Followers

Search Here...

Showing posts with label வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே. Show all posts
Showing posts with label வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே. Show all posts

Saturday 12 September 2020

வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே! உங்கள் துக்கம் அழிய.. படியுங்கள் அத்தியாயம் 2

சோகமாக இருக்கும் போது, நம்மால் "தர்ம உபதேசங்களை" திறந்த மனத்துடன் கேட்கவே முடியாது.



ஆனால்,
"ஞான உபதேசங்களை" மனது அந்த சோகமான நிலையிலும் ஏற்கும். 

கிருஷ்ண பரமாத்மா, இதனை பாரத போர் சமயத்தில் நமக்கு  காட்டுகிறார்.



பகவத் கீதையின் அற்புதம் என்ன?

"தன் உறவினர்கள் அனைவரையும், தன் பிள்ளைகள் உட்பட இன்னும் சிறிது நாளில் இழக்க போகிறேன். 

கேவலம் சொத்துக்காக, எனக்கு பிரியமான அனைவரையும் இழக்க போகிறேன். 

பலர் விதவைகள் ஆக போகிறார்கள்."

என்ற உண்மை புரிந்ததும், தாங்க முடியாத சோகத்தை அடைந்து விட்டான், பாசமுள்ள அர்ஜுனன்.


பகவத் கீதை, முதல் அத்தியாயம் முழுவதும், அர்ஜுனனின் இந்த சோகத்தை தான் சொல்கிறது. 


ஒருவனுக்கு மெய் ஞானம் உண்டாக, சோகம் அவசியமாகிறது


அதனால், அர்ஜுனனின் சோகமே ஒரு யோகமாக சொல்கிறார் வியாச பகவான்.


கவனித்து பாருங்கள்...

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, உடனேயே, தர்ம உபதேசங்கள் அர்ஜுனனுக்கு சொல்லவில்லை. 


"நீ க்ஷத்ரியன். தர்மத்துக்காக போர் செய்வது தான் உன் வேலை."

என்று தர்ம உபதேசம் உடனேயே செய்து இருந்தால், அர்ஜுனன் கேட்டு இருக்கவே மாட்டான். 

"இனி நான் க்ஷத்ரியன் அல்ல.. சந்நியாசி ஆகிறேன்" என்று சொல்லி இருப்பான்.


அர்ஜுனனின் சோகத்தை போக்க,  2வது அத்தியாயம் முழுக்க முதலில் "ஞான உபதேசம்" செய்கிறார்.


2வது அத்தியாய முடிவிலேயே, அர்ஜுனன் சோகத்தை விட்டு வெளி வருகிறான்

சோகம் அற்று இருக்கும் அர்ஜுனனுக்கு பிறகு, "கர்ம யோகம், சந்யாஸ யோகம், பக்தி யோகம்" என்று பல 'தர்ம உபதேசங்களை' சொல்கிறார், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.


நம் அனைவருக்குமே சோகம் ஒரு விதத்தில் கட்டாயம் இருக்கும்.

பகவத் கீதையில், 18 அத்தியாயமும் நாம் படிக்க முடியாவிட்டாலும், சோகத்தை விரட்டும் 2வது அத்தியாயம் மட்டுமாவது அர்த்தம் புரிந்து படிக்க வேண்டும்.


வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே! 

போலி மத புத்தகங்களில், ஆவியாக அலையும் போலி தெய்வங்களை விட்டு விட்டு, 

அனைவரும் பகவத் கீதையில், 2வது அத்தியாயம் மட்டுமாவது அர்த்தம் புரிந்து மனப்பாடம் செய்து விடுங்கள்.





கிருஷ்ண பரமாத்மா நமக்காக கொடுத்த பொக்கிஷம் இது.. 


வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே! ஞானத்தை கொடுக்கும், சோகத்தை, பயத்தை அகற்றும், 2வது அத்தியாயம் கட்டாயம் படியுங்கள்.


வெளிநாடுகளில் கிருஷ்ண பரமாத்மாவை வழிபடுகிறார்கள். 

இந்திய நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இறந்த, போலியான ஆவிகளை வணங்குவது அவமானம்.

உங்கள் சோகம் அழிக்கப்பட, அனைவரும் கீதையில் 2வது அத்தியாயம் படியுங்கள்.