Followers

Search Here...

Showing posts with label அணியாமல். Show all posts
Showing posts with label அணியாமல். Show all posts

Saturday 23 March 2019

சட்டை அணியாமல் கோவிலுக்கு வர சொல்வதின் நோக்கம் என்ன? பெண்கள் ஆண்களுடன் பேசுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஏன்?

"சரணாகதி" என்றால் என்ன?



வெறும் "கும்பிடு" போடுவது மட்டும், "சரணாகதி" இல்லை.

"சரணம், சரணம்..." என்று ஒருவன் கத்தி விட்டதால் மட்டும், அது "சரணாகதி"ஆகி விடாது.

"உள்ளொன்று பேசி, புறமொன்று பேசுபவர்கள்",
  • சாதாரண மனிதனை வேண்டுமானால் ஏமாற்றி விடலாம்.
  • எம்பெருமானை ஏமாற்ற முடியாது. 
எம்பெருமான் இதய ஓட்டத்தை கவனிக்கிறார்.
"இதயத்தில் ஒன்று, உதட்டில் ஒன்று" என்று பேசுபவன்,
  • "சரணம் சரணம்..." என்று வெறும் வார்த்தையாக கத்தினாலும்,
  • "கும்பிடு" போட்டாலும்,
'எம்பெருமான்' நம் சரண கோஷங்களுக்கு மயங்குவதில்லை. 

வெளி வேஷங்களை விட, நம் இதயத்துக்குள் ஓடும் நம் எண்ண ஓட்டத்தை தான் பார்க்கிறார் எம்பெருமான்.

"போலியாக போட்ட பக்தி வேஷத்திற்கும், பக்தி கோஷத்திற்கும்", அதற்கான "புண்ணியங்கள்" கிடைக்க செய்கிறார். 
தன்னையே தருவதில்லை.
தன் தரிசனத்தை தருவதில்லை.
கனவில் கூட திவ்ய காட்சி தருவதில்லை.

"உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசும்" போலி பக்தனையும் விட்டு விடுவதில்லை எம்பெருமான்.
தொடர்ந்து விடாமல் 'பஜனையும், ராம ஜபமும்' செய்யும் போது,
எம்பெருமான் கருணை கொண்டு, அவனிடம் தான் இருப்பதை காட்டி, ஒரு சமயத்தில் நிஜ பக்தனாகவே ஆக்கி விடுகிறார்.
தன் பக்தர்கள் கூட்டத்தில் சேர்த்து கொள்கிறார். 
ஆரம்ப நிலையில், போலி பக்தியே செய்தாலும், நாராயணனை வழிபட்டவர்கள் நாசமாவதில்லை.
இதை நாராயணனே ஊர்ஜிதப்படுத்துக்கிறார்.
ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்த எம்பெருமான், அர்ஜுனனிடம்
"ந மே பக்த ப்ரநஸ்யதி" என்று சொல்லும் போது
"என் பக்தன் நாசமாக மாட்டான்" என்று தானே உத்திரவாதம் தருகிறார்.



பகவானே "நம்மை காப்பேன்" என்று சொன்ன பிறகு,
கிருஷ்ண பக்தனுக்கு என்ன கவலை இருக்க போகிறது? 

கவலையே இல்லாதவர்கள் கிருஷ்ண பக்தர்கள். 
காரணம், அவர்கள் கவலையை பரமாத்மா சுமக்கிறார்.

நம்முடைய பூஜைகளும், ஜபமும் போலியாக இருந்தாலும், எம்பெருமான் சத்தியம் என்பதால், தொடர்ந்து நாம் சத்சங்கத்தில் இருந்து கொண்டே இருந்தால்,
ஒரு நாள், பெருமாள் நம் மீது கருணை கொண்டு, அஞானத்தை அகற்றி, நம் போலி பக்தியை அகற்றி, உள்ளும் புறமும் 'நாராயணனே கதி' என்கிற திட நம்பிக்கையை ஏற்படுத்தி, நம்மையும் ஆட்கொண்டு விடுவார்.

போலி பக்தியாக இருந்தாலும், தொடர்ந்து செய்ய வேண்டும். எம்பெருமான் கருணை நம் மீது படும் போது, நம் பக்தியும் நிஜமாகும்.

நம் இதயத்துக்குள் உள்ள பகவான், நாம் செய்யும் நிஜ பக்தியை கண்டு "சபாஷ்" போடுவதை நாமும் உணரலாம்.

"இவன் உண்மையில் என்னை மட்டுமே நினைத்து 'சரணம் சரணம்..' என்று சொல்கிறானா? இல்லை, இதயத்தில் ஒன்று, உதட்டில் ஒன்று என்று இருக்கிறானா?" 
என்று இதயத்தை பார்க்கிறார் எம்பெருமான்.

பெருமாள் "நம் இதய ஓட்டத்தை கவனிக்கிறார்" என்பதால்,
கோவிலுக்கு சென்று நம் குறைகளை, நாம் சொல்லி தான், பெருமாளுக்கு தெரிய வேண்டும் என்கிற அவசியமில்லை என்று பெரியோர்கள் சொல்வார்கள்.

எம்பெருமான் நாமத்தை சொல்வதற்காக தான் நமக்கு "வாக்கு" கொடுக்கப்பட்டு உள்ளது.
பரமாத்மா இதயத்தோடு பேசுபவர்.

"இதயத்தில் ஒன்று, உதட்டில் ஒன்று" என்று பேசும் குணம்,
ஸ்வபாவமாக ஆண்களிடம் இருப்பதாலும், 
பெருமாளோ இதய ஓட்டத்தை கவனிப்பவர் என்பதாலும்,
கோவிலுக்கு செல்லும் ஆண்கள், தன் அங்க வஸ்திரத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு செல்வதை கடைப்பிடித்தனர்.
'உள்ளும் புறமும் ஒரே எண்ணம் உள்ள' ஆழ்வார்கள், நாயன்மார்கள், மகான்கள், ஞானிகள், சித்தர்கள், கோவிலில் சென்று பகவானை தரிசிக்கும் போது, தன் அங்க வஸ்திரத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு வழிப்பட்டதற்கு காரணத்தை புரிந்து கொள்ளலாம்.

'இதய ஓட்டத்தை கவனிக்கும் பெருமான்', இவர்கள் பாடிய பிரபந்தங்களை, பாசுரங்களை, கவசங்களை ஏற்றார். தெய்வ கவிகள் ஆனார்கள். 
இன்று இவர்கள் பாடிய திவ்ய பாசுரங்களை பாடினாலும் நமக்கு பக்தி ஏற்படுகிறது.
"தன் பக்தியில் களங்கம் இல்லை. தான் சொல்லும் கோஷத்தில் பொய் இல்லை, இதயப்பூர்வமானது" 
"பகவான் நம் இதயத்தை பார்க்கட்டும்"
என்பதை வெளிப்படுத்தும் விதமாக, பொதுவாக ஆண்கள் இடுப்பில் அங்க வஸ்திரம் கட்டிக்கொண்டு பகவான் முன் சென்றனர்.
காலப்போக்கில், "ஆண்கள் சட்டை அணியாமல் கோவிலுக்கு வரவும்" என்று வழக்கமாக மாறியது.


சட்டை அணியாமல் வர சொல்வதின் நோக்கம், பரமாத்மா நம் இதய ஓட்டத்தை கவனிக்கிறார் என்பதால் தான்.
பெருமாளிடம் நம் மரியாதையை வெளிப்படுத்தவும் தான்.

"இதயத்தோடு பழகும் பகவானிடம் நம் போலி வார்த்தைகள் எடுபடாது" என்று உணர்வதற்கே.

ஹிந்துக்களின் எந்த ஒரு நியதியும், பக்தியை வளர்த்து, நம்மை பெருமாளிடம் சேர்ப்பதற்காக தான்.

பொதுவாக பெண்களால், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது ஸ்வபாவமாக இருக்காது. 
பெண்கள் ஸ்வபாவத்திலேயே நளினமானவர்கள். 
அவர்கள் முகமே அவர்கள் எண்ண  ஓட்டத்தை காட்டிவிடும்.
அவர்களால் ரகசியத்தை தங்களுக்குள் பூட்டி வைக்கவும் இயலாது.




ஸ்வபாவத்திலேயே 'அன்புக்கும், அடைக்கலம் தருபவருக்கும்' வசமாகும் இயல்பு உடையவர்கள் பெண்கள்.
ஆண்களை போல கரடு முரடானவர்கள் அல்ல. போலீஸ் உடையில் இருந்தாலும், ஆண்களை போல விறைப்பாக நின்றாலும், பெண்களின் நளினத்தை மறைக்க முடியாது.
ஸ்வபாவத்திலேயே எளிதில் நம்பிவிடும் இயல்பு உடையவர்கள்.

"அன்பும் அடைக்கலமும் கொடுப்பான்" என்பதால் தானே, 20-25 வருடங்கள் வளர்த்த தாய், தந்தையை விட்டு, கணவனோடு செல்ல முடிகிறது ஒரு பெண்ணால்.
இது இந்திய பெண்களுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் ஸ்வபாவயத்திலேயே உள்ள குணமாக இருக்கிறதே.

இதன் காரணமாக தான், பெண்களுக்கு "தெய்வ பக்தியும்" எளிதில் ஏற்கிறது.

"நாராயணனே மூல பொருள். நாராயணனே பரமாத்மா"
என்று சொல்வதால் பெண்கள் மயங்குவதில்லை.
"நாராயணன் அன்பு வடிவானவன், அடைக்கலம் தருபவன்"
என்று கேட்கும் போதே, பெண்களுக்கு இயற்கையாகவே "தெய்வ பக்தி" உண்டாகிறது.
நாராயணன் என்ற வார்த்தைக்கே "மனித (நர) சமூகத்திற்கு அடைக்கலம் தருபவன்" என்று பொருள்.

நம் பாரத நாட்டில், நம் வீட்டில் வாழ்ந்த, வாழும் பெண்களால் தானே தெய்வ பக்தி வளர்கிறது. 
அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் 'நாராயணனே கதி' என்று பக்தியை ஊட்டி வளர்க்கும் கடமையும், இன்றைய பெண்களுக்கு உள்ளது.. 
பெண்கள் செய்யும் பிரார்த்தனை இதய பூர்வமாக தான் இருக்கும்.
வெளியில் ஒன்று, இதயத்தில் ஒன்றாக இருக்காது.

பூக்களை "பெண்களுக்கு" உதாரணம் காட்டி,
வண்டை போன்ற குணம் உடையவன் "ஆண்" என்று கவிகள் சொல்வதுண்டு.


பொதுவாகவே, ஆண்கள்  ஆராய்ச்சி செய்து தான் நம்புவார்கள். எதையும் எளிதில் நம்பமாட்டார்கள்.
நம்பிவிட்டால் பூரண சரணாகதியும் செய்வார்கள்.
நாராயணனே "பரதெய்வம்" என்று வேதமே சொன்னாலும்.
அவர் தான் பிரம்மாவை படைத்தார்.
அவர் கருணா வடிவானவர் என்று சொன்னாலும்,
அவர் படைத்த ப்ரம்மாவின் மூலம் தான் உலகமே ஸ்ருஷ்டி செய்யப்பட்டது  என்று வேதமே சொன்னாலும்.
ப்ரம்மா நமக்கு பாட்டனார் (தாத்தா - பிதாமஹ) என்றும்,  .
நாராயணன் நம் பிதாமஹருக்கும் தந்தை (ப்ரபிதாமஹ) என்று "உறவு" காட்டி பேசினாலும்,
ஆண்கள், இதயபூர்வமாக அனுபவத்திலோ, ஆராய்ச்சியிலோ நிர்ணயம் ஆகாத வரை, சரணாகதி செய்ய மாட்டார்கள்.
இது ஆண்களின் குணம். கடின ஹ்ருதயம் உள்ளவர்கள் ஆண்கள்.

பெண்களுக்கு எளிதில் தெய்வ பக்தி வருவதை போல,
ஆண்களுக்கு எளிதில் தெய்வ பக்தி வருவதில்லை.
பக்தியில் "உருக்கம்" முக்கியம் என்று சொல்லப்படுகிறது.
"எம்பெருமானே கதி" என்று வாழ்ந்த ஆழ்வார்கள், மகான்கள் கூட, எம்பெருமான் புருஷன் என்றும், தன்னை ஒரு பெண்ணாக பாவித்தும், பாசுரங்கள் பாடியதை பார்க்கிறோம்.

ஆணாக இருந்தும், எம்பெருமானின் கருணையை நினைத்து கண்ணீர் விடுவதற்கு, தன்னை ஒரு பெண்ணாக பாவிக்கும் போது தான் ஆழ்வார்களுக்கே அந்த பக்தி இனித்தது என்றால், "பக்தி" பெண்களுக்கு சுலபமாக ஸித்திக்கிறது என்று தெரிகிறது.

இதன் காரணமாகவே,
இன்றைய பெண்கள் வேதத்தில் சொல்லாத, பொய் தெய்வங்களை கூட நம்பி விடுகிறார்கள்.
கற்பனையான தெய்வங்களை "இவர் கருணைமிக்கவர், உங்களுக்கு அடைக்கலம் தருபவர்" என்று சொல்லும் போது, ஸ்வபாவத்திலேயே நளினமான இதயம் கொண்ட இவர்கள், பொய் மதங்களில் சேர்ந்து ஏமாற்றப்படுகின்றனர்.
பொய் மதத்தில், தெய்வம் என்று போற்றப்படும் குப்பனும், சுப்பனும் கூட, உலகை படைத்த நாராயணன் அனுகிரஹத்தின் மூலம் தான் சில காலம் வாழ்கிறார்கள். பலன் தருவது நாராயணனே.

இதன் காரணமாகவே,
உலகில் அனைவரிடமும் பழக வாய்ப்பு உள்ள இன்றைய கால பெண்கள், கொஞ்சம்  அன்பாகவும், பாதுகாப்பு உணர்வும் கொடுப்பது போல ஒருவனை நினைத்தாலேயே, ஸ்வபாவத்திலேயே நளினமான இதயம் கொண்ட இவர்கள், கண்டவனிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.
"சுயநலமே முக்கியம்" என்று, இதுநாள் வரை வளர்த்த தாய் தந்தையையும் மீறி விடுகிறார்கள்.

பெண்களுக்கு உள்ள நளின குணம், "தெய்வ பக்தி"க்கு உகந்ததாக உள்ளது.
ஆனால்,
சமுதாயத்தில் "வண்டை" போன்ற குணம் உடைய ஆண்களுடன், இவர்கள் பழகும் போது, ஏமாற்றம், கற்பழிப்பு, விவாகரத்து, என்று முடிந்து விடுகிறது.
பெற்றோரை எதிர்த்து யாரையோ நம்பி ஓடுவதால், பெற்றோர் தயவையும் இழந்து, பல பெண்கள், வாழ்க்கையை தொலைத்து, மறுமணம் செய்து கொண்டு, முந்திய கணவன், புது கணவன் என்று, பல ஆண்களுடன் உறவு கொண்ட பாவத்தை பெறுகிறார்கள்.




"பூவை" போன்ற பெண்களை, நளின குணம் கொண்ட பெண்களை, "வண்டை" போன்ற இதயம் கொண்ட  ஆண்களுடன் பழக விடும் சமுதாயத்தில், இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கிறது.

கட்டவிழ்த்து விட்ட கிறிஸ்தவ சமுதாயத்தில் எத்தனை விவாகரத்துகள், மறுமணங்கள் நடக்கின்றன என்று கிறிஸ்தவ நாடுகளை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.
ஹிந்து மதத்தில், கிறிஸ்தவ கொள்கைகளான மறுமணம், விவாகரத்து அனுமதிக்கபட்டவுடன், இந்தியாவும் கலாசார சீரழிவை இன்று சந்திக்கிறது.
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விவாகரத்து, ஓடிப்போய் கல்யாணம் செய்தவர் என்று வெட்கக்கேடான நிலையில் இன்று இந்தியா உள்ளது.

ஹிந்து மதத்தை காக்க, ஹிந்து பெண்களுக்கு கலாச்சாரத்தை சொல்லி கொடுக்க வேண்டியது பெற்றோர் கடமை.
சுயநலத்தை விட, தாய் தந்தையை நம்ப வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும்.
"எத்தனை பெரிய கோடீஸ்வரன் ஆனாலும், எத்தனை பெரிய மன்மதனாக இருந்தாலும், எத்தனை அன்பு ஒழுக பேசினாலும்", சீதை, அருந்ததியை போன்ற பெண்கள் பிறந்த நாட்டில் பிறந்தவள் என்று இருக்க இன்றைய பெண்களுக்கு கற்று தர வேண்டும்.

ஆண் சமுதாயம், ஸ்வபாவத்தின் காரணமாக எதையும் உடனே நம்புவதில்லை.
அதனால் உலகில் பழகினாலும், யாரையும் உடனே நம்புவதில்லை.
ஆனால்,
வண்டை போன்ற குணம் உள்ளவனாக ஆண் இருப்பதால்,  ஒரு பூவில் அமர்ந்து தேன் குடித்து விட்டு, மற்றொரு பூ கிடைத்தால் தாவி விடும் குணம் உடையவன்.
எளிதில் நம்பிவிட மாட்டான் என்பதால் ஆண்கள் உலகில் பழக ஏற்றவன் என்றாலும், இவனின் மற்றொரு குணம் பெண்களுக்கு ஆபத்தானது.
இது பொதுவாக ஆண்களின் குணம் என்பதால் தான், ஆண்களுக்கு மனதை கட்டுப்படுத்த யோகா, பிராணாயாமம், தவம், போன்ற மன அடக்க பயிற்சிகள் சொல்லி தரப்பட்டன.

இன்றோ, எந்த ஆணுக்கும் யோக பயிற்சியோ, ப்ராணாயாமமோ செய்ய தெரியாது.
மனதை அடக்கும் வழியை அடைத்து, இன்று மாமிசம் உண்டு, சிகரேட் புகைத்து, குடித்து மனதின் வேகத்தை இன்னும் வேகப்படுத்தி கொண்டு போகிறது ஆண் சமூகம்.
உலகில் பலருடன் பழக வேண்டிய பெண்கள், தங்களை  காத்து கொள்ள, நம் பாரத நாட்டில் பிறந்த கற்புக்கரசிகளின் வாழ்க்கையை தினமும் ஸ்மரிக்க வேண்டும்.


"என்னை திருமணம் செய்து கொள்! என்னிடம் இல்லாத ஐஸ்வர்யம் உலகில் எவனிடத்திலும் இல்லை. 
யமன் என் அனுமதி இல்லாமல் உள்ளே வர முடியாது. மண்டோதரியை கூட விட்டு, உன்னை பட்டமகிஷி ஆக்கிவிடுகிறேன். 
உனக்காக நான் எதையும் செய்ய காத்து இருக்கிறேன்.
காட்டில் பரதேசியாக அலையும் ஸ்ரீ ராமனை விடு. அவன் இலங்கை வரை வந்து உன்னை காப்பாற்ற போவதே இல்லை. 
கைலாயத்தையே தூக்கிய என் பலத்தை கண்டு உலகமே அஞ்சும். அப்படிப்பட்ட நான் உனக்கு அடிமையாக இருக்கிறேன்.  
உன்னை தேவர்களும் வழிபட செய்கிறேன். 
என்னை மனம் செய்து கொள்"
என்று என்னென்னவோ பேசியும், ஆசை வார்த்தைக்கு மயங்க மாட்டேன் என்று ஒரு புல்லை எடுத்து அவன் முன்னால் தூக்கி போட்டாள் சீதை. 
இந்த கற்புக்கரசிகளான சீதையை போல, பெண்கள் நெருப்பாக இருந்தால், இந்த உலகில் மானத்தோடு வாழலாம்.
பெற்றோர் சொல்லும் பையனை மணந்து வாழ்ந்தால் போதும் என்று நினைக்காத பெண்கள் எதிர்காலம், கேள்விக்குறியாகவும் போகலாம்.

பக்திக்கு உதவும் பெண்ணின் நளின உள்ளம், உலகில் ஆபத்தை கொடுப்பதால், பெண்கள் ஆண்களுடன் பேசுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.   

வயது வந்த பின், தன்  சகோதரனை கூட தொட்டு பேச அனுமதிக்காத பாரத பூமியில் பிறந்தும், வேலை பார்க்கும் இடத்தில், படிக்கும் கல்லூரியில், ஆண்களை தொட்டு கொண்டு பேசும் பெண்கள், தானே அவமானத்தை தேடி கொள்கிறார்கள்.
இந்த கலாச்சாரம் (மறுமணம், விவாகரத்து) இந்தியாவுக்குள் நுழைந்ததே 1947ல் அமைந்த காங்கிரஸ் அமைப்பால் தான்.
அன்று இருந்த தேச தலைவர்களில் 'நேரு' உட்பட ஆங்கில மொழியில் படித்து, ஆங்கில மோகம் கொண்டவர்கள்.
இவர்கள் கல்வியுடன், மேற்க்கத்திய கலாச்சராமான மறுமணம், விவாகரத்து போன்ற கொள்கைகளை கொண்டு வந்தனர்.
70 ஆண்டுகளில், ஒரு மாதம் கூட வாழாத கணவனும் மனைவியும் விவாகரத்து கேட்டு பிரிந்து வாழ, சட்டத்தில் ஏற்பட்டு செய்து, இந்திய கலாச்சாரத்தை கெடுத்தனர்.

விவாகரத்து, மறுமணம் இது போன்ற சட்டங்களால், பெண்களிடம் பொறுமை அழிந்து விட்டது.

பொறுமை இல்லாத பெண், தானும் கெட்டு, குடும்பத்தையும் கலாசார சீரழிவுக்கு இழுத்து செல்கிறாள்.

சுதந்திரம் கொடுக்கப்பட்டதால், ஆன்மீகமும், பக்தியும் எளிதில் கைகூடும் பெண்கள், கோவில் பக்கமோ, நல்ல விஷயங்களை கேட்பதோ, பஜனைகளில் கலந்து கொள்வதோ கிடையாது.

யாராவது அன்பாக பேசினால், உனக்காக உயிரையும் கொடுப்பேன், உன் தாய் தந்தையையும் சேர்த்து காப்பாற்றுவேன் என்று சொன்னால், "இவனோடு வாழ்வோம்" என்று ஸ்வபாவத்தில் இதற்காக ஏங்கும் குணம் உடைய பெண்கள், பல ஆண்களால் ஏமாற்றப்படுகிறார்கள்.

பெண்கள், கற்புக்கரசிகளான பெண்களின்  சரித்திர படி வாழ ஆசைப்பட வேண்டும்.
பெண்கள், அனாவசியமாக ஆணிடம் சகஜமாக பேசுவது, அரட்டை அடிப்பதை, தொட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும்.

ஆண் சொக்க தங்கமாக இருந்தாலும், பேரழகனாக இருந்தாலும், துச்சமென நினைக்க வேண்டும் பெண்கள்.

உலகத்தில் பழகுவதால், பெண்கள் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும்.

Hare Rama, Hare Krishna Bhajan

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka