Followers

Search Here...

Monday 2 October 2017

பிரச்சனை வந்தாலும், உன் கடமையை செய்து கொண்டே இரு

ஆதி சங்கரர் சொல்கிறார், 'பிரச்சனைகள் இல்லாதவர்களே உலகில் கிடையாது. அதனால், பிரச்சனை வந்து விட்டதே என்று உன் காரியத்தை விட்டு விட கூடாது. எந்த பிரச்சனை வந்தாலும், நீ உன் கடமையை செய்து கொண்டே இருக்க வேண்டும். கடமையை செய்து கொண்டே, நீ பகவானையும் பிரார்த்தனை செய்' என்கிறார்.



பகவத் கீதையில், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை பார்த்து, "தஸ்மாத் சர்வேஷு காலேஷு மாம் அனுஸ்மர யுத்ய ச" (chapter 8, 7th Sloka) என்று சொல்லும் போது இதையே சொல்கிறார். பிரச்சனை, மனகுழப்பம் இருந்தாலும், நீ உன் கடமையை செய் என்று 'யுத்ய ச' என்று சொல்லி, பகவானான என்னையும் நினைத்துக்கொள் என்று 'மாம் அனுஸ்மர' என்று சேர்த்து சொல்கிறார்.


கவலைகள், பிரச்சனை, மனகுழப்பம் உள்ள யாவருக்கும் தேவையான உபதேசம் இது.

"தளர்ந்து விடாமல், கடமையையும் செய்து, அதே வேளை பகவானையும் பிரார்த்தனை செய்" என்கிறார் ஆதி சங்கரர்.

"பிரச்சனை காலத்தில், கடமை செய்யாமல், சும்மா இருந்து விடாதே.
பிரச்சனை காலத்தில், நான் என் கடமையை செய்கிறேன் என்று மட்டும் இருந்து, பகவானை பிரார்த்தனை செய்யாமல் இருந்தும் விடாதே. உன் செயலுக்கு பலன் கொடுப்பவர் அவர் என்று மறந்து விடாதே.
பிரச்சனை காலத்தில், கடமை செய்யாமல், பகவான் காப்பாற்றுவார் என்றும் சும்மா இருந்தும் விடாதே.

நான் என்னுடைய கடமையை செய்கிறேன், அதனோடு பகவானே உன் அனுகிரகத்தையும் எதிர்பார்க்கிறேன் என்று இருக்க வேண்டும்" என்று நமக்கு சொல்லித் தருகிறார் ஆதி சங்கரர்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் "மாம் அனுஸ்மர யுத்ய ச" என்று தெளிவாக சொல்கிறார், "பிரச்சனை காலத்தில், துவண்டு விடாமல், என்னை பிரார்த்தித்து கொண்டே, கடமையை செய்" என்கிறார்.

No comments: