Followers

Search Here...

Showing posts with label எப்படி இருப்பார். Show all posts
Showing posts with label எப்படி இருப்பார். Show all posts

Monday 28 December 2020

ராமர் பார்க்க எப்படி இருப்பார்? (How Ram actually looked?) அற்புதமான 22 ஸ்லோகங்களால் ராம வர்ணனை - அவர் அடையாளம் எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே!

ராமர் பார்ப்பதற்கு எப்படி இருந்தார்? அற்புதமான 22 ஸ்லோகங்களால் ஹனுமான் வர்ணிக்கிறார்
"சுக்ரீவ மகாராஜனின் மந்திரி நான். என் பெயர் ஹனுமான். 
நான் கடலை கடந்து இலங்கை வந்தேன்.
என் பராக்ரமத்தால் அந்த ராவணனின் தலையில் (அதாவது இலங்கை) என் காலை வைத்து உங்களை தரிசிக்க வந்துள்ளேன்.
என்னை ராவணன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.
உங்கள் சந்தேகத்தை விடுங்கள். என் வாக்கை நம்புங்கள்
என்றார் ஹனுமான்.

தாம் து ராம கதாம் ஸ்ருத்வா
வைதேஹி வானரர்ஷபாத் |
உவாச வசனம் சாந்த்வம்
இதம் மதுரயா கிரா ||
तां तु राम कथां श्रुत्वा वैदेही वानरर्षभात् |
उवाच वचनं सान्त्वम् इदं मधुरया गिरा || 1
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
ராமபிரானால் அனுப்பப்பட்டு வந்த ஹனுமானை பார்த்து, மதுரமான குரலில் சீதாதேவி பேச தொடங்கினாள்..

க்வ தே ராமேன சம் ஸர்க 
கதம் ஜானாசி லக்ஷ்மணம் |
வானரானாம் நரானாம் ச
கதம் ஆஸீத் சமாகம: ||
क्व ते रामेण संसर्गः कथं जानासि लक्ष्मणम् |
वानराणां नराणां च कथम् आसीत् समागमः || 2
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
"ராமபிரானை எங்கு சந்தித்தீர்கள்? 
உங்களுக்கு லக்ஷ்மணனை எப்படி தெரியும்? எப்படி வானரர்களுக்கும் மனிதர்களுக்கும் நட்பு ஏற்பட்டது? 

யானி ராமஸ்ய லிங்கானி
லக்ஷ்மணஸ்ய ச வானர |
தானி பூய: சமா-சக்ஷ்வ
ந மாம் சோக: சமாவிசேத் ||
यानि रामस्य लिङ्गानि लक्ष्मणस्य च वानर |
तानि भूयः समाचक्ष्व न मां शोकः समाविशेत् || 3
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
ராம லக்ஷ்மணர்களின் அடையாளம் என்ன? இதை நீங்கள் எனக்கு சொல்வதால் என் சோகம் நீங்கும்.




கீத்ருஸம் தஸ்ய சம் ஸ்தானம்
ரூபம் ராமஸ்ய கீத்ருஸம் |
கதம் ஊரு கதம் பாஹு
லக்ஷ்மணஸ்ய ச சம்ஸ மே ||
कीदृशं तस्य संस्थानं रूपं रामस्य कीदृशम् |
कथम् ऊरू कथं बाहू लक्ष्मणस्य च शंस मे || 4
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
ராமபிரான் எப்படி இருப்பார்? அவருடைய அடையாளம் என்ன? அவருடைய கால்கள், புஜங்கள் எப்படி இருக்கும்? லக்ஷ்மணன் எப்படி இருப்பார்?" என்று விளக்கி சொல்லுங்கள் என்றாள் சீதாதேவி.

ஏவமுக்தஸ்ய வைதேஹ்யா
ஹனுமான் மாருத ஆத்மஜ: |
ததோ ராமம் யதா தத்வம்
ஆக்யாதும் உப-சக்ரமே ||
एवमुक्तस्तु वैदेह्या हनूमान् मारुत आत्मजः |
ततो रामं यथा तत्त्वम् आख्यातुम् उपचक्रमे || 5
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
சீதாதேவியின் பேச்சை கேட்ட ஹனுமான், சீதாதேவியின் நம்பிக்கையை பெறுவதற்காக, ராமபிரானின் தோற்றத்தை சொல்ல ஆரம்பித்தார்

ஜானந்தி பத திஷ்டயா மாம்
வைதேஹி பரிப்ருச்சஸி |
பர்து: கமல பத்ராக்ஷி
சங்க்யானம் லக்ஷ்மணஸ்ய ச ||
जानन्ती बत दिष्ट्या मां वैदेहि परिपृच्छसि |
भर्तुः कमलपत्राक्षि सङ्ख्यानं लक्ष्मणस्य च || 6
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
"தேவி! ராமபிரானை பற்றி நன்கு அறிந்த நீங்கள், என் மூலமாக ராமபிரானையும், லக்ஷ்மணனையும் கூறும் படி கேட்கிறீர்கள். இதை என் பாக்கியம் என்று உணர்கிறேன்.

யானி ராமஸ்ய சின்ஹானி
லக்ஷ்மணஸ்ய ச யானி வை |
லக்ஷிதானி விசாலாக்ஷி
வதத: ஸ்ருனு தானி மே ||
यानि रामस्य चिह्नानि लक्ष्मणस्य च यानि वै |
लक्षितानि विशालाक्षि वदतः शृणु तानि मे || 7
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
தேவி! நான் உங்கள் அனுமதியோடு, ராமபிரானின், லக்ஷ்மணரின் அடையாளங்களை சொல்கிறேன். கவனமாக கேளுங்கள்

ராம: கமல பத்ராக்ஷ:
ஸர்வ பூத மனோஹர: |
ரூப தாக்ஷிண்ய சம்பண்ண:
ப்ரஸூதோ ஜனக ஆத்மஜே ||
रामः कमल पत्राक्षः सर्व भूत मनोहरः |
रूप दाक्षिण्य सम्पन्नः प्रसूतो जनक आत्मजे || 8
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
அவர் அனைவரையும் கவரும் பேரழகன் (ராம), அவர் உடல் முழுவதுமே  பேரழகு. பெரிய ஆற்றில், எதோ ஒரு கரை ஓரத்தில் இறங்கி குளிப்பவன் போல, அந்த பேரழகு என்ற பெரிய ஆற்றில், அவரின் தாமரை போன்ற கண் அழகில் நான் இறங்கி அதில் மயங்கினேன் (கமலபத்ராக்ஷ),
வானரர்களான எங்களுக்கு மனம் ஒரு இடத்தில் நிலைக்க முடியாது. ஒன்றை பார்க்கும் போதே மற்றொரு விஷயத்தில் ஆசை ஏற்பட்டு விடும். அப்படி மனம் அலைபாயும் எங்கள் மனதும், இவரை பார்த்து விட்டால் அசையாமல் இருக்கிறது (ஸர்வ பூத மனோகரா). அந்தஸ்து பார்க்காமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமமாக பழகுவதற்கு "தாக்ஷின்யம்" என்று பெயர். இப்பேர்ப்பட்ட பேரழகான ரூபத்தை வைத்து கொண்டு, அதை தன் மாளிகையில் இருப்பவர்களுக்கு மட்டும்  காட்டாமல், பெரும் தாக்ஷின்யத்துடன் தன் ரூபத்தை எங்களை போன்ற சாதாரண குரங்குகள் பார்க்கும் படியாக வனத்தில் இருக்கிறார் (ரூப தாக்ஷிண்ய சம்பண்ண), நீங்கள் எப்படி மனித யோனியில் பிறக்காமல் பூமியில் இருந்து ஜனகருக்கு வெளிபட்டீர்களோ, அது போல எங்களுக்கு இவர் வெளிப்பட்டார் ( ப்ரஸூதோ ஜனக ஆத்மஜே).

தேஜஸா ஆதித்ய சங்காச:
க்ஷமயா ப்ருதிவீ சம: |
ப்ருஹஸ்பதி சமோ புத்த்யா
யஷஸா வாசவோபம: ||
तेजसा आदित्य सङ्काशः क्षमया पृथिवी समः |
बृहस्पति समो बुद्ध्या यशसा वासवोपमः || 9
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
அவருடைய பொலிவை கண்டால் சூரியன் போல ப்ரகாசிக்கிறார். அவருடைய பொறுமையை கண்டால் பூமியை போல இருக்கிறார். அவருடைய புத்தியை கண்டால் ப்ருஹஸ்பதியை போல இருக்கிறார். அவருடைய புகழை கண்டால் இந்திரனை போல இருக்கிறார்

ரக்ஷிதா ஜீவ லோகஸ்ய
ஸ்வ-ஜனஸ்ய ச ரக்ஷிதா |
ரக்ஷிதா ஸ்வஸ்ய வ்ருத்தஸ்ய
தர்மஸ்ய ச பரந்தப: ||
रक्षिता जीव लोकस्य स्व-जनस्य च रक्षिता |
रक्षिता स्वस्य वृत्तस्य धर्मस्य च परन्तपः || 10
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
உலகத்தில் உள்ள அனைவரையும் காக்க கூடியவர். தன் பரிவாரங்களை பிரத்யேகமாக காக்க கூடியவர். தன் தர்மத்தை விட்டு விடாமல் காப்பவர். பொதுவாக எங்குமே தர்மத்தை காக்க கூடியவர்.




ராமோ பாமினி லோகஸ்ய
சாதுர் வர்ணஸ்ய ரக்ஷிதா |
மர்யாதானாம் ச லோகஸ்ய
கர்தா காரயிதா ச ஸ: ||
रामो भामिनि लोकस्य चातुर् वर्ण्यस्य रक्षिता |
मर्यादानां च लोकस्य कर्ता कारयिता च सः || 11
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
ராமபிரான் நான்கு வர்ணத்தில் (ப்ரம்ம விசாரமே செய்பவர்கள், உயிரை பற்றி கவலையில்லாமல் நாட்டுக்கு பணி செய்பவர்கள், வேலை கொடுக்கும் வியாபாரிகள், வேலை செய்யும் தொழிலாளிகள்) இருக்கும் அனைவரையும் காக்க கூடியவர்.
தன் தர்மத்தில் (க்ஷத்ரிய) இருக்க ஆசைப்படுபவர். அதே சமயம் அவரவர் வர்ணத்துக்கு ஏற்ற தர்மத்தில் இருக்க செய்பவர்.

அர்சிஸ்மான் அத்யர்தம்
ப்ரஹ்மசர்ய வ்ரதே ஸ்தித: |
சாதூணாம் உபகாரஞ:
ப்ரசாரஞ: ச கர்மனாம் ||
अर्चिष्मान् अत्यर्थम् ब्रह्मचर्य व्रते स्थितः |
साधूनाम् उपकारज्ञः प्रचारज्ञ: च कर्मणाम् || 12
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
அற்புதமானவர். அனைவராலும் வணங்கத் தக்கவர், ப்ரம்மச்சர்யத்திலேயே இருப்பவர், நல்லவர்களுக்கு என்றுமே துணை நிற்பவர்ஒவ்வொரு காரியத்திலும் அடங்கி இருக்கும் சிக்கல்களை அவர் நன்கு அறிந்துள்ளார்.

ராஜ வித்யா வினீத: ச
ப்ராஹ்மணானாம் உபாஸிதா |
ஸ்ருதவான் ஷீல சம்பண்ண:
வினீத: ச பரந்தப: ||
राज विद्या विनीतश्च ब्राह्मणानाम् उपासिता |
श्रुतवान् शील सम्पन्नः विनीत: च परन्तपः || 13
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
அரசியல் அறிவு, அரசியல் நிர்வாகம் செய்ய தெரிந்தவர். தர்மத்தை, வேதத்தை அறிந்த ப்ராம்மணர்களை மதிப்பவர். பெரியோர்களிடத்தில் சாஸ்திரங்களை சந்தேக புத்தி இல்லாமல் கேட்பவர். நன்கு படித்தவர், அதே சமயம் நல் ஒழுக்கம் உடையவர். அடக்கமானவர்.

யஜுர் வேத வினீத: ச
வேத வித்பி: சுபூஜித: |
தனுர் வேத ச வேதே ச
வேதாங்கேசு ச நிஷ்டித: ||
यजुर् वेद विनीतश्च वेद विद्भिः सुपूजितः |
धनुर् वेदे च वेदे च वेदाङ्गेषु च निष्ठितः || 14
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
யஜுர் வேதம் நன்கு கற்றவர். வேத ரகசியங்கள் அறிந்தவர்கள் இவரை பூஜிக்கிறார்கள். வேத அங்கங்களும், தனுர் வேதமும் நன்கு அறிந்தவர்.

விபுலாம்சோ மஹாபாஹு:
கம்பு-க்ரீவ சுபானன: |
கூடஜத்ரு: சுதாம் ராக்ஷோ
ராமோ தேவி ஜனை: ஸ்ருத: ||
विपुलांसो महाबाहुः कम्बुग्रीवः शुभाननः |
गूढ जत्रुः सुताम् राक्षो रामो देवि जनैः श्रुतः || 15
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
நீண்ட கைகளும், சங்கு போன்ற உருண்டு திரண்ட கழுத்தும், மங்களமான முகமும் கொண்டவர்.
சதை பிடிப்புடன் இருக்கும் இவருடைய தோளில், கழுத்து எலும்புகள் தெரியாது. அவருடைய கண் ஓரத்தில் செந்தாமரையில் காணப்படும் சிவப்பு வர்ணம் இருக்கிறது. எந்த கூட்டத்தில் இவர் இருந்தாலும், தனித்து தெரிவார்.

துந்துபி ஸ்வன நிர்கோஷ:
ஸ்னிக்த வர்ண: ப்ரதாபவான் |
சம: சம-விபக்தாங்கோ
வர்ணம் ஸ்யாமம் சமாஸ்ரித: ||
दुन्दुभि स्वन निर्घोषः स्निग्ध वर्णः प्रतापवान् |
समः सम-विभक्ताङ्गो वर्णं श्यामं समाश्रितः || 16
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
துந்துபியின் ஒலியை போல இவர் குரல் இருக்கிறது. ஸ்யாமளா வர்ணத்துடன் (நீளத்தில் கருப்பு சேர்ந்தாற்போல) இருக்கிறார். அவர் நிறமே கண்ணை கவரும். ஒரு கதாநாயகன் போலவே இருப்பார். உடல் அமைப்பில் எந்த இடத்திலும் ஏற்ற-குறைவு மாறுபாடு இல்லாமல், பொருத்தமாய் அமைக்கப்பட்ட சரீரத்தை கொண்டுள்ளார். எதை பார்த்தாலும் சரிசமமாகவே இருக்கும். அவருடைய உடல் அமைப்பே வடித்தது போல இருக்கும்.
த்ரி ஸ்திர: த்ரி ப்ரளம்ப: ச
த்ரி சம: த்ரிஷு ச உன்னத: |
த்ரி தாம்ர: த்ரிஷு ச
ஸ்னிக்தோ கம்பீர: த்ரிஷு நித்யஷ: ||
त्रि स्थिरः त्रि प्रलम्बश्च त्रि समः त्रिषु च उन्नतः |
त्रि ताम्र: त्रिषु च स्निग्धो गम्भीर: त्रिषु नित्यशः || 17
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
ராமபிரானுக்கு, மூன்று இடங்கள் உறுதியாகவும் (மார்பு, முஷ்டி மற்றும் மணிக்கட்டு). மூன்று இடங்கள் நீளமாகவும் (கைகள், புருவம், விருஷணம்). மூன்று இடங்கள் ஏற்ற-குறைவு இல்லாமல் சமமாகவும் (கேசத்தின் நுனி, முழங்கால்கள், விருஷணம்). மூன்று பகுதிகள் ஏற்றத்துடனும் (வயிறு, தொப்புள் மற்றும் மார்பு). மூன்று இடங்கள் சிவப்பாகவும் (உள்ளங்கால்கள், உள்ளங்கை, கடைக்கண்). மூன்று இடங்கள் வழுவழுப்பாகவும் (பாதரேகை, தலை கேசம், ஆண் உறுப்பு), மூன்று கம்பீரமாகவும் (குரல், உடல் வலிமை, தொப்புள்) இருக்கும்.

த்ரி வலீவான் ஸ்த்ரய வனத:
சதுர் வ்யங்க: த்ரி சீர்ஷவான் |
சது: கல: சதுர் லேக:
சது: கிஷ்கு: சது: ஸம: ||
त्रि वलीवान् स्त्र्य वनतः चतुर् व्यंग त्रि शीर्षवान् |
चतुष् कलः चतुर् लेखः चतुष् किष्कुः चतुस् समः || 18
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
மூன்று மெல்லிய மடிப்புகள் அவர் கழுத்திலும், வயிற்று பகுதியிலும் இருக்கும். இவருடைய ஒவ்வொரு கேசமும் மூன்று சுருளாக உள்ளது. மூன்று இடங்கள் உள் ஆழ்ந்தும் (மார்பு, மார்பில் உள்ள காம்பு, பாதரேகை), நான்கு இடங்கள் ஒடுங்கியும் உள்ளது (நரம்பு வெளியில் தெரியாத பாதங்கள், மெல்லிய மயிர்க்கால், ஆண் உறுப்பு, சதை இல்லாத அடிவயிறு), ஏற்றக்குறை இல்லாமல் சமமாக குடைபோல, வட்டமாக விசாலமான சிரஸையும், கட்டைவிரலடியில் நான்கு ரேகையையும் இருக்கும். நான்கு கோடுகள் இவர் நெற்றியில் உள்ளது. 96 அங்குலம் அடங்கிய நான்கு முழம் கொண்ட தேகம் உடையவர் (8 feet). நான்கு அங்கங்கள் இடமும் வலமும் சமமாகவும் (கைகள், முழங்கால், தொடை, கன்னம்) உள்ளது.




சதுர் தச சம த்வந்த:
சதுர் தம்ஸ்ட்ர: சதுர் கதி: |
மஹோஷ்ட ஹனு நாச: ச
பஞ்ச ஸ்நிக்த: அஷ்ட வம்சவான் ||
चतुर् दश सम द्वन्द्वः चतुर् दंष्ट्रः चतुर् गतिः  |
महोष्ठ हनु नासश्च पञ्च स्निग्ध: अष्ट वंशवान् || 19
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
14 இடங்களில் இடமும் வலமும் ஏற்றக்குறை இல்லாமல் சமமாக ஒன்று போல இருக்கும் (புருவம், மூக்கு, காது, உதடு, முலைக்காம்பு, முழங்கை, மணிக்கட்டு, முழங்கால், விருஷணம், இடுப்பு, கை, கால், பின்பாகம், முதுகு). இரண்டு பல் வரிசைகளில், நான்கு பெரிதாகவும் கூர்மையாகவும் இருக்கிறது. நான்கு விதமான நடை உடையவராக இருக்கிறார். ராமபிரான் ஒரு சமயம் சிங்கம் வருவது போலவும், காளை வருவது போலவும், புலி வருவது போலவும், யானை வருவது போலவும் நடப்பவர். சிவப்பான எடுப்பான உதடும், சதை நிறைந்த கன்னமும், உயர்ந்த மூக்கும் கொண்டவர். ஐந்து அங்கங்கள் மிருதுவாகவும், கண்ணை கவரும் படியாகவும்  இருக்கும் (தலைக்கேசம், கண்கள், பற்கள், தோல், உள்ளங்கால்). எட்டு அங்கங்கள் நீளமாக (சரீரம், முதுகு, கை, கால், கண், காது, விரல், ஆண் உறுப்பு) இருக்கும்.


தச பத்மோ தச ப்ருஹத்
த்ரிபி: வ்யாப்த: த்வீ சுக்லவான் |
ஷட் உன்னதோ நவதனு:
த்ரிபி: வ்யாப்னோதி ராகவ: ||
दश पद्मो दश बृहत् त्रिभिः व्याप्तः द्वि शुक्लवान् |
षड् उन्नतो नवतनुः त्रिभिः व्याप्नोति राघवः || 20
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
10 இடங்கள் தாமரை போன்று சிவந்து இருக்கும் (முகம், வாய், கண், நாக்கு, உதடு, தாடை, மார்பு, நகம், கை, கால்). 10 இடங்கள் கம்பீரமாகவும் விசாலமாகவும் இருக்கும் (மார்பு, தலை, முகம், கழுத்து, புஜம், தோள், நாபி, இடபுறம், பின்புறம், குரல்), மூன்று விஷயங்கள் இவரிடம் பிரசித்தியாக உள்ளது (பொலிவு, புகழ், ஐஸ்வர்யம்), இரண்டு இடங்கள் வெண்மையாக இருக்கும் ((பற்கள், கண்)), ஆறு இடங்கள் உயர்ந்தும் ((சதை தொங்காத கஷ்கம், வயிறு, மார்பு, மூக்கு, தோள், முகம்), ஒன்பது மற்றவர்களுக்கு சூக்ஷ்மமாகவும் (தலைக்கேசம், மீசை, நகம், தாடி, தோல், கட்டைவிரல், ஆண் உறுப்பு, மன கருத்து, புத்தி), மூன்று காலங்களிலும் (முன்பகல், நடுப்பகல், பிற்பகல்) தன்னுடைய தர்மத்தை அனுஷ்டிப்பவராகவும் இருக்கிறார்.

சத்ய தர்ம பர: ஸ்ரீமான்
சங்க்ரஹ அனுக்ரஹே ரத: |
தேச கால விபாகஞ:
சர்வ லோக ப்ரியம் வத: ||
सत्य धर्म परः श्रीमान् सङ्ग्रह अनुग्रहे रतः |
देशकाल विभागज्ञः सर्व लोक प्रियंवदः || 21
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
ராமபிரான் சத்யத்தையும் தர்மத்தையும் பெரிதாக மதிப்பவர். இவர் பலரோடு கலந்து பழகுபவர், அனைவரையும் க்ஷேமமாக வைத்து இருப்பவர். எத்தனை பேர் இருந்தாலும், அனைவரும் திருப்தி அடையும் படி அனைவரும் தன்னிடம் பழக இடம் கொடுப்பவர். யாரிடத்திலும் மிகவும் அழகாக பேச கூடியவர்.

ப்ராதா ச தஸ்ய த்வைமாத்ர:
சௌமித்ரி: அபராஜித: |
அனுராகேன ரூபேன
குண: ச ஏவ ததா வித: ||
भ्राता च तस्य द्वैमात्रः सौमित्रि: अपराजितः |
अनुरागेण रूपेण गुणैश्चैव तथाविधः || 22
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
யாராலும் ஜெயிக்க முடியாத, அவர் சகோதரன் லக்ஷ்மணன், ராமபிரானை போலவே உருவத்திலும், குணத்திலும், லக்ஷணங்களிலும் ஒத்து இருக்கிறார்.

இவ்வாறு, ராம லக்ஷ்மணர்களின் அடையாளம் என்ன? என்று கேட்ட சீதாதேவிக்கு, சர்வ கைங்கர்யம் செய்யும் தாசனான ஹனுமான், ராமபிரானை அசோகவனத்தில் பிரதிஷ்டை செய்து விட்டார்

ஹனுமானின் சொற்களை கேட்டு, சீதாதேவிக்கு சோகம் நீங்கியது.