Followers

Search Here...

Saturday 28 April 2018

தமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 80 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள்.



*'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் வந்து பார்'*, என்று பெருமைப்பட சொல்லும் மதுரைக்காரன், தன் ஆயுளில் மறக்க கூடாத சில பெயர்கள் உண்டு.
1. *அலாவுதீன் கில்ஜி*
2. அவன் படைத்தளபதி *மாலிக் காபுர்* என்ற *மாணிக்* (இஸ்லாமியனான ஹிந்து)
3. கில்ஜிக்கு பிறகு வந்த *முகமது பின் துக்ளக்*
4. மிக முக்கியமாக, *முகமது கியாசுத்தின்*
5. இன்றைய தேதியில் மதுரையில் மீனாட்சி திருக்கல்யாண தேர் ஒடுவதற்கும், ஹிந்துக்கள் இருக்கவும் காரணமான, தமிழ் தேசத்தை கர்நாடகத்தில் இருந்து வந்த விஜயநகர அரசர் *கம்பண்ணா*.

சுமார் 700 வருடங்களுக்கு முன், அலாவுதீன் கில்ஜியின் படை தளபதி "மாலிக் காபுர்" செருப்பு கால்களுடன், தன் ஒரு லட்ச இஸ்லாமிய படையுடன் நம் மீனாட்சி கோவிலில் புகுந்து, போலியாக வைத்திருந்த சிவ லிங்கத்தை இடித்து தள்ளி விட்டான்.

இன்றும் அந்த லிங்கம் 1311ல் நடந்த கதை சொலகிறது. போய் பார்க்கலாம்.

1311ADல் மீனாட்சி கோவில் மூடப்பட்டு, இனி ஹிந்துக்கள் தலை தூக்க முடியுமா? என்ற நிலையில் இருந்தது நம் மதுரை.

1340ல், டில்லியை ஆண்டு கொண்டிருந்த, "முகமது பின் துக்ளக்" ஆணைப்படி, மதுரை வாஜிராக இருந்த "ஜலாலுத்தின் ஹசன்"னிடம் வேலை செய்த "முகம்மது கியாசுதின்" என்பவன், ஜலாலுத்தின், மற்றும் அவன் மகன், மருமகன் அனைவரையும் கொன்று, தான் மதுரை சுல்தான் என்று ஆகி விட்டான்.

1340ல் ஆட்சி செய்ய ஆரம்பித்த *முகம்மது கியாசுதின்* மதுரை முதல் திருச்சி வரை பரவி இருந்த பாண்டிய தேசத்தில் இருந்த ஹிந்துக்களை வெட்டி தள்ளினான்.
1311 முதல் 1371 வரை, தமிழர்கள் எண்ணிப்பார்க்க முடியாத அழிவை சந்தித்தனர். பாண்டிய அரசாட்சி, சோழ அரசாட்சி போன்றவை அஸ்தமித்த காலம். உண்மையான தமிழர்கள் இருந்த காலம்.

சுமார் 60 வருட இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் எத்தனை கொடுமைகள்? என்று நாம் சிந்திக்கும் போதுதான்,
இரான் முதல் தெலுங்கு கன்னட தேசம் வரை 1000 வருடங்கள் இஸ்லாமியர்கள் புகுந்து என்ன அட்டகாசம் செய்து இருப்பார்கள்? என்று புரிந்து கொள்ள முடியும்.

ஏன் தமிழகத்தில் உள்ள கோவில்கள் போல மற்ற மாநிலங்களில் இல்லை? என்ற காரணமும் புரியும்.


60 வருடத்திலேயே தமிழகத்தை இத்தனை சேதப்படுத்த முடியும் என்றால், 1000 வருட ஆக்கிரமிப்பில் கோவில்கள் நிறைந்த இந்த பாரத பூமியை தரை மட்டம் ஆக்கி, இஸ்லாமிய நாடாக ஆக்க பெரும் முயற்சி செய்தனர் என்ற காரணமும் புரியும்.

1000 வருட ஆக்கிரமிப்பில், இரான், ஆப்கான், பாகிஸ்தான்,  பங்களாதேஷ் போன்ற பாரத தேசத்தில் இருந்த இடங்களை இஸ்லாமிய நாடாக மாற்றிவிட்டனர் என்பது வேதனைக்கு உரியது.

70 வருடத்தில் சிக்கிய தமிழகத்தை மேலும் அழிவில் வீழ்ந்து விடாமல், கும்பகோணம் போன்ற தேசங்களுக்குள் கால் பாதிக்க விடாமல் தடுத்தது யார்? தமிழனை காப்பாற்றியது யார்? 

மதுரை சுல்தானாக இருந்த "முகம்மது கியாசுதின்" (1340-1343) என்ன செய்தான்?
முகம்மது கியாசுதின் மதுரையை ஆண்ட காலத்தில், "இபின் படூடா" (ibn Battuda) தங்கி இருந்த போது,
மதுரையில் ஹிந்துக்கள் என்ன நிலைக்கு ஆகினர்? என்று விளக்கி இருக்கிறான்.

1.
மரங்கள் வெட்டப்பட்டு, அந்த இடங்களில், கைது செய்யப்பட்ட ஹிந்துக்கள், வரிசையாக நான்கு gate வழியாக அனுப்பப்பட்டு வரிசையாக தலை சீவபட்டார்கள்.
இவர்களோடு கைது செய்யப்பட்ட இவர்களின் மனைவிகளும் கொலை செய்யப்பட்டு, இவர்களின் தலை முடியை கொண்டு பிணங்களை இணைத்து கீழே போட்டனர்.
பால் குடிக்கும் குழந்தைகளை வெட்டி தூக்கி எறிந்தனர்.
இது போன்று, மறுபடியும் வேறொரு காட்டில் மரங்களை வெட்டி, அந்த இடங்களில் இதே போன்று ஹிந்துக்கள் கொத்து கொத்தாக தலை சீவப்பட்டனர்.

இது போன்ற கீழ் தரமான செயலை பார்த்ததில் நான் அவமானப் படுகிறேன். அப்படி ஒரு தண்டனைக்கான குற்றத்தை இந்த ஹிந்துக்கள் செய்யவில்லை. இந்த காரணத்தால் தானோ, கடவுள் (அல்லா) இவனின் ஆயுளை முடித்து விட்டானோ?

மேலும் இன்னொரு இடத்தில், "இபின் படூடா" (ibn Battuda) சொல்கிறான்
2.
ஒரு நாள், நானும், முகமது கியாசுதினும் உணவு உண்ணும் சமயத்தில், ஒரு ஹிந்துவை, அவன் மனைவி மற்றும் 7 வயது மதிக்க தக்க ஒரு சிறுவனை கைதியாக இழுத்து வந்தனர் காவலாளிகள்.
மதுரை சுல்தான் "முகமது கியாசுதின்" தன் கைகளை அசைத்து நின்று கொண்டிருந்த அந்த ஹிந்துவின் தலையை வெட்ட சைகை செய்தான். மேலும் காவலாளிகளை பார்த்து, அரேபிய மொழியில், 'அவன் மனைவியும், மகனையும் சேர்த்து' என்று சொன்னான்.
உடனே அந்த ஹிந்துவின் தலை வெட்டப்பட்டது. இதை பார்க்க கூடாது என்று நான் கண்ணை மூடிக்கொண்டேன். சிறிது நேரம் கழித்து பார்த்த போது 3 தலைகளும் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தது.

மேலும் இன்னொரு இடத்தில், "இபின் படூடா" (ibn Battuda) சொல்கிறான்
3.
இன்னொரு சமயம், நான் மதுரை சுல்தான் "முகமது கியாசுதினுடன்" இருந்த போது, ஒரு ஹிந்து இழுத்து வரப்பட்டான். அவன் மொழியில் ஏதோ பேசினான். எனக்கு புரியவில்லை. உடனே சுல்தானின் காவலாளிகள் தங்கள் ஈட்டிகளை அந்த ஹிந்துவை நோக்கி கொலை செய்ய சென்றார்கள்.
நான் ஏதோ அசம்பாவிதம் நடக்க போவதை உணர்ந்து வெளியே சென்று விட எழுந்தேன்.
என்னிடம் மதுரை சுல்தான், "எங்கே போகிறீர்கள், இபின் படூடா?" என்றான்.
நான், தொழுகைக்கு நேரம் ஆகி விட்டது. நான் சென்று விட்டு வருகிறேன்" என்று சொல்லி நகர்ந்து விட்டேன்.
என் காரணத்தை புரிந்து கொண்டு சிரித்து கொண்டே, அந்த ஹிந்துவின் கை மற்றும் காலை வெட்ட சொன்னான் சுல்தான். நான் சென்று, பிறகு வந்த போது, அந்த ஹிந்துவின் உடல் ரத்தத்தில் மிதந்து கொண்டு இருந்தது.


மேலும் இன்னொரு இடத்தில், "இபின் படூடா" (ibn Battuda) சொல்கிறான்
4.
நான் மதுரையை அடைந்த போது, தூக்கி வீசப்பட்ட பிணங்களால் உருவான, எங்கும் நோய் பரவி இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட ஹிந்துக்கள் அதிக பட்சம் 2 அல்லது 3 நாட்களில் இறந்தனர்.

நான் மதுரையை விட்டு செல்லும் போது, பொதுவாக அனைத்து ஹிந்துக்களும் நோய்வாய்ப்பட்டு இருந்தனர் அல்லது இறந்திருந்தனர்.


இப்படி 60 ஆண்டுகள் மதுரை சுல்தான் ஆட்சியில் அனுமானிக்க முடியாத துன்பத்தை நம் பாட்டனார்கள் அனுபவித்தனர்.

தமிழ் தேசத்தை கர்நாடகத்தில் இருந்து வந்த விஜயநகர அரசர் புக்கராயர்  மகன்"*கம்பண்ணா*" காப்பாற்றினார்.

தமிழனை கர்நாடகத்தில் இருந்து வந்த விஜயநகர பேரரசன் காப்பாற்றினான்.

1371ல் கம்பண்ணா மதுரை சுல்தானை விரட்டி, விஜயநகர சாம்ராஜ்யத்தை மீண்டும் நிறுவி, மூடிய கோவிலை திறந்து ஹிந்துக்கள் வாழ வழி வகுத்தார்.
அதே வருடம் மூடப்பட்டு இருந்த ஸ்ரீ ரங்ககோவிலும் திறக்கப்பட்டு, மீண்டும் ஹிந்துக்கள் தலை நிமிர்ந்தனர்.

இனி இஸ்லாமியர்கள் நுழையா வண்ணம், 1378ல் மதுரையை விஜயநகர பேரரசு கைப்பற்றி, இரண்டாம் ஹரிஹர அரசரால், ஹிந்துக்களை வாழ வைத்தது.
தமிழகம் 1000 வருட ஆக்கிரமிப்பில், பெரும்பாலும் விஜயநகர ஆட்சியின் பாதுகாப்பில் தப்பித்தது.
இந்த 60 ஆண்டு காலத்தில் கத்தி முனையில், கற்பழிப்பில் மதம் மாறி இஸ்லாமியர்களாக போனவர்கள் இன்றும் இஸ்லாமியர்களாகவே உள்ளனர் என்பது வேதனைக்குரியது.

கம்பண்ணாவின் மனைவி சொல்கிறாள்.
கம்பண்ணாவின் வெற்றியை "மதுரை விஜயம்" என்ற தொகுப்பில், அவர் மனைவி "கங்காதேவி" சொல்கிறாள்,
1.
மதுரை தேசத்திற்கு வந்த சோதனையை நினைத்து மனம் தாங்க முடியாத வேதனை அடைகிறது. பார்க்கும் இடமெல்லாம் வளர்ந்து இருந்த தென்னை மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு, அந்த இடங்களில் இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டு, ஹிந்துக்கள் தலைகள் சொருகப் பட்டு இருந்தன.
மேலும் சொல்கிறாள்
2.
மதுரை பெரு வீதிகளில் சுமங்கலியான பெண்களின் வளையல் சத்தமும், சிரிப்பும் நிறைந்த காலம் போய், இன்று கோவிலை காத்த வேத ப்ராம்மணர்களை தலையை பிடித்து இழுத்து சென்று இரும்பு சுவரில் மோதிய அலறல் சத்தமும், ரத்தமும் கிடக்கிறது.
மேலும் சொல்கிறாள்
3. தாமிரபரணி ஆற்றில் பெண்கள் சந்தனம் மற்றும் மஞ்சள் தேய்த்து குளித்து, சந்தன நறுமணத்துடன் மங்களமாக ஓடிய நதியில் இன்று மாட்டு இறைச்சி உண்ணும் இவர்களால், வெட்டப்பட்ட மாட்டின் ரத்தம், தாமிரபரணி ஆற்றை சிவப்பாக ஆக்கி இருந்தது.
மேலும் சொல்கிறாள்,
4. வீரமும், தைரியமும் உள்ள அரசரே !!
இனியும் தாமதம் செய்யாமல், மூன்று உலகத்திலும் சேர்த்து ஏற்படும் துன்பத்தை ஒரு சேர அனுபவிக்கும் நம் தேசத்து மக்களை காக்க, அந்த துஷ்டர்களை வேரோடு அழியுங்கள். வெற்றியின் அடையாளமாக 100 தூண்களை ராம சேதுவில் கட்டுங்கள்.

இப்படி வெற்றி முழக்கம் இட்டு, தெலுங்கு தேசத்தில் பிறந்து, கர்நாடக தேசத்தில் ஹம்பியை தலைநகராக கொண்ட விஜயநகர அரசன், ஹிந்துக்கள் தமிழ் நாட்டில் வாழ வைத்தான்.

மதுரைக்காரனும், பாண்டிய தேசத்தில் இருந்த அனைத்து மக்களும், ஹிந்துக்களாக இன்றும் இருக்க, ஒரு வீர ஹிந்து கர்நாடகத்தில் இருந்து தான் கிடைத்தான்.
நன்றி மறவாமல் இருப்போம்.









2 comments:

Premkumar M said...

தமிழ் நாட்டில் சில பெயர்களை நாம் எளிதில் மறக்க கூடாது.
தமிழகத்தை ஆண்டவர்கள் பாண்டிய, சோழ மன்னர்கள்.
இன்று இவர்கள் கட்டிய கோவில் கோபுரங்கள் மட்டுமே உள்ளது.
இவர்கள் ஆட்சி முடிந்த சமயத்தில், தமிழன் நிலை என்ன? தெரிந்து கொள்ள வேண்டாமா?

தமிழனை தமிழன் காப்பாற்றினானா? இல்லை வேறு மாநிலத்தில் இருந்து வந்த சகோதரன் காப்பாற்றினானா? தெரிந்து கொள்ள வேண்டாமா?

சரித்திரம் நமக்கு சொல்கிறது.

Share if worth reading....

www.proudhindudharma.com/2018/04/MaduraimohamedKhiasuddin.html

Nanda said...

1311ல் கில்ஜியின் நபும்சக அடிமையான மாலிக் காபூராலும், 1314ல் இன்னொரு அடிமையான குஸ்ரோ கானாலும், பிறகு 1323ல் உலூக் கான் என்ற மொஹமது பின் துக்ளகாலும், மதுரை மாநகரமும், மீனாக்ஷி அம்மன் திருக்கோவிலும் சூறையாடப்பட்டு, ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1343ல் கியாசுதினின் கொடுமைகளை கேட்டு படை எடுத்த வீர பள்ளாளன், வெற்றி கிடைத்த தருவாயில், கியாசுதினை வீடு திரும்ப மன்னித்து அனுமதித்தான். அதை பயன்படுத்தி கியாசுதின் அன்று இரவு திரும்பி வந்து நித்திரையில் இருந்த பள்ளாளனை சிறை பிடித்து ஏமாற்றி கொன்றான். காட்டுமிராண்டி துலுக்கனிடம் தர்மத்தை எதிர்பார்த்து, கில்ஜி மற்றும் துக்ளக்கையே ஆட்டி படைத்த வீர பள்ளாளன் அழிந்தான். அதோடு தமிழர் எதிர்காலமும் அழிந்தது. 1371ல் புக்கராயன் பிள்ளை கம்பண்ண உடையார் வந்து தமிழர்களை துலுக்கர்களிடம் இருந்து மீட்டு காத்தார்.