् च ते समुपस्थितम् ||

- वाल्मीकि रामायण

த்ருதீயம் யதீதம் ரௌத்ரம்

பர- ப்ரானாபி ஹிம்ஸனம் |

நிர்வைரம் க்ரியதே மோஹாத் 

தத் ச தே சமுபஸ்திதம் ||

- வால்மீகி ராமாயணம்

But i find the 3rd blemish of harming others without any direct enmity in you.

ராகவா! உங்களிடம் பொய்யும் இல்லை, பெண்ணாசையும் இல்லை. ஆனால் 'உங்களிடம் நேரிடையாக பகை இல்லாதவர்களை தாக்கும்' மூன்றாவது குறை தெரிகிறதே!! 


प्रतिज्ञात: त्वया वीर 

दण्डकारण्य वासिनाम् |

ऋषीणां रक्षणार्थाय 

वध: संयति रक्षसाम् ||

- वाल्मीकि रामायण

ப்ரதிஞாத: த்வயா வீர

தண்டக ஆரண்ய வாஸினாம் |

ருஷீணாம் ரக்ஷண அர்தாய

வத: ஸம்யதி ரக்ஷஸாம் ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! You have promised the forest dwellers that you will kill the rakshasas in the battle, in order to protect the rishis, residing in the Dandaka forest.

ராகவா ! தண்டக வனத்தில் வசிக்கும் ரிஷிகளைப் பாதுகாப்பதற்காக, 'ராக்ஷஸைக் கொல்வேன்' என்று வனவாசிகளுக்கு வாக்குறுதி அளித்து விட்டீர்களே!


एत: निमित्तं च वनं 

दण्डका इति विश्रुतम् |

प्रस्थित: त्वं सह भ्रात्रा 

धृत बाण शरासनः ||

- वाल्मीकि रामायण

ஏத: நிமித்தம் ச வனம்

தண்டகா இதி விஸ்ருதம் |

ப்ரஸ்தித: த்வம் சஹ ப்ராத்ரா

த்ருத பாண சராஸந: ||

- வால்மீகி ராமாயணம்

Raghava ! It is very evident to see that you want to kill the rakshasas in dandaka forest and hence you have started entering dandaka forest with bow and arrows along with your brother.

ராகவா ! நீங்கள் தண்டக வனத்தில் ராக்ஷஸைக் கொல்ல விரும்புகிறீர்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது, இதன் காரணமாக தான், நீங்கள் உங்கள் சகோதரருடன் வில் மற்றும் அம்புகளுடன் தண்டக வனத்தில் நுழையத் தொடங்கியுள்ளீர்கள்.


ततस्त्वां प्रस्थितं दृष्ट्वा 

मम चिन्ताकुलं मनः |

त्वद् वृत्तं चिन्तयन्त्या वै 

भवेन् निश्श्रेयसं हितम् ||

- वाल्मीकि रामायण

தத: த்வாம் ப்ரஸ்திதம் த்ருஷ்டவா

மம சிந்தாகுலம் மன: |

த்வத் வ்ருத்தம் சிந்தயந்த்யா வை

பவேந் நிஸ் ஸ்ரேயஸம் ஹிதம் ||

- வால்மீகி ராமாயணம்

Raghava ! I am worried that this will bring you no good.

ராகவா! இந்த காரணத்தால் நான் பெரிதும் கவலை கொள்கிறேன். 'உங்கள் புகழுக்கு எந்த குறையும் ஏற்பட கூடாதே!' என்று கவலை கொள்கிறேன்,  என்றாள் சீதாதேவி.


பரமாத்மா தர்மத்தை காப்பவர்.

தர்மம் செய்பவர்களை காக்க, அவர்களை தொந்தரவு செய்பவர்களை, அதர்மம் செய்பவர்களை தண்டித்து விடுவார்.


தாயாருக்கு தாய் பாசமே மேலோங்கி இருக்கும். தன் பிள்ளைகளில் ஒரு பிள்ளை அதர்மமே செய்தாலும் பரிந்து பேசும் குணம் உடையவள்.


ராமபிரான், ரிஷிகளை அநியாயமாக கொன்று குவித்ததை பார்த்ததும், 'ராக்ஷஸர்களுக்கு தண்டனை தர வேண்டும்' என்று வாக்கு கொடுத்தார்.

ராக்ஷஸர்கள் கொன்று குவித்து எலும்பு குவியலை நேரில் பார்த்தும், 'ராக்ஷஸர்களை தண்டிக்க வேண்டுமா? அவர்களை திருத்தலாமே!' என்று நினைத்தாள் சீதாதேவி..

இந்த குணம் இந்த இடத்தில் மட்டுமல்ல, அசோகவனத்திலும் காணலாம்.

சீதாதேவியை பார்த்து, "உன் கண்ணை பிடுங்கட்டுமா? நர மாமிசமாக உன்னை வெட்டி சாப்பிட போகிறேன்" என்று 10 மாதங்கள் ராக்ஷஸிகள் சூழ்ந்து கொண்டு சித்ரவதை செய்தனர்.

போரில் ராவணன் கொல்லப்பட்ட பின், ஹனுமான் சீதாதேவியை அழைக்க வந்த போது, "உங்களை கொடுமையான சொற்களால் இத்தனை மாதங்கள் மிரட்டிய இந்த ராக்ஷஸிகளை துண்டு துண்டாக வெட்டட்டுமா? இவர்கள் கண்களை பிடுங்கி ஏறியட்டுமா?" என்று கேட்க, அப்பொழுதும் சீதாதேவி தன்னை சித்ரவதை செய்த ராக்ஷஸிகளுக்கு பரிந்து பேசி ஹனுமானை சமாதானம் செய்து விட்டாள்.


தர்மத்தை மீறி நடப்பவர்களை கண்டால், பெருமாளுக்கு பிடிக்காது. 

தகப்பன் நிலை, பெருமாளுக்கு.

'இவன் நல்ல பிள்ளையாக இல்லையே! தர்மம் சொன்னாலும் கேட்காமல், அதர்மம் செய்கிறானே!' என்று கோபப்படுவார்.


தாயாரோ, தனக்கே துரோகம் செய்தாலும், அதர்மமே செய்தாலும், "சொல்லி திருத்துங்கள்… தண்டிக்காதீர்கள்" என்று பரிந்து பேசுவாள்.

குற்றம் வெளிப்படையாக செய்தாலும், குற்றத்தை பார்க்காமல், சிபாரிசு செய்பவளாக தாயார் இருக்கிறாள்.


மஹாலக்ஷ்மியே சீதாதேவியாக அவதரித்து இருப்பதால், இந்த ஆச்சர்யமான குணம் வெளிப்பட்டது.


'எலும்பு குவியலாக ரிஷிகளை கொன்று குவித்த, ராக்ஷஸர்களை கொல்ல கூடாது' என்பதற்காக 'தன்னிடமே ஒரு குற்றம் இருப்பதாக சொல்லும்' தாயுள்ளம் கொண்ட சீதாதேவியை கண்டு மந்தாஹாசம் செய்தார் ராமபிரான்.

தாயாரின் குணம் இது என்று அறிந்த ராமபிரான், சீதாதேவியிடம், "தர்மத்தை காப்பது என் கடமை. நானாக ராக்ஷஸர்களை அனாவசியமாக கொல்ல நினைக்கவில்லை. 

ரிஷிகள் என்னிடம் வந்து காப்பாற்றுமாறு கேட்டார்கள். அவர்களை காக்கும் பொறுப்பு இருப்பதால், அவ்வாறு வாக்கு கொடுத்தேன். 

நீ எனக்கு எதுவும் ஆக கூடாதே! என்ற அக்கரையில் தான் இப்படி பேசினாய் என்று அறிவேன். 

வாக்கு கொடுத்து விட்டால், என்னால் மீறவே முடியாது" என்று சாமர்த்தியமாக பேசி, மந்தஹாசத்துடன் சீதாதேவி, லக்ஷ்மணருடன் மேலும் வனத்திற்குள் நடக்கலானார்.


"கோவிலில், முதலில் தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்?" என்பதற்கு இதுவே காரணம்.


நேரிடையாக பெருமாள் சந்நிதிக்குள் நாம் சென்றால், தகப்பனார் போல இருக்கும் பெருமாள், உடனேயே 'இந்த பிள்ளையின் நல்ல குணங்கள் என்ன? கெட்ட குணங்கள் என்ன? நல்ல செயல்கள் என்ன? கெட்ட செயல்கள் என்ன?' என்று கவனித்து விடுவார்.

நாமோ பெரும்பாலும் அதர்மம் செய்பவர்களே! 

பெருமாள் பெருமைப்படும் அளவுக்கு நம் செயல்கள் இல்லை.

நம்மை பார்த்தவுடனேயே, 

'இப்படி அதர்மம் செய்கிறானே! இவனை திருத்த, தண்டனை கொடுத்தால் என்ன?' என்று நினைப்பார்.

நாம் முதலில் தாயாரை பார்த்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க சென்றால், நாம் செல்வதற்கு முன்பேயே, 'நம் குழந்தை வந்து இருக்கிறான். அவனுக்கு அணுகிரஹம் மட்டுமே செய்யுங்கள்' என்று நமக்காக சிபாரிசு செய்து விடுவாள் தாயார்.

தாயாரை பார்த்து விட்டு, வரும் நம்மை, 'தவறு தெரிந்தாலும் எதுவும் சொல்லாமல், நாம் கேட்பதை எல்லாம் கிடைக்க செய்து' அணுகிரஹம் செய்து விடுவார் பெருமாள்.

சீதாதேவியின் பெருமை மகத்தானது... 

திருப்பதியில் பெருமாள் நெஞ்சிலேயே தாயார் இருப்பதால், தாயாருக்கு திருமலையில் தனி சந்நிதி இல்லை. 

நாம் திருமலையப்பனை பார்க்கும் போது, பெருமாள் நம்மை பார்க்கும் போது, தாயாரும் அவர் நெஞ்சிலிருந்து பார்த்து விடுகிறாள்.

பெருமாள் நெஞ்சிலேயே தாயார் இருப்பதால், திருப்பதியில் மட்டும் பெருமாள் 'யார் வந்தாலும் குற்றம் பார்க்காமல் அணுகிரஹம் மட்டுமே செய்கிறார்'.