Followers

Search Here...

Wednesday 27 December 2017

தமிழ் மொழியை, சமஸ்கரிதத்திற்கு நிகராக பெருமைப்படுத்தியவர்கள் யார்? தெரிந்து கொள்ள வேண்டாமா தமிழன்?

சமஸ்கரிதம் தெரியாது. அதை படித்து புரிந்து கொள்ள எங்களுக்கு அறிவும் இல்லை பொறுமையும் இல்லை. நியாயமான கோரிக்கை.

நாங்கள் ஏன் சமஸ்கரிதம் படிக்க வேண்டும் என்று கேட்கும் தமிழன் முதலில் செய்ய வேண்டியது என்ன ?



12 ஆழ்வார்கள் :

தமிழ் மொழியை, சமஸ்கரிதத்திற்கு நிகராக பெருமைப்படுத்தியவர்கள் 12 ஆழ்வார்கள்.


ஸ்ரீ நாராயணனே முழு முதற் கடவுள் என்று நான்மறை வேதத்தின் உண்மையை தமிழில் பாசுரமாக செய்த மகாத்மாக்கள்.
தமிழ் இன்று வரை, நம்மிடம் ஓரளவாவது இருக்க நாயன்மார்களும், ஆழ்வார்களும் செய்த தமிழ் தொண்டே காரணம்.
12 ஆழ்வார்கள், 4000 திவ்ய பிரபந்தங்கள் தமிழனுக்கு தந்தார்கள்.
இந்த தமிழர்களை பற்றி சிறு குறிப்பு இதோ :

4203 BCE
1. பொய்கை ஆழ்வார்.
இவர் காஞ்சிபுரத்தில் உதித்தார். (முதல் திருவந்தாதி இயற்றினார்)

4203 BCE
2. பேயாழ்வார்.
இவர் மைலாப்பூர் - Chennaiயில் உதித்தார்(இரண்டாம் திருவந்தாதி இயற்றினார்)

4203 BCE
3. பூதத்தாழ்வார்.
இவர் மகாபலிபுரத்தில் உதித்தார்.(மூன்றாம் திருவந்தாதி இயற்றினார்)

4203 BCE
4. திருமழிசை ஆழ்வார்.
இவர் திருவள்ளூரில் உதித்தார். (நான்முகன் திருஅந்தாதி, திருச்சந்த விருத்தம் இயற்றினார்)
நான்கு ஆழ்வார்களும், ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்துக்கும் முன் த்வாபர யுகத்தில் இருந்தவர்கள். இவர்களுடைய அந்தாதி ஸ்ரீ நாராயணனை குறித்தது. முதல் மூவரும் திருக்கோவிலூர் த்ரிவிக்ரம பெருமாள் கோவிலில் சந்தித்தனர்.

3227 BCE - 3102 BCE
ஸ்ரீ கிருஷ்ண அவதாரம். கிருஷ்ண அவதாரம் தொடர்ந்து வந்த ஆழ்வார்கள் 8.

3102 BC
5. மதுரகவி.
இவர் திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரி - தூத்துக்குடியில் உதித்தார். இவர் வேத சாத்திரங்களை நன்கு பயின்ற அந்தணர். (கண்ணி நுண் சிறுத்தாம்பு இயற்றினார்)



3059 BC
6. நம்மாழ்வார்.
இவர் திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரி - தூத்துக்குடியில் பிள்ளைமார் சமுதாயத்தில் உதித்தார்.
நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றே புகழ்ப்படுகிறார்.

நம்மாழ்வார் இயற்றிய பாசுர நூல்கள் நான்கு:
அவை, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி.
இவை ரிக், யஜூர், அதர்வண மற்றும் சாம வேதத்தின் சாரமாக சொல்வார்கள்.

5000 வருடங்களுக்கு முன், மதுரகவி என்ற அந்தணர், ஞானத்தில் சிறந்த பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்த நம்மாழ்வாரை தன் ஆசாரியனாக ஏற்றார்.

ஆசாரியனான நம்மாழ்வாரையே சிறந்த தெய்வமாக எண்ணி தன் ஆச்சாரியன் நம்மாழ்வாரை போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார்.

4000 திவ்யபிரபந்தங்களில் நம்மாழ்வார் மட்டுமே 1296 இயற்றினார்.
ஆழ்வார்களில் மிக மிக முக்கியமானவர் நம்மாழ்வார் மாறன், சடகோபன், குருகூர் நம்பி, குழந்தை முனி, ஸ்ரீவைணவக் குலபதி என்று பலவாறு நம்மாழ்வார் போற்றப்படுகிறார்.

பிறந்தது முதல் 16 வருடங்கள் யாரிடமும் பழகாமல், பேசாமல் இருந்த நம்மாழ்வார் என்ற சடகோபன், மதுரகவி ஆழ்வார் வந்தபின் அவரிடம் பேசினார். நம்மாழ்வார் சொல்ல மதுரகவி ஆழ்வார் சொல்ல நமக்கு கிடைத்தது தான், நம்மாழ்வாரின் 1296 திவ்யபிரபந்தம்.

மதுரகவி இல்லையேல், நம்மாழ்வார் யார் என்பதும் தெரிந்து இருக்காது, இவரின் 1296 திவ்யபிரபந்தமும் கிடைத்து இருக்காது.

3075 BCE
7. ராஜா குலசேகர ஆழ்வார்.
இவர் சேர அரசன். இவரின் ஆட்சியின் கீழ் கூடல் (மதுரை), கொல்லி (உறையூர், திருச்சி) போன்ற தேசங்களை ஆண்டு வந்த, க்ஷத்ரிய அரசன். (பெருமாள் திருமொழி இயற்றினார்)

3056 BC
8. பெரியாழ்வார்.
இவர் மதுரைக்கு அருகே உள்ள வில்லிபுத்தூரில் உதித்தார். விஷ்ணு சித்தர் என்றும் அழைப்பர். பெரியாழ்வார் மதுரையில் உள்ள கூடலழகர் கோயிலில் குடிகொண்டுள்ள பெருமாளை பார்த்தே திருப்பல்லாண்டு பாடினார். பெருமாளுக்கே மற்றவர் கண் பட்டு விடுமோ என்று இவர் பாடிய திருப்பல்லாண்டு, பின் வந்த வைணவப் பெரியோர்கள் ஆழ்வார்கள் வரிசை க்ரமத்தில் ஏழாமவராக வரும் பெரியாழ்வாரின் பாடல்களை 4000 திவ்வியப் பிரபந்தத்தில் முதற்பாடல்களாகத் தொகுத்தனர்.

பெரியாழ்வார், திருப்பல்லாண்டு மற்றும் பெரியாழ்வார் திருமொழி இயற்றினார்.

3005 BC
9. ஆண்டாள்.
இவள் ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெண்ணாக, துளசி செடியின் அடியில் கிடைத்தாள். பெரியாழ்வார் வளர்ப்பு பெண்ணாக வளர்ந்தாள். 100 வருடங்களுக்கு முன்பு தான் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் நடந்து இருந்தது. கிருஷ்ண பக்தி ஆரம்பித்து இருந்த காலம் இது. ஆண்டாள் 'திருப்பாவை', 'நாச்சியார் திருமொழி' இயற்றினாள்.

வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண் ஆவார்.

ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார்.

2814 BCE
10. தொண்டரடிப்பொடி ஆழ்வார்.
இவர் சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் உதித்தவர். இது பாபநாசம் தாலுக்கா தஞ்சாவூர் அருகே உள்ளது.



இவர் 'திருமாலை' மற்றும் 'திருப்பள்ளி எழுச்சி' இயற்றினார். ஸ்ரீரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அரங்கநாதனுக்கு பாமாலை மற்றும் பூமாலை சாற்றும் சேவையை தன் வாழ்நாள் முழுதும் சிரமேற்கொண்டார். இவர் இயற்றிய 'திருப்பள்ளி எழுச்சி' மார்கழி மாதத்தில் திருமலை உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் பாடப்படுகிறது.

பரமனாகிய திருமாலை அறிய விரும்புவோர், ஆழ்வாரின் 'திருமாலை' எனும் நூலை படித்தால் போதும். இதையே "திருமாலை அறியாதர் திருமாலையே அறியாதர்" எனும் வழக்கு இவரின் படைப்புகளுள் ஒன்றான திருமாலையின் உயர்வை செப்புகிறது.

2760 BCE
11. திருப்பான் ஆழ்வார்.
இவர் பாணர் குலத்தில் திருச்சி அருகே உள்ள உறையூரில் உதித்தார்.
இவர் 'அமலன் ஆதிப்பிரான்' ஸ்ரீரங்க அரங்கனை பார்த்து இயற்றினார்.

599 BC,
இந்தியாவில் மகாவீரர் பிறந்தார். ஜைன மதம் உருவாக்கப்பட்டது.

563 BC
இந்தியாவில் கௌதம புத்தர் பிறந்தார். பௌத்த மதம் உருவாக்கப்பட்டது.

சந்திரகுப்த, அசோக சக்ரவர்த்தி போன்ற வலிமைமிக்க அரசர்கள் கூட இந்த பௌத்த, ஜைன மதங்களில் ஈர்க்கப்பட்டனர்.
அந்தோ பரிதாபம் !! இந்தியாவுக்கு வந்த கேடு !

அரசர்கள் சந்யாசி தர்மத்தை எடுக்க, அரசர்களும், படை வீரர்களும் சோம்பேறிகள் ஆகி கொண்டிருந்த காலம்... இந்தியர்கள் கேடு காலம் ஆரம்பிக்க விதை போடப்பட்டது இந்த சமயமே.

664 AD
12. திருமங்கை ஆழ்வார்.
இவர் பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர்.
தஞ்சாவூர் சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் 'கலியன்'. ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவருக்கு சோழதேசத்தின் "திருமங்கை" நாட்டின் குறுநில மன்னனாக்கினான். அன்று முதல் இவர் "திருமங்கை மன்னன்" என அழைக்கப்பட்டார்.

இவர் 'பெரிய திருமொழி', 'திருக்குறுந் தாண்டகம்', 'சிறிய திருமடல்', 'பெரிய திருமடல்', 'திருவெழுக்கூற்றிருக்கை' போன்ற பிரபந்தங்கள் இயற்றினார்.

பௌத்த, ஜைன மதத்தின் காரணமாக, போர் பயிற்சியை விட்டு, கவனத்தை சிதற விட்டு கொண்டிருந்தார்கள் அரசர்கள். தமிழ்நாடு அரசர்கள் மட்டுமே சைவர்களாகவோ, வைஷ்ணவர்களாகவோ மட்டுமே இருந்ததால், இந்தியாவுக்கு வரப்போகும் பெரும் பாதிப்பில் இருந்து ஓரளவு தப்பித்தனர் என்று சரித்திரம் காட்டுகிறது.

947 AD
ஆப்கான் நாட்டில் இருந்த அமித் சூரி என்ற ஹிந்து அரசன் பௌத்த மதத்தை ஏற்று இருந்தான்.

முதல் இஸ்லாமிய படையெடுப்பின் போது, வீரம் குறைந்த பௌத்த மதத்தை விட்டு, இஸ்லாமியன் ஆனான்.

இவன் பரம்பரையே உருவாக்கியது முதல் இஸ்லாமிய ஆட்சி இந்தியாவில். முகம்மது கோரி போன்றவர்கள் இவன் சந்ததியினர் என்று மறுக்க முடியாதது. சரித்திரம் தெரிந்து கொள்வது அடிப்படை தேவை.

தமிழ்நாடு இன்றும் தமிழ் நாடாக இருப்பதற்கு காரணம் இந்த 12 ஆழ்வார்களும், 63 நாயன்மார்களும் தான்.

இவர்கள் எழுதிய பாசுரங்கள் தமிழனுக்கு தெரிய வில்லை என்றால், தமிழ் இனி சாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

நாத்தீகர்கள் தமிழை வளர்க்கிறேன் என்று கடந்த 60 வருடங்களில், பாசுரங்கள், பிரபந்தங்கள் அளித்த ஆழ்வார்களையும், நாயன்மார்களையும் புறக்கணித்து, சாதித்து கிழித்தது தமிழை மெல்ல அழித்தது தான்.



சமஸ்கரிதம் தெரியாது, ஏன் நாங்கள் படிக்க வேண்டும் என்று கேட்கும் தமிழன், உண்மையான தமிழ் பற்று இருந்தால், இத்தனை வருட காலம் தமிழை காப்பாற்றி தந்த பாசுரங்கள், பிரபந்தங்கள் அளித்த ஆழ்வார்களையும், நாயன்மார்களையும் முதலில் மதிக்க வேண்டும்.

தமிழன், தமிழை காப்பாற்ற முதலில் செய்ய வேண்டியது இவர்கள் கொட்டி தந்துள்ள பாசுரங்களை ஒன்றையாவது படித்து தங்கள் மகனுக்கும், மகளுக்கும் சொல்லித்தருவதே.

தமிழை அழித்த, நாத்தீகனை தூக்கி ஏறிவோம்.

தமிழை இன்று வரை உயிரோடு வைத்து இருந்த ஆழ்வார்களையும், நாயன்மார்களையும மதிப்போம்.

கங்கை நதி சரித்திரம் தெரிந்து கொள்வோமே....பூமிக்கு பாய்ந்து வந்த விஷ்ணு பாதத்தில் இருந்து உண்டான கங்கை

பூலோகம் ஆரம்பித்து சத்ய லோகமான ப்ரம்ம லோகம் வரை, தன் தவத்தால், பலத்தால் கைப்பற்றி இருந்த பலி (bali) சக்ரவர்த்தியிடம் மூன்று அடி தானமாக கேட்டு,
* ஒரு அடி பூலோகம் ஆரம்பித்து,
* மற்றொரு அடியை ப்ரம்ம லோகம் வரை அளந்து,
* இன்னும் ஒரு அடி எங்கே? என்றார் த்ரிவிக்ரம பெருமாளாக நின்ற நாராயணன்.




மூன்றாம் அடியாக தன்னையே சமர்ப்பணம் செய்தார் பலி சக்ரவர்த்தி.

இவரே அடுத்த இந்திர ராஜன் என்று நியமிக்கப்பட்டு, இன்று வரை பாதாள லோகத்தில் அரசாட்சி புரிகிறார்.
இப்படி ப்ரம்ம லோகம் வரை பெருமாள் திருவடி செல்ல, ப்ரம்ம தேவன், "விஷ்ணு பதி" என்ற பெயருடன் அங்கு ஓடிக்கொண்டிருக்கும் ஜலத்தால், அவர் திருவடியை அபிஷேகம் செய்தார்.

நாராயணன் கால் நகம் பட்ட அபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர், ப்ரம்ம லோகத்தின் கீழ் உள்ள துருவ மண்டலத்தில் விழுந்தது.
நாராயணன் பாதம் பட்ட புனித தீர்த்தம் என்பதை அறிந்து, பக்தியுடன் நீராடினார் துருவன்.

துருவ மண்டலத்தில் இருந்து ஜன மற்றும் தப லோகங்களை வந்து அடைந்தாள், 'விஷ்ணு பதி" என்ற நதி தேவதை.
அங்கு சப்த ரிஷிகளும், முனிவர்களும் ஸ்நானம் செய்தனர்.

பின் அங்கிருந்து சொர்க்க லோகம் வந்து அடைந்தாள் விஷ்ணுபதி. அங்கு உள்ள தேவர்களும், அப்சரஸ் போன்றவர்களும் நாராயண பாதம் பட்ட தீர்த்தம் என்று பக்தியுடன் கொண்டாடினர். ஸ்நானம் செய்தனர். தேவலோகத்தில் "மந்தாகினி" என்ற பெயர் பெற்றாள்.

இப்படி ப்ரம்ம லோகத்தில் இருந்து கீழ் இறங்கி வந்த விஷ்ணுபதி, பூமிக்கு வர மறுத்து, சொர்க்க லோகத்திலேயே தங்கி விட்டாள்.

சத்ய யுகத்தில், ஸ்ரீ ராமர் பிறந்த குலத்தில், ராமருக்கும் முன், ஸகர சக்கரவர்த்தி என்ற அரசன் ஆண்டு வந்தார்.

இவருக்கு 60,000 பிள்ளைகள். மூத்த பிள்ளையின் பெயர் "அஸமஞ்சன்".

இவன் யாரிடமும் சமமாக பழகாமல் இருந்ததால், ஆட்சி செய்ய தகுதி இல்லாதவனாக இருந்தான். இதனால் நாடு கடத்தப்பட்டான்.

"அம்சுமான்" என்ற ஒரு மகன் இவனுக்கு உண்டு. 'அம்சுமான்' தன் தாத்தா ஸகர சக்கரவர்த்தியுடன் இருந்து வந்தார்.

சக்கரவர்த்தியாக இருப்பதால், ராஜா "அஸ்வமேத யாகம்" நடத்த திட்டமிட்டார்.

இந்திரன் தன் பதவி் போய் விடுமோ என்று எண்ணி, அந்த யாகத்திற்காக அனைத்து நாட்டுக்கும் செல்ல தயாராக இருந்த அஸ்வமேத குதிரையை கைப்பற்றி, பாதாள லோகத்திற்கு கொண்டு சென்று, அங்கு இருந்த கபில மகரிஷியின் ஆஸ்ரமத்தில் கட்டி விட்டு சென்று விட்டான்.

சகர சக்கரவர்த்தி, அஸமஞ்சன் தவிர்த்து, மற்ற 60000 மகன்களையும், "அந்த குதிரையை மீட்டு கொண்டு வாருங்கள்" என்று சொல்ல, தேடி தேடி, இறுதியில் பாதாள லோகத்தில் கபில ஆஸ்ரமத்தில் இருப்பதை கண்டு, கபில மகரிஷி தான் திருடி கொண்டு வந்து விட்டார் என்று தவறாக முடிவு செய்தனர்.
அவரை தாக்க சண்டைக்கு தயாரான போது, தியானத்தில் இருந்த கபில மகரிஷி கண் திறந்து பார்க்க, அவரின் தவ வலிமையினால் அவர் கண்ணிலிருந்து வந்த தீ ஜ்வாலையில், அந்த இடத்திலேயே 60000 பேரும் பொசுங்கி போயினர்.
சகர சக்கரவர்த்தி அனுப்பிய பிள்ளைகள் வராமல் போக, தன் பேரனை (அம்சுமான்) அனுப்பி வைத்தார்.




அம்சுமான் இறுதியில் கபில மகரிஷியின் ஆஸ்ரமம் வந்து குதிரை இருப்பதை கவனிக்க, 60000 பேரும் (சித்தப்பா முறை) சாம்பலாகி கிடைப்பதை பார்த்து, அவசரப்பட்டுவிடாமல், நிதானமாக, பணிவுடன் கபில மகரிஷியின் முன் வந்து, நடந்த விவரத்தை கூறுமாறு வேண்டினார்.

கபில மகரிஷி, "இந்திரன் நீங்கள் செய்யும் யாகத்தை பங்கம் செய்வதற்காக, குதிரையை இங்கு வந்து கட்டி விட்டு சென்று விட்டான். இதை அறியாமல், என்ன நடந்தது என்று விசாரிக்காமல், என்னிடம் இவர்கள் செய்த அபசாரமே இவர்களை இந்த நிலைக்கு தள்ளி விட்டது" என்றார்.
துர்மரணம் அடைந்த தன் சிறிய தகப்பனார்களுக்கு நல்ல கதி கிடைக்க வேண்டும் என்று எண்ணிய அம்சுமான், கபிலரிடமே கேட்க, அவர் "இந்திரன் ஆளும் சொர்க்க லோகத்தில் இருக்கும் விஷ்ணுபதி என்ற நதியின் தீர்த்தம் இவர்களின் சாம்பல் மேல் பட்டால், இவர்கள் அனைவரும் நல்ல கதியை அடைவர்" என்று சமாதானம் செய்தார்.

விடைபெற்ற அம்சுமான், குதிரையுடன் திரும்பி வந்து, நடந்ததை சகர சக்கரவர்த்தியிடம் சொன்னான்.

சகர சக்கரவர்த்தி "அஸ்வமேத யாகம்" நடத்தி முடித்து, பின்பு நாட்டை அம்சுமானிடம் ஒப்படைத்து, சொர்க்கம் சென்றார்.

அம்சுமான் நாட்டை கவனிப்பதே பெரிய காரியமாக இருப்பதால், அவர் காலம் வரை ஆட்சி செய்து விட்டு மறைந்தார்.
"மந்தாகினி" என்ற நதியை சொர்க்க லோகத்தில் இருந்து பூமிக்கு கொண்டு வர வைப்பது என்பது சாதாரண காரியமும் இல்லை. மேலும் பின் வந்த அரசர்களுக்கு நாட்டை ஆள்வதில் உள்ள சிரமங்கள், பொறுப்புகள் அதிகமாகி போக, இதை மறந்தே விட்டனர்.

இந்த வம்சத்தில் வந்த "பகீரதன்" என்ற அரசன், தன் மூதாதையர்கள் துர்மரணம் அடைந்து, இன்னும் விமோசனம் அடையாமல் இருப்பதை அறிந்து, தன் அரசாட்சியை தன் மந்திரிகளிடம் கொடுத்து, கடும் தவம் மேற்கொண்டான்.

மந்தாகினி என்ற நதியின் தேவதை ப்ரத்யக்ஷ்ம் ஆனாள்.

பகீரதன் நோக்கம் புரிந்தாலும், சொர்க்கம் வரை வந்த இவள், பூமியை தொடுவதற்கு அருவெறுப்பு கொண்டாள்.
மேலும் பகீரதனை பார்த்து "நான் பவன பாவனமாக, சுத்தமாக இருந்து வருகிறேன். என்னை போய் இந்த பூமிக்கு வரச் சொல்லி கூப்பிடுகிறாயே !! நான் உனக்காக வருகிறேன் என்று சம்மதித்தால், இதன் காரணமாக மகா பாவங்கள் செய்தவர்கள் எல்லாம் வந்து ஸ்நானம் செய்வார்களே !!" என்றாள்.

உடனே பகீரதன் "தேவி, பாவம் செய்தவர்கள் வந்து ஸ்நானம் செய்வார்கள் என்று நினைத்து கூசுகிறாயே, அதே ஸமயத்தில் ஹரி நாமம் சொல்லும் ஹரி தாசர்கள், பாகவதர்கள் வந்தும் ஸ்நானம் செய்வார்களே. இந்த பாக்கியத்தை நீ அனுபவிக்க வேண்டாமா ?




பாவிகள் வந்து ஸ்நானம் செய்யும் போது, அவர்கள் செய்த பாவம் உன்னை சேர்ந்து விடும். இவர்கள் கொடுத்த பாவத்தை எங்கு தொலைப்பேன் என்று நினைத்து தான் நீ பூமிக்கு வர தயங்குகிறாய் என்று அறிவேன்.

ஹரி தாசர்கள் வந்து ஸ்நானம் செய்யும் போதே உன்னிடம் சேர்ந்த பாவங்களை ஓடி விடும்.

ஹரி தாசர்களுக்கு என்ன அப்படி விசேஷம்?

உலக வாழ்வில் நாட்டம் உள்ள லௌகீகர்கள், உன்னிடம் வந்து ஸ்நானம் செய்யும் போது, 'எத்தனை குளிர்ச்சியாக இருக்கிறது, ஆஹா அருமை' என்று சொல்லிக்கொண்டு, உலக விஷயமாக பேசிக்கொண்டு ஸ்நானம் செய்வார்கள். அவர்களின் பாவங்களையெல்லாம் உன்னிடம் கரைத்து விடுவார்கள்.

புண்ணியம் செய்தவர்களோ, கரையில் அமர்ந்து சங்கல்பம் செய்து, தன் பாவங்கள் அனைத்தையும் சொல்லி உன்னிடமே கரைத்து விடுவர்.

இப்படி லௌகீகர்கள், புண்ணியம் செய்தவர்களின் மொத்த பாவத்தையும் சுமந்து இருக்கும் உனக்கு, எதையும் எதிர்பார்க்காமல், ஹரி தாசர்கள் ஸ்நானம் செய்ய வரும் போது, விஷ்ணுபதியே !! அவர்கள் வாய் நிறைய "ஹரி, ஹரி, ஹரி" என்று சொல்லி ஸ்நானம் செய்வார்கள். அந்த நாமமே உன்னிடம் சேர்ந்த அனைத்து பாவங்களும் விலகச் செய்து விடும்.

ஆகையால், அப்படிப்பட்ட பாகவதர்கள் சம்பந்தம் உனக்கு கிடைக்க இஷ்டம் இருந்தால், என்னோடு வா" என்றார்.
இதை கேட்ட மந்தாகினி தேவிக்கு பரமானந்தம் உண்டாகி பாகவதர்களை காணும் ஆசையில் சொர்க்கத்தில் இருந்து உற்சாகம் பொங்க பூமிக்கு வர ஆசை கொண்டாள்.
பகீரதனை பார்த்து "நான் இங்கிருந்து வரும் வேகத்தை பூமியில் யார் தாங்க முடியும்?" என்று கேட்டாள்.

பகீரதன், "அதற்கு நீயே தான் வழி சொல்ல முடியும்" என்றார்.

தேவி, "நான் வரும் வேகத்தை சிவபெருமான் மட்டுமே தரிக்க முடியும்" என்று சொல்ல, மீண்டும் பகீரதன், சிவனை நோக்கி பல வருடங்கள் தவம் செய்து, அவரின் தரிசனம் கண்டு, இந்த காரியத்துக்கு உதவி கேட்டார்.

மகிழ்ச்சியுடன் சிவபெருமான் சம்மதித்தார்.
ஹரி தாசர்களும், பாகவதர்களும் ஸ்நானம் செய்வார்கள் என்று சொன்ன காரணத்தினால் பூமிக்கு வர சம்மதித்த மந்தாகினிக்கு, முதல் பாகவதராக சிவபெருமானே முதலில் வந்து தன் தலையில் ஹரி பாத தீர்த்தம் படட்டும் என்று முன் வந்தார்.

"வைஷ்ணவானாம் யதா ஷம்பு:" என்று, சிவபெருமான் 'தானே முதல் வைஷ்ணவன்' என்று காட்டினார்.

இவர் தலையில் விழுந்து, பூமியில் இமாலய பர்வதத்தில் ஓடி வரும் வரும்போது, மந்தாகினி சிவபெருமானின் கேசத்தை ஆனந்தப்படுத்ததினால், "அலகனந்தா" என்ற பெயர் பெற்றாள்.

பகீரதனை பின் தொடர்ந்து வந்ததால், "பாகீரதி" என்ற பெயரும் கொண்டு, இமயமலையில் இருந்து, "பாகீரதி", "அலகனந்தா" என்ற பெயரில் பூமியை நோக்கி வேகமாக வந்தாள்.

இப்படி ஓடி வருபவள், பூமியை அடைந்தபோது, "பாகீரதி", "அலகனந்தா" என்ற பெயரில் தேவப்ரயாகை என்ற இடத்தில் ஒரு நதியாக இணைந்து, "கங்கா" என்ற பெயர் பெற்றாள்.

தலையில் தாங்கியதால், சிவபெருமான் "கங்காதரன்" என்று பெயர் பெற்றார்.
இப்படி பாய்ந்து வந்த கங்கை பாதாளம் வரை பாய்ந்து, அங்கு இருந்த 60000 பேரின் சாம்பலில் பட்டதற்கே, பித்ருலோகம் அடையாமல் இருந்த அவர்களின் ஆத்மாக்கள் புண்ணிய லோகம் சென்றனர்.

உயிர் போன பின், உடல் எரிந்து அந்த சாம்பலில் கங்கை பட்டாலே அந்த ஆத்மா புண்ணிய லோகம் அடையும் என்றால், உயிருடன் இருக்கும் போது நாம் சென்று ஹரி நாமம் சொல்லி ஸ்நானம் செய்தால் புண்ணிய கிடைக்கும், பாவம் தொலையும் என்பதில் சந்தேகம் என்ன !!




இப்படி பாகவதர்களை எதிர்பார்த்து வரும் கங்கையில் ஸ்நானம் செய்யும் பாக்கியம் கிடைத்தால் நாம் சொல்ல வேண்டிய ஸ்லோகம் :

விஷ்ணு பாத சமுத் பூதே ! (விஷ்ணு பாதத்தில் இருந்து உண்டானவளே )
கங்கே த்ரிபத காமினி !!
(மூன்று உலகங்களிலும் சஞ்சரிப்பவளே )
தர்மத்த்ரவேதி விக்யாதே
(தர்மத்த்ரவம் என்ற பெயர் உடையவளே)
பாபம் மே ஹர ஜான்ஹவி
(என்னுடைய பாவங்களை நீக்கு)

கங்கையை ஸ்மரித்துக் கொண்டு, பொதுவாகவே நாம் எந்த ஜலத்திலும் ஸ்நானம் செய்தாலும், கங்கையில் ஸ்நானம் செய்தது போலாகும்.