Followers

Search Here...

Friday, 6 March 2020

நமஸ்காரம், சரணம் (சரணாகதி) - இரண்டுக்கும் என்ன வித்யாசம்? தெரிந்து கொள்ள வேண்டாமா ஹிந்துக்கள்?...

நமஸ்காரத்துக்கும் (கும்பிடுதல்), சரணாகதிக்கும் (சரணம்) உள்ள வேற்றுமை என்ன? 

ஒரு கற்புள்ள பெண்,
"தன் கணவனே தனக்கு தேவையான அனைத்தையும் சாதித்து கொடுப்பான்"
என்று தீர்மானம் செய்து கொண்டு,
"தனக்கும் திறமை இருக்கிறதே!!" என்று தன் வரையில் தனியாக பிற முயற்சிகள் (சாதனை) செய்யாமல் இருப்பாள்.
அதாவது
"வேறு சாதனைகள் செய்வது (அன்ய சாதனை) இல்லை என்று இருப்பாள்.



அதேபோல, கற்புள்ள பெண்,
"தன் புருஷனே தன்னை காப்பாற்றுவான்"
என்று திடமாக நம்புவாள்.
"இன்னொரு புருஷன் இவனை விட புத்திசாலி திறமைசாலி என்றாலும், ஏறெடுத்தும் பார்க்காமல், தன் புருஷனே தன்னை காப்பாற்றுவான்" என்று இருப்பாள்.
அதாவது,
"வேறு ஒருவரை நம்புவது (அன்ய ஆஸ்ரயம்) இல்லை" என்று இருப்பாள்.
அதேபோல, கற்புள்ள பெண்,
"தன் புருஷன் பார்த்து தனக்கு நல்லது செய்தாலும் சரி! கெட்டது செய்தாலும் சரி!"
என்று தனக்கு என்ன லாபம்? என்று சிந்திக்காமல் இருப்பாள்.
அதாவது,
"வேறு ஒரு பலனை எதிர்பார்ப்பது (அன்ய பலன்) இல்லை" என்று இருப்பாள்.

இது கற்புக்கரசிகளுக்கான 'லட்சணம்'.  அன்ய சாதனை செய்யாமல், அன்ய ஆஸ்ரயம் தேடாமல், அன்ய பலனில் எதிர்பார்ப்பு இல்லாமல், கற்புக்கரசி பெண்கள் இருக்கின்றனர்.
இதையே "சரணம்" (சரணாகதி)  என்று சொல்கிறோம்.

கற்புக்கான 'லட்சணம்' தான், "வைஷ்ணவ ஸித்தாந்தம்".

"பெண்" என்ற இடத்தில் நாராயணன் மீது பக்தி கொண்ட நம்மை போன்ற வைஷ்ணவர்களை மாற்றி கொண்டு,
"கணவன்" என்ற இடத்தில் "நாராயணன்" என்று மாற்றி போடும் போது, வைஷ்ணவர்கள் "நிலை" நமக்கு புரியும்.
வைஷ்ணவ "சித்தாந்தமும்" நமக்கு புரியும்.

சிவன் கோவிலுக்கு போய் "சிவபெருமானே !! சரணம்.. சரணம்" என்று சொல்லிவிட்டு,
அடுத்து ஐயப்பன் கோவிலுக்கு சென்று "சரணம் சரணம் ஐயப்பா" என்று சொன்னால், அது சரணம் ஆகாது. சரணாகதி ஆகாது.

பெயரளவில் "சரணம் சரணம்" என்று கத்தி விட்டால், அது சரணாகதி ஆகி விடாது. 
இப்படி செய்வது "நமஸ்காரம்" (கும்பிடுதல்) என்று சொல்கிறோம்.

அலுவலகத்தில், நமக்கு மேல் உள்ள அதிகாரியை பார்த்து சல்யூட் வைப்பதும், பெரியவர்களை கண்டால் வணக்கம் செய்வதும், நம்  மரியாதையை காட்ட மட்டுமே !

அதுபோல,
தெய்வத்துக்கு மரியாதை தரும் அளவில் உள்ள பக்தன், எந்த கோவிலுக்கு போனாலும் அந்த தெய்வத்தை தனக்கு தெரிந்த அளவுக்கு "சரணம், போற்றி, வாழ்க" என்று துதி செய்கிறான்.


"மரியாதை உள்ள பக்தன்" என்று இப்படிப்பட்டவர்களை தெய்வங்களும் அறிந்து கொள்கிறார்கள்.

"இவன் சரணம் சரணம் என்று சொல்லிவிட்டான்" என்பதற்காக "சரணாகதி" செய்து விட்டான் என்று தெய்வங்களும் நினைப்பது இல்லை.

ஒரு கற்புள்ள பெண், "தன் கணவனே என் தெய்வம்" என்று இருப்பது போல, "நாராயணனே என் தெய்வம்" என்று சொல்லும் பக்தன் (வைஷ்ணவன்), ஒரு கற்புள்ள பெண் எப்படி இருப்பாளோ! அது போல, தானும் தன் தெய்வத்துக்கு நேர்மையாக இருக்கிறான். 

"நாராயணனே என் தெய்வம்!" என்று சரணாகதி செய்த வைஷ்ணவன் எப்படி இருக்கிறான்?
1.
"நாராயணனே தனக்கு தேவையான அனைத்தையும் சாதித்து கொடுப்பார்" 
என்று தீர்மானம் செய்து கொண்டு,
"தனக்கு திறமை இருக்கிறதே!!" என்று தன் வரையில் "தனியாக ஒரு யோகாஸனம்  செய்வோமா? தியானம் செய்வோமா?"
என்று கூட நினைக்காமல் இருப்பான்.
அதாவது
"வேறு சாதனைகள் செய்வது (அன்ய சாதனை) இல்லை" என்று இருப்பான்.






2.
அதேபோல,
"நாராயணனே தன்னை காப்பாற்றுவார்"
என்று திடமாக நம்புவான்.
"இன்னொரு தெய்வம் இருக்கிறார், அவர் அருள் உடனே செய்து விடுவார். உடனே கல்யாணம் நடக்கும், வேலை கிடைக்கும்"
என்று யார் சொன்னாலும், ஏறெடுத்தும் பார்க்காமல், "நாராயணனே தன்னை காப்பாற்றுவார்" என்று திடமாக நம்புவான்.
அதாவது,
"வேறு ஒருவரை நம்புவது (அன்ய ஆஸ்ரயம்) இல்லை" என்று இருப்பான்.

அதேபோல,
"நாராயணன் பார்த்து தனக்கு நல்லது செய்தாலும் சரி, கெட்டது செய்தாலும் சரி. அவர் இஷ்டம்"
என்று தனக்கு லாபமா, நஷ்டமா என்று சிந்திக்காமல் இருப்பான்.
அதாவது,
"வேறு ஒரு பலனை எதிர்பார்ப்பது (அன்ய பலன்) இல்லை" என்று இருப்பான்.

"நமஸ்காரம் செய்பவர்களால், சரணாகதி செய்தவர்கள் மனநிலையை புரிந்து கொள்ள முடியாததற்கு" இதுவே காரணம்.

நமஸ்காரம் வேறு!...  சரணாகதி வேறு! என்று அறிவோம். 

ஒரு தெய்வத்திடம் சரணாகதி செய்தவனை, வெறும் நமஸ்காரம் செய்து தெய்வத்துக்கு மரியாதை செய்பவன்,
"நீங்கள் இந்த கோவிலுக்கு தான் போவீர்களா? அந்த கோவிலுக்கு போக கூடாதா?" 
என்று எளிதாக கேட்டு விடுவான்.

ஒரு கற்புள்ள பெண்ணை பார்த்து,
"உன் கணவன் நல்லவன் தான்!! 
ஆனால், பக்கத்து வீட்டுக்காரனும் நல்லவன் தான்! 
நீ அவனையும் வந்து பார்க்க கூடாதா?" என்று கேட்டால், அந்த பெண் எத்தனை ஆத்திரப்படுவாளோ! எரிச்சல் அடைவாளோ! அதே நிலையை சரணாகதி செய்தவன் அனுபவிக்கிறான்.

இந்த வித்யாசத்தை அந்த காலங்களில் அறிந்து இருந்தார்கள். 
அவரவர் தெய்வ நம்பிக்கையை கொச்சை படுத்தாமல் இருந்தார்கள். 

வெளிநாட்டிலிருந்து வந்த வந்தேறிகள், "தனக்கு ஒரு தெய்வம் உண்டு" என்று சொன்ன போது, இதன் காரணத்தால்,
"அவர்களை மத மாற்றம் செய்யவோ, அவர்கள் தன் தெய்வத்தை பார்த்தால் என்ன?" என்றோ கேட்கவே இல்லை.

இந்த கீழ்த்தரமான புத்தி, அந்நியர்களின் நுழைவு 947ADக்கு பின்னர் பாரத மக்களிடம் விதைக்கப்பட்டது.
"ஏன் எங்கள் தெய்வத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள கூடாது.. வந்து பாருங்கள்"
என்ற கீழ்த்தரமான பேச்சுக்கள் முக்கியமாக கிறிஸ்தவ நுழைவுக்கு பின்னர் அதிகமானது.

வாஸ்கோட காமா என்ற கிறிஸ்தவன் 1498ADல் காலடி எடுத்து வைத்த காலத்திலிருந்தே இந்த பேச்சுக்கள் இந்தியாவில் பரவப்பட்டது. 
அந்நிய தேச இஸ்லாமியர்கள் வடபாரத தேசங்களை பிடித்துக்கொண்டு இருந்த சமயத்தில், 
அந்நிய தேச கிறிஸ்தவர்கள் தென் பாரத தேசங்களை பிடித்து கொண்டார்கள். 
அந்நிய தேச இஸ்லாமியர்கள், கட்டாயத்தால் மதம் மாற்ற,
அந்நிய தேச கிறிஸ்தவர்கள், இது போன்ற கீழ்த்தரமான பேச்சுக்கள் மூலமாகவும், 
கொஞ்சம் இடம் கொடுத்தால், அடுத்தவன் வணங்கும் தெய்வத்தையே கேலி செய்யும் அளவுக்கும் போனார்கள். 
சமயம் கிடைத்த போதெல்லாம், கோவிலை தாக்குவதும் நடந்தது.
சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் இருந்த கோவிலை இடித்து, சாந்தோம் சர்ச் கட்டிவிட்டனர். 
மற்றவன் தெய்வ நம்பிக்கையை கொச்சை படுத்த இயற்கையாகவே விரும்பாத பாரத மக்கள், ஒரு மைல் தள்ளி இன்று உள்ள கபாலீஸ்வரர் கோவிலை அமைத்துக்கொண்டனர்.




காளையார் சிவன் கோவிலுக்கு கோபுரங்கள் கட்டி அழகு பார்த்த, மருது சகோதரர்களை, பிடிக்க முடியாமல் பிரிட்டிஷ் நாட்டு  கிறிஸ்தவர்கள்,
நம் நாட்டின் குறுநில அரசனை பிடிக்க, "காளையார் கோவிலை வெடி வைத்து தகர்த்து விடுவோம்" என்று சொல்லி மிரட்ட,
கோவிலை காப்பாற்ற, மகா வீரர்களான மருது சகோதரர்கள் தானாக வந்து சரண் அடைந்தனர்.


கோவிலை வைத்து இவர்களை பிடித்து, இருவரையும் பொது மக்கள் பார்வையில் தூக்கில் போட்டு கொன்றனர்.
கிறிஸ்தவர்கள், நம் நாட்டில் ஆதிக்கம் செலுத்திய போக்கு இது என்பதை சரித்திரம் நமக்கு காட்டுகிறது.

சரணாகதி என்றால் என்ன புரிந்து கொள்ள முடியாத அந்நியர்கள், செய்த பெரும் குழப்பமே, இன்று வரை நம்மிடையே நீடிக்கிறது.

ஹிந்துக்கள் அறிவு பெற வேண்டியது அவசியம்.

"வெட்கமில்லாமல் எங்கள் தெய்வத்தை வந்து பாருங்கள்" 
என்று சொல்லும் போலி மதங்களுக்கு ஏமாற்றப்பட்டு போன பாரத மக்களை, மீண்டும் ஹிந்துவாக ஆக்க வேண்டியதும் ஒவ்வொருவரின் கடமை.

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க நம் ஹிந்து தர்மம்.

குருவே துணை... 

Thursday, 5 March 2020

சீமான் யார்? சீமான் சரியா, தவறா? தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

"கல்வி" உடையவனை "கல்விமான்" என்று சொல்கிறோம்.
"புத்தி" உள்ளவனை "புத்திமான்" என்று சொல்கிறோம்.
'ஸ்ரீ'யை உடையவனை "ஸ்ரீமான்" என்று சொல்லகிறோம்.
"ஸ்ரீ" என்ற சப்தம் "சமஸ்க்ரித் சொல்". இதை தமிழன் அறிந்து கொள்ள வேண்டும்.
"ஸ்ரீ" என்ற ஒரு சொல்லுக்கு 6 அர்த்தங்கள் சொல்லப்படுகிறது. இதை அறிய...இங்கே படிக்கவும்.




6 அர்த்தங்கள் உடைய "ஸ்ரீ" என்ற சமஸ்க்ரித சொல்லைதமிழில்
"திரு" என்று சொல்கிறார்கள்.

"திரு" என்ற ஒரு சொல்லுக்குள் இந்த 6 அர்த்தங்கள் இல்லை.
உண்மையில்,
"ஸ்ரீ" என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்களும் உடைய ஈடான தமிழ் சொல்லே கிடையாது.
இருந்தாலும்,
மரியாதைக்கான சப்தமாக, செல்வத்தை குறிக்கும் சப்தமாக,
தமிழர்கள் "ஸ்ரீ" என்ற இடத்தில் "திரு" என்று சொல்லை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

"ஸ்ரீ" என்ற 6 அர்த்தங்கள் கொண்ட இந்த சொல்லுக்கு, "திரு" என்ற எழுத்தே ஈடாகாது என்று சொல்லும் போது,
"ஸ்ரீ" என்ற சொல்லுக்கு பதிலாக "சீ" என்றும் பயன்படுத்துவது மஹா முட்டாள்த்தனம்.
தமிழ் அறிவுள்ளவன் ஏற்கமுடியாத சொல் இது.

ஸ்ரீ என்ற எழுத்து தமிழில் இல்லாததால், 'ஸ்ரீ' என்ற எழுத்துக்கு பதிலாக "சீ" என்ற எழுத்தை பயன்படுத்துகின்றனர்.
இது மஹா முட்டாள்த்தனம். 
தமிழ் அறிவுள்ளவன், ஏற்கமுடியாத சொல் இது. 
இதனால் ஏற்படும் அர்த்தத்தை, தமிழ் அறிவுள்ளவன் ஏற்கவே முடியாது.


"ஆகஸ்ட்" என்ற ஆங்கில சொல்லையும், "ஸ்" என்ற எழுத்து தமிழில் இல்லாததால், அதற்கு பதிலாக "ஆகத்து" என்று பயன்படுத்துகின்றனர்.
"ஆகஸ்ட்" என்ற ஆங்கில  வார்த்தைக்கு அர்த்தம் பெரிதாக ஒன்றும் இல்லை என்பதால், "ஆகத்து" என்று சொன்னாலும் குறையில்லை.

ஆனால்,
6 அர்த்தங்களை உடைய "ஸ்ரீ" என்ற சொல்லுக்கு பதிலாக "சீ" என்று மாற்றினால், அர்த்தமே மாறி விடுகிறது.
இதனால் ஏற்படும் அர்த்தத்தை தமிழ் அறிவுள்ளவன் ஏற்கவே முடியாது.

"சீ"யை உடையவன் "சீமான்" என்பதற்கு அர்த்தம் "ஸ்ரீமான்" அல்ல.

"சீமான்" என்ற சொல்லுக்கும், ஸ்ரீமான் என்ற சொல்லுக்கும். சம்பந்தமே இல்லை.

"சீ" என்ற தமிழ் சொல்லுக்கு "வெறுப்பு" என்று அர்த்தம்.

"சீ"யை உடையவன் "சீமான்" என்பதற்கு, "வெறுப்பை உடையவன் சீமான்" என்று அர்த்தம்.

"சீமான்" என்ற பெயர்!! வெறுப்பை உமிழும் குணம் கொடுக்கும் என்பதாலேயே லக்ஷ்மிக்கும் சீமானுக்கும் ஆகாது.

ஆதலால்,
உண்மையான தமிழ் அறிவு உள்ள தமிழன், "சீமான்" என்ற பெயரை தமிழர்கள் அறவே ஒதுக்க வேண்டும்.

வெறுப்பை உமிழும் "சீமான்" என்ற பெயரை தமிழ் உணர்வு உள்ளவன் வெறுப்பான்.

ஸ்ரீ என்ற மஹாலக்ஷ்மியை உடைய "ஸ்ரீமான்" நாராயணனே நமக்கு கதி என்று தெய்வ பக்தியுடன் வாழ்வோம். தமிழ் எது என்று தெரியாத போலி தமிழனை ஒதுக்குவோம்.

ஆங்கில பெயரான ஆகஸ்ட் என்ற பெயரை கூட ஆகத்து என்று மாற்றி பேசி மற்றவர்களை குழப்புவதாலும், 
மேலும் பல குறைகளாலும் தமிழ் மொழி தேசிய மொழியாகவும் ஆக முடியாத நிலையில் உள்ளது.  தமிழ் மொழியில் உள்ள குறைகளை அறிய இங்கே படிக்கவும்.